Followers

Thursday, June 16, 2011

GOD OF MUSIC -மேடையிலேயே மறுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!


ஒரு விழாவில் ஏ.ஆர் ரஹ்மானை பேச அழைக்கும் போது 'காட் ஆஃப் ம்யூஸிக் ஏ.ஆர் ரஹ்மானை பேச அழைக்கிறேன்' என்று அறிவிப்பாளர் கூறுகிறார். ஒருவரை புகழ்வதற்கு என்ன வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் என்ற இங்கிதம் கூட தெரியாமல் நமது நாட்டில் சகட்டு மேனிக்கு புகழ்ந்து தள்ளுகிறோம். ரஹ்மான் பழைய திலீப் குமாராக இருந்திருந்தால் சந்தோஷத்தோடு அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டிருப்பார். ஆனால் இன்று இவர் ரஹ்மான். குர்ஆனின் கட்டளைகளை முடிந்த வரை தனது வாழ்வில் கடை பிடித்து வரும் ஒரு முஸ்லிம். மிகவும் பணிவாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குறைவாகவே பேசும் ரஹ்மான் உடன் அந்த மேடையிலேயே “don’t trust me God of music..change the spelling later.. please” என்று அந்த மேடையிலேயே மறுதலிப்பதைப் பார்க்கிறோம். இந்த தைரியம் அவருக்கு எப்படி வந்தது?. குர்ஆனை தனது வாழ்வியலாக கொண்டதனால் வந்தது. இதை சாதாரண விஷயமாக ஒதுக்கி விட்டு சென்று விட்டிருக்கலாம். இன்று கடவுளோடு ஒப்பிட்டு பேசியவர்கள் நாளை இவருக்கு ஒரு சிலை வைக்கலாம். பூஜைகளும் செய்யலாம். ஏனெனில் குஷ்புவுக்கே கோவில் கட்டி மந்திரங்கள் எல்லாம் ஓதிய கலாசாரத்துக்கு சொந்தக்காரர்கள் நாம். இதில் தனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை என்பதை பொதுவில் தெரிவித்து எதிர்ப்பை தெரிவித்த ரஹ்மான் பாராட்டுக்குரியவர்.

சில நாட்களுக்கு முன்பு கூட ஜெயலலிதாவின் மீது கொண்ட அபிமானத்தால் தனது நாக்கை அறுத்துக் கொண்ட ஒரு பித்துக்குளியை அதுவும் ஒரு தாய்குலத்தை சமீபத்தில் பார்த்தோம். இதை வன்மையாக கண்டித்து அறிக்கை விட வேண்டிய ஜெயலலிதா அவரது வருங்கால வாழ்வுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார். இதே போல் மற்றவர்கள் கிறுக்குத் தனமாக எதையாவது செய்து தொலைப்பதற்கு ஜெயலலிதாவின் செய்கை முன்னுதாரணமாக ஆகி விடாதா? என்று அறிவு ஜீவிகள் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டிருக்கும் எவரும் கண்டிக்கவில்லை.

இதே போல் சமீபத்தில் முகமது நபியின் கற்பனை புகைபடத்தை ஒருவர் வெளியிட்டு தனது அரிப்பை தீர்த்துக் கொண்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏன் இதற்கு இத்தனை எதிர்ப்பு காட்ட வேண்டும் என்று பலரும் கூட கேட்டனர். இதுபோல் மரியாதைக்குரியவரின் புகைப்படத்தை வெளியிடுவதால் என்னென்ன விளைவுகள் எற்படும் என்பதை பலரும் விளக்கியவுடன் எதிர்ப்பில் உள்ள நியாயத்தை அனைவரும் உணர்ந்து கொண்டோம். முடிவில் வெளியிட்ட அந்த படத்துக்கு எந்த மதிப்பும் இல்லாமல் ஆனது. அந்த எதிர்ப்பை நாம் காட்டவில்லை என்றால் இது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றோ என்ற எண்ணம் புதிதாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களுக்கு ஏற்படும். இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும்.

அடுத்து இணையத்தில் பிரபல்யமாக ஒரு வழி பலராலும் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. அது என்னவென்றால் இஸ்லாத்தை விமரிசிப்பது. புதிய பதிவர் ஒருவர் 'குர்ஆனில் யூதர்களை கொடுமைபடுத்த சொல்லி வசனம் வருகிறது' என்று புகாரியிலிருந்து ஒரு ஹதீஸை ஆதாரமாக வைக்கிறார். இன்னும் அவருக்கு குர்ஆனுக்கும ஹதீதுக்கும் என்ன வேறுபாடு என்பதைக் கூட தெரியாமல் இஸ்லாத்தை விமரிசித்து பதிவு எழுத வந்து விட்டார்.. காரணம் அவரது பதிவு பலராலும் பார்க்கப்பட வேண்டும். வேறொன்றுமில்லை.

