'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, September 13, 2012
முக்காடு போட்ட பெண்: குறும் படம்!
லிஃப்டை நோக்கி அந்த இளைஞன் வேகமாக வருகிறான். வந்த வேகத்தில் பார்த்தால் ஏற்கெனவே லிஃப்ட்டுக்ள் ஒரு இஸ்லாமிய பெண்மணி முழு புர்காவோடு நிற்பதைப் பார்க்கிறான். லிஃடுக்குள் நுழையும் போதே காதிலிருந்த ஹெட்போனை எடுக்கிறான். அந்த பெண்ணின் முழு புர்கா தோற்றம் மரியாதையை ஏற்படுத்தி அவனையறியாமலேயே அவனது கைகள் இசையை நிறுத்துகிறது. இருவரையும் சுமந்தபடி லிஃப்ட் மெல்ல பயணிக்கிறது. இவர்கள் இருவர்தான் அந்த லிஃப்டில் இருந்தது.
கர்ர்ர்ர்ர்ர்.....பட்ட்ட்....பட்ட்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....என்ன ஆனது .....என்ன சத்தம்...ஆம். வெளியில் ஏதோ பிரச்னை போல் இருக்கிறது. லிஃப்ட் பாதி வழியில் நிற்கிறது. சிறிது நேரம் பொறுத்து அந்த இளைஞன் இடுக்கின் வழியாக சத்தம் போட்டு குரல் கொடுக்கிறான். ம்ஹூம். கேட்பார் யாரும் இல்லை. என்ன செய்வது? எனபதறியாது அந்த இளைஞன் அந்த பெண்ணை பார்க்கிறான். அந்த பெண்ணோ எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியாக நிற்கிறாள். குளிர் சாதன வசதி நின்றதால் லிஃப்ட்டுக்குள் ஏக புழுக்கம். இளைஞனோ அசதியில் ஒரு ஓரத்தில் உடகார்ந்து விட்டான். இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. அந்த பெண்ணும் மற்றொரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டாள். இருவருமே உதவியை எதிர் பார்த்து காத்திருந்தனர். இளைஞன் தனது பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறிது குடித்து தாகத்தை தணித்துக் கொண்டான். பாக்கி இருந்த தண்ணீரை அந்த பெண்ணின் பக்கம் கொண்டு சென்று எடுத்துக் கொள்ளச் சொன்னான். அவளோ முதலில் தயங்கி விட்டு சிறிது நேரம் கழித்து அந்த நீரை பருக ஆரம்பித்தாள்.
பட்..பட்...பட்..
அட..... இது என்ன சத்தம். ஓ...மின்சாரம் சுத்தமாக தடைபட்டு விட்டது. எங்கும் ஒரே இருட்டு. என்ன செய்வது?
படார்...... சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........
பயங்கர சத்தத்தோடு லிஃப்ட் மிக வேகமாக கீழ் நோக்கி சென்று பெரும் சத்தத்துடன் தரையில் மோதி நின்றது. எங்கும் நிசப்தம். சிறிது நேரத்தில் மின்சாரம் செயல்பட தொடங்கியது. லிஃடினுள் இப்பொழுதுதான் வெளிச்சம் வருகிறது. அந்த இளைஞன் முனகிக் கொண்டிருக்கிறான். என்ன ஆனது? ஓ...லிஃப்ட் கீழே விழுந்த வேகத்தில் அவனது கையில் அடி பட்டு ரத்தம் ஒழுகிக் கொண்டு இருந்தது. அவன் தனது மற்றொரு கையால் ரத்தத்தை நிறுத்த முயற்சிக்கிறான். முடியவில்லை. முனகிக் கொண்டே லிஃடில் சரிகிறான்.
நல்ல வேளையாக அந்த பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை. இளைஞனுக்கு ரத்தம் வழிவதையும் அதனை அவனால் கட்டுப்படுத்த முடியாததையும் அந்த பெண்மணி பார்க்கிறாள். சற்றும் தாமதிக்காமல் தனது முக அங்கியையும் தலை முக்காட்டையும் எடுத்து அந்த இளைஞனுக்கு அருகில் சென்று கைகளுக்கு கட்டுப் போடுகிறாள். அந்த பெண்ணின் மனித நேய செயலை நினைத்து அந்த இளைஞன் விக்கித்துப் போனான். யாரோ ஒருவனான தனக்காக அந்த பெண் தனது முக்காட்டை எடுத்து முதலுதவி செய்ததை நன்றியோடு ஏற்றுக் கொண்டான். சிறிது நேரத்தில் வெளியில் ஆட்கள் வரும் சத்தம் கேட்கிறது. லிஃடின் கேட் திறக்கப்படுகிறது. குறும்படமும் முடிக்கப்படுகிறது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர் ஆன் 2:173
ஒரு ஆண்டு எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. நான் மதினாவுக்கு வந்து ஒரு தோட்டத்திற்குச் சென்றேன். அதிலுள்ள ஒரு தானியக் கதிரை எடுத்து உதிர்த்து சாப்பிட்டேன். எனது ஆடையிலும் சேகரித்துக் கொண்டேன். அப்போது தோட்டத்துக்குரியவர் வந்து விட்டார். என்னை அடித்து எனது ஆடையையும் பறித்துக் கொண்டார். நான் முகமது நபி அவர்களிடம் வந்து நடந்த விபரங்களை கூறினேன். முகமது நபி அவர்கள் தோட்டத்துக்குரியவரிடம் 'இவர் பசியோடு இருந்த போது இவருக்கு நீர் உணவளிக்கவில்லை. இவர் அறியாதவராக இருந்த போது இவருக்கு 'திருடக் கூடாது' என்று கற்றுக் கொடுக்கவில்லை என்று கடிந்து கொண்டார்கள். மேலும் எனது ஆடையை திருப்பித் தருமாறு அவருக்கு கட்டளை இட்டனர். மேலும் எனக்கு ஒரு வஸக் (அறுபது ஸாவு) அல்லது அரை வஸக் உணவு தருமாறும் முகமது நபி அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் நபித் தோழர் அப்பாத் பின் ஷூரஹ்
ஆதாரம் நஸயீ 5314, அபுதாவுத் 2252, இப்னு மாஜா 2289, அஹ்மத் 16865
திருடுவதற்கு மார்க்கம் கையை வெட்டச் சொல்கிறது. ஆனால் பஞ்சமான நாளில் தனது வயிற்றுப் பசிக்காக உணவை திருடிய ஒருவரை குற்றம் காணாமல் அவரது வறுமையை போக்க மேலும் உணவு தானியங்களை கொடுத்து அனுப்பிய அழகிய முறையை பார்க்கிறோம். இங்கு தவறு செய்பவரின் சூழ் நிலையை நோக்குகிறது இஸ்லாம். ஒருவனின் வயிற்றுப் பசிக்காக திருடியதை குற்றமாக காணவில்லை நபி அவர்கள்.
அதேபோல் தடுக்கப் பட்ட உணவு வகைகளில் பன்றியும் வருகிறது. ஒருவனுக்கு உயிர்போகக் கூடிய நிர்பந்த நிலையில் பன்றியின் மாமிசம் மட்டுமே எதிரில் உள்ளது. வேறு எந்த உணவும் இல்லை என்றால் அவன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பன்றிக் கறியை சாப்பிட இஸ்லாம் அனுமதிக்கிறது.
அது போல் இந்த காணொளியில் தனது உடலை கண்களைத் தவிர அனைத்து பகுதியையும் மறைத்த ஒரு இஸ்லாமிய பெண், காற்றோட்டம் இல்லாத நிலையிலும் புழுக்கத்தின் காரணமாக தனது முக அங்கியை கழட்டாத அந்த பெண், அறிமுகமில்லாத ஒரு இளைஞனின் ரத்தம் வழிவதை பார்த்து உடன் முதலுதவியாக தனது முக அங்கியை பேண்டேஜாக உபயோகிக்கும் சமயோஜித செயலில் மனித நேயத்தை நாம் காண்கிறோம். இந்த புர்கா, முக அங்கி அனைத்தும் யாரும் வற்புறுத்தாமல் தானாக விரும்பி பலர் அணிந்து வருவதையும் பார்க்கிறோம். அது போல் அவசியம் என்று வரும்போது தனது புர்காவை துறக்கிறாள் இந்த பெண். இஸ்லாமிய பார்வையில் இது தவறல்ல.
இது ஒரு புறம் இருக்க.....
