இலங்கை கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை எவருக்கும் அருதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 19 இடங்கள் பெற்றாலே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் தற்போது எவருமே இந்த இடங்களை பெறவில்லையாதலால் கூட்டணி ஆட்சியே நடைபெறும் என்று தெரிகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 இடங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 இடங்களையும் சேர்த்து 21 இடங்கள் ஆகின்றன. தற்போது பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும் இந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது. முதல்வராக தமிழ் முஸ்லிம் வருவாரா? அல்லது தமிழ் இந்து வருவாரா என்பதே நம் முன் உள்ள கேள்வி. யார் வந்தாலும் ஒரு ஸ்திரமான ஆட்சியமைத்து அந்த மக்கள் நிம்மதியான வாழ்வை தொடரட்டும். விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற சந்திரகாந்தன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது மக்கள் தீவிரவாத்தையும் தனி நாட்டு கோரிக்கையும் ஆதரிக்க வில்லை என்றே தெரிகிறது.
எனவே தனி நாடு கோரிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கை விட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்து தமிழ் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். இதனையே பெரும் பான்மையான தமிழ் மக்களும் விரும்புவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தழிழர்கள் அனைவரும் இந்து முஸ்லிம் கிறித்தவம் நாத்திகம் என்று பிரிந்து கிடக்காமல் ஒரு குடையின் கீழ் வந்தால் மேலும் பல நன்மைகள் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்துக்கும் கிடைக்கும். இது நடைபெறுமா என்பதை வருங்காலங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள 35 பேரில் 15 பேர் தமிழ் முஸ்லிம்கள்.
இந்து தமிழர்கள் 12 பேரும் சிங்களவர்கள் 8 பேரும் இம் முறை மாகாண சபைக்கு இன ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டுமே இம்முறை வெற்றி பெற்றுள்ளார்.
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேர்தல் நேரங்களில் சற்று பதட்டமாக இருந்ததாகவும் இதனாலேயே பலர் வாக்களிக்க வராமல் இருந்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் ஆபாச கார்ட்டூனை வரைந்து சிங்கள ஊடகத்துறை தனது கோபத்தைக் காட்டியுள்ளது. சிங்கள பத்திரிக்கைகள் எந்த அளவு தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சிறந்த எடுத்துக் காட்டுக்கள். தமிழக முதல்வரின் பல நடவடிக்கைகளில் எனக்கு நிறைய மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் ஆபாச கார்ட்டூன் போன்ற ஒரு அருவறுக்கத் தக்க செயலை வன்மையாக நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.
----------------------------------------------------------
பிபிசி யின் தமிழோசை சங்கரண்ணா மறைந்தார்!
நான் படிக்கும் காலங்களில் சிறந்த பொழுது போக்குகளில் ஒன்று லண்டன் தமிழோசையை தினமும் கேட்பது. அப்பொழுதே பிபிசிக்கு கடிதம் எழுதி அதை பிபிசியில் படித்தபோது இனம் புரியாத ஆனந்தத்தில் தவழ்ந்தேன். சென்ற ஞாயிறன்று அவர் மறைந்து விட்டார். கணீரென்ற குரலில் அவரது ஓசை இன்றும் எனக்கு கேட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது ஆனந்தி, விமல் சொக்க நாதன் என்று பலர் வந்தாலும் அவரது நிர்வாகத்தில் தமிழோசை மிக சிறப்பாக செயலாற்றி வந்தது.
தமிழக செய்திகளாகட்டும். உலக செய்திகளாகட்டும். அனைத்தையும் அழகாக வாசித்து, பல கதம்ப நிகழ்ச்சிகளையும் தந்து அரை மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு நிகழ்ச்சியை கொண்டு செல்வார். எனது சிறு வயதில் பல உலக விஷயங்களை தெரிய வைத்தது பிபிசி தமிழோசை என்றால் மிகையாகாது. நாதஸ்வர மிருதங்க ஒலிகளுக்கிடையே இவரது குரலும் சேர்ந்து வரும் அன்றைய நாட்களை மறக்க முடியாது. இருக்கும் ஒரு மர்ஃபி ரேடியோவில் யார் கேட்பது என்பதில் என் தம்பி தங்கைக்குள் முன்பு நிறைய சண்டைகளும் வந்துள்ளது. :-)
அவரது குரலை சற்று நாமும் கேட்போம். இனி பிபிசி தரும் செய்தியையும் பார்ப்போம்.
தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.
கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.
மறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையில் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.
தமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.
ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார்.
வயோதிகத்தில்...
தமிழோசை நேயர்கள் அடிக்கடி கேட்ட அந்தப் பாடல் கூட அவர் இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் இங்கே லண்டன் வந்தபோது பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றுதான்.
சங்கரின் மொழிபெயர்ப்புத் திறன் மற்றும் அவரது குரல் வளம், அவருக்கு பல்லாயிரக்கணக்கான விசிறிகளைப் பெற்றுத்தந்தது.
தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் அவர் பல முறை சென்று நிகழ்ச்சிகளைத் தந்திருக்கிறார்.
நன்றி: பிபிசி தமிழ் பிரிவு
------------------------------------------
டார்வினின் பரிணாமக் கொள்கை எந்த அளவு அபத்தமானது என்பதற்கு சகோதரர் ஆஷிக் கொடுத்திருக்கும் புதிய பதிவை இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
30 comments:
##விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற சந்திரகாந்தன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது மக்கள் தீவிரவாத்தையும் தனி நாட்டு கோரிக்கையும் ஆதரிக்க வில்லை என்றே தெரிகிறது## விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்த கருணாவுடன் பங்காளிச் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்த சந்திரகாந்தனுக்கு விடுதலைப் புலிகள் எப்போது ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூற முடியுமா..? இந்தப் பிரச்சனையைப் பற்றி எந்த விதமான புரிதலோ, அறிவோ இன்றி,முட்டாள்த் தனமாக பதிவிடுவதை தவிருங்கள்...அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சித்து வாக்குப் பிச்சை எடுத்த ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் முஸ்லிம் இனத்துக்கும் எதிரான சந்தர்ப்பவாதிகளே....
நீங்க மட்டும் எப்படிங்க அனைத்து(லக) பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு சொல்றிங்க, இஸ்லாம் தந்த கொடையா ?
