Followers

Wednesday, January 16, 2019

என்று தணியும் இந்த சாதி வெறி!



என்று தணியும் இந்த சாதி வெறி!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளது பஸேதி பஞ்சாயத். இங்கு அரசு வேலை ஒன்று நடந்து வந்தது. இங்கு நடக்கும் வேலைகளை கண்காணிப்பதற்காக தோல்பூர் மாவட்ட ஆட்சியர் நேகா கிரி வந்திருந்தார்.
அங்கு ஒரு விசித்திரமான காட்சி அரங்கேறி இருந்தது. உடம்பு முடியாத ஒரு பெண் தனது சிறு குழந்தையோடு கற்களை சுமந்து கடுமையான வேலைகளை செய்து கொண்டிருந்தார். அருகிலேயே ஒரு திடகாத்திரமான ஆண் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்தார். இது ஆட்சியருக்கு வித்தியாசமாக பட்டது. பலஹீனமான பெண் செய்ய வேண்டிய வேலையை ஆணும், ஆண் செய்ய வேண்டிய வேலையை பெண்ணும் செய்வதை பார்த்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தார். அதற்கு அந்த மக்கள்...
'அந்த பெண் வால்மீகி சாதியை சேர்ந்தவர். நாங்கள் எல்லாம் மேல் சாதி இந்துக்கள். அந்த பெண்ணின் கையால் நாங்கள் யாரும் தண்ணீர் அருந்த மாட்டோம். எனவே தான் அந்த பெண்ணுக்கு கல் சுமக்கும் வேலை கொடுக்கப்பட்டது.' என்றனர். ஆட்சியருக்கு மிகுந்த கோபம் வந்தது. அந்த பெண்ணிடமிருந்து சட்டியை வாங்கி தானும் கல் சுமந்தார். அதன் பிறகு அந்த பெண்ணை அழைத்து அவர் கையால் தண்ணீர் தரச் சொல்லி நீர் அருந்தினார். அங்குள்ள தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து அந்த பெண்ணின் கையால் தண்ணீர் அருந்த செய்தார். வேறு வழியின்றி அந்த மக்கள் ஆட்சியருக்கு கட்டுப் பட்டு தண்ணீர் அருந்தினர். அதிகாரத்தினால் தீண்டாமை அகன்றது. ஆனால் மக்கள் மனத்தில் உள்ள தீண்டாமையை அகற்றுவது யார்?
தகவல் உதவி
ந்யூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
16-01-2018

இதில் வேறு நேற்று உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்துக்கு மாறுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த காலத்திலும் மனிதனை மனிதனாக மதிக்கவில்லை என்றால் எங்கு சமத்துவம் கிடைக்கிறதோ அங்குதானெ செல்வர். இதனை ராஜ்நாத் சிங் உணர்ந்து தீண்டாமையை அகற்ற முதலில் பாடுபடட்டும்.


No comments: