கனடாவில் இஸ்லாம் இனி கேள்விக் குறியா?
சமீபத்தில் ஒரு பதிவை பார்வையிடும்போது கனடாவில் இஸ்லாத்துக்கு நெருக்குதல் வருவது போலவும் இனி இஸ்லாத்துக்கு எதிராக சில சட்டங்கள் போட்டு கட்டம் கட்டப் படலாம் என்றும் தங்களுக்குத் தாங்களே புளங்காகிதம் அடைந்து பதிவிட்டிருந்தார்கள். உடன் நானும் இணையத்தில் இந்த செய்திகள் உண்மைதானா என்ற ரீதியில் தேடிப் பார்த்தால் ஆச்சரியமாக கனடா இஸ்லாத்தை ஆரத் தழுவிக் கொண்டிருப்பதை பல செய்திகளில் காண முடிந்தது. இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மேற்குலக கலாசாரம் துடைத்தெறியப்பட்டு தூய்மையான இறை சட்டம் அமுல்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே நான் படித்த செய்திகள் சொல்வது.
தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் ஆன்லைன் மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சியியும் இஸ்லாமிய விளக்க உரையும் நடைபெற்றது. அதன் காணொளியைத்தான் மேலே பார்க்கிறீர்கள். ஆடை அவிழ்ப்பு கலாச்சாரத்துக்கு இடையில் வாழ்ந்து வரும் முஸ்லிமகளின் மார்க்க பற்று இது போன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகளின் மூலம் தக்க வைக்கப்படுகிறது. அந்த கலாசாரத்தில் வீழ்ந்து வாழ்க்கையை தொலைத்து விடாமல் இஸ்லாத்தோடு தொடர்போடு இருக்கும் கனடிய முஸ்லிம்கள் போற்றுதலுக்குரியவர்கள.
சர்வதேசப்பகுதி-கனடிய வங்கி முறைக்கு அந்த நாட்டில் இஸ்லாமிய வங்கி அமைக்க இதுவரை இரண்டு வேண்டுகோள்கள் வந்துள்ளது
ஈரான் இஸ்லாமிய குடியரசின் குர்ஆன் செய்திஸ்தாபனம்(இக்னா) ருவைட்டர் செய்தி நிலையத்தை தொட்டும் தனது அறிக்கையிலே அறிவித்துள்ளதாவது-மேற்குலகத்தில் இஸ்லாமிய வங்கிகள் மிக குறைவாக இருந்தாலும் கூட அதன் வளர்ச்சிகள் மிக வேகமாக உள்ளது.
தொரின்டோவில் உள்ள ஒரு சட்ட நிலைய பங்குதாரர் உஸ்துவார்த் அவர்களின் கருத்துப்படி கனடாவில் முஸ்லிம்கள் அதிகரித்து வருவதால் அங்கு இஸ்லாமிய வங்கி அமைப்பதற்கான் இடம்பாடும்,சந்தர்ப்பமும் உள்ளது என அறிவித்துள்ளார்
கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள்திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்...கஇத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர்,திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு
குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.
“குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.
“இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ்
அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்” (4:82)
என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.
இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: “இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.
உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.
டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:
“இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30}
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான்.
“பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தைின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்குஇணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறித்த மூலத்தில் ‘அல்ஃபதக்’ எனம் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். {ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!}
நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதை கண்டு திகைத்துப் போனார் மில்லர்.
“இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.”(26:210,211) என்று கூறும் குர்ஆன்,
“(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!’ (18:98) என்ற கடடளையிடுகின்றது.
ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை – தான் நரகவாசி என்பதை பொய்யாக்கியிருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப் பெற்றது
-------------------------------------------------------------------------------
இஸ்லாமிய வங்கி என்றால் என்ன?
அது எப்படி நடக்கிறது என்கிற விவரங்களை அறிந்து கொள்வோம் !
இஸ்லாமிய கொள்கையான 'ஷரியத்-தின்படி (Sharia) நடக்கும் வங்கிகளைத்தான் இஸ்லாமிய வங்கிகள் என்கிறார்கள். கடனுக்கு வட்டி வாங்குவது 'ஷரியா'-வின் படி தவறாகும் . இஸ்லாமிய மதத்தின்படி இது குற்றம். ஒருவருக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்காமல், அவர் முதலீடு செய்யும் தொழிலில் கிடைக்கும் லாப நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. பல நூற்றாண்டுகளாகவே இந்த முறை முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் 20-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இஸ்லாமிய வங்கிகள் நடைமுறைக்கு வந்தன.
வழக்கமாக வர்த்தக வங்கிகளில் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டி வசூலிக்கப்படும். இஸ்லாமிய வங்கியைப் பொறுத்தவரை, கடன் கொடுப்பவரும் வாங்குபவரும் பங்குதாரர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் அந்தத் தொழிலை சிறப்பாக நடத்தி லாபம் சம்பாதிக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட்டால் அதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை முன்னரே ஒப்புக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பது இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. மனை, வீடு போன்ற ஏதாவது சொத்தை ஜாமீனாகக் கொடுத்தால் மட்டுமே இஸ்லாமிய வங்கிகளில் தொழிற்கடன் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.
சரி, வாகனக் கடனை இஸ்லாமிய வங்கிகள் எப்படிக் கொடுக்கின்றன? வாகனத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இஸ்லாமிய வங்கி முதலில் காரை வாங்கிவிடும். அதனை வங்கி வாடிக்கையாளருக்கு லாபம் வைத்து அதிக விலைக்கு விற்கும். வாகனத்தை வாங்கியவர், அதற்கான தொகையை மாதத் தவணையில் கட்டி வர வேண்டும். முழுவதும் பணம் கட்டி முடிக்கும் வரை வாகனத்தின் உரிமை இஸ்லாமிய வங்கியிடம் இருக்கும்.
இஸ்லாமிய வங்கிகள் வீட்டுக் கடனை வழங்கும் விதமும் வித்தியாசமானது. வாடிக்கையாளர் வாங்க விரும்பும் வீடானது, வங்கி மற்றும் வாடிக்கையாளரின் பெயரில் கூட்டுச் சொத்தாக பதிவு செய்யப்படும். இதில், யார் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றும் குறிப்பிடப்படும். பிறகு இந்தச் சொத்து வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடப்படும். இந்த வாடகைத் தொகை, சொத்தில் வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, வங்கிக்கு உரிய பங்கை (அதிகரிக்கப்பட்ட விலையில்) மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வாடிக்கையாளர் அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இது கிட்டத்தட்ட வீட்டுக் கடனுக்காக நாம் கட்டும் இ.எம்.ஐ. போல் இருக்கும். வாடிக்கையாளரால் பணத்தைச் சரியாகக் கட்ட முடியவில்லை என்றால் அந்த வீட்டை விற்று, வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரித்துக் கொள்ளப்படும்.
ஈரான், மலேசியாவில் இஸ்லாமிய வங்கிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஜப்பான், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவது முக்கியமான விஷயம். வர்த்தக வங்கி மற்றும் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன், இஸ்லாமிய வங்கிகள் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாகச் சொன்னார்.
''உலகம் முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தக வங்கிகளின் வளர்ச்சி 2%-மாக உள்ளது. இதே காலத்தில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 12-15%-மாக இருக்கிறது. இப்போது உலக அளவில் இஸ்லாமிய வங்கிகள் நிர்வகித்து வரும் சொத்துகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். சர்வதேச நிதியம் (IMF- International Monetary Fund) மற்றும் உலக வங்கிகளின் நிதி நிர்வாக அமைப்பான பேசல் (Basel) இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அங்கீகரித்துள்ளன'' என்றார்.
தற்போது இந்தியாவில் ஷரியா கொள்கை அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க ஐ.டி.பி.ஐ. வங்கி முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகளைக் கொண்டு வர வேண்டும் என்றால் அவற்றுக்கென பிரத்தியேக சட்டம் தேவை என ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கிகள் வந்தால் நம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.
- சி.சரவணன்
இஸ்லாமிய வங்கிகள் - சில விபரங்கள்:
+ இஸ்லாமிய நாடுகள் இணைந்து 1975-ம் ஆண்டில் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியை உருவாக்கின. அதே ஆண்டில் வர்த்தக ரீதியிலான இஸ்லாமிய வங்கி, துபாய் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் உருவானது.
+ ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
+ கடந்த 1994-ம் ஆண்டு முதல் பஹ்ரைனில் ஆண்டு தோறும் உலக இஸ்லாமிய வங்கிகளின் மாநாடு நடந்து வருகிறது. இதில், இஸ்லாமிய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்று அதன் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள்.
+ உலக அளவிலான இஸ்லாமிய வங்கிகளில் 60% ஈரானில் மட்டுமே இருக்கின்றன.
+ மதுபானம், சூதாட்டம் தொடர்பான முதலீட்டு விஷயங்களை இஸ்லாமிய வங்கிகள் தவிர்த்துவிடுகின்றன.
நன்றி: நாணயம் விகடன் (30-11-2010)
கனடாவில் இஸ்லாமிய ஹிஜாபுடன் சிறை அதிகாரியாக பணிபுரிய ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு அனுமதி!
முஸ்லிம் பெண்ணொருவரை முதன்முறையாக சீர்திருத்த அதிகாரி பணிக்கு தேர்வு செய்தது சி.எஸ்.சி. 10 வாரங்கள் கொண்ட பயிற்சி வகுப்புக்களை அந்தப் பெண் நிறைவு செய்ய வேண்டும் எனவும் தற்போது இரண்டாவது வார வகுப்பில் இருப்பதையும் சி.எஸ்.சி உறுதி செய்துள்ளது.
குற்றம் செய்த கைதிகளை சீர்திருத்தம் செய்யும் முறைகளில் பயிற்சி பெற்று வரும் இவர் விரைவில் ஆண்கள் சிறைச்சாலையில் பணியமர்த்தப்பட உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சீர்திருதத அதிகாரி என்ற வகையில் கையுறைகளை பயன்படுத்தவும் நீண்ட கைகளையுடைய சட்டையை அணியவும் இந்த பெண்ணுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பணி சம்பந்தமாக அவரின் மத வரைமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவசியமாக தேவைப்பட்டால் பர்தாவை அகற்றச் சொல்லும் உரிமையும் சி.எஸ்.சி க்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் இஸ்லாமிய பெண் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது, முகத்தை மூடி இருக்க கூடாது என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
பழமைவாத கட்சியினர் இந்த சட்ட மசோதாவை ஆதரித்த போதும், பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டம், கலாச்சாரம், சுதந்திர உணர்வு வெளிப்பாடு மற்றும் மத விடயங்களில் மோசமாக விவாதத்ததை ஏற்படுத்துவதாக எதிர் கட்சியினர் கூறினர்.
இதே போன்ற சட்டம் பிரான்ஸில் அமல்படுத்தப்பட்டது. இஸ்லாமிய மத கோட்பாடு படி பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு பொது இடங்களில் வரக்கூடாது என அதில் கூறப்பட்டிருந்தது. அதே போன்ற சட்டத்தால் கியூபெக் மாகாணம் பொதுவிவாதத்தை எதிர் கொள்ள வேண்டி இருந்தது.
குடியேற்ற துறை அமைச்சர் ஜான் கென்னி கூறுகையில்,"முகத்தை மூடாமல் வாக்களிக்க வேண்டும் என்ற பழமைவாத கட்சியினரின் கருத்து நியாயமானது என்றார். மக்கள் எவ்வாறு ஆடை உடுத்த வேண்டும் என கூற அரசு விரும்பவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடாமல் வாக்களிப்பது தொடர்பான சட்ட மசோதாவை கியூபெக் எம்.பி.ஸ்டீவன் பிளானி வெள்ளியன்று அவையில் தாக்கல் செய்தார். கனடா தேர்தலில் முகத்தை மூடிக் கொண்டு வாக்களிப்பதால் தேர்தல் ஊழியர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்த விவரங்களை அவர் தரவில்லை.
கியூபெக்கில் சிறுபான்மையினர் பெரும் விவாதம் செய்யும் வகையில் புதிய சட்ட மசோதா உள்ளது என என்.டி.பி மற்றும் லிபரல் கட்சியினர் தெரிவித்தனர். இது வரையிலான தேர்தல்களில் வாக்காளர்கள் தங்களது முகத்தை காட்ட வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை.
இன்னும் சில ஆண்டுகளில் இஸ்லாம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமாக கனடாவில் மிளிர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
31 comments:
"சரி, வாகனக் கடனை இஸ்லாமிய வங்கிகள் எப்படிக் கொடுக்கின்றன? வாகனத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இஸ்லாமிய வங்கி முதலில் காரை வாங்கிவிடும். அதனை வங்கி வாடிக்கையாளருக்கு லாபம் வைத்து அதிக விலைக்கு விற்கும். வாகனத்தை வாங்கியவர், அதற்கான தொகையை மாதத் தவணையில் கட்டி வர வேண்டும்."
Tell me how this is different from Autoloan from other Banks?
1. என்னுடைய முதல் கருத்தை உண்மையாக்கி உங்களுக்கு 'அஆஇஈ' என்ப்வர் திரு பி.ஜே என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.
****
[ மூன்றாவது கருத்திற்கு பதில்?]
2.இஸ்லாமியர்களீன் மூல ஆதாரம் எது?
இந்த கேள்விக்கு குரன் மற்றும் நபி மொழிகள் என்கிறார். சரி .ஆனால் குரான் என்பது ஒன்றுதான்,ப்ல பிரிவினர் வெவ்வேறு நபி மொழி தொகுப்புகளை பயன் படுத்துகின்றனர்.திரு பி.ஜே அங்கீகரிக்கப் பட்ட சில ஹதிகளிலேயெ கூட சிலவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்ற கருத்தும் உடையவர்.ஆக மூல ஆதாரத்திலேயே கொஞ்சம் சிகல் இருக்கிறது.
இஸ்லாமியர்களின் வாழ்வு நெறிக்கு மத புத்தகமே மூல ஆதாரம்.
பிறரின் வாழ்வு நெறிக்கு மூளையே ஆதாரம்.
*****
3.ஆதி தாய் தந்தையர் ஆதம் ,ஹவ்வா இறைவனை பார்த்ததாக கூறுகின்றார். இது சரியா?[அண்ணன் ஜமாலி கோபிப்பார் பரவாயில்லையா?]
*****
4.ஆதம் அவர்கள் பூமிக்கு அனுப்பப் பட்டார் என்றால் எங்கிருந்து? இது பற்றிய குரான் வசனம்.
*****
5.இறைவனின் செய்தி மட்டுமே பின்பற்றப் படவேண்டியவை அன்றி சுய சிந்தனை அல்ல என்று ஆதமுக்கு கூறியதாக் கூறுகின்றார்[ஆதார குரான் வசனம்?].அதுதான் குரான் என்றால் அது இறை செய்தி என்னும் பட்சத்தில் சரிதான். ஒவ்வொரு நபி மொழியும் இறை வார்த்தையா? இங்கும் பல பிரிவினர் வித்தியாசமான நபி மொழி தொகுப்புகளை பின்பற்றுவதே சிக்கல்.
******
6.அறிவாளிக்களுக்கிடையே கருத்து வேறுபாடு என்றால் மதவாதிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடு உண்டே!!!
_________________
இந்த பதிவில் இவர் குரான் ,நபி மொழிகளை மேற்கோள் காட்டி பேசவில்லை.
ஒருவேளை அரபியில் சோல்லும் போது வசனம் மட்டும் கூறி வரிசை எண் கூறாமல் விட்டு விட்டார் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை மத புத்தகங்களில் இருந்து கருத்தியம்பும் போது அதன் வரிசை எண்[மொழி பெயர்ப்பு பெயர்] கூறி பிறரும் சரிபார்க்கும் படி மட்டுமே சொல்லவேண்டும்.இது நான் எப்போதும் கடைப் பிடிப்பது.
நாயரை புலி இழுக்குது. ஹா ஹா ஹா.
நன்றி
//Tell me how this is different from Autoloan from other Banks?//
நடைமுறையில் உள்ள நமது வங்கிகள் அநியாய வட்டியை வாங்குபவரின் தலையில் கட்டி முடிவில் ட்யூ கட்ட முடியாத நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். ஆனால் இஸ்லாமிய வங்கிகள் அந்த பொருள் நான்கு வருடத்துக்கு பிறகு என்ன மதிப்பு போகும் என்ற விலையை நிர்ணயம் செய்து இருவரும் ஒத்துக் கொண்டவுடன் தவணை முறையில் பணம் கட்ட வாங்குபவர் ஒத்துக் கொள்கிறார். இந்த லாப பணம் நமது வங்கிகளோடு ஒப்பிடும்போது மிகச் சொற்பமே!
மேலும் வங்கியின் பங்குதாரர்கள் இதனை வியாபாரமாக கருதுவதால் லாபம் நஷ்டம் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு தொழிலை நடத்தும் போது என்னென்ன பிரச்னைகளை ஒரு முதலாளி சந்திக்கிறாரோ அத்தனையும் இஸ்லாமிய வங்கியின் பங்குதாரரும் சந்திக்கிறார்.
'வட்டியை உண்போர் மறுமை நாளில் சாத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். இறைவன் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்து விட்டான்.'
-குர்ஆன் 2:275
@ சுவனப்பிரியன் - // சமீபத்தில் ஒரு பதிவை பார்வையிடும்போது கனடாவில் இஸ்லாத்துக்கு நெருக்குதல் வருவது போலவும் இனி இஸ்லாத்துக்கு எதிராக சில சட்டங்கள் போட்டு கட்டம் கட்டப் படலாம் என்றும் தங்களுக்குத் தாங்களே புளங்காகிதம் அடைந்து பதிவிட்டிருந்தார்கள். //
சகோ. கனடாவில் இஸ்லாத்துக்கு நெருக்குதல் வருவதாகவும், இஸ்லாத்துக்கு எதிராக சட்டங்கள் போட்டு கட்டம் கட்டுவதாக நான் எழுதவே இல்லை .. புரிந்துக் கொள்ளுங்கள் .. இஸ்லாமிய தீவிரவாத காட்டுமிராண்டித் தனத்துக்கே நெருக்குதல் வருகின்றது, அதனை இருக்கும் சட்டங்களை சரியாக பயன்படுத்தினாலே கட்டம் கட்டிவிடலாம் ..
