Followers

Thursday, January 03, 2013

சூஃபியிசம் என்பது என்ன?

இரண்டு நாள் முன்பு எனக்கு வந்த மின் அஞ்சல்!

//அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்

சகோ

ஒரு சின்ன வேண்டுகோள்.அதற்காகவே இந்த மெயில்.முக நூலில் என்னுடைய நட்பு வட்டாரத்தில் இருக்கும் நம் சகோதரர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை தன வாழ்க்கை நெறியாக மாற்றிக் கொண்டு உலக இஸ்லாமிய குடும்பத்தில் தன்னை ஐக்கிய படுத்தி கொண்டவர்.அவருடன் எதார்த்தமாக முக நூலில் சாட்டிங் செய்து கொண்டிருந் பொழுது இஸ்லாம் பற்றி ஒரு சில சந்தேகங்களை கேட்டார்.எனக்கு தெரிந்தவரை நான் அவருக்கு விளக்கம் அளித்தேன்.

பிறகு அவரிடம் நான் சொன்னேன் நான் ஒரு சில இஸ்லாமிய இணைய தளங்களின் முகவரியை தருகிறேன் அவற்றிற்கு சென்று பாருங்கள் அறிவுப் பூர்வமாகவும் ஆதாரப் பூர்வமாகவும் இஸ்லாம் சம்பந்தப் பட்ட கட்டுரைகளை காணலாம் என்று சொல்லி விட்டு உங்கள் தல முகவரி அப்பரம் சகோ சிடிசன் ஆஷிக் பாய்,எத்ரிக்குரல் ஆஷிக் பாய்,வலையுகம் ஹைதர் பாய்,நான் முஸ்லிம் குலாம் பாய் ஆகியோரின் தல முகவரியை கொடுத்தேன்.

பிறகு அவர் என்னிடம் சொன்னார் நீங்கள் கொடுத்த அணைத்து தளங்களும் எனக்கு தெரியும்.நான் தினமும் படிப்பதுண்டு என்று சொல்லி விட்டு சுவனப்பிரியன் வலைத்தளம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லிவிட்டு அவரின் விசிறி நான் என்று சொன்னார்.{i mean your fan bhai :-) }.

மாஷா அல்லாஹ் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.இணைய தளங்களில் உண்மையை மட்டும் தேட நினைக்கும் அனைத்து சகோதர,சகோதரிகளிடமும் உங்கள் எழுத்தும்,உங்கள் தளமும் அவர்களை சென்றடைந்து கொண்டிருக்கிறது எனபது யாராலும் மறுக்க முடியாத விஷயம் சகோ.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.தொடர்ந்து சமுதாயத்திற்கு உபயோகமான உங்கள் ஆக்கங்களை தாருங்கள் சகோ.

என்னடா வேண்டுகோள் என்று சொல்லி விட்டு ஒரு தனி பதிவையே எழுதிக்கிட்டு இருக்கான் என்று நீங்க நினைப்பது எனக்கு புரியுது சகோ விசயத்துக்கு இந்தா வந்துட்டேன்.

உங்கள் விசிறி உங்களிட ஒரு கோரிக்கை வைக்க சொன்னார்.சூபிக்களை பற்றி அவருக்கு உண்மை என்ன வென்று தெரிந்து கொள்ளவேண்டுமாம்.அதனால் சூபிக்கள் பற்றி நீங்க ஒரு பதிவு போடணுமாம்.

இது தான் சகோ அந்த வேண்டுகோள்//


-முஹம்மது இக்பால்

வஅலைக்கும் சலாம்! மெயிலுக்கு நன்றி சகோ முஹம்மது இக்பால்.


இது போன்ற நெகிழ்ச்சியான கடிதங்களை படிக்கும் போது நாம் பதிவெழுத எடுத்துக் கொள்ளும் சிரமம் முற்றிலும் நமக்கு தெரிய வருவதில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இனி சகோதரர் கேட்ட சூஃபிகளைப் பற்றி பார்ப்போம்.

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் மார்க்க விஷயங்களின் அடிப்படையாக எதையும் நாம் பின்பற்றுவது ஒன்று குர்ஆனாக இருக்க வேண்டும். அல்லது முகமது நபி காட்டித் தந்ததாக இருக்க வேண்டும். அது அல்லாமல் நவீன பிரச்னைகள் ஏதும் குறிக்கிட்டால் அதற்கு நாமாக ஒரு தீர்வை காணலாம். அந்த தீர்வு கூட குர்ஆனுக்கோ நபி மொழிக்கோ மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.

சூஃபியிசத்தைப் பொருத்த வரையில் சாதாரண நிலையிலிருந்து தங்களை மேம்பட்ட பக்குவப்பட்ட மக்களாக அவர்களை பாவித்துக் கொண்டு புதிதாக சில வணக்கங்களையும் கடை பிடிக்கின்றனர். இறைவனை நெருங்குதல், கூட்டமாக அமர்ந்து கொண்டு இறைவனின் புகழை பாடுதல், குர்ஆனுக்கு முகமது நபி கொடுக்காத பல விளக்கங்களை இவர்கள் கொடுப்பது, இறந்த பெரியார்களை தர்ஹா கட்டி அங்கு இஸ்லாம் சொல்லாத காரியங்களை அரங்கேற்றுதல் என்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

இறைத்தூதர் மோசே இறைவனைப் பார்க்க விருப்பப்பட்டு கடைசியில் அவர் மூர்ச்சையாகி விழுந்த வரலாறு நாம் குர்ஆனிலிருந்து பெறுகிறோம். ஒரு இறைத் தூதருக்கே தனது இறைவனை நேரிடையாக பார்க்கும் சக்தியை இறைவன் கொடுக்கவில்லை. அப்படி இருக்க நீங்களும் நானும் இறைவனை நெருங்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஆனால் சூஃபிக்கள் நாங்கள் இறைவனை நெருங்குகிறோம் என்று சொல்லி பல புதிய வணக்கங்களை உண்டாக்கி வைத்துள்ளதை பார்க்கிறோம்.

இறைவனை நெருங்க இசையையும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். இன்று உலகில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும் இறைவனை வணங்குவதில் இஸ்லாமியர்கள் காட்டும் அந்த நேரம் தவறாமை, அமைதியாக இறைவனை தொழுதல் அதிலும் ஒரு நாளைக்கு ஐந்து முறை என்ற இந்த கட்டுப்பாடு வேறு எந்த மதததிலும் மார்க்கத்திலும் பார்க்க முடியாததாக உள்ளது. இங்கு எந்த மசூதிகளிலும் இறைவனை வணங்க இசையை கொண்டு வருவதில்லை. பெருநாள் போன்ற பண்டிகை நாட்களில் சந்தோஷமாக பாடல்களை பாடிக் கொள்ள அனுமதி அளித்த முகமது நபியின் போதனைகள் சிலவற்றை பார்க்கிறோம். எந்த நேரமும் இசையே கதி என்று அதற்கு அடிமையாவதை இஸ்லாம் தடுக்கிறது.

சமீபத்தில் கடல் என்ற படத்தின் பாடல்களை யுட்யூபில் பார்த்தேன். அதில் வந்த பின்னூட்டங்களையும் பார்த்தேன்.

-----------------------------------

xMissxFiorex 11 hours ago

This song isn't leaving me at all :) addictive song ever ..

------------------------------------

arunprasath shankar 1 week ago

God of Gods!

------------------------------------

shrisowmyaa 6 days ago

what a song? god pls let me hear arr songs fullly in my life. pls give me that pleasure for every second of my life. my divine god a.r.rahman. pls compose a lot of songs for us to hear and cry.

------------------------------------

ஒரு அளவுக்கு மீறி இசையை ஆராதிக்க ஆரம்பித்தால் அந்த கலைஞனை இறைவனாக்கி விடுவதை இங்கு பார்க்கிறோம். கொடுக்கும் பணத்துக்கு திறமையாக இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளராகத்தான் பார்க்க வேண்டுமேயொழிய அதை மீறி அவருக்கு அதீத மரியாதை கொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். இதற்காகத்தான் இசைக்கு இஸ்லாம் சிறிது கடிவாளத்தைப் போட்டு வைத்துள்ளது. ஆனால் சூஃபியிசத்தில் இசையாலேயே இறைவனை நெருங்குகிறோம் என்கிறார்கள். என்ன ஆதாரம் என்று கேட்டால் கேட்கும் நம்மை முறைக்கிறார்கள். :-)

