கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.
'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.
'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.
ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.
திருநாவுக்கரசர்!
தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.
-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,
Chennai, Page 27-29
-Mysore Archaeological Report, 1909-10, Page 112
சமண மதம் துடைக்கப் படுதல்
சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.
பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,
இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.
பெரிய புராணம் தரும் செய்தி!
'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.
இஸ்லாம்
இதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.
-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.
திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!
'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'
-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.
கழுவிலேறிய சமணர்கள்!
'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18
'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18
'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144
சமணர்கள் அனுபவித்த கொடுமை!
'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28
'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.
நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!
விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?
'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'
'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
1937, Page 1195.
'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'
பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.
'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'
மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.
திருமங்கையாழ்வார்
தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.
-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.
கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.
-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.
-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.
'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'
-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.
-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.
'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'
'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'
-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52
செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.
திருவாரூர் திருக்குளம்
தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.
'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'
-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.
கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.
நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.
படிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை.
நேரம் கிடைக்கும் போது மேலும்பல வரலாறுகளை பட்டியலிடுகிறேன்.
இறைவனே மிக அறிந்தவன்
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
(சாம நத்தம் என்ற இந்த இடத்தில் தான்
தோல்வியுற்ற அனைத்து சமணர்களும் ஒவ்வொருவராக கழுவிலேற்றிக் கொல்லப்பட்டனர்)
15 comments:
சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல் (கோ.செங்குட்டுவன்) சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு முக்கியமான சிறு வரலாற்று நூல். விழுப்புரம் மாவட்ட ஊர்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த திராவிட-மார்க்சிய பின்னணி கொண்ட நூலாசிரியர், எண்ணாயிரம் என்ற ஊர்ப்பெயரைக் குறித்த தேடல் மூலமாக இந்த விஷயத்திற்குள் வந்து சேர்ந்திருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது. இந்த ஆய்வில் அவர் கண்டடைந்து எழுதியுள்ள முடிவான கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடானது.
“ஒரு கதைக்கு 12ஆம் நூற்றாண்டில் கால் முளைத்தது. இது, 16ஆம் நூற்றாண்டில் இறக்கை கட்டிப் பறந்தது. இப்போதும் அது பறந்து கொண்டுதான் இருக்கிறது” என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது முற்றிலும் சரி. கதை என்பதற்குப் பதிலாக “ஐதிகம்” என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். “சம்பந்தருடனான வாதத்தில் தோற்று மதுரையில் 8000 சமணர்கள் கழுவேறினர்” என்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. சம்பந்தரின் காலத்திற்கு 5 நூற்றாண்டுகளுப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி முதன்முதலில் தனது சம்பந்தர் புகழ்மாலைப் பாடல்களில் இப்படி ஒரு விஷயத்தைப் பதிவு செய்வது தான் இந்த ஐதிகக்கதையின் தொடக்கம். பிறகு, சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற்புராணம்) ஊடாக, மதுரை உத்சவத்தில் திருவிழாவாகக் கொண்டாடும் அளவுக்கு இந்த ஐதிகம் வளர்ச்சியடைந்தது. இதனைக் கோர்வையாக சான்றுகளுடன் நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். நூலில் குறிப்பிடாவிட்டாலும், இந்த வரிசையில் அருணகிரிநாதரும் உண்டு. முருகப்பெருமானே சம்பந்தராக அவதரித்தவர் என்று பல இடங்களில் கூறும் அருணகிரியார், “மாள அன்றமண் நீசர்கள் கழுவேற – வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா” “சமணரைக் கழுவேற்றிய பெருமாளே” முதலான வரிகளின் மூலம் கழுவேற்றத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இதனை அழுத்தமாக ஆவணப்படுத்தும் முகமாக, பாரம்பரிய ஜைனத் துறவியான மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரகர் அவர்களிடமும் நேர்காணல் செய்து, அவரது புகைப்படத்துடன் நூலில் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. கழுகுமலை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜைன மடாலயங்களும், ஜைனக் கோயில்களும் பொ.பி 10ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரையிலான காலங்களிலேயே அதிகமாக செழித்து வளர்ந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் இந்த நூல் பதிவு செய்கிறது. இக்காலகட்டம் சம்பந்தர் மதுரையில் கூன்பாண்டியனை சைவத்திற்குத் திருப்பி நின்றசீர் நெடுமாறனாக ஆக்கியதற்குப் பிற்பட்டது. சமணக் கோயில்கள் பெருமளவில் எங்கும் இடிக்கப் பட்டு சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்படவில்லை (மிகச்சில இடங்களில் விதிவிலக்காக அப்படி நடந்திருக்கலாம் என்று கருத இடமுள்ளது). குணபரேச்சரத்திலும், பாண்டி நாட்டிலும் அமணர் பள்ளிகளை அழித்ததாக சைவ நூல்களில் உள்ள ஒன்றிரண்டு குறிப்புகள் மிகைக்கூற்றுகள் அன்றி வேறில்லை என்றும் மிகச் சரியாகவே நூலாசிரியர் கருதுகிறார். கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் மதப் போர்களுடனும், கலாசார அழிப்புகளுடனும் இது எந்த வகையிலும் ஒப்பிடத்தக்கல்ல என்றும் ஆசிரியர் வெளிப்படையாக பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த நூலின் முக்கியமான பகுதியாக நான் கருதுவது, “சமணர் கழுவேற்றக் கதை தொடர்பாக 1867 முதல் 2014 வரை நடந்தேறிய விவாதங்களை, ஓரளவு தொடர்ச்சியாகத் தொகுக்க முயற்சித்துள்ளேன்” என்று முன்னுரையில் கூறியபடி, நூலாசிரியர் செய்துள்ள தொகுப்பினைத் தான். பெரியபுராணம் அச்சிலேறும் வரை இந்தக் கதை தமிழ்நாட்டில் அவ்வளவு பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை. புத்தகமாக வெளிவந்தவுடன் இந்த விவகாரம் 19-20ம் நூற்றாண்டு சைவ மறுமலர்ச்சி பிரசாரகர்கள், தமிழறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், பகுத்தறிவாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த ஐதிகக் கதையை உண்மை என்று ஏற்றும் மறுத்தும் வாதிட்ட தரப்புகள் யார்யார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது.