ஒருவேளை இஸ்லாம் = தீவிரவாத காட்டுமிராண்டித் தனம் என தாங்கள் புரிந்துக் கொண்டுள்ளீர்களோ ? அல்லது அது தான் உண்மை என சொல்லாமல் சொன்னீர்களோ ? என்னவோ !!!
என்ன இருந்தாலும் எனதுப் பதிவை இன்னொருமுறை படியுங்க .... :) புரியாததும் புரியலாம் !
@Giruba!
//எனக்கு தெரிந்து என் கல்லூரில் ஆயுத பூஜை.நான் முஸ்ஸீம் பூஜ்ஜைக்கு வரமாட்டேன் என்று கூறியது நினவுக்கு வருகிறது//
ஹா...ஹா..ஹா... இன்னும் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் இதே நிலைதானா!. இதனால்தான் வெறுத்துப் போய் இவர்களை திருத்த முகமது நபிதான் சரி என்ற முடிவுக்கு வந்து 'தமிழருக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம்' என்று ஒரே போடாக போட்டார் பகுத்தறிவு பகலவன்.
சகோ. கிருபா! அந்த மிஷின்களுக்கு நீங்கள் வைக்கும் பொட்டையோ, சந்தனத்தையோ, மாலைகளையோ, படையல்களையோ விளங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதா? அந்த மிஷின்களுக்கு முன்னால் கண்ணை மூடிக் கொண்டு பயபக்தியோடு பிராரத்திக்கிறீர்களே! அதுவாவது அதற்கு விளங்குமா? இப்படி எல்லாம் வணங்குவதற்கு உங்கள் மத வேத புத்தகங்கள்தான் அனுமதிக்கிறதா? சிந்தியுங்கள் தோழரே!
@Iqbal Selvan!
//குறிப்பாக கனடாவில் குடியேறும் இஸ்லாமிய சமூகம் ஏனைய சமூகங்களோடு ஒன்றிணைந்து வாழ்தலைத் தடுக்கும் விதமாக பல வழிப்பாட்டு தலங்கள் வன்மங்களைப் போதித்து வருகின்றது.//
யாரும் யாருடன் வேண்டுமானாலும் ஜாலியாக இருக்கலாம்! ஓரினப் புணர்ச்சியை சட்டமர்க வேண்டும்! என்ற மனித விரோத சட்டங்களை தங்கள் வரையில் ஒரு குழுவாக இருந்து தடுத்துக் கொள்கிறார்கள். இக்பால் செல்வனுக்கு இதெல்லாம பிரச்னையில்லை என்றால் அதை அந்த முஸ்லிம்கள் தடுக்கப் போவதும் இல்லை. ஆனால் இது தவறு என்று பிரசாரம் பண்ணுவது மனித நேயம் விரும்பும் அனைவரின் கடமை! இன்னும் சில ஆண்டுகளில் கனடா, பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுக்ள கத்தியின்றி ரத்தமின்றி பகுத்தறிவு கலந்த இறை மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் காட்சியை காணத்தான் போகின்றோம். அதுவரை கொஞ்சம் பொறுமை காக்கக் கூடாதா!
சார்வாகன்!
//1. என்னுடைய முதல் கருத்தை உண்மையாக்கி உங்களுக்கு 'அஆஇஈ' என்ப்வர் திரு பி.ஜே என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி.
****//
அஆஇஈ என்பது போல் உங்களுக்கு உஊஎஏ! :-0 விளங்கவில்லையா! பிஜே, ஜாகிர்நாயக்,ஹாருன் யஹ்யா, பிலால் பிலிப்ஸ் எனபவர்களின் விளக்கங்களை குர்ஆனோடு ஒப்பிட்டு எனது அறிவுக்கு ஏற்றுக் கொண்டால் அதை பதிக்கிறேன்.
நீங்களும் பதிலுக்கு பெரியார், கார்ல்மாக்ஸ், லெனின், டார்வின் என்று விளக்கத்துக்கு ஓடுகிறீர்கள். பெயரும் விளக்கங்களும்தான் மாறுபடுகிறது. நோக்கம் ஒன்றுதானே!
மேலும் பிஜே, ஜாகிர்நாயக் போன்றோர் குர்ஆன் ஹதீஸூக்கு மாற்றமாக எந்த கருத்தையும் வைத்தால் அடுத்த நிமிடமே அதை தூக்கி எறிந்து விடுவேன். இதுதான் என் நிலை. சில நேரங்களில் இது போன்ற அறிஞர்களின் உதவியை நாடுவது நமக்கு அதிக நேரமில்லை என்ற காரணம்தான்!
//இஸ்லாமியர்களின் வாழ்வு நெறிக்கு மத புத்தகமே மூல ஆதாரம்.பிறரின் வாழ்வு நெறிக்கு மூளையே ஆதாரம்.//
உங்களின் வாழ்வு நெறி எதன் அடிப்படையில் அமைந்தது? நீங்கள் உங்களை பகுத்தறிவாதி அழைத்துக் கொண்டாலும் உலக பார்வையில் நீங்கள் இந்துதான். நீங்கள் விரும்பா விட்டாலும் உங்களின் மனைவியோ உங்கள் குழந்தைகளோ அவ்வளவு எளிதில் மாற மாட்டார்கள். உலகம் முழுதும் இதுதான் நிலை. ஒரு கொள்கை பிடிக்கவில்லை என்றால் வேறொரு கொள்கையின் பக்கம் சென்றே ஆக வேண்டும். இது உலகின் எதார்த்த நிலை.
//3.ஆதி தாய் தந்தையர் ஆதம் ,ஹவ்வா இறைவனை பார்த்ததாக கூறுகின்றார். இது சரியா?[அண்ணன் ஜமாலி கோபிப்பார் பரவாயில்லையா?]//
இது கருத்து சுதந்திரம். குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்ய வேண்டும். இதை குர்ஆனும் வலியுறுத்துகிறது.
//4.ஆதம் அவர்கள் பூமிக்கு அனுப்பப் பட்டார் என்றால் எங்கிருந்து? இது பற்றிய குரான் வசனம்.//
'ஆதமே! நீயும் உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்!'
-குர்ஆன் 2:35
இறைவனின் கட்டளையை மீறியதால் அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப் பட்டு பூமிக்கு அனுப்புகிறான் இறைவன்.
//5.இறைவனின் செய்தி மட்டுமே பின்பற்றப் படவேண்டியவை அன்றி சுய சிந்தனை அல்ல என்று ஆதமுக்கு கூறியதாக் கூறுகின்றார்[ஆதார குரான் வசனம்?].அதுதான் குரான் என்றால் அது இறை செய்தி என்னும் பட்சத்தில் சரிதான். //
'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்!' என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.
குர்ஆன் 2:38
//ஒவ்வொரு நபி மொழியும் இறை வார்த்தையா? இங்கும் பல பிரிவினர் வித்தியாசமான நபி மொழி தொகுப்புகளை பின்பற்றுவதே சிக்கல்.//
குர்ஆனைப் பாதுகாத்ததுபோல் துரதிஷ்டவசமாக ஹதீதுகள் முழுவதையும் பாதுகாக்கமுடியாமல் போனது. இடையில் புகுந்த யூதர்கள் பல பொய்களை நபியின் பெயரால் இட்டுக்கட்டினர்.அதில்தான் சில பிரச்னைகள் வரும்.
6. மதவாதிகளுக்குள் பிரச்னை மூலத்தில் இல்லை. இறைவன் ஒருவன் என்பதிலோ, அவனது கடைசி தூதர் முகமது நபி என்பதிலோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அங்கே இதற்கு மாற்றமான நிலையே உள்ளது. ஒருவர் டார்வினையும், மற்றொருவர் கார்ல்மாக்ஸையும், பிரிதொருவர் பெரியாரையும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பர்.
நண்பருக்கு வணக்கம்
நானும் எந்த 'உஊஎஏ' சொன்னாலும் சரி பார்க்காமல் ஏற்றுக் கொள்வதில்லை,என்ன நீங்கள் மூல ஆதாரம் வைத்து சரிபார்க்கலாம்.அதிலும் எத்தனை பேர் சரி பார்க்கிறார்கள்?. எங்களுக்கு அறிவே ஆதாரம். திரு பி.ஜேவின் பேச்சில் இருந்து பேசுவது அவர் ஒரு குறிப்பிட்ட கொள்கையாக்கத்தை வரையறுத்து ,அதை உறுதிப் படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.இவரை பற்றி,இவருடைய விளக்கங்கள்,நிலைப்பாடுகள் பற்றி இன்னொரு சம்யத்தில் விவாதிப்போம். நீங்கள் பி.ஜே வை மேற்கோள் காட்டியதால் மட்டுமே அவரை குறித்து பேச வேண்டியதாகி விட்டது. நான் சுவனப் பிரியனின் புரிதல்கள் பற்றி மட்டுமே விவாதிக்க விழைகிறேன்.
___________
இஸ்லாமிய வங்கிகளில் பிற வங்கிகளை விட பிற வங்கிகளை விட எப்படி மேம்பட்டது?.இது பற்றிய என்னுடைய பதிவு.
இஸ்லாமிய வங்கி:வீட்டுக் கடன்: ஒரு சாமான்யனின் பார்வை
http://saarvaakan.blogspot.com/2011/04/blog-post_25.html
இது போல் ,இஸ்லாமிய வங்கியில் வீட்டுக் கடன் ,அல்லது வாகன க்டன் வாங்கிய கணக்கு விவரங்கள் அளித்தால் சரிபார்க்க எளிதக இருக்கும்.
