Followers

Tuesday, August 06, 2013

ஒரு தமிழ் பெண்ணுக்கு அவசர உதவி வேண்டி.....



அன்புடையீர்,

இந்தியத்தூதரகம் ஏற்றெடுத்துள்ள ஒரு தமிழ்ப் பெண்மணியின் கேஸ் ஒன்று உதவிக்காக தூதரக தன்னார்வலர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த சித்தாரா பேகம் என்ற பெண்மணி B.A. அரபிக் முடித்துவிட்டு சவூதியில் ஒரு வீட்டில் குழந்தைகளுக்கு அரபிபாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற விசாவில் வந்துள்ளார், அவரை உண்மையில் ஏமாற்றி அழைத்துவந்து ஹவுஸ்மேடாக வேலை செய்யவைத்து பலவிதமான தொல்லைகளுக்குண்டாக்கி சம்பளமும் கொடுக்காமல் இருந்துள்ளார்கள்.

இவருக்கு இரண்டு பிள்ளைகள், அவரின் கணவர் ஒரு பள்ளியில் இமாம் வேலை பார்க்கிறார். கடந்த மாதம் 4 1/2 வயது நிரம்பிய அவர் மகனை பள்ளியில் சேர்த்துவிடுவதற்காக சாலையைக் கடந்த பொழுது சிறுவன் உடல் லாரிக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான், காப்பாற்றச் சென்ற தந்தையின் கால்களில் சக்கரம் ஏறி ஒரு காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்து மருத்துவமணையில் இருக்கிறார்.

இந்த தொடர் அதிர்ச்சி சம்பவங்கள் சித்தாரா பேகத்திற்கு இருந்த இருதய நோயை தீவரப்படுத்தி சுகவீனமாகிவிட்டார். சமுதாய ஆர்வலர் சகோ. ஷிஹாப் கொட்டுக்காட் அவர்கள் விபரம் அறிந்து தூதரக தலையீட்டால் இப்பொழுது அவரை ரியாத் முபாரக் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு முதலுதவி கொடுத்து இன்னும் சிலதினங்களில் தாயகம் அனுப்பி வைக்க உள்ளார்கள்.இப்பொழுது தூதரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் அவரின் மருத்துவ செலவிற்கும், கணவரின் மருத்துவ செலவிற்கும் எதாவது உதவியை எதிர்பார்க்கிறார்கள். உங்கள் உதவிகளை நேரடியாகவோ அல்லது எங்கள் மாறலாகவோ செய்யலாம்.

பெரும்பாலானோர் செய்த உதவியின் காரணமாக Rs. 80,000க்கு சமீபமாக பொருளுதவி இதுவரை கிடைத்துள்ளது. தூதரகத்தில் இருந்து Deportation Center க்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அனுப்பி விட்டார்கள், அங்கு கைரேகை ஏற்பாடுகள் முடிந்து இன்னும் ஒரு சிலதினங்களில் தாயகம் செல்லும் ஏற்பாட்டில் உள்ளார்.

ஒரு சிறிய பெட்டியும் அதில் அவரின் மகளுக்கு ஒரு துணியும், அவருக்கு ஒரு துணியும் கொஞ்சம் அத்தியாவசிய பொருட்களும் வாங்கி மும்பையில் இருந்து சென்னை செல்வதற்கான செலவிற்குண்டான பணத்தையும் நாளை ஒப்படைக்க உள்ளோம். மீதியுள்ள பணத்தை அவர் தகப்பனாருக்கு நேரடியாக அனுப்பிவைக்க அவரிடம் தொடர்பு கொண்டு வங்கி எண்ணைப் பெற்றுள்ளேன்.

யாராவது நேரடியாக உதவிசெய்ய விரும்பினால் கீழேயுள்ள வங்கி கணக்குக்கு அனுப்பலாம்.

NAME : ABDUL SUKKUR
A/C : 877103848
BANK : INDIAN BANK
BANK ADDRESS : GANGAVALLI, ATTUR MAIN ROAD, SELAM

ADDRESS : ABDUL SUKKU, S/O KADARBASHA, 4/15F ATTUR MAIN ROAD, GANGAVALLI, SELAM.

