Followers

Saturday, November 03, 2012

நம்மாழவார் பாசுரங்களையும் சற்று திரும்பிப் பார்ப்போமே!

நம்மாழவார் பாசுரங்களையும் சற்று திரும்பிப் பார்ப்போமே!

அவரவர்தமதமது அறிவறிவகைவகை
அவரவரிறையவர் எனவடியடைவர்கள்
அவரவரிறையவர் குறைவிலரிறையவர்
அவரவர்விதிவழி அடையநின்றனரே

ஆஹா...என்ன அழகிய ரிதம. வார்த்தைகளை கட்டிய விதமும் அது மிக அழகிய பொருளை தரும் விதத்தையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன். நமது முன்னோர்கள் உயிர்களைப் பற்றியும் அவற்றின் செயல்களைப் பற்றியும் இறைவனின் ஆற்றலைப் பற்றியும் மிக தத்ரூபமாக பாடி விட்டு சென்றுள்ளனர்.

இந்த உலகில் ஒவ்வொரு உயிரியும் தங்களுக்கு இட்ட கட்டளையை மிக கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றன. ஒவ்வொரு உயிரிக்கும் அவைகளின் அறிவையும் ஆற்றலையும் வகை வகையாக வகுத்தளிக்கிறான் இறைவன். ஒவ்வொரு உயிரிக்கும் எந்த அளவு அறிவை வழங்க வேண்டுமோ அந்த அளவு குறைவின்றி அறிவையும் வழங்கி அவை உலகில் என்ன பணியை செய்ய வேண்டுமோ அனைத்தையும் வகுத்து பட்டியலிட்டு கொடுத்து விடுகிறான் இறைவன். இந்த உலகில் ஆடாத ஆட்டத்தை எல்லாம் ஆடி முடித்த அந்த உயிரி முடிவில் சேர வேண்டிய இடமான இறைவனின் திருவடிகளை அவர்களின் விதிப்படி சென்றடைவதாக இந்த பாடல் முடிகிறது.

ஒரு அற்ப கொசுவை எடுத்துக் கொள்வோம். அதற்கும் வாய், உடல், கால்கள், இறக்கைகள், ஜீரண உறுப்புகள் என்று அனைத்தையுமே அளித்து அவற்றிற்கான கட்டளைகளையும் இறைவன் அளிக்கிறான். உருவத்தில் பெரிய யானைக்கும் அதே போன்ற வாய், உடல், கால்கள், ஜீரண உறுப்புகள் என்று சகலத்தையும் தந்து அதற்குரிய அறிவையும் தந்து அதற்குரிய கட்டளைகளையும் தந்து விடுகிறான். இதில் படைப்புகளிலெல்லாம் சிறந்த படைப்பான மனிதனுக்கு இந்த உலகில் அனைத்து ஜீவன்களையும் அடக்கி ஆளும் வல்லமையைக் கொடுத்து நன்மை எது தீமை எது என்ற விளக்கத்தையும் கொடுத்து குறிப்பிட்ட காலம் வரை வாழச் செய்கிறான். ஆனால் இந்த மனிதன் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட உடல் பொருள் ஆவி உற்றார் உறவினர் என்ற அனைத்தையும் துச்சமாக மதித்து இறை நிராகரிப்பில் நிற்பதை பார்க்கிறோம்.

'முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?'
-குர்ஆன் 19:67


இங்கு நிராகரிப்பில் நாத்திகத்தில் இருக்கும் அந்த மனிதனைப் பார்த்துக் கேட்கிறான் இறைவன். தனது தாய் தந்தையர் ஒன்று கூடுவதற்கு முன்பு அந்த மனிதன் எங்கு இருந்திருப்பான். அவனது நிலை என்ன என்பதை அவன் சிந்திக்க வேண்டாமா? என்றும் கேட்கிறான் இறைவன்.

'மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.'
குர்ஆன் 36:77

'அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை நாம் படைததிருப்பதை மறந்து விட்டான். 'எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?' என்று கேட்கிறான்.
குர்ஆன் 36:78

'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் நன்கறிந்தவன்' என்று கூறுவீராக.
குர்ஆன் 36:79


ஒன்றுமில்லாத அற்ப விந்துவிலிருந்து ஒரு மனிதனை படைப்பதுதான் கஷ்டம். அதையே படைத்த இறைவனுக்கு இறந்து மக்கிப்போன எலும்புகளை திரும்பவும் உயிர் உண்டாக்குவது சிரமமில்லை என்பதை இந்த மனித குலத்துக்கு அறிவுறுத்துகிறான் இறைவன்.

கடவுள், சொர்க்கம், நரகம், கேள்வி கணக்குகள் அனைத்தும் பொய் என்று சொல்லும் பல நாத்திகர்களைப் பார்க்கிறோம். இன்று ஆத்திகனான நான் ஒரு நாத்திகனை விட அனைத்து சந்தோஷங்களையும் அனுபவித்து வருகிறேன். எனக்கு ஏதாவது துன்பங்கள் நேர்ந்தால் நேரே இறைவனிடம் சென்று அழுது பிரார்த்தித்து எனது பாரத்தை இறக்கி மனதை இலேசாக்கி விடுகிறேன். மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்று சகலமும் நிம்மதியாக வாழ்வு சென்று கொண்டிருக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே! நாததிகர்கள் சொல்வது ஒருக்கால் உணமையாகிப்போனால் அதனால் எனக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. ஒருகால் ஆத்திகனான நான் சொல்வது உண்மையாகி விட்டால் அங்கு அந்த நாத்திகர்களின் நிலையை நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும். அங்கு இறைவன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதிலை தரப் போகிறார்கள்?

எனவே உலகை நேசித்து உலக மக்களை நேசித்து உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் நேசித்து மனைவி மக்களை நேசித்து பிறந்த நாட்டையும் மொழியையும் நேசித்து உண்மையான ஆன்மீகத்தையும் நேசித்து இந்த பிறவிப் பலனை அடைய முயற்சிப்போம்.

------------------------------------------------------

உயிர் சம்பந்தமாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த கட்டுரையையும் அப்படியே தருகிறேன். படித்து பலனடையுங்கள். நேரம் கிடைக்கும் போது இதனை மொழி பெயர்த்து வெளியிடுகிறேன்.

A near-death experience occurs when quantum substances which form the soul leave the nervous system and enter the universe at large, according to a ground-breaking theory proposed by two eminent scientists.

According to this idea, consciousness is a programme for a quantum computer in the brain which can persist in the universe even after death, explaining the perceptions of those who have near-death experiences.

Dr Stuart Hameroff, Professor Emeritus at the Departments of Anesthesiology and Psychology and the Director of the Centre of Consciousness Studies at the University of Arizona, has advanced the quasi-religious theory, the Daily Mail reported.
It is based on a quantum theory of consciousness he and British physicist Sir Roger Penrose have developed which holds that the essence of our soul is contained inside structures called microtubules within brain cells.

They have argued that our experience of consciousness is the result of quantum gravity effects in these microtubules, a theory which they dubbed orchestrated objective reduction (Orch-OR).

Thus it is held that our souls are more than theinteraction of neurons in the brain. They are in fact constructed from the very fabric of the universe - and may have existed since the beginning of time.

The concept is similar to the Buddhist and Hindu belief that consciousness is an integral part of the universe – and indeed that it is really all there may be, a position similar to Western philosophical idealism, the paper said.

With these beliefs, Hameroff holds that in a near-death experience the microtubules lose their quantum state, but the information within them is not destroyed. Instead it merely leaves the body and returns to the cosmos.

"Let's say the heart stops beating, the blood stops flowing, the microtubules lose their quantum state. The quantum information within the microtubules is not destroyed, it can't be destroyed, it just distributes and dissipates to the universe at large," Hameroff told the Science Channel's Through the Wormhole documentary.
"If the patient is resuscitated, revived, this quantum information can go back into the microtubules and the patient says 'I had a near death experience'," Hameroff said.

