Followers

Tuesday, June 28, 2011

அவன் இவன் - விமர்சனம்!

பாலா முன்பு எடுத்த படங்களின் தரத்தோடு இதை ஒப்பிட முடியாதுதான். ஆனால் இவருக்கென்று சில ரசிகர்கள் இன்று தமிழ்த் திரையுலகில் உருவாகியிருக்கிறார்கள். எப்படி பாலச்சந்தருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டோ அது போல் பாலாவுக்கும் ஒரு கூட்டம் உருவாகி வருகிறது.

இவரைப் போன்ற இளம் டைரக்டர்கள் சமூகத்தில் உள்ள தீயவைகளை களையும் வண்ணம் கதைக் கருவை உண்டாக்க வேண்டும். அதை விடுத்து ஒரு சிறுவனை தீய காரியங்களுக்கு ஊன்று கோலாக இருப்பது போல் காட்டுகிறார். படம் பார்க்கும் சிறுவர்கள் கெடுவதைப் பற்றி கொஞ்சம் கூட கவலையில்லை இவர்களுக்கு! அதிலும் கதாநாயகர்கள் விஷாலும், ஆர்யாவும் எந்த நேரமும் சாராயமும் கையுமாக அலைய விடுவதால் டாஸ்மார்க் கடைகளின் வருமானத்தை இன்னும் அதிகமாக்குகிறார் பாலா! இதனால் இன்னும் பல இலவச திட்டங்களை ஜெயலலிதா அறிவிக்கலாம்! :-)

அடுத்து கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டவரை பாடையில் கொண்டு செல்லும் போது அங்கும் சாராயத்தோடு விஷாலும் ஆர்யாவும் போடும் குத்தாட்டம் பார்க்க சகிக்கவில்லை. துன்பத்தில் உள்ள ஒருவன் அமைதியாக கண்களில் இருந்து கண்ணீரை சொரிவதில் இன்னும் ஆழமாக காட்டியிருக்கலாம். ஆனால் சமூகத்தில் இப்படிப்பட்ட பழக்கம் உள்ளதால் தனது படத்திலும் அதே காட்சியை கொண்டு வருகிறார். பஸ்களில் செல்லும் போது தண்ணி அடித்துக் கொண்டு ஆட்டமும்பாட்டமுமாக பாடையோடு செல்லும் உறவினர்களைப் பார்த்து ஆச்சரியத்தோடு செல்வேன். எப்படி இவர்களுக்கு ஆட்டம் போட மனது வருகிறது என்று நினைத்துக் கொள்வேன்.

3850. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பிறர் வமிசத்தைக் குறை கூறுவதும் ஒப்பாரி வைத்து அழுவதும் அறியாமைக் காலத்துப் பண்புகளாகும்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத்(ரஹ்) மூன்றாவது பண்பொன்றை மறந்துவிட்டார்கள்.
"
சந்திரனின் இன்னின்ன ராசிகளால் தான் எங்களுக்கு மழை பெய்தது என்று சொல்லுவதே (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அந்த மூன்றாவது பண்பாகும்" என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.
Volume :4 Book :63

1304. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு உபாதா(ரலி) நோயுற்றபோது நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (ஸஅத் இப்னு உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், 'என்ன? இறந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். 'இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்றனர். நபி(ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பின் நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை - பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். நிச்சயமாகக் குடும்பத்தினர் ஒப்பாரி வைத்து அழுவதால் இறந்த உடல் வேதனை செய்யப்படுகிறது" என்று கூறினார்கள்.
ஒப்பாரி வைத்து அழுவதை உமர்(ரலி) கண்டால் கம்பினால் அடிப்பார்; கல்லெறிவார். இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்.
Volume :2 Book :23

அடுத்து ஆர்யாவுக்கும் விஷாலுக்கும் தாய்க் குலங்களாக வரும் அம்பிகா போன்றவர்களை புகை பிடிப்பது போல் காட்டியும் நரக நடையில் பேசுவதுபோல் காட்டுவதும் நகைச்சுவையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. தாயும் மகனும் சேர்ந்து போடும் ஆட்டம் பார்க்க சகிக்கவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு கமலஹாசனோடு 'வானிலே தேனிலா...' என்று ஆட்டம் போட்ட அம்பிகாவா இது என்று ஆச்சரியப்பட வைக்கிறது. ஹீரோவாக நடித்த கமலஹாசன் இன்றும் புது புது நடிகைகளோடு முண்ணனி கதாநாயகனாக வலம் வருகிறார். கூட நடித்த அம்பிகாவுக்கு இன்று அம்மா வேஷம். கதாநாயகிகள் அனைவருக்குமே கிட்டத்தட்ட இதே அளவுகோல்தான். ஆணும் பெண்ணும் எல்லா விஷயங்களிலும் சமமே என்று வாதிடுபவர்கள் இங்குள்ள வித்தியாசத்தை வசதியாக மறந்து விடுவார்கள்.