இந்து மதத்தின் கொள்கைகள் சிலவற்றைக் கடன் வாங்கியும் இஸ்லாமிய கொள்கைகளிலிருந்து சிலவற்றைக் கடன் வாங்கியும் சூஃபிசத்தை நிர்மாணித்திருக்கிறார்கள். இவ்வாறு செய்வது அதிகப்பிரசிங்கித்தனம். முகமது நபிக்கு தெரியாத சில விபரங்கள் இவர்களுக்கு தெரிந்ததாக ஆகிறது. இந்து மத சட்டங்கள் சிலவற்றை உள் வாங்கியதால் தான் இந்துத்வாவாதிகள் சூஃபியிசம் வளர வேண்டும். வஹாபியிசம் ஒழிய வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஒரு கிராமத்து அரபி முகமது நபியிடம் வந்து ஏக இறைவனை ஏற்றுக் கொண்டுள்ளேன். ஐந்து கடமைகளை மாத்திரம் செய்கிறேன். உபரியான வணக்கங்கள் எதுவும் செய்வதில்லை. எனக்கு நேரமும் கிடைப்பதில்லை. என்று சொன்னபோது சொர்க்கவாசியை பார்த்துக் கொள்ளுங்கள் என்று முகமது நபி கூறியதைப் பார்க்கிறோம். பெரிய தலைப்பாகையோடு, பெரிய ஜிப்பாவோடு, கையில் ருத்ராடசக் கொட்டைகளோடு எந்த நேரமும் 'யா அல்லாஹ்' 'யா அல்லாஹ்' என்று கூறிக் கொண்டிருக்கச் சொல்லவில்லை இஸ்லாம். துறவறம் பூண்டு சந்நியாசியாகவும் இஸ்லாம் கற்பிக்கவில்லை. நமது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை. நமது குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமை, நமது சொந்தங்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்று நமக்கு பல கடமைகள் இருக்கிறது. இறைவனை வணங்க் நமக்கு கொடுத்த ஐந்து நேரம் போதும். அதில் சிறப்பாக நமது நன்றியறிதலை செலுத்தினாலே போதுமானது. நமது கொடுக்கல் வாங்கல், வியாபாரம், தாய் தந்தை கவனிப்பு போன்ற அனைத்து செயல்களையும் இஸ்லாமிய வாழ்வியல் படி அமைத்துக் கொண்டால் அது அனைத்துமே அவனுக்கு வணக்கமாகி விடுகிறது. புதிது புதிதாக வணக்கங்களை கண்டு பிடிக்கச் சொல்லி இஸ்லாம் நமக்கு கட்டளையிட வில்லை.

''அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை.'' (அல்குர்ஆன் 57:27)

(நபியே! நீர் கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ள வற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:16)


இந்த இரண்டு குர்ஆன் வசனங்களும், அல்லாஹ்வுக்கு மட்டுமே மார்க்கம் சொந்தம்! அவனே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான்! ஒன்றை மார்க்கமாக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது! அதற்கு மாற்றமாக, மனிதர்களால் மார்க்க மாக்கப்பட்டதை அதாவது, புதிய வணக்கங்களை எடுத்து நடப்பவர்கள் இறைவனுக்கு இணை வைக்கிறார்கள்!

“வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மது அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது நபி அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத புதிய வணக்கங்கள். புதிய வணக்கங்கள். அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்” என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்(ரழி), ஜாபிர்(ரழி),

நூல்கள் : புகாரீ, முஸ்லிம், நஸயீ.



“உங்களிடையே இரண்டை விட்டுச் சொல்கிறேன். அவற்றைப் பற்றி பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம். இரண்டு எனது வழிமுறை,”

அறிவிப்பாளர்: மாலிக் இப்னு அனஸ்(ரழி), நூல்: முஅத்தா


-------------------------------------------------------

சூஃபிக்களைப் பற்றி இன்னும் அதிகமாக படிக்க சித்தார்க் கோட்டை.காமிலிருந்து சில பகுதிகளை தருகிறேன். படித்து பயன் பெறுங்கள்.


ஐயம்: இறைவனை அறிந்து கொள்ளுதலை திருமறை வலியுறுத்துகிறது. அதனை நோக்கமாகக் கொண்ட ஸூஃபிகளின் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சிகளை 'பித் அத்'கள் என புறக்கணிக்க சிலர் தயாராக உள்ளனர். கவ்வாலி இசை, ஆட்டம் போன்ற அம்சங்களைப் பற்றி நான் கூறவில்லை. அவைகளை ஒதுக்கிவிடுவோம். ஆனால் குர்ஆன் மற்றும் ஹதீசுக்கு எதிராக அமையாத சிந்தனைகளையும் "சூஃபியிசம்" எனப் புறந்தள்ள வேண்டிய காரணம் என்ன?

எல்லா சூபிக்களும் மனதிற்குள் மட்டும் தொழுது கொண்டவர்கள் இல்லையே. மேலும் எல்லோரும் தன்னை இறைவன் எனக் கூறிக் கொண்டவர்களும் இல்லை. மேலும் பார்ப்பதையெல்லாம் இறைவனென்று சொல்பவர்களும் இல்லை. தர்காவே கதி என கற்பிக்காத தரீக்காக்களும் உள்ளனவே. உதாரணத்திற்கு, ஜுனைத் பக்தாதி (ரஹ்), கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் சிந்தனைகள் நான் படித்த அளவில் குர் ஆன்/ஷரீயத்திற்கு மாறானதாக இல்லை. இவர்களை உள்ளடக்கிய சில சில்சிலாக்காரர்கள் மேலும் சிலரை உள்ளடக்கி இஸ்லாத்தின் முதுகெலும்புக்கு மாறானவைகளையும் கற்பிப்பதாகக் கருதுகிறேன். ஆனால் அதற்காக இச்சிந்தனைகள் அனைத்தையும் நாம் ஒதுக்க முடியாதல்லவா?