Best Regards,Ahmed Imthias
imthias@imthias.com
+966540753261

8 comments:

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் ! ( இப்படி சொல்லி எவ்வளவு நாட்கள் ஆகிறது )

படிக்கும்போதே உள்ளம் கனக்கிறது..அல்லாஹ் அவர்களுக்கு அதிகமான உதவிகளை செய்வானாக ! அவர்களது உள்ளங்களை திடப்படுத்துவானாக ! ஆமீன் !

suvanappiriyan said...

//சலாம் சகோ.சுவனப்பிரியன் ! ( இப்படி சொல்லி எவ்வளவு நாட்கள் ஆகிறது )//

வஅலைக்கும் சலாம் சகோ நாகூர் மீரான்! (நானும் இப்படி சொல்லி எவ்வளவு நாளாகி விட்டது)

தமிழகம் சென்றிருந்ததால் சிறிது இடைவெளி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வவ்வால் சுவாமிகள்!

//இதல்லாம் வக்கணையா சொன்னீர் ,ஆனால் என்ன மொழினு கேட்டதை மட்டும் விட்டதேன்?//

ஹி..ஹி...இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று ஒன்றே கிடையாது. உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்தையும் மனிதனுக்கு கற்று கொடுத்தது தானே என்று இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். நபி ஆப்ரஹாம் அரபி மொழி பேசியவர் அல்ல. ஏசு அரபி மொழி பேசியவரல்ல. குர்ஆனில் சொல்லப்பட்ட பல நபிகளுக்கு அரபு மொழியே தெரியாது. கடைசி நபி முகமது அரபு தேசத்தில் பிறந்ததால் குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. முகமது நபி ஒரு தமிழராக இருந்திருந்தால் தமிழ் மொழியிலேயே குர்ஆன் அருளப்பட்டிருக்கும். உலக மக்களுக்கு அறிவுரை வழங்க உலக வழக்கு மொழிகள் ஏதாவது ஒன்றின் மூலமாகவே வேதங்களை அருள முடியும். அதன்படியே குர்ஆன் அரபியில் அருளப்ட்டது. இதைத் தவர்த்து அரபி மொழிக்கு வேறு எந்த முக்கியத்துவமும் இஸ்லாமிய பார்வையில் கிடையாது. இது பற்றி முன்பே விளக்கியுமிருக்கிறேன்.

//தேவலோகத்தில் இருக்கும் எங்கள் தெய்வமேன்னு தமிழில் வழிப்பட நீங்கள் தயாரா?//

கண்டிப்பாக! நான் ஐந்து வேளை தொழுகையிலும் எனது தாய் மொழியான தமிழிலேயே எனது தேவைகளை இறைவனிடம் கேட்கிறேன். தாய் மொழியிலேயே தங்கள் தேவைகளை இறைவனிடம் கேட்குமாறு முகமது நபியின் கட்டளையே உள்ளது.

suvanappiriyan said...

suvanappiriyan says:
August 5, 2013 at 11:25 am

சாய்பாபாவின் புரட்டுகளை வீடியோ ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய பின்னும் ஜோதிர்லாதா கிரிஜா போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் எப்படி இப்படி ஒரு நம்பிக்கையை இன்னும் வைத்துள்ளார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’என்பதுதான் நமது முன்னோர்களின் வழிபாடு. அது எந்த பெயரிலாவது இருந்து கொள்ளட்டும். ஆனால் தயவு செய்து மல ஜலத்தை சுமந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களை இறைவனாக்கி அந்த ஏக இறைவனை சிறுமைப்படுத்தாதீர்கள்.
Reply

புனைப்பெயரில் says:
August 6, 2013 at 3:40 am

மல ஜலத்தை சுமந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களை இறைவனாக்கி –> இது பிற மதத்தில் இருக்கும் தூதர்களுக்கும் பொருந்துமா? சொல்வீர்களா?
Reply

suvanappiriyan says:
August 6, 2013 at 6:39 pm

//இது பிற மதத்தில் இருக்கும் தூதர்களுக்கும் பொருந்துமா? சொல்வீர்களா?//

கண்டிப்பாக! ஏசுவாகட்டும், முகமது நபியாகட்டும், ஆப்ரஹாமாகட்டும், ராமனாகட்டும் அனைவரும் மல ஜலத்தை சுமந்து மணம் செய்து குழந்தை குட்டிகளை பெற்றுக் கொண்டவர்களே! இவர்கள் எவ்வாறு கடவுளாக முடியும்? அல்லது கடவுளின் அவதார மாக மாற முடியும்?
Reply

suvanappiriyan said...

