Followers

Wednesday, September 05, 2012

இலங்கை சுற்றுலா பயணிகளிடம் ஏனிந்த வெறுப்பு?



ராஜபக்ஷேவும் அவரது ராணுவமும் இலங்கை தமிழர்களை கொன்று குவித்ததை நாம் அவ்வளவு லேசில் மறந்து விட முடியாது. போரில் ஈடுபடாத அப்பாவி மக்களை குண்டுகள் வீசி அழித்ததையும் நாம் மறந்து விட வில்லை. அதற்கான சர்வதேச விசாரணைகள் நடந்து வருகின்றன. இன்றில்லா விட்டாலும் சில காலம் கழித்தாவது அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். இது ஒரு புறம் இருக்க இறை வழிபாட்டுக்காக வந்த பல குடும்பங்களை விரட்டி அடிப்பதும் அவர்கள் வந்த வேனின் மீது கற்களை வீசி மிரள வைப்பதும் ஏற்புடைய செயல்தானா? இங்கு வந்த விளையாட்டு வீரர்களைக் கூட திருப்பி அனுப்பியது அறிவுடைய செயல்தானா? என்று சிந்திக்க வேண்டும்.



மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படுவதற்கு நாம் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். கடல் மார்க்கத்தில் எல்லைகளை நிர்ணயித்து மிதவை பாலங்களை அமைத்தால் நம் மீனவர்கள் தவறாக இலங்கை கடற்பரப்பில் நுழையும் சாத்தியங்கள் தவிர்க்கப்படும். இரு நாட்டு கடற்கரை ரோந்து படையினரை நிறுத்தி இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வும் காண முடியும். இதை எலலாம் விடுத்து அப்பாவி மக்களை துன்புறுத்துவதால் ராஜபக்ஷேயின் ஆதரவை சிங்களவர் மத்தியில் இன்னும் அதிகமாக்குகிறோம் என்பதை ஏன் நாம் உணருவதில்லை. இது அங்குள்ள தமிழர்களுக்கு எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை போராட்டக்காரர்கள் ஏன் உணருவதில்லை. இதைச் சொல்வதால் என்மீது சிலர் கோபப்படலாம். தூர நோக்கோடு சிந்தித்தால் எனது வாதத்தில் உள்ள நியாயத்தை பலரும் விளங்கிக் கொள்வர். என் இனமான தமிழ் இனம் மேலும் இன்னலுறுவதை காண சகிக்காமலேயே இந்த பதிவை எழுதுகிறேன். இனப் பற்று இருக்கலாம். அதுவே இன வெறியாக மாறி விடக் கூடாது. இதனால் சிறுபான்மையினராக இலங்கையில் அல்லல் படும் தமிழர்களை மேலும் சிக்கலில் ஆழ்த்துகிறோம். இதுவே நான் சொல்லிக் கொள்வது.

------------------------------------------------

இநத பிரச்னை சம்பந்தமாக கலைஞர் அவர்கள் விடுத்த அறிக்கையினை பார்ப்போம்..


இலங்கை தமிழர்களிடம், மிகுந்த அக்கறையோடு இருப்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழகம் வந்த இலங்கை விளையாட்டு வீரர்களை, தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், சுற்றுலாவாகவும், கோவில்களுக்கும் வந்த இலங்கைப் பயணிகள் மீது, தாக்குதல் நடந்துள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சகம் விடுத்த வேண்டுகோளில், "இலங்கை மக்கள், தமிழகத்திற்கு சுற்றுலாவாகவும், மத ரீதியாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காகவும், தொழில் ரீதியான பயிற்சிக்காகவும் செல்ல வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளனர். திடீரென, விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், தமிழகத்திற்கு வரும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவதும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை, கெடுக்கக் கூடியது. இனப் படுகொலைக்கு எதிரான தீர்மானம், ஐ.நா., சபையின், ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, வரும், 14ம் தேதி, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனர் நவிபிள்ளை தலைமையில், தொழில்நுட்பக் குழு ஒன்று, இலங்கைக்குச் செல்கிறது; போரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறது.



மறு குடியமர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், போர் காரணமாக, அந்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும், மக்களின் பிரச்னைகள் குறித்தும் ஆய்வு செய்கிறது. தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்து, இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த நேரத்தில், தேவையில்லாமல் ஒரு பிரச்னையை, நாமே உருவாக்குவது, இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு, மேலும் இன்னலையும், மறுவாழ்வுப் பணியிலே குந்தகத்தையும் ஏற்படுத்தும் செயலாகவே அமைந்து விடும். தமிழக மக்கள், எந்த வகையிலான எதிர்மறை உணர்ச்சிகளுக்கும், தூண்டுதல்களுக்கும் இடம் கொடுத்து விடாமல், அமைதி காத்து, அரவணைப்போடு நடந்து கொள்ள வேண்டும். வாழை இலை, முள் மீது பட்டாலும் அல்லது முள் வாழை இலையில் பட்டாலும், சேதம் வாழை இலைக்குத் தான் என்பதை, மறக்கக் கூடாது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

---------------------------------------



தமிழ்நாட்டுக்கு மதவழிபாட்டுக்காக சென்றிருந்த இலங்கையர்கள் வன்முறையான முறையில் பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்து இலங்கை தலைநகர் கொழும்பு வர்த்தகர்கள் வியாழன்று கண்டனப் பேரணி நடத்தினார்கள். இதன் ஒருபகுதியாக தங்கள் வர்த்தக நிறுவனங்களையும் இவர்கள் திறக்கவில்லை.

பேரணியின் முடிவில் இலங்கைக்கான இந்திய தூதரிடம் வர்த்தகர்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அந்த மனுவில் இலங்கையிலிருந்து சென்ற விளையாட்டு அணியினர் தமிழ்நாட்டிலிருந்து பலவந்தமாக திருப்பியனுப்பப்பட்டதையும், இலங்கையிலிருந்து மத வழிபாட்டுக்காக சென்ற 184 யாத்திரிகள் வன்முறை கலந்த ஆர்பாட்டங்கள் காரணமாக பலவந்தமாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டதையும் தாங்கள் சுட்டிக்காட்டியிருந்ததாக கொழும்பு வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த பழனியாண்டி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவங்களுக்கான தங்களின் கண்டனத்தை தெரிவித்திருந்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கா வண்ணம் இந்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கோரியிருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தின் சில அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்கள், இலங்கை தமிழர்களை, குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்களை எதிர்மறையாக பாதிக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்தார் பழனியாண்டி.

மேலும், இத்தகைய தாக்குதல்கள் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தையும் பாதிக்கக்கூடும் என்றும், அந்த பாதிப்பு கொழும்பு வர்த்தகளில் பெரும்பான்மையாக இருக்கும் தமிழர்களையே அதிகம் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/09/120906_colomborally.shtml

------------------------------------------------------------

தின மலர் வாசகர் கடிதத்தில் வந்த ஒரு கடிதம்.
Sathiya Moorthi - Singapore,சிங்கப்பூர்
05-செப்-2012
இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் அநீதி இழைக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. இலங்கை அரசின் மீதான நமது கோபம் நியாயமானது. அதுக்கஹா சுற்றுலா வந்தவங்க மேலே அத கட்டுன்ன அதன் எதிவினை என்னவாக இருக்க முடியும்? சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது. இலங்கைத் தமிழர் மீது மிக வன்மையான தாக்குதல் நடைபெற்ற நாளில், இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் விளையாடியது. அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை. இந்திய அணி இலங்கையில் விளையாடியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நாம் கேட்கவும் இல்லை. இந்திய-இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டைத் தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிச் சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று வந்ததை யாரும் தவறாகக் கருதவில்லை.

அப்படியிருக்கும்போது, இத்தகைய தேவையற்ற எதிர்வினைகளால் நாம் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஒருசேரத் துன்பத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டாம் என்று கேட்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே பயிற்சி அளிக்கக் கூடாது என்கிறோம். இதனால் நாம் பெறும் பயன் என்ன? ஒன்றுமில்லை. தமிழக மீனவர்களைத் தாக்கத்தான் இந்தப் பயிற்சி பயன்படும் என்று இங்குள்ள சில சிறிய அமைப்புகள் சொல்கின்றன. நாம் வேண்டாம் என்று சொன்னால், இலங்கை ராணுவ வீரர்கள், பெய்ஜீங் போவார்கள். இந்தியர்களைத் தாக்க மிகச் சிறப்பான பயிற்சியை சீனா வழங்கும். தமிழர்களை வெறியுடன் இலங்கை ராணுவம் தாக்கும். பரவாயில்லையா? இதுதான் நமது ராஜதந்திரமா? இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, பிறகு அவர்களுடன் எப்படி பேச்சு நடத்துவது? ராஜீய உறவுகளுக்கு என்ன அர்த்தம்?

இலங்கைக் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்டுவர, விடுவித்துவர வேண்டுமானால் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர்தான் போய் நின்றாக வேண்டும். ஒரு ராணுவப் பயிற்சிக்கான ராஜிய உறவுகளைக் கூட சகித்துக்கொள்ள முடியாவிட்டால், இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கும் எவ்வாறு தீர்வு காண்பது? இலங்கையுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை. எல்லையில் சுரங்கப்பாதை அமைத்தும், கடல் வழியாக தீவிரவாதிகளை நமது எல்லைக்குள் நுழைத்தும், இணையத்தின் வழியாகப் பீதியையும் கிளப்பும் பாகிஸ்தானிடம்கூட இந்தியா நட்புடன்தான் இருந்தாக வேண்டும். அருணாசலப் பிரதேசம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் சீனாவுடன் இந்தியா அடுத்த ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சி நடத்தவுள்ளது. ராஜீய உறவுகளைத் தக்கவைக்க இதைச் செய்தாக வேண்டியுள்ளது. அதே நிலைமைதான் இலங்கை அரசுடனான இந்திய அரசின் உறவும். இவை ராஜீய உறவுகள். இதை உணர்வுபூர்வமாகப் பார்ப்பது தவறு.

