Followers

Thursday, September 27, 2012

முதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர் மு க அழகிரியும் யோசிப்பார்களா?

முதல்வர் ஜெயலலிதாவும் அமைச்சர் மு க அழகிரியும் யோசிப்பார்களா?

மத்திய அரசிடமிருந்து நமது தமிழகத்திற்கு உதவி கிடைப்பது ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன் குதிரைக் கொம்பாகி விட்டது. எப்போதுமே கௌரவத்தைப் பார்க்கும் ஜெயலலிதா இந்த முறையும் அதே ஈகோ பிரச்னையால் லட்சக்கணக்கான தமிழர்களுக்கான வேலை வாய்ப்பையும் தமிழத்தின் பொருளாதாரத்தை நிமிர்த்தக் கூடிய அற்புதமான திட்டமான 'பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கும் திட்டத்தை கை கழுவி விடுவாரோ என்று அச்சம் ஏற்படுகிறது.

தமிழகத்தில், கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 256 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், "பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கப்படும் என, நான்கு மாதங்களுக்கு முன், மத்திய அரசு அறிவித்தது.இந்த மண்டலத்தில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில், 1.5 கோடி டன் திறன் கொண்ட, சுத்திகரிப்பு நிலையம், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என்றும், இது தவிர, தனியார் நிறுவனங்கள் பல, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கான ஒப்புதலை, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவைக் குழு, ஜூலை, 3ம் தேதி அளித்தது.

அதனால், பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டல துவக்க விழா, விரைவில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான அறிகுறிகள் இல்லை. இந்தத் திட்டம் தொடர்பாக, முதல் கட்டமாக, தமிழக தொழிற்துறை மற்றும் ரசாயனத் துறையுடன், மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும். அதுவே, திட்டம் துவங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை. ஆனாலும், அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்களாகி விட்ட நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மத்தியில், இந்த திட்டத்தை அமல்படுத்தும் துறை, தி.மு.க., அமைச்சர் அழகிரியின் வசம் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், திட்டம் வழக்கம் போல, நழுவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த, பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம் அமைந்தால், தமிழகத்தின் கடலோர பகுதிகளைச் சேர்ந்த, ஏறத்தாழ, எட்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகம் மற்றும் தொலைத் தொடர்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; அதற்கான உதவிகளை, மத்திய அரசு செய்யும். மண்டலம் அமையும் பட்சத்தில், இந்த கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை, மத்திய அரசு செலவிட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதியில், நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது.

இதன் சார்பிலும், கடலூர் பகுதியில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 60 லட்சம் டன் திறன் கொண்ட, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்களில், பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம், ஏற்கனவே அமைக்கப்பட்டு, அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும், அறிவிக்கப்பட்டும், இந்தத் திட்டம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், மிகப்பெரிய துறைமுகங்களை அமைப்பது என, மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக, உரிய விவரங்களை அளிக்கும்படி, மாநில அரசுகளிடம், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கேட்டிருந்தது. நான்கு மாதங்களாகியும், இதற்கான முறையான பதில் எதுவும், தமிழக அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு வந்து சேரவில்லை.இது குறித்து கடிதம் எழுதி கேட்டும் கூட, உரிய பதில் தரப்படவில்லை என, கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஆந்திராவில், ஓங்கோல் என்ற இடத்தில், மிகப் பெரிய துறைமுகம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி விட்டன. அதனால், இந்த விஷயத்திலும், தமிழகம், தூங்கிக் கொண்டிருக்கிறது என்பது, மேலும் வேதனை தரும் தகவல்.

அம்மா ஜெயலலிதா திமுக மந்திரிகளை எப்படி உள்ளே தள்ளுவது என்பதில் தினமும் குறியாக இருக்கிறார். மு க அழகிரி சுரங்க ஊழலில் தனது மகன் போலீஸ் கையில் அகப்பட்டு விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறார். நம் தமிழக மக்களோ அடுத்த அஜீத் படம் எதுவாக இருக்கும்,. கமல ஹாஸனின் விஸ்வரூபம் வெற்றி பெறுமா என்ற ஆராய்ச்சியில் மூழ்கி உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவோ டாஸ்மாக் விற்பனையை இன்னும் அதிகமாக்குவது எப்படி என்று மாவட்ட ஆட்சியாளர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையில் ஒழுங்காக இருந்த அண்ணா வளைவை இடித்து விட்டு தற்போது முட்டு கொடுத்து நிற்க வைத்துள்ளார்கள். முட்டுக் கொடுத்து நிற்க வைக்கும் கிரேன்களுக்கு தினமும் வாடகையை லட்சக் கணக்கில் தமிழக அரசு கொடுத்து வருகிறது. கிரேனுக்கு சொந்தக்காரர் அதிமுக அனுதாபியாக இருக்கலாம்..

'துக்ளக் ராஜ்ஜியம்' என்பார்களே அது இதுதானோ?

28 comments:

UNMAIKAL said...

வீரப்பனை வீழ்த்திய கதை...

ஒரு உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!


Published: வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2012, 15:33 [IST]
Posted by: Mathi


கோயம்புத்தூர்: தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு சவால்விட்டு வந்த சந்தனக் காட்டு வீரப்பனை சதி செய்து போலீஸ் கொலை செய்த கதையை உளவாளியாக செயல்பட்ட ஒருவர் ஜீனியர் விகடன் இதழ் மூலமாக ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார்.

கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் இளநிலைப் பணியாளராக பணிபுரியும்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த

சையத் ஷானாவாஸ்

இது தொடர்பாக கூறியுள்ளதாவது:

நான் 10-ம் வகுப்பு முடித்த உடன் எங்கள் பகுதி போலீஸ் நண்பனாக இருந்தேன்.

உடுமலைப்பேட்டையில் பணிபுரிந்த போலீசார் வின்சென்ட், வீரப்பன் வேட்டைக்காக அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார்.

அவருடன் நான் தொடர்பில் இருந்தேன்.

கோவை சிறையில் இருத வீரப்பன் அண்ணன் மாதையனை சந்திக்க கனகராஜ் என்பவர் அடிக்கடி வந்து செல்வார்.

அவர் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்.

தீவிரவாதிகளாக உளவாளிகள்

அவர் கோவை சிறைக்கு வந்தபோது அவரிடம் ஒரு கடிதத்தை போலீஸ் கைப்பற்றியது.

அந்தக் கடிதத்தில் சிறையில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் மூலம் ஆயுதங்களைத் திரட்டுமாறு மாதையனுக்கு வீரப்பன் கோரியிருந்தார்.

இந்தக் கடிதம்தான் வீரப்பன் உயிருக்கே உலை வைத்தது.

இந்தக் கடிதம் அதிரடிப்படை எஸ்.பி.யாக இருந்த செந்தாமரைக் கண்ணனிடம் ஒப்படைக்கப்படது.

வீரப்பன் தெரிவித்திருந்த யோசனைப்படி 4 முஸ்லிம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டோம்.

நான், கன்னியாகுமரியைச் சேர்ந்த அனஸ்கான், உபயத்துல்லா, உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜியாவுல் ஹக் ஆகியோர் இந்த உளவு வேலைக்கு தேர்வானவர்கள்.

எங்களுக்கு 3 மாதங்கள் ஆயுத பயிற்சி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் வீரப்பனிடம் போய் தீவிரவாதிகளாக நடந்து கொண்டு தகவல்களை சேகரிக்க சொன்னார்கள்.

நான் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு காவல்துறை உயர் அதிகாரியிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன்.

உளவு வேலையை சரியாக செய்தால் ரூ50 லட்சம் தருவதாக சொன்னார்கள்.

பிணைக் கைதியாக வீரப்பன் உறவினர் மகன்

பின்னர் வீரப்பன் உறவினரான கனகராஜிடம் விவரத்தை சொல்லி வீரப்பனிடம் கொண்டு சேர்க்கக் கூறினார்.

ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இதனால் வீரப்பன் மகனை பிணையாக வைத்துக் கொண்டு எங்களை வீரப்பனிட சேர்க்காவிட்டால் கொன்றுவிடுவேன் என்ற் மிரட்டி ஒப்புக் கொள்ள வைத்தார்.

2003-ம் ஆண்டு கனகராஜ் மூலம் வீரப்பனிடம் சேர்ந்தோம்.