அடுத்து சாப்பாட்டுக்கு ஊறுகாயைப் போல் பட விளம்பரத்துக்காக குர்பானி கொடுப்பதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார் பாலா. பாலும் கறக்காத, வேறு எந்த வேலைக்கும் உதவாத மாடுகளை அதுவும் விலைக்கு வாங்கப்பட்ட மாடுகளை அறுத்து சாப்பிடுவதில் யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது? வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாலும் நமது நாட்டு பொருளாதாரமும் உயருகிறது. மேலும் தமிழக முஸ்லிம்கள் மாட்டுக் கறியை அதிகம் விரும்புவதில்லை. ஆட்டுக் கறியைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். கேரள நாட்டவரே மாட்டுக்கறியை அதுவும் மூன்று மதத்தவரும் விரும்பி சாப்பிடுவர். மாடடின் மேல் இவ்வளவு பிரியம் உள்ளவர்கள் அவர்களிடம் விற்பவர்களை தடுத்து தங்கள் பொறுப்பிலேயே பராமரிக்க வேண்டும். பணம் கொடுத்து வாங்கி வியாபாரம் செய்யும் ஒருவனை புனிதம் என்ற பெயரில் தடுப்பது என்ன நியாயம்?

மொத்தத்தில் சமூக நடப்புகளை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறார் டைரக்டர். சமூக அவலங்களை எடுத்துப் போடுவதோடு, அதை மாற்றுவதற்கு என்ன தீர்வு என்ற படிப்பினையையும் சேர்த்து சொல்லியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இதை அடுத்த படத்தில் எதிர்பார்ப்போம்!

21 comments:

Raja said...

எங்க போனாலும் குரனோட தான் போவிங்கள....காமல கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ன்ற மாதிரி எல்லாத்தையும் குரான் கண்ணோட்டோதொட பாத்தீங்கன்ன எல்லாமே தப்பதான் படும்...பாலா என்ன அவன் இவன் படத்த "referred from kuran " அப்படின்னு போட்ட எடுதுருக்கரு ....வினவு எப்படி எல்லாத்தையும் கம்யுனிசம் கண்ணோட்டோதொட பாக்குதோ அதே மாதிரி நீங்க எல்லாத்தையும் குரோன் கண்ணோட்டோதொட பாக்குறீங்க.....திருந்துங்க சாமி....

suvanappiriyan said...

ராஜா!

//காமல கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ன்ற மாதிரி எல்லாத்தையும் குரான் கண்ணோட்டோதொட பாத்தீங்கன்ன எல்லாமே தப்பதான் படும்...//

தண்ணியடிக்கிறதையும் திருடுவதையும் தவறு என்பதை எல்லோருமே ஒத்துக் கொள்வார்களே!

//....வினவு எப்படி எல்லாத்தையும் கம்யுனிசம் கண்ணோட்டோதொட பாக்குதோ அதே மாதிரி நீங்க எல்லாத்தையும் குரோன் கண்ணோட்டோதொட பாக்குறீங்க.....திருந்துங்க சாமி....//

நான் திருந்தனுமா! கொடுமடா சாமி! ஆலோசனைக்கு நன்றி!

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரரே மாஷா அல்லா உங்களுக்கு சினிமா பார்க்க நேரம் இருக்கிறது////
அவர்களிடம் போய் நல்லதை எதிர்பார்க்கலாமா

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ. பேட்!

//சகோதரரே மாஷா அல்லா உங்களுக்கு சினிமா பார்க்க நேரம் இருக்கிறது////

நேரம் எனக்கு மிகவும் குறைவு நண்பரே! ஓய்வு நேரத்தையும் பதிவு எழுத பயன்படுத்திக் கொள்கிறேன்.

