Followers

Wednesday, September 16, 2015

கடிகாரம் செய்த சிறுவனை விலங்கிட்ட அமெரிக்க போலீஸார்!





14 வயதான அஹமத் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒரு பள்ளியில் படித்து வந்தான். அறிவியல் கண்டு பிடிப்புகளில் அதிக ஆர்வம் உடைய அவன் விட்டிலேயே தனது சொந்த முயற்சியில் ஒரு கடிகாரத்தை செய்துள்ளான். ஆர்வ மிகுதியால் அதனை தனது வகுப்பு ஆசிரியர்களிடம் காட்ட பள்ளிக்கும் எடுத்து வந்துள்ளான். இதனை பார்த்த ஆசிரியர் பயந்து போய் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவலர்கள் மாணவன் அஹமதை பள்ளி வளாகத்திலேயே கை விலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மாணவன் அஹமத் அதிர்ச்சியில் உறைந்தே போனான். 14 வயது இளைஞனை பலரின் முன்னிலையில் கை விலங்கிட்டு அழைத்துச் செல்வது எவ்வளவு பெரிய கொடுமை. காரணம் அவனது பெயர் அஹமத். அவன் ஒரு முஸ்லிம்.

இந்த செய்தி அமெரிக்கா மற்றும் உலகெங்கும் பரவவே பலரும் அஹமதுக்கு ஆதரவாக களமிறங்கினர். #IStandWithAhmed என்ற பெயரில் ஹேஸ் டேக் உருவாக்கி அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் அனைத்து மக்களும் சிறுவனுக்கு ஆதரவாக களமிறங்கினர். முடிவில் சிறுவன் விடுவிக்கப்பட்டான். இன்று விடுவிக்கப்பட்டாலும் அந்த சிறுவனின் மனதில் இந்த செயல் மாறாத வடுவை எற்படுத்தியிருக்கும் அல்லவா?

'Cool clock, Ahmed. Want to bring it to the White House? We should inspire more kids like you to like science. It's what makes America great.'

அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனது ட்விட்டர் தளத்தில் அஹ்மதை வெள்ளை மாளிகைக்கு கடிகாரத்தோடு வரவேற்றுள்ளார்.

ஒரு முஸ்லிமாக இந்த உலகத்தில் வாழ்வது எந்த அளவு சிரமமான காரியம் என்பதை அஹமதின் இந்த கைது நமக்கு விளக்குகிறது. இந்த உலகம் இன்று அஹமதையும் அவன் சார்ந்த மார்க்கத்தையும் ஏசலாம்: இழிவுபடுத்தலாம்: குர்ஆனில் இறைவன் கூறுவது போல் :இந்த உலகம் உண்மையான இறை விசுவாசிகளுக்கு ஒரு பரிசோதனைக் கூடம்' என்ற வாக்கியம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

எத்தனை சோதனைகள் அவச் சொற்கள் வந்தாலும் இறை நம்பிக்கையை மட்டும் ஒரு முஸ்லிம் விட்டு விட மாட்டான் என்பதை உரக்கச் சொல்வோம் இந்த உலகுக்கு!

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு இறை நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” என்று நாம் ஆறுதல் கூறினோம்.

குர்ஆன் 2:214



தகவல் உதவி
கார்டியன்
16-09-2015

1 comment:

Dr.Anburaj said...

முட்டாள்களின் அவசர முடிவு.ஒரு பால விஞ்ஞானியை எப்படி புண்படுத்தியிரக்கும் என்பதை நினைக்கும் போது மிகுந்த வேதனையும் வருத்தமுமு் அஎற்பட்டது. அகமது அதே பள்ளியில் படிக்க வேண்டும். தலை நிமிா்ந்து அதே வகுப்பில் அதே நிா்வாகத்தில் அதே ஆசிாியா்கள் பத்தியில் பள்ளிக்கு செல்ல வேண்டும். இப்போது அமோிக்க அதிபாின் விருந்தாளி ஆகிவிட்டாா். எல்லாம் நன்மைக்கே! இந்தியாவில் இப்படி நடக்காது.