நன்றி
READ THIS ARTICLE.
CLICK - மதம்மாற்ற செய்ய மொள்ளமாரித்தனம். பிறமதத்தை திணிப்பவர்களை கொல்லுங்கள். பைபிள் உத்தரவு
.
சுவனப்பிரியன். ஒட்டு மொத்த உலகமும் இஸ்லாம் பக்கம் வரப்போகுது தெரியுமா?
“நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்” அது போன்று தான் இஸ்லாமியர்களும், எங்கெல்லாம் இவர்கள் நுழைகிறார்களோ அங்கெல்லாம் பிரச்சினையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகள் இன்னும் விழித்து கொள்ளவில்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளில் பேரபாயத்தை சந்திக்க நேரிடும், //ஒட்டு மொத்த உலகமும் இஸ்லாம் பக்கம் வரப்போகுது தெரியுமா?// துரதிஷ்டவசமாக அப்படி நடந்தால், அது தான் உலகின் அழிவின் ஆரம்பம் திரு ஜெய் சங்கர் அவர்களே, அப்போது தான் வன்முறை உலகம் எங்கும் பெருகும், வன்முறையின் முடிவு அழிவுதானே. எனக்கு தெரிந்தவரை இந்த மதத்தை சேர்ந்தவர்களால் உலகில் எந்த நன்மையையும் நடந்ததாக தெரியவில்லை. பிற மதத்தினரை காபிர் என்றும், யூத கிறிஸ்தவர்களுடன் பழக வேண்டாம் என்றும் அவர்களால் இறைவனின் நேரடி வேதம் என்று கூறப்படும் புத்தகத்திலேயே வெறுப்பை தூவி வைத்திருப்பவர்களை தங்கள் நாடுகளில் மிக்க சுதந்திரம் கொடுப்பது தான் கிறிஸ்தவ நாடுகள் செய்யும் மிக பெரிய தவறு. இஸ்லாமிய நாடுகளில் பிற மதத்தினருக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பது போல் கிறிஸ்தவ நாடுகளும் மிக கடுமையான கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும்
ஹாய்,
குயிக் கொஸ்டின்.
//ஆனால் இஸ்லாமிய வங்கிகள் அந்த பொருள் நான்கு வருடத்துக்கு பிறகு என்ன மதிப்பு போகும் என்ற விலையை நிர்ணயம் செய்து இருவரும் ஒத்துக் கொண்டவுடன் தவணை முறையில் பணம் கட்ட வாங்குபவர் ஒத்துக் கொள்கிறார். இந்த லாப பணம் நமது வங்கிகளோடு ஒப்பிடும்போது மிகச் சொற்பமே!//
ஒரு ஹோண்டா ஏக்டிவா ஸ்கூட்டர இன்னிக்கு வாங்குனா அதன் விலை ரூ. 51 ஆயிரம் ஆகுது. தேய்மானம் கணக்குப் போட்டா நாலு வருசங் கழிச்சு ரூ. 25 ஆயிரத்துக்குப் போகலாம். ரெண்டாம்-கை விற்பனையில் கூடக்குறைய இருந்தாலும் இந்த ரேட்டுக்கு ரொம்ப வேறுபாடு வராது.
இப்போ, இஸ்லாமிய வங்கி எந்த விலை போட்டு வாடிக்கையாளருக்கு விற்கும்? எத்தனைரூபாய் லாபம் வச்சு விற்கும்?
**
சகோ. கிருபா! அந்த மிஷின்களுக்கு நீங்கள் வைக்கும் பொட்டையோ, சந்தனத்தையோ, மாலைகளையோ, படையல்களையோ விளங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதா? அந்த மிஷின்களுக்கு முன்னால் கண்ணை மூடிக் கொண்டு பயபக்தியோடு பிராரத்திக்கிறீர்களே! அதுவாவது அதற்கு விளங்குமா? இப்படி எல்லாம் வணங்குவதற்கு உங்கள் மத வேத புத்தகங்கள்தான் அனுமதிக்கிறதா? சிந்தியுங்கள் தோழரே!
**
அட்ட்டேங்கப்பா....!
பகுத்தறிவு பொங்கி வழியுதுங்கோ.
நீங்க என்னதான் சிந்தனையத் தூண்டறாப்ல கேட்டாலும் எங்க மதம் சொல்றாப்ல, அதன் விதிமுறைகளை எங்க முன்னோர்கள் சொன்னபடி பின்பற்றி வருகிறோம். It is all codified and inscribed in our DNA. ஆத்தா கேக்கறா. நாங்க செய்றோம்.
அவ்ளோதான்.
Period!
இதில் யார் என்ன கேள்வி கேட்க முடியும்?
உங்க மதம்... உங்களுக்கு! எங்க மதம்... எங்களுக்கு :P
//
யாரும் யாருடன் வேண்டுமானாலும் ஜாலியாக இருக்கலாம்! ஓரினப் புணர்ச்சியை சட்டமர்க வேண்டும்! என்ற மனித விரோத சட்டங்களை தங்கள் வரையில் ஒரு குழுவாக இருந்து தடுத்துக் கொள்கிறார்கள். இக்பால் செல்வனுக்கு இதெல்லாம பிரச்னையில்லை என்றால் அதை அந்த முஸ்லிம்கள் தடுக்கப் போவதும் இல்லை. ஆனால் இது தவறு என்று பிரசாரம் பண்ணுவது மனித நேயம் விரும்பும் அனைவரின் கடமை! //
இதுவரைக்கும் ஓகே. இந்த ஷரியாவக் கொண்டா, கைய வெட்டு, கால வெட்டு பேச்செல்லாம் கனடாவுல பேசாதேன்னுதானே அவங்க சொல்றாங்க.
எப்படி சவூதியில அந்நாட்டு சட்டத்தைப் பின்பற்றுவது முறையோ, அதேபோல கனடா நாட்டில் அந்நாட்டுச் சட்டத்தை மதிப்பது முறையல்லவா? அது எவ்வளவு எதேச்சதிகாரமானதாக இருந்தாலும்.
// இன்னும் சில ஆண்டுகளில் கனடா, பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுக்ள கத்தியின்றி ரத்தமின்றி பகுத்தறிவு கலந்த இறை மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் காட்சியை காணத்தான் போகின்றோம். அதுவரை கொஞ்சம் பொறுமை காக்கக் கூடாதா!//
எப்புடி இ.செ-னின் பதிவுல இருக்கும் விடியோ செய்தில காட்டின மாதிரி அந்த சோமாலி மசூதி கைய வெட்டு, கால வெட்டுங்கற வழிமுறைய வச்சா?
பாஸ்! சிரிக்காம ஜோக்கடிக்கிறதில கில்லாடிதான் நீங்க.
**
இது கருத்து சுதந்திரம். குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்ய வேண்டும். இதை குர்ஆனும் வலியுறுத்துகிறது.
**
கொஞ்சம் தெளிவாக்க முடியுமா?
அ. குர் ஆன் சொன்னதுக்கும், ஹதீஸுகள் சொல்வதற்கும் வேறுபாடு இருக்கா இல்லையா?
ஆ. குர் ஆன் பெரிசா ஹதீஸ்கள் பெரிசா?
இ. எது முதலில் வந்தது? குர் ஆன் - ஆ இல்லை ஹதீஸா?
ஈ. தமிழ் இணையதள விவாதங்கள் நடக்கும்போதெல்லாம் இஸ்லாமியத் தமிழ்ப்பதிவர்கள் *ஹதீஸ்கள் பல்வேறு மனிதர்கள் கொடுத்த விளக்கங்களினால் மாசடைந்துவிட்டது. அதனால் நாம் குர் ஆன் சொல்வதை மட்டுமே விவாதிப்போம்* என்பார்களே. உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லையா? நீங்கள் குர் ஆன்-ஐ மட்டுமே வைத்து விவாதிக்கலாமே?
Let us settle this matter once for all.
நீங்க ஹதீச இழுத்தீங்கன்னா அப்புறம் திரும்பவும் தருமி, கல்வெட்டு போன்றோர் மொதோல்லேந்து ஆரம்பிக்கணும்.
george நான் சும்மா ஜோக் சொன்னேன் . சீரியஸா எடுத்துக்காதீங்க
Islam perla polappu nadathuravanga aramichitanga pa.
Oru naal kooda ungalaala aduthavanukku thunbam tharaama irukka mudiatha?
ayyo paavam.
இக்பால் செல்வன்!
