Followers

Wednesday, June 08, 2011

கால்பந்தாட்டம் விளையாட தலை திறந்திருக்க வேண்டுமா?


கால்பந்தாட்டம் விளையாடுவதற்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதுதான் தகுதியாக இதுவரை இருந்து வந்தது. ஆனால் தற்போது ஃபிஃபாவின் ஒரு அறிவிப்பு பெரும் கண்டனத்துக்கு உள்ளாயிருக்கிறது. கால்பந்தாட்டம் ஆடுபவர்கள் இனி தலையை மூடாமல் திறந்தவாறு விளையாட வேண்டும். இந்த சட்டத்தை கடை பிடிக்காதவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள். தலையில் முக்காடிட்டு விளையாடுவது வீராங்கனைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதே பிரதான காரணம்' என்கின்றனர் ஃபிஃபா அமைப்பினர்.

2012ல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் ஜோர்டான் அணியோடு மோத விடாமல் ஈரான் பெண்கள் அணியை திருப்பி அனுப்பியுள்ளது ஃபிஃபா அமைப்பு. திறமையிருந்தும் போட்டியிலிருந்து விலக்கியதால் அந்த வீராங்கனைகள் மனம் உடைந்து கலங்குவதைத்தான் மேலே நாம் பார்க்கிறோம். இது எந்த வகை நியாயம்? உடையை தேர்ந்தெடுப்பது சம்பந்தப்பட்டவரின் உரிமையல்லவா? வீராங்கனைகளின் உயிருக்கு இதனால் ஆபத்து என்று எந்த மருத்துவராவது விளக்கியுள்ளனரா? ஒன்றும் இல்லை. விளையாட்டில் ஈடுபடும் வீராங்கனைகள் யாரிடமாவது வந்து 'எங்களுக்கு முக்காடு அணிவது விளையாட்டுக்கு சிரமமாக இருக்கிறது' என்ற கோரிக்கையாவது வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. கிரிக்கெட்டில் நமது நாட்டில் ஹர்பஜன் சிங் தலையை மறைத்து விளையாடியதில் ஏதும் சிரமம் இருப்பதாக சொல்லியிருக்கிறாரா. இல்லை.

இஸ்லாத்தை கொச்சைப் படுத்த வேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கத்தைத் தவிர இவர்களுக்கு வேறு காரணங்கள் இல்லை.

ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் செய்தியாளர்களிடம் கூறும்போது 'எங்கள் நாட்டு பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தங்களின் ஆபாசமான உடையை மற்றவர்களின் மீது திணிக்கும் சர்வாதிகார நடவடிக்கை என்றே இதனை பார்க்கிறேன். சட்டப்படி இதனை கொண்டு சென்று எங்கள் நாட்டு வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்' என்கிறார்.

'எங்களை போட்டியிலிருந்து விலக்கினாலும் எங்களின் குர்ஆன் கூறும் கட்டளைக்கு முன்னால் உங்களின் கட்டளை எங்களின் கால் தூசுக்கு சமானம்' என்று கூறும் இந்த வீராங்கனைகள் கண்டிப்பாக பாராட்டத்தக்கவர்கள். இதனால் ஒலிம்பிக்கில் மெடல் கிடைக்கும் சந்தர்ப்பம் வீணாணாலும் சொர்க்கத்தில் நிச்சயம் இவர்களுக்கு இதைவிட சிறந்த பரிசை இறைவன் தந்தருள்வான்.

சானியாமிர்ஸா முதற் கொண்டு பல வீராங்கனைகள் விளையாடும்போது விளையாட்டை விட அவர்களின் உடலை ரசிக்கத்தான் கூட்டம் கூடுகிறது. இதை இந்த ஆர்வலர்களின் வக்கிரத்தை யுடியூபில் எந்த மாதிரி போஸ்களை வெளியிடுகிறார்கள் என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

உடலை கவர்ச்சியாக காட்டினால்தான் விளையாட அனுமதிப்பேன் என்பது போட்டி நடத்துபவர்களின் வக்கிரபுத்தியையும் காட்டுகிறது. வழக்கில் வென்று ஈரானிய பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள நாமும் வாழ்த்துவோம்.

'உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை இறைவன் முழுமையாக அறிபவன்'

-குர்ஆன் 3:120

8 comments:

சக்தி கல்வி மையம் said...

சரியான வாதம்..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,
சவுக்கடியான பதிவு..!
நன்றி..!

நேற்று இந்த மேட்டரை ட்விட்டரில் விட்டேன்.. இப்படி..!

///
#FIFA
பெண்ணுரிமைக்கு எதிராக FIFA..!

ஆபாச ஆடை அணிய மறுத்த ஈரானின் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு தடை விதித்தது FIFA..!
////

இப்படி ஈரானை அனுமதித்தால் அப்புறம் எல்லா வளைகுடா நாடும் வந்துவிடும் இதேபோல விளையாட..!

இரண்டு அணியும் முழுதாக மூடிக்கொண்டு விளையாண்டால் ஸ்டேடியத்துக்கு எவனும் வரமாட்டான்... மேட்ச் பார்க்க..!

சட்டங்கள் எல்லாமே பணத்துக்காக இயற்றப்படுகின்றன...!

முன்பு எப்படியோ ஒலிம்பிக்கில் அனுமதித்தார்கள்...!