சைவசமயக் குரவர்களைப் போற்றி வழிபட்டாலும், ஜீவகாருண்ய மானுட நேசரான வள்ளலாரை இச்சம்பவம் உறுத்தியிருக்கிறது. ‘இறகெடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈதென்ன ஞாயம்’ என்று சிவபெருமானிடமே நீதிகேட்டிருக்கிறார். திரு.வி.க “அகச்சான்றுகள் கிடைக்கும் வரை சமணரைக் கழுவேற்றிய வரலாற்றை யான் கொள்ளேன், கொள்ளேன்” என்று மறுத்திருக்கிறார். வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களுமான வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, ரா ராகவையங்கார், கா.சு.பிள்ளை, கலாநிதி கைலாசபதி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியவர்களும், தமிழ்ச் சமண அறிஞர்களான டி.எஸ்.ஸ்ரீபால் முதலானவர்களும், “இது வரலாற்றுச் சம்பவம் அல்ல” என்றும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே” என்றும் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகளான அ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், க.வெள்ளைவாரணர் போன்றோர், கழுவேற்றம் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். “வேதத்திற்கு நிகரான திருமுறைகளில்” நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் கூறியுள்ள விஷயம் சத்தியமே அன்றி எவ்வாறு பொய்யாகும் என்று அவர்கள் சாதிக்கின்றனர். பாண்டிய மன்னன் சமண முனிவர்களைக் கழுவேற்றியது முற்றிலும் நீதிக்கும் நியாயத்திற்கும் உட்பட்ட செயல்தான் என்றும் கருதுகின்றனர். மதப்பாரம்பரியத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த மிகக் கடுமையான இறுக்கமான பற்றே இத்தகைய அடிப்படைவாத மனநிலைக்குக் காரணம். அதேசமயம் சைவநெறியாளரான திரு.வி.க, அறிவாரந்த சமநிலையுடன் இவ்விஷயத்தை அணுகியதையும் கவனிக்க வேண்டும். 2009ம் ஆண்டு சென்னையில் ஒரு சைவசமயக் கருத்தரங்கில் கழுவேற்றம் முற்றிலும் கற்பிதமானதே என்ற கருத்தை முன்வைத்து நான் உரையாற்றினேன். திருநெல்வேலி செங்கோல் ஆதீனம் மற்றும் பல சைவ அறிஞர்கள் அவ்வரங்கில் இருந்தனர். எனது உரைக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. மாறாக, இத்தகைய ஆய்வுபூர்வமான கருத்துக்கள் பரவலாக பேசப்படவேண்டும் என்றே வந்திருந்தவர்கள் கூறினர்.
கழுவேற்றம் உண்மையே என்று வாதிட்ட மற்றொரு தரப்பினர் திராவிட, மார்க்சிய, பகுத்தறிவாளர்கள் மற்றும் மயிலை. சீனி.வெங்கடசாமி போன்ற விதிவிலக்கான வரலாற்றாசிரியர்கள். பெரியபுராணத்தின் மற்ற சம்பவங்களையும் நரிகள் பரிகளான கதை போன்ற திருவிளையாடல்களையும் கட்டுக்கதைகள் என்று நிராகரித்து விட்டு, அதே வீச்சில் கழுவேற்றம் மட்டும் உண்மையான சம்பவம் என்று இவர்கள் கருதுவதற்குக் காரணம், அந்த சம்பவம் இந்துமதத்தை எதிர்மறையாகவும் வன்முறை நிரம்பியதாகவும் சித்தரிக்க அவர்களுக்கு உதவுகிறது என்பது மட்டும் தான். இதன் பின்னுள்ள நேர்மையின்மையையும் இரட்டைவேடத்தையும் நூலாசிரியர் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார்.
