Followers

Friday, January 15, 2016

கிரிஷ் என்ற இளைஞரின் வாழ்வை மாற்றிய இஸ்லாம்!



இந்து மதத்தில் ஆழ்ந்த பிடிப்புடையவர் சகோதரர் கிரிஷ். ஆன்மீக தேடலினால் பல மதங்களையும் ஆய்வு செய்தார். தனது பூர்வீக இந்து மதத்தின் ஆணி வேர் இஸ்லாம் என்பதை தேடலில் தெரிந்து கொண்டார். சனாதன தர்மத்தை போதிக்கும் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். தனது பெயரையும் முஹம்மது இஷாக் என்று மாற்றிக் கொண்டார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது அழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். சென்ற 2014 ஆம் ஆண்டு மெக்கா சென்று ஹஜ் பயணத்தையும் முடித்துள்ளார்.

இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்றவுடன் அவர்களின் முகத்தில் ஒரு தெய்வீககலை தொற்றிக் கொள்வதை பார்த்து பிரமிக்கிறோம். இறை மார்க்கமல்லவா!

இவருடைய வாழ்வு இம்மையிலும் மறுமையிலும் சிறப்பாக அமைய நாமும் பிரார்த்திப்போமாக!

தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்காமல் இருக்க மாட்டான்.

(அல்குர்ஆன் : 9:32)

5 comments:

Dr.Anburaj said...


அமிா்தமயமான இந்து மதத்திலிருந்து அரேபிய இன காடையா்களின் மதத்தில் வீழ்நதுவிட்ட எனது அருமை இந்து சகோதரன் மீண்டும் இந்துமதம் வந்து சேர அல்லாவை பிராா்த்திக்கின்றேன். தாம்மதன்னை சுது கவ்வும்.தா்மம் மீண்டும் வெல்லும். இருள் மறையும் கதிரவன் உதிப்பான்.

Dr.Anburaj said...

”டாக்டர் அம்பேத்கர். நீங்கள் இந்த நாட்டின் முக்கிய தலைவர். உங்களிடம்தான் எங்கள் கோரிக்கையை முன்வைக்க முடியும்.”

“சொல்லுங்கள் பாபா சாகேப்ஜி” என்றார் டாக்டர் அம்பேத்கர்.

டாக்டர் அம்பேத்கரால் பாபா சாகேப் என அழைக்கப்பட்ட அந்த தலைப்பாகை கட்டிய முதிய கம்பீரமான தலைவர் சொன்னார், “இந்த தேசத்தின் கொடியாக காவிக்கொடித்தான் இருக்க வேண்டும். அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.” டாக்டர். அம்பேத்கர் ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். morning_hindutvaபின்னர் கூறினார்: “ஆக, பகவா கொடியை செங்கோட்டையில் பறக்க விட ஒரு மகரிடம் வந்திருக்கிறீர்கள். சரிதான். இதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். காவிக்கொடியை தேசிய கொடியாக்க கோரும் அந்த மக்கள் இயக்கத்தை நான் ஆதரிப்பேன்.”