"If they're not revived, and the patient dies, it's possible that this quantum information can exist outside the body, perhaps indefinitely, as a soul," Hameroff added.

http://www.indianexpress.com/news/neardeath-experiences-occur-when-soul-leaves-nervous-system/1024701/0







16 comments:

Anonymous said...

/நாததிகர்கள் சொல்வது ஒருக்கால் உணமையாகிப்போனால் அதனால் எனக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. / agnostic ஆக மாறிவிட்டீர்கள் போலும், வாழ்த்துக்கள் சகோ. நாத்திகம் என்பது நல்லது, கெட்டதை தீர்மானிப்பது அல்ல, மாறாக மெய், பொய்களை தேடுவதே. !

அஞ்சா சிங்கம் said...

/// நாததிகர்கள் சொல்வது ஒருக்கால் உணமையாகிப்போனால் அதனால் எனக்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. ஒருகால் ஆத்திகனான நான் சொல்வது உண்மையாகி விட்டால் அங்கு அந்த நாத்திகர்களின் நிலையை நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும். அங்கு இறைவன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதிலை தரப் போகிறார்கள்?
எனவே உலகை நேசித்து உலக மக்களை நேசித்து உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் நேசித்து மனைவி மக்களை நேசித்து பிறந்த நாட்டையும் மொழியையும் நேசித்து உண்மையான ஆன்மீகத்தையும் நேசித்து இந்த பிறவிப் பலனை அடைய முயற்சிப்போம்.//////

பாவம் இவரே கன்பீஸ் ஆயிட்டாரு ....:-))))
என்ன சுபி சார் ... என்னைமோ நாத்திகர்கள் எல்லாம் அன்பே இல்லாதவர்கள் மாதிரியும் ..... மனைவி மக்களை ரோட்டில் பிச்சை எடுக்கவிடுவது மாதிரியும் .. போகிற இடம் எல்லாம் குண்டு வைத்து கொண்டு திருவது மாதிரியும் ...நீங்க கவலை படுகிறீர்கள் ...
அதே நேரம் ஆத்திகர்கள் எல்லாம் . ஒரே லவ்வு மூடுல திரிவாங்க .போகிற இடம் எல்லாம் ரோஜா பூக்களை தூவிக்கொண்டே போபவர்கள் போல நீங்க பீல் பண்ணி இருக்கீங்க ..
பயபுள்ளைகள் அப்படி இருந்தாதான் பிரெச்சனை இல்லையே ......என் மதம் சொல்றதுதான் ரைட்டு .அதைதான் மற்றவர்களும் கடைபிடுக்கணும் .என்று அடுத்தவன் மூக்குக்குள் விரலை விடும் போதுதான் .பிரெச்சனை வருகிறது .
உண்மை என்ன வென்று கண்டு சொல்பவன் பகுத்தறிவாளன் ......என் நம்பிக்கை மட்டுமே உண்மை என்று கண்ணை மூடிகொல்பவன் ஆன்மீக வாதி ...............

suvanappiriyan said...

//agnostic ஆக மாறிவிட்டீர்கள் போலும், வாழ்த்துக்கள் சகோ. நாத்திகம் என்பது நல்லது, கெட்டதை தீர்மானிப்பது அல்ல, மாறாக மெய், பொய்களை தேடுவதே. ! //

ஆம்...அந்த அளவு அறிவு நமக்கு கொடுக்கப்படவில்லை.

உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.

ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)

ஐஸக் நியூட்டனுக்கே இந்த நிலை என்றால் நீங்களோ நானோ எம்மாத்திரம்.

suvanappiriyan said...

திரு அஞ்சா சிங்கம்!