:)
திரு தேன் மதுரன்!
//சந்திரகாந்தனுக்கு விடுதலைப் புலிகள் எப்போது ஆதரவு தெரிவித்தார்கள் என்று கூற முடியுமா..?//
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சந்திர காந்தன். தனது கட்சியின் பெயரிலேயே புலி விசுவாசத்தை காட்டுபவர் புலிகளின் ஆதரவு இல்லாதவர் என்று எப்படி கூறுகிறீர்கள். புலிகள் பல பெயர்களில் பிரிந்தாலும் நோக்கம் ஒன்றே.
//நீங்க மட்டும் எப்படிங்க அனைத்து(லக) பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு சொல்றிங்க, இஸ்லாம் தந்த கொடையா ?//
'தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. இறைவனின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்'
-குர்ஆன் 4:114
சென்னை:கழுத்தைப் பிடித்து நெரித்து, தூங்க விடாமல் செய்யும் கெட்ட ஆவியை, சிறையில் அடைக்க வேண்டும் என, ஒருவர் கொடுத்த புகாரால், போலீசார் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இந்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, ஆவி பிடிக்கும் வேலையும் நடக்கிறது. கண்ணுக்கு முன்னாடி ஓடுகிறவனையே பிடிக்க முடியவில்லை. இவன் காற்றை பிடிக்க சொல்கிறானே என, போலீசார் புலம்புகின்றனர்.
வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு, 45 வயதுள்ளவர் வந்தார். சுற்றும் முற்றும் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவரிடம், வரவேற்பு பணியில் இருந்த பெண் போலீஸ் விசாரித்தார்.
வம்பு பண்ணாதீங்க:
அவர் கொண்டு வந்த புகாரை படித்து, மனதுக்குள்ளேயே சிரித்து விட்டு, சப்-இன்ஸ்பெக்டரை பாருங்கள் என, அனுப்பினார். வந்தவர், போலீஸ்காரரிடம் புகார் மனுவை நீட்டினார். அதை படித்துப் பார்த்த போலீஸ்காரர், "உண்மையைத் தான் சொல்றீங்களா; தமாஸ் பண்ணாதீங்க, நிறைய வேலை இருக்கு,' என்று தெரிவிக்க, நான் சொல்வதெல்லாம் உண்மை என்றார், புகார்தாரர்.போலீசார், புகாரில் எழுதப்பட்டு இருப்பதை, வாய்விட்டு படித்துக்காட்டுமாறு கேட்டு, அவரின் சுயநினைவை பரிசோதித்தனர். புகார்தாரரோ, கொஞ்சம் கூட தயங்கவில்லை. எழுதிய புகாரை படிக்கத்துவங்கினார். ராமாபுரம் பகுதிக்கு உட்பட்ட பூத்தபேடு, அன்னை சத்யா நகரில் வசிக்கும், ராஜகணபதியாகிய நான், இளங்கலை வணிகவியல் பட்டதாரி. கணக்கு தணிக்கையாளராக பணியாற்றி வருகிறேன். 2010ம் ஆண்டு, நவ., 16ம் தேதி, கெட்ட ஆவி என் கழுத்தை நெரித்தது தொடர்பாக, போலீசில் புகார் தரப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த ஆவி, தன் வேலையை காட்டத் தொடங்கிஉள்ளது. இந்த ஆவியை ஏவி விட்டவர் பிரபல மதபோதகர். அந்த ஆவி, என் உடலில் புகுந்து, சுவாமி படங்களை அடித்து நொறுக்க வைத்துவிட்டது.
முருகா... முருகா:
கடந்த, 9ம் தேதி, வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது, காலை 4.50லிருந்து 5 மணி வரை, அந்த கெட்ட ஆவி, என் கழுத்தைப் பிடித்து நெரித்து, வாய் பேச விடாமல் செய்து விட்டது. முருகா... முருகா என, வேண்ட தொடங்கியபோது. "மு...' மட்டும் வருகிறது "ருகா...' வரவே மாட்டேங்கிறது. முருகனின் அருளால் உயிர் பிழைத்துக் கொண்டேன். அந்த கெட்ட ஆவியால் என் உயிருக்கு ஆபத்துள்ளது. அதை பிடித்து, சிறையில் போட வேண்டும். இவ்வாறு வாசித்து முடித்தார். கண்ணுக்கு முன்னாடி சுற்றுகிற திருடனையே பிடிக்க முடியவில்லையே, இவர், ஆவியை பிடித்து சிறையில் போட வேண்டும் என்று புகார் கொண்டு வந்துள்ளாரே என, புலம்பிய போலீசார், சமூக பதிவேட்டில் பதிந்து, புகார் ஏற்றுக்கொண்டதற்கான ரசீதும் வழங்கினர். அதன்பின், ஆவி தேடுதல் தொடர்பாக விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டு, வேலைகள் நடக்கின்றன.
இந்த புகார் குறித்து, உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், ""புகாரில் குற்றவாளியாக கூறப்பட்டுள்ளவர் உயிரோடு இருந்தால், கெட்ட ஆவியை ஏவி விட்டது உண்மையா என, விசாரிக்கலாம். அவரும் இப்போது இல்லை. புகார் கொடுத்தவர் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆவியை எங்கு போய் பிடிப்போம். அவரை மருத்துவரிடம் சேர்த்து, சிகிச்சை அளிக்க உறவினர்களிடம் வேண்டிஉள்ளோம்,'' என்றார்.
பத்திரிக்கை செய்தி:- 12-09-2012
திரு வீரன்!
//இஸ்லாம் பெரும்பான்மை ஆனதும், இந்தி மொழியை உருதுவாக ஆக்கி அதனை அரபி போன்ற லிபியில் எழுதி சந்தோஷப்பட்டுகொள்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். அதே போல, சுவனப்பிரியன் மாதிரியானவர்கள் கூட நீங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இனி தமிழை அரபி எழுத்தில் எழுத ஆரம்பிக்க பழக வேண்டியதுதான். (இப்போ சுவனப்பிரியனை கையிலயே பிடிக்க முடியாது.. காப்பி பேஸ்ட் போட்டு தொலைச்சிடுவார் தொலைச்சி)//
மொழியை பொறுத்த வரை ஒரு பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். எனது தாய் மொழி தமிழை நேசிக்கிறேன். அதை எவரும் பேசினால் கேட்டு இன்புறுகிறேன். அதே சமயம் உலக மொழிகளையும் நேசிக்கிறேன். நமது இந்தியாவில் பரவலாக பேசப்படும் இந்தி மொழியையும் நேசிக்கிறேன். உலக மக்களோடு தொடர்பு கொள்ள ஆங்கிலத்தையும் நேசிக்கிறேன். உலக ஒருமைப்பாட்டுக்காக இறைவனை வணங்கும் போது மட்டும் அரபியில் ஓதுவதையும் நேசிக்கிறேன். இப்படி அனைத்தையும் ஒரே தரத்தில் வைத்து பாவித்தால் வேற்றுமை வராதல்லவா?
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'
குர்ஆன் 14:4
இதன் மூலம் முல மொழியான தமிழுக்கும் ஒரு வேதமும் தூதரும் வந்திருக்கிறார். எனவே உலக மூல மொழிகள் அனைத்தையும் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்தது இறைவனே என்பதால் அனைத்துமே தேவ மொழிகளே! ஆனால் இது உயர்ந்தது: இது தாழ்ந்தது என்று இங்கும் வர்ணாசிரமத்தைக் கொண்டு வரும்போதுதான் பிரச்னையாகிறது.
Kavya says:
September 11, 2012 at 4:10 pm
வீரன்!
ரொம்பவும் உணர்ச்சி வசப்படாதீர்கள். இங்கு 60 வருடங்களுக்கு நடந்த நிகழ்வுகளைப்போட்டு மலர்மன்னன் கட்டுரை எழுதுகிறார். அவர் சொல்லின்படி, டிஎம்கேயின் கருநானிதி ஒரு கள்ளத்தனம் பண்ணியதாகவும், அதை எல்லாருக்கும் சொல்வது சந்நியாசியான தம் கடமையெனவும் சொல்கிறார்.
ஆனால் நீங்களோ இன்று என்ன செய்யப்படுகிறது என்று சொல்லி 1950 ஐயும் 2010 ஐயும் இணைத்து எழுதுகிறீர்கள். அன்று நீங்கள் வாழ்ந்திருந்தால் அப்போது உங்கள் கண்ணுக்கு கருநாநிதி எப்படி தெரிந்திருப்பார்? அவருக்குப் பிள்ளைகள் அப்போது உண்டா? 2 ஜி, கிரானைட் ஊழல் என்றெல்லாம் அப்போது உண்டா? அழகிரி உண்டா? கனிமொழி உண்டா? அப்படிப்பட்ட காலத்தில் உங்களுக்குக் கருநாநிதி எப்படித்தோன்றுவாரோ அதை வைத்துத்தான் நீங்கள் எழுத முடியும்.
இவ்வளவு சிரத்தையாக தமக்கு வேண்டாதவரின் யோக்கியதையைத் தோலுரிப்பதே தம் தெய்வீகக்கடமையென்னும் மலர்மன்னன், ஏன் அன்று தம் ஜாதிக்காரர்கள் நடந்ததற்காக இன்று அதே ஜாதிக்காரர்களை நாம் ஒன்று செய்யக்கூடாதென்கிறார் பெரியாரைத் திட்டுகிறார். தி கவைத்திட்டுகிறார். அவர்களெல்லாரும் வெள்ளைக்காரன் காலத்தில் பார்ப்ப்னரெப்படி நடந்தார்கள் என்றுதானே பேசினார்கள்? அல்லது 2000 ஆயிரமாண்டுகளுக்கு முன் மனு என்ன எழுதினான் என்றுதானே சொன்னார்கள்? அவர்கள் சொல்வது மட்டும் தவறு; தான் பழங்காலத்தில் நடந்ததை இங்கு வைத்து தமக்கு வேண்டாதவர்களைத் தோலுரிப்பது என்பதுமட்டும் எப்படி நியாயமாகும்? சாதிக்கொரு நீதியா? கட்சிக்கொரு நீதியா? ஆளுக்கொரு நீதியா?
ஆக, அவர் ஒரு உள்ளோக்கத்துடனே இந்த வேலையைச்செய்கிறார். நீதி நேர்மை என்று வரும்போது என் தோழன், என் உறவு என்றெல்லாம் போய்விடும். மாறாக என் எதிரி மட்டுமே என் டார்கெட் என்றால் நிச்சயமாக உள்ளோக்கம்தான் !
// சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் ஆபாச கார்ட்டூனை வரைந்து சிங்கள ஊடகத்துறை தனது கோபத்தைக் காட்டியுள்ளது. சிங்கள பத்திரிக்கைகள் எந்த அளவு தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சிறந்த எடுத்துக் காட்டுக்கள். தமிழக முதல்வரின் பல நடவடிக்கைகளில் எனக்கு நிறைய மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் ஆபாச கார்ட்டூன் போன்ற ஒரு அருவறுக்கத் தக்க செயலை வன்மையாக நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.//
ஆம்...இதனை வழிமொழிகிறேன் .......
பழைய ஆட்களுக்கு,பிபிசியின் சங்கரண்ணாவும், இலங்கை வானொலியின் அப்துல் ஹமித் அவர்களை மறக்கமாட்டார்கள் ...வசீகரமான தமிழ் செய்திகளுக்கு நானெல்லாம் ஒருகாலத்தில் அடிமை இப்போ டிவியும், இணையமும் ஆதிக்கம் செலுத்துவதால்,ரேடியோ கேட்பதே அபூர்வமாகிவிட்டன,மற்றும் நான் தமிழ் எழுதுவதும் இதுபோன்ற பின்னூட்டங்களில்தான்.. கைப்பேசி வந்தபிறகு தமிழில் கடுதாசி போடுவது சுத்தமாக இல்லவேயில்லை .....
//மூலம் முல மொழியான தமிழுக்கும் ஒரு வேதமும் தூதரும் வந்திருக்கிறார்.//
எத்தனை முறை இந்த கதையை சொல்லிக்கொண்டிருப்பீர்கள் சுவனப்ரியன். இந்த ராகம் போரடிக்கிறது. கொஞ்சம் மாற்றி பாடுங்களேன். தயவுசெய்து திருவள்ளுவரும் ஒரு தூதர்தான் என்று ஹலால் பீர் அடித்த போதையில் உளற வேண்டாம்.
