Followers

Friday, November 09, 2012

இளையராஜாவிடம் உள்ள ஆணவம் குறைய வாய்ப்பில்லையா?



கேள்வி: உங்களிடம் அவ்வப்போது தோன்றும் ஆணவம் அகம்பாவம் பற்றி?
எ.சி.பி.தாஸ், திருத்துறைப் பூண்டி.

இளையராஜாவின் பதில்: அவ்வப்போது எங்கே தோன்றுகிறது? அது ஒன்றுதானே எப்போதும் கூட இருக்கிறது. அது இல்லை என்றால் இசை எப்படி வரும்?

நனறி குமுதம்.

இப்படி ஒரு பதிலை நமது இசை ஞானி திறமையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசியுள்ளார். இது ஒரு ஏற்புடைய பதில்தானா? ஒருவனுக்கு திறமை இருந்தால் அவனுக்கு ஆணவமும் அகம்பாவமும் இருந்தே ஆக வேண்டும் என்ற நியதி இருக்கிறதா? அந்த தொனியில்தான் உள்ளது இவரது பதில்.

இசையை பொருத்த வரையில் இளையராஜா திறமையானவர்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் கே.வி.மஹாதேவனுக்கும் அடுத்து தனது முத்திரையை மிக ஆழமாக தமிழ்த் திரையுலகில் பதித்தவர். ஹிந்திப் படங்களின் பாடல்களையே மாறுதலுக்காக கேட்டு வந்த காலங்களில் இவரது இசை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதிலெல்லாம் எந்த குறையும் இல்லை.

ஆனால் ஒருவனின் திறமைக்கு அவனது ஆணவமும் அகம்பாவமும்தான் காரணம் என்பதை எவரும் ஒத்துக் கொள்ள முடியாது. இதற்கு உதாரணமாக ஏ.ஆர்.ரஹ்மானை சொல்லலாம். கடந்த இருபது வருடங்களாக தமிழக அளவில் அல்லாது இந்திய அளவில் அல்லாது உலக அளவில் தனது திறமையை பறை சாற்றி தமிழகத்துக்கு பெருமையை தேடித் தந்து கொண்டிருக்கிறார்.. இத்தனை வருடம் பணி செய்தாலும் யாரிடமும் எந்த நிலையிலும் ஆணவத்துடனோ அகங்காரத்துடனோ நடந்து கொண்டதை நாம் பார்க்கவில்லை. தனது முன்னேற்றத்திற்கும் திறமைக்கும் காரணம் இறைவன் அருளே என்கிறார். எவரிடம் பேசினாலும் பணிவோடும் அன்போடும் தான் என்ற அகங்காரம் இல்லாமலும் பேசுவதை பார்க்கிறோம்.

ஆணவமும் அகம்பாவமும் தான் ஒருவனின் திறமையின் அளவுகோல் என்றால் ரஹ்மான் திமிரின் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும்.

ஒருமுறை சிஎன்எனில் பேட்டியின் போது 'நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். ஆனால் இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறதே...இது பற்றி உங்கள் கருத்து?' என்று பேட்டியெடுத்த பெண்மணி கேட்டார். அதற்கு மிகவும் சமயோசிதமாக 'சாரி....இது பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இது சம்பந்தமாக நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை' என்று ஒதுங்கிக் கொண்டார். இதற்கு மாற்றாக அதற்கு விளக்கம் சொல்லப் போகிறேன் என்று ஏதாவது சொல்லப் போக அது மிகப் பெரிய பிரச்னையை உண்டு பண்ணும் என்பதை உணர்ந்து தனது நாவை பேணிக் கொண்டார்.

ஒரு மனிதனுக்கு சுய மரியாதை இருக்க வேண்டும். அதை எல்லோரும் விரும்புவோம். ஒரு முறை முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு சம்பந்தப்பட்ட ஒரு படத்துக்கு இசை அமைக்க இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகிறார். முதல்வர் உள்ளே இருக்கிறார் என்பதால் பாதுகாப்பு காரணம் கருதி இளையராஜாவை வழியிலேயே நிறுத்தி நடந்து போக சொல்கின்றனர் பாதுகாப்பில் இருந்தோர். இதனை பொறுத்துக் கொள்ளாத இளையராஜா வண்டியை திருப்ப சொன்னார். தான் காலாகாலமாக இசையமைத்து வரும் ஒரு ஸ்டுடியோவில் என்னை இறங்கச் சொல்வதா? என்று கோபம் மேலிட்டது. கடைசியில் குடி சம்பந்தமாக அரசு எடுக்கும் அந்த படத்துக்கு இசையே அமைக்கவில்லை. இந்த தன்மான உணர்வு இருப்பதில் தவறில்லை.

அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானை எடுத்துக் கொண்டால் இன்று வரை எவரது காலிலும் விழுந்ததில்லை. ஏனெனில் தனது தலையை ஒரு மனிதனின் காலடியில் வைப்பது தவறு என்பதை உணர்ந்திருக்கிறார். இறைவனுக்கு மாத்திரமே எனது தலை சாயும். சக மனிதருக்கு எனது சிரத்தை சாய்க்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதுவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் அதற்காக திமிரோடு நடப்பேன். அகம்பாவத்தோடு இருப்பேன். அதனால்தான் நான் திறமையான இசையை உங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொல்வது பெரியோர்க்கு அழகல்ல. இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். தன்மானத்துக்கும் அகம்பாவத்துக்கும் சிறிய இடைவெளியே உள்ளது. தன்மானம் அளவுக்கு மீறி அதிகரித்தால் திமிரில் கொண்டு போய் விட்டு விடும். எனவே மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டிய இடம் இது. மனிதன் எந்த அளவு உயர்கிறானோ அந்த அளவு அவனுக்கு பணிவு வர வேண்டும். அது அவனது புகழை மேலும் மேலும் உயர்த்தும் என்பதை இசைஞானி உணர வேண்டும்.

-----------------------------------------

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

குறள் 100:991


எல்லோரிடத்திலும் எளிமையாகப் பழகுவதால் பண்புடைமை எனும் நல்ல நெறியை அடைவது அனைவருக்கும் எளிதாகி விடும் என்கிறார் வள்ளுவர்.

------------------------------------------

'மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் இறைவன் விரும்ப மாட்டான்'
-குர்ஆன் 31:18


50 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

திறமை வேறு; புகழ் வேறு.

ரகுமான் ஆஸ்கர் பரிசு வாங்கிவிட்டதாலோ அல்லது உலகப் படங்களுக்கு இசையமைத்து விட்டதாலோ அவர் இளையராஜாவை விடத் திறமை வாய்த்தவர் என்று சொல்லிவிடமுடியாது..
ரகுமான் 500 படங்களுக்கு மேல் ஒருவேளை இசையமைத்து விட்டால் அப்போது அவரையும் இளையராஜாவையும் ஒப்பிடலாம்.

ரகுமான் நிச்சயம் பணிவானவர். இதையே அவர் பணிவானவர் போல பொதுவில் நடிக்கிறார் என்றும் விமர்சிக்கலாம்.

இளையராஜா உண்மையில் எப்படிப்பட்டவர் என்பது அவரை நெருங்கிப் பழகிய பாலு,பாரதிராஜா போன்றவர்களுக்கே தெரியும்.

அவரிடம் கலை கர்வம் உண்டு அல்லது அதை அவர் எப்போதும் வெளிக்க்காட்டிக் கொண்டே இருப்பார்.
அதற்கான உளவியல்,அவரது வேர் போன்ற பல காரணங்கள் உண்டு.