ஒரு வருடத்துக்கு பிறகு நேற்றுதான் தமிழ் சினிமா 'அவன் இவன்' பாரத்தேன். அதுவும் பாலாவுக்காக! ஏனெனில் சமூக அவலங்களை அழகாக திரையில் கொண்டு வருவார். பலரையும் சென்றடையும் சினிமா என்ற ஊடகம் தவறானவர்களின் கைகளில் சிக்குண்டுள்ளது.

Anonymous said...

கேரளாவில் குடிப்பதற்காக மனைவியை விற்ற கணவர் கைது: வாங்கி கற்பழித்தவருக்கு வலைவீச்சு!

புதன்கிழமை, ஜூன் 29, 2011, 10:30 [IST]

திருவனந்தபுரம்: கேரளாவில் மது அருந்த பணம் இல்லாததால் தனது மனைவியை ரூ. 15 ஆயிரத்திற்கு விற்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் நீலேஷ்வரத்தை அடுத்த கோயித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். ரப்பர் வெட்டி எடுக்கும் பணியை செய்து வந்தார். இவருக்கு குடிப் பழக்கம் உண்டு. இவருக்கும் சோயாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் பிரியா தனக்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து ஹோஸ்துர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் எனது கணவன் திருமணம் செய்த நாளில் இருந்தே என்னை உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு வழிகளில் கொடு்மை படுத்தினார்.

சமீபத்தில் மது அருந்த பணம் கேட்டு கொடுமைபடுத்தினார். பணம் கொடுக்காததால் என்னை அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கு ரூ. 15 ஆயிரத்திற்கு விற்று வி்ட்டார். இதையடுத்து மனோஜ் என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2011/06/29/man-held-selling-his-wife-drink-liquor-aid0091.html

.

suvanappiriyan said...

சகோ அனானி!

//சமீபத்தில் மது அருந்த பணம் கேட்டு கொடுமைபடுத்தினார். பணம் கொடுக்காததால் என்னை அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கு ரூ. 15 ஆயிரத்திற்கு விற்று வி்ட்டார். இதையடுத்து மனோஜ் என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.//

'நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிலீடங்கள், குறி கேட்பதற்கான அம்புகள் ஆகியவை அருவருப்பானதும் சாத்தனின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!'
-குர்ஆன் 5:90

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

vanjoor said...

மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் சூதாட்டத்தில் தாங்கள் ஆண்டு வந்த நாடு உட்பட அனைத்தையும் இழந்து முடிவில் தங்கள் ஐவருக்கும் ஒரே மனைவியான பாஞ்சாலியை பிணை வைத்து சூதாடி தோற்றனர்

.

suvanappiriyan said...

//மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் சூதாட்டத்தில் தாங்கள் ஆண்டு வந்த நாடு உட்பட அனைத்தையும் இழந்து முடிவில் தங்கள் ஐவருக்கும் ஒரே மனைவியான பாஞ்சாலியை பிணை வைத்து சூதாடி தோற்றனர்//

கடவுளே சூதாடியதால் தவறை கண்டித்து ஏன் பதிவிடுகிறீர்கள் என்று சகோ ராஜா கேட்டாரோ? என்னையும் திருந்த சொல்லியிருக்கிறார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. வாஞ்சூர்பாய்!

ஷர்புதீன் said...

:-)


(மேலே உள்ள சுமைலி படம் போட்டால், படித்தேன் சென்றேன் என்று அர்த்தம். கிண்டல் செய்தேன் என்று அர்த்தம் இல்லை. எதற்கும் சொல்லிவைப்போம் என்று தோன்றியது சொல்லிவைத்துவிட்டேன்.)

suvanappiriyan said...

//எதற்கும் சொல்லிவைப்போம் என்று தோன்றியது சொல்லிவைத்துவிட்டேன்.)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷர்புதீன்!

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

பல புதிய தகவல்களுடன் கூடிய இடுகை.

//திருக்குறள் என்பது சமண நூலானாலும், அது நம் நாட்டு முன்னோரால் எழுதப்பட்டது//

சமணர்கள் நாத்திகத்தை பரப்பியதாக நாம் படிக்கிறோம். அதே சமயம் திருவள்ளுவர் சமண முனிவர் என்ற செய்தியும் வருகிறது. அவரது செய்யுளில் பல இடங்களில் இறைவனை போற்றி பாடல்கள் வருகின்றன.

'அகர முதல எழுத்தெல்லாம்.....'

'இறைவன அடி சேராதார்.....'

