'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, September 21, 2012
இலங்கை கிழக்கு மாகாண முதல்வராக அப்துல் நஜீப்.ஏ.மஜீத்!
இலங்கையில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஒரு வார காலமாக ஆளும் கூட்டணிக்கும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கும் இடையே நடந்த இழுபறியுடன் கூடிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை அவரது தேர்வு முடிவானது.
இந்தப் பேச்ச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்,கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 வருட காலத்தில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்
நடை பெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்குமிடையில் இடம் பெற்ற பேச்சுவார்ததையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நஜீப் ஏ மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தபட்ட இவர் 11,726 விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு உறுப்பினராக தெரிவானார்.
வளமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவேன் என கிழக்கு மாகாண புதிய முதலமைச்சரான நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.
"ஏனைய எட்டு மாகாணங்களை விட வளமான மாகாணமாக கிழக்கு மாகாண சபை எதிர்காலத்தில் மாற்றப்படும். இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்படவுள்ளேன்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் மாகாண சபையிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள உறுப்பினர்களுடன் இணைந்து மாகாணத்தை கட்டியொழுப்ப உள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.
"அரசியலுக்கு நான் புதியவனல்ல. கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். இதனால் கிழக்கு மாகாணத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்" என முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை இரவு அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத்தின் பெயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவினால் முன்மொழியப் பட்டபோது அதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதன் பெயரில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்து, முஸ்லிம், கிறித்தவ, பவுத்த மக்கள் அனைவரையும் ஒன்றாக பாவித்து அந்த மக்களின் வாழ்வில் மேலும் அமைதியையும் அபிவிருத்தியையும் இந்த அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அன்று ஜனாதிபதி உமர் எவ்வாறு மாற்று மத நண்பர்களோடு நடந்து கொண்டார்களோ அதை முன்னுதாரணமாக வைத்து இவர் தனது ஆட்சியை நடத்தினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு சீரமையும். அதுதான் நமக்கு வேண்டியது.
-தகவல் உதவி பிபிசி
--------------------------------------------------
ஒரு முறை நஜ்ரான் தேசத்திலிருந்து கிறிஸ்தவக் கூட்டமொன்று நபி அவர்களைக் காண வந்தது. பள்ளியில் இருந்த நபி அவர்களைக் கண்டு பேசிவிட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவுற்றுவதற்காக வெளியில் செல்ல முனைந்த சமயம், நீங்கள் உங்கள் பிரார்த்தனையை இந்தப் பள்ளியிலேயே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள் என்றால் மாற்று மதத்தவருக்கு எத்தகைய கண்ணியம் கொடுக்கின்றது இஸ்லாம் என்பதை சொல்லத் தேவை இல்லை.
இதுபோன்றே மற்றொரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய தொழுகையை வெளியே நிறைவேற்றிக் கொண்டிருந்த கலீபா உமர் அவர்களை சர்ச்சுக்குள் வந்து நிறைவேற்றிக்கொள்ளுமாறு பாதிரியார் அழைக்க "வேண்டாம், நான் உள்ளே வந்து என்னுடைய தொழுகையை நிறைவேற்ற, அதன் விளைவாக இந்த சர்ச் நாளை பள்ளி வாயிலாக முஸ்லிம்களால் ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்" என்று மறுமொழி கூறினார்கள் என்றால் எத்தகைய கண்ணியத்தையும், பெருந்தன்மையையும் இஸ்லாம் போதிக்கின்றது என்பதை அறியலாம்.
அதோடு மட்டுமில்லாமல் 2:256 வசனம் இறக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொண்டால் இஸ்லாத்தின் உண்மை நிலை இன்னும் தெளிவாகும்.
அன்ஸார்களில் ஸாலிமுபின் அல்ஃபு என்னும் கோத்திரத்தில் ஒருவருக்கு இரு குமாரர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருப்பது அவருக்கு விருப்பமில்லாமல் இருந்தது. நபி அவர்களிடம் வந்து "நான் எனது மக்கள் இருவரையும் கிறிஸ்தவ நிலையிலிருந்து மாற்றி பலவந்தப்படுத்தி முஸ்லிம்களாக்க விரும்புகிறேன். இவ்வாறு நான் செய்வது பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்" என்று கேட்டார். அப்போதுதான் “மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை” என்ற இறைவசனத்தை ஓதிக்காட்டி, அவர்கள் அவ்வாறு செய்வதை நபி அவர்கள் தடுத்துவிட்டார்கள். ஒரு ஆட்சித் தலைவராக இருக்கும் நபி அவர்கள் எந்த அளவு மென்மையான போக்கோடு நடந்து கொண்டனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.
'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.'
-குர்ஆன் 2:256
---------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
PART 1. கலீபா உமர் ரலி போன்றுதான் இந்தியாவில் ஆட்சி நடத்தப்பட வேண்டும்". காந்தீஜீ .
கலிஃபா உமர் (ரலி)
கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள்.
அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.
ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள்.
கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.
உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள்.
அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்.
இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.
அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.
“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.
கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள்.
கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.
அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார்.
உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”
அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார்.
அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.
குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.
அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள்.
மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள்.
வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள்.
Continued……
PART 2. கலீபா உமர் ரலி போன்றுதான் இந்தியாவில் ஆட்சி நடத்தப்பட வேண்டும் " -- காந்தீஜீ
கலிஃபா உமர் (ரலி)
அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார்.
வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!
உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.
அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!
உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.
கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள்.
செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”
வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள்.
************************
"அந்த கலீபா உமர் ரலி போன்றுதான் இந்தியாவில் ஆட்சி நடத்தப்பட வேண்டும்" என்ற காந்தீஜீயின் கூற்றை ஏற்க பிடிக்காமல்,ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சே,நம் தேச தந்தையை சுட்டுக்கொன்றான்.
நன்றி :-PEACE TRAIN
புது முதல்வர் அனைத்து சமய மக்களையும் அரவணைத்து நல்லாட்சி தர வேண்டும்.... அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடாத்த வேண்டியது முதல்வரின் கட்டாயக் கடமை...இதை உணர்ந்து செயல்படுவாரா நஜீப்?? பொறுத்திருந்து பார்ப்போம்...
PART 2. இவர்களல்லவா ஆட்சியாளர்கள்! - தினமலர்
(கலீபா) உமர் பாரூக் (ரலி) PART 2
பிற சமய மக்களின் வழிப்பாட்டு உரிமையை எவ்வாறு இஸ்லாம் பாதுகாத்துள்ளது என்பதை பறைச்சாற்றும் வகையில்
" அல்லாஹ்வின் அடிமையும் மூமீன்களின் கலீபாவுமாகிய உமரிடமிருந்து: ஜெரூஸலம் நகரவாசிகளின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இந்த ஒப்பந்தம் பாதுகாப்பளிக்கிறது. அவர்களுடைய தேவாலயங்களும் சிலுவைகளும் பாதுகாக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் நகரின் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாகும்.
அவர்களின் வணக்கத் தலங்களில் வழிபாடுகள் செய்ய எந்த தடையும் இல்லை.