ராஜபட்ச குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்கு வந்தால், அவர்களை அனுமதித்த ஆந்திர அரசு மீது நாம் ஆத்திரப்படவா முடியும்? ராஜபட்ச உறவுகள் இங்கே ராமநாதபுரம் வந்தாலும் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிப்பதுதானே பண்பாடு. அதுதானே ராஜிய உறவுகளை மேம்படுத்தும் வழிமுறை. ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும். திருச்சி, கலைக்காவிரி கல்லூரியில் நடனத்துக்காக வந்த இலங்கை மாணவர்களைத் திரும்பிப் போ என்று ஓர் அமைப்பு குரல் கொடுக்கிறது. பூண்டி மாதாக்கோவில் விழாவுக்கு வந்த சிங்களர்கள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது. அப்படியானால் இலங்கைத் தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதா? பயிற்சிக்காக இலங்கை மருத்துவர்கள் இங்கே வரக்கூடாது. சிகிச்சைக்காக சிங்களத்தவர் வரக்கூடாது. படிப்புக்காக மாணவர்கள் வரக்கூடாது. விளையாட வரக்கூடாது. சாமி கும்பிட வரக்கூடாது. புத்தகயாவில் சிங்களவர் நுழையத் தடை விதிக்க வேண்டும். ஆனால், ஈழத்தமிழர்களின் வாழ்வைக் குலைத்த ராஜபட்சயும் அவரது குடும்பத்தினரும் சிங்கள அதிகாரிகளும் பாதுகாப்புடன் வந்து செல்லலாம், அப்படித்தானே?

முன்பாகிலும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவும், எதிர்த்துப் போராடவும் வலுவாக இருந்தது. இப்போது ஒரு வெற்றிடம் நிலவுகிறது. நாம் திருப்பி அனுப்பினால் அவர்கள் திருப்பி அடிப்பார்கள். அடிவாங்கப் போவது இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தும் சிறு அமைப்புகளோ அல்லது அரசியல் தலைவர்களோ அல்ல சாதாரண இலங்கைத் தமிழனும், தமிழக மீனவனும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. இங்கு வரும் இலங்கைவாழ் அனைவரையும் துன்புறுத்துவோம்...ஆனால் அங்கிருக்கற என் இனமக்கள் எதையும் செய்ய கூடாது நியாயம் தானே? சர்வதேச அரசியலில் உணர்ச்சிக்கு இடமில்லை. நிதானமாகச் செயல்பட்டு நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ராஜபட்சக்குத் தெரிந்திருக்கும் இந்த உண்மை நமக்குத் தெரியாமல் இருப்பது ஏன்? இன்றைய தேவை, நிதானம்.... நிதானம், பண்பு, மனிதாபிமானம் மட்டுமே. ஆத்திரமும், அவசரமும், அரசியலும் அல்ல....தயவு செய்து சிந்தித்து பாருங்கள்

38 comments:

ஹுஸைனம்மா said...

ஜெ. அம்மா ஆரம்பித்துவைத்த தேவையில்லாத வேலை. ஃபுட்பால் விளையாடினா தப்பு; கிரிக்கெட் வெள்ளாண்டா தப்பில்லையாமா!! என்ன கொடுமை இது. விளையாட்டிலும் அரசியலைக் கலந்து, இவர் தம் ஈழத்தமிழர் பற்றை நிரூபிக்கிறாராமா?

இப்படி தேவையில்லாததில் பற்றை காமிக்கிறவங்களில் ஒருத்தர்கூட, அகதிகள் முகாம் பற்றி மட்டும் மூச்சுவிடமாட்டாங்க!!

UNMAIKAL said...

தமிழ்நாட்டவர் மீது நாங்க தாக்குதல் நடத்தினா..

தூண்டிவிடும் சிங்கள அமைச்சர்


Updated: புதன்கிழமை, செப்டம்பர் 5, 2012, 19:00 [IST]

கொழும்பு: தமிழ்நாட்டில் சிங்களவர் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று அந்நாட்டு அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கைக்கு எதிராக தமிழ்நாடு செயற்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இலங்கைக்கு வழக்கமாக வருகின்ற ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டவர் மீது இங்குள்ளவர்கள் தாக்குதல் மேற்கொண்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உணரவேண்டும்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முட்டாள்தனமாக செற்படுவதால் இலங்கை - இந்திய உறவில் மிகப் பெரிய விரிசல் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

இது தொடர்பாக இந்திய மத்திய அரசு கவனத்துடன் செயற்பட வேண்டும்.

'இலங்கை - இந்திய உறவில் இவ்விவகாரங்கள் மிகப் பெரும் விரிசலை ஏற்படுத்தி விவகாரம் கையை மீறிச் செல்வதற்கு முன்பாக இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

http://tamil.oneindia.in/news/2012/09/05/srilanka-wimal-angry-over-attacks-against-lankans-160855.html

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ...

இது மீண்டும் அங்கு உள்ள தமிழர்களுக்கு பிரச்சினைகளையே உருவாக்கும்....இந்த அரசியல்வாதிகள் முதலில் இங்கு உள்ள அகதிகள் முகாம்களில் அவதிப்படும் மக்களை கவனிக்கட்டும்....

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//ஜெ. அம்மா ஆரம்பித்துவைத்த தேவையில்லாத வேலை. ஃபுட்பால் விளையாடினா தப்பு; கிரிக்கெட் வெள்ளாண்டா தப்பில்லையாமா!! என்ன கொடுமை இது. விளையாட்டிலும் அரசியலைக் கலந்து, இவர் தம் ஈழத்தமிழர் பற்றை நிரூபிக்கிறாராமா?

இப்படி தேவையில்லாததில் பற்றை காமிக்கிறவங்களில் ஒருத்தர்கூட, அகதிகள் முகாம் பற்றி மட்டும் மூச்சுவிடமாட்டாங்க!!//

இங்கு எல்லாமே அரசியலாகி விட்டது. இதன் எதிர் வினையாக சகோ உண்மைகள் கொடுத்த செய்தியையும் பாருங்கள்.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//தூண்டிவிடும் சிங்கள அமைச்சர்

Updated: புதன்கிழமை, செப்டம்பர் 5, 2012, 19:00 [IST]

கொழும்பு: தமிழ்நாட்டில் சிங்களவர் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று அந்நாட்டு அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.//

பிரச்னையை ஆரம்பித்து வைத்தவர்கள் தற்போது ஒளிந்து கொள்வார்கள். பின்னால் வரும் விளைவுகளைப் பற்றி இவர்களுக்கு என்ன அக்கறை. தனது பெயர் வர வேண்டும். தனது இயக்கம் பேசப்பட வேண்டும். அதுதான் தற்போதய நிலை.

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜாமைதீன்!

//இது மீண்டும் அங்கு உள்ள தமிழர்களுக்கு பிரச்சினைகளையே உருவாக்கும்....இந்த அரசியல்வாதிகள் முதலில் இங்கு உள்ள அகதிகள் முகாம்களில் அவதிப்படும் மக்களை கவனிக்கட்டும்....//

அகதி முகாம்களை கவனிக்க வேண்டுமென்றால் அதில் ஏதாவது அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் இருக்க வேண்டும். அது வரை நெருங்க மாட்டார்கள்.

இவர்கள் இவ்வாறு சிங்களவர்களை அன்னியப்படுத்துவதால் நமது நாட்டு எதிரிகளான பாகிஸ்தானையும் சீனாவையும் இன்னும் ராஜபக்ஷேக்கு நெருக்கமாக்குகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!சுற்றுலா வந்த மக்களைப் பார்க்கும் போது எவருக்கும் பரிதாபம்தான் உண்டாகும்.நாம் வன்முறைகளை விரும்புவதில்லை என்ற மன அளவிலான காரணமும் ஒன்று.

இவ்வாறான சூழல் உருவாகுவதற்கு மத்திய அரசையே குற்றம் சாட்ட வேண்டும்.தமிழகத்திலிருந்து மக்கள்,கட்சி,அரசு சார்ந்து எழும் எந்தக் குரல்களுக்கும் செவி சாய்ப்பதில்லை.நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அரசு சம்பளத்தில் பிரச்சினைகள் அலசுவது மட்டுமே ராஜதந்திரமல்ல.மக்கள் உணர்வுகள் என்ன என்று அலசுவதும் எடை போடுவதும் அரசு இயந்திரங்களின் முக்கிய பணியாகும்.இதெல்லாம் காவல்,சி.ஐ.டி,பாதுகாப்பு,ரா என பிரச்சினைகளின் ஆணி வேர்கள் தெரியாமலா இருக்கிறார்கள்?

நீங்க மீனவர்கள் மீது கவலைப்படுகிறீர்கள்.இலங்கைக்கான டெல்லி தூதுவர் எங்க தண்ணியில் வந்து மீன் பிடிப்பதால்தான் பிரச்சினை உருவாகிறது என்கிறார்.மேலும் இரு நாடுகள் சார்ந்தும் மீன் பிடித்தல் போட்டி நடைபெறுகிறதென்றாலும் கூட துப்பாக்கி சூடு என்னமோ தமிழக மீனவர்கள் சார்ந்தே நிகழ்கின்றது.இதுபோன்ற நிகழ்வுகள் குறித்தும்,மீனவர்களை துன்புறுத்துவது,மரணம் ஏற்படுவது குறித்தும் யாராவது கவலைப்படுகிறார்களா என்றால் சிலர் இருக்ககூடும்.ஆனால் இலங்கை அரசுக்கொள்கை சார்ந்தும்,ராணுவம் சார்ந்தும் துரத்தியடி என்பதே கொள்கை.