இதனால் ஒன்று சமணர்கள் நாத்திகர்கள் அல்ல என்று பொருள் கொல்லலாம். அல்லது திருவள்ளுவர் சமணராக இருக்க முடியாது. அல்லது இஸ்லாத்தைப் போல் பகுத்தறிவோடு கூடிய இறைக் கோட்பாட்டை போதித்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு. அதாவது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' - சித்தர்கள் இது போல் இரண்டையும் ஒன்றாக்கி தந்தவர்களாகவே நான் சமணர்களைப் பார்க்கிறேன்.

இது என்னுடைய கருத்தே!

//இக்குறளில் “நூலோர்” என்பது யாரைக் குறிக்கிறது எந்த குறளின் கருத்தையும் அறியும் முன் அக்குறள் எந்த அதிகாரத்தில்
கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.//

சரியான வாதம்! ஆனால் இதே கருத்தை 'கொல்லுங்கள், வெட்டுங்கள்' என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டு வன்முறையை போதிக்கிறது குர்ஆன் என்று முன்பே நீங்கள் பதிவிட்டிருக்கிறீர்கள். அவை எல்லாம் போர்க்களத்தில் சொல்லப்பட்டவை என்று சொன்னாலும் பலர் ஒத்துக் கொள்வதில்லை.

குறளுக்கு ஒரு நீதி குர்ஆனுக்கு ஒரு நீதியா! :-(

திருத்தம்:

1.//மலையாளத்தில் தணுக்கு என்றப் பதம் குளிரைக் குறிக்கிறது//

மலையாளிகள் குளிருக்கு தணுப்பு என்றுதான் பயன்படுத்துவார்கள்.

2.//தண்மை என்றால்//

தன்மை என்றால்

நன்றி!

VANJOOR said...

அவன்.. இவன்.. எவனாக இருந்தாலும் திரைப்படங்களில் பார்ப்பனீயத்தைத் தான் தூக்கிபிடிக்கிறான். இதற்கு ஆதாரம் தான் சமீபத்தில் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் – இவன்’ திரைப்படம். இத்திரைப்படம் மூலம் பாலாவும் தான் யார் என்று மக்கள் முன் காட்டுகிறார். காட்டுவது மட்டுமல்ல பார்ப்பனீய தர்மத்தை பாபா ராம்தேவ் பாணியில் போதிக்கிறார். சினிமாத்துறையில் வெகுசிலர் தவிர பலர் எடுக்கும் திரைப்படங்களைத்தவிர தெரிந்தோ தெரியாமாலோ பார்ப்பனீயக் கருத்துக்கள் எட்டிப்பார்க்கின்றன. சிலப்படங்களில் பார்ப்பனீயக் கருத்துக்கள் விஸ்வரூம் கூட எடுத்து இருக்கும்

அதற்கு காரணம், இயக்குனர்களுடைய வாழ்க்கையில் கலாச்சாரத்தில் பார்ப்பனீயமும் இயல்பாய் கலந்து இருப்பது தான். இயக்குனர்களும் இந்த சமூகத்தின் அங்கம் தானே! சமூகத்தை பிடித்திருக்கும் நோய் இவர்களையும் பீடித்திருக்காதா என்ன!

இந்து மதம் கற்றுக்கொடுக்கும் பார்ப்பனீயத்தை கசடற கற்று அதற்கேற்ப தகுந்தார்போல் நிற்க என்று திருக்குறள் படித்த தமிழர்களும் விதிவிலக்கல்ல.

பாரத மணித்திருநாட்டில் இந்து மதம் என்னும் தாய் ஊட்டும் க(ள்ளி)லைப் பாலில் சாதியும் கலந்திருக்கிறது. அதைக் குடித்து வளர்ந்து, திரைத்துறைக்கு வந்து படம் எடுக்கும் கலைஞர்களின் திரைப்படங்களில் பார்ப்பனீயம் அழகாகவும் ஒருவித கலையாகவும் வருணிக்கப் பட்டிருப்பதில் நமக்கு ஆச்சரியம் இருக்கப்போவதில்லை.

ஆனால் ‘கடவுள் மறுப்பு’ ‘நாத்திகம்’ என்று பேசும் நாத்திகவாதிகள் கூட பார்ப்பனீயத்தை தனக்கேற்றார்போல் தன்னுடைய நலனுக்காக கடைப்பிடிப்பது தான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

அப்படிப்பட்ட கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை தான் இப்படத்தில் அரங்கேற்றியிருக்கிறார் இயக்குனர் பாலா.

