Followers

Saturday, August 24, 2013

கடந்து வந்த பாதை (இஸ்லாத்தை ஏற்ற பூசாரியின் வரலாறு)

உலகில் எந்த ஒரு மதத்தையும், இசத்தையும் புதிதாக நீங்கள் பின் பற்ற ஆரம்பித்தால் எந்த எதிர்ப்பும் கிளம்பாது. ஏனெனில் அந்த இசங்களோ மதங்களோ அவனது வாழ்வில் தலையிடப் போவதில்லை. இந்துவாக இருந்து கொண்டும், கிறித்தவனாகவும் இருந்து கொண்டும் அதே நபர் நாத்திகனாகவும் வாழ்ந்து விடலாம். இதை உலகமும் அங்கீகரிக்கிறது. கி.வீரமணி, கருணாநிதி, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்று நம் தமிழக தலைவர்கள் அனைவருமே நாத்திகராகவும் இருப்பார்கள். அதே நேரம் இந்து மதத்தின் உள்ளேயேதான் இருந்து வருவார்கள். நமது சட்டமும் அதைத்தான் சொல்கிறது. ஆனால் ஒருவன் இஸ்லாத்தை ஏற்கும் போது அவனோடு அந்த பிரச்னை முடிவதில்லை. உண்ணுவது, பருகுவது, திருமணம் முடிப்பது, சமூகத்தில் பழகுவது முதற்கொண்டு அனைத்து விஷயத்திலும் இஸ்லாம் தலையிடுவதால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் பல முனைகளிலிருந்தும் எதிர்ப்பை சந்திப்பதைப் பார்க்கிறோம்.

அந்த வகையில் இலங்கையில் இந்து மத பூசாரியாக இருந்த ஒருவர் தான் எவ்வாறு இஸ்லாத்தால் ஈர்க்கப் பட்டேன் என்று சொல்வதை இந்த காணொளியில் பார்த்து பயன் பெறுங்கள். இஸ்லாத்தை ஏற்றவுடன் அவரது எண்ணங்கள், செயல்பாடுகள, தோற்றங்கள் எல்லாம் எந்த அளவு மாறுபட்டு விடுகிறது என்பதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம்.


கடந்து வந்த பாதை 01 (இஸ்லாத்தை ஏற்ற... by sltjvideos


கடந்து வந்த பாதை 02 (இஸ்லாத்தை ஏற்ற... by sltjvideos

-------------------------------------------------------------

முற்றிலும் வித்தியாசமான முறையில் ஆப்ரிக்காவில் இஸ்லாமிய அழைப்புப் பணி!

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

suvanappiriyan said...

சகோ தனபாலன்!

எனது பதிவு தமிழ் மணத்தில் தற்போது இல்லை. அவர்கள் நீக்கியுள்ளார்கள் என்பதை தெரியப்படுத்துகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Dr.Anburaj said...

குரான் சொல்கிறது
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்து ……… குரான் 7:54

மீண்டும்குரான் சொல்கிறது
பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை ……….. அதில் அவறின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்……. இரண்டு நாட்களில் அவறை ஏழு வானங்களாக ஏற்படுத்தினான்……… குரான் 41:9,10,12

இந்த வசனங்களில் ஒன்றுக்கு இன்னொன்று முரணான கால அளவீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. முரணான காலங்களை குறித்ததனால் இந்த வசனங்களைப் புனைந்தது, குரானை எழுதியது அனைத்தும் அறிந்த ஒருவராக இருக்கமுடியாது அதாவது அல்லா என்ற ஒரு சக்தி கிடையாது முகம்மது தன்னுடைய ஆக்கங்களை எற்புடையதாக ஆக்குவதற்காக பயன்படுத்திய கற்பனைதான் அல்லா என்பது வெளிப்படுகிறது.
நன்றி செங்கொடி

Dr.Anburaj said...

