Followers

Sunday, September 23, 2012

நியூயார்க் போலீஸுக்கு திறமை பத்தாதுங்க.......!

நியூயார்க் போலீஸ்: 6 வருடங்களாக முஸ்லிம்களை உளவு பார்த்து என்ன கிடைத்தது?

நியூயார்க் ஏரியாவில் வசிக்கும் முஸ்லீம் மக்களை ஆறு வருடங்களுக்கு மேலாக உளவு பார்த்தும், உருப்படியான ஒரு கேஸ்கூட கிடைக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளது நியூயார்க் போலீஸ் NYPD (New York Police Department)

நியூயார்க் கோர்ட்டில் நடைபெறும் சிவில் உரிமை வழக்கு ஒன்றில் சாட்சியமளித்த NYPD துணைத் தலைவர் தாமஸ் கலாடி, கோர்ட்டில் இதை ஒப்புக்கொண்டார்.

முஸ்லிம் மக்களை உளவு பார்ப்பதற்காக டெமோகிராஃபிக்ஸ் யூனிட் என்ற பிரிவு ஒன்றை அமைத்து, அதில் பல உளவாளிகளை பணியில் அமர்த்தியிருந்தது நியூயார்க் போலீஸ். காவல்துறையின் உளவு பார்க்கும் பிரிவுகளில், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கப்பட்டதும், இந்த பிரிவுக்குதான்.

கடந்த 6 வருடங்களுக்கு மேலாக ஃபுல் ஃபோர்ஸில் இயங்கிவரும் பிரிவு இது.

டெமோகிராஃபிக்ஸ் யூனிட்டின் உளவு புரோகிராம், சி.ஐ.ஏ.-வின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. நியூயார்க் ஏரியாவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் தமது உளவாளிகளை ஊடுருவ விட்டுள்ளது இந்த யூனிட்.

முஸ்லிம்கள் வசிக்கும், ஷாப்பிங் செய்யும் இடங்களில் துவங்கி, வழிபாட்டு ஸ்தலங்கள், இஸ்லாமிய மாணவர் அமைப்புகள் என்று சகல இடங்களிலும் தமது ஆட்களை வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

கடந்த வருடம் கொண்டுவந்த புதிய நடைமுறை ஒன்றின்படி, முஸ்லிம் பெயரில் இருந்து அமெரிக்க பெயருக்கு மாற்றிக் கொள்ளும் அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.

அதேபோல, வேறு மதங்களில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களும், முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தனர்.

இவ்வளவு துல்லியமாக ஊடுருவியும், இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை என்று கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார், NYPD துணைத் தலைவர்.

http://www.democracynow.org/2012/8/24/nypd_admits_muslim_spy_program_generated



After years of spying on Muslim neighborhoods, infiltrating groups and eavesdropping on conversations across the northeastern United States, the New York City Police Department has admitted its secret Demographics Unit failed to yield a single terrorism investigation or even a single lead. In the years following the Sept. 11 attacks, the NYPD secretly infiltrated Muslim student groups, sent informants into mosques, eavesdropped on conversations and created databases showing where Muslims lived, worked and prayed. We’re joined by Adam Goldman, who co-wrote the Pulitzer Prize-winning Associated Press series that revealed the spy program and, most recently, its failure. [includes rush transcript]

டிஸ்கி: மிஸ்டர் பிரசிடெண்ட் ஒபாமா! உங்க ஆளுங்களுக்கு திறமை பத்தாதுங்க. எங்க நாடான இந்தியாவுக்கு உங்க போலீஸ்காரங்களை பயிற்சிக்கு கொஞ்ச காலம் அனுப்பி வையுங்கள். பொய்கேஸ் எப்படி போடுவது? குண்டு வெடித்த ஐந்து நிமிடத்தில் 'இந்தியன் முஜாஹிதீன்' 'லஸ்கர் எ தொய்பா' என்று பல பெயர்களை எங்கள் காவல் துறையே ஆட்களை வைத்து பேச வைத்து மிக கச்சிதமாக ரோட்டோர முஸ்லிம்களை எப்படி கைது செய்கிறது? விசாரணை கைதியாகவே 10 அல்லது 15 வருடங்கள் எவ்வாறு முஸ்லிம்களை வதைப்பது? என்ற ரகசியங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி கொடுப்பார்கள். பிறகு நியுயார்க்கில் தினம் 10 முஸ்லிம்கள் உங்களுக்கு குற்றவாளிகளாக கிடைப்பார்கள். இதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் தடுத்து விடலாம். தாமதப்படுத்தாதீர்கள். :-)

39 comments:

Seeni said...

athu sari...

UNMAIKAL said...

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில், இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...

விதிமுறை இதுதான்,

அனைவரையும் கிர் காட்டில் (சிங்கங்கள் நிறைந்த காடு) கொண்டு போய் விட்டு விடுவார்கள்...

யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...

அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேகபட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...

அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,

"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"

"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"

indrayavanam.blogspot.com said...

நல்ல பதிவு

UNMAIKAL said...

Wednesday, 8 August 2012

டெல்லி போலீஸ் நடத்தியது போலி என்கவுண்டர்! – உயர்நீதிமன்றம்!

7 Aug 20127 acquitted by Delhi high court

டெல்லி:டெல்லி மாநகரத்தில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் என குற்றம் சாட்டி என்கவுண்டர் மூலம் 7 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த சம்பவம் போலியானது என கூறி விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதிச்செய்தது.

இது டெல்லி போலீசுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்துச் செய்யக் கோரி டெல்லி போலீஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.

போலி என்கவுண்டரில் கைது செய்த நபர்களை விடுதலைச் செய்ய உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துச் செய்யும் சூழல் இல்லை என்று நீதிபதிகளான எஸ்.ரவீந்திர பட், எஸ்.பி.கார்க் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

2005-ஆம் ஆண்டு டெல்லி-குர்கான் எல்லையில் அரங்கேறியதாக கூறப்படும் என்கவுண்டர் போலியானது என்றும்,

அச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களை விடுதலைச் செய்ய வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதே வேளையில் போலி என்கவுண்டரை உருவாக்கிய போலீஸ் குழுவில் நான்கு பேர் மீது வழக்கு பதிவுச் செய்ய வேண்டும் என்ற விசாரணை நீதிமன்ற உத்தரவில் சில திருத்தங்களை டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கொண்டது.

இவர்கள் மீது விசாரணை நடத்தி துறை சார்ந்த நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது.

2005 ஜூலை 5-ஆம் தேதி டெல்லி-குர்கான் எல்லையில் காரில் சென்று கொண்டிருந்த தீவிரவாதிகளை என்கவுண்டர் மூலம் சரணடைய வைத்ததாக டெல்லி போலீஸின் சிறப்புக் குழு கூறியது.


