Followers

Saturday, June 25, 2011

பரிணாமவியலில் மேலும் சந்தேகங்கள்!




பரிணாமத்தின் அடிப்படை நியதியே ஒரு உயிரினம் மாற்றங்களை உள்வாங்கி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே, அந்த மாற்றங்கள் உயிரினத்தின் தக்க வைத்தலுக்கு நன்மை பயக்கும் போது அது தொடரும், அதே போல மாற்றங்கள் தேவை இல்லாத போது அது நீக்கப்படும். அதே போல மாற்றங்களை நிகழ்த்துவதாலும், மாற்றங்களை உள்வாங்குவதாலுமே இனம் விருத்தியடைந்து வருகின்றது எனலாம். பரிணாமத்தை தூக்கிப் பிடிப்போர் வைக்கும் வாதங்களே இது.

நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது. ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் காணொளியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும், மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.

ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.

மேலும் மனிதன் முன்பு நம்மைவிட உயரமாக இருந்ததற்கும் மனிதனின் கால் எலும்பு கிடைத்துள்ளது. அந்த எலும்பும் இப்போது நமக்குள்ள அதே அமைப்பில்தான் உள்ளது. பரிணாம மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அளவில் தான் சிறிதாகி இருக்கிறது.

இவை எல்லாம் என்னுடைய சந்தேகங்களே! பரிணாவியலை கரைத்துக் குடித்தவர்கள் இதற்கான விளக்கத்தைத் தருவார்கள் என்று நினைக்கிறேன்.

33 comments:

saarvaakan said...

நண்பர் சுவனப் பிரியன்,
கலக்கல் பதிவு,
இது அருமை அண்னன் ஹாருன் யாஹ்யாவின்[Adnan_Oktar] கண்டுபிடிப்புதானே.!!!!!!!!!!!!
பாருங்க காணொளியில் தெளிவாக‌ H,Y'னு அழகா பேரை இனிசியலை குறித்து வைத்திருக்கிறார். நீங்க பேரை சொல்லாமல் விடுவீங்கன்னு தெரிஞ்சு வைத்திருக்கும் சரியான் ஆள்தான் அண்னாச்சி. இதனி வழங்கிய அவருக்கு இது சம்ர்ப்பணம்.
http://en.wikipedia.org/wiki/Adnan_Oktar
அவருடைய வாழ்க்கை சரிதம் படியுங்கள்.நன்றி

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் suvanapriyan

very good article , reasonable questions?....................

saarvaakan said...

வணக்கம் நண்பர்களே,
இது அண்ணன் ஹாருண் யாஹ்யாவின் தளம்,அனைவரும் படித்து பலன் பெற வேண்டுகிறே.ஒருவரின் கருத்துகளை ஏற்பது என்றால் அவரின் அனைத்து கருத்துகளையும் ஏற்கலாம்.அல்ல ஒத்து வரும் சில கருத்துகளை ஏற்க‌லாம்.
ஒரு விஷயம் இவரிடம் பாராட்ட வேண்டும்.பிற பிரச்சாரகர்கள் செய்யாத பல விஷயங்களை அறிவியலுக்கு மதிப்பு கொடுத்து தன் பாணியில் பல் கேள்விகளுக்கு விளக்க்ம், ஆதாரம் கொடுக்கிறார்,அதில் இவரோட நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. நண்பர் பேட் இவருடைய கருத்துகளை தமிழ் மொ.பெ செய்தால் அனைவருக்கும் பணி(?) எளிதாகி விடும்.
நன்றி

http://www.harunyahya.com/

Aashiq Ahamed said...

சகோதரர் சுவனப்பிரியன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

என்னிடம் யாரும் பரிணாமம் குறித்து வாதிக்க வருவார்களேயானால் அவர்களிடம் நான் முதலில் கேட்கும் இரு கேள்விகள்,

1. பரிணாமம் உண்மையென்று வாதிக்கப்போகின்ரீர்களா?

2. முதல் கேள்விக்கு விடை "ஆம்" என்றால் என்னுடைய அடுத்த கேள்வி "பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குங்கள்?"

இந்த இரண்டு கேள்விகளை முதலில் வைக்கவே விரும்புவேன். இதற்கான பதில்களை கொண்டு வாதிப்பவரின் பரிணாம ஞானத்தை கணக்கெடுக்க பார்ப்பேன். பின்பு அதற்கேற்றார்போல என்னுடைய கேள்விகள் அமையும்.

பரிநாமவியலில் உள்ள ஓட்டைகள் என்பது கணக்கிட முடியாதது. அதனை எவரும் நிரூபிக்கவும் முடியாது. தங்கள் கற்பனைகளை கொண்டு ஏதாவது சொல்ல முயற்சிக்கலாமே ஒழியே ஆதாரங்களை காட்ட முடியாது. என்னுடைய தளத்தில் நமக்கும், பரிணாம ஆதரவாளர்களுக்கும் நடந்த விவாதங்களே இதற்கு சாட்சி.

பரிணாமத்தை புரிந்துக்கொள்ள/பரிணாமம் குறித்த உங்கள் குற்றச்சாட்டுக்கு பதிலாக இதை பாருங்கள், அதை பாருங்கள், இந்த விஞ்ஞானி அப்படி கூறிருக்கின்றார், அந்த விஞ்ஞானி அப்படி கூறிருக்கின்றார் என்று பலவித லிங்குகளை கொடுப்பார்கள்.

அங்கே சென்று படித்து பார்த்தால்/கண்டால் வெங்காய கதையாக இருக்கும். அதாவது உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது.

தங்கள் கற்பனையை கொண்டு என்னென்னமோ சொல்லிருப்பார்கள், ஆனால் ஆதாரம் மட்டும் இருக்காது.

நம் நேரத்தை வீணாக்கியவர்களை நினைத்து நொந்து கொண்டு திரும்ப வருவோம். இதுதான் தொடர்ந்து நடக்கின்றது.

இப்போதெல்லாம் பரிணாம ஆதரவாளர்களுடன் வாதிட நேர்ந்தால், அவர்கள் சுட்டியை கொடுத்தால், அவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது 'தயவுக்கூர்ந்து அந்த சுட்டியில் உள்ள மத்திய மேட்டர் என்னவென்று சுருக்கமாக நீங்களே சொல்லிவிடுங்கள். இந்த மத்திய மேட்டார்தான் நான் எதிர்பார்ப்பதாக இருந்தால் நான் அந்த சுட்டியை பார்க்கின்றேன்".

அப்புறம் மற்றொரு மிக முக்கிய விசயம். பரிணாமத்தை முளையிலேயே கில்லிவிடலாம். அதாவது, அடிப்படையிலேயே பிரச்சனைகளை கொண்டது பரிணாமம். அதனால் அதை முறியடிக்க நாம் அதிக தூரம் செல்லவேண்டியதில்லை. பரிணாம அடிப்படைகள் குறித்து கேள்விகள் எழுப்பினாலே பரிணாம ஆதரவாளர்கள் திணறுவார்கள். பதில் சொல்லுவதற்கு ஆதாரம் என்று ஒன்றும் இருக்காது.