“பீ தின்னச் சொன்னாலும் தின்றேன்..” “எனக்கு மாவு மாவாப் போகுதும்மா..” “பொம்பளைங்க பேண்டுக்கு சிப் இருக்குமா இருக்காதா” போன்ற வசனங்களை பேசவைத்த பாலாவுக்கு கள்ளர் சாதியினரின் ஆதிக்க சாதிவெறியைப்பற்றி வசனம் பேசவைக்க முடியுமா? ஒருவேளை அது கதைக்கு தேவையற்றதாக. இருக்கலாம். தேவையென்னவோ அது மட்டுமே இடம்பெறும் ‘பீ’ யைப்போல. இல்லையா பாலா?

SOURCE:‘அவன் – இவன்’ திரைப்படம் ஒரு பார்வை!

.

VANJOOR said...

அதுமட்டுமல்லாமல் இன்னொரு விஷமத்தனமாக கருத்தையும் புகுத்துகிறார். அதாவது மாடுகளின் புனிதத்தைப் பற்றி பேசி பார்ப்பனீயக்கருத்தை போதித்திருக்கிறார்.

பாபா ராம்தேவ் சீடராக பாலா எப்ப மாறினார்னு தெரியல.

சில தினங்களுக்கு முன்னால் பாபா ராம்தேவ் சென்னையில் யோகா பயிற்சி சொல்லித்தரும் போது பயிற்சிக்கு வரும் மக்களுக்கு மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது; மாடு புனிதம் என்னும் சனாதன இந்து மதக்கருத்தை போதித்தார்.

அந்த இடங்களில் பெரியார் திராவிடர் கழகத்தினர் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டு அவருடைய பார்ப்பனீய பிரச்சாரத்திற்கெதிராக போராட்டம் செய்தனர். போராட்டம் செய்தவர்களை காவல் துறை கைது செய்தது.

ராம்தேவ் வெட்டவெளிச்சமாக பார்ப்பனீய தர்மத்தை நிலைநாட்டுவதிலும் அதை போதிப்பதிலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அவர் இந்துத்வா கும்பலைச்சார்ந்தவர்.

ஆனால் “எத்தனை நாள் நாங்க உங்களை கும்பிடுறேன் சாமின்னு சொல்றது” என்றும், சிவனை கலாய்த்தும் வசனங்களை பேச வைத்த பாலா மாடுகளைப்பற்றி புனிதமாக சித்தரித்தப்பதில் தான் அவருடைய உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது.

இந்தப்படத்தில் மாடுகளுக்கு பதிலாக ஆடுகளையோ கோழிகளையோ காட்டியிருக்கலாமே! அதில் ஏதேனும் பிரச்சனையிருக்கிறதா?

“ஏதோ மாடு என்று எதேச்சையாக காட்டியிருக்கிறார். அதை இப்படி குறிப்பாக விமர்சிக்கத்தேவையில்லையே” என்று நீங்கள் கருதலாம். இது ஏதோ எதேச்சையாகவோ தற்செயலாக எடுக்கப்பட்ட காட்சியோ அல்ல.

பாலாவின் எண்ணத்தில் அவர் கருத்தில் என்ன இருக்கிறதோ அது தான் காட்சியாக வருகிறது.

சமூகத்தில் சாதிவெறியர்களின் பற்றிய கருத்து என்னவாக இருக்கிறதோ அது தான் இந்தப்படத்திலும் பிரதிபலிக்கிறது.

“ஒவ்வொரு சொல்லிற்கும் செயலிற்கும் பின்னே ஒரு வர்க்கமும் வர்க்க நலனும் ஒளிந்து கொண்டிருக்கிறது” என்றார் காரல் மார்க்ஸ்.
SOURCE:‘அவன் – இவன்’ திரைப்படம் ஒரு பார்வை!

VANJOOR said...

பாலாவின் படத்தின் மூலம் அவருடைய வர்க்க நலனும் சாதிய நலனும் தெளிவாய் தெரிகிறது.

இந்தப்படத்தில் மட்டுமல்ல, ‘நான் கடவுள்’ படத்தில் கூட “மாட்டுக்கறி சாப்பிட்டாலும் புத்தி நல்லா வேளை செய்யுது” என்கிற வசனம் இடம் பெற்றது.