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் பம்பாய் விமானநிலையம். ஜூன் 1947.
பாபா சாகேப் போலே என மரியாதையுடனும் அன்புடனும் அழைக்கப்படும் அவரது முழுப் பெயர் சீதாராம் கேசவ் போலே என்பது.
சிறுவயதிலேயே போலேயின் முதல் ஆதர்சமாக அமைந்தவர் அவரது ஆசிரியர் கிருஷ்ணராவ் அர்ஜுன் கேலூஸ்கர். வெள்ளைகாரர் ஒருவர் நடத்த உத்தேசித்த மராட்டிய பத்திரிகைக்கு ஆசிரியராக ரூபாய் 100 சம்பளத்தில் அழைக்கப்பட்ட போதும் சுதந்திரம் இல்லாத இடத்தில் தாம் பணி புரிய முடியாது என உதறித்தள்ளியவர் கேலூஸ்கர்.babasaheb_bole இவரது வழிகாட்டுதலில் உருவானவர் போலே. தமது இளவயதிலேயே இந்து அமைப்பு ஒன்றை உருவாக்கினார் போலே. இந்த அமைப்பு முதலில் போலேயின் சமுதாயமான பண்டாரிகள் மத்தியில் செயல்பட்டாலும் அதன் குறிக்கோள் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த இந்துக்களின் சமுதாய விடுதலை என்பதாக இருந்தது. போலே இரவு பள்ளிகளை ஆரம்பித்தார். பிளேக் நோய் வந்த போது ஆரோக்கியமான நோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல அவர் முன்வந்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் பிளேக்கை பயன்படுத்தி மக்களை துன்பப்படுத்துவதை அவர் எதிர்த்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக நீதி பெற கல்வியே முக்கியமான ஆயுதம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் பாபா சாகேப் போலே. எனவே மகாராஷ்டிரத்தில் ஒரு மகர் இளைஞன் முதன் முதலாக SSC தேர்வில் வெற்றி பெற்றதும் அவரை பாராட்டும் நிகழ்ச்சியை தானே தலைமையேற்று நடத்தினார். அந்த இளைஞனின் பெயர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர்.
ஆரிய சமாஜத்தின் ஆரிய சகோதரத்துவ அமைப்பு அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது. தலித்துகள் பெருமளவில் கலந்து கொண்ட முதல் சமபந்தி போஜனம் அதுவே என வரலாற்றறிஞர்கள் கருதுவதுண்டு. babasaheb_suddhiஆனால் கடைசி நேரத்தில் அதில் கலந்து கொண்டிருக்க வேண்டிய பெருந்தலைகள் பலர் பல காரணங்களைச் சொல்லி வரமுடியாது என கூறிவிட்டனர். முன்வைத்த காலை பின்வைக்காமல் அதில் கலந்து கொண்ட வெகுசில தலைவர்களில் பாபா சாகேப் போலேயும் ஒருவர். இதனைத் தொடர்ந்து அவரை அவர் பிறந்த பண்டாரி சாதியிலிருந்து விலக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வி அடைந்தன. இந்துக்கள் சாதி வேறுபாடுகளை களைந்து தம்மை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு உடல் பயிற்சி மல்யுத்த சாலைகள் வேண்டுமென்பது போலே அவர்களின் சிந்தனை. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு முன்னோடியாக அமைந்தவை இத்தகைய உடற்பயிற்சி மல்யுத்த சாலைகளே. அவைகளுக்கு பெரும் பண உதவி செய்ததுடன் ’ஹனுமான் வியாயம் சாலை’ எனும் அமைப்பின் போட்டிகளுக்கு தலைமையேற்று நடத்தினார். கல்விசாலைகளில் தம்மை பிராம்மணர்கள் என கருதியவர்களால் பிராம்மணரல்லாத ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் அநீதிகள் இவற்றால் அவர் அபிராம்மண ஆசிரியர்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கினார். பெண் ஆலைத் தொழிலாளர்களுக்கு பேறுகால வசதிகளுக்காக போலே அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் முக்கியமானது ஆகும்.
தொடரும்

Dr.Anburaj said...