2008 பீஜிங் ஒலிம்பிக்கில் ஓடினார் பஹ்ரைனின் ருகையா முழுதாக மூடிய ஆடையுடன்...!
வென்றார் 200m தங்கப்பதக்கம்..!

(இங்கே அவர் தங்கம் வெல்லும் ஃபோட்டோவை பாருங்கள்)

அன்று மட்டும் அவர் ஓட அனுமதிக்கப்பட்டிருக்காவிட்டால்...? தங்கம் போயிருக்குமே..!

இனியாவது நடுநிலையுடன் நம் மக்கள் சிந்திக்கவேண்டும்..!

முஸ்லிம் பெண்களுக்கான உரிமையை மறுப்பதும் பறிப்பதும் எவர் என்று..?

//வழக்கில் வென்று ஈரானிய பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள நாமும் வாழ்த்துவோம்.//--வழிமொழிகிறேன்.

ஈரான் கால்பந்து அணியை குழிதோண்டி புதைத்துவிட்டு இனி சொல்வார்கள்... மேற்கத்தியர்கள்..!
"ஆபாச ஆடை அணியவிடாமல் பெண்ணுரிமையை ஈரான்தான் குழிதோண்டி புதைத்துவிட்டது" என்று..!

அந்த வாந்தியை அப்படியே விழுங்கிவந்து பதிவுகளில் கக்கி வைப்பார்கள், நா....த்திக பதிவர்கள்..! அதற்கெல்லாம் நான் மறுப்பு கமென்ட் போடுவதாக இல்லை..!

suvanappiriyan said...

//சரியான வாதம்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கருன்!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//இப்படி ஈரானை அனுமதித்தால் அப்புறம் எல்லா வளைகுடா நாடும் வந்துவிடும் இதேபோல விளையாட..!

இரண்டு அணியும் முழுதாக மூடிக்கொண்டு விளையாண்டால் ஸ்டேடியத்துக்கு எவனும் வரமாட்டான்... மேட்ச் பார்க்க..!//

ஆக... எப்படியாவது கல்லா கட்ட வேண்டும். அதில்தான் இவர்கள் குறியாக இருக்கிறார்கள். அதற்கு இடையூராக யார் வந்தாலும் உடன் தடை.

//2008 பீஜிங் ஒலிம்பிக்கில் ஓடினார் பஹ்ரைனின் ருகையா முழுதாக மூடிய ஆடையுடன்...!
வென்றார் 200m தங்கப்பதக்கம்..!//

எனவே பெண்கள் முன்னேற்றத்துக்கு இஸ்லாமிய உடை ஒரு தடை அல்ல என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

KHAN

Jun 8, 2011 12:54
Problem is not of scarf. Problem is of cast. If Christian nun wears a scarf, that is honor and dignity. If a Muslim woman wear the scarf that is threat. What a shameless and ugly argument.

GEORGE

Jun 8, 2011 12:51
@SALEH and TOUSEEF If you don't like it, tell your women not to play soccer. Nobody in the rest of the world really cares.


PEACE

Jun 8, 2011 19:04
Assalamwakaikum,

Dear Sister all will reward , dont care about this so called west and europe who ever says this kind of nonsense and unhuman rules...... they doesnt know about faith and dont care about religion just for name sake they are living on this earth as burden .... @george who the hell are you to tell whether what we like or what we not and people like you are to be ignored as you dont have any faith and if you are christian i hope u must not have read bible which say women to cover their head and wear proper clothes but you people does't care about this things you only believe in enjoyment and you will be answerable.

may allah guide us to right path and give strong iman to all muslim brothers and sisters in this world.

ameen

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,
சவுக்கடியான பதிவு..!
நன்றி..!

ஹுஸைனம்மா said...

ம்ம்.. இப்பத்தான் கொஞ்ச நாள் முன்னாடி சர்வதேச பாட்மிண்டன் அமைப்பும், பெண்கள் குட்டைப் பாவாடைதான் அணிய வேண்டும் என்று விதித்தது. எதிர்ப்புகள் வந்ததும், பரிசீலிக்கிறோம் என்று தற்காலிகமாக உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.

உடை குறித்த உத்தரவுக்கு அமைப்பு சொல்லும் காரணத்தில் ஒன்று, “அதிக விளம்பரதாரர்களைக் கவரவுமே இந்த மாற்றம்” என்பது!!

From http://www.bwfbadminton.org:
"In order to ensure attractive presentation of Badminton at tournaments"

"This specific regulation has its genesis in the extensive review into the marketing and events structure conducted by an external international marketing agency in 2009."

From http://www.nytimes.com/2011/05/27/sports/badminton-dress-code-for-women-criticized-as-sexist.html
“We’re not trying to use sex to promote the sport,” said Paisan Rangsikitpho, an American who is deputy president of the Badminton World Federation, which is based in Kuala Lumpur, Malaysia. “We just want them to look feminine and have a nice presentation so women will be more popular.”

Interest is declining, Rangsikitpho said, adding that some women compete in oversize shorts and long pants and appear “baggy, almost like men.”

“Hardly anybody is watching,” he said. “TV ratings are down. We want to build them up to where they should be. They play quite well. We want them to look nicer on the court and have more marketing value for themselves. I’m surprised we got a lot of criticism.”

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

வருகைபுரிந்து கருத்தைப் பதிந்த ரியாஸ் அகமதுக்கும், ஹூசைனம்மாவுக்கும் நன்றிகள்.