'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, September 09, 2012
சவுதியில் வேலை இழந்த பெண்கள்!
சவுதி அரேபியா தனது நாட்டு பெண்களை கட்டாயமாக வேலையில் அமர்த்த வேண்டும் என்ற சட்டத்தை கடுமையாக்கியதால் இன்று பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த பல பெண்கள் வேலையிழந்து தங்களது நாடுகளுக்கு திரும்பும் கட்டாயத்தில் உள்ளனர். ஜெத்தா ஹஜ் டெர்மினலில் தங்களது நாட்டுக்கு பயணப் படும் நோக்கில் அமர்ந்துள்ள பெண்களைத்தான் மேலே உள்ள படத்தில் பார்க்கிறோம்.
முன்பெல்லாம் செவிலியர்களாக மற்றும் மருத்துவர்களாக பணியாற்ற சவுதி பெண்கள் கிடைப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது இந்நாட்டு பெண்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டியதன் பயனாக இன்று தேவையான சவுதி பெண்கள் சிரமமின்றி மருத்துவ மனைகளுக்கு கிடைத்து வருகின்றனர். கணிணி பிரிவிலும், காரியதரிசியாகவும், ஆசிரியையாகவும் மற்றும் பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற வேலைகளை பெறுவதில் தற்போது சவுதி பெண்கள் வெளி நாட்டு பெண்களோடு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். இந்த மாற்றம் வரவேற்க தக்கதே! அதே சமயம் இஸ்லாமிய சட்டங்களுக்கு பங்கம் வராமல் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டும் சவுதி அரசின் முடிவையும் வரவேற்போம். வேலையிழந்த பெண்கள் வேறு வேலைகளுக்கு முயற்சிக்கின்றனர். விருப்பமில்லாதவர்கள் தங்களது நாட்டுக்கு திரும்புகினறனர். திரும்பும் அவர்களின் வாழ்விலும் பொருளாதாரம் சிறந்தோங்க பிரார்த்திப்போம். ஒரு வாசல் அடைபட்டால் மற்றொரு வாசலை இறைவன் கண்டிப்பாக திறப்பான் அல்லவா!.
JEDDAH: Working in Saudi Arabia is a challenge, particularly when it comes to working women. Many expatriate women are facing challenges due to the ongoing Saudization program. There are very few options for expatriate women to find legal work in the Kingdom.
Many young foreign women are unemployed or have been asked to leave their present jobs. As per the Kingdom's nationalization policy, many companies have restricted themselves to hiring only Saudi women, leaving fewer job openings for expatriates. The job situation for expatriate women has therefore become a great concern for the overseas community.
It is quite rare to find women who work, except in the professions of doctors, nurses and the majority of teachers. There is always a scarcity of qualified and experienced women to cover many of the higher professions.
Summaya Khaleel, a graduate student, said: "It's been a month since I completed my graduation and am still unemployed. It is really difficult to find a job in big companies without a master's degree or experience."
Manal Rehman, an executive assistant, is of the opinion that getting a job in a major reputable company has become impossible. The smaller companies do have jobs for women, but they don't readily accept them for lack of proper security.
One of their concerns is to be employed in a secure place. There are several small sector companies which offer jobs to women, whether Saudi or non-Saudi, but one major factor that leaves a person vulnerable in any situation is unfamiliarity, as well as doubtful surroundings and working atmosphere. Uppermost in the minds of today's women are aspects of safety and security, and they consider the background and history of workplaces before considering their job offers.
Commenting on this issue, Munira Fatima said: "I used to work in a private consulting company, which was male dominated. There was no proper sanitary facility and there were only three women due to which I had to leave the job within a week." She added that it was necessary to work in a healthy and comfortable environment.
The Kingdom's policy to provide more jobs for Saudi women has narrowed down the employment opportunity for expatriate women. Multinational companies have started hiring only Saudi women, replacing many non-Saudis.
Thus, the present scenario is difficult for job-seeking expatriate women. It is very rare to find foreign women working under a company's sponsorship. Most of the time it's the legal male guardian, whether father or husband, who is the working woman's sponsor. The sponsorship issue also poses great difficulty for job-seeking expatriate women.
Hiba Ali was an executive assistant in one of the multinational companies in Jeddah. She was forced to leave the job as she was unable to transfer her sponsorship, and eventually was replaced by a Saudi. She said: "It is really sad that I had to leave the job. The company did not have the policy of undertaking the sponsorship for females and I was put under some agency."