நீங்கள் எழுதியிருப்பது போல பொத்தாம் பொதுவாக ரகுமானுடன் ஒப்பிடும் விதயம் அல்ல அது.

suvanappiriyan said...

திரு அறிவன்!

//ரகுமான் ஆஸ்கர் பரிசு வாங்கிவிட்டதாலோ அல்லது உலகப் படங்களுக்கு இசையமைத்து விட்டதாலோ அவர் இளையராஜாவை விடத் திறமை வாய்த்தவர் என்று சொல்லிவிடமுடியாது..
ரகுமான் 500 படங்களுக்கு மேல் ஒருவேளை இசையமைத்து விட்டால் அப்போது அவரையும் இளையராஜாவையும் ஒப்பிடலாம்.//

நன்றாக இசை அமைப்பதில் வல்லவர் இளையராஜாவா ரஹ்மானா என்ற வாதத்துக்குள் நான் செல்லவில்லை. ஒரு மனிதனுக்கு திறமை என்பது அவனுக்குள் இருக்கும் கர்வமும் அகம்பாவமுமே என்ற தொனியில் பதிலளித்தது ஏற்புடையதுதானா என்பதே எனது கேள்வி.

தருமி said...

http://dharumi.blogspot.in/2005/10/87.html -- இதில் எனது ஏழாவது கட்டளை பாருங்களேன்.

ஜெயகாந்தன், கண்ணதாசன், சிவாஜி கணேசன் - இவர்களது இறுமாப்பு எனக்குப் பிடிக்கும். இதில இளைய ராஜாவையும் சேர்த்துக் கொள்கிறேன்.

முடி இருக்கிற் மவராசி இழுத்து முடிஞ்சிக்கிறா ...

suvanappiriyan said...

திரு தருமி!

//ஜெயகாந்தன், கண்ணதாசன், சிவாஜி கணேசன் - இவர்களது இறுமாப்பு எனக்குப் பிடிக்கும். இதில இளைய ராஜாவையும் சேர்த்துக் கொள்கிறேன்.//

நான் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். கூழை கும்பிடு போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதில் எனக்கும் பிடித்தமில்லை. அதற்காக வாழ்நாள் முழுக்க எவரையும் மதிக்காமல் திமிராக நடப்பது ஏற்புடைய செய்லா?

//முடி இருக்கிற் மவராசி இழுத்து முடிஞ்சிக்கிறா ... //

நன்றாக முடிந்து கொள்ளட்டும். அது அவரவர்களின் இயல்பை பொருத்தது. ஆனால் அப்படி முடிந்து கொள்வதற்கு திமிரும் அகங்காரமும் இருந்தே ஆக வேண்டும் என்பதைத்தான் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

கவிதை வானம் said...

நண்பரே! அவர்தான் அதே குமுதத்தில் தான் யார் மனதையும் புண்படுத்தினால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாரே...வள்ளுவர் வாக்குப்படி அவர் மீண்டும் பெரியோராகிவிட்டாரே

suvanappiriyan said...

திரு பரிதி முத்தரசன்!

//நண்பரே! அவர்தான் அதே குமுதத்தில் தான் யார் மனதையும் புண்படுத்தினால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாரே...வள்ளுவர் வாக்குப்படி அவர் மீண்டும் பெரியோராகிவிட்டாரே //

அவர் பொதுவில் வைத்த கருத்தை மாற்றிக் கொண்டதாக சொல்லவில்லையே! இவரது கருததுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் நம்மிடம் திறமை இருந்தால் திமிரும் அகம்பாவமும் இருக்க வேண்டுமோ என்ற தவறான முடிவுக்கு சென்று விடுவார்கள் அல்லவா?

நன்னயம் said...

இளையராஜா திமிராக நடக்கின்றார் என்பது உண்மையே. ஆனால் எல்லோரிடமும் அல்ல.
தனக்கு மூத்த இசை அமைப்பாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
சமீபத்தில் விஸ்வநாதன் அவர்களுக்கான பாராட்டு விழா ஒன்றில் மெல்லிசை மன்னர் துப்பிய எச்சில் தான் தன இசை என்று பகிரங்கமா கூறினார். அவர் அவ்வாறு கூற உள் நோக்கம் எதுவும் இல்லை. அவர் யாருக்கும் ஜால்ரா அடிக்கும் குணம் இல்லாதவர். தனக்கு முன்னோடியானவர்களை மதிப்பதில் பின் நிற்க மாட்டார்.

ரஹ்மான் அப்படியா? வெளிப்படியாக அடக்கமானவர் போன்று தோன்றினாலும் உள்ளுக்குள் அப்படியா?
தனக்கு மூத்த இசை அமைப்பாளர்கள் பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

ஒரு தடவை இளையராஜாவிடம் என்ன கற்று கொண்டீர்கள் என்று கேட்ட போது" ராஜா வுக்கு முன் இசையமைப்பார்கள் அனைவரும் இசை அமைக்கும் போது கஞ்சா அடித்து விட்டுதான் இசை அமைப்பார்கள் தானும் கஞ்சா அடித்தால் இசை வரும் என்று நினைத்ததாகவும் ஆனால் இளையராசாவை பார்த்த பின் தான் ஒழுக்கமாக இருந்தும் இசை அமைக்கலாம் என்பதை அறிந்ததாக கூறினார்.
அப்போ ராஜாவுக்கு முன் விஷ்வானாதன் எல்லோரும் கஞ்சா அடித்துதான் இசை அமைத்தார்களா? ?

தனக்கு மூத்த இசை அமைப்பாளர்களை ரஹ்மான் புகழ்ந்து ஒன்றும் சொன்னது இல்லை. விதிவிலக்கு அவர் அப்பா சேகர் , மற்றும் நௌஷாத்

நன்னயம் said...

"அதற்காக வாழ்நாள் முழுக்க எவரையும் மதிக்காமல் திமிராக நடப்பது ஏற்புடைய செய்லா?"
இளையராஜா திமிராக நடக்கின்றார் என்பது உண்மையே. ஆனால் எல்லோரிடமும் அல்ல.
தனக்கு மூத்த இசை அமைப்பாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
சமீபத்தில் விஸ்வநாதன் அவர்களுக்கான பாராட்டு விழா ஒன்றில் மெல்லிசை மன்னர் துப்பிய எச்சில் தான் தன இசை என்று பகிரங்கமா கூறினார். அவர் அவ்வாறு கூற உள் நோக்கம் எதுவும் இல்லை. அவர் யாருக்கும் ஜால்ரா அடிக்கும் குணம் இல்லாதவர். தனக்கு முன்னோடியானவர்களை மதிப்பதில் பின் நிற்க மாட்டார்.

நன்னயம் said...

தனக்கு முன்னோடிகளை கண்டு கொள்ளாமல் விடுவதும் ஒரு வகை அகம்பாவம் தான். பாராட்டு விழாக்களுக்கு சென்றால் மட்டும் போடாது அந்த மூத்தவர்கள் தமக்கு எவ்வாறு முன் உதாரணமாக இருந்தார்கள் என்பதையும் உலகறிய சொல்ல வேண்டும்.
தான் எதோ சுயம்பு போல் பாவனை செய்வதும் அகம்பாவம் தான்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

ராஜாவிற்கு இருப்பது வித்தாகர்வம் ,ஞானசெறுக்கு என்பார்கள், இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பல இசை கலைஞர்கள், கலைஞர்கள் அப்படி யுண்டு. நாம் இசையை மட்டும் கேட்டு மகிழ்ந்துவிட்டு போகாமல் ஏன் அவர்களை கொண்டாட வேண்டும்? கொண்டாடப்போக தானே அவர்கள் பெரிய ஆட்களாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மக்கள் பிரபலமாக ஒருவர் இருப்பதால் அவர் பின்னாடியே போவதை தவிர்க்க வேண்டும்.

இதனாலேயே யாரிடமும் ஆட்டோ கிராப் வாங்குவதே இல்லை, எழுத்தாளர்களிடம் அவர்கள் எழுதிய நூலில் கையொப்பம் இட சொல்லி வாங்கியதுண்டு, ஏன் எனில் அவர்கள் நூலை நாம் வைத்திருக்க போகிறோம் அதில் அவர்களது கையொப்பம் இருந்தால் ஒரு பொருள் உண்டு என.

பாடகர், இசை அமைப்பாளர்,நடிகர்களின் கையொப்பம் வாங்கி என்ன செய்ய. நிறைய பேர் ஏர் போர்ட்டில் கூட ஆட்டோ கிராப் கேட்டு நிற்பதை பார்த்துள்ளேன் ,அவர்களோ விமானத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருப்பார்கள் :-))
---------

ரெஹ்மான் , அடக்கமானவர் என தொ.காவில் பேசுவதை வைத்தே முடிவு செய்தீர்களாக்கும் :-))

கிட்டக்க போனால் தான் உண்மை தெரியும், எல்லாம் ஒரு செலிபிரிட்டி என்ற கர்வத்தில் தான் இருப்பார்கள்.

ராஜாவாது சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சம்பளம் பற்றி கவலைப்படாமல் இசை அமைப்பார், ரெஹ்மான் காசு பெயராத இடம் எனில் பார்க்க கூட அனுமதிக்க மாட்டார் என கேள்விப்பட்டுள்ளேன்.

ஆரம்பத்தில் எல்லாமே ஏதேனும் ஒரு படம் கிடைக்காதா என ஏங்கி தானே இருந்திருப்பார்கள், இவருக்கு முதல் படம் மணிரத்னம் என்பதால் எல்லாமே அதே போல இருக்கணும் என நினைப்பதும் ஆணவம் தான்.

----------
இஸ்லாமில் இசை அனுமதியில்லை என்று சொல்கிறீர்கள், ரெஹ்மான் ஒன்றும் ஒரே ஒரு இஸ்லாமிய இசை அமைப்பாளர் இல்லை, ஹிந்தி படங்களில் பெரும்பாலும் இஸ்லாமிய இசை அமைப்பாளர்கள் தான், பல இந்துஸ்தானி இசை கலைஞர்களும் இஸ்லாமியர்கள் தான், ஏன் இஸ்லாம் தோன்றிய காலத்தில் இருந்தே இஸ்லாமிய இசை கலைஞர்களும் புகழுடன் இருந்துள்ளார்கள்.

அப்போதெல்லாம் இஸ்லாத்தில் இசைக்கு அனுமதியில்லைனு தெரியாமலா இருந்தது?

அக்பரின் அவையில் இருந்த தான்சேன் இஸ்லாமியர் தான், அக்பர் மட்டும் அல்ல எல்லா இஸ்லாமிய மன்னர்களின் அவையிலும் இசை கலைஞர்கள் உண்டு.அப்படியிருக்கும் போது இஸ்லாத்தில் இசை தடை செய்யப்பட்டது என சொல்வதை கட்டாயம் பின் பற்ர வேண்டும் என இப்போது போய் ரெஹ்மானிடம் கேட்பது வேடிக்கையானது.

suvanappiriyan said...

திரு எதிகாலிஸ்ட்!

//சமீபத்தில் விஸ்வநாதன் அவர்களுக்கான பாராட்டு விழா ஒன்றில் மெல்லிசை மன்னர் துப்பிய எச்சில் தான் தன இசை என்று பகிரங்கமா கூறினார். //

இந்த அளவு தன்னை தாழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கு நேர் மாறாக எனக்கு திமிர் இருப்பதால்தன் உங்களுக்கு இசையை என்னால் தர முடிகிறது என்று சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. நடு நிலையை கடை பிடிக்க வேண்டும்.

//தனக்கு மூத்த இசை அமைப்பாளர்களை ரஹ்மான் புகழ்ந்து ஒன்றும் சொன்னது இல்லை. விதிவிலக்கு அவர் அப்பா சேகர் , மற்றும் நௌஷாத் //

ஏன் புகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அப்படி புகழ்ந்து மேடையில் சொன்னால்தான் அவர்களை மதிப்பதாக அர்த்தமா. ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் 'இது மட்டும் நான் பெற்ற வெற்றி அல்ல. இளையராஜா, விஸ்வநாதன், மஹாதேவன் போன்ற ஜாம்பவான்களின் திறமைகளை எல்லாம் ஒன்றாக்கி அவர்கள் சார்பாகவே இந்த விருதை நான் வாங்கினேன்.' என்று சொன்னாரே. இதை விட அதிகமாக என்ன சொல்ல வேண்டும்?

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//மக்கள் பிரபலமாக ஒருவர் இருப்பதால் அவர் பின்னாடியே போவதை தவிர்க்க வேண்டும்.//

//இதனாலேயே யாரிடமும் ஆட்டோ கிராப் வாங்குவதே இல்லை//

உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை ஏர்போர்டில் ரஜினி விமானத்துக்காக காத்திருந்தார். சென்னை ஏர்போர்டில் கமல ஹாசனையும் பர்த்தேன். இருவரிடமும் சென்று கைகுலுக்வோ ஆட்டேகிராஃப் வாங்கவோ தோணவில்லை. இதுபோல் பிரபலங்களை சுற்றுவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும்.

//ரெஹ்மான் , அடக்கமானவர் என தொ.காவில் பேசுவதை வைத்தே முடிவு செய்தீர்களாக்கும் :-))

கிட்டக்க போனால் தான் உண்மை தெரியும், எல்லாம் ஒரு செலிபிரிட்டி என்ற கர்வத்தில் தான் இருப்பார்கள்.//

இருக்கலாம். ரஹ்மானே கர்வத்தோடு நடந்து பேட்டி கொடுத்தால் அதனையும் கண்டிக்க வேண்டும்.

//இஸ்லாமில் இசை அனுமதியில்லை என்று சொல்கிறீர்கள், ரெஹ்மான் ஒன்றும் ஒரே ஒரு இஸ்லாமிய இசை அமைப்பாளர் இல்லை, ஹிந்தி படங்களில் பெரும்பாலும் இஸ்லாமிய இசை அமைப்பாளர்கள் தான், பல இந்துஸ்தானி இசை கலைஞர்களும் இஸ்லாமியர்கள் தான், ஏன் இஸ்லாம் தோன்றிய காலத்தில் இருந்தே இஸ்லாமிய இசை கலைஞர்களும் புகழுடன் இருந்துள்ளார்கள்.

அப்போதெல்லாம் இஸ்லாத்தில் இசைக்கு அனுமதியில்லைனு தெரியாமலா இருந்தது?//

இது சர்ச்சைக்குரிய கேள்வி. அறிஞர்களிடையே கூட இசை கூடுமா? கூடாதா? என்பதில் சர்ச்சை இருக்கிறது. குர்ஆனில் நேரிடையான தடை இல்லை. முகமது நபியின் சில ஹதீதுகள் இசையை எதிர்க்கின்றன. மற்றும் சில ஹதீதுகள் பண்டிகை காலங்களில் சந்தோஷமாக இருக்க அனுமதிக்கின்றன. குர்ஆனின் வாக்கியங்களும் கவிதை முறையிலேயே அமைந்துள்ளது. அதை ராகத்தோடு ஓதுவதற்கென்று சில விதிமுறைகளும் இருக்கிறது.

