தையல்காரரின் மகன் இன்று CA வில் இந்திய அளவில் முதலிடம்!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சாதாப் ஹூசைன் ஒரு சாதாரண தையல்காரரின் மகன். எந்த பின்புலமும் இல்லாத எளிமையான குடும்பம். நான்கு சகோதரிகளோடு வறுமையில் சென்று கொண்டுள்ள குடும்பம். இருந்தும் ஒரு நாளுக்கு 13லிருந்து 14 மணி நேரம் கடுமையாக உழைத்தார். இன்று Charted Accountanat Of India (ICAI) வில் அகில இந்திய அளவில் 800 க்கு 597 அதாவது 74.63 சதவீத தேர்வு பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
'ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒரு முறை 30-40 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்வேன். மூன்று கிலோ மீட்டர் தினமும் நடை பயிற்சி மேற்கொள்வேன். இது எனக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். கடுமையாக உழைத்தேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது' என்கிறார்.
No comments:
Post a Comment