Followers

Thursday, January 14, 2016

தர்ஹா கலாசாரம் இந்து சகோதரர்களையும் வழிகெடுக்கிறது!

தீபம் ஏற்றி ஆராதனை செய்தல்: எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் எண்ணெய்யை புனிதமாக கருதுவது: குத்து விளக்கு ஏற்றி வைத்தல்: ...

Posted by Nazeer Ahamed on Thursday, January 14, 2016

தீபம் ஏற்றி ஆராதனை செய்தல்: எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் எண்ணெய்யை புனிதமாக கருதுவது: குத்து விளக்கு ஏற்றி வைத்தல்: சாமி சிலைக்கு புடவை கட்டி விடுவது போல சமாதிக்கு சால்வை போர்த்துவது: அங்கு பால் ஊற்றினால் இங்கு சந்தனம் பூசுவது: அங்கு தேர் இழுத்தால் இங்கு சந்தனக் கூடு இழுத்தல்: அங்கு மந்திரம் ஓதி திண் பண்டங்கள் கொடுப்பது: இங்கு ஃபாத்திஹா ஓதி தின்பண்டங்கள் வழங்குவது:

அத்தனையும் பார்பனிய கலாசாரம்: அதனை அப்படியே சில பெயர் மாற்றங்களோடு தர்ஹாக்களில் அரங்கேற்றப்படுவதைப் பார்க்கிறோம்.

முன்பு யூதர்கள் நபிகள் காலத்தில் இஸ்லாத்தை அழிக்க இஸ்லாமியராக மாறி பல கட்டுக்கதைகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றியதை நாம் அறிவோம். அந்த நபி மொழிகளை எல்லாம் தரம் பிரித்து தற்போது அறிஞர்கள் உண்மையை கண்டறிந்துள்ளனர்.

அதே போல்தான் இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க பலர் இஸ்லாமியராக மாறி இது போன்ற பழக்கங்களை புகுத்தி விட்டனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு அன்று அந்த மக்களிடம் இல்லாததால் தர்ஹா கலாசாரத்தை அன்றைய மக்கள் அவ்வளவாக எதிர்க்கவில்லை.. அது இன்று இஸ்லாத்தின் ஒரு அங்கமாகவே இந்தியாவில் மட்டும் மாறி விட்டது.

தர்ஹாக்களின் செயல்பாடுகளை வைத்து இன்று வரை எந்த இந்துவாவது இஸ்லாத்தை ஏற்றிருக்கிறாரா? பல வருடங்கள் தர்ஹாவுக்கு வரும் இந்துக்களிடம் எந்த மாற்றத்தையும் காண முடியாது. தர்ஹாவுக்கும் போவார்: காளி கோவிலுக்கும் போவார்: மாதா கோவிலுக்கும் போவார்: அவரைப் பொருத்தவரை எந்த வித்தியாசமும் இல்லை. இது மத ஒற்றுமையை கொடுக்காது. மேலும் குழப்பத்தைத்தான் உண்டு பண்ணும்.

சன் டிவியின் இந்த சீரியலையும் பாருங்கள். இதனை எடுத்த டைரக்டரும் கதாசியரியரும் இஸ்லாத்தை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள்? இன்றைய அறிவியலுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் குர்ஆன் எங்கே? மயிலிறகால் வருடி ஊதி விடும் இந்த மூடன் எங்கே? வர்ணாசிரமத்தையும், புரோகிதத்தையும், மூடப்பழக்கத்தையும் ஒழிக்க வந்த இஸ்லாத்தின் பெயரால் இந்த கொடூரங்கள் பரவலாக அரங்கேற்றப்படுகிறது.

ஏகத்துவ வாதிகள் கடந்த 30 வருடங்களாக செய்த தொடர் பிரச்சாரத்தின் காரணமாக இன்று இறைவனின் உதவியால் தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைய தலைமுறையினர் தர்ஹா மாயையிலிருந்து விடுபட்டுள்ளனர். விலகி நிற்கும் மற்ற இஸ்லாமியர்களும் ஏகத்துவவாதிகளோடு கைகோர்த்து தர்ஹா வழிபாட்டை இல்லாதொழிப்பார்களாக!

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

குர்ஆன் 72:18


ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு சமாதியையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்:1662)

6 comments:

Dr.Anburaj said...


தங்களின் கட்டுரையில் தொிவிக்கப்பட்ட கருத்தக்களை ஷியா முஸ்லீம்கள் ஏற்கவில்லை.

அரபு பள்ளிகளில் மதரஸாக்களின் படித்தவா்களின் செல்வாக்கில்தான் முஸ்லீம்கள் உள்ளாாக்ள்.

புரோகிதம் முஸ்லீம்களிடம் இல்லை என்பது வடிகட்டின பொய்.

மொளலானாக்கள் மற்றும் இமாம் பேஸ் இமாம் என்ற நபா்களின் செல்வாக்கு மிக அதிகமாக உள்ளது.

முறையான சமய கல்வி பெற்ற இந்துக்கள் முட்டாளதனமாக மசுதிக்கும் மாதா கோவிலுக்கும் அலைய மாட்டாா்கள்.

பிறா் மதிப்பதை தாங்களும் மதிக்க வேண்டும் என்ற ஒரு நல்லெண்ணம் தான் காரணம்.

ஈராக் நாடடைச் சோ்ந்த ஜலாலுதீன் லுாமி என்ற ஞானி ஒருவா் -அனல் ஹக் என்று அத்வைதம் பேசினாா். அதற்காக மத நிந்தனை செய்தவா் என்று குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்பட்டாா்.