இசை நம்மை ஆட்கொண்டு விடாமல் அதற்கு அடிமையாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இசையின் மூலம் தவறான கருத்துகள் புகுத்தப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். இன்றும் இஸ்லாமிய உலகில் இசை சம்பந்தமாக சர்ச்சை நடந்து கொண்டுதான் இருக்கிறது.



சேக்காளி said...

வவ்வால் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.மேலும் அவரே ஒத்துக்கொண்டது போல்இளையராஜா திமிர் பிடித்தவர் தான். அதனால் நமக்கு என்ன வந்து விடபோகிறது அல்லது குறைந்து விடப்போகிறது.அவரது திமிரான இந்த பதிலால் குமுதம் அதன் வாசகர்களை இழந்தால் கேள்வி பதிலை நிறுத்தப் போகிறது.அப்போது ராஜா பாடம் கற்றுக்கொள்ளட்டுமே.எனக்கு அந்த திமிர் பிடிக்கும்.

suvanappiriyan said...

திரு சேக்காளி!

//அவரது திமிரான இந்த பதிலால் குமுதம் அதன் வாசகர்களை இழந்தால் கேள்வி பதிலை நிறுத்தப் போகிறது.அப்போது ராஜா பாடம் கற்றுக்கொள்ளட்டுமே.//எனக்கு அந்த திமிர் பிடிக்கும்.//

ஒரு சிலரின் பிறவிக் குணம் அவ்வளவு சீக்கிரம் மாறி விடாது. ஆனால் அவரது பதிலால் எவரும் தவறான முடிவெடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே இதனை பதிந்தேன்.

//எனக்கு அந்த திமிர் பிடிக்கும்.//

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கலாம். எனக்கு இந்த திமிர் குணம் பிடிக்காது. அவ்வளவே!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இளையராஜா புகழின் உச்சத்தில் இருந்தபோது புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் சாதாரணமானவர்களாக இருந்தாலும் அனைவரையும் சமமாக நடத்தினார். அந்தப் பிடிவாதம் அவர்கள் ராஜாவிடமிருந்து விலக காரணமாக இருந்தது. ஏ.ஆர் ரகுமானோ முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கே இசை அமைப்பார்.

Read more: http://tnmurali.blogspot.com/2012/10/blog-post_6.html#ixzz2BofeczBT

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பதிவேழுதுபவர்களிடமே ஆணவப் போக்கு காணப்படும்போது சரித்திரம் படைத்த அவர் ஆணவம் கொள்வதில் தவறில்லை.
இப்போதுதான் இளையராஜா அதிகமாகப் பேசுகிறார்.ஓய்வும் வயதும்தான் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

[[தனக்கு மூத்த இசை அமைப்பாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
சமீபத்தில் விஸ்வநாதன் அவர்களுக்கான பாராட்டு விழா ஒன்றில் மெல்லிசை மன்னர் துப்பிய எச்சில் தான் தன இசை என்று பகிரங்கமா கூறினார். அவர் அவ்வாறு கூற உள் நோக்கம் எதுவும் இல்லை. அவர் யாருக்கும் ஜால்ரா அடிக்கும் குணம் இல்லாதவர். தனக்கு முன்னோடியானவர்களை மதிப்பதில் பின் நிற்க மாட்டார்.

ரஹ்மான் அப்படியா? வெளிப்படியாக அடக்கமானவர் போன்று தோன்றினாலும் உள்ளுக்குள் அப்படியா?
தனக்கு மூத்த இசை அமைப்பாளர்கள் பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா?]]

அருமையான கருத்து.

நிச்சயம் ரகுமான் தனது முன்னோடிகளைப் பற்றி என்றும் எதுவும் சொன்னதில்லை.

சேகரிடம் இருந்து வந்த இசை டிஎன்ஏ நிச்சயம் ரகுமானிடம் உண்டு.ஷாஜி எழுதிய சொல்லில் அடங்காத இசை' தொடரில் சேகர் பற்றிப் படித்தால் உங்களுக்கு அவருடைய இசைத் தாகமும், அங்கீகாரம் கிடைக்காத வேட்கை வெறி மற்றும் தாபத்தினால் அவரடைந்த துன்பமும் எளிதில் உணரக் கூடியதே.அந்த வீச்சுதான் ரகுமானிடம் இயல்பாக வந்தது.

ஆனால் இளையராஜா விசுவநாதன் போன்றவர்கள் நிச்சய சுயம்புகள்.

சுயம்புகள் எப்போதும் வித்யா கர்வம் உடையவர்கள்.

சிவாஜி,கமல்,இளையராஜா என்று பலர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.

ரகுமான் மேடைகளிலும் நடிக்கிறார் என்றே தோன்றுகிறது.

அதற்கு இயல்பான மற்றவர்கள் எவ்வளவோ மேல் என்பதுதான் உண்மை.

Jayadev Das said...

இளையராஜாவுக்கு கர்வம் இருந்தது, "சின்னச் சின்ன ஆசை" பாட்டு ரிலீஸ் ஆகும்வரை, என்னைக்கு அந்த பட்டும் ரோஜா படமும் வந்துச்சோ அன்னைக்கோ அவரது கர்வம் 100% காலி. இப்போ இருப்பதாகாச் சொல்லிக் கொள்கிறார் அவ்வளவுதான்.

இறைவனைத் தவிர வேறு யாரும் வணங்கத் தக்கவர்கள் இல்லையா........!! இது உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்ட பாடமாக இருக்கலாம் மாதா, பிதா, குரூ இவங்களுக்கு அப்புறம் தான் தெய்வம் என்பது எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. இவர்கள் எல்லோரும் வணங்கத் தக்கவர்களே. பண்டர்பூர் விட்டலன் நேரில் வந்த போதும், தனது தாய் தந்தை சேவையை விட்டு விட்டு உன்னை வந்து பார்க்க முடியாது என்று, அவனை காத்திருக்க அரைச் செங்கல்லை வீசியெறிந்து அதன் மேல் நின்று கொண்டிரு எனச் சொன்னவன் சிறந்த பக்தன் என்று இறைவனே மெச்சியது வரலாறு.

தருமி said...

//முகமது நபியின் சில ஹதீதுகள் இசையை எதிர்க்கின்றன. //

அப்போதான் எல்லாம் முடிஞ்சி போச்சே... ஓ! அது வீக் ஹதீசாக இருக்குமோ?!

தருமி said...

//எனக்கு இந்த திமிர் குணம் பிடிக்காது.//

குட்! நீங்கள் அப்படி இருக்காதீர்கள். சரியா?

எனக்கு இந்த திமிர் குணம் பிடிக்கும்!

suvanappiriyan said...

திரு ஜெய தேவதாஸ்!

//இளையராஜாவுக்கு கர்வம் இருந்தது, "சின்னச் சின்ன ஆசை" பாட்டு ரிலீஸ் ஆகும்வரை, என்னைக்கு அந்த பட்டும் ரோஜா படமும் வந்துச்சோ அன்னைக்கோ அவரது கர்வம் 100% காலி. இப்போ இருப்பதாகாச் சொல்லிக் கொள்கிறார் அவ்வளவுதான்.//

இன்றும் அவருக்கு அந்த கர்வம் இருப்பதாகவே சொல்லிக் கொள்கிறார். எனவேதான் தியமையான பாடல்களை தர முடிகிறது என்று சொல்வதுதான் பிரச்னையே!