As the Saudization program was intensified, these agencies were asked to withdraw the sponsorship of expatriate women. Obviously, they were replaced by Saudis.
Many working women were not willing to go under the sponsorship of random agencies and eventually had to leave their jobs.
Under the circumstances, several young expatriate women continue to look for good professional jobs with salaries suiting their skills.
http://www.arabnews.com/expat-women-face-bleak-job-prospects
-------------------------------------------------
யா அல்லாஹ்! என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் பேச்சை நீ கேட்கின்றாய். என் அந்தரங்கத்தையும் பகிரங்கத்தையும் (ஒன்று போல்) நீ அறிகிறாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை! நான் ஒன்றுமில்லாத ஏழை! இரட்சிப்புத் தேடுபவன்! அபயம் தேடுபவன்! இரக்கத்தன்மையுள்ள இளகிய உள்ளமுள்ள நான் செய்த பாவங்களை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன் நீ. இந்த மிஸ்கீனின் (ஏழையின்) வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகின்றேன். பணிந்த நிலையில் மண்டியிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். (யா அல்லாஹ்!) பிடரியைப் பணியவைத்து, மேனியைப் பணிவாய் வைத்து, மூக்கையும் (முகத்தையும்) மண்ணில் வைத்து குருடரான பயந்தவனின் பிரார்த்தனையாக! நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். (தப்ரானி)
யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அநீதி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. எனவே, உனது பிரத்யேக மன்னிப்பில் என்னை மன்னித்தருள்வாயாக! மேலும் என் மீது அருள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பு வழங்குபவன். கருணை பொழிபவன். (புகாரி, முஸ்லிம்)
-http://www.facebook.com/Urbrohasan
''அல்லாஹ்வின் தூதரே!
எங்களை விட சிறந்தவர்கள் வேறு யாரும் உண்டா?
தங்களுடன் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்;
தங்களுடன் சேர்ந்து அறப்போர் புரிந்தோம்?''
என்று கேட்டார்கள்.
''ஆம்,உங்களுக்கு பின்னால் வரும் கூட்டத்தார்கள் அவர்கள்.
என் மீது நம்பிக்கை கொள்வார்கள்;
ஆனால்,என்னை பார்த்திருக்க மாட்டார்கள்''
என நபி ஸல் அவர்கள் பதில் அளித்தார்கள்.(முஸ்னத் அஹ்மத்)
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
சகோ.சுவனப்பிரியன்!என்ன நீங்க எல்லோருக்கும் கறுப்பு அங்கி மாட்டி விட்டுட்டிங்களே!ஏனைய அரேபிய நாடுகள் இந்தமாதிரி உடை கெடுபிடி செய்வதில்லை.அதுவும் விமான தளம் செல்லும் வரையில்.
சகோ ராஜ நடராஜன்!
//என்ன நீங்க எல்லோருக்கும் கறுப்பு அங்கி மாட்டி விட்டுட்டிங்களே!ஏனைய அரேபிய நாடுகள் இந்தமாதிரி உடை கெடுபிடி செய்வதில்லை.அதுவும் விமான தளம் செல்லும் வரையில்.//
கவிதைக்கு பொய் அழகு:
கண்ணுக்கு மை அழகு:
பெண்ணுக்கு புர்கா அழகு:
இது போன்று புர்கா அணிந்து செல்லும் பெண்களை கண்டால் நமக்கு தவறான எண்ணம் வராது மாறாக மரியாதையே உண்டாகும். இதனால் அந்த பெண்களுக்கு வேலை செய்வதிலோ தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலோ என்ன சிரமம் வந்து விடப் போகிறது?
இதுவரை புர்கா அணிந்த பெண்களை ஈவ் டீஸிங் செய்ததாக எங்காவது படித்திருக்கிறீர்களா?
பெண்கள் அரை குறை ஆடைகளை அணிந்து நம்ம சிறு வயசு பசங்களுக்கு தவறான எண்ணத்தை உண்டாக்கி விட்டு 'ஐயோ என்னை கிண்டல் பண்ணிட்டான்' 'ஐயோ... என்னை கிள்ளிட்டான்' என்று பிறகு எதற்கு புகார் செய்ய வேண்டும்?
எனவே பெண்கள் தங்களின் உடைகளில் கவனம் செலுத்தினால் அவர்களுககுத்தான் பாதுகாப்பு.
