Followers

Wednesday, December 13, 2017

மோனிகா இன்று இஸ்லாமிய பிரசார பெண்ணாக...!


2 comments:

Dr.Anburaj said...

முஹூர்த்தமபி ஜீவேத்வை நரஹ சுக்லேன கர்மணா

ந கல்பமபி கஷ்டேன லோகத்வயவிரோதினா

-சாணக்ய நீதி 13-1

பொருள்

தகாத செயல்களை செய்துகொண்டு யுகக் கணக்கில் வாழ்வதைவிட, குற்றமற்ற தூய செயல்களைச் செய்துகொண்டு ஒரு நொடி வாழ்ந்தாலும் சிறந்ததே. தீய செயல்கள் இக, பர லோக வாழ்வுக்குத் தீங்கு இழைக்கும்.

மார்க்கண்டேயன் 16 வயது வாழ்ந்தும் அழியாத இடம் பெற்றான்.

ஆதி சங்கரர் 32 வயதும், சம்பந்தர் 16 வயதும் தான் வாழ்ந்தனர். பாரதியார் 39 வயதுதான் வாழ்ந்தனர். சுவாமி விவேகாநந்தரும் அவ்வாறே.

இவர்கள் அனைவரும் வரலாற்றில், இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டனர். ஆகையால் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற குறிக்கோளைவிட. இருக்கும் காலத்தில் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதே சிறந்த லட்சியம்.

மார்கண்டேய புராணம் காட்டிய பாதை

புகழ் சேர்க்கும் 16 வயதுப் புதல்வன் (( மார்க்கண்டேயன் )) வேண்டுமா? பூமிக்குப் பாரமாக வாழும் ஆயிரத்தோடு ஆயிரத்தொன்றாக 100 ஆண்டுகள் வாழும் புதல்வன் வேண்டுமா? என்று மிருகண்டு ரிஷியை இறைவன் கேட்ட போது புகழ் சேர்க்கும்- தோன்றிற் புகழொடு தோன்றும் -- 16 வயதுப் புதல்வன் போதும் என்றனர் ம்ருகண்டுவும் அவரது மனைவி மருத்வதியும். நல்ல அருமையான கதை. இந்துக்களின் லட்சியம் எதுவாக இருக்க வேண்டும் என்று சொல்லும் கதை. வள்ளுவனை புகழ் என்னும் அதிகாரத்தின் கீழ் பத்து குறட்பாக்களைப் பாடவைத்த கதை!
ஏதேனும் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று துடியாய்த் துடித்த பாரதி பாடுகிறான் ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?’ என்று. அவனுடைய ஆசை இந்த பூமிக்குப் பாரமாக இருக்கக்கூடது என்பதே.

உலகமெங்கும் தமிழ் மொழி ஓசையையக் கேட்கச் செய்ய வேண்டும்; வேத முரசு எங்கும் ஒலிக்க வேண்டும்; தமிழில் பழ மறையைப் பாட வேண்டும்; நாடு விடுதலை பெறவேண்டும்; இல்லையென்ற கொடுமை இல்லையாக வேண்டும்; கோடி கவிதைகள் இயற்றல் வேண்டும்; விட்டு விடுதலையாகி (முக்தி) சிட்டுக்குருவி போல பறக்க வேண்டும்- என்று பாடுபட்டான்; அழியாப் புகழும் பெற்றான்.

“வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

--பாரதி பாடல்

வள்ளுவனும் சொன்னான்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம் (குறள் 239)

பொருள்

புகழ்பட வாழாத உடம்பைப் பெற்ற நிலத்தில் விளைச்சல்கூடக் குறைந்து விடும்.

வசையொ ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழாதவர் (240)

பொருள்

உலகத்தில் தம் மீது பழியில்லாமல் வாழ்கின்றவரே வாழ்கின்றவர் ஆவார்கள். புகழ் தேடாமல் வாழ்வோர், இறந்தர்கள் போலத்தான்.

‘They alone live for who live others; the rest are more dead than alive’ -Swami Vivekananda

பிறருக்காக வாழ்பவனே -- அதாவது சுயநலம் இல்லாமல் -- வாழ்பவனே வாழ்பவன்; மற்ற எல்லோரும் செத்தாருள் வைக்கப்படும் - என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.

வள்ளுவன், பாரதி, விவேகாநந்தர், 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாணக்கியன்-- எல்லோரும் சொன்னது ஒன்றே:

லட்சியத்துடன் வாழ்; புகழுடன் வாழ்.

Dr.Anburaj said...

பாரதியும் சாணக்கியனும் ஒரே கருத்துக்களை சொல்லுவதைப் படிக்கும் போது இனிக்கிறது. இந்திய சிந்தனை 2300 ஆண்டுகளுக்கு முன்ன்ரும் ஒன்றே; பாரதி காலத்திலும் ஒன்றே.


சென்றது மீளாது

சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்றுவிளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்

தீமையெலாம் அழிந்துபோம் திரும்பிவாரா -- பாரதி பாடல்


சாணக்கியன் சொல்லுகிறான்:-

கடந்தகாலத்தை எண்ணி வருந்தாதே;எதிர்காலத்தை எண்ணி கவலைப் படாதே

புத்திசாலிகள் நிகழ்காலத்துக்கு ஏற்ப நடப்பார்கள்

கதே ஸோகோ ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத்

வர்த்தமானேன காலேன ப்ரவர்தந்தே விசக்ஷணாஹா

--சாணக்ய நீதி 13-2

சீன தத்துவ ஞானியான லாவோட்ஸி கிட்டத்தட்ட புத்தர், மஹாவீரர் ஆகிய ஞானிகளின் சம காலத்திய ஞானி. அவர் மிகவும் அழகாகச் சொல்கிறார்:
நீ மனத்தொய்வுடன் காணப்பட்டால் நீ கடந்த காலத்தில் வாழ்கிறாய்;



நீ கவலையுடன் காணப்பட்டால் நீ எதிர்காலத்தில் வாழ்கிறாய் என்று அர்த்தம்;

நீ அமைதியுடன் காணப்பட்டால் நீ நிகழ் காலத்தில் வாழ்கிறாய் என்று தெரிகிறது.

ஆக அறிஞர்கள் சொல்லுவது இதுதான்:

கடந்த காலத்தில் நிகழ்ந்தனவற்றை எண்ணி எண்ணி வருந்தாதே; மனக் கலக்கம் அடையாதே.

எதிர்காலத்தில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று கவலை தோய்ந்தமுகத்துடன் இராதே.

கிடைத்த பொழுதை, கண் முன்னால் நிற்கும் நிகழ் காலத்தை, எப்படி நன்கு பயன்படுத்துவது, எப்படி இன்பமாகப் பயன்படுத்த முடியும் என்று சிந்திக்கவும்; அப்படி இருந்தால் மகிழ்ச்சி பொங்கும்; கவலை மறையும்; மனத் தொய்வு நீங்கும்.

பாரதி, சாணக்கியன், சீன தத்துவ ஞானி லாவோட்ஸீ ஆகிய மூவரும் சொன்ன பிறகும் நமக்கு என்ன தயக்கம்?

நிகழ் காலத்தில் வாழ்வோம்!