ஸாகிப் ரஹ்மான், நஸீர் அஹ்மத் சூஃபி, குலாம் மொய்னுத்தீன் தர், பஷீர் அஹ்மத், ஷா ஆகியோர் காரில் இருந்து பிடிக்கப்பட்டதாக போலீஸ் கூறியது.

ஏ.கே.47 துப்பாக்கி, காட்ரிட்ஜ், கிரேனேடுகளுடன் காரில் சென்று கொண்டிருந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டபொழுது போலீஸ் குழுவின் தலைவராக இருந்த ரவீந்தர் தியாகி திருப்பிச் சுட்டு அவர்களை கைது செய்ததாக போலீஸ் கூறியது.

ஆனால் போலீஸின் கூற்றை முற்றிலும் நிராகரித்த விசாரணை நீதிமன்றம் அவ்வாறு ஒரு என்கவுண்டர் நடைபெறவில்லை என்றும்,

இது போலியாக இட்டுக் கட்டியது என்றும் கண்டறிந்தது.


சிறப்பு போலீஸ் குழுவின் எஸ்.ஐக்களான ரவீந்தர் தியாகி, நிராக்கர், மஹேந்தர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்த திரைக்கதை தான் இந்த போலி என்கவுண்டர் நாடகத்தில் அரங்கேறியதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்
டிஸ்கி செம செம .........

இந்தவாரம் தமிழ்மணம் முதல் இடத்தை பிடித்ததிற்கு வாழ்த்துக்கள்

UNMAIKAL said...

ஹிந்து பத்திரிகையின் ஹிந்துத்துவா மனோபாவம்!

தர்மம்!!

பத்திரிக்கை (அ)தர்மம்.

Wednesday, May 09, 2012

கடந்த மே மாதம் 3-ஆம் தேதி தென்னிந்தியாவின் பிரபல பத்திரிகையான ‘தி ஹிந்துவின் ஆந்திர மாநில பதிப்பின் முதல் பக்கத்தில் மிக முக்கியத்துவத்துடன் வெளியான செய்தி பலரையும் குறிப்பாக ஹைதராபாத் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒரு சாதாரண உள்ளூர் செய்தி பிரபலமான ‘தி ஹிந்து’ பத்திரிகையின் முன்பக்கத்தில் ‘Accused alleged police torture’ என்று வெளியாகியிருந்தது.

ஹைதராபாத் பழையநகரில் முஸ்லிம்-இந்து கலவரத்தைத் தூண்ட ஹனுமான கோயிலில் மாட்டுக் கறியை வீசிய ஹிந்து வாஹினி என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்.நாகராஜு என்பவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.

இதில் என்.நாகராஜு என்பவர் போலீஸார் தன்னை சித்திரவதைச் செய்ததாக குற்றம் சாட்டிய செய்தியைத்தான் தி ஹிந்து தனது முதல் பக்கத்தில் வெளியிட்டு ஹிந்துத்துவா விசுவாசத்தை காட்டியுள்ளது.

இச்செய்தியை படித்த முஸ்லிம்களுக்கு ஆச்சரியம்.

ஏனெனில் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக 150 முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் ஹைதராபாத் கலவர வழக்கிலும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பாரபட்சமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைச் செய்யப்பட்டனர்.


அப்பொழுதெல்லாம் இதனை முதல் பக்க செய்தியாகவோ, முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகவோ வெளியிடாத ஹிந்து பத்திரிகை,

குற்றவாளி தானே இக்குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்த வழக்கில் ஒருதலைபட்சமாக செய்தியை வெளியிட்டுள்ளதுதான் ஆச்சரியத்திற்கு காரணம் ஆகும்.

UNMAIKAL said...

இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள் - கீற்று ஆசிரியர் குழு .



இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன.

அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன. அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது.

சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.

நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?

அப்பாவி முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்த இந்து தீவிரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை;

முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை.

அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை.

ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது.

ப‌ல‌ர் விசார‌ணைகூட‌ இல்லாம‌ல் 5 ஆண்டுக‌ள், 10 ஆண்டுக‌ள் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.


திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் சாதி வெறிக்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர்.

இந்த சமூக அசிங்கங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாத சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு 'தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை' என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே.

'உன்னைப் போல் ஒருவன்' என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான்.

இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான்.

காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான்.

இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள் அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

தங்கள் மீதான காழ்ப்பு மிகுந்த சொற்களை கண்டும் காணாமல் நகர்ந்துசெல்ல வேண்டியிருக்கிறது.


பெரும்பான்மையை அனுசரித்துச் செல்லாத சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கப்படுகின்றனர்.

இதன் மறுவளமாக அப்துல் கலாம் பிராண்ட் முஸ்லிம்களை உற்பத்தி செய்து தனது ரத்தக்கறைகளை மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் இந்து பாசிஸ்ட்டுகள்.

மதம் என்பது மனிதனுக்கு அபீனைப் போன்றது என்றார் காரல் மார்க்ஸ்.
அது இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

ஆனால் யதார்த்தத்தை முன்வைத்தே நாம் பேச வேண்டியிருக்கிறது.

தேச எல்லைகளைக் கடந்து உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக இருப்பது இஸ்லாம்தான்.

அமெரிக்க வல்லாதிக்கம் தனக்கான முகமாக முதலாளித்துவத்தை சூடிக்கொண்ட கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகக் கட்டமைத்தது; இப்போதும் அது தொடர்கிறது.

அதன் அடுத்த பதிப்பாக இப்போது உலக அளவில் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.

இது வேறு எந்த மதத்துக்கும் நிகழாதது.


THANKS TO SOURCE:
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9821&Itemid=139

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
டிஸ்கி செம செம

அன்புடன்
முஹம்மது ஸாலிஹ்

seenu said...

ஏம்பா,
பல நாட்டு எல்லைகளை எவ்வளவோ வருஷமா கண்காணிக்கிறாங்க..பிரச்னை எங்கேயோ எப்பவோ தான் வருது..எல்லைப்பாதுகாப்புடையை மூடிர்லாமா? உளவுத்துறை கண்காணிக்கிறது அப்டின்னுதான் அடங்கி இருப்பாங்க?

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

நல்ல தகவல் சுவன்ஜி.சகோ உண்மைகளுடைய காவல்துறைப்பற்றிய‌ பின்னூட்டம் ஒன்று நகைச்சுவையாக தெரிந்தாலும் அதில் உள்ளதுபோல்தான் நடந்துகொண்டிருக்கிறது.

NKS.ஹாஜா மைதீன் said...

தவறு செய்தால்தானே போலீஸ் பிடிப்பதற்கு?!என்ன என்னவெல்லாம் செய்கிறார்கள்.....

UNMAIKAL said...

PART 1.இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல. - ‍ ஆத்மார்த்தி. கீற்று சிறப்புக் கட்டுரை

இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.

நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும்

மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை.

இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும்,

ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய நிலத்தில் இஸ்லாமியர்களும் மற்ற சமய சமூகத்தை சேர்ந்தவர்களும் மிகச்சரியான புரிதல்களுடன் வாழ்ந்து வந்தது பெருவரலாறு.

ஆனால் காந்தியைக் கொன்றழித்த இந்திய தேசத்தின் புதல்வர்கள் ஆளவந்தார்களாக மாறிய வரையிலும் அந்தப் பெருவரலாற்றின் அமைதி தொடர்ந்து தான் வந்தது.

பொதுச்சூழலில் என்றைக்கு குண்டுவெடிப்புகளும் உலகளாவிய நிகழ்வுகளில் பல செயல்களும் செய்திகளும் முஸ்லிம்களை சம்மந்தப்படுத்தி வரத் தொடங்கினவோ அன்றைக்கு பிடித்தது சனி.

நான் முஸ்லிம்களில் குற்றவாளிகள் இல்லவே இல்லை என கூறவரவில்லை.

முஸ்லிம்கள் என்றாலே குற்றவாளிகள், குண்டுவைப்பவர்கள் என்று கற்பிதம் செய்ய முனையும் ஆதிக்கசக்திகளை துதி பாடி எடுக்கப்படும் திரைப்படங்களைச் சாடுவதே என் நோக்கமாகிறது.

எந்த இனத்தில் அல்லது எந்த மதத்தில் குற்றவாளிகள் இல்லாமல் இருக்கிறார்கள்..?

எந்த இனத்தை சேர்ந்த அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் முழுக்க நல்லவர்கள் என மார் தட்டிக்கொள்ள முடியுமா..?

அங்கனமே முஸ்லிம்களையும் அவர்களில் அங்குமிங்கும் இருக்கும் குற்றவாளிகளை குற்றச்செயல் புரிந்தவர்களை நாம் பார்க்க வேண்டும் என்பது தானே நியாயமாக இருக்க முடியும்..?

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியோ இல்லையோ, உலகுக்கே இளைத்தவாயர்கள் முசல்மான்கள்.

அவர்கள் செய்யக்கூடிய கொடுஞ்செயல்கள் என்னென்ன..?

1.அரபி/உருது பேசுகிறார்கள்.
2.தரையில் வீழ்ந்து தொழுகை புரிகிறார்கள்.
3.கூட்டம் கூட்டமாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.
4.புத்தகங்கள் அச்சிடுகிறார்கள்.. படிக்கிறார்கள் பேசுகிறார்கள்.
5.இன்னமும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என நம்பிக்கொண்டு இங்கேயே இருக்கிறார்கள்.


குழந்தைத் தனமாய் இருக்கிறது.

இரண்டு தரப்பாரை எப்பொழுதும் பதற்றத்திலேயே வைத்திருப்பதில் பதவிக்குளிர் காய்கிற அரசியல்வாதிகளும், மதவாதிகளும், இந்த இரண்டு தரப்பாரைச் சார்ந்து பிழைப்பு நடத்தும் அடிவருடிகளும் தவிர பொது மக்கள் இன்னமும் எந்த மதமாயினும் சரி, இணக்கமாக, அந்நியோன்னியமாகத் தான் வாழ்கின்றார்கள்..

இனி சினிமாவுக்கு வருவோம்.

அடிதடிப் படமாயினும் அரசியல் படமாயினும் சரி... ஊறுகாய் முஸ்லிம்கள் தான்.

முஸ்லிம்கள் குண்டு வைப்பவர்களாகவும்,
உருது பேசுகிறவர்களாகவும்,
தொழுகை புரிபவர்களாகவும்,
வெளிநாட்டுத் தீவிரவாதிகளாகவும்,
குண்டடிபட்டு அல்லது குத்துப் பட்டு சாகிறவர்களாகவும்
தொடர்ந்து பிம்பமாக்கப்படுகிறார்கள்.

எந்த வித உலகளாவியப் பார்வையோ அல்லது புரிதலோ அன்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுக்கப்படுகின்ற படங்களில் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம்கள் கொடுமைக்குட்படுத்தப்படுகின்றனர்.

சமீபத்திய வானம்... இதில் ப்ரகாஷ்ராஜ் நல்ல முஸ்லிம். அவர் தம்பி தீவிரவாதி. குண்டு வைப்பவன்.

ரஜினிகாந்தின் சிவாஜியில் ஹவாலா செய்பவர் ஒரு பாய். (சூப்பரு).

உன்னைப் போல் ஒருவனில் கமல் செய்தது பெரும் துரோகம். அவரது குருதிப்புனல் படத்தில் அர்ஜூன் முஸ்லிம். கமல் இந்து.

ஏன் இந்த நாயகர்கள் முஸ்லிம் வேஷமே ஏற்கக்கூடாதா..?

பெரும்பான்மை மதத்தைத்தான் சார்ந்தவனாய் இருக்க வேண்டும் நாயகன் என்று எழுதப்படாத விதியே இருக்கிற கோடம்பாக்கத்தில் அதை மீற கமலால் கூட முடியாது.

சேரனின் பொக்கிஷம் வித்தியாசமாய்த் தொடங்கியதே எனப் பார்த்தால்... அய்யய்யோ பத்மப்ரியாவின் அப்பா(முஸ்லிம்கள்)தான் படத்தின் வில்லன்.
வாக்கு கொடுத்து அதை மீறுகிறவர்.

ஏன் இந்த வெறிப்பார்வை..? சேரன் அதே படத்தை கதையை மாற்றி யோசிப்பாரா..? அல்லது எடுப்பாரா..?

பத்மப்ரியா ஒரு ஹிந்து சேரன் ஒரு முஸ்லிம் என எடுத்தால்... எடுத்தால் என்று தான் சொல்ல முடியும்.. எடுக்க மாட்டார்கள்.


CONTINUED ….

UNMAIKAL said...

PART 2.இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல. - ‍ ஆத்மார்த்தி. கீற்று சிறப்புக் கட்டுரை

சரி போகட்டும் என்றால் நம்பள்கி நிம்பள்கி என்று கசாப்பு கடைக்காரர்களாகவும் கறி வெட்டுகிறவர்களாகவும் தானே அதற்கு முன்பு வரை சித்தரிக்கப்பட்டார்கள்..?

சில விதிவிலக்குகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

ஆனால் அவை மனக்காயங்கள் மொத்தத்தையும் மறுதலிப்பதற்கோ மறுப்பதற்கோ மறப்பதற்கோ போதாது என்பதே உண்மை.

இஸ்லாமியர்கள் பற்றி எடுத்துச் சொல்வதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கின்றன..?

ஒரு முழுமையான சினிமா, முழுக்க இஸ்லாமிய குடும்பமொன்றின், இஸ்லாமிய கிராமமொன்றின், இஸ்லாமிய வாழ்க்கைமுறை ஒன்றைப் பதிவு செய்திருக்கிறதா இது வரை தமிழ் சினிமாவில்..?

