Followers

Wednesday, March 04, 2015

ஹீரோ என்றால் இந்த இளைஞனைச் சொல்லலாம்!

ஹீரோ என்றால் இந்த இளைஞனைச் சொல்லலாம்!





இரவு நேர நைட் கிளப்பில் அதிக நேரம் நண்பர்களோடு செலவழித்த ஒரு இள மங்கை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். கிளாஸ்கோவில் உள்ள கெல்வின்குரோ பூங்கா அருகில் இந்த பெண் சென்று கொண்டிருந்தாள். இந்த பெண் தனியாக செல்வதைப் பார்த்த ஒரு முரடன் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளான். இனி அந்த பெண் சொல்வதைக் கேட்போம்....

'நான் அந்த முரடனிடமிருந்து தப்பிக்க முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. எனது வாயை அவனது கைகளைக் கொண்டு மூடினான். திமிறிக் கொண்டு 'உதவி' என்று வேகமாக கத்தினேன். உடனே சிறிது தூரத்தில் இருந்து ஒரு இளைஞன் தனது நாய்க் குட்டியோடு ஓடி வந்தான். பலம் கொண்ட மட்டும் அந்த முரடனை இந்த இளைஞன் எட்டி உதைத்தான். இளைஞனின் வீரத்துக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாத அந்த முரடன் என்னை விட்டு விட்டு ஓடி விட்டான். எனது உடை பாதிக்கு மேல் கிழிந்து விட்டது. அந்த இளைஞன் தனது கோட்டை எனக்கு கொடுத்து 'பத்திரமாக வீடு போய் சேருங்கள்' என்று அனுப்பி வைத்தான். "போலீஸில் புகார் செய்யலாம்" என்று அந்த இளைஞன் சொன்னான். ஆனால் எனது வீட்டுக்கு தெரிந்தால் பெரும் பிரச்னையாகி விடும் என்று இத்தோடு இதனை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டேன். அப்துல்லா ஓன் என்ற இந்த இளைஞனை என் வாழ் நாளில் மறக்க முடியாது. என்னை பொருத்த வரை இவன் ஒரு ஹீரோ' என்கிறாள் அந்த பெண்.

இது பற்றி அப்துல்லா ஓனிடம் கேட்ட பொழுது 'நான் ஒரு ஹீரோவாக வேண்டும் என்ற நினைப்பில் இந்த காரியத்தை செய்யவில்லை. ஒரு மனிதன் ஆபத்தான நேரத்தில் இன்னொரு மனிதனுக்கு செய்த ஒரு உதவியாகவே பார்க்கிறேன். இது எனது கடமை. நான் அந்த நேரத்தில் அங்கு சென்றிருக்கா விட்டால் அந்த பெண் பெரிதும் பாதிப்படைந்திருப்பாள். சில நேரம் இறந்து கூட போயிருக்கலாம். அது போன்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் வலிய நான் சென்றேன்.' என்கிறார்.

அப்துல்லா ஓன் பிறந்தது லிபியாவின் திரிபோலி நகரில். கடந்த 13 வருடங்களாக கிளாஸ்கோவில் வசித்து வருகிறார்.

http://www.dailyrecord.co.uk/news/scottish-news/brave-jogger-dubbed-hero-after-3822487

No comments: