Followers

Monday, January 04, 2016

நாசா விண்வெளிக்கு அனுப்பிய 'ரோபோ' வா இது!







இஸ்லாம் திருமணத்தை மிக எளிமையாக நடத்த நமக்கு கட்டளையிடுகிறது. இங்கு ஒரு 'ரோபோ' நிற்கிறது. இதற்கு பெயர் மாப்பிள்ளையாம். பெண்ணிடம் வெட்கமில்லாமல் வரதட்சணை வாங்கும் இந்த 'ரோபோ'. இந்த 'ரோபோ' வை தட்டிக் கேட்க வேண்டிய மத குருமார்கள் அதற்கு மாற்றமாக 200, 500, 1000 என்று பணம் வாங்கிக் கொண்டு 'அல் ஃபாத்திஹா' வையும் வெட்கங் கெட்டு ஓதி விட்டு வருவார்கள்.

அதே நேரம் ஏகத்துவ வாதிகள் நடத்தும் 'நபி வழித் திருமணத்தையும்' பாருங்கள். மாப்பிள்ளைக்கும் அங்கு விருந்துக்கு வந்திருப்பவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா? இதில் ஒரு மணமகன் 84 கிராம் மஹராக பெண்ணுக்கு கொடுத்து திருமணம் முடிக்கிறார். பெண்ணுக்கு மஹராக ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று ஆண்களை கொடுக்கச் சொல்லி இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் அதற்கு மாற்றமாக பெண்ணிடம் 'வீடு கொடு' 'நகை போட்டு வா' 'விருந்து வை' என்று கூசாமல் கேட்கிறோமே இறைவனின் பயம் நமக்கு வர வேண்டாமா?

"மேலும், மணப்பெண்களுக்கு அவர்களின் உரிமையான மணக்கொடையை மனமுவந்து அளித்து விடுங்கள் ..." (அல்குர்ஆன் 004:004)

அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)

பெண்ணுக்கு மஹர் கொடுத்து எளிமையான முறையில் திருமணங்களை நடத்த உறுதி பூணுவோம்.

3 comments:

Dr.Anburaj said...


எந்த ஊாில் மாப்பிள்ளைக்கு இந்த வேஷம் போடப்படுகின்றது.புதிய தகவல். மாப்பிளளையின் கோலம் அலங்கோலம். திருமணங்கள் எளிமையான நடத்த வேண்டும் என்பது இந்துக்களுக்கும் இப்போது திறம்பட சொல்லப்பட்டு வருகின்றது. கேரளத்தில் பிறந்த ஸ்ரீநாராயணகுரு எளிமையாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்தாா்.இந்து பண்பாட்டில் குத்து விளக்கு மிகவும் மகத்துவம் மிக்கது. கோலம் போட்டு அதில் ஒருகுத்து விளக்கை ஏற்றி நிறைநாழி பழங்கள் மற்றும் கொஞசம் புக்களால் அலங்காிக்கப்பட்டிருக்கும்.மணமக்கள் குத்து விளக்கை 3 முறை சுற்றி வந்து தாலி கட்ட வேண்டும். திருமணம் முடிந்தது. தங்களுக்கு இந்து வாசகா்கள் உள்ளாா்கள்.அவர்களின் நன்மைக்கு ஸ்ரீநாராயணகுரு வழி திருமணம் ஒன்றின் வீடியோ தொகுப்பு கிடைத்தால் வெளியிடலாம்.உளிமையான திருமணம் இந்துக்களுக்கும் மிகவும் அவசியம்.மிகவும் அவசியம்.மிகவும் அவசியம்.மிகவும் அவசியம்.மிகவும் அவசியம்.

Dr.Anburaj said...

அதே நேரம் ஏகத்துவ வாதிகள் நடத்தும் 'நபி வழித் திருமணத்தையும்' பாருங்கள். மாப்பிள்ளைக்கும் அங்கு விருந்துக்கு வந்திருப்பவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?

இப்படியெல்லாம் பீற்றிக் கொள்வதில் அா்த்தம் இல்லை.அரேபிய பாலைவனத்தில் கோத்திரசண்டைகளும் அநாச்சாரங்களம் நிறைந்த காலத்தில் பணிசெய்த முகம்மது செய்த காாியங்களை அப்படியே ஈஅடிச்சான் காப்பி அடிப்பதுதான் தா்மம் என்பது பிற்பட்ட போக்கு. மாப்பிள்ளைக்கு ஒரு சிறிய மாலையாவது அணிவித்து இருப்பது இந்திய பண்பாட்டின் சிறப்படையாளம். பலவகை விவசாயம் நிறைந்த இந்துஸ்தானத்தில் அதன் விவசாய பொருளாதாரத்தின் அடிப்படையில்தான் இந்துக்களின்ன பண்பாடு வழிபாடு வாழ்ககை முறை ஆகியவை அனைத்தும் அமைந்துள்ளது.விவசாய பொருட்கள் உற்பத்தி செலவாக கோவில் திருமணம் போன்ற வைபங்கள் உதவுவதுபோல் அமைந்துள்ளது.
அரேபிய கலாச்சாரம் இந்தியாவிற்கு ஆபத்தானது. முகம்மது செய்ததுபோல் வாழ ஆரம்பித்தால் இந்தியாவில் வேலையற்றவா்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் கூடி கடுமையான சமூக சீரழிவு ஏற்படும்.விவசாயம் அடியோடு அழிந்து நாசமாகும்.
பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அரேபிய கலாச்சாரம் காரணமாக வாழக்கை முறை பொிதும்மாறி பொருத்தமற்றதாக மாறி விவசாயம் மற்றும் கலைகள் சாா்ந்த வேலை வாயப்புக்கு வாய்ப்பு இன்றி மக்கள்,சதா குரான் அடிப்படையில் கலால் -ஹராம் உன்ஜமாத் என்ஜமாத் என்று சண்டை போட ஆரம்பித்து விட்டாா்கள்.சாியான வேலைவாய்ப்புக்களை அரேபியா கலாச்சாரம் அழித்து போட்டது.வேலை வெட்டியில்லை.போடு மத சண்டை என்று மக்கள் துப்பாக்கியைத் தூக்கி விட்டாா்கள். விளைவு 25 ஆண்டுகளுக்கு மேல் மனித இரத்த ஆறு ஓடிக்கொணடிருக்கின்றது. இசுலாமிய சகோதரத்துவம் தோல்வி மேல் தோல்வி கண்டுக் கொண்டிருக்கின்றது.

Dr.Anburaj said...


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கொம்புடையாா் தெருவில் ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன்.அரேபிய மதத்தைப் பின்பற்றும் பணக்காரா் ஆன அக்குடும்பத்தனா் தொழுகை செய்யும் அறையில்

01.மாா்பிள் போட்ட தரைக்கு ”ஆற்றுமணல் பரப்பி இருந்தாா்கள்” ..
02. அதன் தென் பகுதியில் ” குத்து விளக்கு ” ஒன்று ஏற்றப்பட்டு ஒளி வீசிக் கொண்டிருந்தது.

நான் விபரம் ஏதும் கேட்கவில்லை.