3 Sep 2012 Terror arrests to divert people’s attention from Naroda batia verdict- CLMC
ஹைதராபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது நிகழ்ந்த நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியே அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாத தொடர்புபடுத்தி கைது செய்த நடவடிக்கை என்று சிவில் லிபர்டீஸ் மைனாரிட்டி கமிஷன் ஆஃப் இந்தியா(சி.எல்.எம்.சி) குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர்அவசரமாக இவ்விவகாரத்தில் தலையிடவும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சி.எல்.எம்.சி அமைப்பின் பொதுச்செயலாளர் லத்தீஃப் முஹம்மது கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை தீங்கிழைக்கும் நோக்கத்துடனும், நேர்மையின்றியும் போலீஸ் கைது செய்துள்ளது. இச்செயலை சிவில் லிபர்டீஸ் மைனாரிட்டி கமிஷன் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இந்த கைது, ஹிந்துத்துவா அமைப்புகளுடன் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போலீஸ் துறையில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான அதிகாரிகளுக்கு இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்துகிறது. இந்த கைது நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமே, குஜராத் இனப் படுகொலையில் பங்கேற்ற குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பையும், தற்பொழுது அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தையும் திசை திருப்பும் முயற்சி என்று சி.எல்.எம்.சி நம்புகிறது.
சிவில் லிபர்டீஸின் அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, முஸ்லிம் இளைஞர்கள் சட்டத்திற்கு புறம்பாக பிடித்துச் செல்லப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் முடிந்த பிறகு அவர்களின் கைது அறிவிப்பு வெளியானது. இந்த கூட்டு நடவடிக்கை ஒரே நேரத்தில் பெங்களூர், ஹைதராபாத், நந்தத் மற்றும் தென்னிந்தியாவின் இதர பகுதிகளில் நடந்தேறியுள்ளது.
இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட போலீசார் தாம் முன்பு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தார்கள். கைது மற்றும் விசாரணையின் போது போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை முற்றிலும் மீறியுள்ளனர்.
சிறந்த கல்வி பின்னணி கொண்ட முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஹிந்துத்துவா செயல் திட்டத்தின் சதி வேலையாகும். கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பத்திரிகைத்துறை, விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப துறைகளை சார்ந்தவர்களும் பயில்வோரும் ஆவர். இந்த கைது நடவடிக்கை மூலம் விஞ்ஞான நிறுவனங்கள், பத்திரிகைத் துறைகளில் முஸ்லிம் இளைஞர்களின் எதிர்காலம் இருள் அடைந்ததாக மாறியுள்ளது.
போலீஸ் கூறுவதில் பொய்களின் ஒட்டுமொத்த தொகுப்பை தவிர வேறு எதுவும் இல்லை. பெங்களுர் போலீஸ் தலைமை அதிகாரி கூறுகையில், முஸ்லிம் இளைஞர்கள் தங்களது கையில் பிஸ்டலை கையில் பிடித்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கைது செய்ததாக கூறுகிறார். இதில் பெரிய கேள்வி என்னவெனில், தூங்கும் பொழுது பிஸ்டலை கையில் பிடித்தவாறு தூங்குபவர்கள் எவ்வாறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்?மேலும் போலீஸ் கூறுகையில், கம்ப்யூட்டர், லேப்டாப், செல்ஃபோன் மற்றும் ஹார்ட் டிஸ்குகளை முஸ்லிம் இளைஞர்களிடமிருந்து கைப்பற்றியதாக கூறுகிறது. இதுவெல்லாம் ஒரு சாதாரண விஷயம் என்பது பாமரனுக்கும் புரியும். ஏனெனில் இவையெல்லாம் அன்றாட வாழ்க்கைக்கு தற்பொழுது அத்தியாவசியமானவையாகும். அவை ஆபத்தான் ஆயுதங்கள் அல்ல.
பிரதமர் இவ்விவகாரத்தில் அவசரமாக தலையிட்டு, உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் முஸ்லிம் இளைஞர்களை அநியாயமாக கைது செய்வதை நிறுத்துமாறு உத்தரவிடவேண்டும்.
அரசியல் கட்சிதலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இந்த கைதுகளுக்கு கண்டனம் தெரிவிக்க முன்வரவேண்டும்.
கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் எதிர்காலத்தில் சட்டத்தால் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்படுவார்கள். அப்பொழுது மாநில அரசுகள் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு மன்னிப்பு மற்றும் இழப்பீடு வழங்கும் சூழல் உருவாகும்.