மொத்தம் 20 நாட்கள் வீரப்பனிடம் தீவிரவாதிகளாக நடித்தே உளவு பார்த்தோம்.

வீரப்பனின் பலவீனங்கள், திட்டங்களை போலீசிடம் சொன்னோம்.

நாங்கள் சொன்ன தகவலை வைத்துதான் சிலர் பொடா சட்டத்தில் சிக்கினர்.

இந்த ஆபரேஷனுக்குப் பெயர் ககூன் (பட்டுக்கூடு).

இந்த ஆப்பரேஷனை வைத்தே வீரப்பன் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2004-ம் ஆண்டு எங்களது பெயரை சொல்லாமல் ஜூனியர் விகடனுக்கு எஸ்.பி.யாக இருந்த செந்தாமரைக் கண்ணன் கூறியும் இருந்தார்.

ஆனால் எனக்கு சேர வேண்டிய தொகை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இது பற்றி காவல்துறை அதிகாரி செந்தாமரைக் கண்ணன் கூறுகையில்,

''நாங்கள் நால்வரையும் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால், 50 லட்சம் ரூபாய் தருகிறோம் என்று எப்போதும் வாக்குறுதி கொடுக்கவில்லை.

வேலை வாய்ப்புக்கு உறுதி கொடுத்திருந்தோம். அதை செய்து கொடுத்திருக்கிறோம்'' என்று சொல்லியிருக்கிறார் என்று ஜூனியர் விகடன் பதிவு செய்திருக்கிறது.

http://tamil.oneindia.in/news/2012/09/27/tamilnadu-informer-reveales-how-veerappan-shot-dead-162209.html

UNMAIKAL said...

இதுதான்டா ”மைனர் குஞ்சு”களின் இந்தியா….!

அன்று ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு நேரம். ஆந்திர போக்குவரத்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது தாறுமாறான வேகத்துடன் ஒரு டாடா சஃபாரி வண்டி வந்துக் கொண்டிருந்தது.

பார்க்கும் போதே யாரோ குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை உணர முடிந்தது.

சட்டப்படி இது தவறு.

அதுவும், நள்ளிரவில் போதையுடன் அதி வேகத்தில் பயணம் செய்வது பெரும் குற்றம்.

எனவே வண்டியை நிறுத்தச் சொல்லி கை காட்டினார்கள்.

ஆனால், போக்குவரத்து காவலர்களை பார்த்த வண்டி ஓட்டுநர், முன்பை விட அதிக வேகத்துடன் நிற்காமல் சென்று விட்டார்.

உடனே தங்கள் வாகனத்தில் ஏறி, அந்த டாடா சஃபாரியை காவலர்கள் துரத்தினார்கள். கிட்டத்தட்ட 10 கி.மீ. தூரம் சென்ற பிறகே அந்த வண்டியை மடக்க முடிந்தது.

பிடிபட்ட அந்த வண்டியின் எண்: AP 16 BK 1.

வண்டியினுள் ஐந்து பேர் இருந்தார்கள். ஐவருமே மாணவப் பருவத்தில் இருந்து இளைஞர்களாக மாறிக் கொண்டிருப்பவர்கள்.

மைனர்கள். ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருமே குடித்திருந்தார்கள்.

முழு போதையில் நிற்கக் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஐவரும் யார் யார் என விவரங்களை சேகரிக்க ஆரம்பித்த காவலர்கள், ஒரு கட்டத்தில் தடுமாறி விட்டார்கள்.

காரணம், ஐவரில் ஒருவர், மோக்ஷக்னா (Mokshagna).

மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பேரன்.

இந்நாள் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களில் ஒருவரும், நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகன்.

மிகப் பெரிய இடம். கை வைக்க முடியாது.

அது அரசியல் பிரச்னையாக உருவெடுத்து மாநில சட்ட ஒழுங்கை பாதிக்கும்.

மீடியாக்கள் அலறும்.

அரசியல் காரணங்களுக்காக பொய்க் குற்றம் சாட்டி தன் மகனை காவலர்கள் கைது செய்து விட்டதாக திருப்பதி பெருமாள் மீது பாலகிருஷ்ணா சத்தியம் செய்வார்.

நிலமையை கட்டுக்குள் கொண்டு வர உயர் அதிகாரிகளும் தங்களை சஸ்பெண்ட் செய்வார்கள்.

எதற்கு வம்பு?

எனவே அன்றைய இரவு பணியில் இருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டரான கே.பாலகிருஷ்ண ரெட்டி, மற்ற நான்கு பிள்ளைகளை மட்டுமே கைது செய்தார்.

முதல் தகவல் அறிக்கையில் மோக்ஷாக்னாவின் பெயர், சேர்க்கப்படவே இல்லை.

அத்துடன் முதல் வேளையாக பாலகிருஷ்ணாவின் உதவியாளரை தொடர்பு கொண்டு சுயநினைவின்றி இருந்த மோக்ஷாக்னாவை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால், தாறுமாறான வேகத்துடன் வண்டியை நள்ளிரவில் குடித்துவிட்டு ஓட்டியது மோக்ஷாக்னாதான்.

நாளை இந்த மைனர் குஞ்சு, தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பார்.

நாட்டை காக்க தன் உயிரைக் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தோன்றுவார்.

தன் பின்னால் பெரும் படையே இருப்பதாக தொடை தட்டுவார்.

அனல் பறக்கும் பன்ச் டயலாக்குகளை பேசி செவிகளை செவிடாக்குவார்.

தெலுங்கு தேச கட்சியே தன்னுடையதுதான் என புருவத்தை உயர்த்துவார்.

முதலமைச்சர் கனவில் மாநிலம் முழுக்க சுற்றுலா செல்வார்.

ஒருவேளை முதலமைச்சர் ஆனாலும் ஆவார்.

இதுதான் யதார்த்தம்.


ஆந்திர மாநிலத்தில் நடந்த இந்த ஒரு சம்பவம்தான் ஒட்டுமொத்த பணக்கார இந்தியாவின் இன்றைய நிலைக்கான ஒரு சோறு பதம்.

மேட்டுக்குடி மைனர் குஞ்சுகள் குடித்துவிட்டு தாறுமாறாக நள்ளிரவில் வண்டி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து எந்த செய்தித்தாளும் பதிவு செய்வதில்லை.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் நடக்கும் உயிரிழப்புகளை பட்டியலிட்டால், பெரும் எண்ணிக்கை வரும்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் அப்பகுதி மீனவர்களும், உழைக்கும் மக்களும் தங்கள் உயிரை கையில் பிடித்தபடிதான் இரவில் உறங்காமல் உறங்குகிறார்கள்.

நகரங்கள் மட்டுமல்ல, நகரச் சாலைகளும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கின்றன.

உழைத்து களைத்து வருபவர்களை மடக்கி,

‘லைசன்ஸ் இருக்கா… வண்டி யாரோடது… இன்னொருத்தன் வண்டியை நீ எப்படி ஓட்டலாம்? திருடினியா..?’

என்றெல்லாம் மீசையை முறுக்கி கர்ஜித்தபடி மாத இறுதியில் நூறு ரூபாயை எதிர்பார்க்கும் காவலர்கள், ஒரு போதும் சீமான்களை மடக்குவதில்லை.

முடிந்தால் செல்வந்தர் வீட்டு பொமேரியன் நாய்குட்டிக்கு சலாம் அடிக்கவே காத்திருக்கிறார்கள்.

டெல்லி பாரில் ஜெசிகா லால் எனும் பரிமாறும் பெண்ணை கொன்ற மனுசர்மா முதல், மும்பை, டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை குடித்து விட்டு வேகமாக ஓட்டி பல ஏழைகளைக் கொன்ற சம்பவங்கள் ஏராளமிருக்கின்றன.

புத்தாண்டு சமயம் இவர்களது குடியும், வன்முறையும் போதைக்கு போட்டியாக நடக்கும்.

மேட்டுக்குடி நட்சத்திர விடுதிகளின் நடன அறை துவங்கி பண்ணை வீடு விருந்து வரை இவர்களின் மர்ம உலகம் உருவாக்கும் வன்முறைகள் அதிகம்.

ஆனாலும் கொலையே நடந்தாலும் இத்தகைய மேன்மக்களை போலீசும், நீதி அமைப்புக்களும் ஒன்றும் செய்து விடாது.

