சிறு வயதில் நாம் பலரும் ஒரு கதையை படித்தும் சொல்லவும் கேட்டிருப்போம். ஒரு மரத்தில் ஒரு குருவி பல காலம் உழைத்து தனக்கும் தனது குஞ்சுகளுக்கும் ஒரு வீட்டைக் கட்டியதாம். சில நாட்களில் மழை காலமும் ஆரம்பமானது. அந்த வழியாக வந்த ஒரு குரங்கு மழையில் நனைவதில் இருந்து தப்பிக்க அங்கும் இங்கும் அலைந்து இலை தழைகளை தனது தலையின் மேல் வைத்துக் கொண்டு பரிதாபமாக நின்றது. இதைப் பார்த்த குருவி குரங்கின் மேல் பரிதாபப்பட்டு 'உன்னை விட சிறியவனான நான் ஓய்வுக்காக சிரமப்பட்டு ஒரு கூட்டை கட்டவில்லையா? என்னை விட பலசாலியான நீ ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளக் கூடாதா?' என்று கேட்டது. வந்ததே கோபம் குரங்குக்கு! வேக வேகமாக மரத்தில் ஏறி குருவியின் கூட்டை கலைத்து சின்னாபின்னமாக்கி அதன் குஞ்சுகளையும் அங்கிருந்து விரட்டி விட்டது.
இந்த கதை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ! தற்போதய தமிழ் இணைய தளத்துக்கு இக்கதை சரியாக பொருந்தும்.
இஸ்லாம் என்ற ஒரு அழகிய வழி முறையில் எந்த சிக்கலும் இல்லாமல் தெளிந்த நீரோடையாக தங்களின் வாழ்க்கையை முஸ்லிம்கள் அமைத்துக் கொண்டுள்ளார்கள். உலகம் முழுவதும் குர்ஆனின் கட்டளைப்படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அனைத்து முஸ்லிம்களும் மன நிறைவான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். இதை ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. குர்ஆனின் சில கட்டளைகளை நடைமுறை படுத்தி வாழும் சாமான்யனான நானே இதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
இதைப் பார்த்து பொருக்காத சில இந்து நண்பர்களும் சில கிறித்தவ நண்பர்களும் பல நாத்திக நண்பர்களும் 'நமக்கு இப்படி ஒரு தெளிவான வாழ்வு இல்லையே! நமக்கு கிடைக்காத அந்த வாழ்வு முஸ்லிம்களுக்கும் கிடைத்து விடக் கூடாது. நம் வேதங்களைப் போலவே இஸ்லாமிய வேதங்களையும் இழிவு படுத்த வேண்டும். இஸ்லாமிய தூதர் முகமது நபியை எந்த வகையிலாவது இழிவாக்க வேண்டும்' என்று திட்டம் போட்டு வேலை செய்கின்றனர்.
இன்றைய இந்தியாவில் இந்துத்வவாதிகள் சொல்வதென்ன? 'முஸ்லிம்கள் இந்திய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டால் எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.' என்பதுதான். நீங்கள் அல்லாவை வணங்கிக் கொள்ளுங்கள். அதோடு சேர்த்து ராமனையும் வணங்குங்கள். மெக்காவுக்கு போவதோடு நின்று விடாமல் காசி ராமேஸ்வரத்துக்கும் சென்று வாருங்கள். ரம்ஜான், பக்ரீத்தோடு சேர்த்து தீபாவளியையும் கிறிஸ்துமஸையும் கொண்டாடுங்கள். இதற்கு ஒத்துக் கொண்டு விட்டால் அத்வானி முஸ்லிம்களை தேசபக்தர்கள் என்று கொண்டாட ஆரம்பித்து விடுவார். இந்தியாவில் எங்கும் குண்டு வெடிக்காது. இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இந்துத்வவாதிகளாலேயே பரப்பப்படும். ஆனால் இது எந்த காலத்திலும் நடை பெறபோவதில்லை. எப்படி புத்த மதத்தையும், சீக்கிய மதத்தையும், கிறித்தவ மதத்தையும் இந்துத்வா விழுங்கியதோ அதே போல் இஸ்லாத்தையும் விழுங்க நேரம் பார்த்து கொண்டிருக்கிறது. முயன்று பார்த்து முடியாமல் போய் இன்று இக்பால் செல்வன் போன்ற ஒரு சில பதிவர்கள் அந்த முயற்ச்சியில் இறங்கியுள்ளனர்.
முகமது நபி தன்னை வரைவதை தடை செய்தார். தனது காலில் யாரும் விழுவதையும் தடை செய்தார். காரணம் ஏசு கடவுளாக்கப்பட்டது போல் தனது இறப்புக்குப் பிறகு யாரும் தன்னை வணங்கி விடக் கூடாது என்பதே! உலகில் யாரும் இதுவரை முகமது நபியின் உருவத்தை வரைந்ததில்லை. ஏனெனில் நேரிடையாக பார்த்த எவரும் அந்த நேரத்தில் வரையவில்லை. எவனோ ஒரு கிறுக்கன் வரைந்த படத்தை போட்டு 'இது தான் முகமது நபி' என்று நிறுவ முயல்கிறார். இவரது எண்ணம் ஏசுவைப் போல் இந்த படத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பத்தோடு பதினொன்றாக இஸ்லாத்தையும் ஆக்க முயல்கிறார். இந்த படத்தை பார்த்து மக்கள் முகமது நபியையும் வணங்க ஆரம்பித்து விட்டால் கிறித்தவ மார்க்கத்தைப் போல் இஸ்லாத்தையும் ஆக்கி விடலாம் என்பது பலரது எண்ணம்.