அப்படி ஒரு படம் எடுத்தால் ஓடாதா..?

அல்லது இஸ்லாமியர்கள் வரலாற்றில் கதைகளே இல்லையா?

இந்த மண்ணில் காலம் காலமாய் இஸ்லாமியர்கள் என்றாலே கறிவெட்டுபவன், தமிழை தப்பாக பேசுபவன் அல்லது குண்டு வைப்பவன் தானா..?

கட்டிடக்கலையில் இருந்து சாஃப்ட்வேர் துறை வரை தையல் கலையில் இருந்து மருத்துவர் வரை விஞ்ஞானிகளில் இருந்து மாலுமிகள் வரை இஸ்லாமியர்கள் சாதிக்கவில்லையா..?

அல்லது சாதிப்பதை வெளிச்சொல்ல தமிழ்சினிமா தயாராக இல்லையா..?

இது தான் இப்பொழுது நம் முன் நிற்கும் கேள்வி.

எந்த ஒரு படத்திலும்,
ஆகா.. ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி இஸ்லாமியர் என கதை சொல்கிறார்களே, பரவாயில்லையே என நினைத்தால் (உதாரணம்:போக்கிரி)

உடனே வந்து இறங்குவார் அலிபாய். சர்வதேச குண்டுவைக்கும் டெக்னாலஜிஸ்ட். என்ன கொடுமை இது..?

இவர்கள் எல்லோருமே கதை எழுத மன்னிக்கவும் கதை பண்ண உட்காரும் பொழுதே ஒரு எதிர்மறைப்பாத்திரம் முஸ்லிமாக வந்தாக வேண்டும் என்ற முன் முடிவில்

அதை பேலன்ஸ் செய்வதற்காகவே இன்னொரு கதாபாத்திரம் முஸ்லிம்.. அது எதற்கு..?

மத ஒற்றுமை பேச, தியாகம் செய்ய.. ஏன் தனியாக ஒரு நல்ல முஸ்லிம் கதாபாத்திரத்தை சிந்திக்கவே முடியாத ஊனமுற்றவர்களாகவே இயங்குகிறீர்கள் இயக்குநர்களே...?

சரி. பொருளாதாரத்தில் கல்வியில் இன்னும் வாழ்நிலைகளில் முன்னேறி இருக்கிற, இந்தியத்திருநாட்டில்

எல்லா ஊர்களிலும் பாரபட்சமின்றி பாகுபாடின்றி இடங்களையும் சொத்துக்களையும் வாங்கி இருக்கிற,

வாங்குகிற,

வாங்கப் போகிற மேல்நிலை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கிறீர்களே..

அதே நேரம் இன்னமும் கடைநிலையில் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்படுகிற,

வாழ்வாதாரத் தேவைக்கு கூட கை ஏந்தும் நிலையில் கல்வி அறிவும் பெறாமல்,

கூலிகளாகவும் ஏழைகளாகவும் இந்த நாட்டில் பரிதவிக்கிற ஏழை முஸ்லிம்களின் கதையை படமாக்க அல்லது எண்ணிப் பார்க்க கூட நேரமில்லையா தோழர்களே..

அல்லது அப்படி ஏழைகளாக எந்த ஒரு முஸ்லிமும் இல்லை என உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா....?

நமது வீதிகளில் நமது வீடுகளுக்கு இடப்புறமும் வலப்புறமும் வசித்துக் கொண்டு,

நம் பிள்ளைகள் படிக்கிற பள்ளிகளில் தம் பிள்ளைகளைப் படைக்க வைத்து,

நாம் பணம் சேமிக்கும் வங்கிகளில் தம் பணத்தையும் சேமித்துக் கொண்டு,

நம்மிடம் தம் பொருளை விற்று,

நம் பொருளை தமக்கென வாங்கி,

குருதி கொடுத்து குருதி பெற்று

எல்லா விதங்களிலும் சிறுபான்மையினராய்

எல்லா நேரங்களிலும் அடுத்து என்ன நிகழுமோ என்ற பதற்றத்துடனே

வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இஸ்லாமியர்

இந்த 'மதச்சார்பற்ற' காந்தி தேசத்தில் செய்யும் பிழைதான் என்ன..? இந்த நிலத்திலேயே தொடர்ந்து வாழ்ந்துவருவதைத் தவிரவும்.

சினிமா கட்டாயம் தலையாய கலை என நம்புகிறேன்.

பத்து படங்கள் போதும் தேசம் அமைதியுற என நிச்சயமாக அடித்துச் சொல்ல விழைகிறேன்.

அதனால் உங்கள் முன்வைக்கிறேன். என்ன செய்யக் கூடாது என்பதுவும் என்ன செய்ய வேண்டும் என்பதுவும்....

உங்களுக்குத் தெரியாதா இயக்குநர்களே..?

THANKS TO SOURCE: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14467:2011-05-08-04-10-28&catid=1:articles&Itemid=264

suvanappiriyan said...

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோதரர்கள் உண்மைகள், சீனி, இந்திராயவனம், ரப்பானி, முஹம்மது சாலிஹ், சீனு, முஹம்மது ஷஃபி, ஹாஜா மைதீன் ஆகிய அனைவருக்கும் நன்றி!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சுப்பர் பாய். அதிலும் அந்த கடைசி பத்தி சான்சே இல்லை. பிகள இருக்கீங்க போல.

பாகிஸ்தான்காரன் said...

தல! .
உங்களுக்கு முழு நேர தொழிலே அயலவர்களிடம் குற்றம் காண்பது மற்றும் மற்றய மதங்களை கேவலப்படுத்துவதுதானா?
அல்லா இதற்று எதிராக எதுவும் சொல்லவில்லையா?
ஏன் மாற்று மதத்தினரை உங்களின் வார்த்தைகளால் காயப்படுத்தாமலிருக்கக்கூடாது??
மாற்று மத்தினரின் சில கருத்துக்கள் உண்மையிலேயே சரியானதா இல்லை பிழையானதா என்று ஏன் நீங்கள் உங்களின் பகுத்தறிவினை பிரயோகித்து யோசிக்கக்கூடாது? ( உங்களின் மத்தினூடாக சிந்திக்காமல்.)
அல்லா மனிதருக்கு மிருகங்களிலும் பார்க்க ஒர் அறிவினை ஏன் கூடுதலாக கொடுத்தார் என சிந்திக்கமாட்டீர்களா?
மதம் முக்கியம்தான் . ஆனால் மத்தின்பால் மதம் கொள்ளாமல் பேச நீங்கள் முயலக்கூடாது?
மற்றயவர்கள் கருத்துக்களை ஏன் மதித்து , அவர்கள் ஏன் அப்படி சொல்லுகிறார்கள் என்று சிறிதழவாவது சிந்திக்ககூடாது?
மற்றயவர்களை காயப்படுத்தும் எந்த நிகழ்வும் தவிர்க்கப்பட் வேண்டும் என்பதுதான் இந்துக்களின் வேதமும் கிறீஸ்தவமும் புத்த மதமும் போதிக்கிறது.( இந்துக்களும் கிறீஸ்தவர்களும் பவுத்தர்களும் கூடுதலான நேரங்களில் அவ்வாறு நடப்பதில்லை.)
இஸ்லாம் எவ்வாறு கூறுகிறது என்பது எனக்குத்தெரியவில்லை. இஸ்லாத்தை முழுதாக பின்பற்றுவராகிய நீங்கள் மாற்று மத்தினை சார்ந்தவகளின் நம்பிக்கைகளை கடுமையாக சாடி வருகிறீர்கள். அப்படியாயின் இஸ்லாம் அடுத்தவரை துன்புறுத்துவதை ஊக்குவிக்கிறா?

