Followers

Sunday, January 13, 2019

சித்தீக் சராய்....

சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு அருகிலிருக்கும் சித்திக் சராயின் வரலாறு புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.
அப்போது (1906 ஆம் ஆண்டு) சென்ட்ரல் ரயில்வே நிலையம் அருகே இராமசாமி முதலியார் லாட்ஜ் என்ற தங்குமிடம் மட்டுமே இருந்தது. சென்ட்ரல் ரயில்வே நிலையம் வந்து வடமாநிலங்களுக்கு செல்ல விரும்புவோர் இந்த லாட்ஜில் தான் தங்குவது வழக்கம் ஆனால் இதில் தங்க முஸ்லீம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இங்கு "முஸ்லீம்களுக்கு அனுமதி இல்லை" என்ற அறிவிப்பு பலகை அங்கு தொங்க விடப்பட்டிருந்தது. ஆம்பூரைச் சார்ந்த தொழிலதிபர் சித்தீக் ஹீஸைன் வியபார விஷயமாக பம்பாய் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபோது இந்த லாட்ஜில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது அவரது மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது.
பயணம் முடிந்து ஊர் திரும்பிய அவர், தனது மகன் நவாப் அப்துல் ஹக்கீமை அழைத்து, இது பற்றி எடுத்து கூறி வருங்காலத்தில் உனக்கு பணவசதி ஏற்பட்டால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே லாட்ஜ் ஒன்றைக் கட்ட ஏற்பாடு செய் என்று கூறினார். தகப்பனார் இறந்த பல ஆண்டுகளுக்கு பிறகு நவாப் அப்துல் ஹக்கீம் சாகிப் தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அங்கு ஒரு லாட்ஜைக் கட்டினார் (1926 ஆம் ஆண்டு). இதுவே சித்தீக் சராய் என்று அழைக்கப்படும் லாட்ஜாகும். இந்த விடுதி ( லாட்ஜ்) கட்டப்பட்ட பிறகு முஸ்லிம் பயணிகளின் இன்னல் தீர்ந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சற்று தள்ளி எதிர்புறம் பூந்தமல்லி ஹைரோட்டில் இந்த "சராய் " இப்போதும் செயல்பட்டு வருகிறது.
கட்டுரை : சேயன் இப்ராகிம்


2 comments:

Dr.Anburaj said...


“சித்திக் சராய் ” ல் பிற மதத்தவர்கள் தங்க அனுமதி உண்டா ? உண்டு என்று கட்டுரையில் சொல்லவில்லை.அதனால் கேடகின்றேன்.

முஸ்லீம்களுக்கு இராமசாமி முதலியாா் ஏன் அனுமதி மறுத்தாா் ?

பண்டைய பயித்தியக்காரத்தனம் .

Dr Shafeeque Ahmed said...

Ivar ambur ae seinthavar illae, melvisharam yendra oorae seindhavar