இந்த விபரீதத்தை விளக்கி பல பதிவர்களும் எதிர்ப்பு காட்டவே 'என்னை பெரிய மனிதனாக்கி விட்டீர்கள். நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் எங்கே!' என்று சிறுபிள்ளைத்தனமாக கேட்கிறார். அவர் கேட்ட அனைத்து கேள்விகளும் பலராலும் பலமுறை கேட்கப்பட்டு தெளிவான விளக்கங்களும் கொடுத்தாகி விட்டது. இஸ்லாமிய பதிவர்களின் சில பதிவுகளை பார்வையிட்டாலே அனைத்துக்கும் விடை கிடைக்கும். புதிதாக இவர் எதையும் கேட்டு விடவும் இல்லை.
நாம் எந்த பதிலைக் கொடுத்தாலும் மழுப்பி விட்டு அடுத்த கேள்விக்கு ஓடி விடுவது இவரது வழக்கம்.
அடுத்து இவர் முக்கியமாக வைத்த ஒரு கேள்வி
// மகமதுவே இறுதித் தூதர் எனவும், மேன்மையானவர் எனவும் கருதுகின்றார்கள். ஆனால் குர்-ஆன் இயேசுவைப் புகழும் அதே சமயம், தெரிந்தோ தெரியாமலோ மகமதுவை இழிவடையச் செய்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது. ஒருவேளை கிறித்தவர்கள் குர்-ஆனை மாற்றி எழுதி இருப்பார்களோ ?//
இதற்கு சிரிப்பை தவிர என்ன பதில் சொல்வது? முகமது நபி காலத்திலேயே பலர் முழு குர்ஆனையும் மனனம் செய்திருந்தனர். பலர் ஓலைகளிலும், தோல்களிலும், எலும்புகளிலும் எழுதியும் வந்தனர். வசனம் இறங்கும் போது அதை குறிப்பெடுக்க அன்று தோழர்களும் தயாராகவே இருந்தனர். உஸ்மான் அவர்களின் காலத்தில் தொகுக்கப்பட்ட இரண்டு குர்ஆனின் பிரதிகள் இன்றும் துருக்கியிலம் தாஷ்கண்டிலும் பாதுகாக்கப்படுகிறது. ஓரிருவர் அல்ல பல ஆயிரக்கணக்கான நபர்களுக்கு பரிச்சயமான குர்ஆன் கிறித்தவர்களால் மாற்றப்பட்டிருக்கமோ? என்று சிந்திப்பவர் கண்டிப்பாக மனநலம் பிறழ்ந்தவராகத்தான் இருக்க முடியும்.
ஒரு நல்லவரை, ஒரு இறைத்தூதரை கண்ணியப்படுத்துதல் எப்படி முகமது நபியை குறைப்பதாகும்? முகமது நபியே இந்த குர்ஆனை தனது சொந்த முயற்சியில் இயற்றி இருந்தால் ஏசு, ஆப்ரஹாம், ஆதம் போன்ற பல தூதர்களின் சிறப்புகள் மறைக்கப்பட்டிருக்கும். தலைமையை விரும்பும் சாதாரண எந்த மனிதரும் செய்யக் கூடிய ஒன்று தான். ஆனால் முகமது நபி அவ்வாறு செய்யவில்லை. இது ஒன்றே இது முகமது நபியின் வார்த்தையல்ல. அனைவரையும் படைத்த ஏக இறைவனின் வார்த்தை என்று விளங்குகிறது.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் அவர்களிடம் வந்து 'இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்தது மாகும்' என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் 'என்னையும் இறைவனையும் சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. இறைவன் மட்டும் நினைத்ததுதான் இது' என்று கூறினார்கள்.
ஆதாரம்: அஹமத் 1742, 1863,2430
'முகம்மதே! அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம், அல்லது அவர்களைத் தண்டிக்காமல் விடலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.'
-குர்ஆன்: 3:128
'முஹம்மதே! நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது'
-குர்ஆன்: 28:56
'தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர்(முகமது நபி) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்'
-குர்ஆன் 80:1
தனக்கு இறைத் தன்மை கொடுத்து விடக் கூடாது என்பதில் எந்த அளவு கவனமாக இருந்தார்கள் என்பதை இதிலிருந்து நாம் விளங்கலாம். தலைமையை விரும்பும் எவரும் இதை எல்லாம் தடை செய்ய மாட்டார்கள். இதை விட அதிகமாக குர்ஆனில் பல இடங்களில் முகமது நபியை கண்டித்தே பல வசனங்கள் வருகிறது. இதை எல்லாம் முகமது நபி வசதியாக மறைத்திருக்கலாம். இறை வாக்கு அனைத்தையும் உலகுக்கு சொன்னதிலிருந்து முகமது நபி இறைத் தூதர் என்பதும், குர்ஆன் இறை வேதம் என்பதும் மேலும் மேலும் நிரூபிக்கப்படுகிறது.
வேறு பல கேள்விகளுக்கும் அவ்வப்போது வந்து பதிலளிக்கிறேன்.
16 comments:
"இஸ்லாம் என்ற ஒரு அழகிய வழி முறையில் எந்த சிக்கலும் இல்லாமல் தெளிந்த நீரோடையாக தங்களின் வாழ்க்கையை முஸ்லிம்கள் அமைத்துக் கொண்டுள்ளார்கள். உலகம் முழுவதும் குர்ஆனின் கட்டளைப்படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அனைத்து முஸ்லிம்களும் மன நிறைவான வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்."
ஆமாம், அதனால் தான் அந்த மன நிறைவான வாழ்க்கை கிடைக்காத காபிர்களை வாழுந்து கெட்டு போக வேண்டாம் என்று நல்ல எண்ணத்தில் கொன்று விடுகின்றனர்.
