Followers

Saturday, September 08, 2012

நடிகர் மம்முட்டியை கடவுளாக்கலாமா!



கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு 90க்கும் அதிகமான குழந்தைகள் பலியானார்கள். விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட ஹீரோக்கள் ஓடிப்போய் அஞ்சலி செலுத்தி மாலை மாலையாய் கண்ணீர் விட்டார்கள். ஆளாளுக்கு லட்சக் கணக்கில் நிதி உதவி அளிப்பதாக அறிக்கை விட்டார்கள். ஆனால் எல்லாமே வெறும் வேஷமாகிப்போனது ஒரு சில நடிகர்கள் தவிர மற்ற யாருமே பணம் அனுப்பவில்லை. சிலர் கொடுத்த காசோலைகள் திரும்பி வந்தது. திரைக்கு வெளியேயும் தங்களை சிறந்த நடிகர்களாக நிரூபித்தார்கள் ஹீரோக்கள்.

இப்போது சிவாகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 38 பேர் இறந்துள்ளனர். நிதி உதவி அளிக்க வேண்டாம். அல்லது அளிப்பதாக வெட்டி பந்தா அறிக்கை விட வேண்டாம். குறைந்த பட்சம் அனுதாப செய்தியாவது வெளியிட்டார்களா என்றால் இல்லை. எங்கே பணம் கொடுக்க வேண்டியது வருமோ என்று யாரும் வாய் திறக்கவில்லை. "என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்" என்று புலம்பிய சூப்பர் ஸ்டார்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கண்டுகொள்ள வில்லை. சிவகாசி என்ற படத்தில் நடித்த விஜய்க்கு, காஜல் அகர்வாலோடு டூயட் பாடுவதற்குதான் நேரம் இருக்கிறது. அவரது கவலை இப்போது அவரது துப்பாக்கி தீபாவளிக்கு வெடிக்குமா வெடிக்காதா என்பது பற்றித்தானே தவிர சிவாகாசி பட்டாசை பற்றியும், அங்கே வெடித்து சிதறிய அப்பாவி தொழிலாளர்களையும் பற்றி அல்ல.

ஆனால் இந்த ஹீரோக்களின் முகத்தில் அடித்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. யாரும் கேட்காமல், யாரும் கோரிக்கை வைக்காமல் தனது மருந்து கம்பெனியில் இருந்து சுமார் 35 லட்சம் மதிப்புள்ள தீக்காய மருந்துகளை சிவகாசிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மம்முட்டி.

தீகாயங்களுக்கான மருந்து தயாரிப்பதில் மம்முட்டிக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை புகழ்பெற்றது. அக்னிஜித் என்ற மருந்து ரொம்பவே பிரபலம். இந்த மருத்துவமனைக்கு சிவகாசி மருத்துவமனையிலிருந்து அக்ஜினித் மருந்து கேட்டு 35 லட்சம் ரூபாய்கு ஆர்டர் கொடுத்தது. இதைக் கேள்விப்பட்ட மம்முட்டி சிவாகாசிக்கு தேவையான அனைத்து தீக்காய மருந்துகளையும் இலவசமா அனுப்பி வைக்கும்படியும். இன்னும் மருந்துகள் எவ்வளவு தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, பிரபல நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். கேரளா, கொச்சியில், நடிகர் மம்முட்டி நிர்வகித்து வரும், "பதஞ்சலி ஹெர்பல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், காயமடைந்தவர்களுக்கு, "அக்னி ஜித்து என்ற, மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிகிச்சைக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும்.

இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர் மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி கூறுகையில், ""நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன், என்றார்.

தமிழ் ஹீரோக்களே சினிமாவில் மட்டுமல்ல... நிஜத்திலும் ஹீரோவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
தினமலர்

08-09-2012

----------------------------------------------

கூத்தாடிகளில் ஒரு வித்தியாசமானவராக தெரிகிறார் மம்முட்டி. நம் ஊர் கூத்தாடிகள் கோடிகளில் புரண்டாலும் பணத்தை வெளியில் எடுக்க அஞ்சும் நிலையில் மம்முட்டியின் இந்த செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.

அம்மு - salem ,IndiaSep 8 2012 10:33AM
தலை வணங்குகிறேன் தலைவா

Dharmar - Sivakasi ,IndiaSep 8 2012 10:21AM
GOD = MAMMOOTY

பாலாஜி - dubai ,IndiaSep 8 2012 10:10AM
ரியல் ஹீரோ தலை வணங்குகிறேன் எங்கே நம் மானம் கெட்ட ஹீரோக்கள் வெட்கபடுகிறேன்

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"

என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப உதவி செய்த மம்முட்டியை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் நம் உடன் பிறப்புக்கள் எவ்வாறு வாழ்த்துகிறார்கள் என்பதற்கு சில சாம்பிள்கள் மேலே. 'தலை வணங்குகிறேன் தலைவா' 'காட் மம்முட்டி' என்று ஏகத்துக்கும் அதிகமாக புகழ்ந்து அவரை கடவுள் ஸ்தானத்திற்கு கொண்டு செல்வது ஏற்புடையதுதானா? நம் தமிழர்கள் ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் அதிகமாக உணர்ச்சி வசப் படுகிறார்களோ தெரியவில்லை.

இப்படி கடவுளுக்கு இலக்கணம் என்ன என்று தெரியாமல் நடிகர்களையும் போலி சாமியார்களையும், போலி ஹஜ்ரத்மார்களையும், போலி பாதிரிகளையும் நம்பி வாழ்க்கையை தொலைக்கும் தமிழர்கள் திருந்துவது எந்நாளோ அந்நாளே 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு' என்று பெருமைபட்டுக் கொள்ள முடியும்.