அவை முஸ்லிம்களின் அதிகாரத்துக்கு உட்படுத்தப்படவோ உடைக்கப்படவோ மாட்டாது.
மக்கள் அனைவரும் தங்களது மார்க்கத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்படுகிறது.
அவர்கள் எந்த விதமான பிரச்சினைகளுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்......"
நகரின் வாசல்கள் திறக்கப்பட்டன.
உமர் (ரலி) அவர்கள் நேராக Temple of David (மஸ்ஜிதுல் அக்ஸா) ஐ நோக்கிச் சென்றார்கள். அங்கு David's Arch இன் கீழ் தொழுதார்கள்.
பின்னர் நகரின் மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்றார்கள்.
அவர்கள் அங்கிருந்த வேளை ழுஹர் தொழுகைக்கான நேரம் வந்தது.
"நீங்கள் இங்கேயே தொழுது கொள்ளலாம்" என்று தேவாலயத்தின் பிஷப் கூறினார். " இல்லை, இல்லை", உமர் (ரலி) சொன்னார்கள், "
நான் இவ்விடத்தில் தொழுதால், இந்த இடத்தை உங்களிடமிருந்து கைப்பற்றுவதற்குக் காரணமாக ஒரு காலத்தில் இதை முன் வைக்க முடியும்".
பின்னர் தேவாலயத்தின் படிக்கட்டுகளில் நின்று தொழுகையை நிறைவேற்றினார்கள்.
பின்னர் பிஷப்பிடம் ஒரு கடிதத்தையும் கையளித்தார்கள்.
அதன் வாசகங்கள் பின்வருமாறு இருந்தன.
"இந்தப் படிக்கட்டுகள் அதான் சொல்லும் இடமாகவோ கூட்டுத் தொழுகை நடாத்தப்படும் இடமாகவோ எச்சந்தர்ப்பத்திலும் இருக்கக் கூடாது."
Continued …..
http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=3161
PART 3. இவர்களல்லவா ஆட்சியாளர்கள்! - தினமலர்.
(கலீபா) உமர் பாரூக் (ரலி) PART 3
இறையச்சத்தின் பரிசு!
உமர் கத்தாஃப் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம்.
தன் ஆட்சியின் செயல்பாடுகள் எந்த அளவிற்கு மக்களைச் சென்றடைகிறது அல்லது அவர்களை எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதை அறிய வேவுக்காரர்களையோ மற்றைய வீரர்களையோ அந்தப் பணியில் நியமிக்காது தானே ஒவ்வொரு இரவும் மாறு வேடத்தில் நகர்வலம் வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.
ஒருநாள் நகர்வலம் விட்டு வருங்கால், கிழக்கு வெளுக்க ஆரம்பித்த சுபுஹக் வேளை.
ஒரு குடிசையின் அருகில் வந்த உமர் கத்தாஃப்(ரலி) அவர்களின் காதில் உள்ளிருந்தவர்களின் உரையாடல் விழுந்தது.
தாய்க்கும் மகளுக்கும் இடையே அந்த விவாதம் நிகழ்கிறது.
தாய் கூறுகிறாள், "மகளே! கறந்த பாலில் தேவையான அளவு சிறிது தண்ணீரும் கலந்து விடு. அப்போதுதான் நாம் கொடுக்க வேண்டியவர்களுக்கு முழுமையாய் வழங்க முடியும்.''
""என்னம்மா சொல்கிறீர்கள்? பாலின் அவசியம் அதிகம் தேவைப்பட்டால் அதற்காக தண்ணீரைக் கலப்பதா? நியாயமற்ற செயலாயிற்றே? இப்படிச் சொல்ல எப்படி உங்களுக்கு மனம் வந்தது?
கலீபா உமரின்(ரலி) நேர்மையான ஆட்சியில் உங்களைப் போன்ற குடிமக்கள் எப்படி உருவாகிறார்கள்?'' என்று மகள் கடிந்து கொண்டாள்.
""மகளே! உமருக்காகப் பயப்படுகிறாயா? அவர் என்ன இந்த நடுநசியில் நம்மைப் பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறார்?'' - தாயின் அலட்சியமான வார்த்தைகள்.
""அம்மா! உமர்(ரலி) வேண்டுமென்றால் நம்மைப் பார்க்காமல் இருக்கலாம். நம்மைப் படைத்த அல்லாஹ் நம்மின் ஒவ்வொரு செயல்களையும், அது இரவோ, பகலோ, எந்த நேரமோ உற்று நோக்கியவனாகவே இருக்கிறான் என்ற நபி மொழியை மறந்து விட்டாயா? அல்லது நம்பிக்கை இழந்து விட்டாயா?
நீ சொல்லும் தீய காரியத்தை, நீ தாயிருந்தும் நான் கேட்பதற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
நானும் செய்யப் போவதில்லை. உன்னையும் செய்வதற்கு அனுமதிப்பதற்கில்லை'' - மகள் கோபமாய்ச் சொன்னாள்.
மகளின் குரலில் தொனித்த சத்தியத்தில் தாய் அடங்கிப் போனாள்.
உமர் கத்தாஃப்(ரலி) அவர்களும் ""என் ஆட்சியில் இப்படிப்பட்ட சத்தியசீலர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் அச்சத்தை இதயத்தில் தாங்கியவர்கள் வாழ்கிறார்கள். அதற்கு உதவி செய்த எல்லாம் வல்ல அல்லாவிற்கே எல்லாப் புகழும்'' என்று மனநிறைவு கொண்டவர்களாக அங்கிருந்து நகர்ந்தார்கள்.
மறுநாள் காலை. சஹாபாக்களை அனுப்பி அக்குடிசையில் வாழும் இருவரையும் அழைத்து வரச் செய்தார்கள்.
முந்தின நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகள் பற்றி வினவினார்கள்.
தாயும் தான் தவறு செய்யவிருந்ததையும், தனது மகளால் தவறை திருத்திக் கொண்டதையும் ஒப்புக் கொண்டாள்.
""இந்நிகழ்ச்சிகள் பற்றி ஏற்கெனவே நான் அறிவேன். நான் இப்போது உங்களை அழைத்தது, எனது மகன் அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு தங்களின் மகளை மணமுடிக்க பெண் கேட்கத்தான் வரவழைத்தேன்'' என்றார்கள் உமர் கத்தாஃப் (ரலி) அவர்கள்.
கலீபாவின் மகன் தனக்கு மருமகனா? மகளின் இறையச்சத்திற்கு இறைவன் அளித்த அரிய பெரிய பரிசல்லவா இது என்று எண்ணியவளாக,
""கலீபா அவர்களே! என் மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் மகனை மணப்பதற்கு'' என்றாள்.
""இல்லையம்மா இல்லை. உலக ஆசைகளில் இந்த இளவயதிலேயே பற்றற்றவளாக இறைவனின் திருப்பொருத்தத்தையே முழுவதுமாய் நம்பியவளாக உள்ள உங்கள் மகளை நாங்கள் மருமகளாய் பெற பேறு பெற்றிருக்க வேண்டும்'' என்றார்கள் உமர்(ரலி) அவர்கள்.
இஸ்லாமியத் தத்துவங்கள் வேறுபாடுகளை எல்லாம் தாண்டி வேரூன்றி நின்றதென்றால் இது போன்ற நம்பிக்கைகளின் வெளிப்பாடால்தான்.