//ஆனால் இது உயர்ந்தது: இது தாழ்ந்தது என்று இங்கும் வர்ணாசிரமத்தைக் கொண்டு வரும்போதுதான் பிரச்னையாகிறது.//
மும்மீன்களும் கடவுளை வணங்குகிறார்கள். காபிர்களும் கடவுளை வணங்குகிறார்கள். ஆனால் மும்மீன்களுக்கு மட்டுமே சொர்க்கமும் அங்கே சுவன கன்னிகைகளும் கிடைக்கும் மற்ற காபிர்களுக்கு கிடைக்காது எந்த விதத்தில் நியாயம் சார். மேலும் அல்லாவின் முன் அனைவரும் சமம் என்று கூறிக்கொள்கிறீர்கள். ஆனால் காபாவிலும் மற்ற பள்ளிவாசல்களிலும் மற்ற மதத்தவர்கள் நுழையக்கூடாது என்று கூறுகிறீர்களே நீங்கள் எந்த யோக்கியதையில் வர்ணாசிரமத்தை பற்றி பேசுகிறீர்கள். ஜாதியால் பிரிப்பதற்கும் மதத்தால் வேறுபாடு பார்ப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை சு.பி அவர்களே. சொல்லப்போனால் பிரமணர்களை போல் வர்ணாசிரம வெறி பிடித்தவர்கள் தான் முஸ்லிம்களும். அவர்களுக்கு ஜாதி வெறி உங்களுக்கு மத வெறி அதில் தான் வித்தியாசமே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் பேசும் மத சார்பின்மை பிற மதங்களை மதிப்பது எல்லாம் ஒரு வெளி வேடமே தவிர வேறில்லை.
பூவண்ணன் says:
September 12, 2012 at 5:54 am
தங்கமணி சார்
சாதிகள் ஏதோ ஏற்ற தாழ்வுகள் இல்லாத ஒரே அலுவலகத்தில் இயங்கும் பல பிரிவுகள் போன்ற ஒன்று,அவசியமானது என்று எழுதும் போது,சாதிக்கும் போது எதிர்வினையாக சாதியின் கொடுமைகளை பட்டியலிடுவது தவறா
உயர் சாதி ஆணுக்கு பெண்களை தூக்கி செல்ல சாதி தடை கிடையாது எனபது சாதி உருவாகிய காலத்தில் இருந்து உண்டு.
பல தார மணம்(நாலு ,ஆறு என்று எந்த வித கட்டுப்பாடு கூட கிடையாது )என்பதும் வெகு சமீபத்தில் தான் அம்பேத்கர் புண்ணியத்தில் தவறு என்று ஹிந்டுத்வர்கள் எதிர்ப்புகளை மீறி சட்டத்தில்
சேர்க்கப்பட்டது
திருமணம் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக வைத்து கொள்வது (இப்போது தான் நீதி மன்றங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் உரிமைகள் உண்டு,குழந்தைகள் திருமணமாகாமல் பிறந்தவர்களாக இருந்தாலும் உரிமை உடையவர்கள் என்று தீர்ப்பு வழங்க துவங்கியுள்ளன )உயர்சாதி ஆண்களுக்கு சாதி வழங்கிய உரிமை
கேப்மாரி,சூரமாரி,பறையன்,பல்லன்,பள்ளி,சாணான்,பங்கி .சக்கிலியன்,கள்ளன் போன்ற சாதி பெயர்கள் உயர்சாதியினரால் வசவு சொற்களாக பயன்படுத்தப்பட்டவை ,பயன்படுத்தபடுகிரவை .
இப்படி இருக்கும் போது எல்லா சாதியையும் ஒன்று தான்,ஏற்ற தாழ்வு இல்லை என்று எழுவது தவறல்லவா
##தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சந்திர காந்தன். தனது கட்சியின் பெயரிலேயே புலி விசுவாசத்தை காட்டுபவர் புலிகளின் ஆதரவு இல்லாதவர் என்று எப்படி கூறுகிறீர்கள்## தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரைப் பார்த்து எப்படி உங்களால் அவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்று உங்களால் கூற முடிகிறது? அவர்களால் எத்தனை பேர் (அப்பாவி இளைஞர்கள் உட்பட) புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கடத்திக் கொலை செய்யப்படிருக்கிறார்கள் தெரியுமா? பதிலுக்கு புலிகள் அவர்களில் எத்தனை பேரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் தெரியுமா..? அ.தி.மு.க. வின் பெயரில் தி.மு.க. வருகின்றது என்பதை வைத்து அ.தி.மு.க... தி.மு.க.வுக்கு ஆதரவானது என்று கூறுவது போலல்லவா அபத்தமாக உள்ளது நீங்கள் கூறுவது.....
//அ.தி.மு.க. வின் பெயரில் தி.மு.க. வருகின்றது என்பதை வைத்து அ.தி.மு.க... தி.மு.க.வுக்கு ஆதரவானது என்று கூறுவது போலல்லவா அபத்தமாக உள்ளது நீங்கள் கூறுவது.....//
திமுகவும் அதிகமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று முன்பு காமராஜர் சொன்னது தற்போது ஞாபகம் வருகிறது.
இலங்கையை பொருத்தளவில் புலிகள் என்றாலே பிரபாகனும் அவரது ஆட்களும்தான் உடன் ஞாபகத்துக்கு வரும். உண்மையிலேயே தீவிரவாதத்துக்கு எதிரானவர் சந்திரகாந்தன் என்றால் முதலில் அவரது கட்சியின் பெயரை மாற்றச் சொல்லுங்கள்.
வாங்க நாசர்!
//பழைய ஆட்களுக்கு,பிபிசியின் சங்கரண்ணாவும், இலங்கை வானொலியின் அப்துல் ஹமித் அவர்களை மறக்கமாட்டார்கள் ...//
25 வருடங்களுக்கு முன்னால் இலங்கை வானொலியும் லண்டன் பிபிசியும் தான் எனது முக்கிய பொழுது போக்குகள்.
அப்துல் ஹமீத், கே எஸ் ராஜா, புவனலோகினி துரை ராஜ சிங்கம், என்று பலர் இன்னும் ஞாபகத்தில் உள்ளனர். இதில் கே எஸ் ராஜா வை கொன்று விட்டார்கள்.
ஸ்மிதா!
