Followers

Wednesday, January 23, 2019

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மற்றுமொரு நிகழ்வு!

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மற்றுமொரு நிகழ்வு!
குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்து தொழிலாளி ஆதிமுத்து, கேரள முஸ்லிம்களின் உதவியால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தின் மூலம், ஆயுள் தண்டனைக் கைதியாக மாறியுள்ளார். இந்த மத நல்லிணக்க சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, பனக்காட்டைச் சேர்ந்த முனவர் அலி ஷிகாப்தங்கல் உள்ளிட்ட முஸ்லிம் நண்பர்கள், பணத்தைத் திரட்டி ஆதிமுத்துவின் குடும்பத்தினரிடம் அளித்துள்ளனர்.
தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த அர்ஜுனன் ஆதிமுத்துவும் (45), கேரளாவின் மலப்புரம் அருகே உள்ள ஹரிஞ்சாபாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஜீதும் குவைத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அப்துல் வாஜீதை 2013-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி கொலை செய்ததாக அர்ஜுனன் ஆதிமுத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு குவைத் அரசு மரண தண்டனை அளித்தது.
குவைத் நாட்டு சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால், கொலை செய்தவர் விடுதலை செய்யப்படுவார். இதுகுறித்து தெரிந்ததும், அர்ஜுனன் ஆதிமுத்துவின் மனைவி மாலதி, தனது 14 வயது மகள் பூஜாவுடன் கேரளா சென்றார்.
மாலதி, தன் குடும்பம் ஏழ்மையில் இருப்பதையும், பெண் பிள்ளை இருப்பதையும் சுட்டிக்காட்டி, தன் கணவருக்கு மன்னிப்பு வழங்கி குடும்பத்தை வாழ வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கேரள நிர்வாகி காதர் மொகைதீனுக்கு தெரிய வந்தது. அவர் உயிர் இழந்த அப்துல் வாஜீத்தின் குடும்பத்திற்கு தெரியப்படுத்தவே, மன்னிப்பு வழங்க சம்மதித்தனர். அதேநேரத்தில் அப்துல் வாஜீத்தின் மரணத்தினால் அவர் குடும்பமும் வாழ்வாதாரம் இழந்துள்ளது. வாஜீத்தின் மனைவி, தன் மகள்களுடன் வாடகை வீட்டில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரப்பட்டது.
சொந்த பந்தங்களை நாடியும், வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்தும் கூட ரூ.5 லட்சத்துக்கு மேல் அர்ஜுனன் மனைவி மாலதியால் புரட்ட முடியவில்லை. பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர் பானக்காடு ஹைதர் அலி ஷிகாப்தங்கலின் உதவியை நாடினார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த முனவர் அலி ஷிகாப்தங்கல் பணம் திரட்டும் முயற்சியை முன்னெடுத்தார்.
நண்பர்கள், அறக்கட்டளைகளின் உதவியோடு 25 லட்ச ரூபாய் திரட்டப்பட்டது. மாலதி தன்னிடமிருந்த 5 லட்ச ரூபாயோடு சேர்த்து, ரூ.30 லட்சத்தை அப்துல் வாஜீத்தின் குடும்பத்துக்குக் கொடுத்தார். வாஜீத் குடும்பத்தின் சார்பில் அர்ஜுனன் ஆதிமுத்துவை மன்னிப்பதற்கான கடிதம் கொடுக்கப்பட்டது.
அக்கடிதம் இந்தியத் தூதரகத்தின் வழியாக, குவைத் நாட்டிற்குச் சென்றது. அதன் அடிப்படையில் அர்ஜுனன் ஆதிமுத்துவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய முனவரலி, ''இறைவனுக்கு நன்றி. எங்களுடைய சிறு முயற்சியின் மூலம் ஒரு மனித உயிர் இறப்பில் இருந்து காக்கப்பட்டிருக்கிறது. மனிதத்தைக் குறித்து மகிழ வேண்டிய தருணம் இது.
சொல்லப்போனால் நாங்கள் இரண்டு குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் ஏழ்மையானவர்கள். அவர்களின் பார்வையில் இருந்து பார்த்தால், பணம் கேட்டது தவறில்லை'' என்றார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
24-01-2018
படத்தில் உள்ளது அர்ஜூனனுக்காக பணம் திரட்டிய முனவ்வர் அலி.


4 comments:

Dr.Anburaj said...