வாழ்க அமைதி மார்க்கம்.
இதைப் பார்த்து பொருக்காத சில இந்து நண்பர்களும் சில கிறித்தவ நண்பர்களும் பல நாத்திக நண்பர்களும் 'நமக்கு இப்படி ஒரு தெளிவான வாழ்வு இல்லையே! நமக்கு கிடைக்காத அந்த வாழ்வு முஸ்லிம்களுக்கும் கிடைத்து விடக் கூடாது. நம் வேதங்களைப் போலவே இஸ்லாமிய வேதங்களையும் இழிவு படுத்த வேண்டும். இஸ்லாமிய தூதர் முகமது நபியை எந்த வகையிலாவது இழிவாக்க வேண்டும்' என்று திட்டம் போட்டு வேலை செய்கின்றனர்.
உஸ் அப்பா கண்ண கட்டுதடா சாமி. ஒரு கம்ப்யூட்டர், ஒரு ப்ளோகும் இருந்தா என்ன வேணும் நாலும் எழுதலாம் போல இருக்கு. சரி சரி நடத்துங்க
சகோ.சுவனப்பிரியன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
என்ன சொல்வதேன்றே புரியவில்லை.
மிகுந்த அயற்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
ம்ம்ம்..
15.09.2006..அன்றைய ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு பதிவிற்குறிய "ஒரு கேள்விக்கு" ஒரு இஸ்லாமிய சகோதரர் மிக அழகிய முறையில்... ஒன்பது நாள் கழித்து,
Sunday, September 24, 2006 அன்று... "நபிமார்களிடையே வேற்றுமை இல்லை" என்று கேள்விகளுக்கே வேலை வைக்காத அளவுக்கு தெளிவாக பல ஆதாரங்களுடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
இருந்தும்...
பத்து நாள் கழித்து...
Tuesday, October 03, 2006-ல்
வேறு ஒரு கிருஸ்துவ சகோதரர் இங்கே..."இஸ்லாமும் இயேசுவும்(ஈஸா நபி)" என்று ஒரு பதிவிட்டு
மீண்டும் "அதே கேள்வியை" மீண்டும் கேட்கிறார்.
அடுத்தநாளே...
அதே இஸ்லாமிய சகோதரர், சற்றும் சளைக்காமல் பொறுமையாக இங்கே அவருக்கு "நபி இயேசுவின் சிறப்புக்கு காரணம் என்ன?" என்று பதில் பதிவு போட்டு "அதே கேள்விக்கு" மேலும் நன்கு விளக்குகிறார்.
அந்த பதிவர் கிருஸ்துவ சகோ. எளிதில் விளங்கிக்கொள்கிறார்.
சரி... அது என்ன கேள்வி..?
அது என்ன பதில்..?
இக்பால் செல்வன் தன்னுடைய "புதிய கண்டுபிடிப்பு கேள்விகள்" (?!) என்று நினைக்கும் அதே கேள்விகளுக்கான விடைகள் தான் அங்கே எச்சச்சக்கம்.
"கூகிள்... யாஹூ... பிங்... இப்படி ஏதாவது ஒரு தேடுதளத்தில், நாம் எதைப்பற்றி பதிவு போட்டு இஸ்லாமியர்களை கேள்வி கேட்க உள்ளோமா அதையே அங்கே தமிழில் தட்டச்சு செய்து அறிந்து கொண்டால்... பதிவிடும்... தட்டச்சும்... பின்னூட்டமிட்டு விவாதிக்கும் காலம் நேரம் எல்லாம் விரயம் ஆகாமல் தவிக்கலாம்" ---என்று 'ஹிட்ஸ்ஃபிலியா' நோய் பீடித்திருக்கும் 'இஸ்லாமோஃபோபியா' காரர்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சம்பந்தப்பட்டவர், 'அப்போதைக்கும் இப்போதைக்கும் உள்ள வித்தியாசம்... என்ன' என்று அந்த மூன்று பதிவுகளையும், அதில் இடப்படுள்ள பின்னூட்டங்களையும் பார்வை இட்டால்... இன்றைய வித்தியாசம் 'அந்த குற்றம்' என்ன என்று மிக எளிதாக அவருக்கு விளங்கும்.
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
>>>
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. – இஸ்லாம் வாள்முனையில் பரவியதா? IN “நிலமெல்லாம் ரத்தம் " BY பா.ராகவன்.,கிழக்கு பதிப்பகம்,16/37, Karpagambal Nagaர்,Mylapore,Chennai 600 004 <<<
...
சகோதரர் சுவனப்பிரியன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹம்துலில்லாஹ்...அருமை..அருமை...