தேடி சோறு நிதம் தின்று,

பல சின்னஞ் சிறு கதைகள் பேசி,

மனம் வாடி துன்பமிக உழன்று

பிறர் வாட பல செயல்கள் செய்து

நிறை கூடி கிழப் பருவம் எய்தி

கொடும் கூற்றுகிரை என பின் மாயும்

பல வேடிக்கை மனிதரை போல்

நான் வீழ்வேன் என நினைத்தாயோ!

இந்த வரிகளை பாரதி தன் ஒருவனுக்கு மட்டும் சொல்லிக் கொள்ளவில்லை. ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு சுய மரியாதையையும் அயராத முயற்சியையும் அழகாக ஊட்டுகின்ற ஒரு பாடல்.

ஆனால் நாமோ 100 நாள் வேலையில் கிடைத்ததை வாங்கிக் கொண்டு பாதியை டாஸ்மார்க்கிலும் மீதியை கூத்தாடிகள் தலையிலும் கொட்டி விட்டு 'ஙே' என்று அசடு வழிந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறும் நாள் எப்போது?

30 comments:

UNMAIKAL said...

மாமன்-மைத்துனர்களுக்கு சாணி அபிஷேகம்,

துடைப்பத்தில் அடி-

திருச்சியில் மழை வேண்டி விநோத வழிபாடு


திருச்சி: விவசாயம் தடையின்றி நடைபெற பருவ மழை பெய்ய வேண்டி, திருச்சியில் விநோதமான வழிபாடு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் பசு மாட்டு சாணத்தை கரைத்து மாமன், மைத்துனர் உறவு முறையில் உள்ளவர்களின் மீது ஊற்றி, துடைப்பத்தால் அடித்து, மக்கள் மழை பெய்ய வேண்டினர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த திருவேங்கடாபுரத்தில் சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியினர் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளதால், பருவ மழை பெய்யாவிட்டால் வருமானம் பாதிக்கிறது.

தற்போது கடலை, சோளம், கம்பு, துவரை போன்றவை நிலங்களில் பயிரிட்டுள்ள நிலையில் மழை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

இதனால் மழை வேண்டி விநோத வழிபாடு நடத்தப்பட்டது.

இதற்காக திருவேங்கடாபுரம் மற்றும் பக்கத்து ஊரான வெங்காயபட்டி ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த உறவினர்கள் ஒன்றாக கூடினர்.

நேற்று மாலை 6 மணிக்கு திருவேங்கடாபுரத்தில் பள்ளி அருகே இருந்த மழைக்கல் சாமி எடுத்து நிமிர்த்தி வைத்தனர்.

மழைக்கல் சாமிக்கு நீராட்டு நடத்தி, எண்ணெய் தடவி அபிஷேகம் செய்தனர்.

அதன்பிறகு பசு மாட்டு சாணியை கொண்டு வந்து,

சட்டிகளில் கரைத்து மாமன் முறையில் உள்ளவர்களின் மீது மைத்துனர்கள் ஊற்றி,

அவர்களை துடைப்பதால் அடித்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு, மைத்துனர்களின் மீது மாமன்கள் சாணி கரைசலை ஊற்றி, துடைப்பதால் அடித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த வழிபாடு முடிந்த பிறகு, அடுத்த 8 நாட்களில் மழை பெய்ய வேண்டும் என்று ஊர் மக்கள் உருக்கமாக வேண்டி கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.

மக்கள் வேண்டி கொண்டது போல இன்னும் 8 நாட்களில் மழை பெய்துவிட்டால், மழைக்கல் சாமிக்கு பூஜை செய்து, பொங்கல் வைத்து விழா கொண்டி, சாமியை சாய்த்துவிடுவார்களாம்.

இல்லாவிட்டால் மீண்டும் அதே வழிபாடு நடைபெறுமாம்.

கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மழை வேண்டி வழிபாடு நடைபெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

http://tamil.oneindia.in/news/2012/09/08/tamilnadu-cow-dung-poured-over-relatives-as-rain-161072.html

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

salam,
கல்லையும்,மண்ணையும் வணங்கும் மோசமான சமுதாயம் இதுப் போன்று ஆபத்திற்கு உதவுபவர்களை கடவுளாக்குவதால் தான் சாமியார்கள் புதிது புதிதாக பிறகிறார்கள்.நல்ல கருத்துக்களை தர முயன்றுள்ளமைக்கு நன்றி சகோ..

tvpmuslim.blogspot.com

நம்பள்கி said...

///ஒரு சில நடிகர்கள் தவிர மற்ற யாருமே பணம் அனுப்பவில்லை. சிலர் கொடுத்த காசோலைகள் திரும்பி வந்தது. திரைக்கு வெளியேயும் தங்களை சிறந்த நடிகர்களாக நிரூபித்தார்கள் ஹீரோக்கள்.///

தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி! எம்ஜியார் அன்றே கத்துக் கொடுத்த பாடம்.

இந்த சுட்டியைப் பாருங்கள்....அன்றே எம்ஜியார் தமிழனுக்கு கொடுத்த கடுக்கா; பேப்பரில் பேர் வந்த பைசா பேராது இவர்களிடம். எம்ஜீயரைப் பற்றி அறிந்து கொள்ள படிக்கவேண்டிய பதிவு...

http://www.nambalki.com/2012/06/blog-post.html

எப்படி எம்ஜியார் அண்ணாவை வைத்து வியாபாரம் செய்தாரோ அதுமாதிரி நம்ம நடிகர்கள் எம்ஜீயாரை வைத்து வியாபரம் செய்கிறார்கள். எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//எப்படி எம்ஜியார் அண்ணாவை வைத்து வியாபாரம் செய்தாரோ அதுமாதிரி நம்ம நடிகர்கள் எம்ஜீயாரை வைத்து வியாபரம் செய்கிறார்கள். எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... //

மிக சரியாக சொன்னீர்கள். என்றைக்கு தமிழர்களிடம் இருந்து சினிமா மயக்கம் நீங்குகிறதோ அன்றுதான் தமிழகத்துக்கு விடிவு காலம்.

suvanappiriyan said...