சி.எல்.எம்.சி பிரதமருக்கு இதுத் தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. இவ்வாறு லத்தீஃப் முஹம்மது கான் அறிக்கையில் கூறியுள்ளார்.
Source: http://www.thoothuonline.com/terror-arrests-to-divert-people%e2%80%99s-attention-from-naroda-batia-verdict-clmc/
ஒட்டகமே ! ஒட்டகமே !
(பி. எம். கமால், கடையநல்லூர்)
ஒட்டகமே ! ஒட்டகமே !
எங்களின் உயிர் சுமந்த
பெட்டகமே ! புத்தகமே !
அகிலத்தின் பேரொளியை
ஆண்டவனின் ஒளித்துளியை
அலுங்காமல் குலுங்காமல்
அரபகத்துப் பாலைகளில்
அதிசயமாய் நீ சுமந்தாய் !
நீ-
“வஹி’ வரும் போதெல்லாம்
வலி தாங்க முடியாமல்
வழியில் படுத்தெழுந்த
வகையறிந்து அதிசயித்தேன் !
எங்கள்
அண்ணல் நபிகளையா
அங்கே நீ சுமந்தாய் ?
பயகம்பர் நபிக்கு
பால் தந்த ஒட்டகமே !
எங்கள் நபிக்கு
உன் பால் தந்து
உபசரித் ‘தாய்’ நீ !
அவரோ
அகிலத்தை
அன்பால் நேசித்து
அருளே நிறைகின்ற
பண்பால் உயரவைத்து
பசிபோக்கிப் பாதுகாத்தார் !
பால் தந்த ஒட்டகமே !
பண்பாட்டு நாயகர்
பயணித்த ஒட்டகமே !
நீங்கள்
உங்கள் குலத்திடையே
உயர் திணை ஆனீர்கள் !
எங்கள் மனப் பரப்பில்
இன்னும் நடக் கின்றீர்கள் !
ஒட்டகமே ! பட்டினியின்
புத்தகமே !
நீ
சுமந்து நடந்தது
எங்களின்
பல்கலைக் கழகத்துப்
பாடப் புத்தகத்தையல்லவா ?
நீ
முதுகினில் தானே
முத்து நபி சுமந்தாய் ?
நாங்களோ
இறுதி நாள் வரையில்
இதயத்தில் அல்லவா
எப்போதும் சுமந்திடுவோம் ?
ஒட்டகமே !
எங்கள் நபி நாயகத்தை
இமைகளைக் கண்கள்
இலகுவாய்ச் சுமப்பதுபோல்
ஏற்றமுடன் மகிழ்ந்து
கடுவெளியில் நீ சுமந்தாய் !
சுவனத்துப் பூ மலரை
கவனத்துடன் சுமந்ததினால்
பாலை வனக் கப்பல் நீ
ஒளி சுமந்த ஒட்டகமே !
நீ
வழி நடந்த போதெல்லாம்
சூரியச் சூட்டில்
சுழன்றடித்த காற்று எல்லாம்
தென்றலாய் தானே
தெரிந்திருக்கும் உனக்கு ?
உன்மீது அப்போது
ஒட்டிய தூசியெல்லாம்
சுவனத்து மகரந்த
தூசிகள் அல்லவா ?
அன்று நீ
கஸ்தூரி வாடையில்
கரைந்திருப்பாய் !
கண்கள் எல்லாம்
காட்சிகளில் நிறைந்திருப்பாய் !
மலக்குகள் உனைக்கண்டு
மனம் புழுங்கி இருப்பார்கள்
ஒட்டகமே !
செல்வ நபி நாதரிடம்
சேர்ந்ததின் பின் தானே
பகுத்தறிவு உனக்குப்
பக்குவப்பட்டது ?
அதனால் தான்
மதீனத்து மண்ணில்
மன்னரின் இடத்தை
படுத்துக் கிடந்து நீ
பக்குவமாய் சொன்னாய் !
நீ
படுத்த இடத்தில தானே
பள்ளி எழுந்தது ?
ஒட்டகமே! ஒட்டகமே!
ஒளி சுமந்த பெட்டகமே !
நீ
நானாக
இருந்திருக்கக் கூடாதா ?
2 செப்டம்பர், 2012
தீவிரவாத தொடர்பு என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களின் பெயரில், 11 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து, மீண்டும் தனது முஸ்லிம் வேட்டையை துவக்கியுள்ளது கர்நாடகா பா.ஜ.க அரசு.
இதில் பிரபல பத்திரிகையான "டெக்கான் ஹெரால்டில்" பணியாற்றும் பத்திரிகையாளர் மற்றும் டி.ஆர்.டி.ஒ, விஞ்சானி, இஞ்சீனியர் மற்றும் டாக்டர் ஆகியோரும் அடங்குவர். இதுவரை பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்த (சில) காவல் துறை கயவர்களால் ஒருவர் மீது கூட குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. ஆனால், அவ்வப்போது முஸ்லிம்களை அச்சத்தில் ஆழ்த்தி, இந்த சமுதாயம் எதிர்கொள்ளும் கடும் வேதனைகளை ரசிப்பதில் வெற்றிக்கண்டு வருகின்றனர்.
தற்போது, கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் வாலிபர்கள் குறித்த நிலையை பார்ப்போம்:
(1 ) Dr Zafar Iqbal (27) MBBS PGDC (Cardiology) திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. மனைவியும் MBBS டாக்டர் தான். மற்றொரு சகோததரரும் ஒரு சகோதரியும் மருத்துவம் படித்த டாக்டர்கள். தந்தை ஷேக் ரபீக் அஹ்மதும் டாக்டர் என்பதோடு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் பக்கத்து வீட்டுக்காரர்களான மரியாதைக்குரிய இந்த குடும்பம், இன்று உளவுத்துறையின் முஸ்லிம் விரோத போக்கால் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
(2) Mutheevur Rahman Siddiqi (26) "டெக்கான் ஹெரால்டில்" பணியாற்றும் பத்திரிகையாளர். பகுதிநேரம் வேலை பார்த்துக்கொண்டே "இதழியல்" உள்ளிட்ட, பட்ட மேற்படிப்பை படித்து விட்டு 3 ஆண்டுகளாக "டெக்கான் ஹெரால்டில்" பணியாற்றும் பத்திரிகையாளர்.
(3) Wahid Hussain (26) சொந்த ஊரான ஹுப்ளியில் நேரு காலேஜில் BBA படித்த அவர், ஹுப்ளியின் மற்றொருக்கல்லூரியான IEMSல், MBA முடித்துவிட்டு கடந்த 8 மாதங்களாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார்.
(4) Ubaithullah Bahadur (24) NTTFல் "Tool Dye Making" கோர்ஸ் முடித்த அவர், 18 மாதங்கள் துபாயில் வேலை பார்த்தவர். தற்போது "சீனா"வில் வேலை பார்க்க முயற்சித்து, குறிப்பிட்ட கம்பெனியில் "இண்டர்வியூ" முடித்துள்ள நிலையில், போலீஸ் வீட்டுக்கு வந்த போது "பாஸ்போர்ட்" என்கொய்ரியாக இருக்கும் என்று நினைத்தேன் என்கிறார், BSNLல் கடந்த 36 வருடமாக வேலை பார்த்துவரும், அவரது தந்தை ஜாபர்.
இவர்கள் தவிர, சாதிக், ஏஜாஸ் அஹ்மத் (விஞ்சானி) ஷோயப் அஹ்மத் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு 2 நாட்களாக கொடுஞ்சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பின், தற்போது சட்ட பூர்வமாக நேற்று இரவு கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Source: http://chennaipopularfront.blogspot.in/ & http://www.thoothuonline.com/
"இல்லத்தரசிகளுக்கு கணவன்மார் இனி மாத சம்பளம் தரவேண்டும்''
சட்டம் கொண்டு வர யோசனை
புதுடெல்லி, செப்.10-
அலுவலகங்கள், கம்பெனிகளில் வேலை பார்க்காமல் இல்லத்தரசிகளாக இருக்கிற பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பில்லை.
அவர்களுமே, "வீட்டில் சும்மாதான் இருக்கேன். சம்பளம் இல்லாத வேலைக்காரியாக இருக்கேன்'' என வேதனையுடன் அங்கலாய்ப்பது உண்டு.
மாத சம்பள திட்டம்
இந்த நிலையை மாற்ற ஒரு திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக சர்வேக்களும் நடத்தப்பட்டுள்ளன.
அதாவது,
இல்லத்தரசிகளாக இருந்துகொண்டு குடும்ப நிர்வாகம்,
குழந்தை வளர்ப்பு,
சமையல் என பம்பரமாக சுற்றி சுழன்று வீட்டு வேலைகளை கவனித்து வரும் பெண்களுக்கு,
அவர்களது கணவன்மார் மாதம்தோறும் ஒரு தொகையை சம்பளமாக தர வேண்டும் என்று சட்டம் கொண்டுவரும் யோசனை பரிசீலனையில் இருக்கிறது.