//இறைவனைத் தவிர வேறு யாரும் வணங்கத் தக்கவர்கள் இல்லையா........!! இது உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்ட பாடமாக இருக்கலாம் மாதா, பிதா, குரூ இவங்களுக்கு அப்புறம் தான் தெய்வம் என்பது எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. இவர்கள் எல்லோரும் வணங்கத் தக்கவர்களே.//

வணங்குதல் மரியாதை இரண்டையும் நாம் போட்டு குழப்பிக் கொள்கிறோம். இந்த உலகில் முதன்முதல் மரியாதை செலுத்தசொல்கிறவர்கள் தந்தையையும் தாயையுமே. நமது ஆசிரியர்களையும் மதிக்கவே சொல்கிறது இஸ்லாம. ஆனால் வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்குத்தான்.

என்னதான் குருவுக்கு மரியாதை செலுத்தினாலும் அந்த குரு தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் சில்மிசம் பண்ணுவதை தினமும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். சில மாணவிகளை இழுத்துக் கொண்டு ஓடிய ஆசிரியர்களும் உண்டு. மாணவர்களை இழுத்துக் கொண்டு ஓடிய ஆசிரியைகளும் உண்டு. அதே போல் தான் பெற்ற மகளையே வன்புணர்வுக்கு உள்ளாக்கிய எத்தனையோ தகப்பன்களை உலகம் முழுவதும் பார்க்கிறோம். நம் நாட்டிலேயே பார்க்கிறோம். தனது தாயையே தவறாக பயன்படுத்திய எத்தனையோ சிறுக்கன்களை பார்த்து வருகிறோம். எனவே மரியாதையையும் வணக்கத்தையும் நாம் பிரித்துப் பார்க்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

உங்களின் நம்பிக்கையை நான் குறை சொல்லவில்லை.


suvanappiriyan said...

//ரகுமான் மேடைகளிலும் நடிக்கிறார் என்றே தோன்றுகிறது.//

உங்களுக்கு தோன்றுவது எல்லாம் உண்மையாகி விடாது நண்பரே!

//சேகரிடம் இருந்து வந்த இசை டிஎன்ஏ நிச்சயம் ரகுமானிடம் உண்டு.ஷாஜி எழுதிய சொல்லில் அடங்காத இசை' தொடரில் சேகர் பற்றிப் படித்தால் உங்களுக்கு அவருடைய இசைத் தாகமும், அங்கீகாரம் கிடைக்காத வேட்கை வெறி மற்றும் தாபத்தினால் அவரடைந்த துன்பமும் எளிதில் உணரக் கூடியதே.அந்த வீச்சுதான் ரகுமானிடம் இயல்பாக வந்தது.

ஆனால் இளையராஜா விசுவநாதன் போன்றவர்கள் நிச்சய சுயம்புகள்.//

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனை மறந்து விட்டீர்களே! அவர் ஆரம்பத்தில் போடாத பாட்டுகளா? இவர்கள் குடும்பத்திலும் அவ்வாறு இசை தொடர்பு உடையவர்கள் இருந்திருக்கலாம். விஸ்வநாதன் அவர்களின் வெற்றியில் ராமமூர்த்தி அவர்களின் பங்களிப்பையும் நாம் மறக்க முடியாது. எனவே எவருமே சுயம்பூவாக ஒன்றை படைத்து விட முடியாது. சுற்று சூழலும் ஆர்வமும் தான் ஒருவனை திறமையானவாக உருவாக்குகிறது.

suvanappiriyan said...

திரு டி என் முரளிதரன்!

//பதிவேழுதுபவர்களிடமே ஆணவப் போக்கு காணப்படும்போது சரித்திரம் படைத்த அவர் ஆணவம் கொள்வதில் தவறில்லை.
இப்போதுதான் இளையராஜா அதிகமாகப் பேசுகிறார்.ஓய்வும் வயதும்தான் அதற்குக் காரணமாக இருக்கலாம்.//

ஆணவம் யாரிடம் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே! திறமைக்கும் ஆணவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒருகால் ஓய்வு தற்போது அதிகம் கிடைப்பதால் நியை பேசுகிறார் போல் இருக்கிறது.

suvanappiriyan said...

திரு தருமி!

//குட்! நீங்கள் அப்படி இருக்காதீர்கள். சரியா?

எனக்கு இந்த திமிர் குணம் பிடிக்கும்!//

மல ஜலத்தை சுமந்து கொண்டு திரியும் நமக்கு எதற்கு சார் வீண் திமிரும் அகம்பாவமும். சரி உங்கள் விருப்பம் அதில் நான் தலையிட முடியாது.

ராவணன் said...

அண்ணாச்சி....ரகுமான் தர்காவாசி...அங்கே சென்று தொழுவார். நமக்கு சரிப்பட்டு வருமா?

ராவணன் said...

அண்ணாச்சி....இயல்பாய் இருக்கும் இளையராசாவே எப்பவும் பெட்டர்.

ஒரு நடிகனாய் மாறிய ரகுமான் சுத்த வேஸ்ட்.

ராவணன் said...

அண்ணாச்சி நம்ம இளையராசாவும் ஒரு சல். சல் அவர்களிடம் ஆணவம் இருக்குமென்று நீங்கள் கூறலாமா?

ராவணன் said...

அண்ணாச்சி...முனியாண்டிசாமியின் உண்மை பக்தனான நீங்கள் இப்படி எழுதலாமா?

kk said...

நீங்கள் எதற்காக ரகுமானிற்கு காக்காபிடிக்கின்றீர்கள் என்பது தெளிவாகத்தெரிகின்றது...அவர் ரகுமான் முஸ்லீம் அதுதானே..முடியல

suvanappiriyan said...

திரு கிருத்திகன் யோகராஜா!

//நீங்கள் எதற்காக ரகுமானிற்கு காக்காபிடிக்கின்றீர்கள் என்பது தெளிவாகத்தெரிகின்றது...அவர் ரகுமான் முஸ்லீம் அதுதானே..முடியல //

அடடா....தவறாக விளங்கிக் கொண்டீர்கள். சொல்லப் போனால் ரஹ்மான் பாடல்களை விட இளையராஜா பாடல்களையே முன்பு விரும்பி கேட்பேன். இங்கு நான் ரஹ்மானை இழுத்தது அகங்காரம் இல்லாமல் நல்ல பாடல்களையும் கொடுக்க முடியும். திறமைக்கும் திமிருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உதாரணத்தோடு விளக்குவதற்காகவே! அவர் முஸ்லிம் என்பதற்காக அல்ல.....

suvanappiriyan said...

திரு ராவணன்!

//அண்ணாச்சி....ரகுமான் தர்காவாசி...அங்கே சென்று தொழுவார். நமக்கு சரிப்பட்டு வருமா?//

//அண்ணாச்சி...முனியாண்டிசாமியின் உண்மை பக்தனான நீங்கள் இப்படி எழுதலாமா?//

தர்ஹாவையும் சினிமாவையும் ஒரு சேர தலை முழுக வேண்டும் என்று நான் முன்பே பல பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் தலை முழுகுவார் என்று எதிர் பார்ப்போம்.

//அண்ணாச்சி....இயல்பாய் இருக்கும் இளையராசாவே எப்பவும் பெட்டர்.

ஒரு நடிகனாய் மாறிய ரகுமான் சுத்த வேஸ்ட்.//

அவர் உண்மையிலேயே நடித்திருந்தால் நீங்கள் சொல்வது போல் சுத்த வேஸ்ட். இல்லை என்றால் சுத்த பெஸ்ட். :-)

suvanappiriyan said...