சகோ திருவாளப்புத்தூர் முஸ்லிம்!

//கல்லையும்,மண்ணையும் வணங்கும் மோசமான சமுதாயம் இதுப் போன்று ஆபத்திற்கு உதவுபவர்களை கடவுளாக்குவதால் தான் சாமியார்கள் புதிது புதிதாக பிறகிறார்கள்.நல்ல கருத்துக்களை தர முயன்றுள்ளமைக்கு நன்றி சகோ..//

போலி ஆன்மீகமும் சினிமா மாயையும் நம் சகோதரர்களிடமிருந்து அகல வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//திருச்சி: விவசாயம் தடையின்றி நடைபெற பருவ மழை பெய்ய வேண்டி, திருச்சியில் விநோதமான வழிபாடு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் பசு மாட்டு சாணத்தை கரைத்து மாமன், மைத்துனர் உறவு முறையில் உள்ளவர்களின் மீது ஊற்றி, துடைப்பத்தால் அடித்து, மக்கள் மழை பெய்ய வேண்டினர்.//

இது ஒரு விநோதமான பிரார்த்தனையாக இருக்கிறதே! தமிழகத்தில் இரண்டு நாட்களாக மழை என்று கேள்விப்பட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

நம்பள்கி said...

நீங்கள் நன்றாக சிந்திக்கக் கூடியவர் என்று நினைத்தேன். மேலும், தினமலரைப் பற்றி நன்கு அறிந்தவர். அப்படியும் எப்படி?

ஓரமா இருக்கிற தேரை இழுத்து நடுத்தெருவில் விட்டா...கவனம் தேர் மேலே தான் போகும். அதுமாதிரி...

இப்போ சினிமா மயக்கம் கொண்ட தமிழ் மக்களின் கவனம் நடிகர்கள் மேலே! இது தினமலர் அரசாங்கத்திற்கு செய்யும் உதவி; தானாடாவிட்டாலும் தசை ஆடும்!

இதுவே வேறு யாராவது ஆண்டால்? தினமலர் எப்படி எழுதும்?????

எந்த நடிகரும் இதற்கு பத்து பைசா தரத் தேவியில்லை.

அப்போ தமிழ் நாட்டில் நடிகர்களைத் தவிர மற்ற எல்லோரும், நடிகைகளையும் சேர்த்து தான், பிசைக்காரர்க்களா? ஏன் இதே கேள்வியை முட்டாள் தமிழ் மக்கள் நடிகைகளிடம் கேட்கமாட்டேன் என்கிறார்கள்?

இவையெல்லாம் அரசாங்கம் செய்யவேண்டியவை.

மம்மூட்டி கொடுத்தால் நல்லது...பேப்பரில் வந்தாசு பார்ப்போம்!

நம்பள்கி said...

உண்மைகள்!

//திருச்சி: இதில் பசு மாட்டு சாணத்தை கரைத்து மாமன், மைத்துனர் உறவு முறையில் உள்ளவர்களின் மீது ஊற்றி, துடைப்பத்தால் அடித்து, மக்கள் மழை பெய்ய வேண்டினர்.//

இந்த ஆட்டத்தில் மாமனாரை சேர்த்துக் கொள்ள முடியுமா???

Anonymous said...

மலர்மன்னன் says:
September 7, 2012 at 11:59 pm

சுவனப் பிரியன், ஹிந்துக்கள் மாற்று மதங்களுக்கு மாறிவிடக் கூடாது என்பதில் உங்களுக்கு இருக்கும் கவலையைப் பாராட்டுகிறேன். என்னதான் இருந்தாலும் பழைய பாசம் விட்டுப் போகுமா? ஆனால் உங்கள் இஷ்டத்துக்குக் குரான் வாசகங்களுக்கு விளக்கம் அளிப்பதால் இப்போதே உங்கள் மதத்தவர் பலர் உங்கள் மீது சீற்றம் கொண்டுள்ளார்கள். இப்போது ஹிந்து மதத்தவர் மீது உங்கள் பழைய பாசம் உங்களையும் அறியாமல் பீறிட்டெழுகிறது. சவூதியில் இருப்பதாக வேறு சொல்லிக்கொள்கிறீர்கள். நீங்கள் சிறிது முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது! புரி சங்கராசாரியார் பேச்சைக் கேட்பவர்கள் எத்தனைபேர்? ஜகஜீவன் வந்துபோனதற்காக எவராவது சுத்தி சடங்கு செய்திருந்தால் அதற்கு நாங்கள் எல்லாரும் எப்படிப் பொறுப்பாவோம்? இஸ்லாத்தில் உள்ள ஃபத்வா வசதி எல்லாம் இங்கே கிடையாது! இம்மாதிரியான அபத்தமான கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? உங்கள் நிலைமை எவ்வளவு கீழே போய்விட்டது பார்த்தீர்களா? இதற்குத்தான் சேரிடம் அறிந்து சேர் என்பது! என்னிடமிருந்து ஹுசைனி பிராமணர்கள் சமாசாரம் மாதிரி எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தும் வெட்டிப்பேச்சில் நான் இறங்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தொடங்கி விட்டீர்களே! தவறான தகவல் தந்தமைக்குப் போனால் போகிறது என்கிற தொனியில் காலங் கடந்து, அதுவும் நான் சுட்டிக் காட்டிய பிறகு வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவிக்கிறீர்கள்! உங்களைப் பற்றி எனக்கு இருந்த மதிப்பீடு மளமள வெனக் கீழே போக நீங்களே காரணமாகிறீர்களே! என்னதான் நான் சாதாரண ஆள் என்றாலும் நீங்களே என்னை உங்கள் பாட்டனாக ஏற்றுக் கொண்டிருப்பதாக வாக்கு மூலம் அளித்திருப்பதால் பாட்டனின் அபிப்ராயத்தில் ஒரு பேரன் கீழே சரியலாமா? இனியாவது சட்டென விலகி வந்து விடுங்கள். சகவாச தோஷத்தால் ஏற்கனவே நீங்கள் இடும் எதிர் வினைகள் அபத்தமாகி வருகின்றன!
-மலர்மன்னன்

Anonymous said...