நியாயப்படுத்துகிறார் மந்திரி
இதுபற்றி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணா டிராத் கூறுகையில்,
"இந்த யோசனையை சில தன்னார்வ தொண்டமைப்புகள் முன்வைத்துள்ளன.
இதை பல்வேறு மாநில மந்திரிகள் கூட்டத்தில் வரும் 17, 18 தேதிகளில் விவாதிப்போம்.
வீட்டில் பெண்கள் செய்யக்கூடிய வேலையும் பொருளாதார செயல்பாடுதான்.
ஆனால் கணக்கில் வருவதில்லை.
ஒரு குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க கட்டணம் கொடுக்க வேண்டும்.
சமையல் வேலையை செய்ய வெளியில் இருந்து ஆள் வைத்தால் அதற்கு மாத சம்பளம் தர வேண்டும்.
எனவே பெண்களுக்கு கணவர்மார் சம்பளம் தந்தால் அது சமூகத்தில் அவர்களுக்கும் அதிகார அடையாளம் கிடைக்க செய்வதாகும்'' என்றார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=757108&disdate=9/10/2012
//தற்போது இந்நாட்டு பெண்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டியதன் பயனாக இன்று தேவையான சவுதி பெண்கள் சிரமமின்றி மருத்துவ மனைகளுக்கு கிடைத்து வருகின்றனர். கணிணி பிரிவிலும், காரியதரிசியாகவும், ஆசிரியையாகவும் மற்றும் பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற வேலைகளை பெறுவதில் தற்போது சவுதி பெண்கள் வெளி நாட்டு பெண்களோடு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். //
நல்லது. ஓட்டுனர் பயிற்சி கொடுக்கப்பட்டு, உரிமம் கொடுக்கப்பட்டு கார் ஓட்டவும் கற்றுக் கொண்டால், முன்பின் தெரியாத ஆண்களுக்கு முலைப்பால் கொடுக்கும் கொடுமையில் இருந்தும் தப்பலாம். சவுதி அரசு தான் இதற்கும் மனது வைக்க வேண்டும்.
//நல்லது. ஓட்டுனர் பயிற்சி கொடுக்கப்பட்டு, உரிமம் கொடுக்கப்பட்டு கார் ஓட்டவும் கற்றுக் கொண்டால்,//
கார் ஓட்டும் உரிமையும் இன்னும் கொஞ்ச நாளில் பெண்களுக்கு கிடைத்து விடும். அப்படி கிடைத்தால் அதனால் பாதிக்கப்படுவது நமது இந்தியாவின் பொருளாதாரம் என்பதையும் மறந்து விட வேண்டாம்.
அடுத்து பால் விஷயம். இதற்கு குர்ஆனில் எந்த ஆதாரமும் இல்லை. யாராவது தவறான விளக்கத்தில் ஏதும் சொல்லியிருந்தால் அதை தூரமாக்கி விடுவார்கள் முஸ்லிம்கள்.
Kavya says:
September 9, 2012 at 2:50 pm
மலர்மன்னன்!
என்று வருணாஷ்ரம் எழுதப்பட்டதோ அன்றிலிருந்து தீண்டாமை தொடங்கியது. அப்போது நாமிருந்தோமா எப்படிச்சொல்கிறாய் என்றால், இப்படிச்சொல்லலாம்: வருணாஷரம் நான்கு வருணத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறது. நான்கிலும் வாரா மக்களே தீண்டத்தகாதவராயினர். ஏனெனில் அவர்களுக்கு இந்துமதத்தில் இடமில்லை. அக்காலத்தில் அனைவரும் இந்துமதமே. பின்னாளில்தான் சமணமும் பவுத்தமும் இவ்வருணக்கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கின. மதவழியாக வந்ததுதான் தீண்டாமை. பின்னர் சமூகத்தில் நச்சுக்காற்றாய்ப் பரவியது. மக்களில் ஒரு சாரார் இக்கொடுமைக்காளாகினர். இதை எவரும் மறுக்கவில்லை.
நல்லோர் எக்காலத்திலும் உண்டு. இன்று ஒரு அப்பாவியைப்போட்டு நால்வர் அடித்தால் அவனுக்காக ஆயிரத்தில் ஒருவராவது வருவாரன்றோ? அப்படித்தான் தீண்டாமை தோன்றிய காலத்திலும எதிர்ப்புக்குரல்கள் எழுந்திருக்கும். அவை வரலாற்றில் பதியப்படவில்லை.