பிரச்சினைகளுக்கு அடிப்படையான காரணமான இலங்கையில் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகள் சார்ந்து இலங்கை அரசு எந்த முன்னெடுப்பும் செய்வதில்லை.உள்காயங்களுக்கு மருந்து போடாமல் மேலே மருந்து தடவுவது போன்றது உல்லாசப் பயணங்களும்,வழிபாட்டு தல வருகைகளும்.தமிழ்நாட்டில் வழிபாட்டுத்தலம் செல்ல விருப்பம் இல்லாமலா இருக்கிறார்கள்?ஏன் இலங்கைக்கு செல்வதில்லை?

பொதுமக்களாக சிங்களவர்கள் நட்புக்குரியவர்களே.ஆனால் மக்களுக்குள் பிரச்சினையை வளர்ப்பது இரு நாடுகள் சார்ந்த அரசியலே.

முளையிலேயே கிள்ளிப் போட வேண்டிய இது போன்ற நிகழ்வுகள் இன்னும் நிகழாமல் இரு அரசுகளும் தீர்வுகளை நோக்கி செல்லுமா இல்லை இன்னும் கிள்ளி விடுமா என்பதை இனியும் வரும் காலம் மட்டுமே சொல்ல முடியும்.

ராஜ நடராஜன் said...

//இவர்கள் இவ்வாறு சிங்களவர்களை அன்னியப்படுத்துவதால் நமது நாட்டு எதிரிகளான பாகிஸ்தானையும் சீனாவையும் இன்னும் ராஜபக்ஷேக்கு நெருக்கமாக்குகிறார்கள்.//

சகோ.சுவனப்பிரியன்!சீனாவும் பாகிஸ்தானும் ஈழப்போருக்குப் பின் இலங்கையுடன் இன்னும் நெருக்கமாகவே இருக்கிறது.ராஜபக்சே சொல்வது மாதிரி சீனா எங்களுக்கு நண்பன்,இந்தியா சொந்தக்காரன்னு சொன்னாலும் கூட விடுதலைப்புலிகள் கால கட்டத்தில் இல்லாத சீனாவின் தலையீடு இப்போது இலங்கையில் அதிகம்.ஹம்பந்தோட்டா கப்பல் கட்டுமானத்திற்கும் கூட இந்தியாவுக்கே முன்னுரிமை தரப்பட்டது.ஆனால் இந்தியா விருப்பமின்மையால் சீனாவுக்கு தரப்பட்டது என்ற இலங்கை சொல்வது நியாயமாக பட்டாலும் கூட இந்தியாவின் தவறுகள் சீனாவுக்கு சாதகமாகவும் அமைகிறது.

அதே போல் எங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கான கடல்வழி பயண Hub உருவாக்குவதுதான் எங்கள் திட்டம் என்கிறார் கரியவம்சம்

http://www.ndtv.com/article/india/full-transcript-sri-lankan-envoy-on-tamil-nadu-tension-263741?pfrom=home-otherstories

இலங்கை சார்ந்த நியாயமென்ற போதும் இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்து நிறைய வில்லங்கமிருக்கிறது.வடக்கில் பாகிஸ்தான் பிரச்சினை இருக்கிறதே என்பதற்காகவும் மூன்று பக்கமும் கடல் இருக்கிறதே என்ற பாதுகாப்புக்காகவே ஆந்திரா,கர்நாடகா,கேரளா,தமிழகம் என இந்தியாவின் முக்கிய விஞ்ஞான,பொருளாதார,ராணுவ கட்டமைப்புக்கள் இருக்கின்றன.இப்பொழுதைய சீனாவின் இலங்கை நட்பும் தலையீடும் நீண்ட கால திட்டங்கள்,பாதுகாப்பு என இந்தியாவிற்கு பல தலைவலிகளை உருவாக்கும் சூழலில் இந்தியா இருக்கிறது.

இலங்கையின் வளமான எதிர்காலம்,இந்தியாவின் பாதுகாப்பு,ஈழத்தமிழர்களின் உரிமைப்பிரச்சினைகள் என்ற மூன்று முக்கிய அம்சங்களோடு சீனா,பாகிஸ்தான்,ரஷ்ய,அமெரிக்க தலையீடுகள் பிரச்சினைகளை எப்படி நகர்த்தும் என்பதை நாம் விவாதித்தாலும் இது குறித்து இன்னும் ஆழ்ந்து அலச வேண்டியவகள் பகடை விளையாடுபவர்களே.

நீங்க குமுதம் பத்திரிகையெல்லாம் படிச்சிருக்கீங்களான்னு தெரியாது.அதில் மிக பிரபலமான ஆறு வித்தியாசங்கள் வரும்.கரிய வம்சத்தின் பேட்டியில் பல ஓட்டைகள் இருக்கின்றன.அதில் ஒன்றாகத்தான் அவர் Hub என்று குறிப்பிடும் கடல் வணிக பார்வை இந்தியாவுக்கு எப்படி ஆபத்து என்பதை குறிப்பிட்டிருக்கிறேன். மிச்சத்தை நீங்க கண்டு பிடிப்போம் பார்ப்போம்:)

Vijaiy from colombo said...

சகோ.சுவனப்பிரியன் ,

சரியான நடுநிலையான பதிவு.முகாம்களில் வாடும் ஈழ மக்களக்கு நிவாரண உதவி வழங்க அழுத்தம் குடுக்க துப்பில்லாத ஒரு சில கட்சிகள் அப்பாவி பக்தர்களை குறி வைத்து தாக்கி தங்களை ஈழ அனுதாபிகளாக காண்பிக்க விழைகின்றனர்.ஏற்கனவே 1983 இல் புலிகள் 13 பொலிசாரை குண்டு வைத்து கொன்றதன் காரணமாக தான் இன்று ஈழ தமிழ் இனம் தன் நிலை இழந்து ஐரோப்பாவில் அகதி வாழ்க்கை வாழ்கிறது.நிதர்சனமான உண்மை என்னவெனில் தற்போது சின்ஹல-தமிழ் மக்கள் உறவு சிறப்பாகவே உள்ளது.காரணம் கடந்த காலங்களில் இடம் பெற்ற பஸ் குண்டு வெடிப்புக்கள் அறவே நின்று போய் உள்ளது தான்..தற்போது இவ்வாறு தமிழ் கட்சிகள் செய்யும் கீழ்த்தரமான காரியங்களால் மறுபடியும் சின்ஹல மக்களை கிளர்ந்து எழ செய்து அக் கட்சிகள் சாதிக்க போவது என்னவோ??? அதே நேரம் பெருமளவிலான தமிழ் நாட்டு மக்களும் கதிர் காமம்,சிவனொளி பாதமலை,நல்லூர் போன்ற வழிப்பாட்டு இடங்களக்கு சென்று வருகின்றனர்.இதே நிலைமை அவர்களக்கு ஏற்படுமாயின் ஜெயலலிதாவின் REACTION என்னவோ????

suvanappiriyan said...

சகோ விஜய்!

//சரியான நடுநிலையான பதிவு.முகாம்களில் வாடும் ஈழ மக்களக்கு நிவாரண உதவி வழங்க அழுத்தம் குடுக்க துப்பில்லாத ஒரு சில கட்சிகள் அப்பாவி பக்தர்களை குறி வைத்து தாக்கி தங்களை ஈழ அனுதாபிகளாக காண்பிக்க விழைகின்றனர்.ஏற்கனவே 1983 இல் புலிகள் 13 பொலிசாரை குண்டு வைத்து கொன்றதன் காரணமாக தான் இன்று ஈழ தமிழ் இனம் தன் நிலை இழந்து ஐரோப்பாவில் அகதி வாழ்க்கை வாழ்கிறது.//

இதனை தமிழகத்தில் உள்ள பலரே இன்னும் உணரவில்லை.

நிதர்சனமான உண்மை என்னவெனில் தற்போது சின்ஹல-தமிழ் மக்கள் உறவு சிறப்பாகவே உள்ளது.காரணம் கடந்த காலங்களில் இடம் பெற்ற பஸ் குண்டு வெடிப்புக்கள் அறவே நின்று போய் உள்ளது தான்..

கொழும்பில் உள்ள உங்களுக்கு உண்மை நிலவரம் தெரிகிறது. இங்குள்ளவர்களின் ஆர்வக் கோளாறால் இந்த நிலைமை மாறி விடுமோ என்பது தான் நமது கவலை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

உங்களுக்கு இருக்கும் யூத வெறுப்பை விட இது குறைவு தான்

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//சகோ.சுவனப்பிரியன்!சீனாவும் பாகிஸ்தானும் ஈழப்போருக்குப் பின் இலங்கையுடன் இன்னும் நெருக்கமாகவே இருக்கிறது.ராஜபக்சே சொல்வது மாதிரி சீனா எங்களுக்கு நண்பன்,இந்தியா சொந்தக்காரன்னு சொன்னாலும் கூட விடுதலைப்புலிகள் கால கட்டத்தில் இல்லாத சீனாவின் தலையீடு இப்போது இலங்கையில் அதிகம்.//

இதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? நம்முடைய பக்கத்து நாடான இலங்கையோடு சுமூகமாக செல்வதின் மூலமே சீனாவையும் பாகிஸ்தானையும் தூரமாக்க முடியும். கலாசார ரீதியாகவும், புவி அமைப்பிலும் இந்தியாவும் இலங்கையும் ரொம்பவும் நெருக்கத்தில் உள்ளது. இதனை நமக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பதுதான் ராஜ தந்திரம். அதை விடுத்து விளையாட்டு வீரர்களை தாக்குவதும், பக்தர்களை தாக்குவதும் கொஞ்சமும் ஏற்புடைய செயல் அல்ல.

//பொதுமக்களாக சிங்களவர்கள் நட்புக்குரியவர்களே.ஆனால் மக்களுக்குள் பிரச்சினையை வளர்ப்பது இரு நாடுகள் சார்ந்த அரசியலே.//

அதனை பொது மக்களாகிய நாம் மேலும் வளர்த்து விடக் கூடாது என்பதுதான் எனது ஆதங்கம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


UNMAIKAL said...