மன்னிப்புக்கு விலை ரூ.30 லட்சம். அதையும ரூ25 லட்சம் பொதுமக்களிடம் -முஸ்லீம்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளது. வாழ்க. இந்து முஸலீம் மக்கள் நல்லவர்கள். அரேபிய அடிமைகள்தான் பிரச்சனைக்குரியவர்கள்.
சுவாமி விவேகானந்தா் “ எல்லா மதத்திலும் சாதியிலும் சமூகப்பிரிவிலும் மகத்தான ஆண்களும் பெண்களும் தோன்றியிருக்கின்றார்கள்.

ஆம் எவ்வளவுசத்தியமான வாக்கு.

Dr.Anburaj said...

இந்துக்களுக்கு முறையான சமய கல்வியை அளிக்க வேண்டியதன் அவசியத்தை பாரதியாா் விளக்குகின்றாா்
அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்
January 23, 2019
- ஜடாயு

அறிவே தெய்வம் என்ற பாரதியார் பாடல் உயர்நிலைப்பள்ளியில் எனக்குப் பாடமாக இருந்தது (1980களின் மத்தியில்). அனேகமாக 9 அல்லது 10ம் வகுப்பாக இருக்கலாம். திராவிட பாணி பகுத்தறிவு, கடவுள் மறுப்பு கொள்கைகள் அதில் உள்ளதாகக் கருதி தமிழ்ப்பாடநூலில் அது சேர்க்கப் பட்டிருந்தது. அவ்வாறே எங்கள் தமிழ் ஐயாவால் கற்பிக்கவும் பட்டது. பத்து கண்ணிகள் உள்ள அந்தப் பாடலில் கீழ்க்கண்டவை மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு பாடநூலில் கொடுக்கப் பட்டிருந்தன.

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் — பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வம் உண்-
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள் — எத-
னூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் என்-
றோதி யறியீரோ?

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம் — நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு
அவங்கள் புரிவீரோ?

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் — பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர் முறை
காட்டவும் வல்லீரோ?


ஆறாம் வகுப்பில் பாரதியார் கவிதைகள் புத்தகத்தைப் பரிசாகப் பெற்று அதை சில தடவைகள் புரட்டி பல பாரதியார் பாடல்களை மனனம் செய்து விட்டிருந்த எனக்கு, இந்த முழுப்பாடலும், வேதாந்தப் பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் அது வருவதும் தெரிந்திருந்தது. பாடலின் உட்பொருள் எதுவும் அந்த வயதில் விளங்கவில்லை என்றாலும் பாடப்புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருந்த விளக்கமும் அதையொட்டி தமிழ் ஐயா சொல்லியதும் எல்லாம் சுத்தமாகத் தவறு என்ற அளவில் புரிந்தது. ஆனால் தமிழ் ஐயாவிடம் விவாதிக்கும் துணிவோ முனைப்போ ஏதும் இருக்கவில்லை. சூழல் அப்படி.

பின்னாளில் வேதாந்த தத்துவ அறிமுக நூல்களையும் உபநிஷதங்களையும் கற்கும்போது தான், இந்தப் பாடலுக்கு பாரதியார் வைத்துள்ள ‘அறிவே தெய்வம்’ என்ற தலைப்பே ‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’ என்ற மஹாவாக்கியத்தின் நேரடி மொழிபெயர்ப்பு என்பது புரிந்தது. இதிலுள்ள கருத்துக்களும் முழுக்க முழுக்க அத்வைத வேதாந்தம் சார்ந்தவையே. அந்தப் பாடலில் உள்ள மற்ற ஆறு கண்ணிகளையும் சேர்த்துப் பார்த்தால் இது முழுமையாக விளங்கும்.

வேடம் பல்கோடியொர் உண்மைக்குள என்று
வேதம் புகன்றிடுமே — ஆங்கோர்
வேடத்தை நீர் உண்மையென்று கொள்வீர் என்றவ்-
வேதம் அறியாதே.

நாமம் பல்கோடியொர் உண்மைக்குள என்று
நான்மறை கூறிடுமே — ஆங்கோர்
நாமத்தை நீர் உண்மையென்று கொள்வீர் என்றந்-
நான்மறை கண்டிலதே.

Dr.Anburaj said...

2
நாம ரூபங்கள் என்பவை மெய்ம்மையின் தன்மைகளேயன்றி அவையே இறுதி மெய்ம்மை அல்ல. நாமரூபங்களைக் கடந்த தூய அறிவுநிலையே மெய்ப்பொருள், அதுவே பிரம்மம் என்பதே மேற்கண்ட இரு கண்ணிகளில் கூறப்பட்டது)

சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ? — பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமையழிவீரோ?

