Followers

Friday, August 28, 2015

குவான்டோனோமோ சிறைக் கொடுமை ஒரு அதிகாரியை மாற்றியது!



டெர்ரி ஹோல்ட் ப்ரோக் முன்பு கியுபாவின் குவாண்டோனோமோ சிறையில் அதிகாரியாக பணி புரிந்துள்ளார். அங்குள்ள கைதிகள் அனைவரும் அமெரிக்க அரசால் பொய் வழக்கு போட்டு கொண்டு வரப்பட்டவர்கள். பெரும்பான்மை கைதிகள் அனைவரும் இஸ்லாமியர்களே! அமெரிக்கா அத்து மீறி நுழைந்த நாடுகளான ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டு மக்கள் சுதந்திர வேட்கையால் சிறிய போராட்டம் நடத்தினாலும் அவர்களை கைது செய்து குவாண்டானோமோ கொண்டு வந்து விடுவார்கள். பெரும்பாலானவர்கள் அப்பாவிகள். இஸ்ரேலியர் மற்றும் அமெரிக்கர்களின் கூட்டு சதியினால் இங்கு கொண்டு வரப்பட்டவர்கள்.

சிறையில் அடைபட்டுள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஐந்து வேளை தொழக் கூடியவர்கள். இந்த கைதிகள் தொழும் அழகையும் இவர்களின் பேசும் பண்பையும் கண்டு நெகிழ்ந்து போன அதிகாரி டெர்ரிக்கு இஸ்லாத்தின் மேல் இனம் புரியாத ஈர்ப்பு வந்துள்ளது. இந்த அதிகாரி குர்ஆனை படிக்கிறார். இஸ்லாமிய சட்டங்களை ஆய்வு செய்கிறார். முடிவில் இறை மார்க்கமான இஸ்லாத்தை 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுக் கொள்கிறார். அது முதல் அங்கு அடைப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமியர்களை விடுவிக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை விரும்பாத சக ஊழியர்கள் இவரை கொலை செய்ய பலமுறை முயன்றார்களாம்.

'குவாண்டனோமாவில் அடைபட்டுள்ள இஸ்லாமியர்கள் மிகவும் துரதிஷ்டவாசிகள். நிம்மதியாக தொழ அனுமதிப்பதில்லை. இசையை தொடர்ந்து கேட்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிக குளிரூட்டப்பட்ட அறைகளில் பல மணி அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இதை எல்லாம் நேரில் கண்டு தூக்கம் வராமல் பல முறை சிரமப்பட்டேன். இதனால் போதை மருந்தும் உட் கொண்டேன். மன நிம்மதி இழந்து தவித்தேன். இன்று இஸ்லாத்தை ஏற்றவுடன் எனது அனைத்து தீய பழக்கங்களும் என்னை விட்டு அகன்று விட்டது. குவாண்டனோமாவில் அடைபட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதே எனது லட்சியம். என்னால் முடிந்த வரை இதற்காக முயற்சிப்பேன்.

குர்ஆன் உலகிலேயே மிகவும் இலகுவாக எவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு இறை வேதமாகும். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதனை மிக இலகுவாக சொல்லிச் செல்கிறது குர்ஆன். இந்த அதிசயம் நம் கண் முன்னே நடந்து வருகிறது' என்று நெகிழ்வோடு தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் டெர்ரி ஹோல்ட் ப்ரூக். தற்போது சிகரெட், மது, மங்கை, போதை வஸ்துகள் என்று அனைத்தையும் விட்டு தூரமாகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா குவாண்டானோமோ சிறையை மூடி விடுவதாக தனது தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். நம் நாட்டு அரசியல் வாதியின் வாக்குறுதி போல் இன்று வரை அது நிறைவேறாமல் உள்ளது. டெர்ரி ஹோல்ட் ப்ரூக் குவான்டானோமோ சிறை வாசிகளுக்காக தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நன்கொடைகளும் வசூலித்து அவர்களின் விடுதலைக்காக பாடுபட்டு வருகிறார். சிறை வாசிகள் சீக்கிரம் விடுதலையாக நாமும் பிரார்த்திப்போம்.



தகவல் உதவி
நியூயார்க் டெய்லி நியூஸ்

http://www.nydailynews.com/news/national/gitmo-guard-converts-islam-demands-release-detainees-article-1.1357918

1 comment:

A.Anburaj Anantha said...

அவசரக் கோலம் .அலங்கோலம் என்பது போல் குறைக்குடங்களை பொிய முன்னுதாரணங்களாக தாங்கள் எழுதுவது தவறு. அரேபியரான முகம்மது தான் பிறந்த சவுதியின் கலாச்சாரத்தை உலகமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஏற்காதவன் காபீா் என்றும் ஏற்காதவா்களை கொல்லலாம் என்றும் கொஞ்சமுமு் பொருத்தமில்லாமல் உலகத்தின் நடைமுறைக்கு பொருத்தமில்லாமல் போதித்து உளறியுள்ளாா். இன்று சிாியாவின் புராதான நகரத்தில் உள்ள பழைய கட்டடங்கள் இடித்து நொறுக்கப்பட்டள்ளது. அதன் காப்பாளா் கழுத்தறுத்து கொல்லப்பட்டள்ளாாா. இது குறித்தும் தா்ங்கள் எழுத வேண்டுமே ஏன் எழுதவில்லை.