இதுதாண்டா இன்றைய இந்தியா!!!


SOURCE: http://www.vinavu.com/2012/09/27/minor-kunjugal/

THANKS TO VINAVU.COM

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!இது போன்றே நடப்பியல் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

அடிக்கல் நாட்டி விட்டு ஆட்டையப் போட்ட எத்தனை அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறோம்.ஆனாலும் காலம் தாழ்த்தியாவது திட்டத்தின் பலன் மக்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

ஜெயலலிதாவும்,அழகிரியும் தமிழகத்தின் நிரந்தர பிரதிநிதிகள் அல்ல.

மாற்றங்கள் உருவாகட்டும்.தமிழகம் பயன் பெறட்டும்.

UNMAIKAL said...

இஸ்ரோவுக்குள் நுழைந்த பெண்ணுக்கு 7 ஆண்டுகளாக 'கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர்' மனநலப் பிரச்சனை!

Updated: வியாழக்கிழமை, செப்டம்பர் 27, 2012, 12:56 [IST]

பெங்களூர்: பெங்களூரில் உள்ள இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) தலைமையகத்திற்குள் போலி ஐடி கார்டை காட்டி நுழைந்த பெண் கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர் என்னும் மனநலப் பிரச்சனைக்காக கடந்த 7 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலமையகத்திற்குள் பெண் ஒருவர் போலி ஐடி கார்டை காட்டி நுழைய உதவியவர் அங்கு வேலை பார்க்கும் ஒரு என்ஜினியர் தான் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஜூலாவின் செல்போனை சோதனை செய்ததில் அதில் இஸ்ரோவில் பணிபுரியும் என்ஜினியர் ஒருவரின் எண் இருந்தது.

ஜூலாவும், அந்த என்ஜினியரும் இஸ்ரோ வளாகத்தில் ஒன்றாக நடந்து சென்றதை பாதுகாவலர்கள் உள்பட சில ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்குள் போலி ஐடி கார்டை காட்டி நுழைந்து அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய பெண் ஜூலா கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்குள் போலி ஐடி கார்டை காட்டி நுழைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதான அகமதாபாத் பெண் பியூலாவுக்கு கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர் என்னும் மனநலப் பிரச்சனை உள்ளது.

இந்நிலையில் பியூலா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இஸ்ரோவுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.

பியூலா கேரள மாநிலத்தில் உள்ள புணலூரில் இருக்கும் ஜனா போட்டோ ஸ்டுடியோவில் போட்டோ எடுத்துள்ளார்.

அங்கிருந்து தான் அவர் போலி ஐடி கார்டு தயாரித்துள்ளார்.

அவரது குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரது கணவர் அலெக்ஸ் தாமஸ் அகமதாபாத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ளார். அங்கும் சென்று போலீசார் விசாரித்தனர்.

பியூலா படிக்கும் காலத்தில் விண்வெளி ஆய்வு விஞ்ஞானியாக வேண்டும் என்று விரும்பியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்..

தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பியூலா கடந்த 11ம் தேதி புணலூர் சென்றுள்ளார்.

அவர் பேருந்து மூலம் மும்பை வழியாக அகமதாபாத் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கடந்த 18ம் தேதி கிளம்பியுள்ளார்.

ஆனால் அவர் அகமாதாபாத் செல்லாமல் பெங்களூர் வந்து இஸ்ரோ விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.

இதற்கிடையே பியூலாவிடம் நடத்திய விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்று கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2012/09/27/india-isro-security-breach-ahmedabad-women-162186.html
http://tamil.oneindia.in/news/2012/09/26/india-isro-engineer-under-scanner-security-162152.html

ஐயோ, ஐயைய்யோ வடை போச்சே.


இதுவே ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து உண்மையிலே கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர் நோயாளியாக இருந்தாலும்

அப்பெண்மணியின் வீட்டை சின்னாபின்னப்படுத்தி ,

தலைகீழாக கவிழ்த்து கொட்டி,

சாதாரணமாக எந்த ஒரு வீட்டிலும் உபயோகத்தில் இருக்கக்கூடிய நாலைந்து பேட்டரிகள், ஸ்குரூடிரைவர், சுத்தியல் ,சில ஒயர்துண்டுகளுடன் சேர்த்து புகைப்படம் எடுக்கப்பட்டு

சிறையில் அடைக்கப்பட்டு

அப்பெண்மணியின் பெற்றோர்கள் உற்றார்கள்

மற்றும் முஸ்லீம் சுற்றங்கள்

அனைவரும்
சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு

தொடர்ந்த டி.வியில் ஃபிளேஷ் நியூஸ் ,

அனைத்து பத்திகைகளிலும் தலைப்பு செய்தி.....

வரவிருக்கும் திரைப்படங்களுக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் கிடைத்து.....

என்ன நடந்திருக்கும் என்பதை விளக்கவும் வேண்டுமோ?

ஐயோ, ஐயைய்யோ வடை போச்சே.

ராஜ நடராஜன் said...

@UNMAIKAL! உள்ளதிலேயே மிகவும் எளிதான நீண்ட பின்னூட்டம் இந்த காபி பேஸ்ட் வேலைதான்:)

தொடரட்டும் அனைவரும் எலி தாண்டும் உங்கள் பணி:)

shueib said...

மதம் வேண்டுமானால்.... இஸ்லாத்தை தழுவுங்கள்...

எனக்கு இந்தச் சர்க்காரைப் பற்றிக் கவலை இல்லை. வேறு எந்த சர்க்கார் வந்தாலும் கவலையில்லை. காந்தியார் சொல்வது போல் ராமராஜ்யம் வந்து ஒரு ஜதை செருப்பு (செருப்பின் பேரால்) 14 வருஷம் மாத்திரமல்ல, 50 வருஷம் ஆண்டாலும் கவலையில்லை. ஆனால், உங்களைப் போல் இழிவும் கொடுமையும் படுத்தப்பட்ட மக்கள் இந்த பித்தலாட்ட அரசியலில் தலையிட்டு நசுங்கிப் போகக் கூடாது என்றுதான் மறுபடியும் சொல்லுகிறேன்.

உங்கள் சமூக வாழ்வில் சமத்துவம் வேண்டுமானால் நீங்கள் இந்தக் கணமே இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் பறையர், சண்டாளர் ஆகித் தீண்டப்படாதவர்கள் என்று ஆனதற்கு இந்து மதம் தான் காரணம். இந்து மதம் என்றால் பறையன், சூத்திரன், பிராமணன் இருக்க வேண்டும் என்பது தான் கருத்து இந்த பிரிவுகளை நிலைநிறுத்துவதுதான் இந்த மதத்தின் கொள்கையும் வேலைத் திட்டமும் ஆகும்.

உங்களைப் பொருத்த வரையில் அம்மதத்தில் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் இதை உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு மதம் வேண்டும் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு இஸ்லாம் மதத்தைச் சிபாரிசு செய்கிறேன். பெளத்தர்களையும் பிற பெளத்தர்கள் என்றும் பெளத்த பறையர்கள் என்றும் மற்றவர்கள் சொல்லுகிறார்கள். பல பெளத்தர்கள் ஆதிதிராவிடர்களாகத் தான் இன்றும் கருதப்படுகிறார்க்ள்.

கிறிஸ்தவர்களிலும் பறை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பாதிரிகளே அப்படி கருதுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஆள் எண்ணிக்கை தான் கவலையே தான் தவிர, சுயமரியாதையில் கவலை கிடையாது.

கிறிஸ்தவத்தில் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் சுயமரியாதை வேண்டுமானால் அதை விட்டு இஸ்லாமியர்களாகுங்கள் என்று தான் சொல்லி வருகிறேன். மற்றபடி "மோட்சத்தில்", "பாவமன்னிப்பிலோ" எந்த மதம் எப்படி இருந்தாலும் மனிதத் தன்மையில் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மதந்தான் பறைத் தன்மையை ஒழிக்கிறது. பறை துலுக்கன், பறை முகம்மதியர் கிடையாது. பார்ப்பன முஸ்லிம் கிடையாது. மனித முஸ்லிம் தான் உண்டு.

நீங்கள் அதில் விழுந்தாலொழிய 100 வருஷமானாலும் உங்கள் பறை தன்மை போகாது.

