Followers

Monday, April 28, 2014

கேளிக்கைகளுக்காக கோழி சண்டைகளை ஊக்குவிக்கலாமா?



சவுதி அரேபிய மாநிலங்களில் ஒன்றான நஜ்ரானில் அவ்வப்போது நடக்கும் சேவல் சண்டையைத்தான் நாம் மேலே பார்க்கிறோம். இது போன்ற போட்டிகளை நடத்துவது இஸ்லாமிய சட்டங்களுக்கு மாற்றமானது என்ற கருத்தில் சவுதி அரசு தடை செய்துள்ளது. ஆனால் நஜ்ரான் போன்ற எல்லையோர பகுதிகளில் கிராமங்களில் இதுபோன்ற விளையாட்டுக்களை சிலர் சந்தோஷத்துக்காக செய்கின்றனர். இன்னும் சிலர் இதில் மிகப் பெரும் தொகைகளை பந்தய பணமாக கட்டி பணம் பண்ணும் வழியாகவும் மாற்றிக் கொண்டுள்ளனர்.

மெக்சிகோ, உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளில் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் கோழிகள் மிக அதிக விலையை பெறும். நமது இந்தியாவிலும் மாடுகளை பிடிப்பதிலும், கோழி சண்டைகளை ஊக்குவிப்பதிலும் பெரும்பாலோர் பங்கு பெறுவதை பார்க்க முடிகிறது.

ஒரு உயிரை இவ்வாறு இம்சை படுத்தி அது படும் கஷ்டத்தை நாம் பார்த்து ரசிப்பது என்பது மிக கொடூர எண்ணங்களை நம்முள் உண்டாக்கும். இதற்கு நமது அரசாங்கங்களும் தடை விதிக்க வேண்டும். மற்றவர்கள் எப்படியோ ஆனால் ஒரு முஸ்லிம் மிருகங்களிடத்தில் அன்பு பாராட்ட வேண்டும். அதனை பின் வரும் நபி மொழிகள் நமக்கு விளக்குகின்றன.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி ஒரு பூனைக்குத் துன்பம் தந்த விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – ‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான். (புஹாரி:2365, முஸ்லிம்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. (புஹாரி:3321)

நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். (புஹாரி:2363, முஸ்லிம்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டினாலோ, ஏதாவது ஒன்றை பயிரிட்டாலோ அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை. (புஹாரி:6012, முஸ்லிம்)

ஸஈதுப்னு ஜுபைர் (றழி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் (றழி) அவர்கள், குரைஷி கூட்டத்தைச் சார்ந்த சில வாழிபர்களை கடந்து சென்றார்கள், அவர்கள் ஒரு பறவையை குறியாக வைத்து எறிந்து கொண்டிருந்தனர், தவறும் ஒவ்வொரு அம்புக்காகவும் பறவையின் சொந்தக் காரனுக்கு (சன்மானம்) வைத்தனர். இதனை இப்னு உமரவர்கள் கண்ட போது. ‘யார் இதனை செய்தது?’ ‘இப்படி செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக, ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், உயிருள்ள ஒன்றை இலக்காக, குறியாக ஏற்படுத்தியவரை சபித்தார்கள்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்:5174)

அடுத்து இவ்வளவு ஜீவகாருண்யம் பேசும் நீங்கள் உயிர்களைக் கொன்று சாப்பிடலாமா? என்று கேட்கலாம். இந்த பூமியை மனிதனுக்காக படைத்த இறைவன், அதில் உள்ள மற்ற உயிரினங்களை மனிதனின் தேவைக்காகவே படைத்ததாக சொல்கிறான்.

உலகில் வாழும் மனிதர்களில் பெரும்பான்மை சமூகம் நாத்திகர்கள் தவிர கடவுள் கொள்கையை இந்த உலகம் தானாக வந்ததல்ல, மனிதனைப் படைத்த சிருஷ்டி இருக்கின்றான் என்ற கொள்கையை ஏற்றவர்களாகத் தான் இருக்கின்றனர். அந்த அடிப்படையில் படைப்பாளன் அல்லாஹ் படைப்பினங்களைப் படைக்கும் போதே அவற்றின் இயல்பை வெளிப்படுத்திக் காட்டும் நிலையிலேயே படைத்துள்ளான். ஆடு, மாடு போன்ற தாவர உண்ணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையை எடுத்து நோக்கினால் அதன் இயல்பு தாவரம் உண்ணுவது என்பது விளங்கும். சிங்கம், புலி போன்ற வேட்டைப் பிராணிகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் பல் வரிசையில் வேட்டை பல் வெளிப்படையாகத் தென்படும். அதன் மூலம் அவை வேட்டைப் பிராணிகள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆனால் மனிதனை எடுத்துக் கொண்டால் அவனும் ஒரு மிருகமாக ஆனால் பேச முடிந்தவனாக இருந்தாலும் அவன் இந்த இரண்டு இயல்புகளுக்கும் உட்பட்டவனாகவே இருக்கின்றான். அவன் மாமிசத்தையும், தாவரத்தையும் உண்ணுபவனாக இருக்கின்றான். படைப்பாளன் அல்லாஹ் அதனை தெளிவுபடுத்தும் நிலையில் அதனது பல் வரிசையை வேட்டைப் பல் கொண்டதாகவும், அரைக்கும் பல் கொண்டதாகவுமே படைத்துள்ளான். எனவே மனிதன் மாமிசம் (ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி) உண்ணுவதை காழ்ப்புணர்ச்சிக்காக விமர்சிப்பது, தாம் ஏற்றிருக்கும் கடவுள் கொள்கைக்கு முரணானதாக இருப்பதுடன், கடவுளையே விமர்சிப்பதாக அமையும். இப்படி நடு நிலையாக அனைவரும் ஏற்ற அடிப்படையில் சிந்தித்தாலும் மனிதன் மாமிசம் சாப்பிடுவது இயற்கையானதே என்று விளங்கும். காய்கறிகளுக்கும் உயிர் உண்டு என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. அதனால் ஜீவகாருண்யம் பேசுபவர்கள் காய்கறிகளை சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டு நியாயம் பேச வேண்டும்.

காட்டுவாசிகளும், ஆதிகால மனிதர்களும் வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டதனாலே வேடர்கள் என்ற ஒரு சமூகமே உருவானது. இன்று இஸ்லாத்தை ‘ஜீவகாரூன்யமற்ற மார்க்கம்’ என்று விமர்சிப்போர் யோசிக்க வேண்டும், காட்டு வாசிகள் வேட்டையாடியது, மாமிசத்தை சாப்பிட்டது, இஸ்லாம் காட்டிக் கொடுத்ததனாலா?! அல்லது மனிதனின் இயல்பு என்பதனாலா?! இஸ்லாத்தை விமர்சிக்கும் இவர்கள் காட்டு வாசிகளை வேடர்களை மனித சமூகமாக நோக்காதவர்களா?! நடு நிலையாக சிந்திப்போர் தெளிவு பெறுவர். தற்போது துருவப் பிரதேசமான ஆர்டிக் பகுதிகளில் எஸ்கிமோக்கள் மாமிசம் சாப்பிடாமல் இருந்தால் இறந்தே விடுவார்கள்.

உணவுக்காக உயிர்களை அறுக்கும் போது கத்தியை நன்கு தீட்டிக் கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அந்த உயிர் அதிக நேரம் இம்சைபடாமல் இருக்க குரல்வளையில் அறுத்து அதன் உயிர் சீக்கிரம் சென்று விடும்படி அமைத்துக் கொள்ள இஸ்லாம் கட்டளையிடுகிறது. எனவே உணவு தேவைகளுக்காக மிருகங்களை அறுப்போம். அதே சமயம் நமது கேளிக்கைகளுக்காக அந்த உயிரினங்களை இம்சைபடுத்துவதை நிறுத்திக் கொள்வோம்.

4 comments:

kannan said...

அஸ்ஸலாமு அல்லைக்கும் சுபி பாய். சேவல் சண்டை பற்றிய உங்கள் கருத்தை எற்றுக்கொள்கிறேன். ஆனால் மதம் சொல்கின்றது என்கிற் காரண்த்திற்கா அசைவ உண்விற்கு முக்கிய்த்துவம் கொடுப்பதை என்னால் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிருகமோ, பறைவையோ அவைகள் இயற்கையாக இறந்த பிற்கு சாப்பிவதற்கு என்ன ஆட்சேபனை? இது மனிதாபமான அடிப்படையில் கேட்க்கப்பட்ட கேள்வி அதனால் மதத்தை கொஞ்சம் தள்ளி வைத்து viitu பதில் சொல்லுங்கள்

best regards from

kannan
abu dhabi.
http://samykannan.blogspot.ae/

kannan said...

அஸ்ஸலாமு அல்லைக்கும் சுபி பாய். சேவல் சண்டை பற்றிய உங்கள் கருத்தை எற்றுக்கொள்கிறேன். ஆனால் மதம் சொல்கின்றது என்கிற் காரண்த்திற்கா அசைவ உண்விற்கு முக்கிய்த்துவம் கொடுப்பதை என்னால் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிருகமோ, பறைவையோ அவைகள் இயற்கையாக இறந்த பிற்கு சாப்பிவதற்கு என்ன ஆட்சேபனை? இது மனிதாபமான அடிப்படையில் கேட்க்கப்பட்ட கேள்வி அதனால் மதத்தை கொஞ்சம் தள்ளி வைத்து வீட்டு பதில் சொல்லுங்கள்.

regards from

kannan
abu dhabi.
http://samykannan.blogspot.ae/

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் திரு சாமி கண்ணன்!

//ஆனால் மதம் சொல்கின்றது என்கிற் காரண்த்திற்கா அசைவ உண்விற்கு முக்கிய்த்துவம் கொடுப்பதை என்னால் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//

புலால் உண்ணுவது இஸ்லாத்தில் கட்டாய கடமை என்று சொல்லவில்லையே! மது, சாராயம் கண்டிப்பாக மனிதர்கள் தவிர்க்க வேண்டும் என்கிறது இஸ்லாம். அது போன்ற தடை மாமிசம் உண்ணுவதற்கு கிடையாது. விரும்பியவர்கள் புலால் உண்ணலாம். விரும்பாதவர்கள் காய்கறிகளை சாப்பிடலாம். புலால் உண்ணுவதை குர்ஆன் தடை செய்தால் காட்டில் வாழ்பவர்களும், எஸ்கிமோக்களும் எதனை சாப்பிட முடியும்? உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானதல்லவா குர்ஆன்? எஸ்கிமோ இனத்தில் ஒரு முஸ்லிம் இருந்தால் அவருக்கு மாமிசத்தை தடை செய்தால் இறந்தே விடுவார். அங்கு குர்ஆனின் கட்டளையை செயல்படுத்த முடியாமல் போய் விடுமே!

//மிருகமோ, பறைவையோ அவைகள் இயற்கையாக இறந்த பிற்கு சாப்பிவதற்கு என்ன ஆட்சேபனை?//

இறந்த உடலில் இரத்தம் தேங்கி விடும். அந்த இரத்தம் சாப்பிடும் நபருக்கு பல உபாதைகளை கொண்டு வரும். எனவே தான் முஸ்லிம்கள் கழுத்தில் அறுத்து அதன் இரத்தம் முழுவதையும் ஓட்டி விட்டு பிறகுதான் சமைத்து சாப்பிடுவார்கள். அதுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறையும்.

// இது மனிதாபமான அடிப்படையில் கேட்க்கப்பட்ட கேள்வி //

ஒரு உயிரை அறுத்து சாப்பிடுவது மனிதாபிமானத்துக்கு எதிரானது என்றால் புல் பூண்டுகள், காய் கறிகள், கனி வர்க்கங்கள் அனைத்துக்கும் உயிர் உள்ளதே! ஏன் அங்கு மட்டும்
அதே மனிதாபிமானம் வேலை செய்யவில்லை. சிங்கம், புலி மான்களையும், எருதுகளையும் சாப்பிடுவதும் மான்கள் இழை தழைகளை சாப்பிடுவதும் இறைவன் அமைத்துக் கொடுத்த ஒரு சுழற்சி முறை.

அடுத்து மனிதர்கள் அதிகம் சாப்பிடுவது கோழி, ஆடு, மாடு, மீன்கள் போன்றவைகளையே! எந்த நாட்டிலாவது இந்த உயிரினங்கள் குறைந்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாளாக நாளாக இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றன. அதே நேரம் மனிதன் சாப்பிடாத புலி, சிங்கங்களின் எண்ணிக்கை உலக அளவில் குறைந்து கொண்டே வருகிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? மனிதன் தனது உணவு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகவே இதனை நான் பார்க்கிறேன். இறைவன் குர்ஆனிலும் இதைத்தான் சொல்கிறான்.




Anonymous said...

மங்களூர்: தேர்தலுக்கு சற்று முன்பு கர்நாடகா மாநிலம் கார்க்கலையில் டன் கணக்கில் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்த வழக்கில் முக்கிய நபரான கேரளா மாநிலம் கோட்டயத்தை ச்சார்ந்த பி.கே.பிஜு தாமஸை ஹரியானாவில் வைத்து கர்நாடகா போலீஸ் கைதுச் செய்தது.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி கார்க்கலையில் உள்ள அஜக்கோரில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 10 டன் வெடிப்பொருட்கள் மூதலில் பறிமுதல் செய்யப்பட்டது.அமோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன.தொடர்ந்து நடந்த விசாரணையில் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இவ்வழக்கை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் ஹரியானாவில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

காஸர் கோடு பகுதியில் வெடிப்பொருட்களை பதுக்கிய சம்பவத்திலும் பி.கே.பிஜு தாமஸ் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

- See more at: http://www.thoothuonline.com/archives/65356#sthash.oI7Bpvgf.dpuf