இந்தப் புதுமண தம்பதிகள் பிற்காலத்தில் இஸ்லாத்திற்காக எத்தனையோ பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள் என்று இன்றும் சரித்திரம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரு பாடமாக, சரித்திரமாக இன்றைய முஸ்லீம்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது - எம். முஹம்மது யூசுப்
நன்றி- தினமலர்..
http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=3161
இஸ்லாம் கூறும் மதநல்லிணக்கம்
சமத்துவம்;
நீதி நேர்மை என்ன என்பதை உலக ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய உமர்(ரலி) அவர்களின் செங்கோல் ஆட்சிக் காலத்தில் ஒரு யூதனுக்கும் முஸ்லிமுக்கும் பிரச்சனை ஏற்பட
இருவரும் நீதி தேடி கலீபா உமர் ரலி அவர்களிடம் வந்து முறையிடுகின்றனர்.
இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த கலீபா அவர்கள் யூதனின் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்து அவனுக்கு சாதகமாக தீர்ப்புக் கூறினார்கள்
பிரதிவாதி முஸ்லிம் தன் இனத்தை சார்ந்தவர் அல்லது தன் மார்க்கத்தை சார்ந்தவர் என்பதற்காக அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை.
இங்குதான் மதநல்லிணக்கம் உணர்த்தப்படுகின்றது.
சமநீதி;
கலீபா உமர் ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றுமொரு நிகழ்ச்சி உங்களின் மனதைத் தொடும் என நினைக்கிறேன்
ஹஜ்ஜுடைய காலத்தில் ஒரு சமயம் கலீபா உமர் ரலி தம் இருப்பிடம் அமர்ந்திருக்க அருகில் அம்ரு பின் ஆஸ் ரலி அவர்களும் அவரது மகன் அம்ரு என்பவரும் அமர்திருந்தனர்
அச்சமயம் மிஸ்ரு நாட்டைச் சார்ந்த ஒரு மாற்று மதத்தவன் கலீபாவிடம் வந்து இதோ உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கக் கூடிய அம்ரு என்னை அநீதமாக அடித்து விட்டார் அவரிடம் நான் உங்களைப் பற்றி கலீபாவிடம் முறையிடுவேன் எனக் கூறியபோது அவர் என்னிடம் தாரளமாகக் கூறிக்கொள் நான் சங்கை மிக்க கவர்னரின் மகனாவேன் எனவே கலீபா{ மாற்று மத்ததவனான} உனக்கு எதிராக என்னை ஒன்றும் செய்துவிடமட்டார் எனக்கூறினார்
இது பற்றி தங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன் எனக்கூறி நின்றான்.
அதைக்கேட்டு கலீபா அவர்கள் கோபமுற்றவர்களாக அந்த மிஸ்ரு நாட்டவனிடம் சவுக்கைக் கொடுத்து கண்ணியமிக்க கவர்னரின் மகன் உன்னை அடித்ததைப் போன்று நீயும் அவரை அடித்து பழிதீர்த்துக்கொள்! எனக் கூறி
நீதிக்கு முன் ஆட்சியாளர்,பொது மக்கள் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியதோடு நீதிக்கு முன் சாதிமத வேறுபாடு இல்லை என்பதை உணர்த்தி மதநல்லிணக்கத்திற்கு ஓர் முன்னுதாரணம் கட்டினார்கள்.
.
உண்மைகாள்,
//அப்படியானால் கற்பொழுக்கமுள்ள ஒரு இளம்பெண்ணால் எவ்வளவு காலம் தனது கணவரை பிரிந்திருக்க முடியும்' என்று பெண்களிடம் ஆலோசனை கேட்டார்கள்.
மூன்று மாதம் வரை இருக்கலாம் என்று அவர்கள் சொன்ன அபிப்ராயப்படி ஒரு அரசாணை பிறப்பித்தார்கள்.//
3 மாதத்தில் கணவன் திரும்பவில்லை என்றால் ,மனைவி கற்பொழுக்கத்துடன் இருக்க தேவையில்லை என நீங்கள் சொல்வதாக படுகிறது, இது கற்பொழுக்கம் உள்ள இஸ்லாமிய பெண்களை கேவலப்படுத்துகிறது, எனவே இதனை நீக்கவும் , இல்லையேல் சு.பி.சுவாமிகளிடம் சொல்லி எதிர்ப்பதிவு போட சொல்வேன்.
//மார்க்கம் கூறுவதற்கு எந்தளவுக்கு ஆட்சியாளர்கள் மரியாதை தந்துள்ளார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். //
பெண்களிடம் கேட்டு தான் 3 மாதம் என சட்டம் போடுகிறார்,அப்போ அது மார்க்கம் சொன்னதா?
மார்க்கம் என்றால் பெண்களா? ஒன்னியுமே பிரியலை :-))
ராஜ பக்சே கொடுத்த பரிசு முதல்வர் பதவின்னு சொல்ல மறந்துட்டிங்களே சு.பி சுவாமிகள் :-))
ஆனாலும் உங்களுக்கு இதுவும் பெருமிதமான ஒரு நிகழ்வு தான்...வாழ்த்துக்கள்!!!
புது முதல்வர் அனைத்து சமய மக்களையும் அரவணைத்து நல்லாட்சி தர வேண்டும்.... அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடாத்த வேண்டியது முதல்வரின் கட்டாயக் கடமை...இதை உணர்ந்து செயல்படுவாரா நஜீப்?? பொறுத்திருந்து பார்ப்போம்.....ம்ம்ம்/ இதுதான் என் கருத்தும்!
வவ்வால்!
//ராஜ பக்சே கொடுத்த பரிசு முதல்வர் பதவின்னு சொல்ல மறந்துட்டிங்களே சு.பி சுவாமிகள் :-))
ஆனாலும் உங்களுக்கு இதுவும் பெருமிதமான ஒரு நிகழ்வு தான்...வாழ்த்துக்கள்!!!//
ராஜ பக்ஷே முஸ்லிமகள் அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டதால்தான் முதலமைச்சர் பதவியை ஒரு இஸ்லாமியருக்கு கொடுத்துள்ளார். எனவே இது அவர் விரும்பி கொடுத்ததல்ல. கொடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சு.பி.சுவாமிகள்,
//ராஜ பக்ஷே முஸ்லிமகள் அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டதால்தான் முதலமைச்சர் பதவியை ஒரு இஸ்லாமியருக்கு கொடுத்துள்ளார்.//
உங்கள் கதைக்கு அளவே இல்லையா?
சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமியர் எப்படி அதிகம் தேர்வானர்கள், எல்லாம் ராஜ பக்சேக்கு சொம்படிச்சு தானே ?
இப்படியே மெயின்டைன் செய்யுங்க அடுத்த அமெரிக்க சனாதிபதி நீங்க தான் ,ஏன்னா அமெரிக்காவில எல்லாம் இஸ்லாமுக்கு மாறிட்டாங்கன்னு நீங்க தானே சொன்னிங்க :-))
@ வவ்வால்
///பெண்களிடம் கேட்டு தான் 3 மாதம் என சட்டம் போடுகிறார்,அப்போ அது மார்க்கம் சொன்னதா?///---------வெல்டன்..! நேற்று அஞ்சாசிங்கம் கேட்டது போன்றே செமை கவுன்டர் அட்டாக்..! இப்படித்தான் கேள்வி கேட்கணும்..! இதை நான் வரவேற்கிறேன்.