தாழ்த்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தரலாமா.. கூடாதா?

டெல்லி: தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசுப் பணியில் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கொடுக்கலாமா கூடாதா என்று விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ஒரு புள்ளிவிவரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

நாட்டில் உயர் மட்ட அரசுப் பணி என்பது மத்திய அரசுத் துறை செயலாளர்கள் பதவியாகும். இந்தப் பதவிகளில் மொத்தம் 149 அதிகாரிகள் உள்ளனர்.

இதில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது தான் மிக அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

இத்தனைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த நாட்டில் சுமார் 23 சதவீதம் பேர் உள்ளனர்.

4 இந்தியர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், 149 அரசுத்துறைச் செயலாளர்களில் குறைந்தபட்சம் 35 பேராவது தலித்கள் தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அவர்களில் ஒருவர் கூட இந்தப் பதவியில் இல்லை.

அடுத்த நிலையில் உள்ள உயர் பதவி கூடுதல் செயலாளர்கள் பதவி. இந்தப் பதவிகளில் மத்திய அரசில் 108 அதிகாரிகள் உள்ளனர்.

இவர்களில் 2 பேர் மட்டுமே தலித்கள் ஆவர்.

இணைச் செயலாளர்கள் பதவிகளில் 477 பேர் உள்ள நிலையில், வெறும் 6 சதவீதத்தினரே தலித்கள்.

மத்திய அரசுத்துறைகளில் இயக்குனர்களாக 590 பேர் இருக்க அதில் வெறும் 3 சதவீதத்தினரே தலித்கள்.

இத்தனைக்கும் இவர்கள் எல்லோருமே ஐபிஎஸ் அதிகாரிகள்.

ஐபிஎஸ் தேர்வில் 15 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரிகளாகும் தாழ்த்தப்பட்டவர்களை நமது சிஸ்டம் மேலேயே வரவே விடாமல் தடுத்து வருகிறது என்பதைத் தான் மேற்கண்ட பதவிகளும் புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன.


இப்போது காங்கிரஸ் கூட தலித்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசுப் பணியில் இட ஒதுக்கீட்டை கொண்டு வரவில்லை என்பதே உண்மை.

அவர்களது ஓட்டு வங்கியை மனதில் வைத்தே இதை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதை பாஜகவால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று பிற்படுத்தப்பட்டோர்-தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அந்தக் கட்சி மனதார ஏற்பதில்லை.

மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் அமலாக்கியபோது ஆட்சியைக் கவிழ்க்க ரத யாத்திரை புறப்பட்டவர் அத்வானி என்பது நினைவுகூறத்தக்கது.


இரண்டாவது விஷயம், இந்த தலித் இட ஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டு வந்து தலித்களின் ஓட்டுக்களை காங்கிரஸ் அள்ளி விடுமே என்ற கோபம் பாஜகவுக்கு.

பிற்படுத்தப்பட்டோர் நிலையும் கவலைக்கிடம்:

இந் நிலையில் நேரடியாக ஐபிஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுவோரில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அவர்களுக்கான கோட்டாவைக் கூட பூர்த்தி செய்வதில்லை என்று பிரதமர் அலுவலகமே தெரிவித்துள்ளது.

அதாவது நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 3,251 ஐபிஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளில் தாழ்த்தப்பட்டோர் வெறும் 13.9% தான்.

பழங்குடியினர் வெறும் 7.3% தான்.

பிற்படுத்தப்பட்டவர்கள் (இவர்கள் தான் நாட்டில் பெரும் பங்கு உள்ளனர்) வெறும் 12.9% தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தாழ்த்தப்பட்ட அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஏராளமான இடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன என்பதும் உண்மை.

அதிகாரிகள் பதவி மட்டுமல்ல, சாதாரண பணியிடங்கள் கூட காலியாகவே வைக்கப்பட்டுள்ளன.

2011ம் ஆண்டின்படி மத்திய அரசின் 73 துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட பதவிகளில் 25,037 இடங்கள் காலியாக உள்ளன.

இதில் 4,518 இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டிய இடங்கள்.


மத்திய அரசில் மொத்தமுள்ள பணியாளர்களில் 17 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆவர்.

அடடே பரவாயில்லையே என்று ஆச்சரியப்படாதீர்கள்.

மத்திய அரசின் குரூப் டி பதவிகளில் உள்ளவர்களில் 40 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் தான்.

இவர்களில் பெரும்பாலோனார் துப்புறவுப் பணியாளர்கள் ஆவர்.

இவர்களது எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் 17 சதவீத மத்திய அரசுப் பணியாளர்கள் தலித்கள்.

ஆனால், குரூப் சி, பி, ஏ என்று பதவிகள் உயர உயர தாழ்த்தப்பட்டவர்களைக் காண்பதே அரிதாகிவிடுகிறது என்பதே உண்மை.

http://tamil.oneindia.in/news/2012/09/06/india-sc-sts-fail-break-caste-ceiling-160917.html

மர்மயோகி said...

இலங்கை நமது அன்னியநாடு..அது இப்போது சீனாவுடன் நட்புறவு கொண்டுள்ளது..இங்குள்ள தேச துரோகிகள் (வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள்) இலங்கையுடன் நமது நாட்டுடன் பகைமையை ஏற்படுத்தி சீனாவிடம் இலங்கையை இன்னும் நெருக்கடி கொடுத்து இந்தியாவை சீர்குலைக்க முயற்ச்சி செய்வதின் விளைவே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள்...

மர்மயோகி said...

இலங்கை நமது அன்னியநாடு..அது இப்போது சீனாவுடன் நட்புறவு கொண்டுள்ளது..இங்குள்ள தேச துரோகிகள் (வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள்) இலங்கையுடன் நமது நாட்டுடன் பகைமையை ஏற்படுத்தி சீனாவிடம் இலங்கையை இன்னும் நெருக்கடி கொடுத்து இந்தியாவை சீர்குலைக்க முயற்ச்சி செய்வதின் விளைவே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள்...

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//உங்களுக்கு இருக்கும் யூத வெறுப்பை விட இது குறைவு தான் //

யூதர்கள் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை! :-(

suvanappiriyan said...

திரு மர்மயோகி!

//இங்குள்ள தேச துரோகிகள் (வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற விடுதலைப்புலிகளின் கைக்கூலிகள்)//

அவர்களை தேசத் துரோகிகள் என்று என்னால் பார்க்க முடியவில்லை. சீமானும் வைகோவும் தமிழர்களின் நலன் விரும்பிகள். ஆனால் அவர்கள் செல்லும் முறைதான் தவறானது. மத்திய அரசும் வழக்கம் போல் ஆமை வேகத்தில் செயல்படுவதும் ஒரு காரணம்.

Anonymous said...

பூவண்ணன் says:
September 5, 2012 at 5:36 am

தங்கமணி அண்ணே
சீக்கிய மதம் இந்து மதத்தில் ஒரு பிரிவு தான்,இந்திய மதம்னு பெருமைபடுற குழுவாச்சே நீங்க
அவங்க செய்த கொலைகளை பட்டியல் போடவா
சீக்கிய தீவிரவாதத்தை நீங்கள் மன்னித்து ,மறந்து மறைப்பதன் காரணம் என்ன
அமெரிக்கா,கனடாவில் வாழும் சீக்கியர் தான் பெருமளவில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்தது,உலகளவில் காலிஸ்தான் பிரட்சினைகளை பரப்பியது.
பேருந்தில் இருந்து சீக்கியரை இறக்கி விட்டு விட்டு மொத்த ஹிந்துக்களையும் சுட்டு கொன்றதை எல்லாம் மறந்து மன்னித்து விட்டீர்களே
பஞ்சாபில் பல மாவட்டங்களில் பஞ்சாபி ஹிந்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்ததை கூட கண்டும் காணாமல் விடும் நல்ல குணம்
இஸ்லாமியரை பார்க்கும் போது மறைவது ஏன்
இன்று வரை இஸ்லாமிய தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகளுக்கு பலியான மக்களின் எண்ணிகையை விட பல மடங்கு அதிகம் சீக்கிய தீவிரவாதிகளின் கொலைகளால் இறந்த மக்களின் எண்ணிக்கை

இருவது ஆண்டுகளுக்கு முன் டெல்லிக்கு சென்றிருக்கிறீர்களா
ஹோட்டல்கள் ஏழரைக்கு மூடப்படும்.மேல ஒரு மணி நேரம் எட்டரை வரை இருக்க கட்டணம் நூறு ரூபாய் வசூலிப்பர்.தீவிரவாதிகளின் பயம் காரணமாக எட்டரைக்கு அனைத்து கடைகள்,உணவகங்கள் மூடப்படும்.மதுவிலக்கு இருக்கும் குஜராத்,மணிப்பூர் மாநிலங்களில் கூட இரவில் மது கிடைத்து விடும்.ஆனால் டெல்லியில் வாய்ப்பே இல்லை.கஷ்டப்படவனுக்கு தான் தெரியும் அப்ப இருந்த டெல்லியின் நிலை .இப்ப கூட கனடாவில் காலிஸ்தான் ஆதரவாக விளையாட்டு போட்டிகளின் போது கொடிகள் தென்பட்டது
சீக்கியர் மேல இவ்வளவு பரிவு காட்டற நீங்க இஸ்லாமியர் மேல எங்க குரோதமா இருக்கிறீங்க

http://www.indianexpress.com/news/dont-allow-antiindia-activities-in-canada/639440/

It also comes close on the heels of the 25th anniversary of the bombing of Air India plane ‘Kanishka’ in 1985 which claimed the lives of 329 people in which some Khalistani extremists living in Canada were believed to be involved.

Anonymous said...

பூவண்ணன் says:
September 5, 2012 at 5:25 am

தங்கமணி அண்ணே
அது எப்படி அண்ணே பல கோடி மக்கள் இந்துவாக இருந்தும் ரிஷிமூலத்தை மறந்து விட்டார்கள்.
கோத்திரம் என்று மூலத்தை வெளிப்படுத்தும் ஒன்று எல்லாருக்கும் இருக்குது.