கலாச்சாரம் ஆன்மீக சாதனைகள் என்ற விசயங்கள் முகம்மது நபி-குரான் என்ற வட்டத்திற்குள் அடங்கி இருக்கவில்லை.அடக்கி வைக்க முயலுவதால்தான் அரேபிய மத உலகம் இரத்தக்களறியில் நீந்திக்கொண்டிருக்கின்றது.

இந்தோனேஷியாவில் கூட காடையா்கள் குண்டு வைத்து விட்டாா்கள்.

காற்றுக்கு என்ன வேலி ? கடலுக்கு என்ன மூடி ?

தன்னை உணா்தல் என்ற ஆன்மீக அனுபவம் உண்மை என்று சுபி ஞானிகள் உணா்ந்துக்ளாா்கள். சாியை கிாியை யோகம் போன்ற இந்து சமயத்திற்கே உண்டான கருத்துக்ள் மேற்படி ஞானிகளிடம் உள்ளன.

இயேசு ” நானும் என் பிதாவும் ஒன்றாய் இருக்கின்றோம்” என்றாா்.சத்தியமான ஆன்ீக அனுபவம். மத நிந்தனை அல்ல. இது ஒவ்வொரு மனிதருக்கு் சாத்தியம்.

அரேபிய வல்லாதிக்கம் போதிக்கும் குரானுக்கு அப்பால் சிந்திக்கக் கூடாது என்பது பிற்போக்குத்தனம். அறிவுக்கு ஏது மூடி? எல்லை ?எல்லையற்ற அல்லாவை குரானுக்குள் அடக்க முடியுமா ? காற்றுக்கு என்ன வேலி கடலுக்கு என்ன மூடி?
Dr.Anburaj said...


முஹம்மது சிறு பெரும் போா்கள் என 60 போா்கள் செய்து அன்பையும்

சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட முயன்று தோன்றுப் போனாா் .தோல்வி ஒட்டகப்

போாில் பகிரங்கமானது.

ஆக முஹம்மது ஆரம்பித்து வைத்த இரத்தக்களறி இன்னும் நிற்கவில்லையே!

இந்த இரத்தக்களறி யாரை வழி கெடுக்கின்றது ?

Dr.Anburaj said...

ஆக முஹம்மது ஆரம்பித்து வைத்த இரத்தக்களறி இன்னும் நிற்கவில்லையே!
எனது கருத்து தவறு. இரத்தக்களறியை முகம்மது ஆரம்பித்து வைக்கவில்லை. அரேபிய இனக்குழுக்கள் போட்டுக் கொணடிருந்த இரத்தக்களறியை முகம்மது இசுலாம் என்ற புதிய அணியை உருவாக்கி தொடா்ந்தாா். இரத்தக்களறறி தொடா்கதையாக உள்ளது.

Adirai Ahmad said...

//ஈராக் நாடடைச் சோ்ந்த ஜலாலுதீன் லுாமி என்ற ஞானி ஒருவா் -அனல் ஹக் என்று அத்வைதம் பேசினாா். அதற்காக மத நிந்தனை செய்தவா் என்று குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்பட்டாா்.//

//முஹம்மது சிறு பெரும் போா்கள் என 60 போா்கள் செய்து அன்பையும்
சகோதரத்துவத்தையும் நிலை நாட்ட முயன்று தோன்றுப் போனாா் .தோல்வி ஒட்டகப்
போாில் பகிரங்கமானது.//

யார்? எவர்? எது? ஏன்? என்பவற்றை உள்வாங்கி வரலாற்றைப் படிக்காமல் உளறுகின்றார் டாக்ட்டர்! பாவம்.....!

Dr.Anburaj said...

யார்? எவர்? எது? ஏன்? என்பவற்றை உள்வாங்கி வரலாற்றைப் படிக்காமல் உளறுகின்றார் டாக்ட்டர்! பாவம்.....!

வாருங்கள் ஐயா ஆதிரை அகமது அவர்களே சாியான வரலாற்றை தாங்கள் எழுதினால் அரேபிய மத அடிமை சுவனப்பிாியன் வெளியிடத்தயாராக இருக்கின்றாா்.நானும் மற்ற வாசகா்களும் படிக்கத் தயாராக உள்ளோம்.

அதைவிட்டு விட்டு உளறுகின்றாா் என்ற வாா்த்தை தங்களது அறியாமை இயலாமை அரேபிய அடிமை ஆகியவற்றைக் காட்டுகின்றது.

வாசகா்களுக்கு ஒரு நற்செய்தி. அன்பும் அறமும் நிறைந்த அரேபிய போா்களை அதாவது இசுலாமிக போா்களின் உண்மை முகத்தை ஆதிரை எழுதுவாா் .படிப்போம்.

ஒட்டப்போாில் இருந்து துவக்கலாமா ?
இல்லை மதினாவைச் சோ்ந்த வியாபாாிகளை பாலைவனத்தில் கொள்ளை -வழிப்பறிக் கொள்ளைச் சம்பவமான முதலாம் பத்ரு போாில் -பத்ரு கொள்ளையில் இருந்து ஆரம்பிக்கப் போகின்றீா்களா ? ( கொள்ளையடிப்பது போா் அல்ல )

எனக்கு எதுவும் சம்மதம். வாருங்கள்.

எழுதுங்கள் .

எங்கள் ஐயம் போக்குங்கள்.

Dr.Anburaj said...


எங்கே ஆதிரை ....அகமது
என்றே மனம் தேடுதே ஆா்வத்தால்
ஓடி வாருங்கள்