இந்த வசனம் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துகிறது என்பதை நிரூபிக்க பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை.

போன படத்தின் நீட்சியாகத்தான் ‘மாடுகளே புனிதம்’ என்கிற பார்ப்பனீயக் கருத்தை இந்தப்படத்தில் திணிக்கிறார் பாலா.

இது மாட்டுக்கறி உண்ணும் மக்களை கேவலமாக பார்க்கும் பார்வையை தான் அளிக்கும். அப்படியெல்லாம் இல்லையென்கிறீர்களா?

உங்கள் வீட்டில் அசைவம் சமைத்து உண்ணும் பழக்கம் இருந்தால் உங்கள் வீட்டில் மாட்டுக்கறியையும் ஒரு அசைவமாக கருதி வீட்டில் சமைத்து சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா?

இல்லையெனில் அந்த காரணத்தை உங்கள் வீட்டில் கேட்டுப்பாருங்கள்.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால் பசு இந்துக்களுக்கு புனிதம் அதனால் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்.

சரி. சேவல் கூடத்தான் முருகனுக்கு ஏற்றது. ஆனால் சிக்கன சிக்கன் 65 சிக்கன் பக்கோடா சிக்கன் லாலிப்பாப் என்று முக்கு முக்குனு முக்குராங்களே ஏன் என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்?

படித்தவர்கள் அறிவியல் ரீதியாக காரணம் சொல்வார்கள். அதாவது மாட்டுக்கறி சாப்பிட்டால் வியர்வை துர்நாற்றம் வீசுமாம். சரி எந்தக் கறி சாப்பிட்டால் வியர்வை மல்லிப்பூ மாதிரி மணக்கும் என்று கேட்டால் பதில் சொல்வார்களா?

வியர்வை என்றாலே துர்நாற்றம் வீசத்தான் செய்யும்.
ஆக இவர்கள் சொல்லும் காரணங்கள் அனைத்தும் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்னும் முன்னோர்கள் விதித்த முன்முடிவிலிருந்தே தான் சொல்வார்கள்.

உண்மையான காரணத்தை அம்பேத்கர் தன் ஆய்வில் சொன்ன பவுத்தத்துக்கும் பார்ப்பனீயத்துமாக போராட்டத்தை படித்தால் தான் தெரிந்துகொள்ள முடியும்.

மாட்டுக்கறியை உண்ணும் மக்களை உங்கள் வீட்டிலுள்ளவர்கள் என்ன கருதுகின்றனர் என்பது தெரியுமா உங்களுக்கு? அவர்களை இழிவான மக்களாகத்தான் பார்க்கிறார்கள்.

இதை எதிர்த்து தான் பெரியாரும் “வளர்ந்த ஆடு தான் மாடு. மாட்டுக்கறி சாப்பிடுவதில் தப்பில்லை” என்றார்.

மாட்டுக்கறி சாப்பிட்டால் ச்சீ.. என்று பார்க்கும் பார்வையானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான ஒரு சாதி இந்துவின் மனோபாவமே தவிர வேரெதுவும் இல்லை.

அப்படிப்பட்ட கருத்தைத் தான் மாடுகளை லைசென்ஸ் இல்லாமல் விற்பனை செய்யும் கதாப்பாத்திரம் வாயிலாக காட்டுகிறார் பாலா.

கையில் சவுக்கு கயிறுகள் என்னும் அடையாளம் வைத்து சாலையில் மாட்டுவண்டி வைத்து லோடு வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட நபரை ஞாபகப்படுத்துகிறார் பாலா.

அதுவும் கொடூரமாக கொலை செய்யும் கொலையாளியைப்போல!

கள்ளர் சாதியை சேர்ந்த ஒரு பெண் பள்ளர் சாதியை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்தால் வெட்டிக்கொல்வதோ, மரத்துடன் கட்டி வைத்தோ எரித்துக்கொள்வார்களே அந்த உண்மையையும் இந்த கற்பனையுடன் கலந்து காட்டியிருக்கலாமே!

SOURCE:‘அவன் – இவன்’ திரைப்படம் ஒரு பார்வை!

VANJOOR said...

நாத்திகவாதி பாலா தாழ்த்தப்பட்ட மக்களை அறுவருப்பாக காட்டுவதன் பொருள் என்ன?

அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை கேவலமாக பார்க்கும் கருப்புப்பார்ப்பனராக இருக்கிறார் பாலா.