தோழர்களே! !இவை என் அபிப்ராயம். இவற்றைக் கேட்ட நீங்கள் உங்கள் புத்தி கொண்டு சிந்தித்து உங்களுக்கு சரியென்றபடி நடங்கள்.

(ஆம்பூரில் 4.7.1937 அன்று நடைப்பெற்ற ஆதிதிராவிடர்கள் மகாநாட்டில் தந்தை பெரியார் சொற்பொழிவு. - 'குடியரசு' இதழ் 16.7.1937)

suvanappiriyan said...

@உண்மைகள்!

//வரவிருக்கும் திரைப்படங்களுக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் கிடைத்து.....

என்ன நடந்திருக்கும் என்பதை விளக்கவும் வேண்டுமோ?

ஐயோ, ஐயைய்யோ வடை போச்சே.//

ஹா...ஹா...நாட்டு நடப்பை மிக அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த நிலையை மாற்ற சமூகத்தில் படிப்பறிவை கொண்டு வர வேண்டும்.

suvanappiriyan said...

@ராஜ நடராஜன்!

//ஜெயலலிதாவும்,அழகிரியும் தமிழகத்தின் நிரந்தர பிரதிநிதிகள் அல்ல.

மாற்றங்கள் உருவாகட்டும்.தமிழகம் பயன் பெறட்டும்.//

//சகோ.சுவனப்பிரியன்!இது போன்றே நடப்பியல் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

Don’t give terror tag to innocent minority people: Supreme Court -

Ensure that no innocent has the feeling of sufferance only because ‘my name is Khan, but I am not a terrorist,’ Bench tells Police

No innocent person should be branded a terrorist and put behind bars simply because he belongs to a minority community, the Supreme Court has told the Gujarat Police.

Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday.


It ordered the acquittal of 11 persons, arrested under the Terrorist and Disruptive Activities (Prevention) Act and other laws, and convicted for allegedly planning to create communal violence during the Jagannath Puri Yatra in Ahmedabad in 1994.

“We emphasise and deem it necessary to repeat that the gravity of the evil to the community from terrorism can never furnish an adequate reason for invading personal liberty, except in accordance with the procedure established by the Constitution and the law,” the Bench said.

Being an anti-terrorist law, the TADA’s provisions could not be liberally construed, the Bench said.

“The District Superintendent of Police and the Inspector-General and all others entrusted with operating the law must not do anything which allows its misuse and abuse

and [must] ensure that no innocent person has the feeling of sufferance only because ‘My name is Khan, but I am not a terrorist’.”


Writing the judgment, Justice Prasad said:

“We appreciate the anxiety of the police officers entrusted with preventing terrorism and the difficulty faced by them.

Terrorism is a crime far serious in nature, graver in impact and highly dangerous in consequence.

It can put the nation in shock, create fear and panic and disrupt communal peace and harmony.

This task becomes more difficult when it is done by organised groups with outside support.”

‘Means more important’

But in the country of the Mahatma,

the “means are more important than the end.

Invoking the TADA without following the safeguards, resulting in acquittal, gives an opportunity to many and also to the enemies of the country to propagate that it has been misused and abused.”

In this case, Ashraf Khan and 10 others, who were convicted under the TADA, the Arms Act and the IPC were aggrieved that no prior approval of the SP, as mandated under the provisions, was obtained before their arrest and recording of statements.

Appeal allowed

Allowing their appeals against a Gujarat TADA court order,

the Bench said: “From a plain reading of the provision, it is evident that no information about the commission of an offence shall be recorded by the police without the prior approval of the District Superintendent of Police.

An Act which is harsh, containing stringent provisions and prescribing a procedure substantially departing from the prevalent ordinary procedural law, cannot be construed liberally.

For ensuring rule of law its strict adherence has to be ensured.”

The Bench said: “In view of our finding that their conviction is vitiated on account of non-compliance with the mandatory requirement of prior approval under Section 20-A(1) of the TADA, the confessions recorded cannot be looked into to establish the guilt under the aforesaid Acts.

Hence, the conviction of the accused under Sections 7 and 25(1A) of the Arms Act and 4, 5 and 6 of the Explosive Substances Act cannot also be allowed to stand.”

http://www.thehindu.com/news/national/dont-give-terror-tag-to-innocent-minority-people-supreme-court/article3939481.ece?homepage=true

=======================
இந்திய தேசத்தின் மீதான அன்பை வலுக்க செய்வதாக இந்த தீர்ப்பு இருக்கின்றது.

இருப்பினும் ஒரு மனமொடிந்த கேள்வி மனதுக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை...

"கடந்த 18 ஆண்டுகளாக, பொய் குற்றசாட்டுக்காக தங்கள் வாழ்வை சிறையில் கழித்த இந்த அப்பாவிகள் இழந்தவற்றை எப்படி திரும்ப கொடுப்பது"

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Anonymous said...

நபிகள் நாயக்ததை கொச்சைபடுத்தி Nakoula Basseley Nakoula என்பவனால் தாயரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்பவர் சமீபத்தில் லாஸ் ஏன்ஜல்ஸ் நீதின்றத்தில் படத் தயாரிப்பாளன் Nakoula Basseley Nakoula என்பவன் மற்றும் அதை வெளியிட்டுள்ள Youtube க்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி நடிகையின் கோரிக்கை ஏற்க மருத்து வழக்கை நிராகரித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய Lee Garcia மற்றும் அவரது வழக்கறிஞர், லாஸ் ஏன்ஜல்ஸ் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை இன்று நாங்கள் டிஸ்மிஸ் செய்யப் போகின்றோம் அதே கையோடு படத் தயாரிப்பாளன் Nakoula Basseley Nakoula என்பவன் மற்றும் Google , Youtube க்கு எதிராக ஃபெடரல் கோர்ட்டில் இன்று Copy Right புகார் அளித்து வழக்கு தொடரப் போகின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் எனது குறளுக்கு எனக்கு தெரியாமல் வேறு டயலாக்கை டப் செய்துள்ளார் எனவும் நடிகை Lee Garcia குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேட்டியின் போது நடிகை Lee Garcia என்பவரின் வழக்கறிஞர் கூறுகையில்,

Google மற்றும் அதன் நிறுவனம் Youtube மிகப்பெறும தவறு செய்து கொண்டிப்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. ”வெறுக்கத் தக்க பேச்சுக்கு (hate speech) அனுமதி இல்லை” என அவர்களே அவர்களது நிபந்தனைகளில் குறிப்பிடுள்ளனர். இதை (வீடியோ) எப்படி வெருக்க தக்க பேச்சு இல்லை எனக் கூற முடியும்? சட்டப்படியோ, அறிவு ரீதியாகவோ அல்லது ஒழுக்கம் சார்ந்தோ இதை எப்படி தவறு இல்லை என்று கூறுவது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் சென்ற வாரம் Youtube ன் விதிமுறைகள் குறித்து வெளியிட்ட ( அமெரிக்க திரைப்பட வீடியோ: பொய்க் காரணத்தை கூறும் Google) விசயத்தை நடிகையின் வழக்கறிஞர் தற்போது கையில் எடுத்துள்ளார்.

இந்த முறை வசமாக மாட்டியுள்ள Google ஐயும் படத் தயாரிப்பாளைனயும் அமெரிக்க நீதி மன்றம் எப்படி காப்பாற்ற பொகின்றதோ தெரியில்லை.

கஜினி முஹம்மது போன்று அந்த நடிகையும் தோல்வி அடைந்த போதிலும் துவன்று விடாமல் தொடர்ந்து கோர்ட்டுக் மேல் கோர்ட் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் உலகமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்த விசயத்தை அமெரிக்க நீதிமன்றங்கள் அசால்ட்டா தட்டிக்கழிக்கின்றன…

Unknown said...

////உங்கள் சமூக வாழ்வில் சமத்துவம் வேண்டுமானால் நீங்கள் இந்தக் கணமே இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் பறையர், சண்டாளர் ஆகித் தீண்டப்படாதவர்கள் என்று ஆனதற்கு இந்து மதம் தான் காரணம். இந்து மதம் என்றால் பறையன், சூத்திரன், பிராமணன் இருக்க வேண்டும் என்பது தான் கருத்து இந்த பிரிவுகளை நிலைநிறுத்துவதுதான் இந்த மதத்தின் கொள்கையும் வேலைத் திட்டமும் ஆகும்.////

சன்னி, சியா சூபி ,வஹாபி ,காபிர் ....இதெல்லாம் என்னப்பா? பிரிவினையை பற்றி யார் பேசுகிறது என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு!

Anonymous said...



///'துக்ளக் ராஜ்ஜியம்' என்பார்களே அது இதுதானோ?////

துக்ளக் ஒரு முஸ்லிம்தானே.....
முஸ்லிம்களின் ராஜ்ஜியம் எப்படி இருக்கும்?

Anonymous said...

சகோ "உண்மைகள்" அருமையான தகவல்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள்.இப்பணி மேலும் சிறக்க இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
kalam.

suvanappiriyan said...

பெயரிலி!

//இந்துத்துவாவினையும் எதிர்க்கின்றோமென்ற வேளையிலே கண்மூடித்தனமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குப் பச்சைவிளக்கினைக் காட்டுகின்றதினை வெளிப்படையாகவே சிறுபான்மையினருக்காகப் பேசுதல் என்பதற்குச் சமானமென்பதாகத் தூக்கி நிறுத்துகின்ற எதிர்_வலதுசாரித்தனத்தினை செய்யும்போது, கீற்று போன்றவை, பச்சைவிளக்கினைக் காட்டாதபோதுங்கூட, சிவப்புவிளக்கினை வேண்டுமென்றே கட்டி அணைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.//

என்னைப் பொறுத்தவரை தீவிரவாதம் எந்த மதத்திலிருந்து வந்தாலும் அதனை ஊடகங்கள் மத வித்தியாசமின்றி எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடே!

//சுட்டிக்காட்டப்படவேண்டிய இன்னோர் அவதானிப்பு; பேசமறுக்கும் கள்ளமௌனம்கொள்ளும் முஸ்லீம்மிதவாதிகள்;//

எதை பேச வேண்டும் என்கிறீர்கள்? தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். கடந்த 20 வருடங்களில் இஸ்லாமிய தீவரவாதம் என்பது குறைந்து கொண்டுதான் வந்திருக்கிறது. கோயம்பத்தூரில் காவலர் செல்வராஜைக் கொன்றது ஒன்றுதான் இஸ்லாமியர் செய்த தவறு. அந்த கொலையை செய்தவர்களை பிடித்து கொடுத்ததும் முஸ்லிம்களே! அதன் பிறகு நடந்த போலீஸ் அராஜகத்தில் 19 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக கோவை குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பயன் படுத்தி பல அப்பாவிகள் கைது செய்யப்பட்டு தற்போது குற்றவாளிகள் இல்லை என்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதைத் தவிர இது வரை முஸ்லிம்கள் மேல் போடப்பட்ட அத்தனை கேஸ்களும் போலீசாரால் ஜோடிக்கப்பட்டவையே! பல முறை இந்துத்வ வாதிகள் இஸ்லாமியர் பெயரில் குண்டுகளை வைத்து மாட்டிக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

இஸ்லாமியர்களின் கைதே போலித்தனமாக இருக்கும் போது அவர்கள் யாருக்கு எதிராக குரல் கொடுக்க முடியும்.

தமிழகம் பரவாயில்லை. வட நாடுகளில் நடக்கும் அத்தனை குண்டு வெடிப்புகளின் பின்னணியிலும் இந்துத்வா வாதிகள் இருந்தது பின்னால் கண்டு பிடிக்கப்பட்டதா இல்லையா?

மும்பை தாஜ் துப்பாக்கி சூட்டில் 10 பேருக்கு மேல் அடங்கிய கும்பல் மும்பைக்கு எவ்வாறு வர முடிந்தது? அவர்கள் குஜராத் வழியாக வர வழி அமைத்துக் கொடுத்தது யார்? கசாபுக்கு இந்தியாவின் மேல் என்ன கோபம்? ஹேமந்த் கர்கரேயை சுட வேண்டிய அவசியம் பாகிஸ்தானிகளுக்கு எப்படி வந்தது? கர்கரேயின் கவச உடை மறைந்த மாயம் ஏன்? மோடி கொடுத்த பண முடிப்பை கர்கரேயின் மனைவி ஏன் வாங்க மறுத்தார்?

இதை எல்லாம் பாரபட்ச மற்ற முறையில் விசாரித்தால் உலா வந்து கொண்டிருக்கும் பல இந்துத்வா முக்கியஸ்தர்கள் கம்பி எண்ண வேண்டி வரும்.

நான் எனது நாட்டை நேசிக்கிறேன். எனது நாட்டின் மீது ஒருவன் தாக்குதல் தொடுத்தால் இயல்பாகவே தாக்குதல் தொடுப்பவன் மீது ஒரு வெறுப்பு எனக்கு வரும். இது மதம் கடந்து அனைவருக்கும் பொதுவே....

suvanappiriyan said...

பெயரிலி!

//உதாரணத்துக்கு, கவிஞர் ரசூலின் பெண்நபி கவிதைக்குப் பின்னான, மயிலாஞ்சிக்குப் பின்னான சமூகவிலக்கநிலை.... மிதவாதியாகப் பேசவந்திருக்கும் உங்கள் நிலப்பாடு என்ன?//

ஒரு இஸ்லாமியனாக இருந்து கொண்டு குர்ஆனின் கட்டளைகளை மறுப்பதோ திருத்த முயற்ச்சிப்பதோ இஸ்லாமிய சமூகம் ஒத்துக் கொள்ளாது. ஏனெனில் குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை எந்த முஸ்லிமும் மறுக்க மாட்டார். அப்படி சந்தேகம் வந்தால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி நாத்திகராகவோ வேறு பிடித்த கொள்கைக்கு சென்று விட வேண்டியதுதான். உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு குழப்பம் விளைவிக்க அனுமதியில்லை.

சீர்திருத்தம் செய்ய முயற்ச்சிக்கலாம். டிஎன்டிஜே என்ற அமைப்பின் மூலம் இன்று தர்ஹா வணக்கம், வரதட்சணை கொடுமை, புரோகித கொடுமை, பெண் கல்வி மறுக்கப்படுதல் போன்றவற்றிற்கு எதிராக கடந்த 20 வருடமாக போராடி 70 சதமான தமிழ் முஸ்லிம்களை குர்ஆனை பின் பற்றக் கூடிய சமூகமாக மாற்றியிருக்கிறோம். ஆனால் அனைத்து சீர்திருத்தத்துக்கும் அடிப்படையாக குர்ஆன் இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக ரசூல் சிந்தித்ததால் ஊர் விலக்கம் செய்திருக்கலாம்.

முழு விபரமும் எனக்கு சரியாக தெரியாது. சமூக பகிஷ்காரம் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். 20ம் நூற்றாண்டில் இதெல்லாம் சாத்தியப்படாது. புரோகிதத்தை நான் எதிர்த்ததால் என்னையே ஊர் விலக்கம் செய்வதாக 20 வருடம் முன்பு கிராமத்தாரால் மிரட்டப்பட்டேன். முதன் முதலாக பி.ஜெய்னுல்லாபுதீனை வரதட்சணை கொடுமை பற்றி பேச அழைத்து வந்ததற்காக ஊர் மக்களால் நிந்திக்கவும் பட்டேன். இன்று 80 சதமான மக்கள் நாங்கள் சொன்னதை ஒத்துக் கொண்டு அனைத்து சீர்திருத்தங்களையும் ஊருக்குள் கொண்டு வந்துள்ளனர். இன்று வீட்டுக்கு ஒரு பெண் கல்லூரிக்கு செல்கிறார். பெண்கள் மசூதிக்கு தொழுகைக்கு வருகின்றனர். புரோகிதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. சிறு இளைஞர்கள் முதற் கொண்டு இன்று குர்ஆனை ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த தவ்ஹீத் பிரசாரம் அதிகரித்ததால் மாற்று மத நண்பர்களோடு ஒரு அன்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பல சந்தேகங்கள் இந்து சகோதரர்களுக்கு தீர்த்து வைக்கப்படுகிறது. இங்கு சவுதியிலும் அதன் கிளை மூலமாக சாதி மத வித்தியாசம் பார்க்காமல் பல உதவிகளை தமிழக மக்கள் பெற்று வருகின்றனர்..

எனவே சீர்திருத்தம் என்பது குர்ஆனின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

இந்த நிலை மாறாமல் இருந்திருந்தால் நானும் நாத்திகவாதியாக மாறியிருப்பேன். அந்த அளவு இஸ்லாத்தின் பெயரால் மூடப்பழக்கத்தை தமிழக முஸ்லிம்கள் கை கொண்டிருந்தனர். இந்த குர்ஆனால் நான் பெற்ற சிரமங்களை விட நன்மைகளே அதிகம். இது வாழ்வை மேம்படுத்தியிருக்கிறது. மன நிம்மதியை தருகிறது. அனைத்து கேள்விகளும் அழகான விடையை தருகிறது. இப்படி தெளிந்த நீரோடையாக உள்ள இந்த இறை வேதத்தை நான் ஏன் புறம் தள்ள வேண்டும்?

suvanappiriyan said...

பெயரிலி!

//ஆனால், சிரியாவிலே மாற்று மாற்று முஸ்லீம் அரசியலினாலே கொல்லப்பட்ட வன்முறையினைக் கண்டிக்காமல், அமெரிக்க ஆதரவுச்சக்திதான் பிரஸ்ரிவி ஊடகவியலாளரைக் கொன்றது என்ற அடிப்படையிலே இங்கு கோட்டை நீட்டிப் அமெரிக்கப்புள்ளியைத் தொடும் முஸ்லீம் மிதவாதிகளும் |//

சிரிய அதிபர் ஆசாத் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ சார்புடையவர். இஸ்லாமிய ஷரிய சட்டங்களை முடிந்தவரை எதிர்ப்பவர். இன்று வெளி யாட்கள் யாரின் தூண்டுதலும் இல்லாமலேயே ஆசாத்துக்கு எதிராக அந்த மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி அமெரிக்காவும் தனது நிலைப்பாட்டை ஸ்திரமாக்க முயற்ச்சிக்கிறது. 80 சதமான மக்கள் ஆசாத்தின் ஆட்சியை விரும்பாத போது ஐநாவின் பொறுப்பில் ஆட்சியை கொடுத்து விட்டு தேர்தலுக்கு உத்தர விட வேண்டியதுதான் ஆசாத் செய்திருக்க வேண்டியது. அதற்கு உடன்படாததாலேயே அநியாயமாக உயிர்கள் பலியாகின்றன. தங்கள் பங்குக்கு ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவும் அதற்கு தூபம் இடுகின்றன. இதில் உலக மித வாத முஸ்லிம்கள் என்ன செய்ய முடியும். ஐநா மூலம் பிரஸ்ஸர் கொடுக்க முடியும். அதை அனைத்து நாடுகளும் செய்தே வருகின்றன.

//முஸ்லீம்நாடுகளிலே முஸ்லீம்களை முஸ்லீம்களே கொல்லுதல், குடும்பகௌரவத்தினைக் காக்கச் சொந்த மக்களையே படுகொலை செய்தல், மதம்சார்ந்த சுயவிமர்சனமின்மை இவற்றினை காணாததுபோலவேயிருக்கின்றவர்கள்|//

இது ஆப்கானிஸ்தானத்திலும் பாகிஸ்தானிலும் பரவலாக நடக்கிறது. போன பெருநாள் அன்று முல்லா உமர் விடுத்த அறிக்கையில் 'எங்கள் பெயரை பயன்படுத்தி அமெரிக்கர்களே பல கொலைகளை செய்கின்றனர். உலக மக்கள் நம்ப வேண்டாம்' என்று கொடுத்த செய்தியை எத்தனை ஊடகங்கள் வெளியிட்டன? இதை பதிவாகவே நான் வெளியிட்டேன்.

இநத இரண்டு நாடுகளிலும் பட்டாண்கள் அதிகம் உள்ள மலை பிரதேசங்களில் எவரது ஆட்சியும் அதிகாரமும் செல்லாது. மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சிவரை இதுதான் நிலைமை. இன்றும் இதுதான் நிலைமை. எனவே ஒழுங்கான மார்க்க அறிவற்ற படிப்பறிவற்ற ஒரு சமூகம் குர்ஆனை தவறாக விளங்கி ஏதும் தண்டனைகளை நிறைவேற்றினால் அதற்கு இஸ்லாமோ குர்ஆனோ முஸ்லிம்களோ முகமது நபியோ எவ்வாறு பொறுப்பாக முடியும்?

ஷரியாவை ஓரளவு சரியாக பயன்படுத்தும் சவுதி அரேபியா பல மதத்தவர்களையும் அனுசரித்து உலக முன்னேற்றத்தோடு ஒத்து போகவில்லையா? இதே நிலை இன்னும் 10 ஆண்டுகள் தொடர்ந்தால் ஐரோப்பிய சமூகம் போல கல்வியில் சிறந்த மக்களாக சவுதிகள் மாற்றப்படுவர்.

suvanappiriyan said...

ஸ்மிதா!

//In every day terms, the imam for Sunni Muslims is the one who leads Islamic formal (Fard) prayers, even in locations besides the mosque, whenever prayers are done in a group of two or more with one person leading (imam) and the others follow by copying his ritual actions of worship.
Friday sermon is most often given by an appointed imam. All mosques have an imam to lead the (congregational) prayers, even though it may sometimes just be a member from the gathered congregation rather than officially appointed salaried person. //

இது பின்னால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு முறை. முகமது நபி காலத்தில் தொழுகை வைத்த நபருக்கு சம்பளம் கிடையாது. முகமது நபியோ அதற்கு பின் வந்த அபுபக்கர், உமர், உதுமான், அலி யாருமே சம்பளம் பெறவிலலை. அவர்களுக்கு விவசாயம், ஆட்டுப் பண்ணை, ஒட்டகப் பண்ணை என்று வருமானத்துக்கு வேறு வழிகள் இருந்தது.

ஆனால் பள்ளியை கூட்டி சுத்தமாக வைத்திருக்கும் நபருக்கு மாத சம்பளம் உண்டு. அவரை மோதின் என்பர். ஐந்து நேரமும் நேரத்துக்கு பாங்கு சொல்லி பள்ளியை சுத்தமாக வைத்திருப்பது இவரது பொருப்பு.

தற்போது தமிழகத்தில் அந்த மார்க்க அறிஞர் குழந்தைகளுக்கு காலையில் அரபி பாடம் படித்துக் கொடுப்பதற்காகத்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அவர் தொழ வைப்பதற்காக அல்ல. சிலர் இதனை தவறாக புரிந்து வைத்துள்ளார்கள்.

Anonymous said...

சகோ. சுவனபிரியன் அவர்களுக்கு

குர்ஆனால் நான் பெற்ற சிரமங்களை விட நன்மைகளே அதிகம். இது வாழ்வை மேம்படுத்தியிருக்கிறது. மன நிம்மதியை தருகிறது. அனைத்து கேள்விகளும் அழகான விடையை தருகிறது. இப்படி தெளிந்த நீரோடையாக உள்ள இந்த இறை வேதத்தை நான் ஏன் புறம் தள்ள வேண்டும்?

அல்ஹம்துலில்லாஹ் ..... இதை விட என்ன வேண்டும் தொடருங்கள் உங்கள் பணி சிறக்க இறைவனிடம் து ஆ செய்கிறேன்

K.S.M.ஹாஜி முஹமது

suvanappiriyan said...

சகோ கே எஸ் எம் ஹாஜி முஹம்மது!

//அல்ஹம்துலில்லாஹ் ..... இதை விட என்ன வேண்டும் தொடருங்கள் உங்கள் பணி சிறக்க இறைவனிடம் து ஆ செய்கிறேன்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

// துக்ளக் ராஜ்ஜியம்' என்பார்களே அது இதுதானோ? //
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
கேணத்தனமான செயல்களுக்கு மன்னன் துக்ளக் ஐ சுட்டிக்காட்டுவது ஏன்???
போன பதிவுல துக்ளக் ஐ உச்சி முகர்ந்தீங்க..இப்ப அப்படியே உல்டாவா ??
வரலாற்றில் துக்ளக் ஐ விட கேணத்தனமான அரசர்கள் பலர் இருக்கும் போது..[உ.த.அக்பர் ]
இவரை ஒப்பிடு செய்வது அநியாயம் ...
உண்மையான சமூக அக்கறையுள்ள பதிவு...
வில்லங்கமானவர்களின் வில்லங்க பின்னூட்டங்கள் வராதது மிக ஆச்சரியமே...
--

suvanappiriyan said...