//என்ன சுபி சார் ... என்னைமோ நாத்திகர்கள் எல்லாம் அன்பே இல்லாதவர்கள் மாதிரியும் ..... மனைவி மக்களை ரோட்டில் பிச்சை எடுக்கவிடுவது மாதிரியும் .. போகிற இடம் எல்லாம் குண்டு வைத்து கொண்டு திருவது மாதிரியும் ...நீங்க கவலை படுகிறீர்கள் ...//

ஒரு முஸ்லிம் எங்காவது குண்டு வைத்தால் அவனை கூப்பிட்டு குர்ஆனின் கட்டளைகளை விளக்கினால் உண்மையை உணருவான். ஒரு உயிரைக் கொன்றால் அதற்கு மறுமையில் என்ன தண்டனை என்பதை விளக்கினால் அதிலிருந்து மீள்வான். அதே தவறை அமெரிக்காவிலோ ரஷ்யாவிலோ ஒரு நாத்திகன் செய்தால் எதைக் கொண்டு அவனை நேர்வழிப்படுத்துவது?

எனவே மனிதனை நேர்வழிப்படுத்த இறைவனின் கட்டளை அவசியமாகிறது. அதை தவறாக விளங்கியவர்களை திருத்த முயற்சிக்க வேண்டுமே யொழிய இறைக் கட்டளையே தேவையில்லை என்ற முடிவு மற்றொரு விபரீதத்துக்குத்தான் வழி வகுக்கும்.

ராவணன் said...

அண்ணாச்சி.......நீங்க வைணவ ஹை யங்கரா?

இது எப்ப நடந்தது?

எனக்கு நம்ம முனியாண்டி சாமியை விட்டால் எதுவும் தெரியாது.

ஏக இறைவன் முனியாண்டியின் உண்மை பக்தனான நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க அண்ணாச்சி.

Seshadri said...

Dear Suvana Priyan

#ஒரு முஸ்லிம் எங்காவது குண்டு வைத்தால் அவனை கூப்பிட்டு குர்ஆனின் கட்டளைகளை விளக்கினால் உண்மையை உணருவான். ஒரு உயிரைக் கொன்றால் அதற்கு மறுமையில் என்ன தண்டனை என்பதை விளக்கினால் அதிலிருந்து மீள்வான்#

well said,

you can start with this mr.kashab who is in special jail counting the days. (no need to go outside of india, lot of peoples are waiting here)

suvanappiriyan said...

திரு சேஷாத்திரி!

//you can start with this mr.kashab who is in special jail counting the days. (no need to go outside of india, lot of peoples are waiting here) //

அஜ்மல் கசாபுக்கு பம்பாயில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளவர்களை கொல்ல என்ன அவசியம் வந்தது? அடுத்து இவ்வளவு பெரிய கூட்டம் மும்பை வரை வர அனுமதி அளித்தது யார்? குஜராத் கடல் மார்க்கத்தை அவர்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? ஹேமந்த் கர்கரேயை குறி வைத்து கொல்ல இவர்களுக்கு என்ன அவசியம் வந்தது? ஹேமந்த் கர்கரேயின் மனைவி நரேந்திர மோடி கொடுத்த பண முடிப்பை வாங்க மறுத்தது ஏன்? இப்படி பல கேள்விகளை கேட்டுப் பாருங்கள். நியாயமாக விசாரணை நடந்திருந்தால் உங்கள் ஆட்களில் பல பேர் இன்று கம்பி எண்ண வேண்டியிருக்கும்.

பாகிஸ்தான் போன்ற வறிய நாட்டில் ஒருலட்சம் ரூபாய் உனது குடும்பத்துக்கு தந்து விடுகிறேன் என்று ஆசை காட்டினால் அதற்கு தலையாட்ட பல பேர் உள்ளனர். இப்படி பட்ட வறியவர்களை கள்ள முல்லாக்களைக் கொண்டு நிறைவேற்றப் பட்டதே மும்பை துப்பாக்கி சூடு. அதனை நடத்திய முக்கிய குற்றவாளிகள் இன்னும் வெளி உலகில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

suvanappiriyan said...