1923 இல் மும்பை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது பாபா சாகேப் போலே அவர்களால் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் எல்லா தெருக்களும் எல்லா நீர்நிலைகளும் எல்லா பள்ளிகளும் எல்லா வசதிகளும் தலித்துகளுக்கு திறந்து விடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த தீர்மானமே ஒரு சாதனை என்றாலும் அந்த தீர்மானத்துடன் நின்றுவிடுகிறவரல்ல போலே. baba_Sahebs1928 இல் அடுத்து ஒரு முக்கிய வலிமை இந்த தீர்மானத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை மதிக்காத நகராட்சிகள் ஊராட்சிகளுக்கு அனைத்து அரசு உதவிகளும் நிறுத்தப்படும் என்கிற விதிதான் அது. இதுவும் போலே அவர்களின் கைவண்ணமே. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானம் தலித் போராளிகளால் ‘போலே தீர்மானம்’ என அழைக்கப்பட்டது. இதன் அமுலாக்கம் தலித் விடுதலை போர்களின் ஒரு முக்கிய குரலாக விளங்கியது. இதே காலகட்டங்களில் இந்து மகாசபையிலும் இணைந்து தீவிரமாக இயங்கினார் பாபா சாகேப் போலே அவர்கள். குறிப்பாக வரலாற்றுக் காரணங்களுக்காக அன்னிய மதங்களுக்கு வழி தவறி சென்ற நம் சமய சகோதரர்களை தாய்மதம் திருப்பும் சுத்தி இயக்கத்தில் பாபா சாகேப் போலே அவர்களின் பங்கு முக்கியமானது. 1938-1945 பிராந்திய இந்து மகாசபையின் தலைவர் பதவியில் அவர் இருந்தார். 1947 இல் இந்து மகாசபை தொண்டர்களுடன் பாபா சாகேப் அம்பேத்கரை சந்தித்து இந்த தேசத்தின் தேசிய கொடியாக பரம பவித்திர பகவத் துவஜம் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை, தொழிலாளர் உரிமை, மகளிர் உரிமை ஆகியவற்றின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள், இருள் மிகுந்து சமுதாய தேக்கநிலை திகழ்ந்த காலகட்டத்தில் ஒளிவிளக்காக விளங்கியவர்கள் இந்துத்துவர்கள். பாபா சாகேப் சீதாராம் கேசவ போலே போன்ற ஒப்பற்ற சமுதாய சீர்திருத்த வாதிகளால் உருவாக்கப்பட்ட இந்த மண்ணின் விடுதலை இயக்கம் இந்துத்துவம். எனவே அடுத்த முறை உங்களிடம் ‘


இந்துத்துவம் மேல்சாதி பார்ப்பனீய பெண்ணடிமை சித்தாந்தம்…’ என கூறும் வரலாற்று

அறிவிலியிடம் கேளுங்கள் …

பாபா சாகேப் போலேயைத் தெரியுமா என்று.

Dr.Anburaj said...

காலம் 16ம் நூற்றாண்டு.

மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் இலிங்கார்யர். இவரது ஒரே மைந்தன் ஸ்ரீதர வெங்கடேசர். இவர் திருவிடை மருதூர் திருத்தலத்திற்கு அருகில் உள்ள திருவிசநல்லூரில் தங்கிவிட்டார். ஸ்ரீதர ஐயாவாள் நாள்தோறும் திருவிடைமருதூர் மகாலிங்க பெருமான் திருகோயிலில் இரவு அர்த்தயாம பூசையில் வழிபட்டு வருவார். ஒரு நாள் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓட இக்கரையில் மனம் தவிக்க நின்ற ஐயாவாளுக்கு சிவபெருமானே சிவாச்சாரியார் உருவில்திருநீற்றுப்பிரசாதம் அளித்ததாக ஐதீகம்.