உதாரணத்துக்கு, சமீபத்தில், பரிணாமத்தின் அடிப்படையான "பரிணாம மரத்தை" கட்டுக்கதை என்று விமர்சித்தார் பாருங்கள் வென்டர்.

இவர்களை முறியடிக்க நீங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ள தேவை இல்லை. அடிப்படையில் கை வைத்தாலே போதும்.

இன்ஷா அல்லாஹ் தொடர்கின்றேன்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தொடர்கின்றேன்...

அப்புறம் படுதமாஷ் எல்லாம் பண்ணுவார்கள் பரிணாம ஆதரவாளர்கள். உதாரணத்துக்கு ஒன்று சொல்கின்றேன் பாருங்கள்.

நான் Stephen Jay Gould மற்றும் Niles Elredge ஆகியோர் கொண்டுவந்த Punctuated Equilibrium கோட்பாடு குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அதில் சில பரிணாம ஆதரவாளர்கள் வந்து நல்ல காமெடியான வாதத்தை முன்வைத்தார்கள். அதாவது, குட் அவர்களும் பரிநாமவியலாளர்தானாம், வேறு கொள்கையை கொண்டு வந்தாராம். இதில் என்ன பிரச்சனை இருக்கின்றது என்று கேட்டார்கள்.

என்னுடைய அடிப்படை கேள்வியை நன்கு புரிந்துகொண்டே ஏமாற்றுவது போல இருந்தது அவர்களது வாதம். நான் தெளிவாகவே கூறினேன். அதாவது குட் (மற்றும் Eldredge) பரிநாமவியலாளர்கள் என்றுதான் நானும் கூறினேன். என்னுடைய கேள்விகள் வேறு. அவை இதுதான்,

1. எதற்காக தங்களுடைய கோட்பாடை கொண்டுவந்தார்கள் இவர்கள் இருவரும்? (குட் தெளிவாக நெத்தியில் அடித்தாற்போல சொன்னார் "It is gradualism we should reject, not Darwinism" - Gould, Stephen Jay 1980. "The Episodic Nature of Evolutionary Change" The Panda's Thumb. New York: W. W. Norton & Co., p. 181-182.)

2. டார்வின் சொன்ன சிறுக சிறுக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டுமென்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றுதானே தங்களுடைய கோட்பாட்டை கொண்டு வந்தனர் இருவரும். இதனை மறுக்கபோகின்றார்களா பரிணாம ஆதரவாளர்கள்?

3. Stephen Jay Gould மற்றும் Niles Elredge ஆகியோர் கொண்டுவந்த Punctuated Equilibrium கோட்பாடை கடுமையாக விமர்சித்தார்கள் நியோ டார்வினிஸ்ட்கள். அது ஏன்?

4. ஜே குட் மற்றும் அவரை ஆதரிக்கும் பரினாமவியலாளர்கள் சொல்கின்றார்கள், டார்வின் சொன்னது போல பரிணாமம் நடந்ததற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லையென்று. இதை கேட்கும் எனக்கு தோன்றுவது என்னவென்றால் "ஓஹோ, ஆதாரங்கள் இல்லையா, அப்புறம் எப்படி பரிணாமம் உண்மையாக இருக்க முடியும்?"

5. அடுத்து, ஜே குட்டை எதிர்க்கும் பரினாமவியலாளர்கள் சொல்கின்றார்கள் "ஜே குட் சொல்வது போல நடக்க வாய்ப்பில்லை" என்று. அதுமட்டுமல்லாமல், ஜே குட் கருத்துப் படி, பரிணாமம் குறுகிய காலத்தில் நடந்து, பிறகு மாற்றமடையாமல் இருப்பதால் அதற்கும் வரலாற்று ஆதாரங்கள் இல்லை. இப்போது இதை படிக்கும் எனக்கு தோன்றுவது என்னவென்றால் "ஓஹோ, அப்போ இதற்கும் ஆதாரமில்லையா?"

6. ஆக மொத்தத்தில் இருவரது கோட்பாட்டுக்கும் ஆதாரங்களில்லை (அதை அவர்களே ஒருவர் நோக்கி ஒருவர் கூறிக்கொள்கின்றார்கள்).... பிறகு எப்படி பரிணாமம் உண்மை? பிறகு எப்படி அது நடந்தது என்று தீர்க்கமாக சொல்கின்றார்கள்?

இப்படி கேள்வி கேட்டதற்கு அந்த துறைச்சார்ந்த பரிணாம ஆதரவாளர் பதிலே சொல்லவில்லை.

ஆக, இவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் கூட்டத்தினர். நான் கேட்பது என்னவென்று தெரிந்தும் திசை திருப்ப முயலும் எண்ணத்தை கொண்டவர்கள். அதனால் தான் "குட் மற்றும் Elredge" ஆகிய இருவரும் பரிநாமவியலாலர்தானே?? என்பது போன்ற தமாஷான வாதங்களை வைத்து கொண்டிருப்பார்கள்.

உள்ளே சென்று கொஞ்சம் நொண்டி கேட்டால் ஆட்கள் எஸ்கேப் ஆகி விடுவார்கள். அதற்கு அவர்கள் மேல் தப்பு சொல்லமுடியாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்???

இங்கே நான் சொல்லிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உபயோகப்பட்டால் உங்கள் வாதங்களில் சேர்த்து கொள்ளுங்கள்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

அப்புறம், அடிப்படையை பற்றி பேசுபோது, சமீபத்தில் ஒருவர் கூறிய கருத்து நினைவுக்கு வருகின்றது...

அது,

ஆரம்ப கால உலகை ஆழ்ந்து படிக்கும் போது, உயிரினங்கள் முதன் முதலாக காணப்படும் போதே முழுமையாகவும், சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. இது மிகவும் மர்மமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே, சில விஞ்ஞானிகளை, உயிர் என்பது இங்கே உருவாகவில்லை, வேறெங்கிருந்தோ பூமிக்கு வந்திறங்கியிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைக்க வைத்தது - க்றிஸ் மெக்கே, NASA Ames Research Center.

இந்த ஒரு கருத்தை மட்டும் கேளுங்கள் பார்ப்போம். அவர்கள் கூறக்கூடிய பதிலை ஜாலியா என்ஜாய் பண்ணலாம்.

இதற்கு பெயர்தான் அடிப்படையில் கைவைப்பது...

புரிகின்றதா??? ஹா ஹா ஹா

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

suvanappiriyan said...

//நல்ல சான்றோர்கள் முட்டாள்களாக்கப்பட்ட இறைப் படைப்புக் கொள்கையினால் நம்பிக்கை உடையோரோடு போராடவேண்டும். தெரிந்துக் கொள்ளுங்கள் உலகம் படைப்பட்டது இல்லை, அது காலத்தைப் போன்று அந்தமும் இல்லாதது, ஆதியும் இல்லாதது, அது கொள்கைகளின், வாழ்க்கையின், அமைதியின் அடிப்படையிலானது. அது உருவாக்கப்படவும் இல்லை, அழிக்கப்படப் போவதும் இல்லை, அது தன்னியல்பில் இயங்கி வருகின்றது.

