Followers

Tuesday, January 15, 2019

முஸ்லிம்கள் 'பொங்கல் பண்டிகை' யை கொண்டாடுவதில்லையே ஏன்?

முஸ்லிம்கள் இனத்தால் திராவிடர்களாக இருந்து தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் 'பொங்கல் பண்டிகை' யை கொண்டாடுவதில்லையே ஏன்?
முதலாவது நாள் போகிப் பண்டிகை எனப்படுகிறது. இந்நாளில் மழையைத் தந்து அதன் மூலம் வளம்மிகு அறுவடைக்கு உதவிய முகில்களின் தெய்வமான இந்திரனுக்கு நன்றி கூறப்படுகிறது.இரண்டாம் நாளான தைப்பொங்கல் நாளில் சூரியனுக்கு பொங்கலிட்டு படைக்கப்படுகிறது. கானும் பண்டிகை அல்லது மாட்டுப் பொங்கல் எனப்படும் மூன்றாம் நாளில் உழுவதற்கு உதவிய மாட்டுக்கும் பாலை வழங்கும் பசுவுக்கும் பொங்கலிட்டு நன்றி கூறுவார்கள்.
தமிழகத்தில் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு சொந்த வயல் இருக்கும். தாராளமாக பொங்கலை கொண்டாடலாம்தான். ஆனால் இந்த பண்டிகையானது வழக்கமாக பிராமணர்களால் ஒரு இந்து பண்டிகையாக மாற்றப்பட்டு விட்டது. பண்டைய தமிழர்கள் உருவமற்ற இயற்கை தெய்வத்தினையே வணங்கி வந்தனர். சூரியனை வணங்குதலும், காளை மாடுகளை பசு மாடுகளை வணங்குவதும் நெருப்பை வணங்குவதும் ஆரிய கலாசாரம். இதற்கு பல ஆதாரங்கள் வரலாற்றில் உண்டு. குர்ஆனிலும் ஆதாரங்கள் உண்டு. ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளிலிருந்து படையெடுத்த ஆரியர்கள் திராவிடர்களை வென்று தங்கள் கலாசாரத்தையும் புகுத்தி விட்டனர்.
சூரியனை வணங்காத, மாடுகளை வணங்காத, நெருப்பை வணங்காத பொங்கல் பண்டிகையாக தமிழ் பேசும் இந்துக்கள் மாற்றினால் அந்த பண்டிகைகளில் இஸ்லாமியரும் கலந்து கொள்வர். தங்கள் வீடுகளிலும் பொங்கலை தாராளமாக கொண்டாடுவர். இனம் சார்ந்த பண்டிகைகளுக்கு, கலாசார நிகழ்வுகளுக்கு இஸ்லாம் தடையில்லை. இங்கு சவுதியில் கூட அரேபிய கலாசாரத்தை யொட்டி கழுகு பந்தயம், பெரும் வாள்களோடு நடனமாடுதல், ஒட்டக பந்தயம், புழுதிப் புயலிலிருந்து பாதுகாக்க தலையின் மேல் துணி அது பறக்காமலிருக்க மேலே ஒரு வட்டு என்று அரபுகளிடத்தில் பார்த்திருக்கலாம். அது அரபு மொழி பேசுபவர்களின் கலாசார உரிமை. அதில் இஸ்லாம் தலையிடாது. இவை எல்லாம் உலக முஸ்லிம்களிடத்தில் காண முடியாது. அது போல் ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் இனம் சார்ந்த பண்டிகையாக பொங்கலை மாற்றுங்கள். நானும் எனது இஸ்லாமிய தோழர்களும் தாராளமாக உங்களோடு சேர்ந்து பொங்கலை கொண்டாடுவோம்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.


3 comments:

Dr.Anburaj said...