இவர்கள் அனைவரும் குர்ஆனின் மீது விமரிசனத்தை வைக்க மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவு கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு குர்ஆனின் கருத்துக்கள் உள்ளது. உடன் இவர்கள் ஓடுவது ஹதீதுகளைத் தேடித்தான். அதுவும் இஸ்லாமிய எதிரிகள், யூதர்கள் கிறித்தவர்கள் இணையத்தில் பரப்பி விட்ட பொய்களைத்ததான் தங்கள ஆதாரமாக கொண்டு வருவர்.

ஹதீதுகளை எடுத்தாள்வதற்கு அதில் ஆழ்ந்த பரிச்சயம் இருக்க வேண்டும். அறிவிப்பவர் முகமது நபியை பார்த்தவரா? பொய் சொல்லாதவரா? தொடர் முகமது நபி வரை சரியாக வருகிறதா என்று பார்த்து எடுப்பதற்கு அந்த தோழர்களின் வரலாறும் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும்.

எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. ஆனால் நான் எப்படி ஹதீதுகளை புரிந்து கொள்வது என்று ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வெகு சுலபமான வழியை அறிஞர்கள் காட்டுகிறார்கள்.

ஒரு ஹதீதை நீங்கள் படித்தவுடன் அதன் கருத்தை குர்ஆனோடு பொருத்திப் பார்க்க வேண்டும். குர்ஆனோடு மோதாமல் அந்த ஹதீது இருந்தால் அது நம்பகமான ஹதீது. முகமது நபி சொன்ன ஹதீது என்று விளங்கிக் கொள்ளலாம். குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக ஒரு ஹதீது உங்களுக்கு கிடைத்தால் அது ஒதுக்கப்பட வேண்டிய ஹதீது. அதை முகமது நபி அறிவிக்கவில்லை. இஸ்லாமிய எதிரிகள் குழப்பத்தை உண்டு பண்ண இஸ்லாத்தில் புகுத்தப்பட்டவை என்ற முடிவுக்கு வரலாம்.

குர்ஆனின் கட்டளைதான் முகமது நபியின் வாழ்வாக இருந்தது. குர்ஆனின் அனைத்து வசனங்களும் முகமது நபி காலத்திலேயே பாதுகாக்கப்பட்டதால் இதில் எந்த ஊடுருவலும் எதிரிகளால் செய்ய முடியவில்லை. ஹதீதுகளும் முகமது நபி காலத்திலேயே தொகுக்கப்பட்டு இருந்தால் இந்த பிரச்னையும் அடிபட்டு போயிருக்கும். துரதிர்ஷ்டவசமாக முகமது நபியின் காலத்தில் ஹதீதுகள் தொகுக்கப்படாததால் இந்த சிறிய குழப்பம் இன்றும் உள்ளது. அந்த குழப்பமும் குர்ஆனோடு ஒப்பிட்டுபார்த்தால் நீங்கி விடும்.

//இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தினைப் பெற்று இருப்பது இந்திய நாடாகும். இந்தியாவில் அதிகளவு பெண்கள் கடத்தல், பெண் சிசுக் கொலை, பெண்க் குழந்தைகள் மரணிப்பது போன்றவை நடைப்பெறுவதால் இந்தியா நான்காம் இடத்தினைப் பெற்றுள்ளது. குறிப்பாக வட இந்தியாவின் பல பாகங்களில் இப்படியான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைப்பெறுகின்றன. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 50 லட்சம் பெண்கள் சிசுக்கொலையால் மரணித்திருப்பார்கள் என கருதப்படுகின்றது.//

//குறிப்பாக பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முதல் ஐந்து நாடுகளில் மூன்று நாடுகள் இஸ்லாமிய நாடுகள் ஆகும். மற்ற இரு நாடுகளில் இந்தியா இந்துக்கள் அதிகமளவு வசிக்கும் நாடாகும், அதே போல இந்தியாவே இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுவோர் அதிகளவு வசிக்கும் நாடாகவும் இருக்கின்றது.//