Splendor அய்யர் என்று மட்டுமல்ல; Splendor பிள்ளை, Splendor முதலியார் என்று வெளியாகி இருந்தாலும் இந்த எதிர்ப்பை இதே வேகத்தோடே செய்திருப்போம்.

Splendor சக்கிலியர், Splendor பறையர் Splendor பள்ளர் என்று விளம்பரபடுத்த அந்த நிறுவனம் தயாரா?

அப்படி செய்தால், தன் பொருள் விற்காது; பார்ப்பனர்களும், பிள்ளை, தேவர், செட்டியார், முதலி உட்பட எல்லா ஜாதிக்காரனும் அந்த வண்டியின் மீதும் தீண்டாமையை கடைப்பிடிப்பான்.

ஜாதி உணர்வாளர்களுக்கு பயந்து அல்லது ஜாதி உணர்வாளராகவே ஆதிக்க ஜாதி அடையாளத்தோடு, Splendor அய்யர் என்று பெயர் வைத்தால், நாம் மட்டும் அதை எப்படி அனுமதிக்க முடியும்?

ஆதிக்க ஜாதி அடையாளத்தோடு, (நாயர்-சவுகான்) HERO நிறுவனம் இதுபோல் இந்தியா முழுக்க விளம்பரம் செய்திருக்கிறார்கள். பெரியார் மண்ணில்தான் அதற்கு முடிவு காணப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு சிலமணிகளில்.

http://mathimaran.wordpress.com/2012/11/10/573/#comment-9863

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

முன்னர் ஒரு காலத்தில் ஒரு படம்...
அதில் ஒரு பாட்டு...

'மடை திறந்து
ஆடும் நதியலை நான்...'

அதில் ஒரு வரி...

"புதுராகம்
படைப்பதாலே
நானும்
இறைவனே..."

---இவ்வரியில் உள்ள கர்வம் தலைக்கணம் அகம்பாவம் எல்லாம் பிற்காலத்தில் எனக்கு புரிந்தது.

ஒருவேளை அந்த படத்தின் நாயகன் கர்வம் கொண்டவனாக இருந்து இதனாலே அடிபட்டு மிதிபட்டு நசிந்து போயிருக்கலாம். அல்லது வெற்றி வாகை சூடி இருக்கலாம். கதைதானே..! எப்படியும் இருந்திருக்கலாம்..!

ஆனால்... நிஜம்..?

சமீபத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு விழாவில் எஸ்பிபி சொல்லி இருக்கார். "இந்த வரி இளையாராஜாவுக்காகவே எழுதப்பட்டது" என்று..!!!

இறையச்சம் கொண்ட எந்த ஒரு இசையமைப்பாளரும் இந்த வரிகளுக்கு இசைக்க ரொம்பவும் யோசிப்பார். ஆனால், இவ்வரி இவருக்காகவே எழுதப்பட்டது என்றால்...?!

இன்று... அல்ல...
'சின்ன சின்ன ஆசை...' காலத்திலேயே 'அந்த இசை இறைவனின்(?)' ராகம்
மவுன ராகமாகி விட்டது..!

பாடம்..! படிப்பினை..!

mohammad said...

இளையராஜா நல்ல இசையமைப்பாளர் 80 களில் உள்ள அவர் பாடல்கள் இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் உண்மையில் அவர் கொஞ்சம் அதிகம் ஆணவம் அகம்பாவம் உள்ளவரே.

உதாரணம் சமீபத்தில் அவர் இசையமைத்த நீதானே என் பொன்வசந்தம் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் நடந்துகொண்ட பேசிய விதம்.

இசையென்ற◌ாலே நான் மட்டும்தான் என்ற அகம்பாவம் அவருடைய உள்ளத்தில் அதிகமாக குடிகொண்டுவிட்டது.

suvanappiriyan said...

சகோ ஆஷிக்!

//சமீபத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு விழாவில் எஸ்பிபி சொல்லி இருக்கார். "இந்த வரி இளையாராஜாவுக்காகவே எழுதப்பட்டது" என்று..!!!//

இது மட்டும் அல்ல. 'ராஜா..ராஜாதி ராஜன் இந்த ராஜா....தூக்காதே வேறு எங்கும் கூஜா' 'எங்கிட்ட மோதாதே...நான் ராஜாதி ராஜனடா....வம்புக்கு இழுக்காதே...நான் சூராதி சூரனடா...' என்று வரிசையாக தனது புகழ் பரப்பும் பாடல்களை எழுத விட்டு அழகு பார்ப்பது இவரது இயல்பு.

suvanappiriyan said...

சகோ முஹம்மத்!

//உதாரணம் சமீபத்தில் அவர் இசையமைத்த நீதானே என் பொன்வசந்தம் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் நடந்துகொண்ட பேசிய விதம//

நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். பாலசந்தர் இந்த படத்துக்கு தேசிய விருது கண்டிப்பாக கிடைக்கும். அதற்கு இளையராஜா டெல்லி செல்வார் என்று சொன்னபோது அலட்சியமாக கையை சொடுக்கி 'அது எனக்கு தேவையில்லை' என்பது போல் சொல்வார். இன்னும் இவர் நிறைய மாற வேண்டும்.

Sunantha said...

அண்ணே ,
இளையராஜா மாதிரி மேதைகளை உங்களைப்போன்ற தட்டையான அறிவிலிகள் புரிந்து கொள்வது சாத்தியம் இல்லை..

மேதைகளின் மேதமையை சமூகத்தில் உள்ள ஒரு சிறு பகுதியினரே புரிந்து கொள்வார்கள்/கொள்ள இயலும் ...கலை,நுண்ணுணர்வு, ஆன்மீக உணர்வு,
இல்லாதவர்களிடம் மேதைகள் உரையாடுவது சாத்தியமற்றது..ஆனால் சமூகம் இத்தகையவர்களையே பெரும்பான்மையாக கொண்டுள்ளதால் மேதைகள் ஆணவம் போன்ற ஒரு கடின ஓட்டை தன் மேல் போர்த்திக்கொள்ள வேண்டி உள்ளது..அது இல்லையெனில் அவர்களின் ஆளுமையே சிதையும்..

"அற்பத்தனங்களை அகங்காரத்தினால் எதிர்கொள்கிறேன்" - ஜெயகாந்தன்.

கும்மாச்சி said...

உங்களின் கருத்து சரியானதே, ஆணவம் திறமைக்கு முட்டுக்கட்டை.

suvanappiriyan said...

சுனந்தா!

//இளையராஜா மாதிரி மேதைகளை உங்களைப்போன்ற தட்டையான அறிவிலிகள் புரிந்து கொள்வது சாத்தியம் இல்லை..//

அப்டீங்களா? எந்த அளவுகோலை வைத்து இளையராஜாவும் உங்களைப் போன்றவர்களும் அறிவில சிறந்தவர்களாகி விட்டீர்கள். எந்த அளவு கோலில் எங்களைப் போன்றவர்கள் அறிவிலிகளாகி விட்டனர்? கொஞ்சம் சொன்னால் தெரிந்து கொள்வேன். :-(

//கலை,நுண்ணுணர்வு, ஆன்மீக உணர்வு,
இல்லாதவர்களிடம் மேதைகள் உரையாடுவது சாத்தியமற்றது..//

இப்படி சொல்லி சொல்லியே ஆன்மீகத்தை வேலிக்குரியதாக ஆக்கி விட்டீர்கள். கூடாரமும் காலியாகி கொண்டிருககிறது. நடத்துங்கள்......:-)

suvanappiriyan said...