இராமனுஜர் காலத்தில் அவர் தன் மதத்தின் உள்ளின்றுதான் தீண்டாமையை எதிர்த்தார். அதாவது மதத்தில் சீர்திருத்தம் வேண்டுமென்றார். செய்தும் காட்டினார். தலித்துகளுக்கு அனுமதி கொடுத்தார் கோயில் சென்று வண்ங்க. ஆயினும் அவர் காலத்தில் சமூகத்தில் நிலவிய தீண்டாமையை அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தலித்துகள் ஊருக்கு வெளியேதான் வைக்கப்பட்டனர். ஊருக்குள்ளே நுழையும்போது அவர்கள் ஆரென்று காணிபிக்க பல அடையாளங்களை அவர்கள் காட்டவேண்டும்.. இவற்றையெலலாம் இராமனுஜரால் தடுக்க வியலாது. அவர் வெறும் மதச்சீர்திருத்த வாதி மட்டுமே.
அப்போதிருந்த சமூகத்தலைவர்கள் செய்திருக்க முடியும் செய்யவில்லை. ஏனென்று எனக்குத் தெரியாது. ஒருவேளை மன்னராட்சியினாலே.
அம்பேத்கர் காலம் நம் காலம். வெள்ளையன் கற்றுக்கொடுத்த ஜனநாயம் வந்தததனாலேயே தீண்டாமையைச் சட்டம் போட்டு தடுக்க முடிந்தது. எனினும் நடக்கிறது. தலித்துப்பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் பல மாநிலங்களில்.
ஆக, நீங்கள் சொன்ன கருத்தின்படி, ஆதிகாலத்தில் தீண்டாமை எதிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் வெற்றி பெறாமல் உங்கள் வருணக்கொள்கை தடுத்தது. இராமனுஜரையும் தடுத்தது. உங்களை எதிர்த்து வெற்றி கண்டார் மதத்தில் மட்டும். பார்ப்பனர்கள் அவரைத் தூடனை பண்ணியது வரலாற்றில் அவர்களாலேயே எழுதப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் வெள்ளையனாலாயே வெற்றிகண்டார்.
மக்கள் மனம் மாறுகிறதோ இல்லையோ, இந்து மதம் தன்னை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். அது வருணக்கொள்கையை உதறிவிட வேண்டும். ஹரிசண்டல், வெர்ட்டிக்கல் என்றூ நியாயப்படுத்துவதை விட்டுவிட்டு தலித்துகளை சமமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். நீங்கள் செய்தால் மற்ற மக்கள் உங்களைப்பார்த்து திருந்தமாட்டார்களா என்ன? எங்கிருந்தோ வந்த ராஜீக்களையும் போற்றத்தெரிந்த நீங்கள் ஆதிகாலத்திலிருந்து தமிழ்மக்களிடையே வாழும் தலித்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதா என்ன? ஏற்றுக்கொள்வதென்றால், நோ வருணாஷ்ரதர்மம் என்று பொருள் !
அஸ்ஸலாமு அலைக்கும்
பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை செய்யும் அறிகுறி (சவுதியில்)உங்கள் நாட்களும் என்னபடுகின்றன என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
azeem,
சரியா உண்மையை சொல்லிட்டாரே,இப்படி சு.பி ஏர்போர்ட்டில் குந்தியிருப்பதை அவரே இப்படி பதிவு போட்டு சொல்லிப்பாரா?
மற்ற பெண்கள் என்றதும் என்ன ஒரு குஷியாப்பதிவுப்போடுறார்,குரூர எண்ணத்தின் வெளிப்பாடே இது.
அரபு நாட்டில் வேலை செய்வபவர்களால் எல்லாம் இந்தியப்பொருளாதாரம் வாழவில்லை.தனி நபர் வாழ்க்கைக்கு தான் அப்பணம் போகிறது. அங்கு வேலை செய்பவர்கள் இந்தியாவுக்கு அனுப்புவது சொற்ப பணமே,மேலும் பெர்ம்பாலும் ஹவாலா என்பதால் அரசுக்கு நட்டமே.
அரபு தேசத்தில் வேலை இல்லை என்ற நிலை வந்தால் கஷ்டப்படப்போவது இச்லாமியர்களே.
அவர்களுக்கு மற்ற மேலை நாடுகளில் வேலை செய்யும் அளவுக்கு கல்வியும் இல்லை, மற்ற நாடுகளும் வரவேற்காது.