மற்றபடி, இந்த நூலின் மீதான எனது இரண்டு விமர்சனங்கள்:
1) நல்ல சமநிலையுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டாக அமைந்துள்ளது ‘தமிழகத்தில் சமயங்கள் – ஒரு பார்வை’ என்ற முதல் அத்தியாயம். இந்த அத்தியாயத்தை அப்படியே எடுத்துவிட்டால் கூட நூலின் முழுமை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு பீடிகை போல எழுதப்பட்டுள்ள இந்த அத்தியாயத்தில் ஆரிய திராவிட இனவாதம், சம்ஸ்கிருத வெறுப்பு, பிராமண வெறுப்பு ஆகியவற்றில் தோய்ந்த ஆதாரமற்ற கருத்துக்களையும், தமிழ்நாட்டில் வழக்கமாகச் சொல்லப்படும் சிலபல பொய்களையும் அங்கங்கே அள்ளித் தெளித்துச் சென்றிருக்கிறார்நூலாசிரியர். சிறந்த வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களையும், தந்தை பெரியார், புலவர் குழந்தை, தேவநேயப் பாவாணர் போன்ற புரட்டு பிரசாரகர்களின் கருத்துக்களையும் அடுத்தடுத்து ஒரேவிதமான தராதரத்துடன் மேற்கோளிட்டுச் சென்றிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. தமிழ்ச்சூழலில், இங்கு ஏற்கனவே உட்கார்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்க, மார்க்சிய சித்தாந்த காவல் பூதங்களுக்கு ஒரு சம்பிரதாய சலாம் வைத்துவிட்டுத் தான், அந்த சித்தாந்தங்கள் பரப்பிய பொய்களைக் கட்டுடைக்கும் உருப்படியான ஆய்வைக் கூட எடுத்துவைக்க வேண்டும் என்பது ஒரு விதி போல. போகட்டும். நூலாசிரியரின் அரசியல் பின்ணனி இத்திறக்கில் இருந்தாலும், சேக்கிழார் பெருமான், மாணிக்கவாசகப் பெருமான், சம்பந்தர் பெருமான் என்று நூலின் பிற்பகுதியில் அவரது மொழி நடைபோடும்போது, அவரது உள்ளத்துக்குள் இன்னும் சேதப்படாமல் மறைந்திருக்கும் தமிழ் இந்துப்பண்பாட்டு அபிமானம் தான் வெளிவருகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அப்படியே இருக்கட்டும்.
2) வைதீக, சமண, பௌத்த சமயங்களுக்கிடையே நிகழ்ந்த மோதல்களை அவற்றின் சமூக, அரசியல், தத்துவ பின்னணியில் இன்னும் சிறிது விரிவாக ஆசிரியர் விளக்கியிருக்கலாம். ஆசிரியர் ஆய்வின் பகுதியாக வாசித்த நூல்களிலும் அது போதுமான அளவில் விளக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். புத்தகத்தில் கடைசியிலுள்ள “துணைநின்ற நூல்கள்” பட்டியலில் தமிழ் நூல்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டின் வரலாறு, சமயம், தத்துவம் குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் பல விரிவான நூல்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. எனவே, ஆராய்ச்சியின் விரிவுக்கும் வீச்சுக்கும் ஆங்கில நூல்களை நேரடியாகவோ அல்லது துணையுடனோ வாசித்து அவற்றின் கருத்துக்களையும் அறிவது முக்கியமானதாகிறது. உதாரணமாக, The Kalabhras in the Pandiya Country (M Arunachalam. University of Madras, 1979) என்ற நூல் இப்புத்தகத்தின் பேசுபொருளுக்கான பல முக்கிய தரவுகளை அளித்திருக்கக் கூடும்.
இந்த விஷயம் குறித்து ஜெயமோகன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் இணையப் பதிவுகளை அவர் சுட்டிகளுடன் குறிப்பிடுகிறார். இவற்றுடன் “சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்” (2009) என்ற எனது நீள்கட்டுரையையும் அவர் குறிப்பிட்டிருக்கலாம் (இவ்விஷயம் குறித்த கூகிள் தேடல்களில் அதுவும் பிரதானமாக வருகிறது தான்).
“இந்நூலில் புதிய தகவல் எதையும் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டவைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறேன், அவ்வளவுதான். ஆனாலும் நூலின் தலைப்பு பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்குக் காரணம், சமணர் கழுவேற்றம் சொல்லப்பட்டது போல் இதனை மறுக்கக் கூடிய கருத்துக்கள் ஆழமாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே” என்று முன்னுரையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள நூலாசிரியர், இந்த கச்சிதமான நூலின் மூலம் தானே அத்திறக்கில் ஒரு சிறப்பான பதிவை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.
சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல்
கோ.செங்குட்டுவன்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்: 168
விலை: ரூ 150
தமிழ்ப் பவுத்தம் தொலைந்துபோன வரலாறு
நாகப்பட்டினத்தில் பௌத்தமும் அதன்உட்பிரிவான சௌத்ராந்திகமும் 14 ஆம் நூற்றாண்டுவரை சிறப்புடன் நிலவின. (சௌத்ராந்திக பௌத்தத்தில் மீனவர்,வேடர் போன்றோர் அனுமதிக்கப் பட்டிருந்தனர்) இலங்கை அரசகுடும்பத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து புத்தபிக்குகள் குலகுருவாகச் சென்றுள்ளனர். 15ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குள் இஸ்லாமியர் புத்தபிக்குகளைக் கொன்று பௌத்தப்பள்ளிகளை ஆக்கிரமித்தனர்.
சான்று : காளமேகப் புலவரின் பாடல்
உள்ளிநாறு வாயரும், உவட்டெடுத்த தலையரும்,
ஒருவரோடு ஒருவர்சற்றும் உறவிலாத நெஞ்சரும்,
கொள்ளிபோல் முகத்தரும், கொடுக்குவிட்ட உடையரும்,
கோளுநாளு மேபடைத்த குணமிலாத மடையரும்
பள்ளிவாசல் தோறுநம்பவுத்தைரைச் சவுத்தரைப்
பதைத்திடப் புதைத்துவைத்து அகப்படப் படுத்தும்ஊர்
நள்ளிரா அடங்கலும் நடுக்கமுற்று வாழும்ஊர்
நாலுமூலை யும்கடந்து நாய்குலைக்கும் நாகையே!
Ramachandran
பவுத்தப்பள்ளியின் தொடர்ச்சி ‘பள்ளிவாசல்’
நாலந்தா: வரலாற்று உண்மைகளும் திரிபுகளும்
கற்றலின் சுரங்கமான, மதிப்பிற்குரிய நாலந்தா என்று தான் 16 – 17 ஆம் நூற்றாண்டுகளில் வாழந்த திபெத்திய வரலாற்று ஆய்வாளர் தராநாத், நாலந்தா பல்கலைகழகத்தை பற்றி குறிப்பிடும் பொழுது சொல்கிறார். நாலந்தா பல்கலைகழகத்திற்கு ஐ-திசிங் வந்த பொழுது அங்கு 3,700 பவுத்த துறவிகள் இருந்தார்கள். அந்த மொத்த வளாகத்தில் சுமாராக 10,000 பேர் தங்கியிருந்தார்கள். அங்கே சொல்லித்தரப்படும் மிக அருமையான விரிவாக கல்வியை போலவே அந்த வளாகத்தில் இருந்த கட்டிடங்களும் இருந்தன. அங்கே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொழுது அங்கிருந்த பெரிய குவியல் 1400 அடி நீளமும் 400 அடி அகலமும் கொண்டிருந்தது. ஹூன் தாசேங் அங்கு ஏழு பவுத்த தங்குமிடங்களும் எட்டு மையங்களும் இருந்ததை குறிப்பிடுகிறார். அந்த தங்குமிடங்கள் பல அடுக்கு மாடி அமைப்புகளாகவும் அங்கிருந்த நூலகம் மூன்று கட்டிடங்களையும் அவற்றில் ஒன்று ஒன்பது மாடிகளை கொண்டதாகவும் இருப்பதை குறிப்பிடுகிறார்.
முஸ்லீம் படையெடுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வட இந்தியா மீது படையெடுத்து வந்த பொழுது அங்கிருந்த எல்லா பவுத்த பிக்குகளையும் கொன்றொழித்தார்கள். மேலும் எல்லா பவுத்த கட்டிடங்களையும் கொள்ளையடித்தும் இடித்தும் நிரவினார்கள். அவர்கள் உடைத்த சிலைகள் எல்லாம் புத்தரை போல் செய்யப்பட்டவை. ஆனால் நாலந்தா கொஞ்ச நாட்களில் அவர்களின் கண்ணில் படாமல் இருந்தது. ஆனால் விரைவிலேயே கொலைகார்கள் வந்து அதை அழிக்க தொடங்கினார்கள். இந்த இடித்தொழிப்பானது அக்காலத்திய தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் விவரிக்கப்படுகிறது.
மின்ஹாஜ்-உத்-தின் இன் கொள்ளைகளும் திருட்டு வழிப்பறிகளும் வெகுவான பொருட்களையும் பணத்தையும் கொண்டுவந்தன, எவ்வளவு என்றால் தனியாகவே கொள்ளைக்கூட்ட தலைவனாகும் அளவுக்கு இருந்தன, இதனால் அப்போதைய ஆட்சியாளர்களான குதுப்-உத்-தின் அபாக் போன்றவர்களிடம் மின்ஹாஜ்-உத்-தின் மதிப்பு உயர்ந்தது. ”மின்ஹாஜ்-உத்-தின் செயல்கள் சுல்தான்(மாலிக்) குதுப்-உத்-தின் ஐ அடைந்த பொழுது சுல்தான் மதிப்புமிக்க உடையயும் அந்தஸ்தையும் பரிசாக அனுப்பினார் என வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார். உயரமான சுவர்களும் பெரிய கட்டிடங்களும் கொண்ட நாலந்தா நல்ல பாதுகாப்பு கொண்டகோட்டையாக இக்தியார்-உத்-தின் இன்னுக்கும் அவனுடைய படைகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அவன் இருநூறு குதிரைகள் கொண்ட படையும் வந்து தீடீரென தாக்கியதாக எழுதுகிறார்.
அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள், மேலும் அங்கிருந்த அனைத்து பிராமணர்களில் எல்லோருமே தலையை மொட்டையடித்து இருந்தார்கள், அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். அங்கே அதிகளவிலான புத்தகங்கள் இருந்தன. அந்த புத்தகங்கள் முஸ்லீம்களின் கவனத்திற்கு வந்த பொழுது முஸ்லீம்களுக்கு அதை பற்றி தகவல்களை தருவதற்காக இந்துக்கள் அழைத்து வரப்பட்டனர். அந்த இந்துக்களும் முழுமையாக கொல்லப்பட்டனர். புத்தகங்களை பற்றிய தகவல்களை அறிந்த பொழுது அந்த மொத்த வளாகமும் ஒரு கல்லூரி எனவும் இந்துக்களின் மொழியில் அதை பிகார் (விகாரை) என அழைத்தார்கள் என எழுதுகிறார்.
இஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம் (நாளந்தா பல்கலைக்கழகம்)
இஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம் (நாளந்தா பல்கலைக்கழகம்)
வெற்றியடைந்த பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை மின்ஹாஜ் உத் தின் எழுதும் போது , முகமது இ பகட்யார் பெரும் கொள்ளை செல்வத்துடன் திரும்பினான், சுல்தானான குதுப்-உத்-தின் இபாக் முன்பு வந்த பொழுது உயரிய மரியாதையும் செல்வாக்கையும் பெற்றான். அது எவ்வளவு என்றால் அங்கிருந்த அரசவையின் மற்றவர்கள் பொறாமை கொள்ளுமளவுக்கு இருந்தது. இவ்வளவும் பொது வருடம் 1197 இல் நடந்தது.
இப்போது மார்க்சிய பதிவில் இந்த வரலாறு எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என பார்ப்போம். 2004 இல் டி. என் ஜா என்பவர் இந்திய வரலாற்று கான்கிரஸின் தலைவராக இருந்தார். டி. என். ஜாவின் தலைமை உரையை பார்ப்பது இந்த மார்க்சிய அறிவுஜீவித்தனம் எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கும். அந்த உரையில் அவர் பவுத்த விகாரைகளின் அழிப்பு பற்றி பொதுவாகவும் நாலந்தா பற்றி குறிப்பாகவும் சொல்கிறார்
ஒரு திபெத்திய நம்பிக்கையின் படி கலாகுரி அரசன் கர்ணா (11 ஆம் நூற்றாண்டு) மகதத்தில் இருந்த பல பவுத்த வழிபாட்டிடங்களையும் தங்குமிடங்களையும் அழித்தார் எனவும் திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், நாலந்தா நூலகம் சில இந்து குண்டர்களால் எரிக்கப்பட்டதை பற்றி பேசுகிறது.
இந்து குண்டர்கள்? இந்த சொற்றொடர் வித்தியாமாக இருக்கிறதல்லவா? 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திபெத்திய நூலில் சமகாலத்திய சொற்றொடரான இந்து குண்டர்கள் என்பது எப்படி இருக்கமுடியும்? மேலும் டி என் ஜாவின் கருத்தே இந்துமதம் என்பதே 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயன் உருவாக்கியது என்பதல்லவா? எனவே இந்த திபெத்திய நூல் எது? அது என்ன சொல்கிறது? அதை டி என் ஜா படித்திருக்கிறாரா?
பாக் சாம் ஜான் ஜங் எனும் நூல் சுமபா கன் போ யேஸ் பால் ஜார் என்பவரால் எழுதப்பட்டது. அவர் வாழ்ந்த காலம் 1704-88 அதாவது நாலந்தாவின் அழிப்பிற்கு 500 வருடங்களுக்கு பின்பு.
இது தான் முதல் தவறாக படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இடிப்பு நடந்த காலத்து எழுதப்பட்ட தபாக்ட் இ நசாரி எனும் நூலை விட்டுவிட்டு ஏன் 500 வருடம் கழித்து எழுதப்பட்ட நூலை ஏற்கவேண்டும்? அப்படியே இருப்பினும் டி என் ஜா அந்த நூலை படித்திருக்கிறாரா? ஒரு சுயமரியாதையுள்ள மார்க்சிஸ்ட் அதிலே எழுதப்பட்டிருக்கும் சங்கதிகளை நம்பமுடியுமா?