தற்போது வேறு சில தளங்களில் உரையாடலில் இருப்பதால் இன்ஷா அல்லாஹ் பின்னர் தேவைப்படின் வந்து கலந்து கொள்கின்றேன்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,
இவர்கள் விதண்டா வாதம் பேசுவதையே நோக்கமாக கொண்டவர்கள் .. என்னடா மத்த மதங்களை பற்றி பேசும் போது, இந்த மாதிரியான விவாதங்களோ, நேர்மையான பதில்களோ வருவதில்லை.. இந்த இஸ்லாமியர்கள் மட்டும் எல்லாவற்றிற்க்கும் பதில் சொல்கிறார்களே என்ற ஆதங்கம் மட்டுமே, இன்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை புகைப்படத்தில் சித்தரித்து நம்மை எரிச்சலூட்டுகிறார்கள். திருக்குரானில் நமது நாயகத்தினை பற்றிய சில வசனங்கள் அவர்கள் பார்வைக்கு.. இது செவிடன் காதில் ஊதிய சங்கு தான் என்றாலும்... :)
HIS MIRACLES
1. Living miracle: The Holy Qur’an (2:23) (17:88) (52:34)
2. Human miracle: he was the wasila (means) through whom people’s hearts were transformed (5:83)
3. Heavenly miracle: Isra’ and Mi’raj (his heavenly ascent) (17:1) (53:8-18)
4. Historic miracle: Hijra; escaped while surrounded (9:40)
5. The miracle of the Battle of Badr: Victory against all odds (3:123-125)
6. The splitting of the moon (54:1-2)
BELIEVE, HONOUR, LOVE, RESPECT AND OBEY HIM
1. Believe, honour and respect him (48:9) (61:11)
2. Love Allah and His Beloved Prophet more than anything else (9:24)
3. He is closer to the believers than their own selves (33:6)
4. Respect him (49:1-3)
5. Obey Allah (Ta’ala) and His Beloved Prophet (Sallallahu ‘alayhi wa Sallam)
(3:132) (4:13) (4:59) (4:69) (4:80) (9:71) (24:52) (24:54) (24:56) (33:71) (49:14) (64:12)
6. Follow the Commands of Allah (Sub’hanahu wa Ta’ala)
and of His Beloved Prophet (Sallallahu ‘alayhi wa Sallam) (33:36)
7. Whatever he gives you, take it (59:7)
8. The reward of believing in him (57:28)
http://www.iqra.net/verses-muhammad/
அஸ்ஸலாமு அலைக்கும்!
ராமச்சந்திரா, ஆஸிக், ஏ.ஆஸிக், வாஞ்சூர்பாய், சாப் அனைவருக்கும் நன்றி! இந்த நேரம் பார்த்து பல வேலைகளும் ஒன்றாக சேர்ந்து கொண்டது. முழுவதுமாக பதில் கொடுக்க முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது சகோ. ஆஷிக்கும், வாஞ்சூர் பாயும் அருமையான சுட்டிகளை தந்து என் வேலையை குறைத்திருக்கிறீர்கள். இறைவனுக்கே புகழ் அனைத்தும். வேலைகளை முடித்து கொண்டு மேலும் விரிவாக பதில்களோடு வருகிறேன்.
வருகை புரிந்து கருத்தைப் பதிந்த அனைவருக்கும் நன்றிகள்.
நணபர் ஜோவுக்கு நான் முன்பு கொடுத்த பதில்!
//ஆதிமனிதன் தவிர மற்றெல்லா நபிகளும் இயற்கையான முறையில் பிறந்த போது இயேசு மட்டும் விசேடமான முறையில் அன்னை மரியாளிடம் பரிசுத்தமான முறையில் பிறக்கிறார் .இறுதித் தூதர் முகமதுவுக்கே கிடைக்காத இந்த தனிச்சிறப்பை அல்லா ஈஸா நபிக்கு மட்டும் கொடுக்க வேண்டிய காரணம் என்ன ?இது பற்றி இஸ்லாத்தில் என்ன விளக்கம் சொல்லப்படுகிறது ?//
'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.'
4 : 1 - குர்ஆன்
ஏசுவின் பிறப்பை விட எந்த தாய் தகப்பனும் இல்லாமல் சுட்ட களிமண்ணால் படைக்கப் பட்ட ஆதமின் படைப்பே ஆச்சரியப் படத் தக்கதாகும். அதிலும் அவரிலிருந்தே ஏவாளையும் படைத்தது அதைவிட ஆச்சரியத்திற்குரியதாகும். இவை எல்லாம் இறைவன் தன்னால் எதுவும் முடியும் என்று மக்களுக்கு விளக்குவதற்காக இறைவன் ஏற்படுத்திய ஏற்பாடுகள். அதே போல் உலகில் அவதரித்த தூதர்களிலிருந்து அனைத்து மக்களுக்கும் தந்தை என்ற சிறப்பான அந்தஸ்தையும் ஆதம் பெறுகிறார். இது போல்அந்தந்த காலத்தில் அவதரித்த தூதர்களுக்கு சில சிறப்புகளை இறைவன் வழங்குவான் இதை வைத்து ஒரு தூதரை உயர்த்தியும் மற்றவரை தாழ்த்தியும் பேசுவது இஸ்லாத்தில் தடுக்கப் பட்டுள்ளது. 'மற்ற தூதர்களை விட என்னை உயர்த்திப் பேச வேண்டாம்' என்ற தடையையும் முகமது நபி விதித்துள்ளார்.
'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்டஇறைவனின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்.' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!.
61 : 6 - குர்ஆன்
'முகம்மதே! உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்'
4 : 79 - குர்ஆன்.
இதன் மூலம் ஏசு நாதர் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் இறைத் தூதராக அனுப்பப் பட்டார். ஆனால் முகமது நபியோ உலக முடிவு நாள் வரை மனித குலத்துக்கு தூதராக அனுப்பப் பட்டுள்ளார். உலக முடிவு நாளன்று திரும்ப பூமிக்கு வரப் போகும் ஏசு நாதரும் முகமது நபியைப் பின் பற்றி அவரை தூதராக ஏற்றுத்தான் இறக்க இருக்கிறார்கள். இதன் மூலம் உங்களின் 'அவரை விட இவர் சிறந்தவர்' என்ற கருத்தும் அடிப் பட்டுப் போகிறது.
'எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது இறைவனுக்குத தகுதியானதன்று. அவன் தூயவன்.'
19 : 35 - குர்ஆன்
இறைவனின் மகன் ஏசு என்று எண்ணுவது இறைவனின் தகுதிக்கு இழிவு என்று இறைவனே பிரகடனப் படுத்துகிறான்.