Kavya says:
September 8, 2012 at 10:16 am

- மலர் மன்னன் !

- இந்த் ட்ரிக்ஸ் வேலையெல்லாம் வேண்டாம். அவர் எழுதுவதை தடுத்துவிட்டால் எல்லாம் மறைந்து விடுமென நினைக்கிறீர்கள். சுவனப்பிரியன் போனபின் கவனப்பிரியன் வந்து சேர்வார். நீங்கள் எழுதுங்கள்; அவரும் எழுதட்டும். படிப்பவர்கள் அவர்களே தீர்மானிக்கட்டும்
-
- இந்துவில் தீவிர இந்து என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் மட சேனா இல்லையென்கிறீர்களா? அஃது ஒவ்வொரு ஆண்டும் நடப்பது தெரியாதா? கருநாடகா பார்ப்பன அமைச்சர் ஆச்சாரியா அதைச் சரியென்று சொல்லி தடை செய்யமுடியாதென்றது தெரியாதா? சாதிகள் என்றால் தலித்து வந்து சேருவான் என்று தெரிந்தேதானே சாதிகள் அவசியமென்கிறீர்கள்? உங்கள் ஜாதியாரை மலம் அள்ளச்சொல்லியிருந்தால் சாதிகள் உண்டென்பீர்களா? தனக்கு வந்தால்தானே தலைவலியும் திருகுவலியும்! சாதிகளைச்சரியென்பவர், ஜெகசீவன்ராம் வந்து போனவுடன் செய்யப்பட்ட சுத்திப்பரிகாரத்தில் எங்களுக்குத் தொடர்பில்லையென்றால் எப்படி?
-
- சத்தியமேவே ஜெயதே நிகழ்ச்சியில் ஒரு சமசுகிருத பேராசிரியைச் சொல்லிச்சொல்லி அழுதததை இந்தியா முழுவதும் பார்த்ததே! நீங்கள் பார்க்கவில்லையா? மனம் நோகாமல அப்படியென்ன கல்மனசு உங்களுக்கு? அப்பெண் என்ன பத்துதலைமுறைகளுக்கு முன்னவரா? நம்மிடையேதானே வாழ்கிறார்?
-
- பூரி சங்கராச்சாரியார் சொன்னதை விட்டுத்தள்ளிவிட்டு காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னதைப்போட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? தெய்வத்தின் குரல் என்ற அவர் நூலில் பரப்பப்படும் சாதீயக்கொள்கையை இங்கு விரித்தால் எனக்கும் அதற்கும் தொடர்பில்லையென்பீர்களா? (வருணம் வேறு; சாதி வேறு என்ற உட்டான்ஸ் வேண்டாம். தலித்தை கோயிலுக்குள் நுழையாதே என்று அன்று சொன்னதும், இன்று எங்களைத் தவிர வேறு ஆரும் பூஜாரி ஆகக்கூடாது ஒன்றே. இன்று வருணம் சாதி என்ற வேறுபாட்டை பாமரன் உணரந்து புரிவதன்று; அவன் புரியாததே உங்கள் ஜாதியாருக்கு இனிப்பு. ஏனெனில் புரியப்பட்டால் அவ்வேறுபாட்டின்படி இன்று எவனும் தன்னைப்பிராமணன் என அழைத்துக்கொள்ள முடியாது. நீங்கள் பிராமணன் என்றுதான் எழுதி ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பாமரன் புரிந்தால் உங்கள் கதி? சமநிலைதான். கசக்கும். பூனுல் கிடையாது. ஆவணி அவிட்டமும் கிடையாது. பூனூல் போட்டு இருபிறப்பாளர் என்ற கதையெல்லாம் விட முடியாது. இன்று எவரும் பிராமணன் கிடையாது.
-
- என் கருத்து:
-
- “அன்று… இன்று… அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை” என்றெல்லாம் நீங்கள் சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள். நீங்கள் சாதிகளையும் புரட்டுக்களையும் சரியென்று திண்ணையில் விதவிதமாக எழுதிக்கொண்டுவருபவர். என் கருத்துக்களுக்கும் எனக்கு நேராகப் பதில் சொல்ல உங்களால் முடியவில்லையே ஏன்?

Anonymous said...

பூவண்ணன் says:
September 8, 2012 at 10:20 am

தங்கமணி சார்
அடிச்சு விடறீங்க
ஆணுக்கு XY .பெண்ணுக்கு XX

இதில் ஆண் குழந்தை என்றால் ஆணிடமிருந்து Y மற்றும் பெண்ணிடமிருந்து X
பெண் குழந்தை என்றால் இருவரிடம் இருந்தும் X தான்

அத்தை மகனின் X தாயிடம் இருந்து தான் வருகிறது.மணந்து கொள்ளும் பெண்ணின் X தந்தையிடம் இருந்து வந்தது. இரண்டும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த X தான் இதற்கும் சித்தப்பா மகனுக்கும் என்ன வித்தியாசம் வருகிறது.
அத்தையின் கணவன்,சித்தப்பாவின் மனைவி வேறு குடும்பத்தவர் .இரண்டு வாரிசுகளுக்கும் வித்தியாசம் கிடையாது

நான் வேறு சாதியில்,மதத்தில் திருமணம் செய்து கொண்டவன்.அதனால் ஒரே சாதியில் திருமணம் செய்து கொண்டவர்கள் வாரிசுகள் முட்டாளாக இருப்பார்கள் என்று ஏளனம் செய்வது சரியா
ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பழக்கம்.அது தவறு என்றால் அதை சொல்ல வேண்டும்.அறையும் குறையுமாக அத்தை மகன் பரவாயில்லை,சித்தப்பா மகன் மருத்துவ ரீதியாக தவறு ,வியாதிகள் உள்ள வாரிசுகள் பிறக்கும் என்பதற்கு எந்த வித சான்றும் இல்லை
மனநல குறைவான குழந்தைகள் பிறக்க பல காரணங்கள்.அதில் முக்கியமானது பிரசவ கால தாமதங்கள்,அடுத்தது போதை மருந்து பழக்கம்,மது பழக்கம் ,thyorid சுரப்பி குறைபாடுகள் .அதற்கு பிறகு நெருங்கிய தொடர்பில் திருமணங்கள்.இதில் அத்தை,சித்தப்பா இடையே வேறுபாடு கிடையாது

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//நீங்கள் நன்றாக சிந்திக்கக் கூடியவர் என்று நினைத்தேன். மேலும், தினமலரைப் பற்றி நன்கு அறிந்தவர். அப்படியும் எப்படி?

