
சென்ற செப்டம்பர் 11 அன்று நடந்த மெக்கா கிரேன் விபத்தில் இறந்தவர்களுக்கு வரலாறு காணாத இழப்பீட்டுத் தொகையை வழங்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். போன உயிர் திரும்பி வரப் போவதில்லை. ஆனால் சொந்தங்களை இழந்தவர்களுக்கு இந்த பொருளுதவியானது மிக உதவிகரமாக இருக்கும்.
பின் லாடன் குரூப்பின் பாக்கர் பின் லாடன் முதல் முக்கிய அதிகாரிகள் வரை எவரும் நஷ்ட ஈட்டுத் தொகையை அளிக்காமல் சவுதியை விட்டு வெளியேற முடியாது என்ற கண்டிஷனும் போடப்பட்டுள்ளது.
- இறந்தவர்களின் எண்ணிக்கை : 111
- காயமுற்றவர்கள் : 238+
- இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கு - 1 கோடி, 78 லட்ச ருபாய்
- காயமடைந்தவர்களுக்கு - 89 லட்ச ருபாய்
- இந்த நஷ்ட ஈடு, பாதிக்கப்பட்ட மக்கள் கோர்டில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வதை தடுக்காது
- சவுதி அரசு செலவில், இறந்து போனவர்களின் குடும்பத்தினர் இருவர் அடுத்த வருடம் ஹஜ் செய்யலாம்
- இந்த வருடம் ஹஜ் செய்ய முடியாத நிலையில் காயமுற்றவர்கள், அடுத்தவருடம் மன்னரின் விருந்தினராக ஹஜ் செய்யலாம்
- காயமுற்றவர்களின் குடும்பத்தினருக்கு சவுதியில் தங்கி, அவர்களை கவனித்துக்கொள்ள பயண விசா அளிக்கப்படும்
" "என்னுடைய 50 வருட ஊடக துறையில், எந்த ஒரு முஸ்லிம் தலைவரும் இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான நஷ்ட ஈடு அளித்ததாக நான் கேள்விபட்டதே இல்லை", என்று அமெரிக்காவை சார்ந்த, பத்திரிக்கையாளர் கமர் அப்பாஸ் ஜாப்ரி கூறியுள்ளார்.
போபாலில் நடந்த விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனம் இன்று வரை முழுமையான இழப்பீட்டுத் தொகையை அந்த மக்களுக்கு வழங்கவில்லை. அதே நேரம் விபத்து நடந்த சில நாட்களிலேயே அதற்கு முடிவையும் கண்ட மன்னர் சல்மானுக்கு இறைவன் மேலும் அபிவிருத்தியை தந்தருள்வானாக!
1 comment:
சவுதி அரேபிய தூதரக அதிகாாி ஒருவா் நேபாளத்து பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை படுத்தியுள்ளாா்களே! அது குறித்து தாங்கள் அரேபிய அடிமைத்தனம் எழுது விடவில்லை.அதைவிடக் கொடுமை அதிகாாியின் வீட்டிற்குச் சென்ற காவல்துறை அதிகாாிகளை அவரது வீட்டுப் பெண்கள் சவுதி நாட்டு அரேபிய பெண்கள் - துப்பி திட்டி கடும் தகராறு செய்திருக்கின்றாா்கள்.வீடியோ பதிவு உள்ளது.என்ன செய்யப் போகின்றாா் அரேபிய அடிமை சுவனப்பிாியன் அலி ஜின்னாவும்.
Post a Comment