Anonymous said...

SEP 24: முஸ்லிம்கள், முஸ்லிம் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி வேட்டையாடும் உளவுத்துறையின் அறிக்கைகளுக்கு பின்னால் செயல்படுபவர்கள் மத்திய அரசு பீடங்களில் உள்ள RSS அனுதாபிகளே.

மத்திய இண்டலிஜன்ஸ் பீரோவான ஐ.பியின் முன்னாள் இயக்குநர் அஜித்குமார் டோவல் தலைமையில் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பே முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை உண்டாக்கும் விசயங்களை திட்டமிட்டு செய்து வருகிறது.

இந்த அமைப்பு கன்னியாகுமரியில் இருந்து செயல்படும் விவேகானந்த கேந்திரத்தின் கீழ் வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவரான ஏமகனாத் ரானடே என்பவர் தலைமையில் 1972 ல் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் டெல்லி உள்ள சாணக்யா புரியில் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில்தான் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.

மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் இந்திய இண்டலிஜன்ஸ் பீரோவான ஐ.பியின் முன்னாள் தலைவர்கள், உளவுத்துறையான ‘ரா’வின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் ராணுவ காலால் படை தலைவர்கள், முன்னாள் விமானப்படை தலைவர்கள், முன்னாள் கப்பல் படை தலைவர்கள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர்கள், முன்னாள் இந்திய தூதர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தின் தலைமை பதவிகளில் உள்ளனர்.

இந்த அதிகாரிகளின் பதவி காலக்கட்டத்தில்தான் முஸ்லிம் இயக்கங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டை கூறும் உளவுத்துறையின் அறிக்கைகள் அதிகமாக வெளியாகின. ஆர்.எஸ்.எஸ். நடத்திய மலோகேன், அஜ்மீர், சம்ஜோதா ரயில், மக்கா மஸ்ஜித், ஆகிய குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள் மீது திசை திருப்பி விட்டவர்களும் இவர்களே. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு சிறைகளில் அடைப்பட்டனர்.

இந்தியாவின் பல மாநிலங்களில் உண்மைக்கு புறம்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் இந்த வேலைகளை கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தா கேந்திரத்தின் கீழ் செயல்படும் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பே செய்து வந்தது. இதன் பின்னணியில்தான் அதிராம் பட்டினத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர் வெங்காய ஏற்றுமதி வியாபாரி அன்சாரியின் கைதும் அடங்கும். இதுவரை மற்றைய மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டியவர்கள் இப்போது தமிழகம் வந்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத செயல்களுக்கு துணை புரியும் இந்த அமைப்பின் அறிக்கைகளை முதலில் வெளியிடுவது இவர்களின் கைகூலிகளான தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகளே. மத்திய அரசுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதும் இந்த அமைப்புதான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் உளவுத்துறை என்பது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சிக்கு துணை புரிவார்கள் ஆனால் நம்நாட்டு உளவுத்துறையோ நமக்கு சாபக்கேடாக அமைந்துவிட்டது.
*மலர்விழி*

http://www.sinthikkavum.net/2012/09/blog-post_23.html

UNMAIKAL said...

PART 1. மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி ?

ஒரு 18 வயது சிறுவன் தனியாகத் திட்டமிட்டு 20 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக,

எவ்வித ஆதாரமும் இன்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டார்.

நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பின், இறுதியாக அவர் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்துள்ளார்.

அவர் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் 18லிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவற்றில் 17 வழக்குகளில் அவருக்கு எதிராக ஒரு சாட்சியைக் கூட அரசால் காட்ட முடியவில்லை.

எஞ்சியுள்ள இரு வழக்குகளிலும் இதே நிலைதான்.

அவர் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் எதிலாவது அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூட, அவருக்கு வெறும் 10 ஆண்டுகள் தான் தண்டனை கிடைத்திருக்கும்.

ஆனால் அவர் எல்லா வழக்கிலும் நிரபராதி என விடுவிக்கப்பட்டாலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.

வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை.

இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது.

இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.

முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இதுதான் இன்று நாட்டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பிராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள்தான்.

எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும் ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.

ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்களில் பலர் அப்பாவி இஸ்லாமியர்கள்.


பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரது துயரக் கதைதான் இது.

முஹம்மது அமீர்; 18 வயதில் நாட்டை அச்சுறுத்திய மிகப்பெரிய தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையில், இருட்டில் கழித்த இவர், கடந்த ஜனவரி மாதம் அப்பாவி என விடுவிக்கப்பட்டுள்ளார்.

1996 டிசம்பர் முதல் 1997 அக்டோபர் வரை பத்து மாத காலத்தில், தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட சிறிய குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இவற்றில் 5 குண்டுகள் ஓடும் பேருந்துகளில் வெடித்தன. 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 10 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன; இவற்றில் 5 ஒரே நாளில் வெடித்தன.

அதுவும் வெவ்வேறு இடங்களில். ஒரே நேரத்தில் தில்லியின் சதார் பஜார் பகுதியிலும், காசியாபாத் பகுதியிலும் குண்டுகள் வெடித்தன.

இதுபோல அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தன.

காசியாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஓடும் ரயிலில், அதுவும் வெவ்வேறு பெட்டிகளில் நடந்தது.

ஓராண்டு வரை தொடர்ச்சியாக நடந்த இந்தக் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் தில்லி போலீசார் திணறினர்.

இந்தச் சூழலில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த பகுதியிலிருந்த அமீர் ஒரு முறை பாகிஸ்தான் சென்று திரும்பியது போலீசின் கண்களை உறுத்தியது.

உண்மையில் பாகிஸ்தானில் மணம் முடித்துள்ள தனது சகோதரி வீட்டுக்குத்தான் அமீர் சென்று வந்தார்.

அதுவும், மேற்கூறிய குண்டு வெடிப்புகள் எல்லாம் முடிந்த பின்னர் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் அவர் அங்கே சென்றார்.

ஆனால் அமீர், பாகிஸ்தான் சென்று குண்டு வைக்கப் பயிற்சி எடுத்து வந்து இந்தியாவில் குண்டுவைப்புகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரைப் போலீசார் கைது செய்தனர்.