மற்றொரு பெண்மணியைப் பற்றிய செய்தியையும் பார்ப்போம்:
மாயாபென் ஒரு மகப்பேறு மருத்துவர். கொடியவன் நரேந்திர மோடியின் மந்திரி சபையில் மந்திரியாக இருந்தவர். நரோதா பாட்டியாவில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணமாக வைத்து அப்பாவி மக்களை அழிக்க துணை போயிருக்கிறார். காரில் வந்து இறங்கி இந்துத்வா ஆட்களுக்கு கத்தி, தடி போன்ற ஆயுதங்களை கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அவர்களுக்கு கட்டளையும் பிறப்பித்துள்ளார். பல பெண்களை அந்த கயவர்கள் மான பங்கப் படுத்தி பிறகு தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதை எல்லாம் அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார் இந்த கிராதகி. ஒரு மருத்துவர் செய்யும் செயலா இது...
இவளை காப்பாற்ற மற்றொரு கொடியவனான நரேந்திர மோடி பல வகையிலும் முயற்ச்சித்துள்ளார். ஆனால் தீஸ்டா செடல்வாட், மல்லிகா சாராபாய் போன்ற சமூக ஆர்வலர்களின் அயராத முயற்சியால் மோடியின் திட்டம் பலிக்கவில்லை. கண்ணால் பார்த்த சாட்சிகளும் உண்மையாகிப் போக இன்று 28 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு வந்து உள்ளே சென்றிருக்கிறார். இவளை இந்த அளவு தயார் படுத்திய நரேந்திர மோடி முதலமைச்சர் என்பதால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். காலம் கனியும். இதே போன்ற ஒரு தீர்ப்பை நரேந்திர மோடி பெற வேண்டும். சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இந்த கொடியவனைக் காணும் காலமும் வரும்.
அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்:
-----------------------------------------------
டிஸ்கி: யூதர்களின் வழக்கமான நயவஞ்சக தனத்தால் ஒரு பிரச்னைக்குரிய திரைப்படத்தை எடுத்து முஸ்லிம்களை வம்புக்கிழுத்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
அதே போல் லிபியாவில் அமெரிக்க தூதரையும் மற்றும் அலுவலர்கள் இருவரையும் கொலை செய்ததும் காட்டு மிராண்டித் தனமானது. ஒரு போதும் இஸ்லாம் அப்பாவிகளை கொல்லச் சொல்லவில்லை. இதற்கும் எனது வன்மையான கண்டனங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
SEP 13, அமெரிக்க ஆதரவு பயங்கரவாதிகள், டெர்ரி ஜோன்ஸ் மற்றும் சாம் பேசிலி ஆகியோர் இணைந்து "INNOCENCE OF MUSLIMS" என்ற பெயரில், இஸ்லாத்தையும், முஹம்மது நபி அவர்களையும் கேவலமாக சித்தரித்த திரைப்படத்தை தயாரித்தனர்.
இதை தொடர்ந்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் கொந்தளித்த முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகங்களை அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் வருகின்றனர். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு லிபியாவுக்கான அமெரிக்க தூதர் "கிறிஸ்டோஃபர் ஸ்டீஃபன்" மற்றும் 3 தூதரக அதிகாரிகள் பலியாயினர்.
இதற்கிடையில், இங்கிலாந்திலும் முஸ்லிம்களை கோபமூட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட "ISLAM -THE UNTOLD STORY" என்ற பெயரில், இங்கிலாந்தின் "சேனல் 4" என்ற தொலைகாட்சி இன்று முதல் (13/09) ஒளிபரப்ப முடிவு செய்திருந்த "டாக்குமெண்டரி" தொடர், நிறுத்தப்பட்டது. இதன் இயக்குனர் "Taam Holend " இஸ்லாத்தை பற்றி அடிப்படை ஆதாரங்களற்ற - முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில், காட்சிகளை அமைத்துள்ளார். இதை கண்டித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இங்கிலாந்து முஸ்லிம்கள் "சேனல் 4" அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் "இங்கிலாந்து பிராட்காஸ்ட் ரேகுலடரியிலும்" புகார் அளித்தனர்.