பாக் சாம் ஜான் ஜங் நூலை பதிப்பதித்தவரும் மொழிபெயர்த்தவருமான சரத் சந்திர தாஸ் நாலந்தா அழிவு பற்றி அதிலே என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தருகிறார்:
நாலந்தாவில் மகத அரசின் அமைச்சரான காகுத சிதா அமைத்த கோவிலில் ஒரு சமய சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது சில இளம் புத்த பிக்குகள் கைகழுவிய அழுக்கு நீரை இரண்டு தீர்திக பிச்சைக்காரர்கள் மீது வீசினர். கோபம் கொண்ட பிச்சைக்காரர்கள் தர்ம கனஞ்சா எனப்படும் நாலந்தாவின் பவுத்த பல்கலைகழகத்தில் இருந்த மூன்று புனித இடங்களை எரித்தனர். அவை ரத்ன சாகரம், ரதன் ராஜாகா, ஒன்பது மாடி கட்டிடமான ரத்னாதாதி எனப்படும் புனித நூல்களை கொண்ட நூலகம. (பக் 92)
இரண்டு பிச்சைக்காரர்கள் அவ்வளவு பெரிய வளாகத்தை அங்கிருக்கும் பவுத்த துறவிகள் இருக்கும்போதே ஒவ்வொரு கட்டிடமாக போய் எரிக்க முடியுமா?
மேற்சொன்ன வரிகள் சரத் சந்திர தாஸ் அவருடைய நூலில் அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் வரிகள் ஆகும் அவை முழுமையான சித்திரம் அல்ல. அது வெறும் அட்டவணையில் இருக்கும் சுருக்கப்பட்ட கருத்து தான் அப்படியானால் முழுமையான நிகழ்வுகள் இன்னும் பெரியதாக இருக்கும் அல்லவா? அப்படியானால் அந்த விளக்கம் இந்த நூலகம் எரிக்கப்பட்டதை பற்றி என்ன சொல்கிறது?
நூலின் ஆசிரியர் பவுத்த தர்மம் எப்படி மூன்று நடத்தப்பட்ட அழிவுகளில் இருந்து காப்பாற்றபட்டது என்பதை விளக்குகிறார். முதல் முறை நடந்தது , கவுகுனிமாமஸ்தா எனும் தாகிஸ்க் (துர்க்கிஸ்தான்) நாட்டு அரசனுக்கும் தர்ம சந்தரா எனும் நியு யோக் எனும் நாட்டு அரசனுக்கும் நடந்த பிரச்சினைகளால் ஆகும். தர்ம சந்திரா தன்னுடைய பரிசாக கவுகுமாமஸ்தாவுக்கு அனுப்பியவற்றை கெட்ட மந்திரம் என சொல்லி கவுகுனிமாஸ்தா, துருகா வின் மீது படையெடுத்து மகதத்தின் மூன்று அடிப்படைகளான பௌத்த தங்குமிடங்கள், நூல்கள், ஸ்தூபிகளை அழித்தான். கவுகுனிமாஸ்தா பவுத்த துறவிகளை துரத்தியடித்தான். தர்மசந்திராவின் சிற்றப்பா சீனாவிற்கு அதிக பவுத்த துறவிகளை அங்கு அறிவை பரப்ப அனுப்பினார். அதற்கு பதிலாக தங்கம் அனுப்பட்டபட்டது. அதைக்கொண்டு சிறிய அரசுகளை விலைக்கு வாங்கி கவுகுனிமாஸ்தாவின் மீது படையெடுத்து வெற்றி கண்டார். பின்பு மூன்று அடிப்படைகளையும் திரும்ப கட்டினார். இடிக்கப்பட்ட எல்லா புனித தலங்களும் கட்டப்பட்டதுடன் புதிதாக 84 தலங்களும் கட்டப்பட்டன. எனவே தர்மம் வாழ்ந்தது.
அடுத்த முறையில் பவுத்த நூலான பரஞ்சனபரமிதா வை 20 ஆண்டுகள் கற்பித்து வந்த ஆசிரியர் துராகவில் இருந்த திருடர்களால் கொல்லப்பட்டார். அவருடைய குருதி பாலாக மாறியது, அவருடைய உடலில் இருந்து பல பூக்கள் எழுந்தன. அவர் வானத்திற்கு பறந்து போனார்.
