'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, July 03, 2015
சவுதி அரசு தெரு பிச்சைக்காரர்களை கைது செய்து வருகிறது!
சவுதி அரேபியாவில் பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரிக்கிறதால் அவர்களை அரசு கைது செய்து சில நாட்கள் சிறையில் வைத்து கண்டித்து அனுப்புகிறது. தெருக்களில், சிக்னல்களில் சிறுவர்களையும் சிறுமிகளையும் ஆப்ரிக்க நாட்டவர் உலாவ விட்டு நிறைய பணம் பண்ணுகிறார்கள். இது போன்று சில்லரையை மாற்றி வைத்துக் கொண்டு வரிசையாக 100 பேருக்கு போடும் பழக்கம் இஸ்லாமிய நடைமுறை கிடையாது. எனவேதான் சவுதியின் தலைமை முஃப்தி அப்துல் அஜீஸ் அல் ஷேக் இவ்வாறாக சிக்னலில் நிற்கும் பிச்சைக் காரர்களுக்கு பணம் தர வேண்டாம் என்று பொது மக்களுக்கு தடை விதித்துள்ளார்.
இது போன்று 100 பெருக்கு விநியோகிப்பதை விட 5 பேரையோ அல்லது ஒருவரையோ தேர்ந்தெடுத்து அவரை பிச்சைக்கார தொழிலிலிருந்து விடுவிக்க வேண்டும். எனது ஓனர் இவ்வாறு பணம் கேட்டு யாராவது வந்தால் 'என்னிடம் வேலை இருக்கிறது செய்கிறாயா?' என்று கேட்பார். சிலர் ஒத்துக் கொண்டு வேலை செய்வர். சிலர் விருப்பமில்லாமல் பணம் வாங்காமலும் சென்று விடுவர். இது ஒரு சிறந்த நடைமுறை.
தற்போது தமிழகத்தில் எங்கள் கிராமத்திலும் பிச்சைக்காரர்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. ஜகாத், ஃபித்ரா என்ற நடைமுறையை முன்பு பெரும்பாலான இஸ்லாமியர்கள் விளங்காமல் இருந்தனர். தற்போது வருமானம் ஈட்டுவதிலிருந்து கணக்கு பண்ணி தரப்படும் பணம் யாரை சென்று அடைய வேண்டும் என்பதை அதிக முஸ்லிம்கள் விளங்கியுள்ளனர். எனவே அவர்கள் வீடு தேடி சென்று கொடுத்து விடுகின்றனர்.
10000, 20000 ஆயிரம் என்று குறிப்பிட்ட ஒரு ஏழைக்கு கொடுத்து அவருக்கு ஒரு சிறு தொழிலை நாமே அமைத்துக் கொடுக்க வேண்டும். அவரை நமது கண்காணிப்பில் வைத்திருந்தால் பிச்சை எடுக்கும் தொழிலையும் நாட மாட்டார். ஒரு பிச்சைக்காரரை கௌரவமான உழைக்கும் மனிதனாக மாற்றிய பெருமையையும் நாம் பெறுவோம். 'பைத்துல் மால்' என்ற பொது திட்டத்தை அமுல்படுத்தி அனைவரின் ஜகாத்தையும் ஒருமுகப்படுத்தி பல ஏழைகளை பணக்காரர்கள் ஆக்குவோம். எங்கள் கிராமத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.
எனவே இந்த ரமலானில் நமது பொருளாதாரம் ஒரு ஏழையையாவது தூக்கி விடக் கூடிய வகையில் அமைய வேண்டும். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதனைத்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment