Followers

Monday, August 17, 2015

சங்கராபுரம் தலித் வீடுகளின் கோரக் காட்சி!



தலித் மக்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான்: வீட்டை கொளுத்திய வன்னியர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தான். இரண்டு சாதிகளின் கடவுளும் ஒருவன்தான். ஆனால் அந்த கடவுளுக்கு மரியாதை செய்ய ஒரு தரப்பு மறுக்கப்பட்டு காலகாலமாக உதாசீனப்படுத்தப்படுகிறது. எரிக்கப்பட்ட அந்த வீடுகளில் ஏதாவது மிஞ்சியிருக்கிறதா என்று பாருங்கள்.

கூலி வேலை செய்து பிழைத்து வரும் அந்த தலித் இனி தனது வீட்டை நிர்மாணிக்க எத்தனை வருடம் உழைக்க வேண்டும்? வீட்டை கொளுத்தியதில் தாய்மார்களும் குழந்தைகளும் கூட பங்கெடுத்தார்களாம். சாதியின் கொடூரம் பெண்களையும் குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. பாதுகாப்புக்கு வந்த காவல் துறையையும் இந்த கும்பல் தாக்கியிருக்கிறது. உழைத்து வாழ்ந்தாலும் வாழ அனுமதிக்காத சமூகத்தின் மீது அவனது கோபப் பார்வை திரும்பினால் அதன் பின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது.

சாதியை வைத்து அரசியல் நடத்தும் அனைத்து தலைவர்களையும் சமூகத்தில் இருந்து மக்கள் ஒதுக்கினாலேயே இது போன்ற கொடூரங்களை குறைக்க முடியும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை கணக்கில் வைத்து தன் மக்களை வேறெங்கும் சென்று விடாமல் காக்கும் ஒரு உக்தியாகவே இதனை பார்க்கிறேன்.

3 comments:

C.Sugumar said...

தமிழ் இந்து என்ற இணையதளம் வெளியானது.

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்று. இது உருவாக்கியுள்ள காயங்களுக்கும் ரணங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கப் பட வேண்டும். தற்போதைய சூழலில், அதற்கான பொறுப்பும் தார்மீக உரிமையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் தவத்திரு பங்காரு அடிகளாரைச் சேர்ந்தது என்று நான் கருதுகிறேன்.

Temple-Car-Torched-in-Villupuramபங்காரு அடிகளாரின் இயக்கம் அந்தப் பகுதியில் வேர்கொண்டு தமிழகம் முழுவதும் 1980களில் பிரபலமடைந்தது (அதன் வளர்ச்சியில் இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் ஆற்றிய பங்கும் மிக முக்கியமானது). அனைத்து சாதியினரும், குறிப்பாக பெண்களும் நேரடியாக சக்தி வழிபாடும், பூஜைகளும், சடங்குகளும் செய்யும் ஏற்பாட்டின் மூலமாக எளிய மக்களிடையே ஆன்மீக மறுமலர்ச்சியையும் சமுதாய சமத்துவத்தையும் அவரது இயக்கம் வலியுறுத்தி வந்திருக்கிறது. அந்தப் பகுதியில் கல்வி, மருத்துவ மையங்களையும் நடத்தி வருகிறது.

பங்காரு அடிகளார் இந்தக் கிராமத்திற்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும். இரு தரப்பினரும் அவர் முன்னிலையில் கூட வேண்டும். அம்மனின் தேரை எரித்து, ஏழை மக்களின் குடிசைகளை எரித்த ஆதிக்க சாதியினர் அவர் முன்னிலையில் தாங்கள் செய்த பெரும் பாவத்திற்கு தலித் குடும்பங்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். எரிந்த குடிசைகளை மீண்டும் கட்டித் தருவதும் தேரை மீண்டும் செப்பனிட்டு கோலாகலமாக அம்மனை ஊரின் அனைத்துத் தெருக்களிலும் பவனி வரச்செய்வதுமே இதற்கான பிராயச்சித்தம் என்று அடிகளார் அறிவிக்க வேண்டும். இந்த பிராயச்சித்தத்தை செய்யாத பட்சத்தில், அம்மனின் கோபம் அந்த வன்கொடுமை செய்தவர்களின் குடும்பங்களையும் அவர்களது தலைமுறைகளையும் சென்று தாக்கும் என்ற விஷயம் உறுதியாக ஆதிக்க சாதிக்காரர்களிடம், குறிப்பாக அந்தக் குடும்பத்துப் பெண்களிடம் சொல்லப் பட வேண்டும். இதற்கான நிதியுதவியின் ஒரு பங்கை ஆதிபராசக்தி பீடமும் இந்து இயக்கங்களும் இணைந்து வழங்கலாம். தேர்த்திருவிழாவிலும் அடிகளார் பங்குகொண்டு ஆசியளிக்க வேண்டும்.