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமே — உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.

(உபசாந்த நிலை – மனம் முழுவதுமாக அடங்கிய அமைதி நிலை).

உள்ளதனைத்திலும் உள்ளொளியாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே — இங்கு
கொள்ளற்கரிய பிரமம் என்றே மறை
கூவுதல் கேளீரோ?

(அயம் ஆத்மா ப்ரஹ்ம – ‘இந்த ஆத்மாவே பிரம்மம்’ என்ற மஹாவாக்கியக் கருத்து இங்கு கூறப்பட்டது)

‘ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன்
உணர்வு’ எனும் வேதமெலாம் — என்றும்
ஒன்று பிரமம் உளது உண்மை அஃது
உணர்வெனக் கொள்வாயே.

Dr.Anburaj said...


குரான் மகாநாடு நடக்கவிருக்கின்றது.சனாதன ஒழிப்பு மகாநாட்டை ஒரு ஹிந்து நடத்துகின்றாா். தினத்தந்தியில் வெளியான ஒரு பக்க விளம்பரத்தில் நடுநாயகமாக கௌதமா் படம். பின் வலது ஒரத்தில் காயிதே மில்லத் படம். பின்னா் வந்த பல விளம்பரங்களில் ஜவஹருல்லா படம்.கொடுமையிலும் கொடுமை.திருமாவளவனின் தந்தை பெயர் இராமசாமி என்பதை தொல்காப்பியனாா் என்ற மாற்றி தனது பெயரை தொல் திருமாவளவன் என்ற மாற்றிக் கொண்டாா் திரு.தொல்.திருமாவளவன்.இந்த மகாநாடு தீண்டாமைக்கு எதிராக ஒரு புதிய விருவிருப்பை ஏறபடுத்துமானால் வரவேறகததககதே.ஆனால் அதற்கு சநாதன ஒழிப்பு என்றுபெயர் வைத்திருப்பது பண்பாடற்றச் செயல். காயிதே மில்லத் படித்த குரானில்மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களைப் பற்றி குர்ஆனின் உள்ள சொல்லாடல்களை சுருக்கமாகத் தருகிறேன் விரிவாகப் படிக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட எண்களுடைய குர்ஆன் வசனங்களைப் தேடிப் படித்துக் கொள்ளவும். என் மீது எரிச்சலிலும், புகைச்சலிலுமிருக்கும் முஃமின்களின் மனம் குளிர வைப்பதும் எனது கடமை. அவர்களுக்காகவும் இந்தக் குளு குளு குர்ஆன் வசனங்கள்… …

உலகவாழ்வில் பேராசை கொண்டவர்கள் 2:96
நஷ்டவாளிகள் 2:121
கூச்சல் கூப்பாடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் 2:171,
செவிடர்கள், ஊமையர்கள் குருடர்கள் 2:171
குரங்குகள், பன்றிகள் 5:60,
குரங்குகள் 7:166
நாய்கள் 7:176
கேவலமான கால்நடைகள் 8:22
மிகக் கெட்ட மிருகங்கள் 8:55
அசுத்தமானவர்கள் 9:28
மிருகங்கள், மிருகங்களைவிடக் கீழானவர்கள் 25:44
பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் மூழ்கிக் கிடப்பவர்கள் 38:2
அநியாயக்காரர்கள் 62:5
சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் 63:4
படைப்புகளில் மகா கெட்டவர்கள் 98:6

இதற்கு மேலும் முஃமின்களின் சப்பைக்கட்டுகளை விவாதிக்க வேண்டிய அவசியமில்லையென நினைக்கிறேன். குர்ஆனை மட்டுமே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்களால் ஒரு பொழுதும் மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவே முடியாது! கூடாது என்பதையே இக் குளுகுளு வசனங்கள் கூறுகின்றன.
—————————————————————————–
குரான் மகாநாடு நடத்தும் அன்பர்கள் இந்த மகா வாக்கியங்களுக்கு என்ன நியாயம் சொல்வார்கள். சனாதன ஒழிப்பு மாநாடு இது குறித்து பேசுமா ?குரான் மகாநாட்டில திருக்குறளுக்கு இடம் உண்டா ? புறநானூறு அகநானூரு குறித்த விவாதங்கள் நடக்குமா ? தேசத் தந்தை பெரிதும் போற்றிய பகவத்கீதை படிக்கப்படுமா ? இந்துக்கள் காபீர்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுமா ?