இந்தப் படம் பேராசிரியை ஒருவரால் முகநூல் பதிவில் பகிரப்பட்டிருந்தது.
மேலதிக விபரங்கள் அறிவதற்காக இணையத்தில் தேடியபோது மெய்சிலிர்த்தது.
அந்தக் கரங்களில் என்ன இருக்கிறது?அப்படி ஏன் அந்தக் கரங்களைப் பார்க்கிறார்கள்?அந்தக் கரங்கள் அவர்களிடம் ஏதும் பேசுகிறதா? கேளுங்கள்....
2012ல் ஆப்கானிஸ்தானின் காந்தகார் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டிருந்தார் தளபதி அப்துல் ரஹீம். அப்போது, குண்டு வெடித்ததில் தனது இரு கைகளையும் இழந்துவிட்டார். உடனடியாக அமெரிக்க மருத்துவக்குழு அவருக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளித்தது. இருப்பினும் தனக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட வேண்டும் என்று பல நாட்டு மருத்துவமனைகளை அணுகியும் பயனில்லை.இந்நிலையில் இந்தியாவில் கேரளாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அறிகிறார்.
ஆறேழு மாதங்களுக்கு முன் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பொருத்தமான கைகளுக்குக் காத்திருக்கும் வேளையில், விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஜோஸப் என்பவரின் கைகளைப் பொருத்த ஆலோசிக்கப்படுகிறது.
ஜோஸப் குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு ஆபரேஷனுக்கு ஆயத்தமாகிறது மருத்துவக் குழு.பேராசிரியரும் உறுப்பு மாற்று சிகிச்சையின் நிபுணருமான டாக்டர். சுப்ரமணியம், இருபது மருத்துவர்கள் மற்றும் எட்டு மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட மருத்துவக் குழுவினருடன் செயல் முறைகளைத் தொடங்குகிறார். ஏறத்தாழ பதினைந்து மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்படுகிறது.
தற்போது குணமடைந்து, தமது அன்றாடப் பணிகளை தமது(!) கைகளின் மூலமே செய்துவரும் அப்துல் ரஹீமை, மேலும் சில மாதங்கள் தங்கியிருந்து பிசியோதெரபி பயிற்சி எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறார் மருத்துவர்.
தமக்கு கைகளை வழங்கிய ஜோஸப் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பின்போது எடுத்த படம் தான் இது.
ஜோஸப்பின் மனைவியும் மகளும் அந்தக் கைகளை கண்ணீரோடும் அன்போடும் பார்க்கும் பார்வையை விவரிக்க உலகில் மொழியேதும் உண்டோ?
கைகளை இழந்த ஒரு இஸ்லாமியனுக்கு, ஒரு கிறிஸ்தவனின் கைகளை எடுத்து ஒரு `இந்துவின் கைகளால் பொருத்தப்பட்டுள்ளது.
கைகளை இழந்த ஒரு இஸ்லாமியனுக்கு, ஒரு கிறிஸ்தவனின் கைகளை எடுத்து ஒரு `இந்துவின் கைகளால் பொருத்தப்பட்டுள்ளது.
மதங்கள் தூக்கி எறியப்பட்டு, மனிதம் ஒட்டப்பட்டுள்ளது.மனிதம் மறந்து மதம்பிடித்துத் திரியும் மனங்கள் மடிந்து போகட்டும்,மண்ணில் மனித நேயம் தழைக்கட்டும்!
- ரபீக்
இந்த ஆக்கத்தை அனுப்பித் தந்த நண்பருக்கு நன்றி....
2 comments:
ஏற்கனவே படித்தது. தமிழ்ஹிந்து அல்லது சுவனப்பிரியனில்தான் இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------
ஜோசப் குடும்பத்தினா் கிறிஸ்தவர்கள் மறந்து விடாதீர்கள்.
இதுவரை உறுப்புதானம் வழங்கிய ஒரு முஸ்லீம் பெயரைச் சொல்லுங்கள் சுவனப்பிரியன்.
தொண்டுகள் செய்வதில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் முன்னிலை.
முஸ்லீம்கள் களத்தில் இல்லை. உறுப்புதானம் வழங்கக் கூடாது என்று முஸ்லீம் பத்திரிகைளில் எழுதப்பட்டு வருகின்றது. அரேபிய அடிமைகள்.
மருத்துவ கல்லூரிகளில் அனட்டாமி படிக்க பிணங்கள் தேவை. 6 பேருக்கு ஒரு பிணம் தேவை. ஆனால் பிணங்கள் கிடைப்பது அருமையாக உள்ளது.எனவே 30 பேருக்கு ஒன்று என்ற அளவில்தான் பிணங்கள் கிடைக்கின்றன.
தேகத்தை தானம் செய்வதில் கூட இந்துக்கள்தான் முதல் மதிப்பெண்.
முஸ்லீம்கள் கடைசி ரேங்கில்கூட இல்லை என்பது பரிதாபத்திற்குரியது.
MBBS/MD/MS படிக்கும் முஸ்லீம் மாணவர்கள் இதை சற்று நினைத்து பார்க்க வேண்டும்.
மற்ற முஸ்லீம்களும் இப்பிரச்சனையை கையாள வேண்டும்.
இரத்ததானம முகாம்கள் நடத்துவது போல் “தேகதான“ முகாம் நடத்த இசுலாமிய அமைப்புகள் முன்வர வேண்டும்.மருத்துவ கல்லூரிகளில் பிணங்கள் குவியட்டும். மருத்துவ மாணவர்களுக்கு ஆளுக்கு ஒரு பிணம் என்று கிடைத்து அவர்கள் கல்வி சிறக்க உதவியாக அது இருக்கும்.
பெரியார் தாசன் என்பவா் அப்துல்லா என்ற பெயர் மாற்றி அரேபியமதத்திற்க மாறிவிட்டாா். பெரியாா்தாசனாக இருக்கும் போது இறந்த பின் உடலை மருத்துவ கல்லூரிக்கு உடல்தானம் செய்வதாக உறுதிமாழி அளித்திருந்தாா். முஸ்லீம் ஆகி இறந்த பின்னும் அவரதுஉறுதி மொழி அடிப்படையில் பிள்ளைகள் மருத்துவமனைக்கு இறந்த உடலை அளிக்க முன் வந்ததற்கு முஸ்லீம் ஜமாத் ஆட்சேபணை செய்தது .ஆனால் குடும்பஉறுப்பினா்கள் உடலில் ஒடுவது இந்து இரத்தம்.எனவே உடலை மருத்துவ மனையில் ஒப்படைத்தனா். அடக்கத்திற்குச் சென்ற அரேபிய அடிமைக் கூட்டம் வெறுப்போடு திரும்பியது.
இந்த சம்பவம் தங்களுக்கு நன்கு தெரியும்.
புதைத்தாலும் எரித்தாலும் ஆய்வகத்தில் அறுத்து பழகி பின் அடக்கம் செய்தாலும் சர்வ வல்லமை படைத்த அரேபிய கடவுளால் நியாய தீர்ப்ப நாளில் உயிரோடு எழுப்ப முடியும் தானே ? பின் தேகதானம் செய்வதில் என்ன தயக்கம்.
Post a Comment