கோயிலில் வழிபட வந்த அருந்ததியர் சமூக மாணவர்கள் விபூதியைத் தொட்டதால் தாக்கிய பார்ப்பன அர்ச்சகர் ஜம்புநாதன் (49), அவரது மகன் சுகவனம் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். ஆனால் தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்யாமல், மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் (பிரிவு 294பி), தாக்கியதாகவும் (பிரிவு 32) காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேட்டுப்பாளையம் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மற்றும் சாதி ஒழிப்பு முன்னணித் தோழர்கள் இதில் தீவிரமாக செயல்பட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பதில் முனைப்பாக செயல்பட்டுள்ளனர்.
கடந்த 28 ஆம் தேதி காலை மேட்டுப்பாளையத்தில் கூட்டுறவு காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் பிளஸ் 2 படித்துள்ள வினித் (17), அவரது தங்கை சுருதி (14), உறவினர் பெண் ஜனனி (6) ஆகியோர் சாமி கும்பிடச் சென்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் வெற்றிப் பெற்ற வினித், தனது தங்கை சுருதியின் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில், தங்கைக்காக சாமி கும்பிட வந்திருந்தார். அந்தக் கோயில் மேல் தட்டுப் பகுதி மக்கள் வாழும் இடத்தில் உள்ளது. கோயிலில் அர்ச்சகர் எவரும் இல்லை. சாமி கும்பிட்ட பிறகு, கைக்கு அருகே இருந்த விபூதி தட்டிலிருந்து விபூதியை எடுத்து வைத்துக் கொண்டு, தனது தங்கையின் நெற்றியில் பூசியுள்ளார்.
அப்போது அங்கு வந்த பார்ப்பன அர்ச்சகர் ஜம்புநாதன் (49) வினித்தைப் பார்த்து, ‘நீ யாரடா? எந்தப் பகுதி?’ என்று கேட்டுள்ளார். வினித் ‘நடுவூர் பகுதி’ என்று கூறியவுடன், ‘சக்கிலியப் பயலா நீ; கோயிலுக்குள் வரவே உனக்கு உரிமை கிடையாது; விபூதி தட்டிலேயே கை வைக்கிறாயா?’ என்று கூறி அடித்தார். அப்போது அங்கே சென்ற பொது மக்கள் சிலர் பார்ப்பன அர்ச்சகர் அடிப்பதைப் பார்த்து, வேதனைப்பட்டு அடிப்பதை நிறுத்துமாறு கண்டித்துள்ளனர். அப்போது, பார்ப்பன அர்ச்சகர் மகன் சுகவனமும் ஓடி வந்து, ‘சக்கிலியப் பயலே; உனக்கு அவ்வளவு திமிரா?” என்று, கன்னத்தில் மாறி மாறி அடித்துள்ளான்.
செய்தியறிந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கழக நகர அமைப்பாளர் சந்திரசேகர் நாகராசு (மாவட்ட செயலாளர்), சண்முகநாதன் (மாவட்ட அமைப்பாளர்), பாபு மற்றும் சாதி ஒழிப்பு முன்னணியைச் சார்ந்த தோழர்கள் நாகேந்திரன், ராமச்சந்திரன், வழக்கறிஞர் அலெக்ஸ் என்கிற கிருட்டிணமூர்த்தி ஆகியோர் காவல் நிலையம் சென்று தாக்கிய பார்ப்பன அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வினித்தின் தந்தை கிருட்டிணன், வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் நடந்த சம்பவத்தைக் கேட்டு, தனது நண்பர்களுடன் நேராக காவல் நிலையம் சென்று புகார் தந்தார்.