சமீபத்தில், 'அமல்களின் சிறப்புகள்' எனும் நூல் பற்றி நீங்கள் எழுதியது சிறப்பானதாக இருந்தது. எனவே இதைப் பற்றி நான் உங்களிடம் கேட்கிறேன்.
மின்னஞ்சல் வழியாக சகோதரர் ஷஹித் அஹ்மத்.

தெளிவு:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

''நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'' என்று சிந்திக்கத் தூண்டும் வசனங்கள் ஏராளம் குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. சீரானச் சிந்தனையை அடித்தளமாக்கி ஆய்வுகளை மேற்கொண்டு, ''சிந்தித்து விளங்கக்கூடிய மக்களுக்கு நம் வசனங்களை விவரித்துள்ளோம்'' (அல்குர்ஆன் 6:98)

என்பதோடு, சிந்தித்து விளங்க வேண்டும் என வலியுறுத்தி, சிந்திக்க ஆர்வமூட்டும் மார்க்கம் இஸ்லாம். இறைவனை அறிந்து கொள்ளுதல் என்றால் இறைவனின் வல்லமையை, ஆற்றலை அறிந்து கொள்ளுதல் எனப் புரிவதே மிகச் சரியாக இருக்கும். அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 10:3)

படைப்பின் ஆரம்பம், படைத்தவற்றின் இயக்கம், எதற்குப் படைக்கப்பட்டன என்பதை ஆராய்ந்து படைத்தவனின் வல்லமையை அறிந்து கொள்ளவேண்டும் என்றே இஸ்லாம் அழைப்பு விடுக்கின்றது. மாறாக இறைவன் எப்படி இருப்பான், ஆணா? பெண்ணா? என உருவகமாக இறைவனை அறிதல் என்றால் அதற்கு இஸ்லாத்தில் துளியும் அனுமதி இல்லை. இறைவனை எவரும் பார்க்க முடியாது. எவரும் பார்த்ததில்லை எனவும் திட்டவட்டமாக இஸ்லாம் அறிவித்துவிட்டது. இம்மையில் இறைவனை நானும் பார்த்ததில்லை ''பெளர்ணமி நிலவைக் காண்பது போல் உங்கள் இறைவனை மறுமையில் காண்பீர்கள்'' (முஸ்லிம்) என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
''இறைவனை அறிதல்'' என்பதில் படைப்பினங்களை ஆய்வு செய்து சிந்தித்து இறைவனின் வல்லமையை அறிதல் என்றால் இது இஸ்லாமிற்கு முரண் அல்ல! இன்றைய அறிவியலும் இதை உண்மைப்படுத்துன்றது.

''இறைவனை அறிதல்'' என்பதில் இறைவனை உருவமாக அறிந்து கொள்ளுதல் என்ற பொருள் என்றால் இறைவனை இதுவரை எவரும் கண்டதில்லை, நபிமார்களும் இறைவனைக் கண்டதில்லை - காணமுடியாது என்பதே இஸ்லாமின் அடிப்படை. விரிவஞ்சி நிறுத்தி, இது குறித்து மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்து கொண்டால் மேற்கொண்டு தொடரலாம். இனி கேள்விக்குச் செல்வோம்.

ஸூஃபியிசம்

தஸவ்வுஃப் என்ற பதத்தைப் பற்றி பல்வேறு கருத்து நிலவினாலும் மூலச் சொல் ''அணி'' என்ற பொருள் கொண்ட ''ஸஃப்'' என்றும் ''திண்ணை'' என்ற பொருள்கொண்ட ''ஸுஃப்பா'' என்றும் ''கம்பளி'' என்ற பொருள் கொண்ட ''ஸூஃப்'' என்றும் கருதப்படுகின்றது. மொத்தத்தில் ''ஸுஃபித்துவம்'' என்ற ஸூஃபிக் கொள்கையை சமுதாயத்தில் ''ஸூஃபியிசம்'' என்று அழைக்கப்படுகின்றது. ஸூஃபியிசத்தின் முக்கியக் கொள்கை துறவறம்.