//தமிழர்களின் கலாச்சாரத்தின் படி செய்யும் தொழிலே தெய்வம் என மதிக்கும் மாண்பு இருக்கின்றது. அதனால் அதுதான் தெய்வம் எல்லாம் தரும், சலாம் பண்ண வேண்டும் என்றில்லை. அவை இயங்காப் பொருளாகவே இருப்பினும் நாம் அவற்றுக்கு காட்டும் மரியாதையே ஏர் உட்பட உழவு சாதனங்களுக்கு பொட்டு இட்டு வணங்கும் முறை ... அதே போல இன்ன பிற தொழில் செய்வோரும் அவ்வாயுதங்களைப் போற்றும் முறை //
உ....ஸ்..ஸ்.....ரொம்ப புழுக்கமா இருக்கு! மரியாதை செய்தால் மட்டும் அதுக்கு விளங்கப் போவதுங்கலாண்ணா! லாஜிக்..லாஜிக் என்று அடிக்கடி உபயோகப்படுத்துவீங்களே! அது இங்கே இடிக்குதே! இதில் 'சுயமாக சிந்திப்பவன்' என்று தனக்குத்தானே பட்டம் வேறு! :-)
//ஆனால் அனைத்தையும் மதித்து போற்றி மதிப்பளிக்கும் தமிழர்களுக்கு எப்படி இஸ்லாம் சரிப்பட்டு வரும் ??? இஸ்லாம் முதலில் தமிழ் கலாச்சாரத்தோடே ஒன்றாத ஒரு சமயம் என்பது எனதுக் கருத்து ...//
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்!' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' இந்த தத்துவங்களெல்லாம் எங்கிருந்து வந்தது?
அடுத்து தமிழ்க் கலாசாரம் என்றால் என்ன? என்று எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன். மெய்யாலுமே எனக்கு தெரியவில்லை
//பெண் விரும்பாவிடின் ஆணின் தொடுதலை கணவனே ஆனாலும் புறந்தள்ளலாம் .. மற்றொன்று மற்றவரின் தனிப்பட்ட விடயங்களில் அது பெற்றோரே ஆனாலும் தலையிட முடியாது ..//
கணவனே ஆனாலும்.....இதன் மூலம் மற்றவர்களும் பெண் அனுமதித்தால் தப்பில்லை என்பது உங்கள் வாதம். இதில் பெற்றோர் கூட தலையிடக் கூடாதாம். சபாஷ்! இதைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. ஏமாற்றி வயித்துல பிள்ளையை கொடுத்துட்டு ஓடிட்டான்னா அப்ப மட்டும் பெற்றோர்களை நோக்கி ஏன் ஓடி வர வேண்டும். இதுதானே பல ஊர்களிலும் நடக்கிறது? இதெல்லாம் ஏற்படாமல் இருக்க முதலிலேயே அணை போடுகிறது இஸ்லாம்.
//அப்புறம் ஓரினப் புணர்ச்சி என்பதையும் தங்களால் விளங்க இயலாது ! ஏனெனில் அது இயற்கையான ஒன்று என பல முறைக் கூறியும் புரியாத மக்குகளாக இருப்பதை என்ன சொல்ல ?//
ஆஷிக்குடைய பதிவில் அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு ததது பிததென்று உளறி கொட்டி அதனை ஆஷிக் மருத்துவ அறிக்கையோடு விளக்கியவுடன் ஜகா வாங்கியதை மக்கு போல் மறந்து விட்டால் நான் என்ன செய்ய?
//விட்டுப் பிடித்து ஒரேயடியாக சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளாத அளவுக்கு பெரிய ஆப்பாக அடித்துவிடுவார்கள் என்பது தான் உண்மை ...//
ஹி...ஹி...ஹி அட... கொஞ்சம் பொறுத்துதான் பார்க்கலாமே!
--------------------------------------------
ராபின்!
//மற்றவர்கள் ரத்தத்தை சிந்தித்தான் பிழைப்பு நடத்தினார். இதெல்லாம் சுவனப் பிரியனுக்கு தெரியாதா //
ஆமாமாம்! கேவலம் பெட்ரோல் பணத்துக்காக ஈராக்,லிபியா,ஏமன் என்று எங்கு பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ் போன்ற கிறித்தவ நாடுகள் தினம் தினம் முஸ்லிம்களின் ரத்தத்தை குடித்து வருவதை எல்லோரும் அறிவர். இந்த நிலை மாற மேற் சொன்ன அந்த நாடுகளில் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டாலேயே நிலைமை மாற வாய்ப்புள்ளது.
ஜெய்சங்கர்!
//சுவனப்பிரியன். ஒட்டு மொத்த உலகமும் இஸ்லாம் பக்கம் வரப்போகுது தெரியுமா?//
உண்மையை உள்ளபடி சொன்ன உங்கள் வாக்கு பலிக்கட்டும்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
-----------------------------------------------------------------
ஹபீப் முஹம்மது!
சிறந்த தேவையுள்ள ஒரு தகவலை தந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
-----------------------------
ஜார்ஜ்!
// எங்கெல்லாம் இவர்கள் நுழைகிறார்களோ அங்கெல்லாம் பிரச்சினையை தவிர வேறு ஒன்றும் இல்லை. //
அமெரிக்காவை மனதில் நினைத்து சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அரபு நாட்டு பணத்தை கொள்ளையடிக்க என்ன என்ன திட்டங்கள் இஸ்ரேலோடு சேர்ந்து செய்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். அமெரிக்க என்ற ஒரு நாட்டினால் உலகில் எந்த நாடாவது நிம்மதியாக இருக்கிறதா? ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீன், லிபியா, ஏமன்,எகிப்து என்று இவர்கள் கொள்ளையிடாத நாட்டு படடியல் நீண்ட கொண்டே போகிறது. இவ்வளவு கொள்ளை அடித்தும் அந்த மக்கள் வேலையில்லா திண்டாட்டத்திலும், வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களும், தொலைந்த குடும்ப வாழ்வும், இயற்கையின் சீற்றமும் தினம் அந்த நாட்டை பாடாய் படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனை வீணாகதல்லவா! இருந்தும் இன்னும் திருந்தவில்லை. அந்த மக்களில் பாதிக்கு மேல் என்று இஸ்லாத்தை தழுவுகிறார்களோ அன்றுதான் இந்த கொள்ளையிடலும் நிற்கும். அதுவரை நாமும் பொறுப்போம்.
// ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகள் இன்னும் விழித்து கொள்ளவில்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளில் பேரபாயத்தை சந்திக்க நேரிடும்//
ஒன்றும் ஆகி விடாது. உலக வரை படத்தில் இரண்டொரு முஸ்லிம் நாடுகள் அதிகரிக்கும். வேறொன்றும் ஆகி விடாது. பயப்படாதீர்கள்!
அனானி!
//அட்ட்டேங்கப்பா....!
பகுத்தறிவு பொங்கி வழியுதுங்கோ.
நீங்க என்னதான் சிந்தனையத் தூண்டறாப்ல கேட்டாலும் எங்க மதம் சொல்றாப்ல, அதன் விதிமுறைகளை எங்க முன்னோர்கள் சொன்னபடி பின்பற்றி வருகிறோம். It is all codified and inscribed in our DNA. ஆத்தா கேக்கறா. நாங்க செய்றோம்.
அவ்ளோதான்.
Period!
இதில் யார் என்ன கேள்வி கேட்க முடியும்?
உங்க மதம்... உங்களுக்கு! எங்க மதம்... எங்களுக்கு :P//
ஆத்தாவுக்கும் ஆத்தா ஒரு கடவுளைத்தான் வணங்கி வந்ததாக நமது பழைய வரலாறுகள் கூறுகின்றனவே!
2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
//இதுவரைக்கும் ஓகே. இந்த ஷரியாவக் கொண்டா, கைய வெட்டு, கால வெட்டு பேச்செல்லாம் கனடாவுல பேசாதேன்னுதானே அவங்க சொல்றாங்க. //
கையை வெட்டு காலை வெட்டு என்ற தண்டனைகளை தற்போது சவூதியிலேயே குறைத்து விட்டார்கள். கனடாவில் குற்றவியல் சட்டத்தை பின்பற்றவும் முடியாது. ஏனெனில் தண்டனை சட்டங்களை ஒரு இஸ்லாமிய அரசுதான் செயல்படுத்த முடியும். எனவெ இ.செ செய்வது பிதற்றலான வாதம்.
@ சுவனப்பிரியன் - // அடுத்து தமிழ்க் கலாச்சாரம் என்றால் என்ன? என்று எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன். மெய்யாலுமே எனக்கு தெரியவில்லை //
அஹா .. ரொம்ப சந்தோசம் .. அரபுக் கலாச்சாரம் எதுவென்றாவது தங்களுக்குத் தெரியுமா ? ஒருவேளை தமிழ்க் கலாச்சாரத்தில் இருப்பவைகளை யாம் மாற்றும் படி பேசியதால் - மொத்தமாக அரபுக் கலாச்சாரமாக மாற்றிவிடலாம் என நினைத்தீர்களோ என்னவோ ?
// கணவனே ஆனாலும்.....இதன் மூலம் மற்றவர்களும் பெண் அனுமதித்தால் தப்பில்லை என்பது உங்கள் வாதம். இதில் பெற்றோர் கூட தலையிடக் கூடாதாம். சபாஷ்! இதைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. ஏமாற்றி வயித்துல பிள்ளையை கொடுத்துட்டு ஓடிட்டான்னா அப்ப மட்டும் பெற்றோர்களை நோக்கி ஏன் ஓடி வர வேண்டும். இதுதானே பல ஊர்களிலும் நடக்கிறது? இதெல்லாம் ஏற்படாமல் இருக்க முதலிலேயே அணை போடுகிறது இஸ்லாம். //
இருப்பதை குழப்புவதில் நீங்கள் கில்லாடி சகோ. ஒரு பெண்ணைத் தொட நினைத்தால் அவளது அனுமதி இருக்க வேண்டும்.. தாலிக் கட்டிவிட்டவுடனே பெண் ஒன்றும் ஆணுக்கு அடிமை இல்லை .. கூப்பிடும் போதெல்லாம் படுக்கையை விரிக்க .. இது தான் தனிமனித சுதந்திரம் .. மனைவியே ஆணாலும் சக மனுசியாக மதிக்கக் கற்றுக் கொள்வதே உண்மையான பண்பாடு ..