சகோ நாசர்!

//இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
கேணத்தனமான செயல்களுக்கு மன்னன் துக்ளக் ஐ சுட்டிக்காட்டுவது ஏன்???
போன பதிவுல துக்ளக் ஐ உச்சி முகர்ந்தீங்க..இப்ப அப்படியே உல்டாவா ??
வரலாற்றில் துக்ளக் ஐ விட கேணத்தனமான அரசர்கள் பலர் இருக்கும் போது..[உ.த.அக்பர் ]
இவரை ஒப்பிடு செய்வது அநியாயம்// ...

கோபப்படாதீங்க......இப்படி ஒரு பழமொழி நம் மக்கள் மத்தியில் உள்ளதாலேயே எடுத்து எழுதினேன். துக்ளக் எவ்வளவு சிறந்த ஆட்சியாளர் என்பதைத்தான் போன பதிவுகளில் சிறப்பாக விளக்கினோமே!

//உண்மையான சமூக அக்கறையுள்ள பதிவு...
வில்லங்கமானவர்களின் வில்லங்க பின்னூட்டங்கள் வராதது மிக ஆச்சரியமே...
-- //

நாட்டு நலனில் உள்ள அக்கறையால் எழுதிய பதிவுக்கு எத்தனை மைனஸ் ஓட்டுக்கள் பார்த்தீர்களா? கருத்தை சொல்லமல் ஓட்டின் மூலம் பதிலளித்துள்ளார்கள். :-(

கோவி.கண்ணன் said...

// கடந்த 20 வருடங்களில் இஸ்லாமிய தீவரவாதம் என்பது குறைந்து கொண்டுதான் வந்திருக்கிறது. கோயம்பத்தூரில் காவலர் செல்வராஜைக் கொன்றது ஒன்றுதான் இஸ்லாமியர் செய்த தவறு.//

இமாம் அலியை ஏன் என்கவுண்டர் செய்தனர் ?

மதுரை சைக்கிள் குண்டு வெடிப்பு: இமாம் அலி கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்! - என்றெல்லாம் செய்திகள் வருவது ஊடககங்களில் ஊகங்களா ?

UNMAIKAL said...

தமீம் அன்சாரி கைது - தவறாகப் பிரயோகிக்கப்பட்ட சட்டம் -

அழகு சுந்தரம் B.A.B.L.


ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை ஒடுக்கும் நோக்கில் இராணுவ ரகசிய சட்டம் (Official Secrets Act 1923) ஐ இயற்றியது.

இதன்படி, ஆங்கிலேய அரசின் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதும், அதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது.

ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகளாகி விட்டபோதிலும்,

சுதந்திர இந்திய பாதுகாப்புக்கு ஏற்றதாகக் கருத்தப்படுவதால் இன்றும் நடைமுறையில் உள்ளது.


ரகசிய சட்டம் (Official Secrets Act - 1923)

என்ன சொல்கிறதென்றால்,

"இந்தியாவின் எதிரி நாட்டுக்கு உதவும் வகையில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அணுகுவது, ஆய்வு செய்வது, அப்பகுதி வழியாக ஊடுறுவுதல் ஆகியவையும் அவை தொடர்பான வரைபடம், மாதிரிகள் மற்றும் ரகசிய குறியீடுகளை எதிரிநாட்டு உளவாளிகளுடன் பகிர்ந்து கொள்வது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தியாவின் இறையான்மைக்கும் தேசிய ஒருமைப்பாடுக்கும்,உள்நாட்டு பாதுகாப்புக்கு அல்லது அண்டை நாடுடனான நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்த சட்டப்பிரிவின்படி தண்டிக்க முடியும்.

இந்த சட்டப்பிரிவின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 14 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

தேசநலனுக்கு கேடுவிளைவிக்கும் நோக்கத்துடனோ அல்லது நோக்கமில்லாமலோ மேற்படி ரகசிய இடங்களில் பிரவேசிப்பதும் ரகசிய சட்டம் 1923 இன் கீழ் தண்டனைக்குரிய செயலாகும்.

மேலும்,இவ்வழக்கு குறித்த நீதிமன்ற விசாரணைகளின்போது பாதுகாக்கப்பட வேண்டிய ரகசிய தகவல்கள் கசியும் வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் கருதினால் வழக்கில் தொடர்புடைய பொதுவானவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகாது இருக்கவும் அறிவுறுத்தப்படலாம்.

மேலும், செய்தி ஊடகங்கள்,பத்திரிக்கையாளர்கள் வழக்கு விபரத்தை செய்தியாக வெளியிடுவதும் தடுக்கப்பட்டுள்ளதாகும்.

(Uninterested members of the public may be excluded from court proceedings if the prosecutions feels that any information which is going to be passed on during the proceedings is sensitive. This also includes media; so the journalists will not be allowed to cover that particular case.)

இந்தச் சட்டப்பிரிவில் சிலநாட்களுக்குமுன் கைதான அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி விசயத்தில் மேற்கண்டவை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

அவர் கைதான அன்றே தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பத்திரிக்கைகளும் பரபரப்புச் செய்தியாக இதை வெளியிட்டன.

தாங்களே நேரடியாக இருந்து துப்பறிந்தவர்களைப்போல் கற்பனைக்கு ஏற்ப அச்சுப்பிசகாமல் ஒரே செய்தியையே வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

மேலும், அரசாங்க ரகசிய ஆவணங்களைக் கையாள்பவர்கள், அவற்றை அனுமதிக்கப்படாத பகுதிகளிலோ அல்லது வெளியிலோ வைத்திருப்போர் மட்டுமே இந்த சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

(The Act only empowers persons in positions of authority to handle official secrets, and others who handle it in prohibited areas or outside them are liable for punishment)

கைதாகியுள்ள தமீம் அன்சாரி இந்த ஆவணங்களை கையாள்பரல்லர் என்பதோடு செல்போனில் படமெடுத்த இடங்கள் சுற்றாலா செல்பவர்களால் எளிதில் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டவையே என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி ஊழல்,

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ஆகியவை காரணமாக மத்திய அரசும்,

கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்,

முஹம்மது நபியை இழிவுபடுத்திய படத்தை வெளியிட்டதற்காக சென்னை அமெரிக்க துணைதூதரகம் முற்றுகை,

மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பவே

பரனில் தூங்கிக்கொண்டிருந்த ரகசிய சட்டம் 1923 தூசு தட்டப்பட்டு தீவிரவாத பூச்சாண்டி காட்டப்பட்டுள்ளது.- அழகு சுந்தரம் B.A.B.L.,-

Source: http://www.inneram.com/opinion/readers-mail/utility-bad-law-5909.html

UNMAIKAL said...

தமீம் அன்சாரி தீவிரவாதி அல்ல,

இலங்கைக்கு காய்கறி வியாபாரம்தான் செய்தார் – த.மு.மு.க


சென்னை: தீவிரவாதி என்று போலீஸாரால் பிடிக்கப்பட்டுள்ள தமீம் அன்சாரி ஒரு புகைப்படக் கலைஞர்.

இலங்கைக்குக் காய்கறி வியாபாரம்தான் செய்து வந்தார்.

அவர் தீவிரவாதியோ அல்லது அன்னிய கைக்கூலியோ அல்ல என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமுமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

26.09.2012 அன்று தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது.

அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமீம் அன்சாரி, ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும்,

குறும்படம் இயக்கும் எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்துள்ளார் என்பதும்,

இலங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்துள்ளார் என்பதும் மட்டுமே உண்மை என்பதும்,

போலீசார் கூறுவதுபோல் அவர் தீவிரவாதியோ, அன்னிய கைக்குகூலியோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

காஷ்மீர், குஜராத், டெல்லி, பீஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல இங்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியை க்யூ பிராஞ்ச் போலீசார் தொடங்கி வைத்திருப்பதாக நிர்வாகக்குழு கருதியதால்,

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டுவது என்றும்,

விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி க்யூ பிராஞ்ச் போலீசின் சதியை அம்பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமீம் அன்சாரியை திருச்சியில் வைத்துப் பிடித்த போலீஸார் அவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்திய ராணுவ ரகசியங்களை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE:http://tamil.oneindia.in/news/2012/09/28/tamilnadu-tameem-ansari-is-innocent-says-tmmk-162243.html

UNMAIKAL said...