ஜ்ஹர்க்ஹாந்து மாநில பழங்குடிகள் கோத்திரம்,சாட் இனத்தவருக்கு கோத்திரம்,குஜ்ஜர் இனத்தவருக்கு கோத்திரம் எல்லாம் இன்றும் இருக்கிறது .அந்த கோத்திரங்களுக்கும் பழங்குடியினரின் குடும்ப பெயர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது .குஜ்ஜரின் கோத்திரத்துக்கும் அருந்ததியருக்கும்
,முதலியாருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா.ஆனால் ராஜச்தானை சார்ந்த பிராமணனுக்கும் கன்யாகுமரியை சார்ந்தவருக்கும் அதே கோத்திரம் இருக்கிறதே
சோரேன் மீன் கோத்திரதொடு இப்போது ஊட்டியில் அல்லது டார்ஜீலிங்கில் மக்கள் இருந்தால் அவர்கள் இங்கிருந்து அங்கோ,அல்லது அங்கிருந்து இங்கோ புலம் பெய்ரந்தவர்கள் என்று எண்ணுவது தவறா .அதே தானே சப்த ரிஷி கோத்திரங்களுக்கு
குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தானே சப்த ரிஷிகள் கோத்திரம்.அவர்கள் இடம் பெயராமல் எப்படி இந்தியா முழுவதும் பரவினர்

தமிழன் மலேசியா ,பர்மா சென்றான்,வெள்ளைகாரனால் தென்ன்னாப்ப்ரிகா,ஜமைகா ,பிஜி என பல தேசங்களுக்கு அழைத்து செல்லப்பட்டான் .அங்கு தமிழ் பேசுபவர்கள் இருந்தனர்,இருக்கின்றனர்.
ஆனால் வடமொழி பேசுபவர் ,அதில் புலமை பெற்றவர் இந்தியா (மத்திய கிழக்கு நாடுகள் ஆப்காஅநிச்டான் முதல் கடல் எல்லைகள் வரை)முழுவதும் சுயம்பாக முளைத்தனர் என்று நம்புவது நகைச்சுவை
இப்போது அந்தமானில் இருக்கும் பழங்குடிகளுக்கு,வடகிழக்கில் வாழும் பழங்குடிகளுக்கு வட மொழி வேதங்கள் ,தெரியுமா .ரிஷிமூலம் கொண்டவர்கள் சென்றிருந்தால் தெரியும்.இங்கு அவர்கள் வந்ததால் தெரிகிறது
கேரளாவை சேர்ந்த என் நண்பன் பெயரோடு அவர்கள் வீட்டு பெயர் உண்டு. தமிழகத்தில் எங்களோடு வேலை செய்த தோழியின் கணவர் பெயரிலும் அதே வீட்டு பெயர் .இருவரும் கடந்த தலைமுறைகளை ஞாபகபடுத்தி பார்த்தால் தொடர்பு ஏதும் இல்லை .அதற்கு முன்பான தொடர்பின் காரணமாக அதே பெயர் தொடர்ந்து வருகிறது

Anonymous said...

Kavya says:
September 6, 2012 at 6:47 am

Mr Thangkamani,

தலித்துக்கள் அவர்களிருப்பிடங்களில் கோயில்கள் கட்டிக்கொள்ள உங்களிடம் அனுமதி பெறவேண்டுமென்பது போலவும், நீங்கள் தாராளமனப்பான்மை கொண்டு அனுமதி தேவையில்லையென்று எழுதுகிறீர்கள்.

அவர்கள் கோயிலைக்கட்டிக்கொள்ள எவர் அனுமதியும் தேவையில்லை. பிரச்சினை அவர்கள் கோயில்களில் இல்லை. மற்ற ஜாதிக்காரர்கள் கட்டிய கோயில்களிலும் இல்லை. நீங்கள் கட்டச்சொன்ன கோயில்களில்தான். நான் ஏற்கனவே சொன்னது போல, நீங்கள் கட்டி எல்லாரையும் அழைத்து, தலித்தை மட்டும் உள்ளே நுழையவிடாமல் தடுத்தது உண்மையா பொய்யா? 1947 சுதந்திரத்துக்குப்பின் தானே ஆலயப்பிரவேசம் நடத்தினார் வைத்தியநாதர்! உண்மையா பொய்யா? அம்மக்களை ஏன் தடுத்தீர்கள்? சொல்லுங்கள்.

‘பாரம்பரிய உரிமைக் கோயில்கள்’ எவை? நைசாகப்பேசுவதாக நினைப்பா? அக்கோயில்கள் எவரின் பாரம்பரிய உரிமைகள்? மதுரை மீனாட்சியும், சிரிரங்கநாதரும், கபாலீசுவரரும் எவரின் பாரம்பரிய உரிமைகள்?

பிறப்பிலே ஜாதியுண்டு என்றுதானே பார்ப்பனர்கள் அர்ச்சகர்கள் ஆகிறார்கள்? அதற்கு ஆகம விதிகளைக்காட்டிக்கொண்டுதானே சமாளிக்கிறீர்கள்? உண்மையா பொய்யா?

தலித்து ஏன் பூணூல் போட்டு பிராமணானன பின் அர்ச்சகராக வேண்டும் அவர்கள் கோயில்களிலேயே? தேச‌முத்துமாரிய‌ம்ம‌ன் கோயில் அவ‌ர்க‌ள் கோயில். அங்கிருன்த‌ பூஜாரிப்பையன் பூணுல் போட‌வில்லை த‌லித்தான‌தால். அவ‌னைக்கூப்பிட்டு, பூனூல் போட்டு பிராம‌ணாக்குகிறேன் அப்போதுதான் உன‌க்குப் பூஜாரியாக‌ த‌குதி வ‌ருமென்று சொன்ன‌வ‌ர் ஆர்?

மற்றவர் பொய்கள் புனைகிறாரென்று சொல்லிக்கொண்டே நீங்கள் உண்மைகளை நைசாக மறைக்கிறீர்கள். இந்து சமூகத்துக்கு எதிராக என்று எழுதுகிறீர்கள். அந்த சமூகம் நீங்களும் உங்கள் ஜாதியும் மட்டுமா? இந்து சமூகம் என்பது எது ? ஆரின் சார்ப்பாக நீங்கள் சொல்கிறீர்கள்? எழுதுகிறீர்கள்? சுவனப்பிரியன் மேல் பாயும் நீங்கள் சுமிதா ‘எங்கள் ஜாதிக்கே உயர் குணங்கள் உண்டு என்றபோதும், மலர்மன்னன் குணவர்க்கங்கள் பார்ப்பனருக்கே என்றும் எழுதும்போதும் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். நான் எதிர்த்தால் இந்து சமூகம் எதிர்க்கப்படுகிறதா அல்லது ஒரு ஜாதி எதிர்க்கப்படுகிறதா? இந்து சமூகம் என்று சொல்லும் நீங்கள் மலர்மன்னனை எதிர்க்காதது ஏன்? சாதிகள் உண்டென்றால் ஏற்றத்தாழ்வுகள் வரும். வந்தால் பாதிக்கப்பட்டோர் வேறு மதங்களுக்குத்தாவுவது சகஜம். இஃதெல்லாம் இந்து சமூகத்துக்குச் செய்யும் துரோஹமில்லையா? அப்போது உங்கள் கவலை எங்கே போனது?

சுவனப்பிரியன் இந்துமதத்தின் மீது வைக்கும் விமர்சனங்கள் எதுவும் புதுமையாந்தன்று. அவை திராவிடக்கட்சிகளினதுமல்ல. பன்னெடுங்காலமாக பலரால் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வந்தவைதான். அவர்களெல்லாரும் இந்துசமூகத்து துரோஹிகள். எங்கள் எச்சில் உருண்டு புரண்டால் புண்ணியம் என்று சொல்லும் பிராமணர் என வேடமிட்டலைவோர் இந்துசமூகத்து துரோஹிகள் அல்லவே அல்ல.

மேக்ப‌த் நாட‌க‌த்தில் முத‌ற்காட்சியிலேயே மூன்று பிசாசுக‌ள் இப்ப‌டிச்சொல்லி ஆடும்:

Fair is foul. Four is fair.

திண்ணையில் இதுதான் ந‌ட‌க்கிற‌து. பேயாட்ட‌ம்.

Anonymous said...

”கொழும்பில் இருந்து விஜய்” மற்றும் ச்கோ சுவனப்பிரியன்,

முதலில் கொல்லப்பட்ட 13 பேர் பொலிசார் இல்ல்லை ராணுவத்தினர் என்பது உண்மை. உலகமே அறிந்த உண்மையை ”கொழும்பில் இருந்து விஜய்” அறியாமல் இருப்பது அவர் கொழும்பில் இருப்பதை அல்லது ஈழத்தமிழர் பற்றிய அறிவைக்காட்டுகிறது.
நிற்க கொல்லப்பட்டது 1983ம் ஆணடு. அதற்கும்முன்னர் 1958 இல் இருந்து தென்னிலங்கையில் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்போது யாருக்கும் அகதிகளாக சென்றுவிடலாம் எனத்தெரியாது. யாரும் போகவில்ல்லை.
ஈழத்தமிழர் பிரச்சினை என்பது 60 ஆண்டுகால பிரச்சினை. அதனை 13 ‘பொலிஸ்’ சுட்டதால் வந்தது எனச் சொல்லுவோர் பற்றி என்ன சோல்ல?
கொழும்பில் இருக்கும் விஜய் அவர்களே உங்களுக்கு 1956, 1958, 1977 இல் தமிழர்கள் மீது தென்னிலங்கையில் நடந்த தாக்குதல்கள் பற்றி ஏதாவது தெரியுமா அல்லது சும்மா ‘கொழும்பில் இருந்து விஜய்’ ஆக எழுதுகிறீர்களா?
எங்கப்பன் குதிருக்குள் இல்லை கேசா?