இது தான் அந்த வரியின் அர்த்தம் சகோ ....

இது தான் எனதுக் கருத்துக்களும் ஆகும். இவை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சமணப் பெரியவர்களால் முன்வைக்கப்பட்ட கொள்கை ஆகும்... அது தான் உண்மையுமாகும்.// -இக்பால் செல்வன்
-------------------------------------------
. //அது உருவாக்கப்படவும் இல்லை, அழிக்கப்படப் போவதும் இல்லை, அது தன்னியல்பில் இயங்கி வருகின்றது. //

எல்லாவற்றிற்கும் அறிவியலை துணைக்கழைக்கும் நீங்கள் இந்த வரிகளுக்கு அறிவியல் பூர்வமான விளக்கத்தை கொடுக்க முடியுமா? -சுவனப்பிரியன்
---------------------------------------------------
//அது என்னுடைய சுயக் கருத்து இல்லை. சமண மத சாஸ்திரங்கள் கூறும் கருத்து .. அதனை அப்படியே நான் ஏற்க வேண்டும் என்றக் கட்டாயம் எனக்கில்லை .... ஆனால் அதனையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் ..//

முரண்பாடே! உனக்கு மறு பெயர்தான் நாத்திகமா? அல்லது பரிணாமக் கொள்கையா?

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

சகோ. ஆஷிக்! கணிணியில் சிறிய பிரச்னை. ஃபார்மேட் பண்ணி சரி செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

//அங்கே சென்று படித்து பார்த்தால்/கண்டால் வெங்காய கதையாக இருக்கும். அதாவது உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது.//

உங்கள் பதிவில நடந்த பல வாதங்களையும் படித்துப் பார்த்தேன். பரிணாமவியலாரின் வாதம் வெங்காயத்தின் உதாரணத்தோடுதான் ஒத்து போகிறது.

கடவுளை மறுக்க ஏதாவது ஒன்றை எடுத்துப் போட வேண்டும். அதைத்தான் அனைவரும் முழு மூச்சில் செய்து கொண்டிருக்கிறார்கள். பரிமாமவியலின் நம்பகத் தன்மையை பரிசீலிக்க உங்களின் பதிவுகளை படித்தாலே போதும்.

சிறந்த கேள்விகளை வைத்திருக்கிறீர்கள். என்ன பதில் வருகிறதென்று பார்ப்போம்.

suvanappiriyan said...

சகோ. சார்வாகன்!

//அவருடைய வாழ்க்கை சரிதம் படியுங்கள்.நன்றி//

ஹாருன் யஹ்யாவின் சரித்திரத்தைப் படிப்பதால் நமக்கு என்ன பயன்? பரிணாமத்துக்கு எதிராக அவர் வைக்கும் வாதத்துக்கான பதில்தான் இங்கு முக்கியம்.

பதிவில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன். அடுத்து சகோ. ஆஷிக்கும் சில கேள்விகளை வைத்துள்ளார். பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. பேட்!

//very good article , reasonable questions?....................//

உங்களைப் போலவே பதிலுக்கு நானும் காத்திருக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.சுவனப்பிரியன்,
மீண்டும் கேள்விகளா...?

நான் அப்போதே சொன்னேன்...
நாத்திகரிடம்/பரிணாம ஆதரவாளர்களிடம் பரிணாமம் பற்றி கேட்டால்... பதிலே வராது.

நாம் இலவு காத்த கிளி..!

ஒருவேளை பதில் சொன்னால்...

அது சார்வாகனின் "புஸ்வான பய் பய் பதிவு" போன்றோ...

இங்கேயுள்ள இக்பால் செல்வனின் பின்னூட்டங்கள் போன்றோதான் இருக்கின்றன.

ஆனால், இவர்களும் சளைக்காமல் இன்னும் டைப் அடித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

என்னத்த சொல்ல..!

எத்தனை அடி கொடுத்தாலும் சளைக்காமல் தாங்குவார்கள் போல..!

/////இது தான் எனதுக் கருத்துக்களும் ஆகும். இவை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சமணப் பெரியவர்களால் முன்வைக்கப்பட்ட கொள்கை ஆகும்... அது தான் உண்மையுமாகும்./////---இக்பால் செல்வன்

//////அது என்னுடைய சுயக் கருத்து இல்லை. சமண மத சாஸ்திரங்கள் கூறும் கருத்து .. அதனை அப்படியே நான் ஏற்க வேண்டும் என்றக் கட்டாயம் எனக்கில்லை .... ஆனால் அதனையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்////---இக்பால் செல்வன்


////முரண்பாடே! உனக்கு மறு பெயர்தான் நாத்திகமா? அல்லது பரிணாமக் கொள்கையா?////---சுவனப்பிரியன்


ஹாஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஹ்ஹாஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆஆ

என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..!

saarvaakan said...

சகோ சுவனப்பிரியன்,
ஹாருன் யாஹ்யாவின் கருத்துகளுக்கு டாக்கின்ஸ் பதில் அளித்து விட்டார். அது எனக்கு சரியாக படுகிறது.அதற்கு மேல் என்ன சொலவ்து?.யு ட்யூபில் இருக்கிறது.

பரிணாமம் மட்டுமல்ல உலகில் எல்லா கருத்துகளுமே விமர்சனம் ஆய்வுக்கு உட்பட்ட்வைகளே.கிடைக்கும் சில சான்றுகளை வைத்து பல விளக்க்ங்கள் அளிக்கப் படுகின்றன.அதில் சில ஆய்வுகளுக்கு ஒத்து வரும் கொள்கை இப்போது ஏற்கப் படுகின்றது. அதானால் பரிணாம்த்தை விட இன்னொரு கொள்கை இச்சான்றுகளை மெய்யாக்கி,இன்னும் சான்றளிக்கும் பட்சத்தில் ஏற்கப் படும்.
ஒருவேளை பரிணாமம் முற்றும் முழுதும் தவறு என்றால் எல்லா நாடுகளும் சவுதி அரசு (99% இஸ்லாமிய அரசு கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்,பரவாயில்லை மன்னிக்கவும்!!!!) போல் ஆக வேண்டுமென்பது என்பது நடக்குமா?. நான் மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன். இது குறித்த விழிப்புணர்வு வர வேண்டுமென்று விரும்புகிறேன்.எல்லாரும் மதம் விட்டு இறை மறுப்பாள‌ன் ஆக வேண்டுமென்ற கொள்கை பிரச்சாரம் செய்பவன் இல்லை. பிடிப்பவர்கள் பிறரின் உரிமைகளை பாதிக்காது பின் பற்ற வேண்டும்.
என்க்கு சரி என்று தோன்றும் கருத்தை பதிவிடுகிறேன். எதிர் கருத்துகளை பின்னூட்டம் இட்டால் தலை வணங்கி ஏற்கிறேன்.அக்கருத்து கொள்ள உரிமை உண்டு என்று அங்கீகரிக்கிறேன்.இப்படி உரிமை இஸ்லாமிய மத ஆட்சியில் பிற மதத்தவர்,இறை மறுப்பாள‌ருக்கு கிடைக்குமா?.அதற்கு மதம் தடையாக் இருப்பதலேயே இஸ்லாமை அதிகம் விமர்சிக்கிறேன். அப்போதும் சில சுய கட்டுப்பாடுகளுடன்,செய்கிறேன்.