ஓரமா இருக்கிற தேரை இழுத்து நடுத்தெருவில் விட்டா...கவனம் தேர் மேலே தான் போகும். அதுமாதிரி...

இப்போ சினிமா மயக்கம் கொண்ட தமிழ் மக்களின் கவனம் நடிகர்கள் மேலே! இது தினமலர் அரசாங்கத்திற்கு செய்யும் உதவி; தானாடாவிட்டாலும் தசை ஆடும்!//

தினமலரின் பாசம் எந்த அளவு செல்லக் கூடியது என்பதை அறியாதவன் அல்ல நான். தகவலுக்காக நாம் தின மலரை உபயோகப்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவே!

சமீபத்திய குஜராத் தீர்ப்பு வந்து மோடியின் அமைச்சரே உள்ளே செனற போது அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருந்ததும் இதே தின மலர்தான்.

suvanappiriyan said...

//வரும் காலங்களில் சவுதி பிச்சைக்காரர்களை மும்பை, டில்லி வீதிகளில் பார்க்கலாம்.
ஏன்...சென்னை, கோவையில் கூட பார்க்கலாம்.

அதுவரை நான் இருக்கவேண்டும்..அந்தக் கண் கொள்ளா காட்சியைப் பார்க்கவேண்டும்.//

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்.

வாழ்வில் ஒருவர் பெருமை சிறுமை அடைவதற்கு பிறர் காரணம் அல்ல. அவரவர் செயலே காரணம். பொன் மாற்று அறிவதற்கு உரைகல் வைத்திருப்பர். பொன்னை உரசிப் பார்த்து அதன் தரம் அறிவர். அதுபோல் ராவணனின் செயலும் எண்ணமும் அவரை நல்லவரா கெட்டவரா என்பதை காட்டி விடும். :-)

ராவணன் said...

என்னாச்சி அண்ணாச்சி...?

நான் ஒன்னுமே இங்க வந்து சொல்லாமலே என் பேரை இழுத்து ஒரு பதிலா?

உலகம் ரொம்ப....ரொம்பப் பெருசு அண்ணாச்சி. அது சுத்தினாலும் சுத்தாம நின்னாலும் நாம ஸ்டெடியா இருக்கனும்.

மர்மயோகி said...

அடிமையாகவே வாழ்ந்து பழக்கப்பட்ட "டாஸ்மாக்" புகழ் குடிகார தமிழனுக்கு கூத்தாடிகளை கண்டவுடன் தலையும் புரியாது காலும் புரியாது..கூத்தாடிகளின் நடிப்பை - தலைவா என்று கூக்குரலிட்டு தன அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதோடு, அவனை கடவுளாகவும் ஆக்கும் அவலம் "டாஸ்மாக்" புகழ் குடிகார தமிநாட்டு குடிகார தமிழனுக்கும் மட்டுமே உள்ள குணம்..அதைத்தான் தமிழ் அடிமைகள் "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு " என்று புகழ்ந்துறைத்திருக்கிரார்கள்

suvanappiriyan said...

மர்ம யோகி!

//அடிமையாகவே வாழ்ந்து பழக்கப்பட்ட "டாஸ்மாக்" புகழ் குடிகார தமிழனுக்கு கூத்தாடிகளை கண்டவுடன் தலையும் புரியாது காலும் புரியாது..//

எவரையும் இழிவாக நினைககும் மனப்பாங்கு மாற வேண்டும். 'குடிகார தமிழன்' என்று அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள். இது தவறு. நாமும் தமிழன் தானே! தவறாக சென்ற நமது சகோதரர்களை திருத்த பார்க்க வேண்டும். அழகிய முறையில் நமது வாதத்தை வைக்கலாமே!

வருகைக்கு நன்றி!

Anonymous said...

Kavya says:
September 8, 2012 at 4:23 pm

நான் எழுதியது மலர்மன்னன் விவேகானந்தரைப்போதித்தால் எல்லாரும் பண்புடையோராகி விடுவார் என்பதை எதிர்த்தே. எம்மதமும் இளைஞர்களைத் திருத்த முடியாது. அதாவது அவர்கள் எதை மகிழ்ச்சியென்று கருதுகிறார்களோ அதை மாற்ற முடியாது. மிரட்டி கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அழிக்க முடியாது. இதற்கும் கலாச்சாரத்துக்கும் தொடர்பில்லை. கலாச்சாரமென்பது என்ன? ஓரிடத்தில் வாழும் மக்களால் விரும்பப்பட்ட வாழ்க்கையே கலாச்சாரமாகும். எனவே மக்களுக்கு மக்கள் இடத்துக்கு இடம் நாட்டுக்கு நாடு கலாச்சாரம் வேறுபடுகிறது. மதுரையில் ஹீரோக்களின் கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் பண்ணுவது கலாச்சார சீரழிவு கிடையாது. இன்றும் எம் ஜி ஆர் ரசிகர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்றே பழைய படங்களையும் பாடல்களையும் போட்டுவருகிறார்கள். மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். மதுரைக்கலாச்சாரமது. மற்றவர்களுக்குப்பிடிக்காமல் போகலாம். அவர்கள் வாழ்க்கையிலும் இப்படி வேறு விடயங்கள் இருக்கும். அதை மற்றவர்கள் ஏற்காமல் போகலாம். அவரவர் வாழ்க்கை அவரவருக்கு இனிக்கும்.

தொல்தமிழகத்தைப்பற்றியெல்லாம் பேசுகிறீர்கள். அப்போது இளைஞர்கள் எப்படி !வாழ்ந்தார்க்ள் அவர்களுக்கு கேளிக்கை வாழ்க்கையில்லையா? இருந்திருக்கும். அதுவும் இப்படித்தான் அட்டஹாசமாக இருந்திருக்கும். ஆனால் எவரும் அதைப்பற்றி வரலாறு எழுத வில்லை. எனவே அன்று கலாச்சாரம் உயர்ந்தது என்கிறீர்கள். சோழனுக்கு எத்தனை பொண்டாட்டிகள் என்று எழுதிய தமிழர், அவன் காலத்தில் பாமர மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என எழதவில்லை. அதாவது தெரிஸ் நோ சோஷியல் ஹிஸ்டரி ஆஃப் தமிழ்நாட்.

வாஸ்து சாஸ்திரத்துக்காகத் தமிழையே கொல்கிறான். அதை விட சினிமாத் தியேட்டரில் குதூகலிப்பது மேல். அவர்கள் த‌மிழக‌ வாழ்க்கையை ஒரு சிறு பொழுதாவது செய்து மகிழலாமா என்பதன் அடையாளமே அது. அருண்கிரி அங்கு போயிருக்கக்கூடாது.

சினிமா வெளியீட்டாளர்கள் தமிழகத்தில் என்ன செய்வார்கள தெரியுமா? இரசினி, அஜித், கமல், விஜய் போன்ற பவர் ஸ்டார்ஸ்களின் படங்கள் வெளியாகும்போதும்போது, முதலிரண்டு காட்சிகளை இரசிகர்களுக்கென்றே ஒதுக்கிவிடுவர். அப்படியே பொதுமக்களுக்கும் தெரிவிப்பர். அப்போது நாம் போகக்கூடாது. அமெரிக்காவிலும் அப்படிச்செய்ய வேண்டும்.

இளைஞர்கள் மகிழ்ச்சியைக்கண்டு கிழவர்கள் குமுறுவதைப் பார்க்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

‘Our tastes greatly alter. The lad does not care for the child’s rattle, and the old
man does not care for the young man’s whore !

Anonymous said...

Kavya says:
August 29, 2012 at 12:09 pm

It is akin to the caste feeling a Tamil is born with or brought up with. Wherever he goes, he shows it by instinct, but it is shown only when he is among fellow Tamils. Such Tamils are from the cross sections of Tamils, comprising a variety of castes, yet the same affliation and fanaticism a la TN style is shown. A week ago, Puthia Talaimurai TV telecast a documentary on Mumbai Tamils. Their leader was giving the interview and his table had the photo of his caste leader MR Thevar conspicuously. The daravai slum has a humungous population of dalits from southern districts of TN. He s aware.

Come to US. Who r these Tamils who made a scene at the cinema hall? If I am not presumtuous, they are the first gen Tamils youth. As the essayist arunagiri has correctly put it, they want to replicate the TN life there.

Arunagiri may consult a phycologist; so also others who dittoed him. If I am not presumptuous, the psychologist will tell that such a display of raw emotions in the name of mirth s necessary to fill a void in them.

Jollity, TN style – is all that they r desparately seeking.

U will understand this if u visit a military camp in far North, say, JK or Assam, where there is a substantial number of Tamil soldiers who r, as u know, generally from the middle to lower classes of Tamil population from interior towns and villages. They long to have the same jollity a la TN style. But impossible confined to barracks as they r. The irresponsible show of mirth will help them drive away the feeling of being alone in far far land. To be with our own ppl, use the same lingo, or avail the same kind of mirth and jollity, at least metaphorically, or imaginatively, is a basic instinct.

This is the way to look at it. Basic instincts have nothing to do with our education or neo culture.

Lets not cavil at it.

suvanappiriyan said...

காவ்யா!

//நான் எழுதியது மலர்மன்னன் விவேகானந்தரைப் போதித்தால் எல்லாரும் பண்புடையோராகி விடுவார் என்பதை எதிர்த்தே. எம்மதமும் இளைஞர்களைத் திருத்த முடியாது. அதாவது அவர்கள் எதை மகிழ்ச்சியென்று கருதுகிறார்களோ அதை மாற்ற முடியாது. மிரட்டி கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அழிக்க முடியாது. இதற்கும் கலாச்சாரத்துக்கும் தொடர்பில்லை.//

உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் தவறான நடத்தைகளிலேயே சிந்தனை செல்லும். சிலருக்கு பெண்களைப் பார்த்தால் உடன் தவறான எண்ணம் வரும். சிலருக்கு சாராயக் கடையைப பார்த்தால் யாரும் சொல்லாமலேயே அவரது மனம் அங்கு இழுத்துச் செல்லும். சிலருக்கு சூதாட்டக் கிளப்புகளை கண்டால் கால் தானாக நிற்கும். சிலருக்கு தினம் ஒரு சினிமா பார்க்கவில்லை என்றால் தூக்கமே வராது.

இவ்வாறு பாதிக்கப்படும் மனிதர்களில் பலர் யாரும் சொல்லாமலேயே தங்கள் மனதை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவர். மற்றும் சிலர் தங்களது மனதை கட்டுப்படுத்தத் தெரியாமல் இது போன்ற தவறுகளிலே வீழ்ந்து விடுகின்றனர். இவ்வாறு வீழ்ந்து விடும் மனிதர்களில் பலருக்கு அடைக்கலம் கொடுப்பது மதசம்பந்தமான கருத்துக்களே!