'தன் முகத்தை இறைவனுக்குப் பணியச் செய்து நல்லறம் செய்து உண்மை வழியில் நின்ற இப்றாகீமின் மார்க்கத்தைப் பின் பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? இறைவன் இப்றாகீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.'
4 : 125 - குர்ஆன்
ஏசு என்னுடைய மகன் அல்ல என்று மறுக்கும் இறைவன் ஆபரஹாம் என்னுடைய உற்ற தோழர் என்று அழைக்கிறான். இதனால் ஏசுவை தாழ்த்தியும் ஆப்ரஹாமை உயர்த்தியும் பேசலாமா என்றால் அவ்வாறு பேசுவது தவறு என்று இஸ்லாம் கண்டிக்கிறது.
'இத்தூதர்களில் சிலரை மற்றும் சிலரை விட சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு பல தகுதிகளை உயர்த்தியிருக்கிறான்.'
2 : 253 - குர்ஆன்
இதன் மூலம் சில இறைத் தூதர்களுக்கு மற்ற தூதர்களை விட சிறப்புகளை அளித்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.தூதர் சாலமனுக்கு கொடுத்த ஆட்சி அதிகாரம்,மோசேயுடன் இறைவன் நேரிடையாகப் பேசியது, ஏசுநாதர் இன்றும் உயிருடன் இருப்பது, முகமது நபி இறுதி நபியாகவும், உலக மக்கள் அனைவருக்கும் தூதராகவும் இருப்பது, ஆப்ரஹாமை தன் தோழராக்கிக் கொண்டது போன்ற சிறப்புகளைக் கூறலாம். இந்த சிறப்புகளை வைத்து ஒரு தூதரை உயர்த்தியும் மற்ற தூதரைத் தாழ்த்தியும் விவாதிப்பது பாவம் என்று குர்ஆன் பின் வருமாறு போதிக்கிறது.
'இறைவனையும், எங்களுக்கு அருளப் பட்டதையும் தம் இறைவனால் ஆப்ரஹாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகோப், மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப் பட்டதையும் மோசேவுக்கும், ஏசுவுக்கும் வழங்கப் பட்டதையும், ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப் பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம் அவனுக்கே நாங்கள் கட்டுப் பட்டவர்கள்' என்று கூறுங்கள்.
2 : 136 - குர்ஆன்.
இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று இறைவன் தடுத்துள்ளதால் அந்த தூதர்கள் எதைச் சொன்னார்களோ அதன்படி நடந்து இறைவனின் அன்பை நாம் அனைவரும் பெறுவதற்கு முயற்ச்சிப்போமாக.
இறைவனே மிக அறிந்தவன்
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
//குரான் இயேசுவின் தாயாரான மேரிக்குப் பிரத்யேகமாக ஒரு அதிகாரத்தை ( சுரா 19, ஸூரத்து மர்யம் ) ஒதுக்கி இருக்கின்றது. ஆனால் பாவம் முகமதுவை ஈன்ற தாயான அமினாவைப் பற்றி ஒற்றைச் சொல் கூட இடம்பெறாமல் போனதேன். இயேசுவின் தாயாரான மரியத்தினை உலகிலேயே உன்னதமானப் பெண் என குரான் புகழ்கின்றது, ஆனால் உலகத்துக்கே விமோசனம் அளிக்க வந்தத்தாகக் கூறப்படும் முகமதுவின் தாயாரை கழட்டி விட்டது ஏன் என்றக் கேள்வி எழுகின்றது.//
முகமது நபிக்கு இறை செய்தி வருவதற்கு முன் இறந்தவர்களின் நிலையைப் பற்றி இறைவனே அறிவான். ஆனால் ஏசுவை ஈன்றெடுத்த மேரியானவர் முஸ்லிமாக வாழ்ந்தார். இறை கட்டளைகளை செயல்படுத்தினார். ஏசு அவர்களின் தாய் வழிப் பாட்டனாரும் மேரி அவர்களின் தந்தையுமான இம்ரானின் குடும்பத்தைப் பற்றி பல செய்திகள் குர்ஆனில் வருவதால் 'இம்ரானின் குடும்பத்தவர்' என்ற ஒரு அத்தியாயமே இருக்கிறது. இவர்களின் குடும்ப செய்திகளிலிருந்து பல சட்டங்கள் முஸ்லிம்களுக்கு கிடைக்கிறது. இதன் காரணமாகவே ஏசுவின் அன்னை மேரியைப் பற்றி பல இடங்களில் குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. முகமது நபி இஸ்லாத்தை போதிப்பதற்கு முன்னால் அவரது தாய் இறந்து விட்டதால் அவரது வரலாறை தெரிந்து எந்த சட்டத்தையும் நாம் விளங்கப் போவதில்லை. அன்னை ஆமினாவைப் பற்றிய செய்தி குர்ஆனில் விடப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இறைவனே அறிந்தவன்.
நல்லடியார் said...
//இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் அல்லாஹ் தான் நாடியவருக்கு ஒவ்வொரு சிறப்பை கொடுக்கின்றான். அச்சிறப்பைப்பற்றி ஆராயும் பொழுது, அது அக்காலத்திற்கு தேவையானதாகவும் உள்ளது. அவன் போட்ட கணக்கிற்கு நாம் விளக்கம் அளிக்க முடியுமாங்க.// - அப்துல் குத்தூஸ்
சகோதரர் ஜோ,
உங்களின் கேள்வியான "இயேசு- வுக்கு இந்த தனிச்சிறப்பு என்பதற்கு இஸ்லாம் என்ன விளக்கம் சொல்கிறது ?" என்பதற்கு சகோதரர் அப்துல் குத்தூஸின் மேற்குறிப்பிட்ட விளக்கம் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆதம் நபி (அலை..) முதல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை மனிதர்களுக்கு கொண்டு வந்தவை ஓரிரைக் கொள்கையே. அவ்வாறு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக மக்களிடம் அதை எடுத்துச் செல்லும் போது, சில அற்புதங்களோடு எடுத்துச் சொல்ல இறைவன் அருளினான்.