திரு கும்மாச்சி!

//உங்களின் கருத்து சரியானதே, ஆணவம் திறமைக்கு முட்டுக்கட்டை.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

நீங்க ராஜாவின் அகங்காரம் குறித்து கவலைப்படுவதன் நோக்கம் என்னவோ?

//இது மட்டும் அல்ல. 'ராஜா..ராஜாதி ராஜன் இந்த ராஜா....தூக்காதே வேறு எங்கும் கூஜா' 'எங்கிட்ட மோதாதே...நான் ராஜாதி ராஜனடா....வம்புக்கு இழுக்காதே...நான் சூராதி சூரனடா...' என்று வரிசையாக தனது புகழ் பரப்பும் பாடல்களை எழுத விட்டு அழகு பார்ப்பது இவரது இயல்பு.//

நீங்கள் பேசுவது எல்லாம் பார்த்தால் வேறு ஒரு நோக்கம் இருப்பதாகவே படுகிறது.

ஒரு ஹீரோ அவருக்கு பஞ்ச் டயலாக் வச்சுக்கும் போது இசையமைப்பாளர் இப்படி நாலு பாட்டு போட்டுக்கிட்டா என்ன குற்றம்.

அப்படி பாட்டு வைக்க கூடாதுன்னு தயாரிப்பாலரோ,இயக்குனரோ எதிர்ப்பு தெரிவிச்சா பரவாயில்லை, இல்லை ரசிகர்கள் கேட்காமல் இருந்திருக்கலாம்.

எல்லா தரப்பிலும் ஏற்றுக்கொண்ட பிறகு எப்படி பாட்டு வச்சா என்ன.

மேலும் ஏ.ஆர் ரெஹ்மானை இதனுடன் ஒப்பிடுவது ஏன்?

ஒரு வேளை மதத்திற்கு பயந்து அடக்கமாக காட்டிக்கொள்கிறாரோ என்னவோ?

இல்லைனா அவரும் நானும் இறைவனேனு பாட்டு போட்டுக்க மாட்டார்னு என்ன நிச்சயம்?

ராஜா மொட்டை அடிச்சிக்கிறார் ,ரெஹ்மான் மொட்டை அடிச்சிப்பாரா , ராஜா எளிமையா வேட்டிக்கட்டிக்கிறார் ,வெளிநாடு போனாலும் வேட்டிக்கட்டுவார், அதனா துபாய்ல இருக்கிற ஒரு 5 நட்சத்திர விடுதில அறை கொடுக்க மாட்டேன்னு கூட எதிர்ப்பு தெரிவிச்சாங்க.அப்போது நான் ஒரு பதிவும் போட்டேன்.

ராஜா போல ரெஹ்மான் வேட்டிக்கட்டிக்கிட்டு இருப்பாரான்னு கேட்டா பதில் சொல்வீங்களா?

எனவே ரெஹ்மான் தான் தன்னடக்கமா இருக்காரா அதை தனியா பாராட்டிக்கோங்க, ஆனால் அதை போல ராஜா இருப்பாரா என ஒப்பீடு தேவை இல்லை, ஏன் எனில் ராஜாவிடம் இருக்கும் மற்ற குணங்களை ரெஹ்மானிடம் எதிர்பார்த்தால் இருக்காது.
----------

இளைய ராஜா இசை முடிவுக்கு வந்ததுக்கு காரணம் சின்ன சின்ன ஆசைனு சொல்வது சிலருக்கு சின்ன சின்ன ஆசை போல.

எல்லாவற்றிற்கும் ஆரம்பம் ,உச்சம் பின்னர் சரிவு என உண்டு.

ஒரு காலத்திற்கு பின் ரசிக்க மாட்டார்கள். அப்போ புதுசா வருபவர் நன்றாக இசை அமைத்தால் ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி ராஜா ,ரெஹ்மான் என ஒவ்வொருவருக்கும் ஒரு கால கட்டம்.

பாலச்சந்தர்,பாரதிராஜாவுக்கு இப்போ படம் இயக்கத்தெரியாதா ,ஆனால் ஏன் அவர்கள் படம் ஓடுவதில்லை, கால கட்டத்திற்கு ஏற்ப மக்கள் ரசனை மாறிக்கொண்டே இருக்கும், யாரும் கலத்துறையில் எப்போதும் கோலோச்சிக்கொண்டே இருக்க முடியாது. இன்னும் கொஞ்சம் நாள் ஆன பின் ரெஹ்மான் இசைக்கும் இதே நிலை தான் வரும் ,அதனை யாரும் தவிர்க்கவே முடியாது.

suvanappiriyan said...

//ஒரு ஹீரோ அவருக்கு பஞ்ச் டயலாக் வச்சுக்கும் போது இசையமைப்பாளர் இப்படி நாலு பாட்டு போட்டுக்கிட்டா என்ன குற்றம்.

அப்படி பாட்டு வைக்க கூடாதுன்னு தயாரிப்பாலரோ,இயக்குனரோ எதிர்ப்பு தெரிவிச்சா பரவாயில்லை, இல்லை ரசிகர்கள் கேட்காமல் இருந்திருக்கலாம்.

எல்லா தரப்பிலும் ஏற்றுக்கொண்ட பிறகு எப்படி பாட்டு வச்சா என்ன.//

எனக்கு ரஹ்மான் இசையை விட இளையராஜாவின் இசைதான் அதிகம் பிடிக்கும். நமது கிராமியத்தின் மணத்தை இவரது இசையிலேயே பார்க்கலாம். ரஹ்மானின் இசை வலக தரமானது. எனவே இரண்டையும் வேறு வேறு கோணங்களில் அணுக வேண்டும்.

அடுத்து கவிஞர் வைர முத்துவோடு ஏற்பட்ட பிணக்குக்கு பிறகுதான் இளையராஜாவின் பாடல்களில் இது போன்ற பகடியாக பாடல்கள் வந்தது. இது போன்ற எல்லா பாடல்களையும் வைர முத்துவுக்காகவே போட்டதாக சொல்வர். ஆனால் வைரமுத்து ஒதுங்கிக் கொண்டார். இருவரும் இணைந்து முன்பு காலத்தால் அழியாத பாடல்களை தந்தனர். தற்போது 'போடா போடா பொக்கே... எள்ளு காட்டுக்கு தெக்கே' என்று தான் வைரமுத்துவுக்கு போட்டியாக இளையராஜாவால் எழுத முடிந்தது. இருந்தும் இவை எல்லாம் முன்பு போல் மனதோடு ஒட்டவில்லை.

//ராஜா மொட்டை அடிச்சிக்கிறார் ,ரெஹ்மான் மொட்டை அடிச்சிப்பாரா , ராஜா எளிமையா வேட்டிக்கட்டிக்கிறார் ,வெளிநாடு போனாலும் வேட்டிக்கட்டுவார், அதனா துபாய்ல இருக்கிற ஒரு 5 நட்சத்திர விடுதில அறை கொடுக்க மாட்டேன்னு கூட எதிர்ப்பு தெரிவிச்சாங்க.அப்போது நான் ஒரு பதிவும் போட்டேன்.//

நான கிராமத்தில் இருந்தால் வேட்டியோடு அல்லது கைலியோடு இருப்பேன். சவுதியில் அலுவலகத்துக்கு வந்தால் பேண்டோடு வருவேன். இங்கும் நான் கைலி கட்டிக் கொண்டு வந்தால் என்னை என்னவென்று சொல்வீர்கள்? :-)

//ஒரு காலத்திற்கு பின் ரசிக்க மாட்டார்கள். அப்போ புதுசா வருபவர் நன்றாக இசை அமைத்தால் ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி ராஜா ,ரெஹ்மான் என ஒவ்வொருவருக்கும் ஒரு கால கட்டம்.//

சரியான வார்த்தை. அப்படியே ஒத்துக் கொள்கிறேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//ஒரு காலத்திற்கு பின் ரசிக்க மாட்டார்கள். அப்போ புதுசா வருபவர் நன்றாக இசை அமைத்தால் ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.//

இதை வேறு வார்த்தைகளில் சொன்னால்...