//Piriyan, U immediately quote from the Koran, but face the reality. Why are shias & sunnis killing each other often?//
பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் ஷியா சன்னி குண்டு வெடிப்புகள் நடக்க முக்கிய காரணம் மொசாத்தும், சிஐஏயும். ஏனெனில் தங்களின் இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு மக்களை பிரிப்பது அவசியமாகிறது. நம் நாட்டில் இந்து முஸ்லிம் கலவரங்களை உண்டு பண்ணி வெள்ளையர்கள் ஆளவில்லையா? பாகிஸ்தானில் அமெரிக்க அரசு சம்பளத்தில் பல கள்ள முல்லாக்கள் வேலை செய்வதை எனது பாகிஸ்தானிய நண்பன் உறுதி செய்தான். அதிகமாக அமெரிக்கர்களை சீண்டினால் பாகிஸ்தானின் தலைமைக்கும் ஆபத்து. எனவே கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது பாகிஸ்தானிய அரசாங்கம்
//Why are only some sects in islam (like shias) allowing women to pray in mosques & others do not?//
பெண்கள் மசூதிக்கு வருவதை யாரும் தடை போட முடியாது. முன்பு பெண்களகவே வருவதை தவிர்த்தனர். தற்போது விளக்கி சொல்லிய வுடன் தமிழகத்தில் பல மசூதிகளில் பெண்கள் அதிகம் வருவதால் இடப் பற்றாகுறையே ஏற்படுகிறது.
http://www.supportimrankhan.org/Islam/women-in-mosque-by-dr-zakir-naik-7.aspx
http://seasonsali.blogspot.com/2010/11/should-muslim-women-be-allowed-to-pray.html
இங்கு சென்று படங்களையும் ஆதாரங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
//Instead of digging deep into the koran & trying to justify the “Jehads” & the “fatwas” issued by your leaders (who ironicallY quote the same Koran), do some self introspection.//
எத்தனை முல்லாக்கள் தவறான ஃபத்வாக்கள் கொடுத்தாலும் எங்களிடம் குர்ஆன் இருப்பதால் அதை கொண்டு சரி செய்து கொள்வோம். விளங்குவதற்கு மிக எளிதானது குர்ஆன்.
K A V Y A says:
September 12, 2012 at 4:58 pm
இன்று சமசுகிருதத்தின் நிலையென்ன? எங்கு எவரால் பேசப்படுகிறது? பள்ளிகளில் வடநாட்டில் திணிக்கிறார்கள். மதிப்பெண்கள் அதிகம் கிடைக்குமென்றெல்லாம் சொல்லி மாணாக்கர்களைச் சேர்க்கிறார்கள். என்ன இலாபம்? 40 விகித மார்க்கில் செயின்ட்ஸ் ஸ்டீவன்ஸில் இடம் கிடைக்குமென்றால் அது சமசுகிருதம் ஹானர்ஸ் வகுப்பில்தானே? மற்ற படிப்புக்களில் சேர 90 விகதத்க்குமேல் மதிப்பெண்கள் வாஙக வேண்டும்.
அம்மொழியைப்படிப்பதால் எவருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. கோயிலகளின் இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். காலங்காலமாக வந்தால் மக்கள் எதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். சல்வார் கமீசை ஏற்றுக்கொண்டார்கள். பேண்ட் சர்ட்டை ஏற்றுக்கொண்டார்கள்.. இப்படி.
சமசுகிருதத்தின் இந்நிலைக்குக் காரணம் பார்ப்ப்னர்களே. அவர்களே இம்மொழியை மக்களிடமிருந்து விலக்கிப் பண்டிதர்கள் கற்கும் நூலக மொழியாக்கி, அல்லது தேவ பாஷையாக்கி அல்லது இரகசிய பாஷையாக்கி சமசுகிரததைக்கொன்றவர்கள்.
//இஸ்லாம் பெரும்பான்மை ஆனதும், இந்தி மொழியை உருதுவாக ஆக்கி அதனை அரபி போன்ற லிபியில் எழுதி சந்தோஷப்பட்டுகொள்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். அதே போல, சுவனப்பிரியன் மாதிரியானவர்கள் கூட நீங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இனி தமிழை அரபி எழுத்தில் எழுத ஆரம்பிக்க பழக வேண்டியதுதான். (இப்போ சுவனப்பிரியனை கையிலயே பிடிக்க முடியாது.. காப்பி பேஸ்ட் போட்டு தொலைச்சிடுவார் தொலைச்சி)//
மேலே உள்ளது எவ்வளவு முட்டாள் தனமான கருத்து! உருது மொழி உருவாக முன்னர் இந்தி என்ற பெயரில் மொழி எங்காவது எழுதப்பட்டதா? ஆதாரம்?
அடுத்தது, அரபுத் தமிழ் என்ற ஒன்றிருப்பது அந்த ஆளுக்குத் தெரியாது போலும். பல நூற்றாண்டுகளாகவே அரபுத் தமிழ் இலக்கியங்கள் உள்ளன. அஃதாவது, அரபு மொழியின் வரிவடிவத்திற் தமிழ் மொழி எழுதப்படுகிறது. அதே நேரம், அரபு மொழியின் சீர்மையும் ஒலிப்பும் தனித்துவமும் அங்கு பேணப்படுகிறது.
ஐயா வீரன், ஏன் "லிபி, சந்தோஷம், ஆரம்பிக்க, காப்பி பேஸ்ட்" என்றெல்லாம் புரியாத மொழிகளிற் கூறுகிறீர்கள்? உங்களுக்குப் போதிய தமிழறிவே கிடையாதா?
மேற்படி வீரனென்பவரின் எழுத்தில் எவ்வளவோ இலக்கணப் பிழைகள் இருப்பதைக் காண்கிறேன். ஆங்கிலத்தையும் சமசுக்கிருதத்தையும் கலந்திருப்பதையும் காண்கிறேன். தமிழைப் பற்றிக் கூறுவதாயின், ஏன் நீங்கள் நல்ல தமிழில் எழுதக் கூடாது?
- வள்ளுவன்
//நீங்க மட்டும் எப்படிங்க அனைத்து(லக) பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு சொல்றிங்க, இஸ்லாம் தந்த கொடையா ?//
கோவி கண்ணன் கேக்குறத வச்சி பார்த்தா அந்த கொடைக்கி கீழ ஒதுங்கிருவாரோ ?.... சரி அவருக்கு லாபம் தான்...