அந்த வகையில் இந்தியா மத சுதந்திரம் அளிப்பது எனக்கு மிக பெருமையாக உள்ளது.உடனே ''அஆஇஈ' பரிணாமம் பற்றி கேட்ட‌ கேள்விக்கு பதில் சொல்லவில்லை எனவே இப்படி மழுப்புகிறார் என்பதுதானே பல பின்னூட்டங்கள்?.பரிணாம சான்றுகள் அளிக்கும் காலக் கணக்கீடு அள்வுகள் மத புத்தகங்கள் அளிப்பது இல்லை.அறிவியல் மதங்களை கண்டு கொள்வது இல்லை. மதத்தின் எதிரி அறிவியல் அல்ல,அதன் சர்ச்சைக்குறிய சட்டங்கள்.

யாஹ்யாவின் பல புத்த்கங்களை வாசித்தேன்.சரியென்று படவில்லை.பதிவிடும் அள்விற்கு தரமில்லை என்றே எண்ணுகிறேன்.பரிணாம்த்தின் மீது விமர்சன ஆய்வுக் கட்டுரை எழுதிய விஞ்ஞானி ப‌லரின் இணையத் தளங்கள் கொடுங்க்ள். அவர்கள் அளிக்கும் மாற்று அறிவியல் கருத்தையும் பார்த்து சரி என்று பட்டால் பதிவிடுவேன்.
நன்றி

suvanappiriyan said...

வ அலைக்கும் சலாம்! சகோ. ஆஷிக்!
//நான் அப்போதே சொன்னேன்...
நாத்திகரிடம்/பரிணாம ஆதரவாளர்களிடம் பரிணாமம் பற்றி கேட்டால்... பதிலே வராது.

நாம் இலவு காத்த கிளி..!//

பரிணாமவியலை ஏதோ நிரூபிக்கப்பட்ட ஒரு தத்துவம் போலவும், அதை ஒத்துக் கொள்ளாதவர்கள் அறிவில் குறைவானவர்கள் போலவும் ஒரு கருத்து இணைய தளங்களில் நிலவுகிறது. அந்த கருத்துகளை முறியடிப்பதற்கு ஏதோ நம்மால் ஆன சிறிய முயற்சி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//ஹாருன் யாஹ்யாவின் கருத்துகளுக்கு டாக்கின்ஸ் பதில் அளித்து விட்டார். அது எனக்கு சரியாக படுகிறது.அதற்கு மேல் என்ன சொலவ்து?.யு ட்யூபில் இருக்கிறது.//

அவர் கொடுத்த எந்த பதில் திருப்தியாக இருந்தது என்று விபரமாக சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.

//ஒருவேளை பரிணாமம் முற்றும் முழுதும் தவறு என்றால் எல்லா நாடுகளும் சவுதி அரசு (99% இஸ்லாமிய அரசு கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்,பரவாயில்லை மன்னிக்கவும்!!!!) போல் ஆக வேண்டுமென்பது என்பது நடக்குமா?.//

நான் எல்லா நாட்டின் சட்டங்களும் சவுதியை பின்பற்றி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சவுதியின் பல சட்டங்களில் எனக்கும் உடன்பாடில்லை. இறைவனை மறுப்பதற்காகத்தான் பரிமாணவியலை பலரும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலரின் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது. பரிணாமவியலில் உண்மை இல்லை என்பதை அதன் ஆதரவாளர்கள் பலரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

//நான் மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன். இது குறித்த விழிப்புணர்வு வர வேண்டுமென்று விரும்புகிறேன்.எல்லாரும் மதம் விட்டு இறை மறுப்பாள‌ன் ஆக வேண்டுமென்ற கொள்கை பிரச்சாரம் செய்பவன் இல்லை.//

நல்லது. முஸ்லிம்கள் பல தவறுகள் செய்கிறார்கள். எனவே அவர்களை திருத்த வேண்டும் என்று சொல்லுங்கள். நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்.

காலத்துக்கு தக்கவாறு குர்ஆனின் சட்டங்களை மாற்றுங்கள் என்றால் அது எக்காலத்திலும் நடக்காது. காலத்துக்கு தகுந்தவாறு மாற்றிய பைபிள்,தோரா போன்ற வேதங்களின் நிலையும், அதை பின்பற்றுபவர்களின் நிலையும் நாம் நன்கு அறிந்ததே!

காலத்துக்கு தக்கவாறு மாற்ற வேண்டும் என்றால் அது படைத்த இறைவனின் சட்டமாக இருக்க முடியாது. மனிதன் இயற்றிய சடடத்தில் கை வைக்கலாம்.

அடுத்து குர்ஆனின் இந்த சட்டம் இந்த மக்களுக்கு, அல்லது இந்த நாட்டுக்கு ஒத்து வராது பின்பற்ற முடியாது என்று ஏதாவது ஒரு வசனத்தைக் காட்டுங்கள். உங்கள் வாதத்தில் நியாயம் இருப்பதாக ஒத்துக் கொள்ளலாம்.

//பதிவிடும் அள்விற்கு தரமில்லை என்றே எண்ணுகிறேன்.பரிணாம்த்தின் மீது விமர்சன ஆய்வுக் கட்டுரை எழுதிய விஞ்ஞானி ப‌லரின் இணையத் தளங்கள் கொடுங்க்ள். அவர்கள் அளிக்கும் மாற்று அறிவியல் கருத்தையும் பார்த்து சரி என்று பட்டால் பதிவிடுவேன்.//

சகோ ஆஷிக்கின் 'எதிர்க் குரல்' தளத்தில் பல இணைய தளங்களின் லிங்க் உள்ளது. படித்து பதிவிடுங்கள். நன்றி!

suvanappiriyan said...

//குழந்தைகளாக இருக்கும் போதே பலவேறு சங்கதிகளை நம் மூளை பதிவு செய்துவிடுகின்றது. குறிப்பாக வாசனை, ஒலிகள் என மொழிக்கு அப்பாற்பட்ட சங்கதிகளைக் கூட நம் மூளையில் பதியப்பட்டு, அதனூடாக ஒருவர் நெருங்கியவரா ? இல்லையா என்பதை அறிவு அறிகின்றது.//

ஒவ்வொரு காலத்திலும் தோன்றிய ஒவ்வொரு மதமும் அதற்க்கென்ற ஒரு கலாசாரத்தை கொண்டிருந்தது. இறைவன் கொடுத்த வேதங்கள்தான் பரிணமித்து அந்த மக்களின் கலாசாரமாகிறது. இந்த வேதங்களுக்கெல்லாம் மூலகர்த்தா ஓரிறைவனே! அந்த ஓரிறை கொடுத்த அனைத்து வேதங்களின் சட்டங்களும் தகாத பாலுறவை தடுத்தே வந்திருக்கிறது. உலகம் முழுவதும் அதில் ஒத்த கருத்து இருப்பதால் இந்த கருத்து மேலும் உறுதியாகிறது. பல ஆயிரம் வருடங்கள் இந்த ஒரே கருத்து அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்து விடுவதால் இறைவனின் கட்டளையை அறியாதவருக்கும் இந்த எண்ணம் ஜீன்களின் மூலமாக கடத்தப்படுகிறது. அறிவியல் மொழியில் அதற்கு ஒவ்வொரு பெயராக வைத்துக் கொண்டாலும் இந்த எண்ணங்களின் மூலகர்த்தா படைத்த இறைவனே!