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்.

இந்தியாவின் பயங்கரவாதம் உண்மையில் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.

அதன் உச்சகட்டம் தான் பிரிவினையின் போது வடக்கு, வடமேற்குப்பகுதிகளிலும் பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள்.

இந்தப் படுகொலைகளில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அனைத்துத்தரப்பாரும் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்த வகுப்புக் கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ். இன் கைகள் இருந்ததை அதன் வரலாறு அம்பலப்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தான் விடுதலை பெற்ற இந்தியாவில் தீவிர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன என்ற உண்மையைப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.

முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப்பட்ட தீவிரவாதத் தாக்குலானது ஒரு தனிநபர் மீதான படுகொலையே, அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.

அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள்.

படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

எனவே விடுதலை பெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை 1948 ஜனவரி 20லிருந்து பேசத் தொடங்குவதுதான் சரியாக இருக்கும்.

ஆனால் அவர்களே எதிர்பாராத விதமாக, அவர்கள் திட்டத்தில் ஏற்பட்ட கோளாறால் அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்துநாள் உயிரோடு இருந்தார்.

ஜனவரி 30 அன்று கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான்.

அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல் நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு),

கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும்

எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகிறது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாக இருந்தன.


அவர்களது நோக்கம்: சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம்,

இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது,

அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது.

மருத்துவமனையின் உள்ளேயிருந்து ஒருவன் ஓடி வந்து, "காந்தியை முஸ்லிம் ஒருவன் சுட்டுவிட்டான்" என்று கூச்சல் போட்டதும்,

அவனை ஜவஹர்லால் நேரு பற்றி இழுத்து கன்னத்தில் அறைந்து "முட்டாள், காந்தியை சுட்டது ஒரு இந்து" என்று சொன்னதும்,

தொடர்ந்து வானொலியில் அதை அறிவித்து மிகப்பெரும் மதக்கலவரத்தை தவிர்த்ததும் வரலாற்று உண்மை.

SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1909:2010-01-08-15-10-30&catid=969:09&Itemid=223

UNMAIKAL said...

சொடுக்கி >>>>> இந்து பயங்கரவாதம். விடியோ காணுங்கள். > <<<<<


சொடுக்கி >>>>>
இந்தியாவின் உண்மையான பயங்கரவாதிகள் ஒரு பார்வை.
<<<<<< கேளுங்க‌ள்

சொடுக்கி >>>>> பயங்கரவாதத்தின் நிறம் காவி! - ஞாநி . குமுதம் "ரிப்போர்ட்டர்" - <<<<< படியுங்கள்



சொடுக்கி >>>>>ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை .அம்பலமாகும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே" <<<<< படியுங்கள்

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதத்தின் நிரூபணங்கள் .
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.


“மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால்,

எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்…

இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்…

அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால்,

அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது…

சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்…”


சொடுக்கி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானாந்தாவின் ஆதாரம்!! <<<<< படியுங்கள்


சொடுக்கி >>>>> இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர் ? <<<<< படியுங்கள்.

என்றெல்லாம் செய்திகள் வருவது ஊடககங்களில் ஊகங்களா ?


.

UNMAIKAL said...

காலம் செய்யும் கோலம்.

கோவி கண்ணன் வீட்டுக்கு அருகில் ஓடும் பாலாறும் தேனாறும்! (எதிர்பதிவுக்கு எதிர்பதிவு)

கோவி கண்ணன் எழுதிய சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் என்ற பதிவிற்கான எதிர் பதிவை கக்கு மாணிக்கம் அவர்களின் பின்னூட்டத்துடன் ஆரம்பிக்க விரும்புகிறேன்.

/* உண்மை நிலை புரியாமல் நுனிப்புல் மேயும் சிலரின் அரை வேக்காட்டு ஆக்கங்களுக்கு பதில் சொல்ல இப்படி ஒரு பதிவு அவசியமா கண்ணன்? */

என்று பின்னூட்டமிட்டுருந்தார் அண்ணாச்சி கக்கு மாணிக்கம் அவர்கள்.

வாங்க கக்கு மாணிக்கம்,

நீங்க வேணும்னா புல்ல அடிவரை மேஞ்சிட்டு ஒரு ஆக்கம் போடுங்களேன்.

நீங்க புல்ல FULL ஆ மேஞ்சீங்களா இல்லையான்னு பின்னூட்டம் வழியா விவாதிப்போம்.

உங்களுக்கு இந்த இரண்டு வரிகள் தான். நீங்க அப்பீட்டாகிக்கலாம்.

இனி, அண்ணன் கோவி கண்ணன்,

விவாசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ இல்லாத பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது.

நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.

எவ்வளவு நல்ல கருத்து இது?

எவ்வளவு உண்மையும் கூட.

இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக நீங்கள் மாற்றி இருக்கலாம் ?

அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர் வந்து விட்டதா , உடனே எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நீங்கள் கட்டுரை தீட்டியதோ ஏனோ?????

இதற்க்கு மறுப்பு சொல்றதா இருந்தா நமது நாடு அப்படியெல்லாம் கிடையாது.

விவசாயத்தில் இன்ன இன்ன மாதிரிலாம் இருக்கோம்,மணல் திருட்டு நடைபெறுவது இல்லை, விவசாய
நிலங்கள் வீட்டு மனைகளாக மாறவில்லை என்றால் அது சரியான பதில்.
அதுவும் இல்லையா,

சவுதியோட திட்டங்கள் சரி இல்லை.

இப்படி இப்படி செய்து இருந்தால் இன்னும் வளமான நாட்டை உருவாக்கலாம் என்று கூறினீர்கள் என்றால் அது நியாயம்.

அத விட்டுட்டு வீட்டு வேலை செய்பவர்களை பற்றி பேசினால் என்ன அர்த்தம்?

விவசாயத்திற்கும் வீட்டு வேலை செய்வதற்கும் என்ன சம்பந்தம்???


நான் தெரியாமல் தான் கேட்கிறேன்,

நமது நாட்டில் மட்டும் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இல்லையா?

அவர்களை அடிமை போல் நடத்துவது நடக்க வில்லையா????

அல்லது உங்களுக்கு தெரியாதா????

பதிவின் மையக் கருத்தோட விவாதிக்கப் பழகுங்கள்.

ஒரு இனத்தின் மீது உள்ள உங்களின் வெறுப்பை எல்லா இடங்களிலும் காட்டாதீர்கள்.


அதற்காக சவுதியில் யாரும் தவறு செய்தால் அதற்க்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று கதை கட்டி விடாதீர்கள்.

யார் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே.

யார் விபச்சாரம் செய்தாலும் மரண தண்டை தான் தீர்வு என்பது என் கருத்து.

அது என் குடும்பத்தாராக இருந்தாலும் சரியே, ஏன் நானாக இருந்தாலும் சரியே.

கீழ்க்கண்ட வசனம் ஒரு புத்தகத்தில் உள்ளது.

இது தான் உலகிலேயே எனக்கு அதிகம் பிடித்த வசனம்.

இது எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினால் அதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆகவே புத்தகப் பெயரை நான் குறிப்பிடவில்லை
.
"நீதி செலுத்துங்கள். அது உங்களுக்கோ, உங்கள் உறவினர்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே. ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியில் இருந்து பிறழச்செய்து விடக்கூடாது." - சிராஜ் vadaibajji.blogspot.com

SOURCE: http://vadaibajji.blogspot.com/2012/01/explain-to-govi-kannan.html

கோவி கண்ணனின் எதிர்ப்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்ப்பதிவு. - டோண்டு ராகவன்

வடை பஜ்ஜி பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இது.

//விவசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ
இல்லாத பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது.

நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம். //

எவ்வளவு நல்ல கருத்து இது?

எவ்வளவு உண்மையும் கூட.

இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக நீங்கள் மாற்றி இருக்கலாம் ?

அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர் வந்து விட்டதா , உடனே எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நீங்கள் கட்டுரை தீட்டியதோ ஏனோ????/ -

அன்புடன், டோண்டு ராகவன்.
dondu.blogspot.com

SOURCE: http://dondu.blogspot.com/2012/01/blog-post_12.html