Anonymous said...

தங்கமணி!

//உங்களது முன்னோர்கள் நிச்சயமாக வர்ணாசிரமத்தை எதிர்த்து இஸ்லாமுக்கு போகவே இல்லை.
அதற்காகத்தான் மதம் மாறினார்கள் என்று வரலாற்று ரீதியாக ஆதாரம் காட்டமுடியுமா?
20ஆம் நூற்றாண்டு பாண்டே வேண்டாம். 7 ஆம் நூற்றாண்டு ஆவணம் வேண்டும்.
தாருங்கள் பிறகு பேசலாம்.//

1929 ல் 69 ஆதி திராவிடர்கள் இன இழிவு நீங்க இஸ்லாத்தை ஏற்ற போது தந்தை பெரியார் ஆற்றிய உரை:

‘இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன்.
‘69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.’

தமிழகத்தில் இஸ்லாம் வளர்ந்ததற்கான காரணத்தை தந்தை பெரியார் அழகாக விளக்குகிறார். எனவே தங்கமணியை பெரிது படுத்தத் தேவையில்லை. இன்று அந்த 69 பேரும் 'வாங்க பாய்' என்று மரியாதையாக பார்ப்பணர்களே அழைக்கும் அளவுக்கு அவர்களுக்கு சுய மரியாதை கிடைத்திருக்கும்.

வாதததுக்காக தங்கமணி வார்த்தைபடி இஸ்லாமியர் அனைவரும் அரபு நாட்டு இறக்குமதி என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன தவறு? இங்கு வந்த அவர்கள் தமிழக இந்து பெண்களை திருமணம் முடித்து இந்த நாட்டு பூர்வீக ரத்தத்தில் ஐக்கியமாகி விட்டார்களே! தமிழக கலாசாரமான 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும ஊரே யாவரும் கேளீர்' எனபதற்கேற்ப உலக முஸ்லிம்களுக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளனரே! மதினா பல்கலைக்கழகத்தில் தமிழக அறிஞர் பி.ஜெய்னுல்லாபுதீனின் இஸ்லாமிய கட்டுரைகளை ஆராயும் அளவுக்கு தமிழனின் பெருமை பறை சாற்றப்படுகிறதே!

ஆனால் பார்ப்பணர்களாகிய உங்களின் நிலை என்ன? என்று இந்த நாட்டுக்கு வந்தீர்களோ அன்றிலிருந்தே பூர்வீக குடிகளை ஒதுக்கியே வாழ்ந்தீர்கள். தொட்டால் தீட்டு: உங்களுக்கென்று தனி அக்ரஹாரம்: தமிழ் மொழியையே உடைத்து 'அவாள், இவாள்' என்ற புது மொழியை உங்களுக்காக உண்டாக்கிக் கொண்டீர்கள். பேசும் மொழியிலும் கூட ஒரு மேட்டுமைத்தனம் தெரிய வேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு. திருமண பந்தத்தை பூர்வீக தமிழர்களோடு வைத்துக் கொள்வதை அறவே தவிர்த்தீர்கள். இதைப் பார்த்து அவர்களும் உங்களை வெறுக்க ஆரம்பித்தனர். இன்று 'ஐயோ..ஐயோ...வடை போச்சே...எங்களை மட்டும்தானே விமரிசிக்கிறீர்கள்: இஸ்லாத்தை விட்டு விடுகிறீர்களே...' என்று வயிற்றெரிச்சலில் புலம்புகிறீர்கள்.

இன்று காவ்யாவும் பூவண்ணனும் இஸ்லாத்தை ஏன் விமரிசிப்பதில்லை என்று தங்கமணி வருத்தப்படுகிறார். சாதி வெறியை சாதி திமிரை ஒடுக்குவதற்கு எந்த வன்முறையும் இல்லாமல் அழகிய முறையில் தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்லும் ஒரு மார்க்கமான இஸ்லாத்தை அவர்கள் வாழ்த்தவே செய்வார்கள்.

உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு பார்ப்பணர்களாகிய உங்களோடும் காவ்யாவும் பூவண்ணனும் கை கோர்ப்பார்கள்.

suvanappiriyan said...


தங்கமணி!

//ஒரே ஒரு கேள்வி. எந்த இடத்தில் நான் பார்ப்பனன் என்று எழுதினேன்? அப்படி நான் என்னை பார்ப்பனன் என்று குறிக்காதபோது “பார்ப்பனரான உங்களை” என்று எழுதுவது தவறுதானே?
நான் பார்ப்பனன் இல்லை.//

நான் எழுதுவது ஒரு குறிப்பிட்ட தங்கமணிக்காக மட்டும் அன்று. வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் ஒட்டு மொத்த பர்ப்பனர்களுக்காகவும்தான். பார்ப்பனர்கள் சார்பாக நீங்கள் தான் வாதிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஸ்மிதாவும் மலர்மன்னனும் வேதம் கோபாலும் பதில் இல்லாததால் வர மாட்டார்கள் என்பதும் தெரியும்.

இசையமைப்பாளர் இளையராஜா ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர். ஆனால் இன்று இந்து மதத்தின் சட்டங்களை தன்னுள் உள் வாங்கி ஆன்மீக பாதையில் நுழைந்துள்ளார். அதாவது பிராமணியத்தை சுவீகரித்துள்ளார். அவர் பின்பற்றும் இந்து மத வர்ணாசிரம சட்டங்களை எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்தார் என்றால் என் பார்வையில் இளையராஜாவும் பார்ப்பனரே!

ஊர்சுற்றி said...

ச்கோ சுவனப்பிரியன்,

இங்கே பதிவிட்ட “Vijaiy from colombo” தனது சொந்த வலைப்பூவில் இட்ட பதிவு கீழே....படித்து இன்புறவும்....முக்கியமாக சிங்கள-தமிழ் உறவு எவ்வலவு சிறப்பாக இருக்கிறது என்பதனை மற்றவர்களுக்கும் பதிலாக கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!!!!

http://yovijaiy.blogspot.com/2011/12/blog-post_23.html

----------------------

இலங்கை தமிழரின் இன்றைய நிலை
தமிழர் தாயகம் ...இன்று தந்தைக்கு பயந்து தப்பி வந்த விஜயனின் வாரிசுகளின் தாயகம் ஆகி இருக்கின்றது .....இலங்கையின் பூர்விக குடிகளையே தமிழ்நாட்டில் இருந்து தப்பி வந்தவர்கள் என கூறும் கூட்டம் ஒரு பக்கம்,ஆயுதம் ஏந்தாத பொதுமக்களை முள்வெளி கம்பிகளக்குள் அடைத்து வைத்து அழகு பார்க்கும் "லங்கன் ஹிட்லர்" ஒரு பக்கம் என எங்கு திரும்பினும் இடியாப்ப சிக்கலாக இருக்கிறது தமிழர் வாழ்வு.

இந்தியாவின் சமஷ்டி முறையே தீர்வு என தமிழர்களின் பிரதிநிதியாக இருந்த விடுதலைபுலிகளும் ஒத்து கொண்ட செய்தி அனைவரும் அறிந்ததே,இதன் பொது ஆட்சி அதிகாரம் மட்டுபடுத்த பட்ட அளவிலேயே தமில்றகலக்கு வழங்க படும்.எனின் தமிழர்களின் சுதந்திர வாழ்வு அங்கு உறுதி படுத்த பட்டு இருக்கும்.ஆயினும் சில மாதங்கள் முன்பு அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோட்டபாய கூறியதாவது,புலிகளை அழிதாயுற்று,இனி அதிகார பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை..இதன் மூலம் அவர் கூற வருவதாவது,இனி உங்களக்கு எங்க கைல தான் சாவு,எவன் நினச்சாலும் எங்க ஆர்மி உங்க வீட்டுல கலவேடுப்பான் ,உங்க வீட்டு பெண்களின் பாதுகாப்புக்கு நாங்க உத்திர வாதம் இல்லை என்பதே....யுத்தம் முடிந்து 2 வருடங்கள் ஆகியும் இன்னும் தமிழர் தாயக பகுதிகளில் இராணுவமே பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது.போலீஸ் அதிகாரம் அமுல் படுத்த படவில்லை.இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை ஹெய்டியில் பல்வேறு நாடுகளின் அமைதி படைகள் நடாத்திய அட்டூழியங்களை உதாரணமாக கொள்ளலாம்.



இந்தியாவின் எந்த இனத்தவரும் தமிழர்கள் அளவு பிற நாடுகளில் அவதியுற்று இருப்பார்களா என்பது சந்தேகமே,தமிழர்களின் தமிழ் ஈழ தாயக கனவு தகர்ந்து இருப்பினும் இதனை இவ்வாறே அடக்கி வைக்க முயற்சிப்பின்,ஈழ தமிழர் விவகாரம் மத்திய கிழக்கின் "பெரு வெடிப்பை" போல்
வெடித்து சிதறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை...
இடுகையிட்டது Vijaiy from colombo நேரம் 6:07 am
--------------

baleno said...

சகோ சுவனப் பிரியன், கொழும்பு விஜய் தெரித்ததே இலங்கை பற்றி உண்மை நிலை. புலி யுத்தம் நடத்தி பெருந் தொகையான விதைவைகள் கால் கை இல்லாதோர் அனாதைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.அவர்களுக்கு தேவை உதவி. அதை பற்றி எல்லாம் தமிழகத்தில் ஆர்வம் இல்லை. தொடர்ந்து யுத்தம் நடத்தி மேலும் அழிவுகளை இலங்கையிலே ஏற்படுத்த புலி இல்லாமல் போய்விட்டதே என்ற ஆத்திரத்தில் இலங்கையில் இருந்து வந்த மக்களை தாக்கியிருக்கிறார்கள்.

suvanappiriyan said...