தனக்கு மேலே பார்ப்பான் இருக்கக்கூடாது. ஆனால் தனக்கு கீழ் அடிமையாக தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்க வேண்டும்.

மாட்டிறைச்சி உண்ணாத ஆனால் மற்ற இறைச்சிகளை உண்ணும் சாதிஇந்து மனோபாவத்தை தான் இந்த திரைப்படம் காட்டுகின்றது.

பாலாவின் முந்தைய படங்களை வைத்து பரிசீலிக்கும் போதும் பார்ப்பனீயத்தை தூக்கிப்பிடிக்கிறார். அதே நேரத்தில் நாத்திக பஞ்ச் வசனங்களையும் வைக்கிறார்.

சுருக்கமாக சொன்னால் அவருடைய படைப்புக்கள் அனைத்தும் “கருப்பு பார்ப்பனீயம் பகுத்தறிவு பேசுகிறது” என்றே சொல்லலாம்.
- சிந்தியுங்கள்!

ஷர்புதீன் said...

//“ஒவ்வொரு சொல்லிற்கும் செயலிற்கும் பின்னே ஒரு வர்க்கமும் வர்க்க நலனும் ஒளிந்து கொண்டிருக்கிறது” என்றார் காரல் மார்க்ஸ்.//

இந்த வாக்கியத்தில் காரல் மார்க்சும், உங்களது கருத்தும் , அது குறித்த எனது இந்த கருத்தும் கூட அடங்கும் என்பது எனது வாதம்!

suvanappiriyan said...

பதிவுக்கு தொடர்பாக பல சுட்டிகளை அளித்த வாஞ்சூர் அண்ணனுக்கு நன்றிகள் பல.

//இந்த வாக்கியத்தில் காரல் மார்க்சும், உங்களது கருத்தும் , அது குறித்த எனது இந்த கருத்தும் கூட அடங்கும் என்பது எனது வாதம்!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷர்புதீன்!

உங்கள் தோழன்.. வேந்தன் said...

சுருக்கமாக சொன்னால் அவருடைய படைப்புக்கள் அனைத்தும் “கருப்பு பார்ப்பனீயம் பகுத்தறிவு பேசுகிறது” என்றே சொல்லலாம்.

suvanappiriyan said...

தோழர் வேந்தன்!

//சுருக்கமாக சொன்னால் அவருடைய படைப்புக்கள் அனைத்தும் “கருப்பு பார்ப்பனீயம் பகுத்தறிவு பேசுகிறது” என்றே சொல்லலாம்.//

முதல் வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

***வாஞ்ஜுர்*** said...

அடுத்தவன் வீட்டுக்குள்ள குதிச்சு திருடறது, கழுத்தறுத்து களவாடறது, பொம்பள தாலி அறுக்கிறது, கள்ளச் சாவி போட்டு பொட்டி தொறக்கிறது… இதுபோன்ற செயல்கள் செய்கிற திருட்டு பசங்களோடு நெருக்கமா, அன்பா இருக்கிற அய்நஸ் என்று அழைக்கப்படுகிற ஜமீனுக்கு,

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வது மாபெரும் சமூக குற்றமாக தெரிவது ஏன்?

‘மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்து தவறு என்று காட்டவில்லை, அதை முறைப்படி லைசன்ஸ் வாங்கி செய்யவேண்டும். இப்படி திருட்டுத்தனமாக செய்யக்கூடாது என்பதுதான் காட்சியாக்கப்பட்டிருக்கிறது’ என்று பதில் வரலாம்.

கழுத்தறுத்து களவாடறது, பொம்பள தாலி அறுக்கிறது, அடுத்தவன் வீட்ல குதிச்சு திருடறது, கள்ளச் சாவி போட்டு பொட்டி தொறக்கிறது இதெல்லாம் முறைப்படி லைசன்ஸ் வாங்கித்தான் நடக்குது என்று நம்புகிற அப்பாவியா அய்நஸ்.

ஆட்டுக்கறி விற்பவர்களில் எத்தனைப் பேர் லைசன்ஸ் வாங்கி விற்பனை செய்கிறார்கள். இன்னும் நெருக்கிச் சொன்னால், ஆடுகளை வெட்டி தோலை உறித்து கறியாக பிரிப்பது வரை எல்லாம் சாலைகளிலேயே நடக்கிறது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழைமைகளில் வழியேற திறந்தவெளியில் புது புது ஆட்டுக்கறி கடைகளை காணலாம்.