இதற்கிடையே பார்ப்பன அர்ச்சகர்களுக்கு ஆதரவாக கோயில் நிர்வாகியாக உள்ள காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் மற்றும் கோவில் உள்ள பகுதியைச் சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகள் காவல்நிலையம் வந்து, பார்ப்பன அர்ச்சகர்கள் மீது வழக்குப் போடக் கூடாது என்று மிரட்டினர். தீண்டாமைக் குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரியார் திராவிடர் கழகம் போராட்டத்தில் ஈடுபடும் என்று கழகத் தோழர்கள் எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் தங்கவேல், தலைமை காவலர் வேலுமணி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, குற்றம் நடந்தது உண்மையே என்பதை உறுதி செய்து, பார்ப்பன அர்ச்சகரையும் அவரது மகனையும் கைது செய்து மேட்டுப் பாளையம் நகர நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் பார்ப்பன அர்ச்சகர்கள் அடைக்கப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிக்கக் கோரி கழகத் தோழர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
-நன்றி கீற்று -ஜீன் 2011
இவ்வளவு கொடுமைகளையும் அந்த மக்களுக்கு செய்கிறோம். வெறுத்துப் போய் மதம் மாறினால் அங்கும் வந்து அவர்களுக்கு பிரச்னை பண்ணுகிறோம். தாழ்த்தப்ட்ட இனத்தில் பிறந்ததற்க்காக இன்னும் எத்தனை காலம் இவர்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை!
5 comments:
சார்வாகன்!
//இது குறித்து இன்னும் தெரிந்து கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்களே தவிர யாரையும் புண்படுத்த அல்ல..//
1341. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிஸினியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிஸினியா சென்றிருந்த உம்மு ஸலமா(ரலி) உம்மு ஹபீபா(ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி(ஸல்) அவர்கள், 'அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் கப்ரின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரின் உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!" என்று கூறினார்கள்.
Volume :2 Book :23
2225. ஸயீத் இப்னு அபில் ஹஸன் அறிவித்தார்.
நான் இப்னு அப்பாஸ்(ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர்உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.
Volume :2 Book :34
......
2479. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின் உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு தீரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன. அவற்றின் மீது நபி(ஸல்) அவர்கள் அமர்வார்கள்.
Volume :2 Book :46
3351. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம்(அலை) அவர்களின் உருவப் படத்தையும் கண்டார்கள். உடனே, இந்தக் குறைஷிகளோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். (இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)" என்று கூறினார்கள்.
Volume :4 Book :60
மரம், செடி, வீடு, போன்ற மனிதர்கள் விலங்குகள் அல்லாத உருவங்களை வரைவது தடுக்கப்பட வில்லை. இஸ்லாத்தில் மதிப்பு மிக்க உருவப்படங்கள் வரைவதை முகமது நபி தடுத்ததற்கான காரணம் பின்னாளில் அந்த உருவங்களுக்கு இறைத் தன்மை கொடுக்கப்பட்டது தான். ஏசு நாதர் ஒரு தூதர்தான் என்பது அனைவருக்கும் தெரியும். மேரி அவருக்கு மட்டுமே அன்னை என்பதும் தெரியும். ஆனால் ஒவ்வொரு தேவாலயங்களின் நிலை என்ன? தேவாலயம் என்ற பெயர் போய் மாதா கோவில் என்ற பெயர் நிலை பெற்று விட்டது. இவை எல்லாம் எப்படி ஏற்பட்டது? ஏசுவையும் மேரியையும் கற்பனை படங்களாக வரைந்து மரியாதை செய்ய ஆரம்பித்து முடிவில் கர்த்தரை மறந்து விட்டார்கள். இந்த நிலை எந்த நிலையிலும் இஸ்லாத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை பின்னூட்டங்களும், இத்தனை பதிவுகளும்.
இந்து மதத்திலும் இத்தனை கடவுள்கள் எப்படி வந்தது? அரசனையும் ஊர் நாட்டாண்மையையும் வசதி படைத்த ஊர் பெரியவர்களையும் படங்களாகவும் சிலைகளாகவும் நமது முன்னோர்கள் மரியாதை நிமித்தம் செதுக்கியும் வரைந்தும் வைத்தார்கள். அதன் பலனை இப்போது நமது நாடு அனுபவித்து வருகிறது.
முகமது நபியின் அடக்கத்தலத்தில் எப்போதும் இரண்டு போலீசார் நின்று கொண்டிருப்பர். மதினாவுக்கு செல்லும் இந்திய பாகிஸ்தானிய பங்களாதேஷ முஸ்லிம்கள் பக்தி மேலீட்டால் அங்கு கைகளை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். உடன் அந்த காவலர்கள் அந்த மக்களை தடுத்து 'இங்கு பிரார்த்தனை செய்யக் கூடாது! அருகில் உள்ள பள்ளியில் சென்று இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று அவர்களை அருகில் உள்ள பள்ளிவாசலின் பக்கம் அனுப்புவார்கள்.