1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமீர் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது கொலை, பயங்கரவாதம், அரசுக்கு எதிராகப் போரிட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

20 குண்டுவெடிப்பு வழக்குகளில் அமீர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் அமீர், அவரது கூட்டாளி சகீலுடன் இணைந்து நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் 10 வழக்குகளில், விசாரணை துவங்கும் முன்னரே சகீல் விடுவிக்கப்பட்டார்.

அதுமட்டுமன்றி, 2009ஆம் ஆண்டு தாஸ்னா சிறைச்சாலையில் சகீல் பிணமாகத் தொங்கினார்.

அந்தச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் வி.கே.சிங் மீது சகீலைக் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


CONTINUED ……….

UNMAIKAL said...

PART 2. மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி ?

அமீரின் வழக்கறிஞரான என்.டி.பன்சோலி கடந்த 35 ஆண்டுகளாகக் குற்றவியல் வழக்கறிஞராக உள்ளார்.

இது போன்றதொரு வழக்கைத் தனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை எனக் கூறும் அவர்,

ஒரு 18 வயது சிறுவன் தனியாகத் திட்டமிட்டு 20 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக,

எவ்வித ஆதாரமும் இன்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.


நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பின், இறுதியாக அமீர் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்துள்ளார்.

அவர் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் 18லிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவற்றில் 17 வழக்குகளில் அவருக்கு எதிராக ஒரு சாட்சியைக் கூட அரசால் காட்ட முடியவில்லை.

எஞ்சியுள்ள இரு வழக்குகளிலும் இதே நிலைதான்.

இத்தனை ஆண்டுகளையும் அவர் தனிமையில், இருட்டுச் சிறையில் கழித்துள்ளார்.

சிறைக்கொட்டடியே அவரது உலகமாக இருந்தது.

ஆனால் சிறைச்சாலைக்கு வெளியிலிருந்த உலகம் 14 ஆண்டுகளில் வெகுவாக மாறிப் போயிருந்தது.

அவர் பிறந்து வளர்ந்த தில்லி மாநகரம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது.

அமீரின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவரது தாய் மூளைக் கோளாறால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு, ஊமையாகியிருந்தார்.

இதுவும் சிறையிலிருந்த அமீருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அமீரின் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் எதிலாவது அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூட, அவருக்கு வெறும் 10 ஆண்டுகள்தான் தண்டனை கிடைத்திருக்கும்.

ஆனால் அவர் எல்லா வழக்கிலும் நிரபராதி என விடுவிக்கப்பட்டாலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.

அமீரைப் போன்றே இன்னும் எத்தனையோ அப்பாவி முஸ்லீம்கள் போலீசால் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கி பல அப்பாவிகள் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

10 ஆண்டுகால சிறைவாசத்தில் வெளியே எல்லாம் மாறிவிட, விடுதலையாகி வந்த பின்னர் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.

அமீர் மீதான 20 வழக்குகளும் சிறிய அளவிலான வெடிகுண்டு தாக்குதல்கள் தான்.

இது போன்ற சிறிய குண்டுகளை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பல் பல இடங்களில் வைத்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான்.

ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் நிரபராதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர,

குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.


Source: http://www.vinavu.com/2012/04/20/islamophobia-2/

Anonymous said...

@Yaani ////இஸ்லாத்தை முழுதாக பின்பற்றுவராகிய நீங்கள் மாற்று மத்தினை சார்ந்தவகளின் நம்பிக்கைகளை கடுமையாக சாடி வருகிறீர்கள்./////

நண்பர் யானி உங்க வாதத்திற்கு வலு சேர்ப்பது ரொம்ப அவசியம் இந்த பதிவர் மாற்று மத கொள்கையாளர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார் என நீங்க ஆதாரமாக ஏதாவது கொடுக்க முடியுமா??? அதாவது தரம் தாழ்ந்த விமர்சனக்கருத்துகள் அடங்கிய இவரின் பதிவு அல்லது இவரின் பின்னூட்டம் ஏதாவது இருந்தால் அவைகளின் சுட்டி யை பகிரமுடியுமா???

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!இந்திய அரசு இயந்திரத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.ஆனால் ஒவ்வொரு முறையும் பிடிபடும் குற்றவாளி இஸ்லாமியராக இருப்பதேன்? வேணுமென்றே கேஸ் புடிக்கனும்ன்னு புடிச்சுடறாஙகளா?

பொய்க்கேஸ் போடுவதற்கும் தீவிர வாத கேசுக்கும் வித்தியாசங்கள் உள்ளது.பொய்க்கேஸ் நீதிமன்றத்தில் படுத்து விடும்.

தீவிரவாதம் குறித்து மாநில அளவில் காவல் துறையிலிருந்து ரா வரை கண்காணித்து சாட்சி இல்லாமல் ஒருவரை கைது செய்ய மாட்டார்கள்.

இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்வில் முன்னேறவும்,கல்வித் துறை,அரசு பணிகளில் நுழைவதற்கு வழி காட்டுங்கள். மதவாதம் வளர்க்கப்படுவதாலேயே இஸ்லாமிய இளைஞர்கள் மதபோதக தவறான வழிகாட்டுதலில் வாழ்வை இழக்கிறார்கள்.

மத உணர்வு அன்றாட வாழ்வியல் போராட்டங்களோடு இணைந்தது என்பதால்தான் அரேபிய எண்ணை வளநாடுகளில் அமைதியாக இருக்கும் இஸ்லாம் ஆசிய நாடுகளில் தீவிரவாத முகம் கொள்கிறது.

நிறைய எழுதுகிறீர்கள்.சொல்கிறீர்கள்.பரந்த சிந்தனையும் சரி,தவறுகளை எடைபோடும் துணிவும் கொள்வதே சரியான எழுத்துப்பாதையை நிர்ணயிக்கும்.நன்றி.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//இந்திய அரசு இயந்திரத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.ஆனால் ஒவ்வொரு முறையும் பிடிபடும் குற்றவாளி இஸ்லாமியராக இருப்பதேன்? வேணுமென்றே கேஸ் புடிக்கனும்ன்னு புடிச்சுடறாஙகளா?//

கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் எத்தனை பேரின் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்ற புள்ளி விபரத்தை தர இயலுமா? கோவை குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றுதான் முஸ்லிம்கள் நேரிடையாக சம்பந்தப்பட்து. மற்ற அனைத்துமே சந்தேகத்தின் பேரில் கேஸ் பைல் செய்யப்பட்டவை! 15 வருடம் குற்றவாளியாக கருதப்பட்டு பிறகு நீ நிரபராதி என்று வெளியாக்குவது எந்த வகை நியாயம்? இழந்து போன அவனது வாழ்வை திருப்பி கொடுப்பது யார்? தவறுதலாக எங்கோ ஒன்றிரண்டு நடந்தால் அது இயற்கையாக நடந்து விட்டது எனலாம். ஆனால் எங்கு குண்டு வெடித்தாலும் உடன் சில முஸ்லிம்களை உள்ளே போட்டு கேஸை மூடும் தந்திரத்தை இத்தனை காலமும் பார்த்துக் கொண்டுதானே வருகிறோம்.