உறவுகளிலிருந்து நீங்கி உலக ஆசைகளைத் துறந்து சன்னியாசியாகி தவக்கோலம் தரித்து, நிஷ்டையில் திளைத்து காண்பதெல்லாம் இறைவன் என்ற முக்தியைப் பெறுவதே ஸூஃபியிசம். துறவு வழியாக அனைத்துப் பொருள்களும் அல்லாஹ் என்றாகி இறுதியில் தானும் அல்லாஹ் என்ற உச்ச நிலையை எட்டுவதே ஸூஃபியிசக் கொள்கை!
ஷரீஅத் மட்டுமில்லாமல் தரீகத், ஹகீகத், மஃரிஃபத் என மார்க்கத்தோடு மேலதிகக் கொள்கைக் கோட்பாடுகளைச் சேர்த்துக்கொண்ட ஸூஃபித் துறவற அத்வைதிகள் சம்சாரி வாழ்க்கையைப் புறக்கணித்து, சிற்றின்பங்களைத் துறந்தால் பிறகு ''நீ தான் இறைவன், இறைவன் தான் நீ'' என்று ஆகிவிடுவாய் என பாமரமக்களை ஏமாற்றுகின்றனர். பீர் முரீது பைஅத் - குரு சிஷ்யன் எனக் கூறி குருவின் விருப்பபடியெல்லாம் சிஷ்யனை நடத்தலாம் என்று மனித சுயமாரியாதையை இழக்கும் அளவுக்கு முற்போக்குக் கொள்கையுடைய(!?) ஸூஃபியிசக் கொள்கையை இஸ்லாமுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும்.

ஸூஃபிகளிலேயே கொஞ்சம் பரவாயில்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கஸ்ஸாலி சொல்கின்றார்:
"அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார். ஏனெனில் அனைத்து வஸ்துக்களுமே அவனிலிருந்தே, அவனை நோக்கியே, அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே (இஹ்யாஉலூமுத்தீன். 1—254 ).

மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகீக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும்போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து ஒருமித்துத் கூறுகின்றனர். எனினும் சிலருக்கு இந்நிலை தெள்ளத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து ( غيرية ) வேறொன்று என்ற வார்த்தை - பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும். அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் 'நான் தான் அல்லாஹ்' என்றும், வேறு சிலரோ 'நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்' என்றும் வேறு சிலர் 'எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் கூறியிருக்கின்றார்கள் (மிஷ்காதுல் அன்வார் ப : 122).

தவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களாக வகைப்படுத்தலாம். முதலாவது நாவினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது, இரண்டாவது அதன் அர்த்தத்தை கல்பால் (இதயத்தால்) உண்மைப் படுத்துவது, இது பாமரமக்களின் படிநிலையாகும். மூன்றாவது இறை ஒளியினால் கஷ்புடைய ஞானத்தைக் காண்பதாகும். இது இறைநெருக்கம் பெற்றவர்களின் நிலையாகும். நான்காவது பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத்தவிர எதையுமே காணாத நிலையாகும். தன்னையும் அவர் கடவுளாகவே காண்பார். இந்நிலைக்கு சூபியாக்களிடத்தில் பனாஃ - இறைவனுடன் சங்கமித்து விடுதல் என்று கூறப்படும். இந்த நிலையை அடைந்தவர்தான் உண்மையான தவ்ஹீத் வாதியாவார். (இஹ்யா உலூமுத்தீன் . 245-4 ம்பாகம்).

நன்றி : சித்தார்கோட்டை.காம்

இது போன்று இஸ்லாமிய அடிப்படைகளுக்கே வேட்டு வைக்கக் கூடிய பல கருத்துக்கள் சூஃபியிசத்தில் உண்டு. பரிபூரணமாக்கப்பட்ட இந்த மார்க்கததில் புதிய கொள்கைகள் புக நாம் இடம் தரக் கூடாது. உலக விஷயங்களில் எவ்வளவோ முன்னேற்றங்களை நாம் அடைந்து கொள்ளலாம். ஆனால் மார்க்க வணக்கங்கள் நாம் சுயமாக நமது விருப்பத்துக்கு ஏற்படுத்தக் கூடாது. அதற்கு மார்க்கமும் அனுமதிக்கவில்லை.

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அந்த சகோதரருக்கு எனது அன்பான சலாத்தையும் சொல்லுங்கள். நாமெல்லாம் ஏதோ நமது தாய் தந்தை முஸ்லிமாக இருந்ததனால் இஸ்லாமியராக இருக்கிறோம். ஆனால் இஸ்லாத்தை விளங்கி வந்திருக்கும் அந்த சகோதரர் நம்மை விட உயர்ந்த இடத்தை இஸ்லாத்தில் பெறுகிறார். அவருக்கு நேர்வழி காட்டிய அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

15 comments:

Unknown said...

அதானே. எது நல்லதோ அது தூய முஸ்லீமுக்கு பிடிக்காதே

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சலாம் சகோ.
//ஒரு அளவுக்கு மீறி இசையை ஆராதிக்க ஆரம்பித்தால் அந்த கலைஞனை இறைவனாக்கி விடுவதை இங்கு பார்க்கிறோம். கொடுக்கும் பணத்துக்கு திறமையாக இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளராகத்தான் பார்க்க வேண்டுமேயொழிய அதை மீறி அவருக்கு அதீத மரியாதை கொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். இதற்காகத்தான் இசைக்கு இஸ்லாம் சிறிது கடிவாளத்தைப் போட்டு வைத்துள்ளது. ஆனால் சூஃபியிசத்தில் இசையாலேயே இறைவனை நெருங்குகிறோம் என்கிறார்கள். என்ன ஆதாரம் என்று கேட்டால் கேட்கும் நம்மை முறைக்கிறார்கள்//

சரியான வார்த்தைகள்..