ஆனானப்பட்ட ஹதீஸ்களையே அக்குவேறு ஆணிவேராக அது உண்மையா, கருத்து சரியானதா, குர்ஆணுடன் பொருந்துதா என்று பார்க்க வேண்டும். தினமலர் கட்டுரைக்கு வேறு என்னத்த சொல்ல..? மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டது எழுதியவரா தினமலரா என்று தெரியவில்லை. கதைதானே..!
உங்களுடன் நானும் இக்கேள்வியில் இணைகிறேன். இதற்கு காபி பேஸ்ட் பண்ணியவர் அல்லது அதை இங்கே அனுமதித்தவர் உங்களுக்கும் எனக்கும் பதில் அளிக்கட்டுமாக.
UNMAIKAL said...
PART 1. இவர்களல்லவா ஆட்சியாளர்கள்! - தினமலர்
(கலீபா) உமர் பாரூக் (ரலி) PART 1.
நவம்பர் 11,2011,14:16 IST
அரபு மன்னர் (கலீபா) உமர் பாரூக் (ரலி) அவர்கள், ஒரு நாள் இரவு நகர்வலம் வந்தார்கள்.
அப்பொழுது எங்கிருந்தோ வந்த இனிமையான குரல் அவர்களின் காதில் விழுந்தது.
சற்று நெருங்கிய போது அது பெண் குரலாக கேட்டது. இனிய ராகத்தில் அவள் பாடிக் கொண்டிருந்தாள்.
கூர்ந்து கவனித்த பொழுது, அது ஒரு காதல் பாட்டு என்று தெரியவந்தது.
அந்த வீட்டருகே வந்து, ""யார் அங்கே?'' என்று அதட்டும் தொனியில் கேட்டார்கள்.
அவ்வளவு தான். பாட்டு நின்று அமைதியானது. பயத்தில் பேச்சு வரவில்லை.
""யார் அங்கே?'' என்று திரும்பவும் உமர் கேட்டார்கள். இப்போதும் பதில் வரவில்லை. கதவைத்தட்டினார்கள். நிசப்தமே நீடித்தது.
உள்ளே ஏதோ நடக்கிறதோ என்ற சந்தேகம் வலுத்தது. எனவே சுவரேறி கூரையைப்பிய்த்துக் கொண்டு உள்ளே இறங்கினார்கள்.
உமரைக் கண்ட பயத்தில், ஒரு பெண்மணி அப்படியே உறைந்து போய் தலை குனிந்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள்.
""யார் நீ? ஏன் இப்படி தனியாகப் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறாய்? அதுவும் காதல் பாட்டு இந்த நடுநிசி நேரத்தில்?''
உமருடைய ஆட்சி நீதிக்குப் பேர் போனது. கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த தைரியத்தில் அவள் , ""என்னை யாரென்று கேட்டு, என் மீது குற்றம் சுமத்தும் நீங்கள் இப்போது மூன்று குற்றம் செய்திருக்கிறீர்கள்,'' என்றாள்.
இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அசந்து விட்டார்கள்.
""என் மீதே குற்றச்சாட்டா? என்ன குற்றம் செய்தேன்?'' என அவளிடம் தயவோடு கேட்டார்கள்.
""முதலாவது நான் ஒரு அன்னியப்பெண், நான் தனியாக இருக்கும் போது அன்னிய ஆடவராகிய நீங்கள் எப்படி உள்ளே வரலாம்.
இரண்டாவது அல்லாஹ் கூறுகிறான். "வீட்டிற்குள் நேர்வழியாக வாருங்கள். பின்வாசல் வழியாக வருவது நன்மையல்ல' (குர்ஆன்2:189) என்று.
ஆனால், நீங்கள் நேர்வழியாக வரவில்லை.
அடுத்த வீட்டிற்குச் செல்லும் போது ஸலாம் சொல்லி முறையாக அனுமதி பெற்றே செல்ல வேண்டும். அனுமதி கிடைக்காவிட்டால் திரும்பிச் சென்றுவிட வேண்டும்.
"அனுமதியில்லாமல் உள்ளே நுழையாதீர்கள்' என்று குர்ஆனில் (24:27,28ல்) இறைவன் கூறுகிறான்.
நீங்கள் என் அனுமதியின்றி என் வீட்டினுள் பிரவேசித்துள்ளீர்கள்.
இதுமுறையா? திருக்குர்ஆனுக்கு விரோதமல்லவா?'' என்றாள்.
உமர் (ரலி) அவர்கள், தான் தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டார்கள்.
இதற்காக பெரிதும் வருந்தி, இரவு முழுவதும் நின்று வணங்கி, இறைவனிடத்திலே பாவ மன்னிப்பு தேடினார்கள்.
continued …….
http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=3161
சலாம் சகோ ஆஷிக்!
//ஆனானப்பட்ட ஹதீஸ்களையே அக்குவேறு ஆணிவேராக அது உண்மையா, கருத்து சரியானதா, குர்ஆணுடன் பொருந்துதா என்று பார்க்க வேண்டும். தினமலர் கட்டுரைக்கு வேறு என்னத்த சொல்ல..? மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டது எழுதியவரா தினமலரா என்று தெரியவில்லை. கதைதானே..!
உங்களுடன் நானும் இக்கேள்வியில் இணைகிறேன். இதற்கு காபி பேஸ்ட் பண்ணியவர் அல்லது அதை இங்கே அனுமதித்தவர் உங்களுக்கும் எனக்கும் பதில் அளிக்கட்டுமாக. //
நீங்களும் வவ்வாலும் சுட்டிக் காட்டிய பிறகுதான் அந்த பின்னூட்டத்தை முழுவதுமாக பார்த்தேன். குர்ஆனோ ஹதீஸோ அந்த சட்டத்துக்கு ஆதாரமாக காட்டப்படாததால் திருத்தி வெளியிட்டுள்ளேன். நன்றி!
வவ்வால் மௌலானா!:-(
//3 மாதத்தில் கணவன் திரும்பவில்லை என்றால் ,மனைவி கற்பொழுக்கத்துடன் இருக்க தேவையில்லை என நீங்கள் சொல்வதாக படுகிறது, இது கற்பொழுக்கம் உள்ள இஸ்லாமிய பெண்களை கேவலப்படுத்துகிறது, எனவே இதனை நீக்கவும் , இல்லையேல் சு.பி.சுவாமிகளிடம் சொல்லி எதிர்ப்பதிவு போட சொல்வேன்.//
பரவாயில்லையே! குர்ஆன் நபிமொழி யாக இல்லாததை பார்த்தவுடன் கண்டு பிடித்து விடுகிறீர்களே! சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! அந்த கருத்தை நீக்கி விட்டேன்.
Mr Vavvaal,
//சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமியர் எப்படி அதிகம் தேர்வானர்கள், எல்லாம் ராஜ பக்சேக்கு சொம்படிச்சு தானே ?///
வவ்வாலுக்கு இலங்கையில் எந்தெந்த இடத்தில் யார் சிறுபான்மை, பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்றறியாமல் இருக்கிறார்.