மூஸா (அலை...) அவர்கள் காலத்தில் சூன்யம் செய்பவர்களின் ஆதிக்கம் மிகைத்திருந்த போது, அத்தகைய சூனியக் காரர்களுக்கு சவாலாக அற்புதங்களைச் செய்து காட்டினார்கள். ஈஸா (அலை...) அவர்களின் காலத்தில் மருத்துவ அற்புதங்கள் மேலோங்கி இருந்தன. இயேசுவின் பிறப்பே மருத்துவ அற்புதங்களுக்கு சவாலாக இருந்ததோடு, இயேசுவுக்கு வேறு சில நோய் தீர்க்கும் அற்புதங்களையும் இறைவன் அருளினான். அதேபோல் இறுதி நபியாக வந்த முஹம்மது நபியின் காலத்தில் கவிஞர்கள், இலக்கிய்வாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி ஓரிரைக் கொள்கை பின் தள்ளப்பட்டபோது, அன்றைய கவிஞர்களும் இலக்கியவாதிகளும் வாயடைக்கும் விதமாக எழுதப்படிக்கத் தெரியாத அச்சமூகத்தவரால் ந்ன்கு அறியப்பட்டிருந்த முஹம்மது நபி மூலம் இலக்கியச் செழுமையும், கவித்திறனும் கொண்ட திருக்குர்ஆன் எனும் அற்புத வாழ்க்கை நெறியை உலக மக்கள் அனைவருக்குமாக இறைவன் அருளினான். இதையே முஹம்மது நபி தனக்கு வழங்கப் பட்ட அற்புதமாகச் சொன்னார்கள்.
ஆக, யாருக்கு எந்த அற்புதங்களை வழங்கி மக்களை எம்முறையில் நல்வழிப்படுத்த வேண்டுமென்று இறைவன் நாடி இருந்தானோ அதன்படியே ஒவ்வொரு நபிக்கும் அற்புதங்களோடோ அல்லது இல்லாமலோ ஓரிரைக் கொள்கையை கொண்டு செல்லும் கடமை இருந்தது.
ஆதம் நபி முதல் முஹம்மது நபி வரையிலான நபிமார்கள் இறைவனால் அனுப்பட்ட தூதுவர்கள் என்று நம்புவது முஸ்லிம்களின் தலையாய கடமைகளுல் ஒன்று. ஆக, நம் நபிமார்கள் அனைவரும் சிறப்பிற்குறியவர்களே!
பி.கு: மதம் சார்ந்த ஐயங்களை தீர்க்கும் விதமாக பரஸ்பர கருத்துப் பரிமாற்ற பதிவெழுதுவது எப்படி என்று உங்களிடம் டியூசன் எடுக்க வேண்டுமய்யா!
அன்புடன்
அப்துல் குத்தூஸ் said...
1. இதில் நமக்கான பாடம் என்னவென்றால்? இறைவன் இருக்கின்றான் என்பதை அறிவதே! இந்த அறிதலின் மூலம் இறைக்கட்டளையை இவ்வுலகில் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதற்கே.
இறைவன் ஒவ்வொரு இறைத்தூதருக்கும், ஒவ்வொரு சிறப்பை தந்துள்ளான். அந்தச் சிறப்புக்களை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டுமேத் தவிர அதைக் கொண்டு இறைத்தூதர்களுக்குள் உயர்வு, தாழ்வு கற்பிக்காமல், அதில் நமக்காண பாடம் என்ன என்றுதான் ஆராய வேண்டும். அவருக்கு இல்லாதது இவருக்கு ஏன்? எனவும், இவருக்கு இல்லாதது அவருக்கு ஏன்? என்பன போன்ற ஆராய்ச்சி இன்னும் வேற்றுமையைத்தான் ஏற்படுத்தும். இதைத்தான் திருமறைக் குர்ஆன் கீழ் கண்டவாறு கூறுகின்றது:
(முஃமின்களே!)'நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்' என்று கூறுவீர்களாக. (அல்குர்ஆன் 2:136)
2:253 அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். (அல்குர்ஆன் 2:253)
வேண்டுமென்றால் இப்படி எடுத்துக் கொள்ளலாம். காலச் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பை இறைவன் கொடுத்துள்ளான்.
அப்துல் குத்தூஸ் said...
2. ஏனென்றால் ஈஸா (அலை) அவர்கள் இன்னும் இறக்க வில்லை. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம். அதே இறை நாட்டத்தால் எந்தச் சமுதாயத்திலிருந்து வெளியேறி இறைவனிடத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்களோ, அந்த ஈஸா (அலை) அவர்களின் சமுதாயத்திற்குள் ஏற்படும் போராட்டத்திற்கு தீர்வு காண நீதிமானாக திரும்பவும் அச்சமுதாயத்தினரிடத்தில் தோன்றுவார்கள். அவர்களுக்குள் நீதியை நிலை நாட்டுவார்கள். இக்கட்டம் தான் உலக இறுதிநாளுக்காண அடையாளமாகும்.
இதைத்தான் இறைவேதம் திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியும் நமக்கு கிழ்கண்டவாறு அறிவிக்கின்றது:
இன்னும் மர்யமின் குமாரரும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்குக் குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவோர் தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:157,158)
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)
''எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்து பவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்
தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) வின் அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம் ஆன்(ரலி) நூல்: திர்மிதீ.