ஆனால், இதுபோல் பகிரங்கமாக, பார்ப்பவர்கள் அருவருப்பு அடைவதுபோல் மாட்டுகளை பொது இடங்களில் வெட்டி பிரித்து இறைச்சியாக விற்பதில்லை.

அப்படியிருக்க, பாலாவின் ஜமீன் அய்நசுக்கு, மாடுகள் மேல் ஏற்பட்ட இரக்கம், ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..’ என்ற வள்ளலார் பாணியிலான உயிர்கள் மீது கொண்ட அன்பினால் அல்ல,

ஒரு ஜாதி இந்துவுக்கு இருக்கிற மாடுகளின் மீதான புனித உணர்வும், மாடுகளை உண்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான்.

சைவம் சாப்பிடுகிறவர், அசைவ உணவை சாப்பிடுவதை எப்படி அருவருப்பாக பார்க்கிறாரோ, அதுபோலவே, ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிற ஜாதி இந்து மாட்டுக்கறி சாப்பிடுவதை அருவருப்பாக பார்க்கிறார்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் மாமிச உணவு மீதான அவர்களின் அருவருப்பை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவர்கள் மாட்டுக்கறியை அருவருப்பாக பார்க்கிற மோசடியை என்னவென்று சொல்வது?

ஆடு, கோழிகளை பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கிற உணவு பொருளாகவும், மாடுகளை புனிதமாகவும் பார்க்கிற ஜாதி இந்து மனோபாவத்தை, உலகின் எந்த நாட்டு மக்களிடத்திலும் பார்க்க முடியாது

இந்த மோசடிக்குள்தான் மறைந்திருக்கிறது தீண்டாமைக்கான மூலக்கூறு.

இதுபோன்ற ஜாதி இந்து உணர்வுதான் ஜமீன் உணர்வாகவும் வடிந்திருக்கிறது இந்த படத்தில்.

அநேகமாக எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஜாதிய அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.

விசால், ஆர்யா கதாபாத்திரங்களின் தந்தை, ‘நம்பள மாதிரி களவானி குடும்பத்துல சம்பந்தம் வைச்சாலும் வைப்பேன்..’ என்று வருகிற வசனமும்,

படம் பார்க்கிறவர்கள், ஜமீன் அய்நஸை பாளையக்கார எட்டயபுர ஜமீனாக (தெலுஙகு நாயக்கர்) நினைத்துக் கொள்ள போகிறார்கள், என்பதினால், ‘மனுநீதி சோழன், எங்க முப்பாட்டன் கானாடுகாத்தான் சேதுபதியோட சொந்த மச்சினன்’ என்ற வசனம் ஜாதி பெருமையோடு நெருக்கமாக முக்குலத்தோர் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.

இப்படி நேரடியாக ஜாதி அடையாளம் காட்டப்படாமல், குறிப்பால் ஜாதி அடையாளத்தை உணர்த்தப்பட்ட ஒரே கதாப்பாத்திரம் மாடுகள் விற்பவர்.

‘மாடுகள் இறைச்சிக்காக விற்பனை, ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் மாட்டுக்கொட்டகையிலேயே வீடு’ இந்தக் குறியீடுகள் அவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் அந்த கதாபாத்திரத்திற்கு பெயர்கூட வைக்கவில்லை.

பெயர் சொன்னால் ஒரு வேளை நேரடியாக ஜாதி அடையாளம் தெரிந்துவிடும் என்ற காரணமும் இருக்கலாம்.

ஜமீன் அய்நஸ், முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த ஒரு ஜாதி இந்து என்பதால், கள்ளர் சமுதாயத்தை நெருக்கமாகவும், மாடுகளை புனிதமாகவும், மாட்டுக்கறி விற்பனையை சமூக விரோதமாக பார்க்கிறார்.

ஆனால், இயக்குநர் பாலா அவரும் ஏன் அவ்வண்ணமே பார்க்கிறார்? அய்நசுக்கும் பாலாவிற்கும் என்ன தொடர்பு?

SOURCE : வே.மதிமாறன். 28 06 2011 .
http://mathimaran.wordpress.com/2011/06/28/411/

Raajan Raaja said...

Islam means Shanti, Peace...
Quran only speaks about Ahimsa! Read and interprete Quran with your own logic and reasons.