அமரிக்காவின் இஸ்லாமிய பிரசசாரர்களில் யூசுப் எஸ்ட்ஸைப் பற்றி சொல்லியாக வேண்டும். 1944 ஆம் ஆண்டு ஜனவரியில் பிறந்த இவர் முன்னால் தேவாலய பாதிரியார். இஸ்லாமிய கொள்கைகளால் கவரப்பட்டு 1991 ல் இஸ்லாத்தை ஏற்கிறார். இதனால் இதற்கு முன் பார்த்து வந்த இசைத் தொழிலையும் விடுகிறார். நகைச்சுவையோடு மார்க்க விபரங்களை சொல்லும் அழகை நாம் ரசித்து பார்க்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் சவுதி தலைநகர் ரியாத் வந்திருந்தபோது இவரது பேச்சைக் கேட்க அனைவரும் சென்றிருந்தோம். போனவுடன் அவருக்கு கைக் கொடுத்து நலம் விசாரித்தேன். என்னைப் பார்த்தவுடன் 'இந்தியரா?' என்று கேட்டு தெரிந்து கொண்டார். முன்னால் அமைச்சர் இந்நாள் அமெரிக்காவில் பலராலும் அறியப்படும் ஒரு பிரச்சாரகர் என்ற எந்த படாடோபமும் இல்லாமல் வெகு இயல்பாக எங்களிடம் பேசியது இன்றும் நினைவுள்ளது.
1990 களில் கிறித்தவ மதத்தில் இருந்த பிடிப்பு தளருகிறது. கிறித்தவ பிரிவுக்கு அமைச்சராக இருந்ததால் அந்த மதத்தின் மீதுள்ள ஈடுபாடு குறைந்திருக்கலாம். அதன் பிறகு வியாபார நிமித்தமாக எகிப்து வந்த இவருக்கு முகமது என்ற நபரின் தொடர்பு ஏற்பட அதுவே இவர் இஸ்லாத்தை ஏற்க காரணமாகி விடுகிறது. இஸ்லாத்தை ஏற்ற இவர் அரபு மொழியை எகிப்து, மொராக்கோ. துருக்கி போன்ற நாடுகளில் சிறப்பாக கற்கிறார். அதன் பிறகு 2004 லிருந்து பீஸ் டீவியில் தொடர்ந்து இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். வேறுபல இஸ்லாமிய சானல்களிலும் தொடர்ந்து பிரசாரங்களைச் செய்து வருகிறார். அன்று இவருடைய பேச்சைக் கேட்ட போது தமிழகத்தில் முருக பக்தர் கிருபானந்த வாரியாரின் நகைச்சுவை கலந்த பேச்சைக் கேட்பது போல் இருந்தது. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை வெகு சுவாரஸ்யமாக தனது பேச்சைத் தொடர்ந்தார் யூசுப் எஸ்ட்ஸ்.
அவரது லெக்சரின் இடையில் அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் உள்ள தொடர்புகளை பட்டியலிட்டார். பல நாடுகளின் பெயர் குறிப்பிட்டு அந்தந்த நாட்டு அறிவியல் அறிஞர்கள் அறிவியல் உலகுக்கு ஆற்றிய பணிகளையும் பட்டியலிட்டார். அதே போல் சவுதிகளும் ஆராய்ந்து கப்ஸா(சவுதி பிரியாணி) வை கண்டுபிடித்துள்ளனர் என்று சொன்னவுடன் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. இதனை வந்திருந்த சவுதிகளும் கோபப்படாமல் ரசித்தனர். 'நான் ஏன் இதைச் சொன்னேன் என்றால் இதன் பிறகாவது நமது சவுதி நண்பர்கள் ஆராய்ச்சியிலும் கல்வியிலும் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதற்க்காகத்தான். உங்கள் மீதுள்ள அன்பினால்தான் கூறுகிறேன்: யாரும் தவறாக எண்ண வேண்டாம்' என்று தான் சொன்னதற்க்கான காரணத்தையும் விளக்கினார்.
மேலே நாம் பார்ப்பது ஜெர்மனியில் நடந்த ஒரு பிரசாரக் கூட்டம். ஜெர்மனியில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் சகோதரர் முன்னால் குத்துச் சண்டை வீரர் பியர்ல் ஓகல். தற்போது இவரது பெயர் அபு ஹம்ஸா! இவரும் இஸ்லாத்தை தழுவிய புதிய முஸ்லிமே! பிரசாரம் செய்பவரும் அதனை மொழி பெயர்ப்பவரும் புதிய முஸ்லிம்கள். ஆனால் புதிய முஸ்லிம்கள் என்று இவர்களைப் பார்த்து கூறமுடியாது. அந்த அளவு குர்ஆனின் வசனங்களின் மேல் ஈடுபாடும் அதனை செயல்படுத்துவதில் காட்டும் சிரத்தையும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.
பல தலைமுறைகளாக இஸ்லாத்தைப் பின்பற்றி வரும் பூர்வீக முஸ்லிம்களில் பலர் குர்ஆனின் அருமை தெரியாமல் சிலர் தர்ஹா, தாயத்து, பாத்திஹா, என்று எங்கெங்கோ அலைகின்றனர். சமீபத்தில் கூட நாகூர் தர்ஹாவில் கந்தூரி உற்சவம் நடைபெற்றது. இதற்க்கெல்லாம் என்ன ஆதாரம்? யார் சொல்லி செய்கிறீர்கள்? என்றால் எந்த பதிலும் வராது.
ஆனால் புதிய முஸ்லிம்களிடத்தில் இதுபோன்ற இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான பழக்கங்களை காண முடிவதில்லை. அவர்கள் நேரிடையாக குர்ஆனோடு தொடர்பு வைத்திருப்பதால் மூடப் பழக்கங்கள் இவர்களை நெருங்குவதில்லை.
'இறைவன் அருளியதைப் பின் பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?'
4 comments:
//அன்று இவருடைய பேச்சைக் கேட்ட போது தமிழகத்தில் முருக பக்தர் கிருபானந்த வாரியாரின் நகைச்சுவை கலந்த பேச்சைக் கேட்பது போல் இருந்தது. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை வெகு சுவாரஸ்யமாக தனது பேச்சைத் தொடர்ந்தார் யூசுப் எஸ்ட்ஸ். அவரது லெக்சரின் இடையில் அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் உள்ள தொடர்புகளை பட்டியலிட்டார்.//
இதுதான் ஷேக்.யூசூஃப் எஸ்டஸ்ஸின் தனி முத்திரை. எந்த விஷயத்தையும் நகைச்சுவையுடனும், அறிவார்த்தமாகவும் பேசுஅவ்திலும், நம்மை சோர்வடையாமல் கவனிக்க வைப்பதிலும் வல்லவர். மாஷா அல்லாஹ் :))
{
இன்னும் விட்ட பதிவெல்லாம் படித்துவிட்டேன் பாய், பின்னூட்டம் எழுதத்தான் நேரம் இருப்பதில்லை. அனைத்து பதிவுகளுக்காகவும் அல்லாஹ் உயரிய கூலியை இவ்வுலகிலும், மறுமையிலும் தந்தருள்வானாக. ஆமீன் :))
}
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
அன்புச் சகோதரர் சுவனப்பிரியன்,
// 1944 ஆம் ஆண்டு ஜனவரியில் பிறந்த இவர் முன்னால் அமெரிக்க அமைச்சர். அதுவும் கிறித்தவ பிரிவுக்கு. இஸ்லாமிய கொள்கைகளால் கவரப்பட்டு 1944 ல் இஸ்லாத்தை ஏற்கிறார்.//
//1990 களில் கிறித்தவ மதத்தில் இருந்த பிடிப்பு தளருகிறது//
தட்டச்சு பிழை உள்ளது, சரி செய்திடவும், 1991 இல் இஸ்லாத்தை ஏற்றார் சரியா ?
மாஷா அலலாஹ், சகோ யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் "PEAVE TV"இல் குழந்தைகளுக்கு நபிமார்கள் வரலாறு சொல்லிகொடுத்த விதம் மிகவும் அருமை, நேரம் கிடைத்தால் கண்டு உணரலாம்.
அலைக்கும் சலாம்!
//தட்டச்சு பிழை உள்ளது, சரி செய்திடவும், 1991 இல் இஸ்லாத்தை ஏற்றார் சரியா ?
மாஷா அலலாஹ், சகோ யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் "PEAVE TV"இல் குழந்தைகளுக்கு நபிமார்கள் வரலாறு சொல்லிகொடுத்த விதம் மிகவும் அருமை, நேரம் கிடைத்தால் கண்டு உணரலாம்.//
சரிதான் சகோதரரே! பல வேலைகளுக்கு நடுவில் பதிவுகளையும் இடுவதால் இது போன்ற கவனக் குறைவுகள் ஏற்பட்டு விடுகின்றது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன்.
//இன்னும் விட்ட பதிவெல்லாம் படித்துவிட்டேன் பாய், பின்னூட்டம் எழுதத்தான் நேரம் இருப்பதில்லை. அனைத்து பதிவுகளுக்காகவும் அல்லாஹ் உயரிய கூலியை இவ்வுலகிலும், மறுமையிலும் தந்தருள்வானாக. ஆமீன் //
பிரார்த்தனைக்கு நன்றி சகோ. அன்னு! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Post a Comment