நன்றியுடன்
நாகூர் மீரான்
Anonymous தமிழன் said...
விடுதலை புலிகளிடம் இருந்து பிரிந்து அவர்களை காட்டி கொடுத்த கருணாவும் பிள்ளையானும் ஆரம்பித்த கட்சிதான் தமிழ் மக்கள் விடுதலை புலிகள். பின்னர் கருணாவும் பிள்ளையானும் பிரிந்தது வேறுகதை.
இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்தது விடுதலைப்புலிகளால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே. இது தெரியாமல் நீ இதையெல்லாம் எழுதுகின்றாய். இப்போது எனக்கொரு சந்தேகம் நீ குரான் பற்றியும் இஸ்லாம் பற்றி எழுதுவதும் இவ்வாறுதானா ?
சகோ சுவனப் பிரியன் இலங்கை பற்றி சொன்னதிலும் தவறு இல்லை.தமிழர்களில் இந்துக்களும் சரி முஸ்லிம்களும் சரி இனவா மதவாத அடையாளங்களை காட்டியே,அவற்றை கிளறிவிட்டு அரசியல் செய்து வாக்குகள் பெற முயற்சிகிறார்கள். தமிழ் மக்கள் விடுதலை புலிகள்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று அவர்கள் வைத்திருக்கும் கட்சிகளே இதற்க்கு சாட்சி.
தேசிய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் இலங்கையில் கட்டியெழுப்புவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமைச்சர் டலஸ் அழகப்பெருமா விட்டதிற்க்கு கிழக்கு மாகாண சபையில் புதிய ஆட்சியை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக இதுவரை எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப தெரிவித்துள்ளது. இவ்வாறான அழைப்பு கிடைத்தால் அதுகுறித்து ஆராயத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சகோ.சுவனப்பிரியன்!இலங்கையின் கிழக்கு பகுதியில் தமிழர்களே அதிகம் வசிக்கிறார்கள் என நினைக்கிறேன்.இஸ்லாமிய சார்பிலோ அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பிலோ அல்லது பிள்ளையான் சார்பாகவோ வாக்கு எண்ணீக்கை அதிகம் பெற்றவர்களாக வந்திருக்க வேண்டும்.இலங்கை சுதந்திர கட்சி மட்டுமே அதிக பெரும்பான்மையாக 14 இடங்களைப் பிடித்திருப்பதில் நிச்சயம் அரசியல் தில்லுமுல்லுகள் இருந்திருக்க கூடும்.எப்படியோ ஜனநாயகத்தில் வாக்கு எண்ணிக்கையே தீர்மானிப்பதால் இலங்கை சுதந்திரக்கட்சியின் எண்ணிக்கையை அங்கீகரித்தாக வேண்டும்.
தம்புள்ள நிகழ்வுகள் இலங்கை முஸ்லீம் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.கூடவே பழைய கசப்பு நினைவுகளிலிருந்து தமிழர்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை இலங்கை முஸ்லீம் கட்சி செய்திருக்கலாம்.பழைய குட்டையே சுகமாக இருக்கிறது என்று இலங்கை சுதந்திர கட்சியுடன் சேருவது இலங்கை முஸ்லீம் கட்சியின் தூரப்பார்வையின்மையை காட்டுகிறது.பிள்ளையான் மட்டுமே வென்றிருப்பது தமிழ்தேசியக்கூட்டமைப்பு சார்பையே தமிழ்மக்கள் விரும்புகிறார்கள் என உறுதியாகிற்து.
கோவி.கண்ணன்!சுவனப்பிரியன் பிரச்சினைகளுக்கு தீர்வையாவது சொல்ல முயற்சிக்கிறார்.ஆனால் அவருடன் சுற்றும் ஆடுகள் நுனிப்புல் அல்லவா மேய்கின்றன:)
சகோ ராஜ நடராஜன்!
//தம்புள்ள நிகழ்வுகள் இலங்கை முஸ்லீம் கட்சியின் நிலைப்பாட்டை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.கூடவே பழைய கசப்பு நினைவுகளிலிருந்து தமிழர்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை இலங்கை முஸ்லீம் கட்சி செய்திருக்கலாம்.பழைய குட்டையே சுகமாக இருக்கிறது என்று இலங்கை சுதந்திர கட்சியுடன் சேருவது இலங்கை முஸ்லீம் கட்சியின் தூரப்பார்வையின்மையை காட்டுகிறது.பிள்ளையான் மட்டுமே வென்றிருப்பது தமிழ்தேசியக்கூட்டமைப்பு சார்பையே தமிழ்மக்கள் விரும்புகிறார்கள் என உறுதியாகிற்து.//
யார் யாரோடவாவது சேர்ந்து கொள்ளட்டும். இனி வரும் காலமாவது அந்த மக்களுக்கு நிம்மதியான வாழ்வை கொடுக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பும்.
சகோ.ஆசிக்கின் ப்ரிணாமம் குறித்த பார்வையே தவறு என்கிறார் சகோ.சார்வாகன்.
http://aatralarasau.blogspot.com/2012/09/blog-post_13.html
//சகோ.ஆசிக்கின் ப்ரிணாமம் குறித்த பார்வையே தவறு என்கிறார் சகோ.சார்வாகன்.
http://aatralarasau.blogspot.com/2012/09/blog-post_13.html//
கவலை வேண்டாம்! இதை விளக்கி இன்னும் இரண்டொரு நாளில் தனி பதிவே இடுவார்.
Mr Raja Nadarajan,
///பழைய குட்டையே சுகமாக இருக்கிறது என்று இலங்கை சுதந்திர கட்சியுடன் சேருவது இலங்கை முஸ்லீம் கட்சியின் தூரப்பார்வையின்மையை காட்டுகிறது.///
பழைய குட்டையுடன் சேருவது, சுகத்திற்கல்ல. வேறு வழியில்லையென் பதுதான்!
சட்டியில் இருந்து தணலில் விழுவதைவிட, சட்டி (சுதந்திரக் கட்சி) மேல்!
முஸ்லிம் கட்சியின் தூரப்பார்வை, கிட்டப்பார்வைகளை சிறிது விளக்கலாமே!
///இலங்கையின் கிழக்கு பகுதியில் தமிழர்களே அதிகம் வசிக்கிறார்கள் என நினைக்கிறேன்.///
இதுவும் தவறு. தமிழர் களைவிட, சிறிது அதிகமாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள், கிழக்கு மாகாணத்தில்!
பல கட்சிகளுக்கு முஸ்லிம்கள் பிரிந்து வாக்களித்திருப்பதினால் வெற்றிபெற்ற உறுப்பினர் தொகையும் குறைவு.
Mr Raja Nadarajan,
///பழைய குட்டையே சுகமாக இருக்கிறது என்று இலங்கை சுதந்திர கட்சியுடன் சேருவது இலங்கை முஸ்லீம் கட்சியின் தூரப்பார்வையின்மையை காட்டுகிறது.///
பழைய குட்டையுடன் சேருவது, சுகத்திற்கல்ல. வேறு வழியில்லையென் பதுதான்!
சட்டியில் இருந்து தணலில் விழுவதைவிட, சட்டி (சுதந்திரக் கட்சி) மேல்!
முஸ்லிம் கட்சியின் தூரப்பார்வை, கிட்டப்பார்வைகளை சிறிது விளக்கலாமே!
///இலங்கையின் கிழக்கு பகுதியில் தமிழர்களே அதிகம் வசிக்கிறார்கள் என நினைக்கிறேன்.///
இதுவும் தவறு. தமிழர் களைவிட, சிறிது அதிகமாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள், கிழக்கு மாகாணத்தில்!
பல கட்சிகளுக்கு முஸ்லிம்கள் பிரிந்து வாக்களித்திருப்பதினால் வெற்றிபெற்ற உறுப்பினர் தொகையும் குறைவு.
சுவனப்பிரியன் அண்ணன்,
நான் சார்வாகனுக்கு அவர் தளத்தில் கொடுத்துள்ள பதிலை நீங்கள் ராஜ நடராஜனுக்கு அப்படியே காப்பி பேஸ்ட் செய்துவிடுகள். என்னால் நெட் பக்கம் அதிகம் வரமுடியவில்லை. நெட்டும் ரொம்ப ஸ்லோவாக இருக்கின்றது.
======
சகோதரர் சார்வாகன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் நேர்மையின் உருவம் எனக்கு தெரிந்த பிறகு உங்களிடம் வாதிப்பதில் எனக்கு எந்த பயனையும் எதிர்பார்த்ததில்லை (இது நீங்களும் அறிந்தது தான்). எனினும் இங்கே நான் சொல்லாத விசயங்களை சொன்னதாக கூறியதால் மற்றவர்களுக்கு பயன்படலாம் என்பதால் சில கருத்துக்கள். எனினும் நீங்கள் இதனை தொடர விரும்பினால் நீங்கள் என் பதிவில் விட்டுவிட்டு ஓடிவந்த (சாரி, இதனை தவிர்த்து வேறு சிறந்த வார்த்தைகள் தென்படவில்லை) விவாதங்கள் செட்டில் செய்த பிறகு இங்கே தொடரலாம். ஓகே?
நான் என் பதிவில் தெளிவாக கூறிய விசயங்கள் மிக எளிமையானவை. அதனை நீங்கள் போட்டு இவ்வளவு குழப்பி இருக்க வேண்டாம் (சொல்ல வந்த கருத்து இந்த துறை குறித்த புரிதல் இல்லாதவர்களுக்கு புரியாமலேயே போயிருக்கும்). By the way, என் குற்றச்சாட்டுகளுக்கு வழமையான வழவழ கருத்து தான் உங்களிடம் இருந்தே வந்திருக்கின்றதே தவிர பதிலை காணோம்.
1. *****மனிதன் எதிலிருந்து வந்தான் என்று கேட்டால் "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்று கூறி, மனித பிரிவுக்கு முந்தைய Ardipithecus மற்றும் Australopithecus பிரிவுகளை காட்டுவார்கள் பரிணாமவியலாளர்கள். அப்படியா என்று அந்த பிரிவுகளுக்குள் சென்று அங்கிருக்கும் படிமங்களை படித்தால் ஒவ்வொன்றாக இவர்களே மறுத்திருப்பார்கள் அல்லது சர்ச்சைக்குரியதாக இருக்கும். அப்புறம் எப்படி இவற்றில் இருந்து மனிதன்?******
இது தான் என் பதிவின் சென்ட்ரல் கருத்து. இதற்கு நீங்கள் எதனையாவது சுட்டிக்காட்டி இது தான் மனிதனின் மூதாதையர் என்று ஆணித்தரமாக சொல்லியிருந்தால் விசயம் அத்தோடு முடிந்திருக்கும். இது ஆதாரம் இல்லை அது ஆதாரம் இல்லை என்று மொத்தத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்புறம் அப்படி மனித பரிணாமம் உண்மை? எனக்கு தெரிந்து ஆதாரங்கள் அடிப்படையில் தான் ஒரு கருத்தை உருவாக்க முடியும். இங்கே ஆதாரங்களே கிடையாது. அப்புறம் எப்படி பரிணாமம் உண்மை? உரும ஒற்றுமைகள் "அதிலிருந்து இது வந்ததற்கு ஆதாரம்" ஆகாது. இதுவும் பரிணாம புரிதல் தான்.
சோ சார்வாகன், முடிந்தால் "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தான்" என்ற வழமையான பொதுவான பதிலை ஒதுக்கிவிட்டு, கொஞ்சம் ஆதாரங்களை கொடுங்கள். இல்லையென்றால் இப்படியே தொடர்ந்து கொண்டு இருங்கள். ரொம்ப சந்தோசம். :-)
2. Next, நான் ஹோமோ எறேக்டஸ்சை முதல் மனிதன் என்று ஏற்றுக்கொண்டதாக அடித்து விட்டிருக்கிண்றீர்கள். சுத்தம். ஹோமோ எறேக்டஸ் குறித்த கருத்துக்கள் பரிமானவியலாளர்கள் பார்வையில் எழுதப்பட்டது. முதலில் என் பதிவை தெளிவாக படியுங்கள். அதில் பின்வருமாறு கூறியிருக்கின்றேன்.
****படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் இவை குறித்தும், மேலும் சிலவற்றை (like Laetoli footprints etc) குறித்தும் எதிர்க்கால பதிவுகளில் விரிவாக பார்ப்போம்*****
இதில் laetoli footprints என்றால் என்னவென்று நினைத்தீர்கள் (இனிமே இதனை படித்து விட்டு அடிக்க போகின்றீர்கள், போகட்டும்)? என்னை பொருத்தவரை, மனிதன் என்பவன் இந்த ஹோமோ எறேக்டஸ், austrolopithecus போன்றவற்றிற்கு எல்லாம் முன்பாக தோன்றியதாகவே எண்ணுகின்றேன். இது குறித்த பிரபல தொல்லுயிரியலாலர்களின் பார்வையோடு எதிர்காலத்தில் நீங்கள் பதிவை எதிர்ப்பார்க்கலாம். ஆகையால் ஹோமோ எறேக்டஸ்சை ஆதாம் என்று நான் கூறியதாக நீங்கள் புரிந்துகொண்டது என் பதிவை சரியாக புரியாமல் நீங்கள் அடித்துவிட்டது (வழக்கம் போல).
3. ஹோமோ எறேக்டஸ்சின் மொழி குறித்து தயவுக்கூர்ந்து நான் கொடுத்துள்ள லிங்க்குகளை படியுங்கள். சும்மா போகிற போக்கில் அடித்து விட்டு போகவில்லை.
4. முன்பு என்னுடன் ஒரு விவாதத்தின் போது talkorigins தளத்தை படைப்புவாதிகளின் தளம் என்றீர்கள். இப்போது அதனையே ஆதார சுட்டியாக கொடுத்துள்ளீர்கள். சூப்பர் முரண்நகை. அடிச்சு ஆடுங்க :-)
5. ஹா ஹா..ஹோமோ எறேக்டஸ் அனுமார் போல இருப்பாரா? அனுமாரை நேரில் பார்த்தது போல படம் எல்லாம் காட்டி இருக்கின்றீர்கள். சந்தோசம். நான் அனுமாரை வேறு மாதிரி பார்த்தது போல அல்லவா இருக்கின்றது (வாய் குரங்கு மாதிரி etc). குறிப்பாக அனுமாருக்கு பெரிய வால் இருக்குமாமே? அதை வைத்து என்னெனவோ செயவாராமே? ஹோமோ எறேக்டஸ்க்கு பெரிய வால் இருந்தது எனக்கு தெரியாது :-) அப்புறம், இந்த மேற்கிந்திய தீவு கிரிக்கட் வீரர் அம்புரோஸ் நீங்கள் காட்டியுள்ள ஹோமோ எறேக்டஸ்சை ஒத்து தான் இருக்கின்றார். அப்போ இந்த படம் வரைந்து என்ன சொல்ல வருகின்றீர்கள்?
6. சோ மொத்தத்தில், வழக்கம் போல ஒரு பதிலையும் நீங்கள் கூறவில்லை. case closed.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
சகோ.யூசுப் இஸ்மத்!எனது பின்னூட்டத்திற்கான உங்கள் கருத்துக்கு நன்றி.
உலக இயக்கங்களில் முக்கியமாக அரசியலில் மாற்றங்களும் அதற்கான மாற்று வழிகளை ஆராய்வதே முக்கியம்.ஒரு கால கட்டத்தில் உணர்ந்து செயல்படுவதை ஒட்டியே விளைவுகள் இருக்கும்.அதனையே தூரப்பார்வை என குறிப்பிட்டேன்.சுற்றி வளைக்காமல் சுருக்கமாக சொன்னால் இலங்கைப் போரின் காலகட்டத்தில் கருணாநிதியின் 3 மணி உண்ணாவிரதம் ஒரு முக்கியமான காலகட்டம்.
மாற்றங்களை பரிட்சித்துப் பார்க்க இலங்கை முஸ்லீம் கட்சிக்கு அருமையான தருணம் இது.
இலங்கைக்கான மாற்ற்ங்களோடு மக்கள் வாழ்வும் சிறப்பாக இருக்கவேண்டுமென நினைக்கின்றேன்.சட்டியின் தணலிருந்து விடுபடுவதற்கு வழியிருக்கிறதா என்கிறேன்.நீங்களோ சட்டியிலிருந்து குதித்தால் தணலுக்குள் விழுந்து விடுவோம் என்ற பயத்தோடு சட்டியின் தணலே சுகமாக இருக்கிற்து என்கிறீர்கள்:)
சகோ.ஆசிக்! ஏதோ ஒரு ஆசிக் கொஞ்சம் புத்திசாலித்தனத்தோடு இருக்கிறார் என முன்பு ஒரு முறை ஒரு பின்னூட்டத்தில் எங்கோ குறிப்பிட்டுள்ளேன்.உங்கள் பெயர்க் குழப்பமே சமீபத்தில்தான் தீர்ந்தது.
மதம்,பரிணாமம் சார்ந்த பார்வையெல்லாம் சமீப காலமாக பதிவுலகம் சார்ந்த் என்னோட மாற்றங்கள்.சகோ.சுவனப்பிரியனுக்கு எதிர்ப்பாட்டு பாடுபவர் நீங்கள்தான் என்பது புரிகிறது.நான் நல்லவை,தீயவைகளை மேயும் சாதாரண விமர்சகனே.உங்கள் வாதம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் உங்களை சார்ந்தும் கருத்து ஆதரவு தருவதில் எனக்கு ஆட்சேபனையில்லை.அதே போல் எதிர் விமர்சனமும் கூட.
தொடர்வேன்.நன்றி.
Mr Raja Nadarajan,
///உலக இயக்கங்களில் முக்கியமாக அரசியலில் மாற்றங்களும் அதற்கான மாற்று வழிகளை ஆராய்வதே முக்கியம்.ஒரு கால கட்டத்தில் உணர்ந்து செயல்படுவதை ஒட்டியே விளைவுகள் இருக்கும்.அதனையே தூரப்பார்வை என குறிப்பிட்டேன்.///
பின்விளைவுகளின் எதிர்வுகூறலை ஆராய்ந்துதான், மாற்று வழிகளையும் கையாள வேண்டும்.
நீங்கள் சொல்லும் தூரப்பார்வையை முஸ்லிம் கட்சி கையாளும்போது, முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் விரும்புவதும் இல்லை.
வட, கிழக்கில் மட்டுமல்ல முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். முழு இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் கருமமாற்ற வேண்டும்.
தணலில் விழுந்து கருகி விடுவதை விட, அடுப்பில் இருப்பது உசிதம், தற்காலிகமாவது!
Post a Comment