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பட்டியலிட்ட இக்பால் செல்வன் இந்தியாவை காட்டி இங்குதான் முஸ்லிமகளும் அதிகமாக வாழ்கிறார்கள் என்று பொடி வைத்து எழுதுகிறார். அதாவது இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்ததற்கு இஸ்லாமே காரணம் என்ற தொனியில் எழுதுகிறார். இந்தியர்களாகிய நமக்கு தெரியும் பெண் சிசுக் கொலை எந்த சமூகத்தில் அதிகம் நடக்கிறது. இளம் பெண்கள் ஸ்டவ் வெடித்து எந்த சமூகத்தில் இறக்கிறார்கள். வரதட்சணை கொடுமை எந்த சமூகத்தில் தலைவிரித்தாடுகிறது! என்பதெல்லாம் பதிவை படிக்கும் அனைவருக்கும் தெளிவாகவே விளங்கும். இதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆப்கானிஸ்தானும், சோமாலியாவும் இஸ்லாமிய சட்டத்தை கடை பிடிக்கும் நாடுகள் அல்ல. அங்கெல்லாம் தீவிரவாதிகளின் ஆட்சியும், அமெரிக்காவின் ஆட்சியும்தான் நடக்கிறது. முறையாக ஓரளவு இஸ்லாத்தை கடைபிடிக்கும் சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகள் இந்த பட்டியலில் வரவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

எனவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற பெயர்தாங்கி முஸ்லிம் நாடுகள் குர்ஆனின் சட்டத்தை நடைமுறைபடுத்தினால் சவுதி அரேபியாவுக்கு கிடைக்கும் மேன்மை அந்த நாடுகளுக்கும் கிடைக்கும். பெண்களும் பாதுகாப்படைவர்.


2:240
.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசுகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.


4:1
.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும்பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.


4:7
.
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.


4:19
.
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது; பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்; இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.


4:75
.
பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாகஎன்று பிரார்த்தனை செய்கிறார்கள்.


4:124
.
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

11 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,

பதிவின் ஒவ்வோர் வரியும் சிறந்த பதிலடிகள்.

//அங்கெல்லாம் தீவிரவாதிகளின் ஆட்சியும், அமெரிக்காவின் ஆட்சியும்தான் நடக்கிறது.//
---சிறந்த வரிகளில் மிகவும் சிறந்த வரி. இங்கே இருக்கிறது அனைத்துக்கும் விடை.

குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் எழுதக்கிளம்பிவிட்ட இந்த Islamophobia பதிவர்களின் இன்றைய மதிநிலை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது.

Hitsophilia எனும் இந்நோய்க்கு, இவர்கள்... 'தங்கள் முன்முடிவுகளை களைந்து எந்த சார்பும் அற்று சுயமாக சிந்திப்பதே' சரியான சிகிச்சை.

இது... தங்களுக்கு தாங்களே வழங்கிக்கொள்ள வேண்டிய சிகிச்சை.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

பெண்களுக்கெதிரான நாடுகள் என்ற இந்த பட்டியலை உருவாக்கியோர் யார்..? எத்தனை பேர்..? எதன் அடிப்படையில்..?

http://m.indiatoday.in/itwapsite/story?sid=141639&secid=120


///"The poll conducted among 213 gender experts who ranked countries on their overall perception of danger, as well as by six key categories of risks - health, sexual violence, nonsexual violence, harmful practices rooted in culture, tradition or religion, lack of access to economic resources and human trafficking."///---!!!???
-----------------------------------

ஒரு பெண் எதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்..? பொதுவாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்றால் என்ன..?

பாலியல் வன்கொடுமை:
இதில் யார் எந்த நிலையில் உள்ளார்கள்..? உண்மையான பட்டியல் இதோ..!
http://www.nationmaster.com/graph/cri_rap-crime-rapes


விவாகரத்து:
இதில் யார் முதல் பத்து இடத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்..?

http://www.tiptoptens.com/2011/04/09/countries-with-the-highest-divorce-rate-2011/

-----------------------------------

//பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா//---இங்கெல்லாம் இந்நிலைக்கு காரணம் அமெரிக்க ராணுவ அத்துமீறலும் அதனால் நேர்ந்த அமைதியின்மையும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், பின்னர் விளைந்து கொண்டிருக்கும் பயங்கரவாதங்க்களும், இஸ்லாம் என்ற ஒரு கலாச்சாரத்தை அடியோடு மறந்ததுமே காரணம்.

இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும் பெருவாரியாக இல்லாது போயிருந்தால், இந்தியாவின் நிலை இன்னும் மோசமாகி இருந்திருக்கும்.

///The Thomson Reuters Foundation explained why it ranked India so low on the list. The main reasons were female foeticide, infanticide and human trafficking///--இதற்கும் இஸ்லாமுக்கும் ( அல்லது ) இதற்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பதிவர்.இக்பால் செல்வனால் விளக்க முடியுமா..?


