Followers

Tuesday, August 08, 2017

இஸ்லாத்துக்கு மாற எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை!

இஸ்லாத்துக்கு மாற எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை!

கரூர் மாவட்டம் தோகைமலை தெற்குத் தெருவில் ஹோட்டல் நடத்திவரும் மனோகரன் என்பவர், தனது மகன்களான ராமமூர்த்தி மற்றும் மீனாட்சிசுந்தரம் இருவரையும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த, ஏற்கெனவே இஸ்லாமிய மதத்துக்கு மாறிய சுரேஷ் என்கிற அப்துல் ரஹ்மான் மூளைச்சலவை செய்து, மதமாற்றம் செய்துவிட்டதாக கரூர் மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகார் கொடுத்தார். அதில். 'தோகைமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம், நடவடிக்கை இல்லை. எங்க பகுதியில் உள்ள மசூதியில் உள்ள இஸ்லாமியப் பெரியவர்களும், எங்க பசங்களை 'மசூதிக்கு வர வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. அப்படினா, எங்க மகன்களை மதம் மாத்துனது எதுவும் பயங்கரவாத கோஷ்டியா என்பது தெரியவில்லை. நீங்கதான் எனது மகன்களைப் பழையபடி மீட்டுத் தரணும்" என்று கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

மனோகரன் புகார் கொடுத்த அன்றே, அதே தோகைமலைப் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் தன் பங்குக்கு கலெக்டரிடம், 'அய்யா அந்த சுரேஷ், என் மகன் சரவணக்குமாரையும் ஸ்லாமிய தத்துக்கு மாத்திட்டார். என் மகனையும் நீங்கதான் மீட்டுத் தரணும்' என்று கண்ணீரும் கம்பலையுமாக புகாரை நீட்டினார். இந்தச் செய்தியை விகடன் இணையதளத்தில் செய்தியாகப் பதிந்திருந்தோம். 

இந்நிலையில் இந்தச் செய்தி பரபரப்பாக, மதமாற்றிய காரியதரிசியாக குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் என்கிற அப்துல் ரஹ்மான், நேற்று எட்டு மணி போல், சரவணக்குமார், மீனாட்சிசுந்தரம் மற்றும் ராமமூர்த்தி ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு கரூர் பிரஸ் கிளப் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம்,

"நான் அவர்களை மூளைச்சலவை எல்லாம் செய்து மதமாற்றம் செய்யவில்லை. அவர்கள் மூவரும் தாங்களாக விருப்பப்பட்டுதான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியிருக்கிறார்கள். நானும் இஸ்லாமியம் பிடித்து, தன்னிச்சையாகத்தான் மதம் மாறினேன். அதுபோல்தான், இவர்கள் மூவரும் இஸ்லாமிய மதம் பிடித்துப்போய், மதம் மாறியிருக்கிறார்கள். என்மீது எந்தத் தவறும் இல்லை. நான் ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். தேவையில்லாமல் என்மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். அவர்களிடமே கேளுங்கள், நான் அவர்களை மூளைச்சலவைசெய்து, மதம் மாற்றினேனா என்று" என்பதோடு ஒதுங்கிக்கொண்டார்.
 



தகவல் உதவி
விகடன்
09-08-2017

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. 

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 256) 

மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று அல்லாஹ் கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் இணைத்தே சொல்கிறான். வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்பதே அந்தக் காரணம். சத்தியம் எது? அசத்தியம் எது? என்று தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. ஆகையால் இஸ்லாம் என்ற சத்தியத்தை யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் இலகுவாகப் புரிந்த கொள்ளலாம். இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. 





1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவில் அரேபியா்களின் எண்ணிக்கை 3 அதிகாித்து விட்டது. இந்துக்களில் எண்ணிக்கை ஓட்டு குறைந்து விட்டது. நாட்டிற்கு வரும் பேரழிவை கருதி மதமாற்றத்தை தடை செய்ய முதுகெலும்பு இல்லாத அரசு இருப்பததுதான் இழிவு