இன்று என் பதிவு:முஸ்லிம் பதிவர்கள் சாதித்து கிழித்தது என்ன?
tvpmuslim.blogsot.com

faizeejamali said...

Excellent article Sago andha uyar nilayai adaindhu allahvodu sanjamilkum vaadhathirku oru hadeesaiyum aadhaaaramaaga merkol kaatuvargal yaar allahvin paal oru adi nerungi varugiraaro avarpakkam allah irandu mulam nerungi varugiraan endru aarambikum hadees
SAGO SUVANAM AVARGAL ANDHA HADEESAI MERKOL KAATI ANDHA KURIPPITTA HADEESIN UNMAITHUVATHAI VILAKKIYIRUNDHAAL 100 sadhavidha thelivu kidaithirukkum andha hadeesin iruthiyil ivvaru varum IRUTHIYIL AVAR PAARKUM PARVAYAGE PESUM PECHAAGE PIDIKKUM KARAMAAGE IRAIVAN MAARIVIDUVAAN enbadhaagum vilakkam thevai sago allahuvukkage pls

சிராஜ் said...

அண்ணன்...

சூபியிசத்தை பற்றிய தெளிவான விளக்கங்கள்.. சகோதரருக்கு இவை தெளிவைத் தரும் என்று நம்புகிறேன்...

suvanappiriyan said...

//அதானே. எது நல்லதோ அது தூய முஸ்லீமுக்கு பிடிக்காதே //

எது? பொட்டு கட்டி சாமிக்கு நேர்ந்து உட்றதா? அல்லது

நீ கால்ல பிறந்தே! நான் நெத்தியிலே பிறந்தேன் என்று எழுதி வைத்திருப்பதா? அல்லது

வேதத்தை படிக்கும் சூத்திரனின் நாக்கை அறுத்து விடவும், காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றி விடவும் என்று எழுதி வைத்திருப்பதா? அல்லது...

இப்படி நிறைய கேட்டுக்கிட்டே போகலாம் ஜெய்சங்கர். :-)

suvanappiriyan said...

சலாம் சகோ திருவாளப்புத்தூர்!

//சரியான வார்த்தைகள்..

இன்று என் பதிவு:முஸ்லிம் பதிவர்கள் சாதித்து கிழித்தது என்ன?
tvpmuslim.blogsot.com//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்கள் தளத்தையும் பார்வையிடுகிறேன்.

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//சூபியிசத்தை பற்றிய தெளிவான விளக்கங்கள்.. சகோதரருக்கு இவை தெளிவைத் தரும் என்று நம்புகிறேன்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஃபைஜி ஜமாலி!

தமிழ் யுனிகோடில் எழுதி பழகுங்கள். மற்றவர்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள். எனது தளத்திலேய பாமினி யுனிகோடை பயன்படுத்தலாம.

//SAGO SUVANAM AVARGAL ANDHA HADEESAI MERKOL KAATI ANDHA KURIPPITTA HADEESIN UNMAITHUVATHAI VILAKKIYIRUNDHAAL 100 sadhavidha thelivu kidaithirukkum andha hadeesin iruthiyil ivvaru varum IRUTHIYIL AVAR PAARKUM PARVAYAGE PESUM PECHAAGE PIDIKKUM KARAMAAGE IRAIVAN MAARIVIDUVAAN enbadhaagum vilakkam thevai sago allahuvukkage pls //

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.

(சூரா அல் பகரா 2 : 186)

இது போன்ற வசனங்களெல்லாம் இறைவனின் வல்லமையை எடுத்துக் காட்டுபவைகள். மொழியில் இலக்கிய தரத்தோடு சொல்லப்படுபவைகள். அதற்காக இறைவனை நமது அருகில தேடக் கூடாது. அர்ஷில் அமர்ந்திருப்பதாக ஏற்கெனவே கூறியுள்ளதால் அனைத்தையும் கண்காணிக்கும் வல்லமை உடையவன் என்று இது பொன்ற வசனங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

suvanappiriyan said...

திரு க்ருஷ்ண குமார் !

//இதற்கு முன் தங்களுடைய இதுபோன்ற படைப்புகளை வாசித்ததில்லை. ஒரு ஆதர்ச குடும்பத்தை அழகாக காண்பித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.//

நன்றி!

திரு புனை பெயரில்!