இந்த ஏற்பாட்டை உடனடியாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் செய்ய வேண்டும். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை உடைத்தெறிந்ததில் அவர்களது பங்கு சிறப்பானதாக இருந்திருக்கிறது. அதே உத்வேகத்துடன் இந்தப் பிரசினையிலும் செயல்பட வேண்டும். காலம் தாழ்த்துதல் கூடாது.

(பி.கு: இந்தச் சம்பவம் நடந்த சங்கராபுரம் கிராமப் பகுதியுடன் எனக்கு தனிப்பட்ட அளவில் ஒரு தொடர்பு உண்டு. எனது மாமனாரின் பூர்வீக ஊரான மேலகரம் அங்கு தான் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விசேஷத்திற்காக அங்கு போயிருக்கிறேன். அவரது குடும்ப அங்கத்தினர்கள் பெரும்பாலர் ஊரிலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களுப் பெயர்ந்து விட்டனர்).

C.Sugumar said...

சேஷசமுத்திரம் வன்முறையில் தலித்துக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். கோவில் தேர் எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது.

செய்ததது சோ கால்டு சாதி இந்துக்களே தான். அதுவும் புர்ச்சிகர கட்சிகளான திமுக, திக மற்றும் தேமுதிக, அதிமுக கட்சிகளில் இருப்பவர்கள். கவனிங்க சோகால்டு பாமக வன்னிய சாதி வெறியர்கள் ஏதும் செய்யலியாம். செஞ்சது எல்லாம் மத்த கட்சி சாதிவெறியர்களே.

அவர்கள் அதுவும் மேடை போட்டு இது டந்தை டரியார் பிறந்த மண் இங்கே இந்துத்துவா தலையெடுக்கமுடியாது என முழங்குபவர்கள்.

அவர்கள் எல்லாம் அப்போ புர்ச்சிகர பொங்கலாளிகளாக இருப்பவர்கள் இப்போ மட்டும் சாதி இந்துக்கள் ஆகிவிடுகிறார்கள்.

தேர்தல் வந்தா மட்டும் இங்கே இந்து இயக்கங்களை உள்ளே விடமாட்டோம். இந்துத்துவா காலூன்ற விடமாட்டோம் என கூவும் டுபாக்கூருகள் இப்போ இந்து இயக்கங்கள் என்ன செய்தன என கேட்கிறார்கள்.

இதை இந்து இயக்கங்கள் வாய்ப்பாக சவாலாக எடுத்துக்கொண்டு அங்கே எரிக்கப்பட்ட தேர் மீண்டும் ஓடவும் திருவிழா சிறப்பாக நடக்கவும் ஏற்பாடு செய்து இந்த மானங்கெட்ட த்ராவிட த்ராபைகள் மீதும் புர்ச்சி பொங்கலாளிகள் மீதும் கரியை பூசவேண்டும்.

தேர் இழுப்பு, சாமி ஊர்வலம் எல்லாம் வயதானவர்கள், முடியாதவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் கடவுளை கும்பிட கோவிலுக்கு வரவேண்டியதில்லை கடவுளே வீடு தேடி போய் அருளுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பவை.

அதை எரிக்கும் கபோதிகளுக்கு கடும் தண்டனை தரப்படவேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் முன்நின்று அதை நடத்திக்காட்டவேண்டும்.

Dr.Anburaj said...

சாியான கருத்து. சுவனப்பாியன் ஐயா தங்களுக்கு இது போன்ற கடிதத்தை வெளியிட மனம் உள்ளதா , நன்றி