யாழ்ப்பாணம்: உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியா கட்டித் தந்துள்ள வீடுகள் வசதியாக இருப்பதாக, அங்கு வசிப்போர் தெரிவித்தனர். வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில், காய்கறித் தோட்டம் அமைத்து, அதை வாழ்வாதாரமாக பயன்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, இந்தியா, 50 ஆயிரம் வீடுகளை கட்ட உதவி அளித்து உள்ளது. இதில், முதல்கட்டமாக, 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கண்டி-யாழ்ப்பாணம் "ஏ 9' நெடுஞ்சாலையில், முகமாலை அருகே, புதுக்காடு, கரந்தையில், 50 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீடும் கால் ஏக்கர் நிலப் பரப்புக்குள் கட்டப்பட்டு உள்ளது.


இங்கு குடியேறி உள்ள, தர்மகுலசிங்கம்-யோகேஸ்வரி தம்பதியர் கூறுகையில், ""கடந்த ஆண்டு இங்கு குடியேறினோம். இந்த வீடும், இடமும் வசதியாக உள்ளன. மின் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு அருகே உள்ள ஊரில் தான், நாங்கள் வசித்து வந்தோம். இங்கிருந்து கொண்டே சொந்த ஊரில் வேளாண் பணிகளை துவக்கி உள்ளோம்,'' என்றனர். இவர்களைப் போல், இங்குள்ள பலர் தங்கள் சொந்த ஊர்களில், வேளாண் பணிகளை துவக்கி உள்ளனர்.

குண்டுவீச்சினால், தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டு இருந்த இவர்களுக்கு, புதிய வீடுகள், புதிய வாழ்க்கைக்கு மையமாக அமைந்து உள்ளன. நிறைகள் பல இருப்பினும், இவை இந்திய கட்டுமானம் என்பதால், சில குறைகளும் உள்ளன. கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில வீடுகளின் கதவுகள் பெயர்ந்து நிற்கின்றன. கூரைக்கு காட்டு கம்புகளை பயன்படுத்தியதால், அவை உளுத்துவிட்டன. அதற்கு பதிலாக முற்றிய பனை மரத்தை பயன்படுத்தி இருக்கலாம். அது நீண்ட நாட்களுக்கு உழைக்கும்; செலவும் குறைந்திருக்கும் என்று, அந்த பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=542435

ஊர்சுற்றி said...

சகோ சுவனப்பிரியன்,

கிழே உள்ள செய்தி இந்தியத்தூதரகத்தினால் ஏப்பிரல் 20ம் திகதி சொல்லப்பட்டது. அதாவது 1000 பேர்களின் பெயர்களைக்கேட்டிருந்தோம், தந்தார்கள். பின்னர் வெட்டிக்குறைத்து 800 ஆக்கினர்...இப்படி நீளும் செய்தியை இந்தியத்தூதரகமே சொல்லி இருக்கும் போது. இம்மென்றால் வனவாசம் ஏனென்றால் சிறைவாசம் எனும் நிலையிலும் மோசமான நிலையில் வாழும் மக்கள் அழகான தோட்டமுண்டு...அணில்கள் கொஞ்சிவிளையாடுது என சொல்கிறார்கள் என தினமலர் சொல்கிரது என்கிறீர்களே (தமிழர்கள் தினமலம் என சொல்வார்கள், நீங்கள் அறியாததா?). அட அதைவிடுங்க கீழே உள்ல செய்தியை சொல்வதே மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு காரனுங்கோ....

“They gave us a list of 1,000 beneficiaries initially. This list was subsequently withdrawn. Then they gave us a fresh list of over 800 beneficiaries,” said an Indian official. The first list was reportedly withdrawn because a section of the Sri Lankan establishment had raised objections to some names.
http://www.thehindu.com/news/international/article1978592.ece

ஊர்சுற்றி said...

ச்கோ பலேனோ..

உண்மை நிலையை சகோ கொழும்பில் இருந்து விஜய் தனது சொந்த வலைப்பூவில் எழுதி இருக்கிறார் படித்துப்பாருங்கள். மிக நல்ல ஒற்றுமை தெரியும்!

ஊர்சுற்றி said...

இது யாழ்ப்பானத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் வந்தது.

-------------------------------

நாங்கள் தமிழில் பேசியதனாலேயே எம் மீதான தாக்குதலை நிறுத்தினர்; நாடு திரும்பியோர் தகவல்
நாங்கள் சுற்றுலாவுக்காகவோ அல்லது வியாபாரத்துக்காகவோ இந்தியா செல்லவில்லை. மதக் கடமையினை நிறைவேற்றவே அங்கு சென்றோம். இவ்வாறானதொரு நிலைமையிலேயே ௭ம் மீது தாக்குதல் நடத்தப்பட்டடுள்ளது என வேளாங்கன்னியில் இருந்து நாடு திரும்பிய யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியிலுள்ள வேளாங்கன்னி தேவா லயத்துக்கு சென்ற யாத்திரீகர்கள் திருச்சி, பூண்டுலூர், வேளாங்கன்னி பகுதிகளில் தாக்கப்பட்டதினையடுத்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இல ங் கை யை வந்தடைந்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கையர்கள் வெளியேற வேண்டும்’ ௭ன கோஷம் ௭ழுப்பியவாறு திருச்சியில் ௭ங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நாம், ‘அண்ணா ௭ங்களை அடிக்காதீர்கள்! அடிக்காதீர்கள்!’ ௭ன அலறியதை அடுத்து, ‘இவர்கள் தமிழில் பேசுகின்றனர், இவர்களை இனி அடிக்காதீர்கள்’ ௭ன்று கூறி அங்கிருந்து சென்றனர்.

நாங்கள் கடந்த 2ம் திகதி நேர்த்திக் கடன்களைச் செலுத்துவதற்காக திருச்சி சென்றோம். அன்று மாலை ஒரு கும்பல் வந்து இலங்கையர் வெளியேற வேண்டுமென கோஷம் ௭ழுப்பியது.

பின்னர் அன்றிரவு இரண்டு மணிக்கு அங்கிருந்து தேவாலயம் அமைந்துள்ள நாகப்பட்டினம் பகுதிக்கு பொலிஸாரின் உதவியுடன் சென்றோம். அங்கும் ஒரு கும்பல் ௭மக்கெதிராக கோஷமிட்டனர்.

அதனையடுத்து நாம் அங்கிருந்து பிரதியமைச்சர் நியோமல் பெரேராவுக்கு தொடர்புகொண்டு விடயத்தை தெரிவித்தோம். அப்போது அவர், ௭ம்மை அங்கிருந்து உடன் நாடு திரும்புமாறும் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய சிறப்பு விமானமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய நாம் திருச்சி விமான நிலைய த் துக்கு வருகை தந்துகொண்டிருந்த போது தான் நாங்கள் வந்த பஸ் கண்ணாடி உடை க் க ப்பட்டதுடன், யாத்திரீகர்களும் தாக்கப்ப ட் டனர். இதனால் பெண்களும், சிறுவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நாங்கள் சுற்றுலாவுக்காகவோ அல்லது வியாபாரத்துக்காகவோ இந்தியா செல்லவில்லை. மதக் கடமையினை நிறைவேற்றவே அங்கு சென்றோம். இவ்வாறானதொரு நிலைமையிலேயே ௭ம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மிகவும் கவலையாக இருக்கின்றது என்றார்.

இதேவேளை இவ்வாறு நாடு திரும்பியவர்களில் பலர் சிலாபம், கடற்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுள் சிலாபம் நகரசபை உறுப்பினர்கள் ஐவரும் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மர்மயோகி said...

//அவர்களை தேசத் துரோகிகள் என்று என்னால் பார்க்க முடியவில்லை. சீமானும் வைகோவும் தமிழர்களின் நலன் விரும்பிகள். ஆனால் அவர்கள் செல்லும் முறைதான் தவறானது. மத்திய அரசும் வழக்கம் போல் ஆமை வேகத்தில் செயல்படுவதும் ஒரு காரணம்.//

நண்பரே...உலகத்தில் தமிழர்கள் மட்டும்தான் மனிதர்களா?
குஜராத்தில் பயங்கரவாதம் செய்த மோடி வந்தால் மேக் அப் போட்டுகொண்டு வரவேற்கும் வைக்கோ - மோடி அத்வானி போன்ற பயங்கரவாதிகள் வரும்போது இவர்கள் ஏன் வாயையும் சூ........யும் மூடிக்கொண்டிருக்கிறார்கள்?

கோயம்பத்தூரில் குற்றப்பத்திரிக்கைகூட இதுவரை வழங்கப்படாமல் - ஜாமீனில் வரவ்முடியாமல் வருஷக்கணக்கில் ஏராளமான அப்பாவி முஸ்லிம் மக்கள் சிறையில் வாடும்போது, குற்றம் நிரூபிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்காக இவர்கள் ஓலமிடுவது தேச துரோகம்தானே..

இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய முடியும்?

இதற்க்கு முன் வைகோ கட்சிகாரர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தார்களே அப்போ என்ன புடுங்கினார்கள்?

வைகோ கள்ளத்தோணியில் யாழ்ப்பாணம் போகட்டும்..

siva said...

பதிவின் நோக்கம் சரியானதே. ஒரு இனவெறிக்கு இன்னொரு இனவெறி பதிலடியாகவோ சரியானதாகவோ இருக்கக் கூடாது. எந்த இனவெறியாக இருந்தாலும் பலியாகப் போவது இரண்டு பக்க அப்பாவி மக்களே ஒழிய ஏதோ ஒரு இனவெறியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது நன்மை பயக்காது. எந்த இனவெறியையும் எதிர்ப்போம்.