இப்போது நாம் டி என் ஜா சொல்லிய பகுதிக்கு வருகிறோம். இங்கே கேஷே டோர்ஜி டாம்டுல் எழுதிய மொழிபெயர்ப்பு முழுமையாக தரப்படுகிறது
மறுபடியும் அந்த நேரத்தில் முட்டிட பாதாரா எனும் அறிவாளர் இருந்தார் அவர் ஸ்தூபிகளை புதுப்பிப்பதையும் புதிதாக கட்டுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படியாக இருக்கும் பொழுது அவருக்கு போதிசத்துவ சமாந்தபாதார வின் தோற்றம் கிட்டியது. போதிசத்துவ சமாந்தபாராவின் துணியை கொண்டு அவர் லில்யூல்க்கு பறந்து சென்றார். அங்கு அவர் உயிர்களுக்கு நன்மையளிப்பதும் தர்மத்தை வளர்ப்பதுமான பல விஷயங்களை செய்தார். தர்மத்தை வளர்த்ததால் மத்திய நிலங்களில் (மகதம்?) தர்மம் 40 வருடங்களுக்கு வளர்ந்தது. அந்த நேரத்தில் நாலாந்தாவில் அரசனிடம் அமைச்சராக இருந்த காகுஸ்திதா கட்டிய கோவிலில் ஒரு கொண்டாட்டம் நடந்தது. அப்போது குறும்பான இளம் துறவிகள் பாத்திரம் கழுவிய நீரை அங்கிருந்த இரண்டு பவுத்தர் அல்லாத பிச்சைக்காரர்களில் மேல் தெளித்தார்கள், கூடவே அவர்கள் இருவரையும் கதவு இடுக்கில் வைத்து அழுத்தினார்கள். இதிலே ஒருவருக்கு உதவியாளனாக செயல்பட்ட பிச்சைக்காரன், ஆழமான குழியில் சூரியனின் சக்தியை பெறும் தவத்தை 12 வருடங்களுக்கு செய்தான். சூரியனின் சக்தி கிடைத்தபின்பு, யாகத்தில் எடுக்கப்பட்ட சாம்பலை நாலந்தாவில் இருந்த 84 பவுத்த தலங்களின் மீது தூவினான். அவைகள் எரிந்து சாம்பலாயின. குறிப்பாக நாலந்தாவின் மூன்று தர்ம காஞ்சா ஆன புனித நூல்களை கொண்டிருந்த கட்டிடங்கள் எரிந்தன. அவைகள் எரியும் பொழுது ரத்னதாடி இன் 9 ஆம் மாடியில் இருந்த குஹ்யசாமஜா மற்றும் பிரஞ்சபராமிதா எனும் புனித நூல்களில் இருந்து நீர் ஆறாக பெருகி ஓடியது அதனால் பல நூல்கள் காப்பாற்றப்பட்டன. அரச தண்டனைக்கு பயந்து இரண்டு பிச்சைக்காரர்களும் ஹசமா எனும் இடத்திற்கு ஓடிப்போனார்கள். அங்கு இருவரும் தானாக எரிந்து சாம்பலாயினர்.
எந்த ஒரு சுயமரியாதையுள்ள மார்க்சிஸ்டும் இதிலே சொல்லப்பட்டிருக்கும் ஒரு அதிசியத்தைக்கூட ஒப்புக்கொள்ளமாட்டான் ஆனால் இங்கே இரண்டு இருக்கிறது ஒன்று சித்திகளை பெற்று அதன் மூலம் கட்டிடங்கள் மேல் தீ வீசுவது இரண்டு புனித நூல்களில் இருந்து நீர் ஆறாக ஓடியது.
யாதாவா எழுதிய நூலில் கடைசி முடிவாக இப்படி சொல்கிறார்:
பவுத்தத்திற்கு மிகப்பெரிய அடி துருக்கிய படையெடுப்பினாலேயே தரப்பட்டது. துருக்கியர்கள் வங்காளத்திலும் மகதத்திலும் இருந்த பவுத்ததின் கொண்டாடப்பட்ட புனித தலங்களை அழித்து ஒழித்தார்கள். பெரும்பலான பவுத்தர்கள் திபெத்திற்கும் நேப்பாளத்திற்கும் தப்பி ஓடினார்கள்.
“அல்லாஹோ அக்பர்” என்று கத்திக் கொண்டே வந்த சம்சுத்தீன் என்ற அந்தப் படைவீரனின் கூரிய வாள் பிரதம ஆச்சாரியர் சீலபத்திரரின் நெஞ்சில் இறங்கியது. தன்னைச் சுற்றியிருந்த ஸ்தூபங்களின் உச்சிகள் எல்லாம் ஒளிமழுங்கிப் பேரிருள் சூழ்வது போலத் தோன்றியது. தான் தவழ்ந்து, விளையாடிக் கற்று வளர்ந்த அறிவுத் திருக் கோயில் அரக்கர்களால் சூறையாடப் பட்டுக் கொண்டிருந்ததைக் காணச் சகியாமல் அவர் கண்கள் மூடின…
இலங்கையிலிருந்தும், சீனத்திலிருந்தும், காந்தாரத்திலிருந்தும், கலிங்கத்திலிருந்தும், வங்கத்திலிருந்தும், காம்போஜத்திலிருந்தும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் ! போன வாரம் கூட த்ராவிட தேசத்தின் காஞ்சி நகரிலிருந்து 100 வித்யார்த்திகள் வந்தார்களே.. ஐயோ, அவர்களுக்கு என்ன ஆயிற்றோ?…
வெற்றி பெற்றவர்களுக்குப் பெரும் கொள்ளைகள் காத்திருந்தன. அந்த இடத்தில் இருந்த பெரும்பாலானாவர்கள் தலையை முழுக்க மொட்டையடித்த பிராமணர்கள் (பிட்சுக்கள்). அவர்கள் உடனடியாகக் கொல்லப் பட்டார்கள். பெரும் எண்ணிக்கையில் அங்கே புத்தகங்கள் இருந்தன. அவைகளைப் பார்த்த முகமதியர்கள் அவற்றில் என்ன இருக்கிறது என்று சில ஆட்களைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் எல்லாருமே கொல்லப்பட்டு விட்டார்கள்…