நேற்று வரை முரண்டு பிடித்து வந்த சேனல் 4, திட்டமிட்டபடி வியாழக்கிழமை (13 /09)முதல் ISLAM - THE UNTOLD STORY ஒளிபரப்பப்படும், என்று உறுதியுடன் கூறி வந்தது. இந்நிலையில், ‘Innocence of Muslims’ திரைப்படத்தை கண்டித்து, நேற்று உலகளவில் பெரும் கலவரம் வெடித்ததை தொடர்ந்து, சேனல் 4 நிறுவனம் "ISLAM -THE UNTOLD STORY" தொடர் நிறுத்தப்படும், என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
--பத்திரிக்கை செய்தி
Kavya says:
September 13, 2012 at 7:28 am
பீஹாரில் சமசுகிருதம் பள்ளிகளிலும் கல்லூரிகளும் படிப்போரில் தலித்துக்களே அதிகம். பார்ப்ப்னர்கள் இல்லை. காரணம் பிழைக்கும் வழி அஃதில்லையாதலால். நான் ஒரு தலித்து ஜாதியைச்சேர்ந்த பேராசிரியை சத்யமேவே ஜெயதே என்ற அமீர் கான் நடத்தும் நிகழ்ச்சியில் தனக்கும் தன்குடும்பத்தினருக்கும் இழைக்கப்பட்ட தீண்டாமைச் சொல்லி அழுதார் என்றேன். அவர் ஒரு பீஹாரி. தில்லிப்பலகலைக்கழகத்தில் சமசுகிருத பேராசிரியை. பீஹாரில் பாட்னா பலகலைக்கழகத்தில் சமசுகிருத துறைத்தலைவரே ஒரு தலித்து.:-(
இஃதொரு கான்ஸ்பிரசியாகத்தான் தோன்றுகிறது. தலித்துக்கள் எங்கு வேலை வாய்ப்புகள் அதிகமோ அதைத்தான் படிக்கவேண்டும். பார்ப்ப்னர்கள் சமசுகிருதம் படிக்கவே மாட்டார்கள். ஆங்கிலம் படித்து ஆங்கிலேயரின் மனதுக்கினியவர்களாதலால், பாரதியாரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டார்.
எவர் கண்டித்தாலென்ன பிழைக்கும் வழியெதுவோ அதை நோக்கிப்போவதே வாழ்க்கை வெற்றியின் இரகசியம். தலித்துக்கள் பார்ப்ப்னர்களிடமிருந்த அதைக்கற்றுக்கொள்ள வேண்டும்.
கருனாநிதி தமிழ் வாழ்க என்று சொல்லிக்கொண்டே தன் பேரக்குழந்தைகளுக்கு இங்கிலீசு மீடியத்தில் போடுகிறார். அன்புமணி இராமதாசு தமிழ் வாழ்க வென்று தன்மகள்களை மான்ட்போர்டு ஸ்கூலில் போடுகிறார்.
ஆக, எல்லாரும் பிழைத்துக்கொள்கிறார்கள். தலித்துக்களே ஜல்தி..ஜல்தி…நீங்களும் பிழைத்துக்கொள்ளுங்கள்.
Kavya
//பீஹாரில் சமசுகிருதம் பள்ளிகளிலும் கல்லூரிகளும் படிப்போரில் தலித்துக்களே அதிகம். பார்ப்ப்னர்கள் இல்லை.//என்ன சமசுகிருதம் தீட்டு பட்டுவிட்டாத!!! அப்போ இனி எந்த பார்ப்ப்னர்களும் சமசுகிருத்தை படிக்கமாட்டார்களா? கோவிந்தா...கோவிந்தா...
Nice short story...
// வல்லரசுகளே கதி கலங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தைப் பார்த்து 'தாழ்வு மனப்பான்மை' என்பது உம்முடைய அறிவு குறைபாட்டைத்தான் உணர்த்துகிறது.//
உண்மை தான், எந்த நேரத்தில் எங்கு குண்டு வெடிக்குமோ, என்ன நடக்குமோ என்ற பீதியில் ஒட்டுமொத்த உலக நாடுகளுமே அல்லாவின் பிள்ளைகளை பார்த்து மிரண்டு போய் கிடக்கிறது.
///உண்மை தான், எந்த நேரத்தில் எங்கு குண்டு வெடிக்குமோ, என்ன நடக்குமோ என்ற பீதியில் ஒட்டுமொத்த உலக நாடுகளுமே அல்லாவின் பிள்ளைகளை பார்த்து மிரண்டு போய் கிடக்கிறது.///
இந்தியா ஆக்கிரமிக்கப்படும்போது, எந்த நேரத்தில் எங்கு குண்டு வெடிக்கும், என்ன நடக்கும் என்ற பீதி உங்களையும் விட்டுப் போகாது.
ஆக்கிரமிக்கப்படுபவன் படும் அவதி, அவஸ்தை, பயம் போன்றவை ஆக்கிரமிக்கவன் உணர்வது அரிது, இந்திய இராணுவத்தின் வன்முறையால் காஷ்மீர் அப்பாவி மக்கள் படும் துன்பங்கள் போல!
Post a Comment