//எப்படி இவற்றைக் கண்டுக் கொள்கின்றன என்பது இதுவரை ஆச்சர்யமான ஒரு கேள்வியாக இருக்கின்றன? அந்த வௌள்வால்களுக்கு அவற்றின் தந்தை, சகோதரன் என எல்லாம் அறிந்துக் கொள்கின்றன, அவர்களைத் தவிர்த்து ஏனையவற்றோடு உறவில் ஈடுபடுகின்றன.//

அதே போல் விலங்குகளுக்கும் ஒரு வித வாசனையை கொடுத்து தனது உறவுகளை தெரிந்து கொள்ள வைக்கும் இறைவனின் படைப்பாற்றலை நினைத்து வியக்கிறோம் அல்லவா?

'முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?'
-குர்ஆன் 19:67

Anonymous said...

@ சுவனப்பிரியன் - // அந்த ஓரிறை கொடுத்த அனைத்து வேதங்களின் சட்டங்களும் தகாத பாலுறவை தடுத்தே வந்திருக்கிறது //

வருக வருக !!! வேதங்களும் சட்டங்களும் தான் தகாத பாலுறவைத் தடுக்கின்றது எனில்.. அது மனிதர்களிடம் மட்டும் தானா ? இல்லை விலங்குகளிடமும் அது மாதிரி வேதங்களும் சட்டங்களும் தூதர்களும் உண்டா ?

விளக்கினால் சுபம் ?

Anonymous said...

@ சுவனப்பிரியன் - // //நல்ல சான்றோர்கள் முட்டாள்களாக்கப்பட்ட இறைப் படைப்புக் கொள்கையினால் நம்பிக்கை உடையோரோடு போராடவேண்டும். தெரிந்துக் கொள்ளுங்கள் உலகம் படைப்பட்டது இல்லை, அது காலத்தைப் போன்று அந்தமும் இல்லாதது, ஆதியும் இல்லாதது, அது கொள்கைகளின், வாழ்க்கையின், அமைதியின் அடிப்படையிலானது. அது உருவாக்கப்படவும் இல்லை, அழிக்கப்படப் போவதும் இல்லை, அது தன்னியல்பில் இயங்கி வருகின்றது //

இவற்றில் முதல் வரி மட்டுமே எனக்கு உடன்பாடானது, ( என்பதை ) குறிப்பிடாமலும் விட்டுவிட்டது எனது பிழை தான்.... திருத்திக் கொண்டேன் ....

மற்றப்படி இரண்டாவது வரியில் உள்ளது கிட்டத்தட்ட பிக் பாங்க் தியரியோடு பொருந்திப் போகின்றது, ஆனால் அவற்றை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி நிரூபித்தால் மட்டுமே என்னால் ஏற்க இயலும்.

////அது என்னுடைய சுயக் கருத்து இல்லை. சமண மத சாஸ்திரங்கள் கூறும் கருத்து .. அதனை அப்படியே நான் ஏற்க வேண்டும் என்றக் கட்டாயம் எனக்கில்லை .... ஆனால் அதனையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் ..//
//

நிச்சயமாக அது என்னுடையக் கருத்தில்லை ... ஆனால் அவற்றின் முதல் வரிகளை நான் ஏற்கின்றேன். இரண்டாம் வரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி ஏற்றுக் கொள்ளலாமா ? வேண்டாமா ? என முடிவு செய்யலாம் ....

நன்றிகள் சகோ


இங்கு முரண்பாடு கருத்தில் எழவில்லை சொற்குற்றத்தால் எழுந்ததே. அதனை யாம் நிவர்த்திச் செய்துக் கொண்டோம். சுட்டிக் காட்டலுக்கு மிக்க நன்றிகள்

Anonymous said...

இவ்ளோ பெரிய தொடை எலும்பு .. ஹிஹி .. அதற்கான ஆய்வின் சுட்டியை யமக்கு தாம் தர இயலுமா ? ஏனெனில் நானறிந்து மானுடவியல் வகுப்புகளில் ( ANTHROPLOGY ) இவ்ளோ பெரிய தொடை எலும்புடைய மனிதன் வாழ்ந்தத்தாக போதிக்கப்படவே இல்லை .. ஹிஹி .. ஒருவேளை நான் படித்த பல்கலைக் கழகம் முட்டாள்களின் கூடாரமோ ... ஹிஹிஹி ....

Aashiq Ahamed said...

Assalaamu Alaikum,

(My) Mission Succeeded.....(alhamdhulillah)
.
.
.
.
.
Bookmark this Post's Link for Future
.
.
.
.
.
Close the Chapter
.
.
.
.
.
Move on to Next Topic


Your Brother,
Aashiq Ahamed A

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சார்வாகன்..!

//////நான் மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன்./////---???

நன்றாக யோசித்துத்தான் சொல்கிறீர்களா..?

உலகிலேயே தலைசிறந்த சட்டங்களை மனித வர்க்கத்திற்கு அளித்தவர் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அமெரிக்காவின் உச்ச நீதி மன்றத்தில் சிலை வைத்து கெளரவிக்க முனைந்ததே அமெரிக்க அரசு..? மறந்துவிட்டீர்களா..?

இவ்வளவு ஏன்..?

நம் நாட்டின் பல சட்டங்கள் இஸ்லாமிய சட்டங்கள் ஆயிற்றே..? நம்நாட்டின் சட்டத்துறையில் நிறைய அரேபிய வார்த்தைகள் இருப்பதே இதற்கு சாட்சி அல்லவா..? அதெல்லாம் நீக்க "குரல் கொடுத்து" போராடப்போகிறீர்களா?

எல்.கே.அத்வானி கேட்கிறாரே... பாலியல் வன்கொடுமைக்கு இஸ்லாமிய சட்டமாகிய மரணதண்டனை வேண்டும் என்று..?

மனித குலத்துக்கு நல்ல விஷயங்களை இஸ்லாம் சொல்லி இருந்ததால் எதற்கு அதை எதிர்க்க வேண்டும் நீங்கள்..?

"அத்வானி போலவாவது நியாயத்தை ஆதரியுங்களேன்..." என்று ஒரு படு மோசமான ஆளை எல்லாம் கூட முன்னுதாரணமாக கொள்ளச்சொல்லும் அளவுக்கு, அந்த நிலைக்கு, நீங்கள் ஆளாகி விட்டீர்களா சகோ.சார்வாகன்..?