இத்தனைக்கும் போரற்ற அமைதி சூழலிலேயே இப்படி என்றால்... ஒரு பெண் ஜனாதிபதி, நிறைய பெண்கள் முதல்வர்கள் என் பெருமை கொண்ட நமது அரசு உடனடியாக இனி செயலில் இறங்கியே வேண்டும்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும் பெருவாரியாக இல்லாது போயிருந்தால், இந்தியாவின் நிலை இன்னும் மோசமாகி இருந்திருக்கும்.//

//பாலியல் வன்கொடுமை:
இதில் யார் எந்த நிலையில் உள்ளார்கள்..? உண்மையான பட்டியல் இதோ..!
http://www.nationmaster.com/graph/cri_rap-crime-rapes//

//விவாகரத்து:
இதில் யார் முதல் பத்து இடத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்..?

http://www.tiptoptens.com/2011/04/09/countries-with-the-highest-divorce-rate-2011///

சிறந்த பல கேள்விகளை வைத்துள்ளீர்கள். வழக்கம் போல் இதற்கு சமபந்தப்பட்டவர்களிடம் இருந்து பதில் வராது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும். நான் சமீபத்தில் அதிர்ச்சி அடைந்த வீடியோ காட்சி!

https://www.facebook.com/video/video.php?v=1430669661728&oid=155526841144596&comments

-Barakatullah

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. பரகத்துல்லா

நானும் பார்ததேன். இஸ்லாமிய பெயர் தாங்கிய சில அறிவிலிகளின் செயல். விட்டுத் தள்ளுங்கள்.

naren said...

சகோ.சுவனப்பிரியன்.....
நான் தொழில் நிமித்தமாக இஸ்லாத்தை பற்றி செய்திகள் அறியவும் விளக்கம் பெறவும், உங்கள் வலைப்பதிவையும் மற்ற இஸ்லாம் பற்றி வலைப்பதிவையும் அறிய நேரிட்டது. நான் நாடிய விளக்கங்களை தங்களிடம் மற்றவர்களிடமும் பெற்றதுக்கு நன்றி. சுமார் மூன்று வருடமாக உங்கள் பதிவை படித்து வருகிறேன்.இப்பொழுதுதான் பதிவு எழுத முடிவெடுத்திறுக்கிறேன்.
அதனால் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பேன், விளக்கங்கள் இருந்தால் கேட்பேன். ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையில் நேர்மையானவன் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது.

naren said...

சகோ.சுவனப்பிரியன்.....
நான் தொழில் நிமித்தமாக இஸ்லாத்தை பற்றி செய்திகள் அறியவும் விளக்கம் பெறவும், உங்கள் வலைப்பதிவையும் மற்ற இஸ்லாம் பற்றி வலைப்பதிவையும் அறிய நேரிட்டது. நான் நாடிய விளக்கங்களை தங்களிடம் மற்றவர்களிடமும் பெற்றதுக்கு நன்றி. சுமார் மூன்று வருடமாக உங்கள் பதிவை படித்து வருகிறேன்.இப்பொழுதுதான் பதிவு எழுத முடிவெடுத்திறுக்கிறேன்.
அதனால் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பேன், விளக்கங்கள் இருந்தால் கேட்பேன். ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையில் நேர்மையானவன் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது.

suvanappiriyan said...

சகோ. நரேன்!

// நான் நாடிய விளக்கங்களை தங்களிடம் மற்றவர்களிடமும் பெற்றதுக்கு நன்றி. சுமார் மூன்று வருடமாக உங்கள் பதிவை படித்து வருகிறேன்.இப்பொழுதுதான் பதிவு எழுத முடிவெடுத்திறுக்கிறேன்.
அதனால் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பேன், விளக்கங்கள் இருந்தால் கேட்பேன். ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையில் நேர்மையானவன் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது.//


நனறி. தாராளமாக நீங்கள் கேள்விகளை கேட்கலாம். ஏனெனில் கேள்வி கேட்பதை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

kannan said...

i use to read your blog, mr.mohammed ashiq's blog and mr.iqbal selvan's blog regularly. but since few days iqbal selvan's blog has been blocked in u.a.e. i like his blog also as i like your blog.

i feel that i miss something.

suvanappiriyan said...

சகோ கண்ணன்!

//since few days iqbal selvan's blog has been blocked in u.a.e.//

எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. முகமது நபியின் படம் என்று ஆதாரமில்லாத ஒன்றை தனது பப்ளிசிடிகாக இக்பால் செல்வன் வெளியிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆதாரமில்லாத அவதூறுகளை தொடர்ந்து பதிவாக்கி வருவதும் கூட காரணமாக இருக்கலாம்.

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான பதிவு