//ஆனால், “இறைவனுக்கு நன்றி செலுத்த ..” அப்ப பொறுப்பில்லாத புள்ளைகளை கொண்டவர்கள் இறைவனை திட்டுதல் சரி தானே….//

நீங்கள கேட்பது விதி சம்பந்தமான ஒரு கேள்வி. தனது மகனுக்கு சிறந்த அறிவைக் கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறாள் அந்த தாய். அதே அநத மகன் தீய செயல்களை செய்பவனாக இருந்தால் அவனுக்கு அறிவுரைகளை வழங்கி விட்டு படைத்த இறைவனிடம் தனது மகனின் எண்ணங்களில் நல்லவைகளை உதிக்கச் செய்யுமாறு பிரார்த்திக்க சொல்லி இறைவன் கட்டளையிடுகிறான். உளப் பூர்வமான பிரார்த்தனைகளையும் இறைவன் ஏற்றுக் கொள்வதாக வாக்களிக்கிறான். விதியைப் பற்றி அதிகம் சர்ச்சை செய்ய வேண்டாம் என்பதும் முகமது நபியின் கட்டளை.

இந்த விதியை இறைவன் ஏன் ஏற்படுத்த வேண்டும என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு இறைவன் தரும் பதில்

'உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப் படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள பூரித்து போகாமல் இருப்பதற்காகவும விதியை ஏற்படுத்தியுள்ளான்.'
-குர்ஆன் 57:23

'நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரைஇழிவு படுத்துகிறாய்'
-குர்ஆன் 3:25

நல்லது கெட்டது எதுவுமே அவனன்றி எதுவுமே நடப்பதில்லை. ஏன் இவ்வாறு பாரபட்சமாக படைக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பே. அதற்கான விளங்கக் கூடிய அறிவு நமக்கு தரப்படவில்லை என்றே அதற்கு இஸ்லாம் விளக்கம் அளிக்கிறது. இறுதி நாளில் இதற்கு விடை கிடைக்கலாம்.

நேற்று எனது விதி என்ன என்பது எனக்கு தெரிந்து விட்டது. நாளை எனது விதி என்ன என்பது எனக்கு தெரியாது. இன்னும் இரண்டு நாளில் நான் இறந்து விடுவேன் என்பது எனது விதி என்று வைத்துக் கொள்ளுங்கள். அது எனக்கு தெரிந்து விட்டால் மற்ற இரண்டு நாட்களும் நான் நிம்மதியாக இருக்க முடியுமா?

எனவே இறைவன் இதை மறைத்து வைத்திருப்பதில் மனித குலத்துக்கு நன்மையே இருக்கிறது.

Anonymous said...

மேற்கு வங்க மாநிலம் ஜபல்பூரி மாவட்டம் காமக்யாகுரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி ஸ்வப்னா(வயது 39). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஆண் குழந்தை இல்லாததை ஒரு குறையாகக் கருதி ஸ்வப்னாவை அவரது கணவன் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த கொடுமையின் உச்சகட்டமாக, கடந்த டிசம்பர் மாதம் ஒரு சாமியாரை சுகுமார் அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த சாமியாருடன், தன் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு வைக்கச் செய்துள்ளார். இவ்வாறு 3 நாட்கள் சாமியாரின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஸ்வப்னா, கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார்.

பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரிடம் வாக்குமூலம் வாங்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் அவர் 28-ம் தேதி இறந்தார். இறப்பதற்கு முன் அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதுபற்றி ஸ்வப்னாவின் தாயார் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்வப்னாவின் கணவர் சுகுமார், மாமனார் சுரேன், மாமியார் ஷோபா ராணி, மைத்துனி திரவுபதி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஸ்வப்னாவின் சாவுக்கு மூல காரணமாக இருந்த சாமியார், அசாமில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

http://dinaex.blogspot.com/2013/01/blog-post_4.html

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
அருமையாக விளக்கி உள்ளீர்கள். ஜசாக்கல்லாஹு ஹ்கைர்.

இந்த 'சித்தார்கோட்டை.காம் போஸ்ட் படிக்கும்போதே... 'இதனை வேறு எங்கோ படித்த நியாபகம்' வந்தது.

ஆங்... சத்தியமார்க்கம்.காம்... தளத்தினர் இதனை அப்டியே தங்கள் தளத்தில் இட்டு... தங்கள் கருத்தையும்...

//இறைவனை அறிதல் என்ற பெயரில் வெளியில் சொல்லா இரகசிய ஞானம் எனச் சொல்லிக்கொண்டு முஸ்லிம்களை மூளைச் சலவை செய்து யூத, கிறிஸ்தவ மதங்களின் துறவித்தனத்தைப் பின்பற்றும் ஸூஃபியிசத்துக்கும் இஸ்லாமிற்கும் எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை!//

...என்று முத்தாய்ப்பாக முடிவாக இப்படி அருயமையாக கூறி... வாசகர் கருத்தையும் கேட்டிருந்தனர்..!