'உன் மனைவியை தவிர்த்து வேறு யாரிடமும் சென்றால் உனக்கு நரகம்: சாராயம் குடித்தால், சூது விளையாடினால், திருடினால், கொலை செய்தால் உனக்கு இந்த தண்டனை இறப்புக்கு பிறகு படைத்த இறைவனால் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை ஒருவன் மனதில் ஆழமாக பதிந்தால் பலஹீன இதயம் கொண்ட மனிதன் மதம் அல்லது மார்க்கத்தின் கருத்துக்களால் மாற்றப்படுகிறான் என்பது எனது எண்ணம்.

அதேசமயம் ஒவ்வொரு மனிதனின் உள் மனதும் தவறின் மீதே அதிக நாட்டத்தைக் கொண்டிருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதை நான் மறுக்கவில்லை..


Unknown said...

http://adirainirubar.blogspot.com/2012/09/11.html
-----------------------------------
Iqbal selvan why you dont like this link?

Anonymous said...

இந்தியா அமைந்துக் கொடுத்துள்ள வீடுகளின் சுவர்களில் வெடிப்பு

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்ப் பிரதேச செயலர் பிரிவில் சில மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையிலுள்ளதாகப் பயனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டுச் சில மாதங்களேயான நிலையில் அத்திபாரம் நிலத்தின் கீழ் இறங்குவதால் வெடிப்புக்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வீடுகளில் உரிமையாளர்கள் பீதியுடன் பொழுதைக் கழிப்பதைக் காண முடிகின்றது. மேலும் ஓசையெழுப்பியவாறு வீட்டுச் சுவர்களில் வெடிப்புக்கள் தோன்றுவதால் வீடு இடிந்து விழுந்து விடுமோவென்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.

மேலும் மின்சார வசதியும் இங்கு வழங்கப்படவில்லை. காட்டுப் பகுதியை அண்டிய இடத்தில் இந்த வீட்டுத் திட்டம் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பெரும் பயப் பீதியுடன் மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.

அதேசமயம் கடும் வறட்சி காரணமாகத் தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு இங்கு நிலவி வருகின்றது. இங்கிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தென்னியன் குளத்திலேயே கிராம மக்கள் தமது குடிதண்ணீர் தவிர்ந்த ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தனர். ஆனால் அந்தக் குளமும் வறண்ட நிலையில் காணப்படுவதால் இவர்களின் நிலை மோசமாக மாறியுள்ளது.

போக்குவரத்து வசதிகள் சீரான முறையில் அமையாததால் அதிலும் சிரமங்கள் தான் இந்த மக்களுக்கு ஏற்படுகின்றன. இவ்வாறு எல்லா வகையிலும் துன்பத்தையே எதிர்கொண்டு வரும் இந்த மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது உரியவர்களின் முக்கிய கடமையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.sankathi24.com/news/22959/64//d,fullart.aspx

- வள்ளுவன்

UNMAIKAL said...

இந்தியாவில் நாப்கின் பயன்படுத்தும் பெண்கள் வெறும் 12% மட்டுமே:

ஆய்வில் தகவல்


டெல்லி: இந்தியாவில் 12 சதவிகிதம் பெண்கள் தான் மாதவிடாய் நேரத்தில் நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மீதமுள்ள 88 சதவிகிதம் பெண்கள் சுகாதாரமற்ற முறையை பின்பற்றுவதால் இனப்பெருக்க பாதையில் அவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் 70 சதவிகிதம் உள்ளது என்கிறது அதிர்ச்சியளிக்கிறது அந்த ஆய்வு முடிவு.

சானிடரி நாப்கின் விளம்பரம் வராத சேனல்களே இல்லை. ஒரு பாக்கெட் நாப்கின் குறைந்த பட்சம் 30 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கு வரை கூட விற்பனை செய்யப்படுகிறது.

மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே சானிடரி நாப்கின் வாங்கி உபயோகிக்கின்றனர்.

ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் பழைய துணி, சாம்பல், உமி போன்றவைகளை சுகாதாரமற்ற முறையில் உபயோகிப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் பள்ளிக்கோ வேறு எங்கும் வெளியிலோ செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதுபோன்ற சுகாதாரமற்ற முறைகளை பின்பற்றுவதால் 12 முதல் 18 வயதுள்ள பெண்கள் ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் காலத்தில் 5 நாட்கள் பள்ளிக்குச் செல்வதில்லை.

ஒரு வருடத்தில் 50 நாட்கள் பள்ளிக்கு செல்வதில்லை.

இதனாலேயே 23 சதவிகித பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள் என்று கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றினை ஏ.சி. நீல்சன் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மேற்கொண்டது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வயதுக்கு வந்த 1,033 பெண்களும், 151 பெண் மருத்துவர்களும் பங்கேற்றனர்.

ஆய்வில் இந்தியாவில் உள்ள 70 சதவிகிதப் பெண்கள் மாதத்தில் குறைந்த பட்சம் 30 ரூபாய் கூட செலவழிக்க வசதியில்லாமல் இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், லக்னோ, ஹைதராபாத், கோரக்பூர், ஔரங்காபாத் மற்றும் விஜயவாடாவில் எடுத்த கணக்கெடுப்பில் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் 2.2 நாட்களுக்கு சற்று மந்தமாகவே உள்ளனர்.

கிழக்கு இந்தியாவில் உள்ள 83 சதவிகித பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு சானிடரி நாப்கின் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்றனர்.

30 சதவிகித வட இந்திய பெண்கள் தாங்கள் பருவம் அடைந்ததும் பள்ளியில் இருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் மூலம் இந்தியப் பெண்களின் சுகாதாரக் கேடு பற்றி தெரிய வந்துள்ளது என்கிறார் பிளான் இந்தியாவின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் பாக்யஸ்ரீ டெங்க்ளே.

