

193 உறுப்பினர்களில் 119 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாலஸ்தீன் கொடியை ஐநாவில் பறக்க விட அனுமதி பெறப்பட்டது. வழக்கமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இவர்களோடு சேர்த்து எட்டு ஐரோப்பிய நாடுகளும் எதிராக வாக்களித்தன. ஆனால் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீன் பக்கம் நின்றதால் வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்தது. ஃப்ரான்ஸ் பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது.
'இந்த முயற்சியானது வருங்காலத்தில் ஐநாவில் முழு அங்கீகாரத்துடன் தனது கோரிக்கைகளை பாலஸ்தீன் வைக்க மிக ஏதுவாக இருக்கும். இது அதற்கான முதல் படி' என்கிறார் பாலஸ்தீன் பிரதமர் ரமி ஹம்துல்லா.
ஐநாவின் அமெரிக்க தூதர் தனது கருத்தாக சொல்லும் போது 'கொடி பறந்து விடுவதாலேயே இஸ்ரேலிய மக்களும் பாலஸ்தீன மக்களும் ஒற்றுமையாகி விட மாட்டார்கள்' என்று சொல்லியுள்ளார். இவர்களுக்கு அமைதி என்பதே உலகில் இருக்கக் கூடாது. எந்த குடி கெட்டாலும் அதில் தனது நாடு சுரண்டி கொழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலைபவர்கள் இந்த அமெரிக்கர்கள். இந்த அரசியல் சூழ்ச்சிகள் ஒரு நாள் அமெரிக்காவுக்கு எதிராகவே திரும்பக் கூடும். அந்த நாளும் வெகு தொலைவில் இல்லை. நம் காலத்திலேயே அமெரிக்காவுக்கு தக்க பாடத்தை இறைவன் புகட்டுவானாக!
தகவல் உதவி
கார்டியன்
1 comment:
இஸ்லேலில் பாலஸ்தீனா்களும் ஆஅரேபியா்களும் மிகவும் சந்தோசமாக உள்ளனா்கள்.என்பது தங்களுக்?கு தொியுமா ? யுத ஒழிப்ப இயக்கத்தை நடத்துவது பண்பாடு அல்ல.ஆன்மீகம் அல்ல.அரேபிய காடைத்தனம். அதற்கு தாங்கள் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்.
Post a Comment