1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்கள்.
பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
Volume :2 Book :23
நண்பர் சுவன பிரியன்
நல்ல பதிவு,அட்டவனை பிரிவினரிலேயே அதிகம் ஒதுக்கப்படுபவர்கள் அருந்ததிய இன சகோதரர்கள்.எவ்வளவு சட்டம் கொண்டு வந்தாலும் நடைமுறை என்று வரும் போது ப்லன் அளிக்காது.மக்கள் மனதில் மற்றம் வர வேண்டும். சாதி என்பது அழியாமல் ஏற்றத் தாழ்வு ஒழியாது.
* * *
சரி நீங்கள் கூறிய விஷயத்திற்கு வருவோம்.இந்த ஹதிதுகள் எந்த நபியையோ,அவர்கள் அடக்க்ஸ்தலங்களையோ இஸ்லாமியர்கள் உருவகப் படுத்தி வணங்குவதை பாவம் என்று கூறுகின்றன.
ஆகவே திரு முகமதுவை உருவப் படமாக யாரும் சித்தரிக்க கூடாது என்று கூற இயலுமா?
விவாதம் ஒரு முடிவுக்கு வராது.அந்த விக்கிபீடியா பக்கத்திற்கு கூட திரு முகமதுவின் படத்தை நீக்க கோரி ஒரு புகார் [4.5 இலட்சம் பேர் கையோபமிட்ட] அனுப்பினர்.அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த விஷயத்தை ஒதுக்கி விட்டால் அனைவரும் இந்த விஷயத்தை மறந்து விடுவார்கள். நான் கூட இஸ்லாம் குறித்து பல விஷயங்களை படிப்பதுண்டு.அதில் சிலவற்றை மட்டுமே பதிவிட்டேன்.இப்போது கிரேக்க புராணங்கள் படிப்பதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு இதுதான்.அவ்வளவுதான்
உங்களை கஷ்டப் ப்டுத்தி இருந்தால் வருந்துகிறேன்.
நன்றி
//சரி நீங்கள் கூறிய விஷயத்திற்கு வருவோம்.இந்த ஹதிதுகள் எந்த நபியையோ,அவர்கள் அடக்க்ஸ்தலங்களையோ இஸ்லாமியர்கள் உருவகப் படுத்தி வணங்குவதை பாவம் என்று கூறுகின்றன.
ஆகவே திரு முகமதுவை உருவப் படமாக யாரும் சித்தரிக்க கூடாது என்று கூற இயலுமா?//
2225. ஸயீத் இப்னு அபில் ஹஸன் அறிவித்தார்.
நான் இப்னு அப்பாஸ்(ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர்உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.
Volume :2 Book :34
இந்த ஹதீத் நேரிடையாக உருவப் படங்கள் வரைவதை தடை செய்கிறதே!
முகமது நபி ஆப்ரஹாமின் படத்தை கஃபாவில் பார்த்து அதனை அப்புறப்படுத்த சொல்வதை ஹதீதுகளில் பார்க்கிறோம். முகமது நபியையே உருவப் படமாக வரைய ஒரு நபித் தோழர் அனுமதி கேட்டபோது அது மறுக்கப்படுகிறது. வீடுகளில் மதிப்பு வாய்ந்த பகுதிகளில் உருவப் படங்கள் இருப்பதை முகமது நபி தடுத்துள்ளார். எனவேதான் அனேக முஸ்லிம் வீடுகளில உருவப் படங்களை நீங்கள் பார்ப்பது அரிதாக இருக்கும். கஃபாவில் இருந்த ஆப்ரஹாம், இஸ்மாயீல் போன்ற இறைத்தூதர்களின் கைகளில் குறி பார்க்கும் அம்பையும் கொடுத்து வைத்திருந்தனர் அன்றைய அரபுகள். குறி பார்ப்பதற்கு எதிரான கருத்தை கொண்டிருந்த ஆப்ரஹாமின் கையில் அம்புகள் எப்படி வந்தது? மனிதனுக்கு இறை விஷயத்தில் சிறிது சுதந்திரம் கொடுத்தால் ஏசு நாதருக்கு ஏற்பட்ட கதிதான் முகமது நபிக்கும் ஏற்படும்.