//'சின்ன சின்ன ஆசை...' காலத்திலேயே 'அந்த இசை இறைவனின்(?)' ராகம்
மவுன ராகமாகி விட்டது..!//(மக்களிடம்)..!


ஏதாவது சொல்லியே ஆகணும்னு ரக்கைய கட்டிக்கிட்டா....... என்னத்த சொல்ல..!

Unknown said...

இளையராஜா போன்று எவனாலும் இசையமைக்க முடியாது.இப்பொழுது உள்ள இளையராஜாவினாலேயே கூட முடியாது.

Unknown said...

இளையராஜா போல் எவனாலும் இசையமைக்க முடியாது....இப்பொழுது உள்ள இளையராஜாவினாலேயே கூட.

Unknown said...

இளையராஜா போல எவனாலும் இசையமைக்க முடியாது.....இப்பொழுது உள்ள இளையராஜாவாலேயே கூட

Unknown said...

இளையராஜா போல எவனாலும் இசையமைக்க முடியாது.....இப்பொழுது உள்ள இளையராஜாவாலேயே கூட

Nalliah said...

எங்களைப் பற்றி, எங்கள் பெயரைப் பற்றி, எங்கள் மரியாதையைப் பற்றி, எங்கள் அதிகாரத்தைப் பற்றி, எங்கள் உடைமைகளைப் பற்றி என்னவெல்லாம் நாங்கள நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அவையெல்லாம் சேர்ந்து தான் ஆணவம்.

ஆணவம் ஒரு மன வடிவம். அதைப் புரிந்து கொள்ளும் வழி மிகவும் நுட்பமானது. எங்களை வளர்த்துவரும் சமுதாயம், எங்களைப் பற்றி அறிய அனுமதிப்பதில்லை. எங்களை நாங்கள் அறிய அனுமதிக்காதது ஆபத்தானது. அது எங்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இதில் உள்ள பெரிய ஆபத்து என்னவென்றால், அந்தக் குழப்ப நிலையில் இருந்து கொண்டே எங்களைப் பார்க்க நாங்கள் முயல்வது தான்.

- நல்லையா தயாபரன்

Nalliah said...

ஒரு பட்டப்படிப்புடன், ஒரு தொழிலுடன், ஒரு திறமையுடன், ஒரு குணநலனுடன், ஆணவம் தன்னை அடையாள படுத்திக் கொள்கின்றது. . ஒருவர் வைத்தியர், ஒருவர் விவசாயி, ஒருவர் பேராசிரியர், ஒருவர் இசையமைப்பாளர் என இருந்தால் அவை யாவும் செயல்கள். நாங்கள் செய்பவை அவை, நாங்கள் அல்ல.

யாராவது ஒருவர் நீங்கள் யார் என எங்களிடம் கேட்டால் நீங்கள் உடனே நான் ஒரு பொறியியலாளர் என்று பதில் சொன்னால் அந்தப் பதில் மிகவும் தவறானது. நாங்கள் எப்படி எப்படி பொறியியலாளராக முடியும். அது நீங்கள் செய்யும் தொழில். நாங்களல்ல. உங்களது தொழில்களுடன் மிகவும் ஆழ்ந்த தொடர்பு கொள்ளாதீர்கள். ஏனெனில்
அந்தத் தொழில் எங்களை அடிமைபடுத்திக் கொண்டு விடும். நாங்கள் ஒரு வைத்தியராகவோ, ,
வீடு கட்டுபவராகவோ, இசையமைப்பாளராகவோ தொழில் செய்யலாம். ஆனால் அதனால் அதுதான் நாங்கள் என்றாகிவிடாது. நாங்கள் சாரதி வேலையை விட்டுவிட்டு ஒரு சிப்பந்தி ஆகலாம், சிப்பந்தி வேலையை விட்டுவிட்டு ஒரு தெரு கூட்டுபவராக மாறலாம்.

ஒரு குழந்தை பிறக்கும் போது இருக்கும் அளவற்ற ஆற்றல் மெது மெதுவாக குறைந்து, அது ஒரு குறிப்பிட்ட திசையில் நின்று விடுகிறது. ஒரு குழந்தை பிறக்கும் போது பல்வேறுபட்ட ஆற்றலுடன் இருந்தாலும் விரைவில் அது குறிப்பிட்ட வழியை தேர்ந்தெடுக்க துவங்கி விடுகிறது. நாம் அது அதுபோல தேர்ந்தெடுக்க துணை புரிகிறோம். அப்போதுதான் குழந்தை புகழடைய முடியும்.

அளப்பரிய ஆற்றலுடன்தான் எல்லோரும் பிறக்கின்றனர், ஆனால் ஒரு சிலர் மட்டுமே அளப்பரிய ஆற்றலுடன் இறக்கின்றனர் என்ற ஒரு சீனப் பழமொழி உண்டு. மனிதன் அளவற்ற ஆற்றலுடன் பிறந்தாலும் இறக்கும்போது குறுகி விடுகிறான். நாங்கள் பிறக்கும்போது பிரபஞ்சமாக இருக்கின்றோம்., இறக்கும்போது ஒரு வைத்தியராக, ஒரு விரிவுரையாளராக, ஒரு நகரசபை ஊழியனாக இறக்கின்றோம். வாழ்வை நாங்கள் இழந்து விடுகின்றோம்.. எல்லா சாத்தியங்களும் உள்ள திறந்துள்ள நிலையில், எல்லா ஆற்றல்களும் கிடைக்கக் கூடிய நிலையில் நாங்கள் பிறக்கின்றோம்.. ஒரு விரிவுரையாளராகவும், ஒரு விஞ்ஞானியாகவும், ஒரு
கவிஞனாகவும், மாறலாம். கோடிக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. எல்லா கதவுகளும் திறந்துள்ளன.
பின் மெதுமெதுவாக, ஒரு விரிவுரையாளராக – இலத்திரனவியல் பேராசிரியராக, ஒரு தேர்ச்சி பெற்ற பேராசிரியராக, அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறி விடுகின்றோம்.. நாங்கள் குறுகி கொண்டே சென்று விடுகின்றோம்.. நாங்கள் குறுகி கொண்டே செல்லும் ஒரு குகை வாயில் போல மாறி விடுகின்றோம்.. ஆகாயத்தை போல பிறந்து ஒரு குகை போல மாறி, பின் அதிலிருந்து நாங்கள் வெளியே வருவதேயில்லை.

அந்த குகைதான் ஆணவம். அது செயலுடன் அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறது.

நல்லையா தயாபரன்

சினிமாரசிகன் said...

ஆம் நீங்கள் சொல்வது போல் இளையராஜா உடன் ஒப்பிடும் அளவு தரம்தாழ்தவரல்ல உங்கள் ரஹ்மான்.. முதலில் உங்க ஆளு ஒரு ஆஸ்கராவது வாங்கி காட்டட்டும்