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் அல்லாஹ் தான் நாடியவருக்கு ஒவ்வொரு சிறப்பை கொடுக்கின்றான். அச்சிறப்பைப்பற்றி ஆராயும் பொழுது, அது அக்காலத்திற்கு தேவையானதாகவும் உள்ளது. அவன் போட்ட கணக்கிற்கு நாம் விளக்கம் அளிக்க முடியுமாங்க. இதற்கு பெயர்தான் விதின்னு நாங்க சொல்லிட்டு போயிட்டே இருப்போம். :).
இறை நேசன் said...
சகோதரர் ஜோ அவர்களே,
பதிவு நன்றாக உள்ளது. உங்கள் நோக்கமும் புரிந்து கொள்ளவே என்ற உங்கள் விளக்கத்திலிருந்து அறிந்து கொண்டேன்.
தற்போதைய உலகின் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட மக்களின் தந்தையாக ஒரே நபரே(இப்ராகீம்-ஆப்ரகாம்) இருக்கும் பொழுது ஏன் இந்த குழப்பங்கள் என அடிக்கடி ஆலோசித்ததுண்டு.
சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக இவ்வளவு பெரிய பாரிய பிளவு நடைபெற்றது எவ்வாறு என்றும் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு.
போகட்டும். உங்கள் இந்த பதிவு இரு சமூகங்களிடையே உள்ள சில தவறான புரிந்து கொள்ளல்களை விலக்குமாயின் இதுபோன்ற பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இப்பதிவின் விளைவு அதுவாகவே இருக்கட்டும் என இறைவனிடம் பிரார்த்தனையும் செய்கிறேன்.
சகோதரர் நாகூர் இஸ்மாயில் கூறிய "எங்கள் நபி" என்ற வாசகத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்ன நினைப்பில் அவ்வார்த்தையை பிரயோகித்தார் எனத் தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் கேட்ட விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டதாலோ என்னமோ.
எனக்குத்தெரிந்த சில விளக்கங்களை கூறுகிறேன். கூறிக் கொள்ளும் அளவில் அதிக ஆன்மீக ஞானம் ஒன்றும் எனக்கில்லை. எனவே என் கருத்தை இறுதியாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏதாவது தவறுகள் இருக்குமாயின் அது என்னுடைய தவறான புரிந்து கொள்ளலினால் நிகழ்ந்ததாகவே இருக்கும்.
இஸ்லாத்தின் பார்வையில் நபிமார்கள் அனைவரும் சமமே. அவர்களுக்கிடையில் எவ்வித ஏற்றத்தாழ்வோ, ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர்களோ கிடையாது.
ஒவ்வொரு நபிக்கும் அவர்களின் கால சூழ்நிலைகளுக்கு தகுந்தது போல் இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பை கொடுத்துள்ளான். சிலருக்கு பறவை, விலங்குகள் பேசுவதை அறியும் ஞானம்(நபி சுலைமான்-அலைஹிஸ்ஸலாம்), சிலருக்கு ஆட்சி அதிகாரம்(நபி தாவூது-அலைஹிஸ்ஸலாம்), சிலருக்கு மந்திர தந்திர சக்தி(நபி மூஸா-அலைஹிஸ்ஸலாம்), , சிலருக்கு எவ்வித நோயையும் குணமாக்கும் சக்தி(நபி ஈஸா-அலைஹிஸ்ஸலாம்)என ஒவ்வொருவருக்கும் இஸ்லாத்தில் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அதனை வைத்துக் கொண்டு இவரை விட அவருக்கு அதிக சக்தி உள்ளது அவரைவிட இவருக்கு அதிக சக்தி உள்ளது என தரம் பிரிப்பது இஸ்லாத்தில் பாவமான காரியமாகும்.
இதனைக் குறித்து குர்ஆனில் "நபிமார்களிடையே எவ்வித வேற்றுமையும் இல்லை. அனைவரும் சமமானவர்களே" எனத் தெளிவாக வருகிறது.
இனி இதனை வைத்துக்கொண்டு இந்த சக்தியை இவருக்கு ஏன் இறைவன் கொடுத்தான் எனக் கேட்பது சரியல்ல. அந்தந்த கால மக்களின் சூழலுக்கேற்ப சில அற்புதங்களையும், சக்திகளையும் இறைவன் நபிமார்களுக்கு கொடுத்தது இறைவனின் மகத்துவத்தை புரியவைப்பதற்காகவே. இதில் யாருக்கு என்ன சிறப்பைக் கொடுப்பது என்பது இறைவனின் விருப்பத்தின் பாற் பட்டதாகும். தான் விரும்பியவர்களுக்கு விரும்பியது போல் செய்கிறான்.
அதனைக் குறித்து ஏன் இந்த சிறப்பைக் கொடுத்துள்ளதாக எங்காவது கூறியிருக்கின்றானா என்றால் இல்லை. அது எதனால் என்பதை இறைவன் தான் தெரிவிக்க வேண்டும். அவன் கூறாமல் வெறும் ஊகாபோகத்தை வைத்து நாமாக ஒரு முடிவுக்கு வர இயலாது.
நபி ஈஸா(அலை) அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கும் சில அற்புதங்களையும் சக்திகளையும் இறைவன் வழங்கியிருந்தான். ஆனால் அவர் மரணித்து திரும்ப வருவார் என்ற நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. எனவே அதனை ஒரு சிறப்பாகவும் இஸ்லாம் கூறவில்லை. ஆனால் அது இறைவனால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை.