===================================

இதெல்லாம் பிறகு.... முதலில்... நான் தொகுத்த அனைத்து பரிணாம FIR கேள்விகளுக்கும் ஒரு பதிவு எழுதி பதில் அளிப்பதாய் சொன்னீர்கள் அல்லவா..?

அந்த பதில் பதிவை எப்போது வெளியிடுவீர்கள்..?

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//இவ்ளோ பெரிய தொடை எலும்பு .. ஹிஹி .. அதற்கான ஆய்வின் சுட்டியை யமக்கு தாம் தர இயலுமா ? ஏனெனில் நானறிந்து மானுடவியல் வகுப்புகளில் ( ANTHROPLOGY ) இவ்ளோ பெரிய தொடை எலும்புடைய மனிதன் வாழ்ந்தத்தாக போதிக்கப்படவே இல்லை .. ஹிஹி .. ஒருவேளை நான் படித்த பல்கலைக் கழகம் முட்டாள்களின் கூடாரமோ ... ஹிஹிஹி ....//

கிடைத்த ஆதாரங்களை எல்லாம் பரிணாமவியலுக்கு எதிராக உள்ளதால் இவற்றை எல்லாம் ஊடகங்கள் பரிணாம ஆதரவாளர்கள் பிரபல்யப் படுத்துவதில்லை. கூகுளில் தேடிப் பார்த்தால் பல இணைய தளங்கள் ஆதாரத்தோடு பட்டியலிடுகின்றன.
Mtblanco.com

மத்யன் சாலிஹ் என்ற ஊருக்கு (மதீனாவுக்குப் பக்கத்தில்) நான் சென்ற போது நபி சாலிஹ்ம் அவரை பின்பற்றியவர்கள் வாழ்ந்த வீடுகளையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த வீடுகளின் நுழை வாயில்கள் எல்லாம் 12 அடி 13 அடிக்கு மேல் கட்டப்படடிருந்தது. அதுவும் மலைகளை குடைந்து ஏன் இவ்வளவு சிரமப்பட்டு கட்டினார்கள்? நம்மைப் போல் 6 அடி அல்லது ஏழடியில் ஏன் கட்டவில்லை என்று கூட யோசித்ததுண்டு. அந்த காலத்து மக்களின் உயரத்தை கணக்கில் எடுத்து கட்டியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். எனது பதிவின் வலது புறம் ஓடும் ஸ்லைட் ஷோக்களில் அந்த வீடுகளும் வரும்.

suvanappiriyan said...

//வருக வருக !!! வேதங்களும் சட்டங்களும் தான் தகாத பாலுறவைத் தடுக்கின்றது எனில்.. அது மனிதர்களிடம் மட்டும் தானா ? இல்லை விலங்குகளிடமும் அது மாதிரி வேதங்களும் சட்டங்களும் தூதர்களும் உண்டா ?

விளக்கினால் சுபம் ?//

பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1402
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தன்னுடைய கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அதுபோன்றே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்லநிலையில் வந்து தன்னுடைய குளம்புகளால் அவனை மிதித்துக் தன்னுடைய கொம்புகளால் அவனை முட்டும். ….

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''உரிமைகளை அதற்குரியவர்களிடம் மறுமையில் நிறைவேற்றித் தரப்படும். எதுவரை எனில், இறுதியில் கொம்பில்லா ஆடு, கொம்புள்ள ஆட்டிடம் (அது முன்பு முட்டி இருந்தால்) பழி வாங்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).


"ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
ஆதாரம்: புஹாரி

இவை எல்லாம் மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் விசாரணை உண்டு என்று அறியலாம்.

ஷர்புதீன் said...

for follow ups

ஷர்புதீன் said...

:-) for follow ups

saarvaakan said...

/உலகிலேயே தலைசிறந்த சட்டங்களை மனித வர்க்கத்திற்கு அளித்தவர் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு அமெரிக்காவின் உச்ச நீதி மன்றத்தில் சிலை வைத்து கெளரவிக்க முனைந்ததே அமெரிக்க அரசு..? /
இது குறித்த சுட்டி அளியுங்கள்.முகமதுக்கு சிலை அமைப்பது முக்கிய பிரிவு இஸ்லாமின் படி தவ்று என்பது கூட தெரியாதவர்கள் அமெரிக்கர்களா!!!!!!!!.

முகம்துவை யார் புகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்வீர்கள்.
இப்படியே பேசனும் .அப்புறம் மாத்தி பேசக் கூடாது.
___________

மதம் ஆன்மீகமாக் இறப்பின் பின் அழியாப் பெருவாழ்வு குறித்து பிரச்சாரம் செய்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை.

சவுதி,ஈரானில் பயன் படுத்தப் படும் ஷாரியா பிரிவு சட்டங்கள்மனித நேயமற்றது.அது எண்ணெய் தீர்ந்தவுடன்(சுமார் 20 வருடம்) மாற்றப் படும்.
பிற‌ பிரிவு ஷரியா கொஞ்சம் பரவாயில்லை.

சவுதி,ஈரான் பாணி சட்டங்களை எதிர்ப்பது மனிதர்களின் கடமை.

இத்னை கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும்,பயமும் இல்லை.இந்த நாட்டில இத‌னைக் கொண்டு வர வேண்டும் என்ற பிரச்சார முயற்சி எதிர்க்கப் படும். இப்படியே சவுதி ஷாரியா சட்டம் சரி ,இத்னை இந்தியா உட்பட்ட,உலக முழுதும் ஏற்படுத்த முயற்சிக்கிறோம் என்று அனைத்து பிரச்சாரகர்களும் சொல்லி விட்டால் பிரச்சினைகள் முடிந்துவிடும்.

இத்னை மழுப்புவதுதான் பிரச்சினை.

Anonymous said...

//கூகுளில் தேடிப் பார்த்தால் பல இணைய தளங்கள் ஆதாரத்தோடு பட்டியலிடுகின்றன//

கூகிளில் தேடிப் பார்த்தால் முகமதுவும் ஹிட்லரும் ஒரே ரேஞ்சுக்கு சொல்லும் தளங்களும் உள்ளன, அவற்றை இஸ்லாமிய பிரச்சாரகர்கள் மறைப்பதாக நான் கருதலாம் ?

அதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே ஏற்க முடியும் எனில் .. இந்த கால் தொடை எலும்புகளையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் சகோ...

( உணர்வு புண்பட்டால் என்னை மன்னிக்க ... :( )

Anonymous said...

//கூகுளில் தேடிப் பார்த்தால் பல இணைய தளங்கள் ஆதாரத்தோடு பட்டியலிடுகின்றன//

கூகிளில் தேடிப் பார்த்தால் முகமதுவும் ஹிட்லரும் ஒரே ரேஞ்சுக்கு சொல்லும் தளங்களும் உள்ளன, அவற்றை இஸ்லாமிய பிரச்சாரகர்கள் மறைப்பதாக நான் கருதலாம் ?

அதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே ஏற்க முடியும் எனில் .. இந்த கால் தொடை எலும்புகளையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் சகோ...

( உணர்வு புண்பட்டால் என்னை மன்னிக்க ... :( ...)

Anonymous said...

முகமதுவுக்கு அமெரிக்காவில் சிலை வைத்துள்ளார்கள் .. அதுவும் கையில் பெரும் வாளுடன் ... அது அவர்களுக்கு பெருமை எனில் .... நான் எனது செலவில் பல சிலைகள் முகமதுவுக்கு வைக்க விரும்புகின்றேன் ( கையில் வாள் இல்லாமல் புறாவுடன் ) அவர்களுக்கு சம்மதமா ????

நமது நாட்டில் இருக்கும் சட்ட வழக்குச் சொற்கள் அனைத்தும் உருதில் இருப்பவை .. சில உருது சொற்களுக்கு வேர்ச்சொல் அரபியில் இருந்து வந்தவை .. உருதினைப் பயன்படுத்திய பெருமை ஆங்கிலேயேரையே சாரும் ...

சௌதியின் சட்டங்கள் உண்மையிலேயே சிறந்தது, மிகவும் முற்போக்கானது அதனால் உலகில் உள்ள அனைவரும் சௌதியைப் புகழ்கின்றோம்.. விரைவில் மனித உரிமை சபைகளில் சபாநாயகர் பதவிகளை சௌதிக்கு கொடுக்க யாம் குரல் கொடுக்க போகின்றோம் ( ஹிஹி )

ஒரு உயிரை கொல்லுவது தான் ஷரியாவா ? இல்லை ஷரியா என்றாலே கொல்வது தானா ? அப்படிப் பார்ப்பின் சிங்கப்பூர், சீனா, அமெரிக்காவில் ஷரியாத் தான் பின்பற்றப் படுகின்றதோ ( கனடா விதிவிலக்கு இங்கு மரண தண்டனை இல்லை ! )

suvanappiriyan said...

சார்வாகன்!

//இத்னை கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும்,பயமும் இல்லை.இந்த நாட்டில இத‌னைக் கொண்டு வர வேண்டும் என்ற பிரச்சார முயற்சி எதிர்க்கப் படும். இப்படியே சவுதி ஷாரியா சட்டம் சரி ,இத்னை இந்தியா உட்பட்ட,உலக முழுதும் ஏற்படுத்த முயற்சிக்கிறோம் என்று அனைத்து பிரச்சாரகர்களும் சொல்லி விட்டால் பிரச்சினைகள் முடிந்துவிடும்.//

உண்மையிலேயே இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி வரக் கூடாது என்று விரும்பினீர்கள் என்றால் முதலில் தலித்களுக்கும், பிறபடுத்தப்பட்ட மற்ற சாதிகளுக்கும் சம உரிமையை கொடுக்கப் பாருங்கள். இந்த 20 ஆம் நூற்றாண்டிலேயும் உன்னை கோவிலுக்குள் விட மாட்டேன், உன்னை தொட்டால் தீட்டு, தேரை நீ இழுக்கக் கூடாது, உன் ஊருக்கு பஸ் வந்தால் போராட்டம்தான், நீ பஞ்சாயத்து தலைவராக வரக் கூடாது, வந்தால் கொலை செய்து விடுவோம் என்று எங்கும் எதிலும் சாதி தலை விரித்தாடுகிறது.

படித்து விட்டால் எல்லோருக்கும் புத்தி வந்து விடும். இப்பொழுதெல்லாம் நாங்கள் சாதியே பார்ப்பதில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க இக்பால் செல்வன் போன்றவர்கள் முயற்ச்சித்தாலும் இணைய உலகம் காட்டிக் கொடுத்து விடுகிறது. படித்தவர்கள் அதிகம் நிறைந்த இந்த துறையே இந்த லட்சணத்தில் என்றால் மற்ற துறைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

எனவே இன்று முதல் மேல் சாதிகாரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 'இனி தீண்டாமை கடை பிடிக்க மாட்டோம். அனைவரும் எங்களின் சகோதரர்களே!' என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள். மீறினால் இந்தியாவில் குர்ஆனின் சட்டத்தை கொண்டு வருவதை யாராலும் தடுக்க முடியாது.

ஒரு நிமிஷம்..... இப்படி உறுதி மொழி எடுத்துக் கொண்டு தீண்டாமை ஒழிக்கப்பட்டு கீழ்சாதிக் காரர்களும், மேல்சாதிக்காரர்களும் சண்டையை மறந்து சகோதரர்களாக ஆகி விட்டால் அதற்கும் பெயர் இஸ்லாம்தானே! :-(

ரொம்பவும் குழப்புகிறேனோ! :-)

suvanappiriyan said...

//இது குறித்த சுட்டி அளியுங்கள்.முகமதுக்கு சிலை அமைப்பது முக்கிய பிரிவு இஸ்லாமின் படி தவ்று என்பது கூட தெரியாதவர்கள் அமெரிக்கர்களா!!!!!!!!.//

Muhammad (c. 570 - 632) The Prophet of Islam. He is depicted holding the Qur’an. The Qur’an provides the primary source of Islamic Law. Prophet Muhammad’s teachings explain and implement Qur’anic principles. The figure above is a well-intentioned attempt by the sculptor, Adolph Weinman, to honor Muhammad and it bears no resemblance to Muhammad. Muslims generally have a strong aversion to sculptured or pictured representations of their Prophet.

Read more: http://www.city-data.com/forum/politics-other-controversies/693066-should-statue-mohammed-removed-us-supreme.html#ixzz1QVwfcfCS

Things were all well and good for a few decades, with no documented
controversies over the sculpture that I could find. But then, in 1997,
the fledgling Council on American-Islamic Relations brought their wrath
to the Court, petitioning then-Chief Justice William Rehnquist to
remove the sculpture. CAIR outlined their objections as thus: 1. Islam
discourages its followers from portraying any prophet in artistic
representations, less the seed of idol worship be planted. 2. Depicting
Mohammed carrying a sword “reinforced long-held stereotypes of Muslims
as intolerant conquerors.” 3. Building documents and tourist pamphlets
referred to Mohammad as “the founder of Islam,” when he is, more
accurately, the “last in a line of prophets that includes Abraham,
Moses and Jesus.”

Rehnquist dismissed CAIR’s objections, saying that the depiction was
“intended only to recognize him [Mohammad]…as an important figure in
the history of law; it was not intended as a form of idol worship.” He
also reminded CAIR that “swords are used throughout the Court’s
architecture as a symbol of justice and nearly a dozen swords appear in
the courtroom friezes alone.”

Rehnquist did make one concession, though, and promised the
description of the sculpture would be changed to identify Mohammad as a
“Prophet of Islam,” and not “Founder of Islam.” The rewording also said
that the figure is a “well-intentioned attempt by the sculptor to honor
Mohammed, and it bears no resemblance to Mohammed.”