திரு ரெங்கா!

//பிறகு எதற்க்கு காபா என்று சொல்லப்படும் வெறும் கட்டிடத்தை சுற்றிச் சுற்றி வந்து வழிபாட்டு செய்கிறீர்கள்?இடித்து தள்ளவேண்டியதுதானே? //

கிட்டத்தட்ட உலகின் மைய பகுதி கஃபா. உலக மக்கள் அனைவரும் 'நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன்' என்ற பாகுபாடு காட்டாது ஒரே சீருடையில் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வைப் பெறுவதற்காகத்தான் ஒரு எல்லையாக மெக்காவில் கஃபா நிர்மாணிக்கப்பட்டது. அந்த உணர்வை அங்கு யாரும் பெற முடியும். அதனால்தான் முஸ்லிம்களிடத்தில் தீண்டாமை இல்லை. உலகில் இறைவனை வணங்க முதன் முதலாக உண்டாக்கப்பட்டதும் இந்த காஃபா பள்ளிதான். இதைத் தவிர வேறு சிறப்பு எதுவும் இல்லை. ஐந்து வேளை தொழுகையை தமிழக பள்ளிகளில் நிறைவேற்றினாலும் அந்த நன்மை கிடைக்கும். செல்வந்தர்கள் மட்டுமே வாழ்வில் ஒரு முறை ஹஜ் செய்ய கடமை ஆக்கியது இஸ்லாம். ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை பெறுவதற்காகவே இந்த ஏற்பாடு.

அஜீமும்அற்புதவிளக்கும் said...

அஸ்ஸலாமு அலைக்கும், ரமதான் கரீம் அண்ட் ஈத் முபராக் ,நீங்க கொடுத்த வங்கி கணக்குலே ஐபான் எண் இல்லையே , இங்கே எல்லா பான்குகளிலும் ஐபான் எண் கேட்கிறார்களே .
தங்கள் விடுமுறை எப்படி இருந்தது .

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ அஜீம்!

//நீங்க கொடுத்த வங்கி கணக்குலே ஐபான் எண் இல்லையே , இங்கே எல்லா பான்குகளிலும் ஐபான் எண் கேட்கிறார்களே .//

சகோ இம்தியாஸின் மெயிலில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

//தங்கள் விடுமுறை எப்படி இருந்தது .//

இறைவன் கிருபையால் சந்தோஷமாக கழிந்தது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Dr.Anburaj said...

அரேபியா்கள் புரண யோ்க்கியா்களா ?
குரான் பிறந்த நாட்டின் லட்சணம் இதுதான்.
சேலத்தைச் சேர்ந்த சித்தாரா பேகம் என்ற பெண்மணி B.A. அரபிக் முடித்துவிட்டு சவூதியில் ஒரு வீட்டில் குழந்தைகளுக்கு அரபிபாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற விசாவில் வந்துள்ளார், அவரை உண்மையில் ஏமாற்றி அழைத்துவந்து ஹவுஸ்மேடாக வேலை செய்யவைத்து பலவிதமான தொல்லைகளுக்குண்டாக்கி சம்பளமும் கொடுக்காமல் இருந்துள்ளார்கள்.உலக மக்களை அரேபிய அடிமையாக்க வேண்டும் என்ற வல்லாதிக்க மனப்பான்மை கொண்ட முகம்துவின் கட்டுக்கதைகள் இப்பொழுது வெளுத்து போய்உள்ளது. திருக்குறள் இருக்க குரான் தேவையில்லை.