தான் அனுப்பிய தூதரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவரை கொலை செய்ய முயன்ற போது இறைவன் அவரை தன் புறத்தில் உயர்த்தி பாதுகாத்துக் கொண்டான். இவ்வுலகில் பிறந்தவர் அனைவரும் மரணித்தே ஆக வேண்டும் என் ற நியதிக்கேற்ப(இல்லையெனில் மரணத்தீர்ப்பு நாள் நிகழாது) உலகின் இறுதி நாட்களின் போது நபி ஈஸா(அலை) இவ்வுலகிற்கு திரும்ப வருவார்கள்(பிறப்பார்கள் அல்ல), வாழ்வார்கள், மரணிப்பார்கள். இதுவே இஸ்லாத்தின் நிலைபாடாகும்.
அன்புடன்
இறை நேசன்
குருவிக் கதையை வைத்து ஒரு உள்குத்துப் பதிவு போட்டிருக்கீங்க...
ஹா...ஹா....
சகோ. சுவனப்பிரியன்,
நபி (ஸல்) அவர்களின் தந்தையோடு உடன் பிறந்த சகோதரர்களுள் ஒருவன், நபிக்கு எதிரியாகவே வாழ்ந்து இறந்தான். அவன் பெயர் (அபூலஹப் என) இறைமறையில் இடம்பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களுக்குத் தம் வாழ்நாள் முழுதும் ஆதரவளித்த அபூதாலிபின் பெயர் இறைமறையில் இடம்பெறவில்லை.
இறைமறையில் பெயர் இடம்பெற்றவர் உயர்ந்தவர்; இல்லையெனில் தாழ்ந்தவர் எனக் கூறும் கருத்துக் குருடனுக்கெல்லாம் பதில் பதிவு போட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்.
"நானே உயர்ந்த கடவுள்" எனச் சொல்லிக் கொண்ட ஃபிர்அவ்னின் பெயர் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. எனவே, ஃபிர்அவ்ன் சிறந்தவனா?
அன்னை மர்யத்தின் பெயரைத் தன் மறையில் இடம்பெறச் செய்வதும் ஆமினாவின் பெயரை விடுவதும் அவனுடைய உரிமையல்லவா? அதற்கு நீங்களெல்லாம் ஏன் விளக்கம் சொல்லப் புறப்படுகின்றீர்கள்? அவனுடைய உரிமையில் ஏன் தலையிடுகின்றீர்கள்?
தனக்குக் கட்டற்ற கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்று கூறுபவன், குர்ஆனை அருளிய அதன் ஆசிரியனுக்குரிய உரிமையை மறுக்க முயல்வது சரியா? என்பதைச் சிங்கி அடிப்பவர்கள் சிந்தித்துக் கொள்ளட்டும்.
சகோ. நிரூபன்!
//குருவிக் கதையை வைத்து ஒரு உள்குத்துப் பதிவு போட்டிருக்கீங்க...
ஹா...ஹா....//
உள் குத்து வெளிக் குத்து எல்லாம் இல்லை சகோ. முகமது நபியின் பட விவகாரத்தை சாதாரணமாக விட்டு விட்டு சென்று விடலாம். இதே போன்று பல உன்னத வேதங்களுக்கு சொந்தமான இந்து மதமும், கிறித்தவ மதமும் அதன் பொழிவை இழந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள். இரண்டு மதங்களிலும் எண்ணிலடங்கா நாத்திகர்கள் உருவாக என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா?
மனிதனின் மனம் போன போக்கில் இறை வேதங்களிலும் இறை தூதர்களிலும் நமது கருத்துகளை திணித்தால் சிறுக சிறுக உண்மை வெளியேறி விடும். கடவுளின் தூதரான ஏசு இன்று கடவுளாக்கப்ட்டது ஏசு நாதரை சிலையாகவும், உருவப் படங்களாகவும் வரைந்து மரியாதை செய்ததுதான். இன்று திருவள்ளுவரை 'அய்யன் திருவள்ளுவர்' என்று பகுத்தறிவாதியான கலைஞரே சொல்லும் அளவுக்கு இருக்கிறது. இன்னும் சில நாட்களில் திருவள்ளுவரும் கடவுளாக்கப்படலாம்.
இது போன்ற தவறுகளை ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் விட்டதன் பலனை இரண்டு மதங்களும் அனுபவித்து வருகின்றன. இது போன்ற நிலை இஸ்லாத்துக்கும் வந்து விடக் கூடாது என்பதுதான் நமது கவலை.
அது அல்லாமல் இக்பால் செல்வன் போன்றோர் பதிவு எழுதி பெரிய மாற்றத்தை கொண்டு வருவாரோ என்ற எச்சரிக்கை உணர்வு அல்ல. நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் இவரை விட அதிகம் இஸ்லாத்தை விமரிசித்தவர்கள். ஏதும் மாற்றங்களை ஏற்படுத்த முடிந்ததா? இஸ்லாம் தனது வழியில் தெளிந்த நீரோடையாக தன் வழியில் சென்று கொண்டிருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@சுவனப்பிரியன்
குருவிக்கதை அதைத் தொடர்ந்த
//இஸ்லாம் என்ற ஒரு....
.................
அந்த முயற்ச்சியில் இறங்கியுள்ளனர்// வரையுள்ள தங்கள் கருத்துக்கள் சரியல்ல. பின்னூட்டங்களில் தாங்கள் அளித்து இருக்கும் பதில்களில் உள்ள தெளிவும் நிதானமும் இந்த பதிவில் இல்லை. மேலும் இக்பால் செலவனின் கேள்விகளுக்கு ஏற்கனவே தங்களின் பழைய பதிவுகளில் பதில் இருந்தால் சுட்டி கொடுத்தலே அல்லது மீள் பதிவு செய்தலே போதுமானது. சுருங்கச் சொன்னால் இந்த பதிவே தேவையற்றது.
-- அஹ்மத்
Post a Comment