திரு ராவணன்!

//ஏக இறைவன் முனியாண்டியின் உண்மை பக்தனான நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க அண்ணாச்சி.//

வாழ்த்துக்கு நன்றி!

விஜய் said...

//ஒருகால் ஆத்திகனான நான் சொல்வது உண்மையாகி விட்டால் அங்கு அந்த நாத்திகர்களின் நிலையை நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும். அங்கு இறைவன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதிலை தரப் போகிறார்கள்?//

என் விருப்பம் இல்லாமல் என்னை படைத்த உனக்கு என்னை தண்டிக்க தகுதி இல்லை என்று சொல்வேன்.

விஜய் said...

//ஒரு முஸ்லிம் எங்காவது குண்டு வைத்தால் அவனை கூப்பிட்டு குர்ஆனின் கட்டளைகளை விளக்கினால் உண்மையை உணருவான். ஒரு உயிரைக் கொன்றால் அதற்கு மறுமையில் என்ன தண்டனை என்பதை விளக்கினால் அதிலிருந்து மீள்வான்.//

அப்புறம் எதற்கு ஷரியா சட்டம்? குண்டு வைப்பதற்கு முன் குர்ஆன் படித்திருக்க மாட்டார்களா?

suvanappiriyan said...

திரு விஜய்!

//என் விருப்பம் இல்லாமல் என்னை படைத்த உனக்கு என்னை தண்டிக்க தகுதி இல்லை என்று சொல்வேன்.//

உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவன் உங்களிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டால் அதனை வரவேற்பீர்களா?

விஜய் said...

//உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவன் உங்களிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டால் அதனை வரவேற்பீர்களா? //

நானே என் தந்தையிடம் படிக்கும் வயதில் கேட்டிருக்கிறேன். மேலும் எது நல்லது எது கெட்டது என்று என் மகனுக்கு நேரடியாக என்னால் சொல்ல முடியும். ஆனால் கடவுளால் முடியாது. என் மகன் என்னை மீறி தவறு செய்துவிட்டால் அவனை எண்ணைக் கொப்பரையில் போடுவதற்கு எனக்கு மனம் வராது. ஆனால் கடவளுக்கு வரும்.

suvanappiriyan said...

//அப்புறம் எதற்கு ஷரியா சட்டம்? குண்டு வைப்பதற்கு முன் குர்ஆன் படித்திருக்க மாட்டார்களா?//

இது போன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் இரு வகை.

ஒரு வகை வறுமையினால் பணத்திற்காக தீவிரவாதத்தில் ஈடுபடுவது. அவனுக்கு பொருளாதாரம்தமான் குறிக்கோள்.

மற்றொரு வகை மூளை சலவை செய்வது. அதாவது குர்ஆனின் வசனங்களை தவறாக திரித்து 'நீ தற்கொலை குண்டுதாரியாக போனால் நேரே உனக்கு சொர்க்கம்' என்று மூளை சலவை செய்யப்படும். இதற்கு விலை போன பல கள்ள முல்லாக்கள் உலகமெங்கும் உண்டு. அமெரிக்காவும் இஸ்ரேலும் இவர்களைத்தான் தங்கள் வேலைகளுக்கு பயன் படுத்திக் கொள்கிறது. உண்மையான மார்க்கம் இந்த மக்களுக்கு சொல்லப்படும் வரை இந்த நிகழ்வு தொடரும்.

25, 30 வருடங்களுக்கு முன்னால் இதே தமிழகத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் முல்லாக்களல் கெடுக்கப்பட்டு பல தவறான வேலைகளில் ஈடுபட்டனர். தவ்ஹீத் பிரசாரம் (குர்ஆன் கூறும் உண்மையான இஸ்லாமிய வழி) தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் முடுக்கி விடப்பட்டது. தற்போது அனைத்து முஸ்லிம் கிராமங்களும் உண்மை இஸ்லாத்தை தெரிந்து கொண்டனர். இளைஞர்கள் தீவிரவாதத்தை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இன்று முஸ்லிம்கள் தரப்பில் தமிழகத்தில் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. மாற்று மத நண்பர்களோடு அன்போடு பழகவும் ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றம் முழு இந்தியாவிலும் ஏன் முழு உலகத்திலும் ஏற்பட வேண்டும்.

suvanappiriyan said...