முஸ்லிம்கள் பிரிந்து பல கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கின்றனர். இருந்தும், முதலமைச்சர் பெறத்தகுதி முஸ்லிம் மாத்திரம்தான்.
கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மை என்று சகல இலங்கை மக்களும் அறிந்திருக்க, வவ்வால் எதை வைத்து சொல்கிறார், முஸ்லிம்கள் சிறுபான்மையென?
ஒரு வருடத்திற்கு முன், ராஜபக்சே ஒரு பேட்டியில், கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். கடந்த தேர்தலில், முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர்தான் நியமித்திருக்க வேண்டும். அதையும் மீறி, தமிழர் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்தேன். இதுபோல், எதிர்காலத்தில் செய்ய முடியாது என்று கூறினார். தமிழர் ஒருவரை நியமித்த காரணம், வெளியில் இருந்து வரும் அரசியல் அழுத்தங்கள்தான்!
இதையே, பாராளுமன்றத்தில் அமைச்சராக இருக்கும் கிழக்கைச் சேர்ந்த கருணா என்பவரும், கடந்த தேர்தலில் முஸ்லிம்களே அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தும், முதலமைச்சராக தமிழர் ஒருவரையே ஜனாதிபதி நியமித்தார் என்று ஒரு செவ்வியில் சொன்னார்.
வவ்வால் அவர்களே, ஒன்றை எழுதும்போது தெரிந்துதான் எழுதுகிறீர்களா அல்லது இந்தத் தளத்தில் வந்து எதையாவது எதிர்க்க வேண்டும் என்ற வீம்புடன் எழுதுகிறீர்களா?
///இப்படியே மெயின்டைன் செய்யுங்க அடுத்த அமெரிக்க சனாதிபதி நீங்க தான் ,ஏன்னா அமெரிக்காவில எல்லாம் இஸ்லாமுக்கு மாறிட்டாங்கன்னு நீங்க தானே சொன்னிங்க ///
ஒரு நாட்டின் ஆட்சி யாரின் கையிலும் கிடைக்கலாம். இப்போது அமெரிக்க ஜனாதிபதி ஒரு கறுப்பன்.
அடுத்தது அல்லது எதிர்காலத்தில் ஒரு ஆசியனாகவும் இருக்கலாம், முஸ்லிமாகவும் இருக்கலாம். யாருக்குத் தெரியம்? எல்லாம் இறைவன் செயல்.
சகோ தனி மரம்!
//புது முதல்வர் அனைத்து சமய மக்களையும் அரவணைத்து நல்லாட்சி தர வேண்டும்.... அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடாத்த வேண்டியது முதல்வரின் கட்டாயக் கடமை...இதை உணர்ந்து செயல்படுவாரா நஜீப்?? பொறுத்திருந்து பார்ப்போம்.....ம்ம்ம்/ இதுதான் என் கருத்தும்! //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ யூசுஃப் இஸ்மத்!
//கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மை என்று சகல இலங்கை மக்களும் அறிந்திருக்க, வவ்வால் எதை வைத்து சொல்கிறார், முஸ்லிம்கள் சிறுபான்மையென?//
//ஒரு நாட்டின் ஆட்சி யாரின் கையிலும் கிடைக்கலாம். இப்போது அமெரிக்க ஜனாதிபதி ஒரு கறுப்பன்.
அடுத்தது அல்லது எதிர்காலத்தில் ஒரு ஆசியனாகவும் இருக்கலாம், முஸ்லிமாகவும் இருக்கலாம். யாருக்குத் தெரியம்? எல்லாம் இறைவன் செயல். //
வவ்வால் பறந்து ஓடிட வேண்டாம்! சகோ யூசுஃபின் கேள்விக்கு பதிலை சொல்லி விட்டு பறக்கவும்.
ராவணன்! said
அடடா...இப்ப என்னாச்சு?
ராஜபக்ஷாவின் கூஜா ஒன்று முதல்வரானது.
on இலங்கை கிழக்கு மாகாண முதல்வராக அப்துல் நஜீப்.ஏ.மஜீத்!
Publish | Delete | Spam
ராவணன்
சகோ உண்மைகள்!
பதிவுக்கு மேலும் மெருகூட்டும் விதமாக பல செய்திகளை தந்ததற்கு நன்றி! தின மலர் பதிந்ததில் வவ்வால் சுட்டிக் காட்டிய பகுதி குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் அதனை நீக்கி வெளியிட்டுள்ளேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ வவ்வால் வஹ்ஹாபி!
"3 மாதத்தில் கணவன் திரும்பவில்லை என்றால் ,மனைவி கற்பொழுக்கத்துடன் இருக்க தேவையில்லை என நீங்கள் சொல்வதாக படுகிறது, இது கற்பொழுக்கம் உள்ள இஸ்லாமிய பெண்களை கேவலப்படுத்துகிறது, எனவே இதனை நீக்கவும் , இல்லையேல் சு.பி.சுவாமிகளிடம் சொல்லி எதிர்ப்பதிவு போட சொல்வேன்".பெண்களிடம் கேட்டு தான் 3 மாதம் என சட்டம் போடுகிறார்,அப்போ அது மார்க்கம் சொன்னதா?"
மிக அருமையான கேள்வி கேட்டுள்ளீர்கள்.அதனை வரவேற்கிறேன்.குரானுக்கு முரணான ஹதீஸை நீங்களே ஏற்றுகொள்ளாத தெளிந்த நிலையில் இருக்கிறீர்கள்.சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி.இதுபோன்றுதான் வஹ்ஹாபிகளும் கேட்கிறார்கள்.இதனால்தான் வஹ்ஹாபி என்று அழைத்தேன்.மொக்கைதனமான கேள்விகளுக்கு அல்ல.சரி.nglaa ஹா.. ஹா..ஹா..
kalam
சகோ கலாம்!
//சகோ வவ்வால் வஹ்ஹாபி!//
அடடே....சந்தம் சரியாக பொருந்தி வருகிறதே? :-)
சு.பி.சுவாமிகள்,
நாம் பறந்தோடி செல்ல புறா அல்ல பனங்காட்டு வவ்வால்,
'
அட டடே என்னையும் வரக்காப்பில சேர்த்துட்டிங்களா,நிசமாவே நான் வரக்காப்பி தான் குடிப்பேன் இல்லைனா கட்டஞ்சயா.
கிழக்கு முதல்வர் பற்றி
இங்க ஒருத்தர் பொங்கி இருக்கார் பாருங்க,
http://wandererwaves.blogspot.in/2012/09/blog-post.html
கிழக்கு மாகாணத்தில் யாருமே பெரும்பான்மை இல்லை ... !!! 40 சதவீதம் தமிழர்கள் .. 38 சதவீதம் முஸ்லிம்கள், 22 சதவீதம் சிங்களவர்கள் ... !!! இப்படி இருக்க யார் தான் எங்கு பெரும்பான்மை எனச் சொல்வது .. என்ன முஸ்லிம் - சிங்களவர்கள் கூட்டுச் சேர்ந்து ஒரு ஆட்சி அமைத்துள்ளனர் .. அவ்வளவே !!! மற்றப்படி மாகாண அரசுகளால் ஒரு ம..வையும் பிடுங்க முடியாது !!! இந்தியாவின் பஞ்சாயத்து தலைவரே தேவலை எனலாம், அதற்கு ... !!!