ஒரு முறை ஒரு விசேஷ நாளன்று அந்தணர்களுக்கு அன்னதானம் செய்ய வீட்டில் ஏற்பாடு செய்துவிட்டு காவிரியில் நீராட சென்று கொண்டிருந்தார் ஸ்ரீதர ஐயாவாள். வழியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பசியினால் களைத்து விழுந்திருப்பதைக் கண்டார். அந்த தலித்தை தனது இல்லத்துக்கு அழைத்து அந்தணர்களுக்கென்று வைத்திருந்த அன்னத்தை அந்த தலித்துக்கு தம் துணைவியாரைக் கொண்டு பரிமாறச் செய்தார். இதனைக் கண்ட அந்தணர்கள் இது சாஸ்திர விரோதமென்றும், இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர ஐயாவாள் காசி சென்று கங்கையில் நீராட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்துவிடுவதாகவும், அவரை குடும்பத்துடன் நீக்கி வைப்பதாகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இவர்கள் இவ்வாறு செய்துகொண்டிருக்கும்போதே, ஐயாவாள் வீட்டு கிணற்றில் நீர் பொங்கிப் பெருகி ஊரெங்கும் ஓட ஆரம்பித்தது. கங்கை கிணற்றிலிருந்து பெருகி வர ஆரம்பித்து சாதி வெறியை அடித்துச் செல்லலானாள். அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து ஐயாவாளிடம் மன்னிப்பு கேட்க ஐயாவாள் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார்:
இந்த அற்புத நிகழ்ச்சி கார்த்திகை மாதம் அமாவாசையில் நடைபெற்றது. அன்று முதல் ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் கார்த்திகை அமாவாசையில் கங்கை பொங்கும் பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய நாளில் திருவாவடுதுறை ஆதீனத்திற்க்குச் சொந்தமான திருவிடைமருதூர் திருக்கோவில் அருள்மிகு மகாலிங்கப் பெருமானுக்கு ஐயாவாள் மடத்திலிருந்து வழங்கப் பெறும் வஸ்திரம் சாத்தப்பெறுகிறது. உச்சிகாலப் பூசையின் பிரசாதம் (நைவேத்யம், திருநீறு) திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் ஐயாவாள் மடத்துக்கு அனுப்பப் பெறுகிறது.

சாதிய அடக்கு முறைகளை மீறி ஆன்மநேய ஒருமைப்பாட்டு uணர்வுடன் தாழ்த்தப்பட்ட சமுதாய நலனுக்குப் பாடுபடுவதை சிறப்பித்துப் போற்றும் இந்த திருவிழா உண்மையான சமூக நீதியையும் சமுதாய சமரசத்தையும் தன் மைய கருத்தாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு இந்த சமூகநீதி ஆன்மீக திருவிழா –கங்காவதரண மகோத்ஸவம்- திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் கார்த்திகை 19 (அமாவாசை) ஞாயிற்றுக்கிழமை (05-12-2015) நடைபெற்றது.

விபரம் அறிய விழைவோர் திரு.எஸ்.இராமநாதன், திருவிசநல்லூர் (தொலைபேசி: 044-24714102, கைபேசி 9444056727) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மடத்தின் இணையதளம் இங்கே.

Dr.Anburaj said...

பாா்ப்பனா்கள் சாதி வெறியா்கள் என்கின்றிர்்களேசகல சீா்திருத்தத்திற்கும் முன்னோடி அவர்கள்தான் சுவனப்பிாியன்

பகீரதப் பிரயத்தனம் என்று ஒரு சொல்லடை பாரத தேசம் முழுக்க உண்டு. பல

தலைமுறைகள் தவம் செய்து பின்னர் பகீரதன் கன கஷ்டப்பட்டு கங்கையை கொண்டு

வந்தான். ஆனால் ஸ்ரீ தர அய்யாவாளோ தலித் சேவை மூலம் தனது வீட்டு கிணற்றிலேயே

கங்கையை பிரவாகமெடுத்து வர செய்தார். இன்றைக்கும் பொது நீர்நிலைகளுக்கும்

பொதுவீதிகளுக்கும் தலித் சமுதாயஙக்ளுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில் ஒவ்வொரு

ஹிந்துவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்யும் சேவை மூலம் ஹிந்துத்துவ ஞான

கங்கை ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு இதயத்திலும் சாதியமெனும் அழுக்குகளை

நீக்கி சமுதாய ஏற்றம் பெற உழைப்போம். அதற்கு இந்த கங்காவதரண மகோத்ஸவம் நமக்கு உத்வேகமளிக்கட்டும்.

பாா்ப்பனா்கள் சாதி வெறியா்கள் என்கின்றிர்்களே

சகல சீா்திருத்தத்திற்கும் முன்னோடி

அவர்கள்தான்

சுவனப்பிாியன்