சும்மா பில்டப் பண்ண வேண்டாம்.
முஸ்லீம்கள் அரேபிய அடிமைகள்.
இந்திய முஸ்லீம்களின் மூளை அரேபியாவில் உள்ளது.
அவன் பொங்கல் விட்டால் இந்திய முஸ்லீம்கள் பொங்கல் விடுவார்கள்.
அடிப்படை உண்மை இதுதான்.
இந்தியர்கள் விவசாயம் செய்து நாகரீகம் முன்னேற்றம் பெற்றவர்கள். 10000 ஆண்டுகள் தொண்மை கொண்டவர்கள். யாதும் ஊரோ யாவரும் கேளீா் என்று மனிதாபிமானம் கொண்டவா்கள். 9000 ஆண்டுகள் பழைமையான தொல்காப்பியம் என்ற புகழ் பெற்ற தமிழ் இலக்கண நூலை தந்த தொல்காப்பியா் ஒரு பார்ப்பனா். பண்பாடு மிக்கவர்கள்.
ஆனால் அரேபிய காடையர்கள் வேட்டை யாடும் பின்தந்திய கலாச்சார நிலையில் வாழ்பவர்கள். அரேபியர்கள் கொள்ளையடிப்பது பெண்களை அடிமைகளாக்கி வைப்பாட்டியாக வைப்பது பெண்களை விற்பனை செய்வது பிறர் சொத்துக்களை கொள்ளையடித்து பங்கு போட்டுகொள்வது போன்றவை வேட்டை சமூதாயத்தின் அடையாளங்கள். ஆனால் மதம் என்ற போர்வையில் இந்த கலாச்சார பரிணாமநிலை நிறுவனப்பட்டுள்ளது. காரணம் குரான் ஹதீஸ். குரான்-ஹதீஸ் ஒரு வேட்டை சமூதாயத்தின் அடையாளம்.
முட்டாள்தனமாக இந்து கலாச்சாரத்தின் சிறப்புக்களை மறந்து விட்டு தரம் தாழ்ந்து ஒரு வேட்டை காலாச்சாரத்தை இசுலாம் என்ற பெயரில் பின்பற்றி வாழந்து வருபவர்கள் இந்திய முஸ்லீம்கள்.அவர்களால் பொங்கல் பண்டிகையில் சிறப்புக்களை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.
இந்து பண்டிகைகள் அனைததும் பொருளாதாரம் சாரந்தவை. பொங்கல் தினம் விவசாய பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தும் ஒரு அற்புதமாக பண்டிகை. கரும்பு மஞ்சள்குலை பொங்கல் சாமான்கள் புது உடைகள் பழங்கள் காய்கறி என்று இறைவனுக்கு படைக்கின்றார்கள். ஆதாம்--ஏவாள் இறைவனுக்கு படைத்தது போல் இந்தியா்களும் -இந்துக்களும் படைக்கின்றார்கள். பொங்கல் பிறகு விவசாயிகளின் கை நிறைய மடி நிறைய பெட்டி நிறைய பணம் இருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும்.வழி பிறந்து கொண்டேயிருக்கின்றது. விவசாயம் என்றால் என்ன என்று அறியாத முஸ்லீம்கள் பொங்கலின் மகத்துவத்தை அறியாத புரியாத அரேபிய அடிமைகள். ஒா் நாம் ஓரு உருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாம் அளித்து மகிழும் மக்கள் இந்துக்கள்.அரேபிய காடையர்களிடமிருந்து இந்துக்கள் கற்றுக் கொள்ள ஏதும்யில்லை. இந்துக்கள் அறியாத கருத்து ஏதும் குரானில் இல்லை.

Dr.Anburaj said...

அது போல் ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் இனம் சார்ந்த பண்டிகையாக பொங்கலை மாற்றுங்கள். நானும் எனது இஸ்லாமிய தோழர்களும் தாராளமாக உங்களோடு சேர்ந்து பொங்கலை கொண்டாடுவோம்.
-----------------------------------------------------------------------------------------
நீங்கள்-முஸ்லீம்கள் பொங்கல் கொண்டாடவில்லை என்று யாரும் அழவில்லை. அழ மாட்டோம். பொங்கல் விழாவை இப்படித்தான் கொண்டாட வேண்டும் என்ற வரையறை யாருக்கும் இல்லை என்பது கூட தங்களுக்கு புரிய வில்லை. தங்களுக்கு பிடித்தமான வகையில் கூட்டி குறைத்து கொண்டாடினால் இந்துக்கள் யாரும் தங்கள் மீது வழக்கு போட்டு விட மாட்டாா்கள்.

Dr.Anburaj said...



வாசகர்கள் யாரும்விவாதங்களில் பங்கேற்பதில்லையே.ஏன் ? ஆஷிக் என்ன ஆனாா் ?
---------------------------------------------------------------------------------------------எனது பதிவுகளை வெளியிடக் கூடாது என்று தங்களிடம் ஆட்சேபணை செய்தாா் .தாங்கள் ஏற்கவில்லை.எனவே வெட்டிக் கொண்டாா் என்று நினைக்கின்றேன்.