மற்றப்படி முதலமைச்சராக ஒரு தமிழர் ( முஸ்லிம் ) வந்திருப்பது மகிழ்ச்சியே !!!
இக்பால் செல்வன் said.../// முதலமைச்சராக ஒரு தமிழர் ( முஸ்லிம் ) வந்திருப்பது மகிழ்ச்சியே !!! ///---நன்றி.
இக்பால் செல்வன் said.../// முதலமைச்சராக ஒரு தமிழர் ( முஸ்லிம் ) வந்திருப்பது மகிழ்ச்சியே !!! ///---மிக்க நன்றி.
இக்பால் செல்வன் said.../// முதலமைச்சராக ஒரு தமிழர் ( முஸ்லிம் ) வந்திருப்பது மகிழ்ச்சியே !!! ///---மிக மிக நன்றி.
நீண்ட நாட்கள் கழித்து நீங்களும் கூட ஒரு நல்ல கருத்தை கூறி உள்ளீர்கள். நன்றிகள் பல.
என்ன நிஜாம் பாக்கு வெற்றிலையோடு ஜோடி சேரலையோ சேரலையோ !!! ஹிஹி !!!
// இந்தியாவின் பஞ்சாயத்து தலைவரே தேவலை என்று இருக்கும் போது மாகாண அரசுகளின் ம..வை பிடுங்கின உங்களுக்குகென்னா? பிடுங்கவில்லை என்றால் உங்களுக்கென்ன? எதற்கு இந்த tension உங்களிடம் யாரவாது பிடிங்கி விட்டார்களா கொ(ண்)டையை //
ஹிஹி !!! நாங்க எதுவுமே சொல்லக் கூடாது, பேசக் கூடாது, காணக் கூடாது, கமுக்கமாவே இருக்கணும் .. அப்போது தானே !!! ஜால்ரா கொட்ட முடியும் உங்களவர்களால் !!! ஐயோ ஐயோ பாவம் சார் நீங்க !!!
Mr Iqbal Selvan,
///கிழக்கு மாகாணத்தில் யாருமே பெரும்பான்மை இல்லை ... !!! 40 சதவீதம் தமிழர்கள் .. 38 சதவீதம் முஸ்லிம்கள், 22 சதவீதம் சிங்களவர்கள் ... !!! இப்படி இருக்க யார் தான் எங்கு பெரும்பான்மை எனச் சொல்வது .. என்ன முஸ்லிம் - சிங்களவர்கள் கூட்டுச் சேர்ந்து ஒரு ஆட்சி அமைத்துள்ளனர்///
நீங்கள் குறிப்பிட்ட விகிதாசாரம், பல இலங்கைத் தமிழர்களின் ஊடகங்களில் பொதுவாக காணப்படுகிறது. இதில், உண்மை இல்லை.
45% இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கிழக்கில் வாழ்கின்றனர். தமிழ்ப் பேரினவாதமும் சிங்களப் பேரினவாதமும் முஸ்லிம்களின் குடிப்பரம்பலை இருட்டடிப்பு செய்து வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற குடிசனத் தொகைக் கணக்கெடுப்பில், முஸ்லிம்கள் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளனர் என்று சிங்கள மக்களே ஊர்ஜிதம் செய்கின்றனர். ஆனால், சிங்கள அரசோ, முஸ்லிம்களின் குடிப்பரம்பல் 20 வருடத்திற்கு முன் கணக்கிடப்பட்ட விகிதாசாரத்தைவிட, குறைவான வீதத்தில் பதிய வைக்கப்பட்டுள்ளனர். இது முஸ்லிம் மக்களிடத்தில், ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
முஸ்லிம் இயக்கங்கள், முஸ்லிம்களின் நாடு தழுவிய குடிப்பரம்பலை தாமாக கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து, பிற்பாடு அந்த யோசனை கைவிடப்பட்டது.
கிழக்கில் முஸ்லிம்-சிங்களவர்கள் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர் என்று சொல்வதைவிட, முஸ்லிம் கட்சிக்கும் அரசிற்கும் இடையில் கூட்டாட்சி இடம்பெற்றுள்ளது என்று சொல்வது பொருத்தமானது.
ஏனெனில், அரசுடன் சேர்ந்து போட்டியிட்டவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள். முஸ்லிம் கட்சியிலும் எல்லாரும் முஸ்லிம்கள்.
இலங்கையில், மாகாண சபை முதலமைச்சருக்கு ஜெயலலிதாவைப் போன்ற அதிகாரங்கள் இல்லை. பஞ்சாயத்துத் தலைவர் எல்லாம் இலங்கையில் இல்லை, நான் அறிந்தவரையில்!
இந்தியாவிலுள்ள பஞ்சாயத்துத் தலைவரையும் முதலமைச்சரையும் ஒப்பிடுகிறீர்களே!
Mr Iqbal Selvan,
///கிழக்கு மாகாணத்தில் யாருமே பெரும்பான்மை இல்லை ... !!! 40 சதவீதம் தமிழர்கள் .. 38 சதவீதம் முஸ்லிம்கள், 22 சதவீதம் சிங்களவர்கள் ... !!! இப்படி இருக்க யார் தான் எங்கு பெரும்பான்மை எனச் சொல்வது .. என்ன முஸ்லிம் - சிங்களவர்கள் கூட்டுச் சேர்ந்து ஒரு ஆட்சி அமைத்துள்ளனர்///
நீங்கள் குறிப்பிட்ட விகிதாசாரம், பல இலங்கைத் தமிழர்களின் ஊடகங்களில் பொதுவாக காணப்படுகிறது. இதில், உண்மை இல்லை.
45% இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கிழக்கில் வாழ்கின்றனர். தமிழ்ப் பேரினவாதமும் சிங்களப் பேரினவாதமும் முஸ்லிம்களின் குடிப்பரம்பலை இருட்டடிப்பு செய்து வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற குடிசனத் தொகைக் கணக்கெடுப்பில், முஸ்லிம்கள் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளனர் என்று சிங்கள மக்களே ஊர்ஜிதம் செய்கின்றனர். ஆனால், சிங்கள அரசோ, முஸ்லிம்களின் குடிப்பரம்பல் 20 வருடத்திற்கு முன் கணக்கிடப்பட்ட விகிதாசாரத்தைவிட, குறைவான வீதத்தில் பதிய வைக்கப்பட்டுள்ளனர். இது முஸ்லிம் மக்களிடத்தில், ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
முஸ்லிம் இயக்கங்கள், முஸ்லிம்களின் நாடு தழுவிய குடிப்பரம்பலை தாமாக கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து, பிற்பாடு அந்த யோசனை கைவிடப்பட்டது.
கிழக்கில் முஸ்லிம்-சிங்களவர்கள் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர் என்று சொல்வதைவிட, முஸ்லிம் கட்சிக்கும் அரசிற்கும் இடையில் கூட்டாட்சி இடம்பெற்றுள்ளது என்று சொல்வது பொருத்தமானது.