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் 100 சதவிகிதப் பெண்களும், இந்தோனேசியாவில் 88 சதவிகிதப் பெண்களும், சீனாவில் 64 சதவிகிதப் பெண்களும் சானிடரி நாப்கின் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்றைக்கும் இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்துப் பேசுவது இல்லை.

அந்த நேரங்களில் பெண்கள் சமையல் அறைக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் அனுமதிக்கப்படுவதில்லை.

சிலர் அந்த சமயத்தில் குளிப்பது கூட இல்லை.


மாதவிடாய் நேரத்தில் பெண்கள் 2 தடவைக்கு மேல் குளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை நாப்கின் மாற்ற வேண்டும்.

அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு சிறுநீர் பாதைக்குள் பாக்டீரியா நுழைவதும், கருப்பை பாதிப்பும் ஏற்படக்கூடும் என்கிறார் ஜீவன் மாலா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மால்விகா சபர்வால் கூறியுள்ளார்.

நாப்கின் பயன்படுத்துவதால் இனப்பெருக்க பாதை பாதிப்பு குறையும் என்று மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமானவர்களாக நோய் தொற்று அற்றவர்களாக இருக்கவேண்டும் எனில் சுகாதாரமான முறையினை பின்பற்ற வேண்டும் என்றும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் இப்பொழுதுதான் விழித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் பயன்பெரும் வகையில் இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

நாடு முழுவதும் உள்ள வயதுக்கு வந்த பெண்களும் சுகாதாரமான முறையில் நாப்கின் பயன்படுத்தினால் மட்டுமே நோய் தொற்று அற்ற பெண்கள் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது உறுதி.

http://tamil.oneindia.in/news/2012/09/09/india-only-12-indian-women-use-sanitary-161100.html

மர்மயோகி said...

// 'குடிகார தமிழன்' என்று அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள். இது தவறு. நாமும் தமிழன் தானே! //
டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறையட்டும்...வலைத்தளங்களிலும் பொதுவிலும் குடிப்பது கேவலம் என்று தமிழன் உணரட்டும்...அப்போது குடிகாரத்தமிழன் என்று சொல்வதை நிறுத்திவிடலாம்..
நானும் தமிழ்தான்..(வெற்று) மொழிப்பெருமை இனப்பெருமை கொள்ளும் அளவுக்கு அல்ல..

அதிரை சித்திக் said...

மொழி பேதம் ..,இன பேதம்
மத பேதம் பார்க்கும்
நம் நாட்டில் முன் மாதிரியான
நடிகர் மம்மூட்டி அவர்களை
பாராட்டி ஆக்கம் வெளியிட்ட சுவப்பிரியன்
அவகளுக்கு என் பாராட்டுக்கள்
அதிரை சித்திக் ..நன்றி
என்னுடைய பேட்டி
விழிப்புணர்வு பக்கங்கள் என்ற
வலைத்தளத்தில் வந்துள்ளது
அவசியம் சுவனப்பிரியன் பார்க்க வேண்டுகிறேன்

அதிரை சித்திக் said...

மொழி பேதம் ..,இன பேதம்
மத பேதம் பார்க்கும்
நம் நாட்டில் முன் மாதிரியான
நடிகர் மம்மூட்டி அவர்களை
பாராட்டி ஆக்கம் வெளியிட்ட சுவப்பிரியன்
அவகளுக்கு என் பாராட்டுக்கள்
அதிரை சித்திக் ..நன்றி
என்னுடைய பேட்டி
விழிப்புணர்வு பக்கங்கள் என்ற
வலைத்தளத்தில் வந்துள்ளது
அவசியம் சுவனப்பிரியன் பார்க்க வேண்டுகிறேன்

suvanappiriyan said...

சகோ அதிரை சித்திக்!

உங்களின் பல ஆக்கங்களை படித்துள்ளேன். அருமையாக எழுதுகிறீர்கள். உங்களின் பேட்டியின் சுட்டியை தந்தால் படிக்க வசதியாக இருக்கும்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அதிரை சித்திக் said...

http://nijampage.blogspot.com/2012/09/blog-post_7.html?showComment=1347081627490#comment-c1630608863776963002

நம்பள்கி said...

த.ம. 18

suvanappiriyan said...

//த.ம. 18 //

ஹா...ஹா... ரசித்தேன்!

Jayadev Das said...

மம்மூட்டியின் செயல் வரவேற்கத் தக்கது, அதே சமயம் மற்ற நடிகர்கள் மீதி புழுதி வாரியிரைத்திருப்பது சரியில்லை. ஏன் எதற்க்கெடுத்தாலும் நடிகர்களை இழுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. அவர்கள் எந்த விதத்தில் நமக்குக் கடைமைப் பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவில்லை. மக்கள் பணத்தில் அவர்கள் சுகபோகமாக இருக்கிறார்கள் என்றால் நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் மக்கள் பணத்தை பெற்றுத் தானே வாழ்கிறோம், நம்மில் எத்தனை பேர் பணத்தை வாரி கொடுத்திருக்கிறோம்? சினிமாவுக்கு மக்கள் ஒன்னும் காசை சும்மா கொடுத்து விடவில்லை, அவர்கள் மகிழ்ச்சிக்காகத்தான் கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு வந்த நூறு படங்களில், பத்து படங்கள் மட்டுமே போட்ட முதலைத் தந்திருக்கின்றன, ஒன்றிரண்டு மட்டுமே வெற்றி. மீதி தொண்ணூற்றி எட்டு பேர் இழப்பை யார் கொடுத்தார்கள்? மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கம் இருக்கிறது, அது என்ன செய்து கொண்டிருக்கிறது? நடிகனுக்கு கட்டவுட் வைத்து கடவுளாக்குவதும், அவர்களைத் தூற்றுவதும் ஒன்றேதான். ஏனெனில் இரண்டுமே முறையற்ற செயல்கள், இரண்டு செயல்கள் கற்ப்பிக்கும் அர்த்தமும் நிஜமில்லை.