புதுடில்லி : மகாத்மா காந்தி நினைவிடத்தில், பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நடனம் ஆடியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "எதிர்க்கட்சி தலைவர் பதவியை, சுஷ்மா ராஜினாமா செய்ய வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
டில்லியில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ்வையும், அவரது ஆதரவாளர்களையும், டில்லி போலீசார், கட்டாயப்படுத்தி வெளியேற்றியதோடு, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பா.ஜ., சார்பில் நேற்று முன்தினம் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்ட, கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து, நடனமாடினார். இந்த காட்சி, "டிவி'யில் ஒளிபரப்பானது.
இதற்கு, காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலர் ஹரிபிரசாத் கூறியதாவது:மகாத்மா காந்தி நினைவிடத்தில், சுஷ்மா சுவராஜ் நடனம் ஆடியுள்ளார். இதன் மூலம், மகாத்மா காந்தியையும், நாடு முழுவதும் உள்ள சுதந்திர போராட்டவீரர்களையும் அவர், அவமதித்துள்ளார். எனவே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து, அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஊழலுக்கு எதிராக போராடுவதாக, பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றோர் கூறுகின்றனர். இவர்களுக்கு பின்னால், சங்க பரிவார் அமைப்புகள் உள்ளன. பிரதமர் பதவியை அடைவதற்காக பா.ஜ., தலைவர் அத்வானி அவசரப்படுகிறார். இரண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்ததை அடுத்து, ஹசாரே, ராம்தேவ் போன்றோரின் உதவியால், பிரதமர் பதவியை பெற முயற்சிக்கிறார். 120 கோடி மக்கள் சேர்ந்து தான், பிரதமரை தேர்வு செய்துள்ளனர். அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர், பிரதமரை தேர்வு செய்யவில்லைஇவ்வாறு ஹரிபிரசாத் கூறினார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறுகையில்,"தேசத் தந்தையின் நினைவிடத்தில், நடனம் ஆடியுள்ளனர். ஒரு புனிதமான இடத்தில், இப்படியா நடந்து கொள்வது' என்றார்.
காங்., செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், "மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், நடனம் ஆடியதை, சத்தியாகிரக போராட்டம் என்று எப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை' என்றார்.
சுஷ்மா மறுப்பு: இதற்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ், "தேசபக்தி பாடல்களுக்கு தான், நடனம் ஆடினேன். அதுவும், அங்கு கூடியிருந்த கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, நடனம் ஆடினேன்' என்றார்.
"என் தந்தை நன்றாக ஆடுவார்':சுஷ்மா சுவராஜ் நடனம் ஆடியது குறித்து, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, இணையதளத்தில் கூறியுள்ளதாவது:சுஷ்மா நடனம் ஆடியதை "டிவி'யில் பார்த்தேன். சுஷ்மாவை விட, என் தந்தையும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா, நன்றாக நடனம் ஆடுவார். விருந்து நிகழ்ச்சிகளில், என் தந்தை நடனமாடுவது வழக்கம். போராட்டங்களின் போது நடனம் ஆடுவது என்பது, தற்போது நடைமுறையாகி விட்டது.இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
-நன்றி தின மலர்
கோவை, ஜூன் 6: கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள காந்தி பூங்காவில், காந்தியடிகளின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதில் சிலையின் தலைப் பகுதி தனியே உடைந்து விழுந்தது.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபு, ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும்பொலிசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தில்லியில் உண்ணாவிரதத்தில் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக காந்தி சிலை உடைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அப் பகுதியில் பதற்றம் நிலவியதால் பலத்த பொலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
பூங்கா காவலாளி, அப் பகுதியைச் சேர்ந்தவர்களின் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சிலையைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக பாரதீய சேனா அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் ராஜ், நாகராஜ் ஆகியோரை பொலிசார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் வேலு என்பவரைப் தேடி வருகின்றனர்.
காந்தியை கொல்ல ஆள் அனுப்பியவர்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
1 comment:
அரசியல், அடக்கு முறைகள் எப்போதுமே புரியாத புதிராகத் தான் இருக்கிறது சகோ..
டில்லிக்கு எதிரொலியாக கோவையில் சிலை உடைப்பா..
என்ன கொடுமை இது.
Post a Comment