ஏனெனில், அரசுடன் சேர்ந்து போட்டியிட்டவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள். முஸ்லிம் கட்சியிலும் எல்லாரும் முஸ்லிம்கள்.
இலங்கையில், மாகாண சபை முதலமைச்சருக்கு ஜெயலலிதாவைப் போன்ற அதிகாரங்கள் இல்லை. பஞ்சாயத்துத் தலைவர் எல்லாம் இலங்கையில் இல்லை, நான் அறிந்தவரையில்!
இந்தியாவிலுள்ள பஞ்சாயத்துத் தலைவரையும் முதலமைச்சரையும் ஒப்பிடுகிறீர்களே!
@ யூசஃப் இஸ்மத் - நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது ... !!!
//நீங்கள் குறிப்பிட்ட விகிதாசாரம், பல இலங்கைத் தமிழர்களின் ஊடகங்களில் பொதுவாக காணப்படுகிறது.//
நான் குறிப்பிடும் வீதாச்சாரம் ஊடகங்களில் பெற்றவை அல்ல, மாறாக இலங்கை மக்கள் தொகை கணிப்பின் அளவுகள் மற்றும் இதர அமைப்புக்களின் கணிப்பின் அடிப்படையிலானவை, விக்கிபீடியா போன்றவற்றின் ஊடாகவும் பெற்றவை..
//45% இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கிழக்கில் வாழ்கின்றனர். தமிழ்ப் பேரினவாதமும் சிங்களப் பேரினவாதமும் முஸ்லிம்களின் குடிப்பரம்பலை இருட்டடிப்பு செய்து வெளியிட்டு வருகின்றனர்.//
45 சதவீதம் என்பது முஸ்லிம்கள் சொல்லும் அளவு, ஆனால் உண்மையில் 37 - 38 வீதமே முஸ்லிம்கள், சொல்லப் போனால் 1881 - 2011 வரை முஸ்லிம்களின் தொகை அதிகரித்து தான் வந்துள்ளது .. 1881-யில் 33 சதவீதம் மட்டும் இருந்த முஸ்லிம்கள் இன்று 38 வீதம் உள்ளன. ஆனால் 1881-யில் 58 வீதம் இருந்த தமிழர்கள் இன்று 40 சதவீதமே உள்ளனர். அப்படி என்றால் தமிழ் பேரினவாத முஸ்லிம் இனவழிப்பு என்றக் கூற்று இங்கு பொய்யாகுகின்றது ... !!!
//முஸ்லிம்கள் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளனர் என்று சிங்கள மக்களே ஊர்ஜிதம் செய்கின்றனர். //
இரண்டாம் இடம் என்பது நாடளாவிய ரீதியாகவா, கிழக்கு மாகாணத்திலா ? ஊர்ஜிதங்கள் உண்மையாகிவிடுமா சகோ... !!!
//ஆனால், சிங்கள அரசோ, முஸ்லிம்களின் குடிப்பரம்பல் 20 வருடத்திற்கு முன் கணக்கிடப்பட்ட விகிதாசாரத்தைவிட, குறைவான வீதத்தில் பதிய வைக்கப்பட்டுள்ளனர்.//
நீங்கள் சொல்வது சரியான காமெடி சகோ. அப்படி இலங்கை அரசு பித்தலாட்டம் செய்திருந்தால் இலங்கை அரசோடு தேனிலவு கொண்டாடும் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்துக் கொண்டிருந்தது, தட்டிக் கேட்கலாம் அல்லவா, மீண்டும் அரசோடு தானே ஒட்டிக் கொண்டுள்ளனர். ஆக உங்களின் இந்தக் கூற்றுக்கும் ஆதாரம் ஒன்றும் இல்லை .. !!!
//முஸ்லிம் கட்சிக்கும் அரசிற்கும் இடையில் கூட்டாட்சி இடம்பெற்றுள்ளது என்று சொல்வது பொருத்தமானது. //
அதுவும் தவறு தான் முஸ்லிம் காங்கிரஸ் - மக்கள் முன்னணிக்குமான கூட்டு என சொல்லலாமே ! முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸை ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை தானே ..
//பஞ்சாயத்துத் தலைவர் எல்லாம் இலங்கையில் இல்லை, நான் அறிந்தவரையில்!//
இலங்கையில் பஞ்சாயத்து இல்லை ஆனால், பிரதேச சபைகள் இருக்கின்றன .. ! இலங்கை மாகாண முதலமைச்சர் என்பது வெறும் பதவி மட்டுமே, ஆட்சி அதிகாரம் கிடையாது அவருக்கு, மாவட்ட அதிபர் / கலக்டருக்கு கூட அதிக அதிகாரங்கள் உள்ளன.
இலங்கைக்கு வேண்டியது சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணத்துக்கு சுயாட்சி என்பது மட்டுமே ... !!! அது தான் சிக்கல்களைத் தீர்க்கக் கூடியது ... !!!
ஒருக் காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தவர்கள் முஸ்லிம் மீனவ மக்கள், தமிழ் பரதவர்கள் - இன்று என்ன நிலைமை சொல்லுங்கள். இதே நிலைமை தான் கிழக்குக்கும் வரும் என்பது எனது எண்ணம் ... !
@ சுவனப்பிரியன் - நிஜாம் என்பவரின் தகாதக் கருத்துக்களை நீக்கிவீர்கள் என எதிர்ப்பார்க்கின்றேன். நீக்காத பட்சத்தில் அதனை எப்படி எதிர்க்கொள்வது என்பது எனக்குத் தெரியும் ... அதன் பின் நானிடும் கருத்துக்களையும் நீங்கள் நீக்கக் கூடாது ...
நன்றிகள் !!!
Nizam said...
இக்பால் செல்வன்
//என்ன நிஜாம் பாக்கு வெற்றிலையோடு ஜோடி சேரலையோ சேரலையோ //
நான் சேருவது இருக்கட்டும். நீங்கள் எத்தனை பேருக்கு வெற்றிலையை மடித்து கொடுத்தீர்கள்
//நாங்க எதுவுமே சொல்லக் கூடாது, பேசக் கூடாது, காணக் கூடாது, கமுக்கமாவே இருக்கணும்//
ஐய் மூன்று குரங்கு தத்துவத்தை நேரில் ரசித்த போல் உள்ளது. சகோ. நன்றிகள்
//அப்போது தானே !!! ஜால்ரா கொட்ட முடியும் உங்களவர்களால்//
இக்பால் செல்வன் இன்னும் பச்சப்புள்ளயாவே இருக்கிறே உங்கள் பிதிவில் குப்பை கொட்டவதை நிர்த்துங்கய்யோ அப்புறம் ஜால்ரா கொட்டுவதை பிறகு பார்ப்போம். ஹி ஹி ஹி ஹி
3:28 PM
இக்பால் செல்வன் said...
//ஐய் மூன்று குரங்கு தத்துவத்தை நேரில் ரசித்த போல் உள்ளது. சகோ. நன்றிகள்//
ஆஹா !!! அந்த மூன்று குரங்கு மூ, ஈ, மோ என்பதாவது உங்களுக்குத் தெரியுமா !!! தெரிந்துக் கொள்ளுங்கள் உதவக் கூடும் ... !!!