மேலும் அரபுநாட்டுக்கு விசா தருகிறேன் என ஏஜண்ட் வேலை செய்து மக்களை ஏமாற்றிப்பிழைப்பதிலும் மண் விழுந்துவிடும்.
வவ்வால்!
//மற்ற பெண்கள் என்றதும் என்ன ஒரு குஷியாப்பதிவுப்போடுறார்,குரூர எண்ணத்தின் வெளிப்பாடே இது.//
அந்த பெண்கள் விரும்பினால் மாற்று வேலைகளுக்கு சென்றிருக்கலாம். விரும்பாதவர்கள் தான் தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்புகின்றனர். உலகம் பரந்து விரிந்து. சவுதி இல்லை என்றால் எத்தனையோ நாடுகள் அந்த பெண்களுக்கு.
அரபு தேசத்தில் வேலை இல்லை என்ற நிலை வந்தால் கஷ்டப்படப்போவது இச்லாமியர்களே.
//அவர்களுக்கு மற்ற மேலை நாடுகளில் வேலை செய்யும் அளவுக்கு கல்வியும் இல்லை, மற்ற நாடுகளும் வரவேற்காது.//
ஹி...ஹி...நீங்கள் சொல்வது 20 வருடங்களுக்கு முன்பிருந்த நிலை. இன்று வீட்டுக்கொரு பட்டதாரி. இட ஒதுக்கீட்டின் பயனால் முன்பை விட அதிகம் அரசு உத்தியோகத்தை முஸ்லிம்கள் பெற்று வருகின்றனர். இன்னும் தூக்கத்திலேயே இருந்தால் எப்பூடி.....:-)
//அரபு நாட்டில் வேலை செய்வபவர்களால் எல்லாம் இந்தியப்பொருளாதாரம் வாழவில்லை.தனி நபர் வாழ்க்கைக்கு தான் அப்பணம் போகிறது. அங்கு வேலை செய்பவர்கள் இந்தியாவுக்கு அனுப்புவது சொற்ப பணமே,மேலும் பெர்ம்பாலும் ஹவாலா என்பதால் அரசுக்கு நட்டமே.//
இது சம்பந்தமாக அடுத்த பதிவு வருகிறது. அதில் பார்த்துக் கொள்ளவும்.
dear brother,
பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை செய்யும் அறிகுறி (சவுதியில்)உங்கள் நாட்களும் என்னபடுகின்றன என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
Here ungal means i did not mean you,(I am sorry) i mean generally we male expatriates.
Mr.Bat even he found a reason to make fasaad.
//Here ungal means i did not mean you,(I am sorry) i mean generally we male expatriates.
Mr.Bat even he found a reason to make fasaad.//
அது பொதுவாக சொன்ன வார்த்தை என்பதை நானும் அறிவேன். எனவே சங்கடப்பட இதில் ஒன்றுமில்லை சகோ.....
//பால் விஷயம். இதற்கு குர்ஆனில் எந்த ஆதாரமும் இல்லை. யாராவது தவறான விளக்கத்தில் ஏதும் சொல்லியிருந்தால் அதை தூரமாக்கி விடுவார்கள் முஸ்லிம்கள். //
அப்படியா சுபி?
ஒரு சந்தேகம்: நீங்கள் பார்க்க முனையாத, பதிலேதும் கொடுக்காத என் பதிவு ஒன்றை உங்கள் முன் கொண்டு வருகிறேன். இந்த “பால் விஷயம்” பற்றி அதில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து அதை எப்படி தூரமாக்குவீர்கள் என்று சொல்வீர்களா?
பதிவு: http://dharumi.blogspot.in/2012/08/586.html
////பால் விஷயம். இதற்கு குர்ஆனில் எந்த ஆதாரமும் இல்லை. யாராவது தவறான விளக்கத்தில் ஏதும் சொல்லியிருந்தால் அதை தூரமாக்கி விடுவார்கள் முஸ்லிம்கள். //
அப்படியா சுபி?
ஒரு சந்தேகம்: நீங்கள் பார்க்க முனையாத, பதிலேதும் கொடுக்காத என் பதிவு ஒன்றை உங்கள் முன் கொண்டு வருகிறேன். இந்த “பால் விஷயம்” பற்றி அதில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து அதை எப்படி தூரமாக்குவீர்கள் என்று சொல்வீர்களா?
http://dharumi.blogspot.in/2012/06/576.html
Post a Comment