அவ்ளோதான். அதன் பிறகு பார்த்தால்... அப்பப்பா... வேறு எந்த போஸ்டுக்கும் நான் இத்தனை பெரிய பெரிய நீண்ட கமெண்ட் அவ்வளவு அதிகமாக தொடர்ந்து வந்து நான் அப்போது அதுவரை அத்தளத்தில் கண்டதே இல்லை..!

சரி, அப்படி என்னதான் கருத்து சொல்கிறார்கள் என்று தொடந்து பொறுமையாக தினம் தினம் அங்கே சென்று தொடர்ந்து வாசித்தால்... 25... 50... 75... 100... 140... என்று போயிட்டு இருந்தது.

அம்மாடியோவ்...
ஒரு கட்டத்தில் அதற்கு மேல்
முடியலை சகோ..!

அப்போதான் நான் ஒரு கமெண்ட் போட்டு சத்யமார்க்கம் தளத்தினரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்.

அல்ஹம்துலில்லாஹ்..!

அதனை அன்போடு உடனே ஏற்றுக்கொண்டு... அத்தோடு சத்யமார்க்கம் தளத்தினர் தன் கமெண்ட் பாக்ஸை அப்பதிவில் மூடி விட்டார்கள்..!

'அந்த அளவுக்கு அங்கே என்னதான் நடந்தது' என்று அறிய நேரமும் பொறுமையும் இருந்தால் படித்து பாருங்கள்.


"நல்ல (?) ஸூஃபிகள்"
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
http://www.satyamargam.com/1273

100 கமெண்டுக்கு பிறகு இதன் தொடர்ச்சி...

http://www.satyamargam.com/1273?cpage=100

என்னுடைய கமெண்ட்தான் இப்போஸ்டில் கட்ட கடைசி கமெண்ட்..! (144 - தடை உத்தரவு..! :-))

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மது ஆஷிக்!

//100 கமெண்டுக்கு பிறகு இதன் தொடர்ச்சி...

http://www.satyamargam.com/1273?cpage=100

என்னுடைய கமெண்ட்தான் இப்போஸ்டில் கட்ட கடைசி கமெண்ட்..! (144 - தடை உத்தரவு..! :-))//

இந்த தளத்துக்கு சென்று மேலோட்டமாக சில பின்னூட்டங்களைப் பார்த்தேன். தமாஷாக இருந்தது. அடிப்படையே இல்லாமல் சூஃபியிசத்தை ஆதரிக்கும் அந்த மக்களுக்கு இறைவன்தான் நேர் வழி காட்ட வேண்டும்.

Ebrahim Ansari said...

கேட்டவருக்கு மட்டுமல்ல மடிப்பவர்களுக்கு பயன் தரும் செய்திகள் விளக்கங்கள் . ஜசக்கல்லாஹ்.

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் சகோ.ஜஜாகல்லாஹ் ஹைர்.அந்த சகோதரரே இந்த பதிவை படித்து பெற்றிருப்பார் என நம்புகிறேன்.

Najum said...

Bukhari :: Book 2 :: Volume 17 :: Hadith 126
Narrated Sharik bin 'Abdullah bin Abi Namir:

I heard Anas bin Malik saying, "On a Friday a person entered the main Mosque through the gate facing the pulpit while Allah's Apostle was delivering the Khutba. The man stood in front of Allah's Apostle and said, 'O Allah's Apostle! The livestock are dying and the roads are cut off; so please pray to Allah for rain.' " Anas added, "Allah's Apostle (p.b.u.h) raised both his hands and said, 'O Allah! Bless us with rain! O Allah! Bless us with rain! O Allah! Bless us with rain!' " Anas added, "By Allah, we could not see any trace of cloud in the sky and there was no building or a house between us and (the mountains of) Sila." Anas added, "A heavy cloud like a shield appeared from behind it (i.e. Sila' Mountain). When it came in the middle of the sky, it spread and then rained." Anas further said, "By Allah! We could not see the sun for a week. Next Friday a person entered through the same gate and at that time Allah's Apostle was delivering the Friday's Khutba. The man stood in front of him and said, 'O Allah's Apostle! The livestock are dying and the roads are cut off, please pray to Allah to with-hold rain.' " Anas added, "Allah's Apostle I raised both his hands and said, 'O Allah! Round about us and not on us. O Allah! On the plateaus, on the mountains, on the hills, in the valleys and on the places where trees grow.' So the rain stopped and we came out walking in the sun." Sharik asked Anas whether it was the same person who had asked for the rain (the last Friday). Anas replied that he did not know.

சலாம் சகோதரர்



நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம் ஏன் என்னிடம் வந்து கேட்கிறிங்க? அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று

நீங்கள் பைஜீஜமாலி சொன்ன இறைவசனத்தை சொல்லிருக்கலாமே?


சொல்லாமல் ஏன் துஆ கேட்டார்கள் சகோ ?

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.

(சூரா அல் பகரா 2 : 186

I dont have eblogger account