இசலாம் ஒர இனிய மாா்க்கம் சமாதான மாா்க்கம் 64 ோா்களிளால் நிை நாட்டப்பட்ட சமாதான பறா
அண்மையில் எழுந்த சர்ச்சைக்கு பிறகு தொல்.திருமாவளவன் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் தீண்டாமை எனும் கோட்பாட்டை கொண்டு வந்தவை பௌத்த சமண சமயங்களே எனக் கூறியிருக்கிறார். திருமுருக கிருபானந்த வாரியாரின் உரையை தாம் பயணத்தின் போது கேட்டதாகவும் அதன் மூலம் ‘கண்டு முட்டு கேட்டு முட்டு’ என்கிற சைவ எதிர்ப்பான சமணக் கோட்பாட்டை தாம் அறிந்து கொண்டதாகவும் சொல்கிறார். இதை திருமாவளவன் பதிவு செய்வது முக்கியமான ஒன்று. திருமாவளவன் அது ‘பார்ப்பனர்களையும் சைவர்களையும்’ பார்த்து சமண-பௌத்தர்கள் செய்ததாகவும் எனவே சைவ வைணவ எழுச்சியின் போது அவர்களே தீண்டத்தகாதவரென ஆக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.
திருமுருக கிருபானந்த வாரியார் இவ்விஷயத்தில் கூறுகிற ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சமணர்களின் மதம் பொய் என்பதால் அவர்கள் தோற்கவில்லை என்பது. திருப்புகழமிர்தம் என அவர் நடத்தி வந்த பத்திரிகையில் (விய ஆண்டு ஆனி மாதம்: ஜூன் 1946) அவர் பின்வருமாறு எழுதுகிறார்:
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பார் திருவள்ளுவர். மனிதனை மனிதன் தீண்டக்கூடாது என்பதும் தீண்டினால் நீராடவேண்டுமென்பதும் அறிவியலுக்குப் பொருந்தாதவையாம். அங்ஙனமிருக்க சமணர்கள் திருநீறு பூசும் சைவர்களைக் கண்டால் ‘கண்டுமுட்டு’ என்று நீராடுவதும், நீராடுகின்ற ஒருவனை மற்றொருவன் ஏன் குளிக்கின்றனை என வினவுவானாயின் ‘பூச்சாண்டியைக் கண்டேன்’ என்று அவன் கூறியவுடன், கேட்டவன் ‘கேட்டு முட்டு’ என்று நீராடுவதும் ஆகிய இத்தகைய அநீதிகளை சமணர்கள் மேற்கொண்டார்கள். கண்டால் குளிப்பதும் கேட்டால் குளிப்பதும் என்றால் இவை எத்தனைப் பெரிய கொடுமைகள்? அதனால் திருவருள் சமணர்கட்குத் துணை புரியவில்லை”.
ஆனால் திருமாவளவன் பரசமய கண்டனம் என்பதை அது பறையரின் சமயம் என்பதுடன் இணைக்கின்றார். இதற்கு ஆதாரமில்லை என்பதுடன் ’பர’ என்பது உயர்ந்த ஆன்மிக நிலை என்பதுடன் இணைந்து ‘பரசிவம்’ ‘பரம் பொருள்’ என்பதுடன் வரும் ‘பர’ என்பதே பறையர் சமுதாயத்துடன் இணைத்து பேசப்படதக்கதாக அமைகிறது.
SPREADING FALSE RUMOUR AND MAKING MOUNTAIN OUT OF MOLE HILE IS THE PASTIME OF SUVANAPRIYAN.SHAME SHAME ON SUVANAPRIYAN.
இந்தியாவில் பௌத்த மதம் அழிய
இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் – டாக்டர் #அம்பேத்கர்
ஆதாரம் நூல் : "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் "
என்ற நூலிலிருந்து……
"இந்தியாவின் மீது முஸ்லீம்கள் படையெடுத்தது மற்றொரு காரணமாகும். ‘பீகாருக்குள் அலாவுதீன் நுழைந்தபோது 5000 பிக்குகளை கொன்று குவித்தான்."
(நூல்: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும், எழுத்தும் 35, பக்.495)
”முஸ்லீம் ஆக்கிரமிப்பின் காரணமாகத்தான் புத்தமதத்துக்கு பெரிய அடி விழுந்தது. அவர்கள் புத்தரின் சிலைகளைஅகற்றி பிக்குகளைக் கொன்று குவித்தனர்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், பேச்சும் எழுத்தும் -37, பக்.515)
புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். …..புத்தர் பிரானின் உருவச் சிலைகளை அழித்து சிதைத்தனர்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், பேச்சும் எழுத்தும் -37, பக்.694)
Related Posts:
தங்களின் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
தங்களின் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
Post a Comment