நேசகுமார் முதற்கொண்டு தருமி மற்றும் உங்களின் பதிவுகள் வரை எத்தனையோ கேள்விகளை கேட்டுள்ளீர்கள். அத்தனைக்கும் பொறுமையாக பதில் சொன்ன முஸ்லிம்கள் கற்பனை படத்தை வெளியிட்டவுடன் ஏன் கோபப்பட வேண்டும். காரணம் முகமது நபியின் எச்சரிக்கையே! இந்த எதிர்ப்பு இல்லாவிட்டால் இன்னும் பல பதிவர்களும் கேவலம் ஹிட்ஸூக்காக திரும்பவும் இதே தவறை செய்ய ஆரம்பிப்பார்கள். இத்தனை எதிர்ப்புகள் வந்ததனால் இப்படி முகமது நபியை படமாக வரைவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்ற செய்தி அனைத்து பதிவர்களுக்கும் சென்று அடைந்து விட்டது. இனி அந்த படத்துக்கு எந்த மதிப்பும் இல்லை.
//விவாதம் ஒரு முடிவுக்கு வராது.அந்த விக்கிபீடியா பக்கத்திற்கு கூட திரு முகமதுவின் படத்தை நீக்க கோரி ஒரு புகார் [4.5 இலட்சம் பேர் கையோபமிட்ட] அனுப்பினர்.அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. //
இத்தனை லட்சம் பேர் தடுத்தும் அந்த படத்தை நீக்காதது விக்கி பீடியாவின் தவறல்லவா! சம்பந்தப்பட்டவர் தனது படத்தை வரைவதை தடை செய்கிறார். அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் யாரும் அவரை வரையவில்லை. எப்படி இருப்பார் என்று எவருக்கும் தெரியாத பட்ஷத்தில் மதிப்பு மிக்க ஒருவரை வேறொரு முக சாயலில் வெளியிட்டு 'இவர்தான் முகமது' என்பதுதான் ஊடக தர்மமா?
விபரம் தெரியாமல் வெளியிட்டு விட்டாலும் அதை விளக்கி எழுதியவுடன் அதனை நீக்கி விடுவதுதானே ஊடக தர்மம்!
//இப்போது கிரேக்க புராணங்கள் படிப்பதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு இதுதான்.அவ்வளவுதான்
உங்களை கஷ்டப் ப்டுத்தி இருந்தால் வருந்துகிறேன்.
நன்றி//
அறிவை தேடுவது மனிதனின் இயல்பு. ஒரு சராசரி இஸ்லாமியனை விட அதிகமாகவே இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இந்து மத வேதங்களையும், பைபிளையும் நானும் படித்து வருகிறேன். எல்லாவற்றையும் படிப்பதால் நமக்கு முடிவில் ஒரு தெளிவு கிடைக்கும். அதே போல் இந்து மதத்தில் உள்ள எத்தனையோ ஆபாசமான கதைகளை நானும் வீம்புக்கு எடுத்து போடலாம். ஆனால் அவை எல்லாம் இறைவன் சொன்ன கருத்துகள் அல்ல. பின்னாளில் மனிதர்களால் புகுத்தப்பட்டது. எனவே அவற்றை நாம் கண்டு கொள்வதில்லை.
அதே போல்தான் குர்ஆனில் இஸ்லாமிய எதிரிகளால் கை வைக்க முடியவில்லை. ஹதீதுகளில் யூதர்கள் நிறைய தங்கள் கைவரிசையை காட்டினர். இஸ்லாமியர்கள் போல் நடித்து அந்த கருத்துகளை புகுத்தினர். சுதாரித்து கொண்ட முஸ்லிம்கள் அவர்களையும் ஒதுக்கினர். அவர்களால் புனையப்பட்ட ஹதீதுகளையும் ஒதுக்கினர்.
தொடர்ந்து கேட்டு வாருங்கள். அப்பொழுதுதானே தெளிவு கிடைக்கும். நன்றி!
Post a Comment