ஒரு படிக்காதவர் கண்மணி நாயகம் நபியிடத்திலே அமைச்சார் பெரு மக்கள் மத்தியிலே கேட்டாராம் “நபி மானே சொர்க்கத்தில் எப்படி ஆடை கிடைக்கும்” அதற்கு எல்லோரும் சிரித்தார்களாம். உடனே அச்செயலை கண்டித்த நபி (ஸல்) அவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லவேண்டும் என்று கூறி சொன்னார் பதிலை “பருத்தி இருக்கிறதே பருத்தி அது வெடிக்கும் போதே உனக்குத்தேவையான அளவான உடையில் வரும்”

இதைக்கேட்டவுடன் நான் அந்த அரங்கத்தில் சிரித்துவிட்டேன். மற்றவர்கள் எல்லாம் அந்த அல்லா போலவே மூடிக்கொண்டிருந்தார்கள் போல.

\மலைகள் இல்லாத பூமி இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது. பூமி அசையாது நிலையாக இருக்கும் பொருட்டு பூமியின் மீது மலைகளை நான்கு நாட்களில் படைத்தான். ஆக பூமியும் – அதன் மீது நிருத்தப்பட்டிருக்கும் மலைகளும் நான்கு நாட்களில் படைக்கப்பட்டன// என்று எழுதியிருப்பதும் நீங்கள் தான். \\மலைகளுடன் கூடிய பூமியை ஆறு நாட்களில் படைத்தான்// என்று எழுதியிருப்பதும் நீங்கள் தான். மலைகளுடன் சேர்த்து பூமியை படைக்க நான்கு நாட்களா? ஆறு நாட்களா?
/மேற்படி வசனங்களை நீங்கள் கூர்ந்து ஆராய்ந்தால் இரண்டு வித்தியாசமான் படைப்புகளான பூமி மற்றும் வானம் இவைகளைப்பற்றி சொல்வதை அறியலாம். மலைகள் இல்லாத பூமி இரண்டு நாட்களில் படைக்கப்பட்டது. பூமி அசையாது நிலையாக இருக்கும் பொருட்டு பூமியின் மீது மலைகளை நான்கு நாட்களில் படைத்தான். //
மலைகள் இருப்பது பூமியை அசையாமல் நிலையாக பிடித்துக் கொள்ளவா?

மிகவும் மலைப்பாக‌ இருக்கிறது. பூமிக்கு மலை ஒரு பேப்பர் வெயிட் போல.

1.மலைகள் இருப்பது பூமியை அசையாமல் நிலையாக பிடித்துக் கொள்ளவா?

2.மலைகள் என்பது குரானின் படி என்ன?

3.அப்ப பூமி தட்டை என்று குரான் சொல்லுகிறதா?

4.பூமி தன்னைதானே சுற்ற வில்லையாம்சூரியனை சுற்றி வர வில்லையா?

5.மலைகள் பூமியின் அடித்தளம் வரை செல்கிறதா?

முதல் இரண்டு நாட்களில் பூமி படைக்கப்பட்டது என்றால் எந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டது? ஏனென்றால் பூமி படைக்கப்பட்டு அதில் உணவு வகைகளுக்காக நான்கு நாட்களைச் செலவு செய்து அதன்பிறகுதான் வானமும் ஏனையவையும் வருகின்றன. வானம் படைக்கப்படாமல் அதில் சூரியன் படைக்கப்படாமல் எந்த மையத்தில் பூமி சுழன்று நாட்கள் கணக்கிடப்பட்டது? (வானமா பூமியா எது முதலில் படைக்கப்பட்டது என்பது குறித்து ஏற்கெனவே எழுதப்பட்டதையும் இதனுடன் சேர்த்து படித்துக்கொள்ளவும்) பூமி உருவாகி பல கோடி ஆண்டுகள் நெருப்புக்கோளமாக சுற்றிக்கொண்டிருந்ததை எந்தக்கனக்கில் சேர்ப்பது?

suvanappiriyan said...

உலக படைப்பு அழிவு பற்றி சில சூத்திரங்கள்!

மனிதன் அன்று முதல் இன்று வரை இந்த உலகத்தைப் பற்றியும் அது எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றியும் சிந்தித்த வண்ணமே உள்ளான். இதற்கே இன்னும் விடை காண முடியாத போது இந்த உலகம் எப்பொழுது அழியும் என்பதை பற்றி சிந்திக்காத நபர்களே இல்லை எனலாம்.

"முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெருவெடிப்பின் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்த தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்"
-A BRIEF HISTORY OF TIME( PAGE 9)

அறிவியல் அறிஞர் ஹாக்கிங் சொல்ல வருவது பெருவெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெரு வெடிப்பு என்பதே காலத்தின் தொடக்கம் என்பதை தனது ஆய்வின் மூலம் விளக்குகிறார். குர்ஆனில் உலகம் படைக்கப்பட்டதைப் பற்றியும் உலக முடிவு நாள் பற்றியும் சில வசனங்கள் வருகிறது. பேரண்டம் படைக்கப்பட்டக் காலத்தில் ஒரு நாள் என்பது என்னவென்றோ அல்லது அதன் கால அளவு என்ன என்பதோ அறிவியல் பார்வையில் நம்மால் ஒரு தெளிவை அடைய முடியாது.

"வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்"
-குர்ஆன் 16:77

பேரண்டத்தின் அழிவைப் பற்றியே மேற்கண்ட வசனம் நம்மிடம் பேசுகிறது. இதில் பேரண்டம் எப்போது அழிக்கப்படும் என்ற செய்தியை இறைவன் அறிவிக்கிறான். கண் சிமிட்டும் நேரத்தை விட குறைவான நேரத்தில் இந்த உலகம் அழிக்கப்பட்டு விடும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த வசனம் இறங்கி 1433 வருடங்களாகி விட்டது. அந்த நேரம் இன்னும் வந்தபாடில்லை. ஏன் வரவில்லை?

......

suvanappiriyan said...

......

காலம் சார்பற்றது. அது சுயம் பூரணமானது என்ற தப்பெண்ணத்தில் உலகம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை நம்பியிருந்ததால் காலம் எப்போதும் எங்கும் ஒரே நிலையானது. எனவே அதில் மனிதனுக்கும் இறைவனுக்கும் வேற்றுமை இல்லை என்றும், எனவே மனிதனுக்கு கண் இமைக்கும் நேரம் எவ்வளவோ அவ்வளவே இறைவனிடத்திலும் இருக்க முடியும் என எண்ணினர்.

உலக முடிவு நாளின் நிலைமையைப் பற்றி குர்ஆன் கூறும் போது:

'சூரியன் சுருட்டப்படும்போது! நட்சத்திரங்கள் உதிரும் போது: மலைகள் பெயர்க்கப்படும் போது: கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது: விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது'
-குர்ஆன் 81:1-5

வானம் பிளந்து விடும் போது: நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது: கடல்கள் கொதிக்க வைக்கப்படும்போது.
-குர்ஆன் 82:1-3

மேற் கண்ட வசனங்களை நாம் மேலோட்டமாக பார்த்தாலே இவை அனைத்தும் கண் சிமிட்டும் நேரத்துக்குள் நடந்து முடிய சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருவோம். எனவே இறைவன் கூறக் கூடிய கால அளவு என்பது நம்மிடம் உள்ள கால அளவு படி இல்லாமல் இறைவன் புறத்தில் உள்ள காலஅளவின்படியே ஆகும் என்ற முடிவுக்கு வரலாம்.

பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவையும் இறைவன் கூறியுள்ளான். ஆனால் அந்த கால அளவு பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். அக்காலத்தில் மனிதப் படைப்பே இருந்திருக்கவில்லை. பேரண்டத்தில் கால நிர்ணயம் செய்யக் கூடிய அளவு கோல் எதுவும் இருக்கவும் இல்லை. எனவே நமது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள கணக்கு நமது கணக்கின்படி அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

மேற்கண்ட பதிலைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு கண் சிமிட்டும் நேரத்திற்கு தோராயமாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கவனிப்போம். கண் சிமிட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு விநாடியில் இரண்டு மூன்று முறை நம்மால் இமைகளை சிமிட்ட முடியும். ஆயினும் குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்து விடும் எனக் கூறுவதில் திருப்தி கொள்ளாமல் அதை விடக் குறைவான நேரத்தில் உலக அழிவு வரக் கூடும் எனக் கூறுகிறது. இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட்(milli second) கணக்கில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கமானது இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

suvanappiriyan said...