எதிலும் பாலியல் ரீதியாகவே அணுகுவது தான் தங்களின் குணமோ ? சௌதியில் இருப்பவர்களுக்கு இந்தப் புத்தி வெகு இயல்பாகவே இருக்கும் .. இல்லை எனில் பால் வாங்க குழந்தையோடு கடைக்குச் சென்ற பெண்ணையே ! எங்கே வேறு ஒருவனோடு படுத்துவிடுவாளோ என்ற சந்தேகத்தில் காரோட்டுவதற்கு தடை விதித்தவர்கள் தானே !!! கொஞ்சம் உடல்சார் மனநிலையில் இருந்து வெளியில் வாருங்கள் ...
ஏமாற்றி பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஓடுகின்றான் எனில் அங்கே பிரச்சனை பெண்ணுடையதல்ல ! ஆணின் வக்கிர எண்ணத்தின் வெளிப்பாடு, இதற்கு தேவை பெண்ணை அடக்கிவைப்பதல்ல .. ஆணுக்கும் பெண்ணுக்குமான சமூகக் கல்வியும், விழிப்புணர்வுமே ஆகும்.
// ஆஷிக்குடைய பதிவில் அதிமேதாவி என்று நினைத்துக் கொண்டு ததது பிததென்று உளறி கொட்டி அதனை ஆஷிக் மருத்துவ அறிக்கையோடு விளக்கியவுடன் ஜகா வாங்கியதை மக்கு போல் மறந்து விட்டால் நான் என்ன செய்ய?
//
ஐயா ! அதிமேதாவிகளே ! ஆசிக் எழுதி தள்ளியக் குப்பைகளில் இருக்கும் தவறுகளையே சுட்டிக் காட்டினேன். பாலியல் குறைப்பாடுகளையும், ஓரினச் சேர்க்கையையும் கூட விளங்கிக் கொள்ள முடியவில்லையே உங்களவர்களுக்கு ? இதுக் குறித்து விளக்கமாகவே சில பதிவுகள் எழுதியுள்ளேன். எதோ மருத்துவரைப் போலவே அதிமேதாவியாக எண்ணி எழுதியது நானில்லை ஆசிக் தான். வேண்டுமெனில் நல்லதொரு மருத்துவரை அணுகி விவாதித்துவிட்டு எழுதும் படி கோரியதும் .. அத்தொடரை கைவிட்டுவிட்டார் அவர். ஓடியது நானில்லை ..
// ஹி...ஹி...ஹி அட... கொஞ்சம் பொறுத்துதான் பார்க்கலாமே! //
பார்க்கலாமே ! நான் இதுவரைப் பேசியது இஸ்லாமிய தீவிரவாத மற்றும் காட்டுமிராண்டிக் கலாச்சாரப் பரப்பிகளைப் பற்றியதே ! அதைக் கண்டிக்கக் கூட உங்களால் முடியவில்லை எனில் என்ன அர்த்தம் நீங்கள் அவர்கள் செய்ததை/அதனை ஏற்பதாகவே கருதவேண்டியுள்ளது ....
// அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ் போன்ற கிறித்தவ நாடுகள் தினம் தினம் முஸ்லிம்களின் ரத்தத்தை குடித்து வருவதை எல்லோரும் அறிவர். //
அப்படியே வைத்துக் கொள்வோம். அந்நாடுகளின் வாலில் தொங்கிக் கொண்டிருப்பது யார் ? சௌதி, குவைத், கத்தார், அமீரகம், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் தானே ! ஏன் தொங்க வேண்டும் ... இந்தப் பொருளாதார சண்டைகளில் மதம் என்பது ஒரு சாக்குக்கும், விளம்பரத்துக்குமே ஆகும் ... !!!
//அ. குர் ஆன் சொன்னதுக்கும், ஹதீஸுகள் சொல்வதற்கும் வேறுபாடு இருக்கா இல்லையா?
ஆ. குர் ஆன் பெரிசா ஹதீஸ்கள் பெரிசா?
இ. எது முதலில் வந்தது? குர் ஆன் - ஆ இல்லை ஹதீஸா?//
அ. குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. இடையில் இஸ்லாத்தில் சேருவதாக நடித்த ஒரு சில யூதர்கள் நபியைப் பற்றி பல கட்டுக் கதைகளை பரப்ப ஆரம்பித்தனர். அபுபக்கர், உமர்,உஸ்மான் காலங்களில் இவை கண்டறியப்பட்டது. பின்னால் ஹதீதுகளை தொகுத்த அறிஞர்கள் அந்த கட்டுக் கதைகளையும் எழுதி இவை எல்லாம நம்பத்தகுந்த ஹதீதுகள் அல்ல என்ற குறிப்பையும் இட்டுள்ளார்கள். அந்த ஹதீகளைத்தான் இஸ்லாமிய எதிரிகள் இன்றும் அலிசீனா போன்றவர்கள் பயன் படுத்தி முஸ்லிம்களைக் குழப்பப் பார்க்கிறார்கள். ஆனால குர்ஆன் பாதுகாப்பாக இருப்பதால் அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை.
ஆ. குர்ஆனே பெரிது.
இ. குர்ஆனே முதலில் வந்தது.
//ஈ. தமிழ் இணையதள விவாதங்கள் நடக்கும்போதெல்லாம் இஸ்லாமியத் தமிழ்ப்பதிவர்கள் *ஹதீஸ்கள் பல்வேறு மனிதர்கள் கொடுத்த விளக்கங்களினால் மாசடைந்துவிட்டது. அதனால் நாம் குர் ஆன் சொல்வதை மட்டுமே விவாதிப்போம்* என்பார்களே. உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லையா? நீங்கள் குர் ஆன்-ஐ மட்டுமே வைத்து விவாதிக்கலாமே?
Let us settle this matter once for all.//
'இறைவனை பணிந்து தொழுங்கள்' என்று குர்ஆன் கட்டளையிடும். எப்படி தொழுவது என்பதை முகமது நபியின் வழி காட்டுதலில்தான் நாம் அறிய முடியும். இது போன்று பல சட்டங்களை குர்ஆன் கட்டளையிட்டாலும் அதை விளக்குவதற்கு முகமது நபியின் வழிகாட்டுதல் அவசியம் தேவைப்படும். இங்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டு இருக்கிறேன்.
'இறைவனுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் புறக்கணித்தால் இறைவன் மறுப்போரை விரும்ப மாட்டான்'
-குர்ஆன் 3:32
'இறைவனையும் இத்தூதரையும் நம்பினோம். கட்டுப்பட்டோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கைக் கொண்டோர் அல்லர்'
-குர்ஆன் 24:47
'எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம்: இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்'
-குர்ஆன் 3:53
'உங்கள் மார்க்கத்தை இறைவனுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?'
-குர்ஆன் 49:16
மேற்கண்ட வசனங்கள் எல்லாம் குர்ஆனையும், முகமது நபியின் போதனைகளையும் அனைத்து முஸ்லிம்களும் பின் பற்ற வேண்டும் என்று கட்டளையிடுகிறது. முகமது நபியை பின் பற்றுவதும் குர்ஆனின் கட்டளையே! நாம் விபரம் சேகரிக்கும் போது குறிப்பிட்ட ஹதீது முகமது நபி சொன்னதுதானா என்று தெளிவாக்கிக் கொண்டு படிக்க வேண்டும். எனவே இதில் குழப்பம் இல்லை.
எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...
கனடாவில் இதுவரை நான் தமிழ் முஸ்லிம்களை பார்த்ததே இல்லீங்க ... ! அவ்ளோ கம்மி ஆளுங்க .. நிறையப் பேரு இந்தியா, பாகிஸ்தான், சோமாலியா ஆளுங்க.. பாகிஸ்தான், சோமாலியா முஸ்லிம் பலர் அவ்வளவு நல்லவ இல்லீங்க ... பிராடு பித்தலாட்டம் பண்றவங்க. நம்ம இந்தியா முஸ்லிம் தான் நிறையப் பேரு நல்லவங்களா இருக்காங்க ... இவ்ளோ தான் எனக்குத் தெரியும் ... !!!
சகோ. ஆரோணன்!
//கனடாவில் இதுவரை நான் தமிழ் முஸ்லிம்களை பார்த்ததே இல்லீங்க ... ! அவ்ளோ கம்மி ஆளுங்க .. நிறையப் பேரு இந்தியா, பாகிஸ்தான், சோமாலியா ஆளுங்க.. பாகிஸ்தான், சோமாலியா முஸ்லிம் பலர் அவ்வளவு நல்லவ இல்லீங்க ... பிராடு பித்தலாட்டம் பண்றவங்க. நம்ம இந்தியா முஸ்லிம் தான் நிறையப் பேரு நல்லவங்களா இருக்காங்க ... இவ்ளோ தான் எனக்குத் தெரியும் ... !!!//
உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். சோமாலியர்கள், பாகிஸ்தானியர்கள் பல சட்ட விரோத செயல்களை அரபு நாடுகளிலும் செய்து வருகின்றனர். இது பேன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை சவுதியில் கொடுக்கப்படுவதால் அவர்கள் அதிகம் சவுதியில் தங்கள் வேலைகளை செய்வதில் பயம் ஏற்படுகிறது.