அடுத்து என்னை கமெண்ட் போட வைத்த மர்மயோகி என்னும் உலக் மகா அறிவாளி, எப்போதெல்லாம் விடுதலைப்புலிகள், வைகோ நெடுமாறனைப் பற்றிய செய்திகள் வருகிறதோ இல்லையோ அல்ர்ட்டாக ஆஜராகி அவன் இவன் என்று மரியாதையின்றிப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். நானும் கூட இவர்களை, இவர்கள் செய்யும் அரசியலை ஆதரிப்பதில்லை. இவர் கூடங்குளம் சுப.உதயகுமாரையும் எதிர்க்கிறார். அவ்வப்போது பெண்களைக் கேவலமாகப் பேசுவது. பலான படங்களைப் போடுவது என்று ப்ளாக்கை நடத்தி வருகிறார். முஸ்லிம்கள் யாரும் பின்னூட்டமிடமாட்டார்கள். அவ்வப்போது முஸ்லிம்களின் பதிவில் வந்து ஆமாஞ்சாமி போடுவார். தமிழ் என்றால் மட்டும் பொங்குவார். இந்தியா என்று உருகுவார்.

இப்போது சில கேள்விகள் மரமயோகி என்ற மதவெறியனுக்கு, இதை மற்ற முஸ்லிம்களை நோக்கி நான் கேட்கவில்லை. இந்த மரமண்டை தமிழுண்ரவைக் கேவலமாகப் பேசிய்தால், மட்டுமே இதைக் கேட்க வேண்டியதாகிறது. இந்தக் கேள்விகள் எனக்கே பிடிக்க வில்லை. இருப்பினும் எனக்கு வேறு வழியில்லை.

வைகோ கள்ளத்தோணியில் போனான் என்பது தவறெனில் வங்கதேச முஸ்லிமக்ள் இந்தியாவில் சட்டத்திற்குப் புற்ம்பாகக் குடியேறுவது குறித்து அய்யா என்ன சொல்றாரு ?

அதவானி-மோடியை வரவேற்கும் வைகோவின் தவறைச் சாடும் அய்யா அவர்கள் 40000 தமிழர்களைக் கொன்று குவித்த ராஜப்க்சேவுட்ன் கைகுலுக்கும் இலங்கை முஸ்லிம் தலைவர்கள், இந்தியாவின் பிரதமர ஆகியோரைக் குறித்து என்ன சொல்றார். இல்ல மோடிக்கு விருந்து வைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துள்ள ஜவாஹிருலலா பற்றி என்ன சொல்றார்.

//விடுதலைப்புலிகளுக்காக இவர்கள் ஓலமிடுவது தேச துரோகம்தானே..//
இல்ல பின்லேடனுக்கு சென்னையில் நடத்தப்பட்ட தொழுகை குறித்து என்ன சொல்றாரு இந்த த்மிழ்வெறி எதிர்ப்பாள்ரு !!

கோவை முஸ்லிம்கள் உடப்ட காஷ்மீர் முஸ்லிம்கள் வரை குரல் கொடுப்பது, தமிழ்நாட்டின் விடுதலைப்புலி ஆதரவாளர்கதான் என்பது அய்யாவுக்குத் தெரியுமா ?

இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் என்ன செய்ய முடியும். சிங்கள் கடற்படை மீனவர்களைக் கொல்வது குறித்து அய்யா மீன் திங்கும்போதாவது நினைப்பாரா ?

//வைகோ கட்சிகாரர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தார்களே அப்போ என்ன புடுங்கினார்கள்? // மத்திய அமைச்சர்களா எப்ப ?

இவரு ஏன் வாயையும் சூ........யும் மூடிக்கொண்டிருக்கிறார்? திறக்கட்டும் பார்ப்போம்.

மீண்டும் சொலகிறேன். இது மர்மயோகி என்ற முஸ்லிம் தினமலரை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள் மட்டுமே. அதனால்தான் நான் கனிகளிருக்க காய்களை கவர்ந்தேன்.



baleno said...

சகோ ஊர்சுற்றி, விஜய்யின் வலைப்பூவிற்கு சென்று படித்தேன்.அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் ஈழ கனவில் இருந்த பலர் அந்த கனவு 2009 வரை ஏற்படுத்தி தந்த கை இல்லா மனிதர்கள் ,கால் இல்லா மனிதர்கள்,கணவன்மார்களை பறி கொடுத்த மனைவிகள், பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளை பார்த்து உண்மை நிலைக்கு இப்போ திரும்பியதை போல் கொழும்பில் இருந்து விஜயும் தமிழ் ஈழ மாயையில் இருந்து விடுபட்டு இலங்கை அமைதி வாழ்க்கையை விரும்புவார் என்று நம்புகிறேன்.

UNMAIKAL said...

டெல்லியில் அக்கிரமம்...

ரயில் நிலையத்தில் பெண்ணை சீரழித்த போலீஸ்காரர்


டெல்லி: தலைநகர் டெல்லி பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாத நகரம் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறது.

அங்கு பெண்கள் மீதான பாலியல் அக்கிரமங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்த நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவரை போலீஸ்காரரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 வயதான இளம் பெண் ஒருவர் தனது சகோதரியுடன் விஷ்ணுகார்டன் என்ற இடத்தில் ரயில் ஏறுவதற்காக ரயில் நிலையம் வந்தார். நள்ளிரவு நேரத்தில் அவர்கள் வந்துள்ளனர். அப்போது ரயில் நிலையமே வெறிச்சோடிக் கிடந்தது.

இதனால் அங்குள்ள பயணிகளுக்கான வெயிட்டிங் ரூமில் இருவரும் தங்கினர்.

அப்போது குளியல் அறைக்கு இளம் பெண்ணின் சகோதரி சென்றுள்ளார்.
20 வயதுப் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அந்த சமயத்தில் அங்கு ரயில்வே சிறப்பு்ப போலீஸ்காரர் பிந்துசிங் என்பவர் அங்கு வந்துள்ளார்.

தனியாக இளம் பெண் இருப்பதைப் பார்த்த அவர், நைச்சியமாக பேசி 2வது மாடிக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.

அங்கு விஐபிக்கள் தங்கும் அறைக்குக் கூட்டிச் சென்றார்.

அங்கு அவரது நண்பரான பிரதாப் சிங் என்பவரும் இருந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைப் பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்தப் பெண் இருவரிடமும் சிக்கி பெரும் துயரத்துக்குள்ளானார்.

மறு நாள் காலையில் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார்.

சம்பவத்தன்று போலீஸ்காரர் பிந்து சிங் ரயில் நிலையத்தில் அப்பெண்ணிடம் பேசி அழைத்துச் சென்றது ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவிலும் பதிவாகியுள்ளதால் பிந்துசிங் கைது செய்யப்பட்டார். அவரது நண்பரும் கைதானார்.

http://tamil.oneindia.in/news/2012/09/06/tamilnadu-young-woman-raped-delhi-railway-station-160948.html

Unknown said...

//யூதர்கள் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை! :-(/

இருக்கக்கூடாதா சுவனப்பிரியன். ஏன் இந்த கொலைவெறி இஸ்லாமிய மதத்துக்கு மட்டும். சன்னி முஸ்லீம் ஷியா முஸ்லீம் மசூதில பாம் வைக்கனும்?

Unknown said...

யூதர்கள் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை! :-(
//

இஸ்லாமியர்களுக்கு தமிழர்கள் மேல் என்ன அக்கறை?

suvanappiriyan said...

//இஸ்லாமியர்களுக்கு தமிழர்கள் மேல் என்ன அக்கறை?//

மதத்தால் பிரிந்திருந்தாலும் இனத்தால் மொழியால் பிராமணர்கள் அல்லாத இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றானவர். எனவே அந்த பாசத்தினால் அவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றனர். ஆனால் நீங்கள் யூதர்களை ஆதரிக்க ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே? :-)

ஊர்சுற்றி said...

//விஜய்யின் வலைப்பூவிற்கு சென்று படித்தேன்.அதிர்ச்சியாக இருந்தது//

பரவாயில்லை பலெனோ. இது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கு. உண்மை நிலை தெரியாமல் சந்தர்ப்பத்துக்கு ஏற்ரவாறு பதிவிடுவோரை நம்பி உங்கள் பதிவையும் இடாதீர்கள்.
இந்த ‘கொழும்பில் இருந்து விஜய்’ மனம்மாறி இன்றுவரை ஒரு மறுபதிவு போட்டாரா? இல்லையே. தனது பதிவில் மக்கள் இன ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் என ஒரு பதிவைப் போட்டிருக்கலாமே. ஏன் சகோ சுவனப்பிரியன் எழுதும் வரை பொறுக்க வேண்டும். அதை ஏன் நீங்கள் ‘உண்மை’ என அடித்துச் சத்தியம் பண்ண வேண்டும்?
ச்கோ பலேனோ...கொழும்பு அல்ல ஒட்டு மொத்த ஸ்ரீலங்கா என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்துக்களும் முஸ்லிம்களும் ‘ஒற்றுமையாக’ வாழ்கிறார்கள் என பாம்பேயில் உள்ல சினிமாக்காரன் சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் உண்மை நிலை என நான் நினைக்கலாமா?
நல்லது இந்த ‘கொழும்பு விஜய்’ தனது வலைப்பூ புரோஃபில் படமாக ஒரு படம் போட்டிருக்கிறார் பார்த்தீர்களா?
இன அமைதி ஒற்றுமைக்கு துப்பாக்கியையும் தொழிலாளர் அமைப்பின் சின்னத்தில் நுழைத்த படம்!!!
போய் பாருங்க இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் பயம் வேண்டாம் வெறும் பம்மாத்துக்கு போட்ட படம் மட்டும்தான் அது.

Anonymous said...

//ஆனால் நீங்கள் யூதர்களை ஆதரிக்க ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே? :-)///

மதத்தாலும் இனத்தாலும் பிரிந்திருந்தாலும் மனித நேயத்தால் ஒன்றனவர் யூதர்களும் நாமும் எனவும் சொல்லாமல்லவா?
மேலும் இந்திய யூதர்களும் இருக்கிறார்கள் அல்லவா?