....

குர்ஆன் சொல்லும் கால அளவை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று மற்றவர்கள் கேட்கலாம். இந்த விளக்கமானது குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் மேலும் சில கணித வடிவமைப்புகளை பார்வையிடுவோம்.

பேரண்டத்தின் அழிவு எப்போது என்பது பற்றித் திருமறை வசனங்களிலிருந்து அது கூறிய கால அளவு ஏறத்தாழ 0.2 வினாடி என்று நாம் அனுமானித்தோம். ஆனாலும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1433 வருடங்களாகியும் இப்பேரண்டமானது அழிவுறத் தொடங்கவில்லை. எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி இவ்வுலகின் தற்போதய 1433 (ஹிஜ்ரி) வருடங்களை விட மிகுதியானதாகும் என ஐயமறத் தெரிகிறது. இந்த விளக்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1433 வருடங்களை விட அதிகம் என்பதாகும்.

இன்னும் விளக்கமாக சொல்லப் போனால்...

0.2 வினாடி > 1433 வருடங்கள்

இந்த இடத்தில் குர்ஆனின் கணக்கின்படி பேரண்டத்தின் 2 வினாடி என்பது உலகியலின் கணக்கின்படி 1433 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை 1433 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1433 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். ஆனால் இப்பேரண்டம் எப்பொழுது துல்லியமாக அழியும் என்ற ரகசியத்தை நம்மை படைத்த இறைவனே அறிவான். இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1433 வருடங்களுக்கு மேல் என்றே கூற முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1433 வருடங்கள் என்ற எண் நிரந்தரமானதன்று. அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1434, 1435 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

குர்ஆன் இந்த பேரண்டத்தைப் படைக்க ஆறு நாட்கள் ஆனதாக கூறுகிறது. இந்த ஆறு நாட்கள் என்பதை நாம் முன்பு குர்ஆனிலிருந்து பெற்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி நம் உலகியல் கணக்குக்கு ஒரு தோராயமான மதிப்பை பெற முயற்ச்சிப்போம்.

மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள்:
=0.2*24=4.8=5

=0.2 வினாடி * வினாடி (sec) * நிமிடம் (min) * மணி(time)

=5 * 60 * 60 * 24

=43200 * 6 = 2259000 (ஆறு நாட்களுக்காக விடையை ஆறால் பெருக்கியிருக்கிறோம்)

=1433=0.2 வினாடி ( அதாவது பேரண்டத்தின் 0.2 வினாடியின் கால அளவு என்பது 1433 உலகியல் வருடங்களுக்கு மேல் என்ற எண்ணுக்கு நிகரானது என்பதை நினைவில் கொள்வோம்)

=1433 * 2259000 (இறைவன் புறத்தில் உள்ள ஆறு நாட்களின் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின் கால அளவுக்கு நிகரான நம் கணக்கில் உள்ள உலகியல் வருடங்கள்

=3237147000

உலகம் படைக்கப்பட்டதின் வருடங்களை உலகியல் கணக்கில் குர்ஆனின் சூத்திரத்தை வைத்து தற்போது கண்டு பிடித்து விட்டோம். இந்த பேரண்டம் உருவாக்கப்பட்டு 320 கோடி வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதனை மிக தெளிவாக கண்டு கொண்டோம்.

இப்பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாயிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லே ஷேப்லி கூறுகிறார்.

பேரண்டம் உருவாவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

குர்ஆன் கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறியல் அறிஞர்களால் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளோடு ஏறத்தாழ ஒத்து வருவதை கண்டு நாம் ஆச்சரியமடைகிறோம். அந்த அறிவியல் அறிஞர்களும் தோராயமாகத்தான் காலத்தை கணித்தனர். குர்ஆனோ இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலத்தை துல்லியமாக 1433 வருடங்களுக்கு முன்பே மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். எழுதப் படிக்க தெரியாக ஒரு மனிதர் இந்த குர்ஆனை தனது சொந்த கற்பனையில் இயற்றியிருக்க முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

- திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்:
- A Brief History Of Time.