// உங்கள் பிதிவில் குப்பை கொட்டவதை நிர்த்துங்கய்யோ //
ஐயோடா !!! குப்பைக் கொட்டுவதைக் கிளறியக் கொண்டிருக்கின்றீர்கள் போலும்,,,, கிளறுங்கள் கிளறுங்கள் --- வேற பொழப்பு இல்லையல்லோ !!!
4:49 PM
Delete
Nizam said...
சகோ. இக்பால் செல்வன்
//அந்த நான்கு பேரிடமும் போய் கேட்டுப் பாருங்கள் சொல்லுவார்கள் ... !!!//
அந்த நான்கு (வா.,நரி.,சா.,Eth.,) பேர்கள் சொன்னார்கள் எவ்வளவு அடிச்சாலும் , இவன் ரொம்ம்ம்ப நல்லவன்டா... ஹி ஹி ஹி
//கிளறுங்கள் கிளறுங்கள் --- வேற பொழப்பு இல்லையல்லோ !!!//
கிளறினால் தான் கூவம் சுத்தமாகும் சகோ. ஹி ஹி ஹி
2:57 AM
Delete
///நான் குறிப்பிடும் வீதாச்சாரம் ஊடகங்களில் பெற்றவை அல்ல, மாறாக இலங்கை மக்கள் தொகை கணிப்பின் அளவுகள் மற்றும் இதர அமைப்புக்களின் கணிப்பின் அடிப்படையிலானவை, விக்கிபீடியா போன்றவற்றின் ஊடாகவும் பெற்றவை.///
விக்கிபீடியாவில் இருப்பது எல்லாம் உண்மை இல்லை. நீங்கள் குறிப்பிடும் விகிதாசாரங்கள் ஊடகங்களில் இருந்து அல்லாமல் வேறு எங்கு பெற்றீர்கள்?
இலங்கை மக்களின் சனத்தொகை, இதர அமைப்புக்களின் அடிப்படையிலானவை என்றும் சொல்கிறீர்கள்? அதென்ன இதர அமைப்புக்கள்?
///45 சதவீதம் என்பது முஸ்லிம்கள் சொல்லும் அளவு, ஆனால் உண்மையில் 37 - 38 வீதமே முஸ்லிம்கள், சொல்லப் போனால் 1881 - 2011 வரை முஸ்லிம்களின் தொகை அதிகரித்து தான் வந்துள்ளது ///
45% த்தைவிட அதிகமானது முஸ்லிம்களின் சனத்தொகை தற்போதைய கிழக்கு மாகாணத்தில்!
1881-2011 வரை முஸ்லிம்களின் சனத்தொகை மட்டுமல்ல, தமிழ், சிங்கள மக்களின் சனத்தொகையும் அதிகரித்துத்தான் வந்துள்ளது.
///1881-யில் 33 சதவீதம் மட்டும் இருந்த முஸ்லிம்கள் இன்று 38 வீதம் உள்ளன. ///
தங்களின் இந்தத் தரவே, நம்பத் தகுந்தது அல்ல என்பதற்கு சான்று.
///ஆனால் 1881-யில் 58 வீதம் இருந்த தமிழர்கள் இன்று 40 சதவீதமே உள்ளனர். அப்படி என்றால் தமிழ் பேரினவாத முஸ்லிம் இனவழிப்பு என்றக் கூற்று இங்கு பொய்யாகுகின்றது///
1881 இல் 58% ஆக தமிழர் இருக்கவில்லை. இப்போதும் தமிழர் 40% ஆக இல்லை. அதைவிடக் குறைவு.
தேவைப்படும்போது, தமிழர்களின் சனத்தொகையை அதிகரித்துக் காட்டுவதும் குறைத்துக் காட்டுவதும் தமிழ் ஊடகங்களின் இயல்பான குணம். அவைகளை மேய்ந்துவிட்டு, இங்கு கருத்து எழுதுவதனால் யாருக்கும் பலன் தராது.
சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் பேசும் மக்களின் குடிப்பரம்பல் ஏற்ற, இறக்கம் கண்டதுபோல, தமிழ்ப் பேரினவாதத்தால், சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களின் குடிப்பரம்பாலும் ஏற்ற, இறக்கம் கண்டது.
///இரண்டாம் இடம் என்பது நாடளாவிய ரீதியாகவா, கிழக்கு மாகாணத்திலா ? ஊர்ஜிதங்கள் உண்மையாகிவிடுமா சகோ... !!! ///
இலங்கை நாட்டில் இப்பொழுது முதலாவது சிறுபான்மை மக்கள், முஸ்லிம்களே!
கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம்களே! இது ஊர்ஜிதம் அல்ல. அரசே இருட்டடிப்பு செய்திருக்கிறது.
///நீங்கள் சொல்வது சரியான காமெடி சகோ. அப்படி இலங்கை அரசு பித்தலாட்டம் செய்திருந்தால் இலங்கை அரசோடு தேனிலவு கொண்டாடும் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்துக் கொண்டிருந்தது, தட்டிக் கேட்கலாம் அல்லவா, மீண்டும் அரசோடு தானே ஒட்டிக் கொண்டுள்ளனர். ஆக உங்களின் இந்தக் கூற்றுக்கும் ஆதாரம் ஒன்றும் இல்லை .. !!!///
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பதால், முஸ்லிம்களின் எல்லாப் பிரச்சனைகளையும் தட்டிக் கேட்கும் என்று நினைக்கலாகாது.
//முஸ்லிம் கட்சிக்கும் அரசிற்கும் இடையில் கூட்டாட்சி இடம்பெற்றுள்ளது என்று சொல்வது பொருத்தமானது. //
///அதுவும் தவறு தான் முஸ்லிம் காங்கிரஸ் - மக்கள் முன்னணிக்குமான கூட்டு என சொல்லலாமே !///
இரண்டும் ஒன்றுதான்!
///இலங்கை மாகாண முதலமைச்சர் என்பது வெறும் பதவி மட்டுமே, ஆட்சி அதிகாரம் கிடையாது அவருக்கு, மாவட்ட அதிபர் / கலக்டருக்கு கூட அதிக அதிகாரங்கள் உள்ளன.///
மாகாண முதலமைச்சருக்கு ஆட்சி , அதிகாரம் எல்லாம் இருக்கிறது, போலிஸ், காணி அதிகாரங்கள் தவிர்த்து!
மாவட்ட அதிபருக்கு வேறு விதமான அதிகாரங்கள்.
///ஒருக் காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தவர்கள் முஸ்லிம் மீனவ மக்கள், தமிழ் பரதவர்கள் - இன்று என்ன நிலைமை சொல்லுங்கள். இதே நிலைமை தான் கிழக்குக்கும் வரும் என்பது எனது எண்ணம் ... !///
அன்றிலிருந்து இன்றுவரை, புத்தளம் மாவட்டத்தில் சிங்கள மக்கள்தான் பெரும்பான்மை.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பது, புத்தளம் நகரிலும் அதை அண்டிய முஸ்லிம் கிராமங்களிலும் மாத்திரந்தான்!
புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் மீனவர்கள், 2% ஐ விடக் குறைவு.
Post a Comment