//நானே என் தந்தையிடம் படிக்கும் வயதில் கேட்டிருக்கிறேன். மேலும் எது நல்லது எது கெட்டது என்று என் மகனுக்கு நேரடியாக என்னால் சொல்ல முடியும். ஆனால் கடவுளால் முடியாது. //

உங்கள் மகனுக்கு எவ்வாறு நல்லது கெட்டதை சொல்வீர்களோ அதுபோல் மனித குலத்துக்கு மனிதர்களிலேயே நல்லவர்களை இறைவன் தனது தூதராக தேர்ந்தெடுக்கிறான். மனிதனுக்கு வழிகாட்ட மனிதரிலிருந்துதான் ஒருவர் வர முடியும். இறைவன் மனிதனாக மாறினால் அது இறைவனின் மேன்மைக்கு பங்கமல்லவா? அந்த தூதருக்கு நல்லது எது கெட்டது கெட்டது எது? என்ற விளக்கங்கள் அடங்கிய வேதத்தையும் கொடுக்கிறான். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் இவ்வாறு லட்சக்கணக்கான தூதர்களை அனுப்பியுள்ளான். இவ்வாறு அனுப்பியும் தவறு செய்பவர்களையே இறைவன் தண்டிப்பதாக கூறுகிறான். எனவே தவறு நம்மிடம்தானே!

விஜய் said...

//இறைவன் மனிதனாக மாறினால் அது இறைவனின் மேன்மைக்கு பங்கமல்லவா?//

அப்படியென்றால் கடவுளிடமே தீண்டாமை இருக்கிறதா? கடவுள் என்னைப் படைத்ததையும், என்னால் என் மகன் பிறந்ததையும் ஒப்பிட்டு சொன்ன நீங்கள் இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்?

//ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் இவ்வாறு லட்சக்கணக்கான தூதர்களை அனுப்பியுள்ளான்.//

இப்படி கஷ்டப்பட்டு குழப்புவதற்கு பதிலாக ஒரே ஒரு முறை நேரில் தோன்றி சொல்லிவிடலாம். இல்லையென்றால் படைக்கும்போதே தன்னை நம்புகின்ற மாதிரி படைத்து விடலாம். (கடவுளுக்கு நாம் கட்டளையிட முடியாது என்று தான் சொல்ல போகிறீர்கள்)

suvanappiriyan said...

//அப்படியென்றால் கடவுளிடமே தீண்டாமை இருக்கிறதா? கடவுள் என்னைப் படைத்ததையும், என்னால் என் மகன் பிறந்ததையும் ஒப்பிட்டு சொன்ன நீங்கள் இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்?//

இதை தீண்டாமை என்று எப்படி சொல்கிறீர்கள்? மனிதனுக்கும் தெய்வத்துக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பார்வை இருவருக்கும் உண்டு. ஆனால் தூரத்தில் வித்தியாசப்படுகிறோம். இது போல் அனைத்திலும் சூப்பர் பவரான ஒருவனை மனிதனுக்கு நிகராக நாம் எவ்வாறு கருத முடியும்?

//இப்படி கஷ்டப்பட்டு குழப்புவதற்கு பதிலாக ஒரே ஒரு முறை நேரில் தோன்றி சொல்லிவிடலாம். இல்லையென்றால் படைக்கும்போதே தன்னை நம்புகின்ற மாதிரி படைத்து விடலாம். (கடவுளுக்கு நாம் கட்டளையிட முடியாது என்று தான் சொல்ல போகிறீர்கள்)//

பதிலை நீங்களே சொல்லி விட்டீர்கள்.