மேலும் இதுபோன்ற செயல்கள் எதனால் ஏற்படுகிறது? இறைவனைப் பற்றிய பயம் இல்லாதது பல காரணங்களில் ஒன்று. அவர்களுக்கு இஸ்லாம் குற்றச் செயல்களுக்கு இறப்புக்கு பின்பு என்ன தண்டனை கொடுக்கிறது என்பதை விளக்கி இறை பயத்தை ஊட்டினால் திருந்த வாய்ப்புண்டு. அதை விடுத்து அவர்களை காரணமாக வைத்து இஸ்லாமிய சட்டங்களை குறை சொல்வதுதான் இங்கு பிரச்னையே!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
இக்பால் செல்வன்!
// ஒருவேளை தமிழ்க் கலாச்சாரத்தில் இருப்பவைகளை யாம் மாற்றும் படி பேசியதால் - மொத்தமாக அரபுக் கலாச்சாரமாக மாற்றிவிடலாம் என நினைத்தீர்களோ என்னவோ ?//
நான் கேட்டதற்கு இது பதில் இல்லையே! மீண்டும் கேட்கிறேன் தமிழ் கலாசாரம் என்பது என்ன? எவை எல்லாம் தமிழ் கலாசாரத்தில் அடங்கும்?
//ஆணுக்கும் பெண்ணுக்குமான சமூகக் கல்வியும், விழிப்புணர்வுமே ஆகும்.//
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக நடத்தப்படும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தானே பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கிறது? இருவரும் படித்து என்ன மாற்றம் வந்து விட்டது?
//பார்க்கலாமே ! நான் இதுவரைப் பேசியது இஸ்லாமிய தீவிரவாத மற்றும் காட்டுமிராண்டிக் கலாச்சாரப் பரப்பிகளைப் பற்றியதே ! அதைக் கண்டிக்கக் கூட உங்களால் முடியவில்லை எனில் என்ன அர்த்தம் நீங்கள் அவர்கள் செய்ததை///
வன்முறையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாம் சொல்லாத ஒன்றை முஸ்லிம்களே செய்தாலும் அது இஸ்லாமிய வட்டத்துக்குள் வராது. காட்டுமிராண்டித் தனமாக நடப்பவர்கள் என் அளவில் காட்டுமிராண்டிகளே!
//சௌதி, குவைத், கத்தார், அமீரகம், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் தானே ! ஏன் தொங்க வேண்டும் ... //
தொங்கவில்லை என்றால் அமெரிக்கா மொசாத், சி.ஐ.ஏ போன்றவற்றின் துணையோடு அந்நாடுகளில் குழப்பத்தை உண்டு பண்ணும். ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கதை கட்டி விடும். மசூதிகளில் குண்டு வைக்கும். ஆட்சிக்கு எதிரானவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து அரசை கவிழ்க்கும். ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இதுதானே நடக்கிறது. எவன் தாலி அருந்தாலும் அமெரிக்காவின் கல்லா நிரம்ப வேண்டும். மனித குல விரோதிகள் இந்த அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும்.
//அவை இயங்காப் பொருளாகவே இருப்பினும் நாம் அவற்றுக்கு காட்டும் மரியாதையே ஏர் உட்பட உழவு சாதனங்களுக்கு பொட்டு இட்டு வணங்கும் முறை ... அதே போல இன்ன பிற தொழில் செய்வோரும் அவ்வாயுதங்களைப் போற்றும் முறை//
இந்த கேள்வியை நீங்க கண்டுக்கவே இல்லையே! :-)
கோவி கண்ணன்!
//என்னங்க இது நீங்க காஃபா கல்லுக்கு சாட்சி சொல்லும் திறமை இருக்கிறது என்று அதை சுற்றி வருவது போல் அவ்ர்கள் மிஷின்கள் உற்பத்திக்கு உதவி செய்வதாக நன்றிக்கடன் செலுத்துகிறார்கள்.//
உமர் (ரலி) அவர்கள் (இந்தக்) கருப்புக் கல் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, ”நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்றார்கள். (புகாரி 56வது அத்தியாயத்தில் 675வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.)
இரண்டாவது கலீஃபாவாகிய உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதில் முஸ்லிம்களின் கருப்புக்கல் குறித்த முஸ்லிம்களின் நோக்கு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான இலக்கணம் பொதிந்துள்ளது.
மேலும் ஹஜ்ஜுடைய கிரியைகளில் ஒன்றாகிய தவாஃப் (வலம் வருதல்) என்பதை முஸ்லிம்கள் ஏழு முறை சுற்றிவரவும் அதை இந்தக் கல்லினை அடையாளமாகக் கொண்டே துவக்கவும், ஒவ்வொரு சுற்றை முடிக்கவும் ஏவப்பட்டுள்ளனர். கூட்டம் காரணமாகக் கருப்புக் கல்லினை நெருங்கி முத்தமிட இயலாதவர்கள், தொலைவில் இருந்தவாறே கருப்புக் கல்லினை நோக்கி சைகை செய்துவிட்டு தங்களின் வலம் வருதலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி உள்ளது. இயலாத சூழலில் கருப்புக் கல்லைத் தொடாமலேயே கூட ஹஜ்ஜைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆகவே காபாவையோ, ஹஜ்ருல் அஸ்வத் எனும் கல்லையோ அல்லது, இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையோ அவர்கள் அடக்கப்பட்டுள்ள மதீனா எனும் பள்ளியையோ கூட வணங்க முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை என்பதே இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையின் நிலைபாடாகும்.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இப்பொழுது புரிகிறதா?
இறைவனின் திருப்பெயரால்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,
சகோதரர் சுவனப்பிரியன் மாஷாஅல்லாஹ் தங்களின் பதில் அளிக்கும் விதம் மிகவும் அழகாகவும்,தெளிவாகவும் இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.மேலும் தங்களின் கல்வி அறிவை அல்லாஹ் அதிகப்படுதுவானாக.
சகோதரர் இக்பால்செல்வன் கூற்றுபடி ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூககல்வி கொடுக்கப்பட்ட நாடுகளில் பாலியல் குற்றம் குறைந்து விட்டது என்று சொல்லவருகிறார.அப்படி என்றால் ஒரு இரண்டு நாடுகளின் பெயரை ஆதாரத்துடன் கொடுக்க முடியுமா.
by mohamed
//ஆமாமாம்! கேவலம் பெட்ரோல் பணத்துக்காக ஈராக்,லிபியா,ஏமன் என்று எங்கு பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ் போன்ற கிறித்தவ நாடுகள் தினம் தினம் முஸ்லிம்களின் ரத்தத்தை குடித்து வருவதை எல்லோரும் அறிவர். இந்த நிலை மாற மேற் சொன்ன அந்த நாடுகளில் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டாலேயே நிலைமை மாற வாய்ப்புள்ளது.//
//அமெரிக்காவை மனதில் நினைத்து சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அரபு நாட்டு பணத்தை கொள்ளையடிக்க என்ன என்ன திட்டங்கள் இஸ்ரேலோடு சேர்ந்து செய்கின்றனர்.....///
திரு சுவனப்ரியன் அவர்களே, அமெரிக்கா ஒன்றும் கிறிஸ்தவத்தின் தலைமை பீடமோ அல்லது உலக கிறிஸ்தவர்களின் வழிகாட்டியோ அல்ல, உலகின் எல்லா நாடுகளையும் போலத்தான் எங்களுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும். எந்த விதத்தில் அவர்கள் செயல்களை கிறிஸ்தவத்துடன் ஒப்பிடுகிறீர்கள். ஆதி காலம் தொட்டே ஒரு நாடு இன்னொரு நாட்டை கொள்ளையடிப்பதும் அடிமைப்படுத்துவதும் நடந்தே வந்திருக்கின்றன. இதில் அமெரிக்கன் பிறரை கொள்ளை அடிக்கிறான் என்பதற்காக அங்கே பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள் என்பதற்காக அவர்கள் தங்கள் சுயநலத்துக்காக செய்யும் செயல்களை கிறிஸ்தவமா செய்ய சொல்லியது. ஏன் முஸ்லிம்கள் பிற நாடுகளில் படை எடுக்கவில்லையா, வெள்ளையர்கள் இந்தியாவை கொள்ளை அடிக்க வரும் முன்பே 800 ஆண்டுகளாக முஸ்லிம்களான முகலாயர்கள் கொள்ளையடிக்கவில்லையா, இதுவரையில் வலிமை வாய்ந்த எந்த இஸ்லாமிய நாடும் பிற நாடுகள் மீது படை எடுக்கவில்லையா. சமீபத்தில் பல இஸ்லாமிய நாடுகளில் புரட்சி ஏற்பட்டது, அது அமெரிக்காவை எதிர்த்தோ அல்லது பிரிட்டனை எதிர்த்தோ அல்ல முஸ்லிம் மக்களால் முஸ்லிம் ஆட்சியாளர்களை எதிர்த்தே நடத்தப்பட்டது நடந்து கொண்டு இருக்கிறது. சொந்த மக்களையே நல்ல முறையில் நடத்தாத அடக்கி ஒடுக்கும் அரசுகளாக தான் இஸ்லாமிய அரசுகள் பெரும்பாலும் இருகின்றன, இஸ்லாமிய நாடுகளை விடவும் இஸ்லாமியர்கள் அமைதியாக வாழ்வது கிறிஸ்தவ நாடுகளிலும் இந்தியாவிலும் தான் அமெரிக்காவின் அடிவருடியாக இருந்து கொண்டு தீவிரவாதிகளை வளர்த்து வரும் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாட்டின் கதை மிக கேவலம். பொதுவாக இஸ்லாமியர்கள் தீவிரவாதம் செய்கிறார்களே என்று கேட்டால் நீங்கள் சொல்லும் சுலபமான பதில்- இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை, தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் அல்ல, அவர்கள் இஸ்லாமிய பெயர் தாங்கிகள் என்பது. அது போன்று தான் கிறிஸ்தவம் அமெரிக்ககாரனிடம் பிற நாடுகளை அடிமைபடுத்த சொல்லவில்லை, கொள்ளையடிக்க சொல்லவில்லை.
//வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களும், தொலைந்த குடும்ப வாழ்வும், இயற்கையின் சீற்றமும் தினம் அந்த நாட்டை பாடாய் படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனை வீணாகதல்லவா! இருந்தும் இன்னும் திருந்தவில்லை. அந்த மக்களில் பாதிக்கு மேல் என்று இஸ்லாத்தை தழுவுகிறார்களோ அன்றுதான் இந்த கொள்ளையிடலும் நிற்கும். அதுவரை நாமும் பொறுப்போம். /
இதை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. ஏக இறைவனான அல்லாவை வணங்கும் நாடுகளில் எல்லாம் பாலாரும் தேன் ஆறும் வழிந்து ஓடுகிறதா? இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான சோமாலியாவின் நிலை உலகம் அறியாதது அல்ல. உலகில் அதிகமான இஸ்லாமிய மக்களை கொண்ட இந்தோனேசியா தான் உலகில் அதிகமாக இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் நாடு சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஓன்று இந்தோனேசியாதான், அமெரிக்கா அல்ல. மேலும் அதிகமான கொலை, கொள்ளை மனிதர்கள் நிம்மதியாக வாழவே முடியாத சூழ்நிலை நிலவுவது ஆப்ரிக்க இஸ்லாமிய நாடுகளில் தான், சொந்த நாடு மக்களை மிருகங்களை விட கீழாக நடத்தி அவர்களின் மாமிசம் தின்ற இடி அமீன் என்ற மாமன்னர் அல்லாவின் பாதையை பின்பற்றியவர் தான், கடைசி காலத்தில் மக்களால் விரட்டப்பட்ட போது அவருக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தது அல்லாவின் மார்க்கத்தை உலகுக்கு சொன்ன நாடு தான். இதில் இருந்து தெரிவது என்ன தெரியுமா? அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணம், பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடி இருக்கும் மேலும் குடியேறி கொண்டிருக்கும் முஸ்லிம்களின் வருகை தான் காரணம் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் குடி இருக்கும் நாட்டையே காபிர் நாடாக பார்ப்பது இஸ்லாமியர்கள் மட்டும் தான். இவர்கள் அங்கே குடி இருக்க போனதால் தான் அமெரிக்காவிற்கு கேடே தவிர அமெரிக்கா பிற நாடுகளை கொள்ளை அடிப்பதால் அல்ல. அது தான் கூறினேன் எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் போகிறார்களோ அங்கே பிரச்சினையை தவிர எதுவும் இல்லை என்று. கொஞ்சம் உலக நாடுகளை உற்று பார்த்து சொல்லுங்கள், அல்லாவின் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் வாழும் நாடுகளில் தான் தரித்திரம் தாண்டவமாடுகிறது, அதற்கு அமெரிக்காவோ பிரிட்டனோ காரணம் அல்ல, சமீப காலமாக நடைபெறும் புரட்சிகளே அதற்கு உதாரணம். ஊர் இரண்டு படும்போது கூத்தடியான அமெரிக்கா கொண்டாடுகிறது அவ்வளவுதான். இதற்கு கிறிஸ்தவத்தை குறைகூறாதீர்கள்
ஜார்ஜ்!
//அமெரிக்காவின் அடிவருடியாக இருந்து கொண்டு தீவிரவாதிகளை வளர்த்து வரும் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாட்டின் கதை மிக கேவலம். //
பாகிஸ்தானை ஒரு இஸ்லாமிய நாடாக பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சவுதியைப் போல் ஷரியத் சட்டம் அங்கு பின்பற்றப்படுவதில்லை. அமெரிக்கா யாரை அங்கு ஆட்சியில் அமர்த்த நினைக்குமோ அவர் ஆட்சித தலைவராக அங்கு இருப்பார். ஏனெனில் இந்தியாவையும் சீனாவையும் கண்காணித்துக் கொண்டிருக்க ஒரு தோதான இடமாக பாகிஸ்தான் அவர்களுக்கு கைக் கொடுக்கிறது.
//இதை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. ஏக இறைவனான அல்லாவை வணங்கும் நாடுகளில் எல்லாம் பாலாரும் தேன் ஆறும் வழிந்து ஓடுகிறதா? //
பாலாறும் தேனாறும் ஓடா விட்டாலும் மற்றவர்களின் வயிற்றெறிச்சலை கொட்டிக் கொள்வதில்லை.
//அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணம், பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடி இருக்கும் மேலும் குடியேறி கொண்டிருக்கும் முஸ்லிம்களின் வருகை தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்//
இந்த வாதத்தில் உங்களுக்கே நம்பிக்கை இருந்தால் சரி!
கவலை வேண்டாம். இதே வேகத்தில் சென்றால் இன்னும் 20 வருடத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு மூன்றும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளாக மாறி விடும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இறை நாடினால் உயிருடன் இருந்தால் அதையும் நாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
என்ன சொல்கிறீர்கள் சுவனப்பிர்யன், பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு இல்லையா? ஆனால் பிற மதத்தினரை விட இஸ்லாமியர்கள் தானே அங்கே அதிகமாக இருகிறார்கள். இஸ்லாமியர்களுக்காக தானே இந்தியாவிடம் இருந்து அது பிரித்து கொடுக்கப்பட்டது. இப்படி தங்களுக்காக கொடுக்கப்பட்ட ஒரு சிறிய நாட்டையே அவர்களால் ஒழுங்காக நிர்வாகம் பண்ண முடியவில்லை. அங்கே கடவுளின் சட்டத்தை அமல் படுத்த முடியவில்லை. ஒட்டு மொத்த தீவிரவாதிகளின் பயிற்சி களமாக வேறு இருக்கிறது. இப்படி இருக்கும்போது நீங்கள் உலகம் முழுவதும் இஸ்லாமிய மயம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள், அப்படி நடந்தால் உலகம் என்னவாகும். கடவுளால் எந்த மாற்றமும் இல்லாமல் உலகம் முடியும் வரைக்குமான இறை வேதத்தை சொந்தமாக்கி வைத்திருப்பவர்கள் வழி தவறி நடக்கிறார்கள். அவர்களை திருத்த பிற இறை நம்பிக்கையலர்களாலும் முடியவில்லை. வேடிக்கை அவர்களை திருத்த முயற்சிக்காமல் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் மனம் திருந்த சொல்கிறீர்கள்.
//பாலாறும் தேனாறும் ஓடா விட்டாலும் மற்றவர்களின் வயிற்றெறிச்சலை கொட்டிக் கொள்வதில்லை.//
அல்லாவின் பாதையில் புனித போர் செய்தவர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை கேட்டுபாருங்கள் சுவனப்பிரியன். அவர்கள் வயிறு எரிகிறதா அல்லது ஐஸ் கட்டி வைத்தது போன்று இருகிறதா என்று.
//இந்த வாதத்தில் உங்களுக்கே நம்பிக்கை இருந்தால் சரி!
கவலை வேண்டாம். இதே வேகத்தில் சென்றால் இன்னும் 20 வருடத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு மூன்றும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளாக மாறி விடும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இறை நாடினால் உயிருடன் இருந்தால் அதையும் நாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.//
இஸ்லாம் பரவிய, பரவிக்கொண்டு இருக்கும் வழியை ஒத்து கொண்டதற்கு நன்றி சுவனப்பிரியன். ஒரு நாட்டில், அல்லது இடத்தில போய் குடியேற வேண்டும், மெதுவாக பக்கத்தில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க வேண்டும், பிறகு , அங்கே இஸ்லாமிய ஆட்சி வேண்டும், சட்டம் வேண்டும் என்று போராட்டம் நடத்த வேண்டும். இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த காஷ்மீரில் இப்போது அவர்களை தேடித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. இங்கிலாந்தில் இஸ்லாமியர்கள் குடியேற்றம் அதிகமாக அதிகமாக அங்கே நிகழும் குண்டு வெடிப்புகள் உங்கள் அமைதி மார்க்கம் எப்படி பரவுகிறது என்பதற்க்கான சாட்சி. கவலை வேண்டாம் சுவனப்பிரியன். அந்த நாட்டினர் முட்டாள்கள் அல்ல, எதை எந்த நேரத்தில் வெளியேற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும், கண்டிப்பாக நீங்களும் நானும் அதை பார்க்கலாம்.
Post a Comment