The reasoning behind Rehnquist’s rejection? For one, he believed
that getting rid of any one sculpture would impair the artistic
integrity of the frieze, and two, it’s illegal to injure, in any way,
an architectural feature of the Supreme Court Building.
Read the full story:
http://blogs.static.mentalfloss.com/blogs/archives/21319.html

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//கூகிளில் தேடிப் பார்த்தால் முகமதுவும் ஹிட்லரும் ஒரே ரேஞ்சுக்கு சொல்லும் தளங்களும் உள்ளன, அவற்றை இஸ்லாமிய பிரச்சாரகர்கள் மறைப்பதாக நான் கருதலாம் ?

அதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே ஏற்க முடியும் எனில் .. இந்த கால் தொடை எலும்புகளையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் சகோ...//

முகமது நபி யூதர்களுக்கு அழகிய முறையில் இஸ்லாமிய அழைப்பு விடுத்தார். தங்களின் தோராவில் 'கடைசி இறைத் தூதர் மக்களால் விரட்டப்பட்டு மதினா வருவார்' என்று சொல்லப்பட்டதால் கூட்டம் கூட்டமாக மதினாவில் வந்து குழுமத் தொடங்கினர் யூதர்கள். அப்படி மதினாவுக்கு வந்தால் அவரை சந்தித்து இறை மார்க்கத்தை ஏற்க வேண்டும் என்ற ஆவலில் மதினா நகர் முழுவதும் நிறைந்து காணப்பட்டனர். இன்று மதினா நகரில் ஒரு யூதரையும் பார்க்க முடியாது. ஏனெனில் அனைவரும் முகமது நபி காலத்திலேயே அவர் மேல் நம்பிக்கைக் கொண்டு இஸ்லாமியர்களாக மாறி விட்டனர். குழப்பம் செய்து போர் செய்து கொண்டிருந்த சிறிய கூட்டம் மட்டுமே நாடு கடத்தப் பட்டு மதினாவுக்கு வெளியே தங்க வைக்கப்பட்டனர்.

ஆனால் ஹிட்லர் நிரபராதிகளையும் சகட்டு மேனிக்கு கொன்றொழித்தான். எனவே இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்தாலும் தற்போதய உங்களின் நிலை உண்மையின் பக்கம் வர விடாது.

//நமது நாட்டில் இருக்கும் சட்ட வழக்குச் சொற்கள் அனைத்தும் உருதில் இருப்பவை .. சில உருது சொற்களுக்கு வேர்ச்சொல் அரபியில் இருந்து வந்தவை .. உருதினைப் பயன்படுத்திய பெருமை ஆங்கிலேயேரையே சாரும் ...//

ஆங்கிலேயருக்கு உருது தெரியுமா? மொகலாயர்கள் நமது நாட்டை ஆளும் போது என்ன முறை பின் பற்றப் பட்டதோ அதைத்தான் சில மாற்றங்களுடன் இன்றும் பின்பற்றி வருகிறோம். தாலுக்கா, பஞ்சாயத்து, போன்ற ஆட்சி முறைகளும் அவர்கள் கொண்டு வந்ததே என்பதை இந்த பெயர்களே நிரூபிக்கின்றன. இன்றும் ஆட்சி மொழிகளில் உருது மொழி சொற்கள் புழக்கத்தில் உள்ளதையும் ஆதாரத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்.

//சௌதியின் சட்டங்கள் உண்மையிலேயே சிறந்தது, மிகவும் முற்போக்கானது அதனால் உலகில் உள்ள அனைவரும் சௌதியைப் புகழ்கின்றோம்..//

இஸ்லாமிய சட்டங்கள் என்று மாற்றிக் கொள்ளுங்கள். :- )

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சார்வாகன்,

பதில் இல்லை என்றால்...
"ஹி..ஹி.. நான் தோல்வியை ஒத்துக்கறேன்... என்னிடம் பதில் இல்லை"--என்று சொல்வதே கொஞ்சமேனும் மனிதத்தன்மை உள்ளவர்க்கு அழகு.

@ சார்வாகன்,
நீங்கள் சொன்னது: //////நான் மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன்./////

இதற்கு நான் கேட்ட கேள்வியில் மையப்பொருள் என்ன..?

'படு தீவிர இஸ்லாமோஃபோபியா காரர்களான அமெரிக்க அரசே "இஸ்லாமிய சட்டங்கள் உலகின் தலை சிறந்தன" என்று ஒத்துக்கொண்டுவிட்டனவே' என்பதே இங்கே நம் விவாதப்பொருள் மேட்டர்.

அதற்கு உங்களிடம் பதில் இல்லை..!

அமெரிக்கனுக்கு ரொம்ப நல்லா தெரியும்... எதை செய்தால் முஸ்லிம்களுக்கு பிடிக்காது என்று..!

அதனால்தான் முஸ்லிம்களை 'விருந்துண்ண வா'(Honouring Prophet) என அழைத்து நளபாக உணவு இலையில் ஒரு ஓரத்தில் நரகல்(statue) வைத்தான்.

ஏனென்றால்... உங்களைப்போன்றவர்கள் அதைப்பற்றி மட்டும் பேச வேண்டும் என்று..!
அல்லது,
சாப்பிடாமல் கோபத்துடன் எழுந்து சென்ற (சிலையை எதிர்த்த)முஸ்லிம்களை பற்றி மட்டும் பேச வேண்டும் என்று.


நான் நளபாக சமையல் பற்றி மட்டும் இப்போது உங்களிடம் கேட்கிறேன்..!


'பதில்' என்று ஒன்று இருந்தால்.... சொல்லலாம்.
.
.
.
.
.
.
.
கேள்வி இதுதான்..!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
'படு தீவிர இஸ்லாமோஃபோபியா காரர்களான அமெரிக்க அரசே "இஸ்லாமிய சட்டங்கள் உலகின் தலை சிறந்தன" என்று ஒத்துக்கொண்டுவிட்டனவே'

நீங்கள்.... "மதம் சார்ந்த சட்டங்களை மாற்ற குரல் கொடுக்கிறேன்"----என்கிறீர்களே, இது சரியா..?

இப்படித்தான் அத்வானி சொன்னது பற்றி கேட்டேன்,
பதில் இல்லை. அதற்கும் ஏதாவது சால்ஜாப்பு சொல்லலாமே..!

////
Assalaamu Alaikum,

(My) Mission Succeeded.....(alhamdhulillah)
.
.
.
.
.
Bookmark this Post's Link for Future
.
.
.
.
.
Close the Chapter
.
.
.
.
.
Move on to Next Topic


Your Brother,
Aashiq Ahamed A
////

இதை நானும் வழிமொழிகிறேன்..!

suvanappiriyan said...

////
Assalaamu Alaikum,

(My) Mission Succeeded.....(alhamdhulillah)
..
Bookmark this Post's Link for Future
..
Close the Chapter
.
..
Move on to Next Topic


Your Brother,
Aashiq Ahamed A
////

இதை நானும் வழிமொழிகிறேன்..!//-ashik

இதை நானும் வழிமொழிகிறேன்-Suvanappiriyan