//தீவிரவாதம் குறித்து மாநில அளவில் காவல் துறையிலிருந்து ரா வரை கண்காணித்து சாட்சி இல்லாமல் ஒருவரை கைது செய்ய மாட்டார்கள்.//

ரா வரை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் சில கருப்பு ஆடுகளைத்தான் நான் சுட்டிக் காட்டுகிறேன். மேலே நண்பர் 'சிந்திக்கவும்' கொடுத்துள்ள பதிவையும் படித்துப் பாருங்கள். தவறு செய்தவன் இஸ்லாமியனாக இருந்தால் அவனை சட்டத்தின் முன் கொண்டு வருவதில் முதல் ஆளாக நான் இருப்பேன்.

எங்கள் கிராமத்துக்கு காவல் துறையினர் வந்து நான் பார்த்தது இல்லை. அந்த அளவு இந்த அரசோடு அரசின் சட்டத்துக்கு கட்டுப் பட்டு நடக்கு ஒரு சிறந்த சமூகத்தை யாரையோ திருப்தி படுத்த காவல் துறையினர் மேற் கொள்ளும் நடவடிக்கைகளைத்தான் நான் விமரிசிக்கிறேன்.

இது மாற அரசு பதவிகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக அமர வேண்டும். அதற்கான முயற்சிகளில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் நிலைமை சீரடையும் என்று நினைக்கிறேன்.


suvanappiriyan said...

சகோ பதுகுர் ரப்பானி!

//நண்பர் யானி உங்க வாதத்திற்கு வலு சேர்ப்பது ரொம்ப அவசியம் இந்த பதிவர் மாற்று மத கொள்கையாளர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார் என நீங்க ஆதாரமாக ஏதாவது கொடுக்க முடியுமா??? அதாவது தரம் தாழ்ந்த விமர்சனக்கருத்துகள் அடங்கிய இவரின் பதிவு அல்லது இவரின் பின்னூட்டம் ஏதாவது இருந்தால் அவைகளின் சுட்டி யை பகிரமுடியுமா???//

ஞானி பதிலளிப்பார் என்று நினைக்கிறீர்களா? அவர் பதிலளிக்க மாட்டார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் அமெரிக்கா தான் - இங்கிலாந்து எம்.பி அதிரடி

லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார்.

யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.

ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.

அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.

- சிபீஇ

நன்றி www.inneram.com

Anonymous said...

கல்நெஞ்சம் said...

//கட்டபொம்மன் கட்டுக்கதையே

என் பள்ளிப்படிக்கும் போது எனது ஆசிரியர் நாட்டுப்புற பாடல்களை ஆராய்ச்சி செய்துவருபவர். அவர் எங்களிடம் கூறியது. பல்வேறு நாட்டுப்புற பாடல்கள் கட்டபொம்மனைத் திட்டி தீர்த்துள்ளன. அதிக வரிவசூல் செய்து மக்களைத் துன்புறுத்துவதே இவன் நோக்கமாம். 15 வருடங்கள் வெள்ளையர்களுக்கு வரி செலுத்தி நற்பெயர் பெற்றுள்ளான்.

எல்லாம் சிவாஜி கணேசன் நடித்தப்பின் பாப்புலர் ஆனவன்தான் இந்த பொம்மு

http://www.nambalki.com/2012/09/1_22.html#comment-form

Anonymous said...

சகோ. சு.பி யாரே,
சாதாரணமாக முஸ்லிம் பெயர் இருப்பதால் மட்டும் ஒருவர் முஸ்லிம் ஆகிவிட முடியாது என்று கூறும் 'நீங்கள்' திரைப்படத்தில் அந்த பெயரில் வரும் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதேனோ?

நானறிந்த வரையில், இந்துத்துவ வெறி பிடித்த இந்தியாவில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் ஹிந்தி சினிமா நாயகர்கள் 90% கான் களாக இருப்பதை நீங்கள் எங்கும் குறிப்பிட்டதாக காணவில்லையே? ஏன்?

அன்புடன்,
அனானி!

Anonymous said...

தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது உண்மை அறியும் குழு அறிக்கை;

செப்டம்பர் 24, 2012, திருச்சி


சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.


“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.
குற்றச்சாட்டுகள் கடுமையானவை; கவலைக்குரியவை. தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகிற சதி என்கிற வகையில் உடனடி நடவடிக்கையைக் கோருபவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி குறித்து வேறு வகையான தகவல்களும் கிடைத்தன. அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் அது சார்ந்த வெகுமக்கள் அமைப்புகளிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர் எனவும், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஏற்றுமதி செய்வது என்கிற அளவிலேயே அவருக்கு இலங்கையுடன் தொடர்பிருந்தது எனவும், அவரும் அவரது குடும்பத்தாரும் கியூ பிரிவு போலீசின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர் எனவும் அறிந்தோம்.


எனவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. எஸ்.வி. ராஜதுரை, மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி,
4. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்,
5. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி,
6. வழக்குரைஞர் அ.கமருதீன், திருச்சி.


இக்குழு உறுப்பினர்கள் சென்ற 21, 22, 23 தேதிகளில் திருச்சி, தஞ்சை முதலான இடங்களுக்கு நேரில் சென்று சிறையிலிருந்த தமிம் அன்சாரியைச் சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர்.. அவரது வழக்குரைஞர் ஜே. கென்னடி என்கிற ஸ்டீபன் செல்வராஜ் மற்றும் அன்சாரியின் மனைவி நபீலா (23), தாயார் முத்து நாச்சியார் (50), மாமா லியாகத் அலி மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோரைச் சந்தித்தனர். திருச்சி விமான நிலைய மேலாளரிடம் நேரிலும், இம்மிக்ரேஷன் அதிகாரி சிரீதரனிடம் தொலைபேசியிலும் பேசினர்.. அவர்கள் தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறி முடித்துக் கொண்டனர். கியூ பிரிவு போலீசாருடன் மும்முறை தொடர்பு கொண்டோம். இறுதியாகப் பேசிய ஆய்வாளர் ஒருவர் எதுவானாலும் சென்னை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்..

continue..

Anonymous said...

நாங்கள் அறிந்த உண்மைகள்


அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு ஏழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். இவ் அமைப்பின் செயலாளர் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படும் என்பதால் இவர் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் எனவும் யூகிக்கலாம்.

அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை.

அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்புபடுத்தப்பட்டதுமில்லை.

தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சொல்லத் தயங்கியபோதும், அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவர்மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதுமில்லை.


தஞ்சையிலிருந்து கொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார்.

நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார்.

கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள்
இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கைப் புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.


16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை.

திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை.

11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப்
முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.


அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும். தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார்.

அன்று (17) மாலை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


நடந்தது இதுதான். காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.

உதயம் said...

கியூ பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் முரண்கள்;


1. பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும் பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாகச் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. ஓடிப் பிடித்து அவரைக் கைது செய்தனராம். அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, அப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர், ஆக ஒரு பகற் பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது என்பது தவிர, முதல் தகவல் அறிக்கையில் ஏன் இந்தப் பொய்?


2. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம். செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.


3. தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.


4. தஞ்சைக்கருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை.


5. தூதரக அதிகாரிகளுக்கே உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன்,, செயப்பட்டதாகவே உள்ளது.


6. 21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை கியூ பிரிவு போலீசார் வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. 16ந்தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும்.

continue..

Anonymous said...


கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.


உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.


காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால், முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலானவற்றைச் செய்யும் ஒரு நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.
இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.


கியூ பிரிவு போலீசும் இன்று இதே வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலானாய்வு மையமும் (NIA) இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளன. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு, தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள சூழலில் தமிழகத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் இருக்கலாம்.
கியூ பிரிவு போலீசார் அரசியல் நோக்கில் செயல்படுவதற்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது விழுப்புரம் அருகிலுள்ள சித்தணி என்னுமிடத்தில், திருச்சி செல்லும் ரயில் பாதை குண்டு வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் சிலரைக் கைது செய்து சட்ட விரோதக் காவலில் வைத்துத் துன்புறுத்தினர். எங்களுடைய ஆய்வில் அந்த இளைஞர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தத் தொடர்புமிலை என்பது தெரிய வந்தது. இன்றுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. செம்மொழி மாநாட்டுச் சூழலில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் குண்டு வெடிப்பை உளவுத் துறைகளேகூடச் செய்திருக்கலாம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் டெசோ மாநாடு நடந்துள்ள சூழலில், அவ் வழக்கை முடிக்கும் நோக்கில் கியூ பிரிவு போலீசார் அந்த இளைஞர்களை மீண்டும் விசாரித்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.


http://adiraixpress.blogspot.fr/2012/09/blog-post_1668.html

Anonymous said...

யூத பயங்கரவாதிகளால் இயக்கப்பட்ட அல் குவைதா போல்,காவி பயங்கரவாத ஊடகங்களால் இயக்கப்படும் லஷ்கர் தொய்பா வெட்ட வெளிச்சமானது.

அஹமதாபாத்தில் இருந்து கேரளா சென்ற பியூலா என்ற பெண், கேரளா ஸ்டுடியோ மூலமாக போலி கார்டு தயாரித்து பெங்களூரில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல விஞ்ஞானிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மன நிலை சரி இல்லாமல் உள்ளே புகுந்து விட்டாளாம். காவி பயங்கரவாதி மோடி மாநிலத்தில் இருந்து வந்த இவளை போலீஸ் பிடித்து விசாரிக்கும் போது அவளது கணவன் சொன்னானாம் மன நிலை சரி இல்லாமல் போலி கார்டு தயாரித்து விஞ்ஞான ஆய்வுக் கூடத்துக்குள் வந்து விட்டாளாம்.

மேலும் லஷ்கர் தொய்பா வின் லிஸ்டில் வேறு இஸ்ரோ இருக்கிறதாம் இப்படியாக சூப்பர் புருடாவை தினமலம் அவிழ்த்து விட்டுள்ளது, இதற்கு எத்தனை காவல் அதிகாரிகள் தினமலத்திற்கு உதவி நாட்டிற்கு துரோகம் செய்யப்போகிறார்கள் என்பதை நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது.
போலீசில் மாட்டிய பிறகு லஷ்கர்தொய்பா என்ற உருது பெயரை பயன்படுத்தி குஜராத்தில் இருந்து வந்தவளை தினமலம் காப்பாற்றுகிறது.

காலையில் முதல் செய்தியாக ஒரு பெண் என்று அவளது பெயரைக் கூட குறிப்பிடாமல் பயங்கரவாதி மோடி மாநிலத்தில் இருந்து வந்தது தெரிந்ததும் லஸ்கர் பிஸ்கர் என்று தினமலம் பினாத்தியுள்ளது.

Anbu Chelvan

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்.

அமெரிக்காவில்,
இவ்ளோ மேட்டர் நடக்குதா..!
ஹூம்......!
வேதனை.
வேறென்னத்த சொல்ல.

சகோ.ராஜ் நடராஜ்....
இலையோரத்தில் உள்ள ஊறுகாயினுள் யானையை மறைக்கப்பார்க்கிறார்..!
அந்தோ பரிதாபம்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//விசாரணை கைதியாகவே 10 அல்லது 15 வருடங்கள் எவ்வாறு முஸ்லிம்களை வதைப்பது? என்ற ரகசியங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி கொடுப்பார்கள்//

ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் தான் சாட்சி , சட்டம் எல்லாம் மதிக்கப்படவில்லை, இஸ்லாமிய தேசங்களில் சாட்சி இல்லைனா ஜெயிலில் போட மாட்டாங்கன்னு சொல்றிங்க சரியா?

இதையும் கொஞ்சம் பாருங்க எவனோ முட்டாப்பய இப்படி தமிழரை அரபு தேசத்தில சித்ரவதை செய்றாங்க ஜெயிலில் போட்டு இருக்காங்கன்னுனு பதிவு போட்டு இருக்கான் :-))

//கடந்த மாதம் ஒருநாள் ரியாத் மலாஸ் சிறைச்சாலையில் இருந்து உதவித்தேடி ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார், அவரின் குரல் கேட்க பரிதாபமாக இருந்தது. இரண்டுவருடங்களாக செய்யாத தவறுக்காக சிறையில் வாடுவதாகவும், கேரள அமைப்புகளில் ஒன்று எனது தொலைபேசியைக் கொடுத்து தமிழ்ச்சங்கத்தின் ஆதரவைக் கேட்கும்படி கூறினார்கள் என்றும் கூறினார்.

அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை என்ற கிராமத்தைச் சேர்ந்த கமருதீன் என்றும் பெரும் பொருட்செலவு செய்து டிரக் டிரைவராக சவூதிக்கு வேலைக்கு வந்ததாகவும் வந்த இடத்தில் வீட்டு டிரைவராக வேலைபார்க்க வைத்துவிட்டதாகவும், வேறுவழியின்றி 6 மாதங்கள் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் அவரின் அலுவலகத்தில் 36000ம் ரியால் திருட்டு போய்விட்டதாகவும் அதுசமயம் அவருடன் வேலைசெய்த எகிப்திய நாட்டு அலுவலக நிர்வாகி இவரை கட்டிவைத்து அடித்ததாகவும் அடிதாங்காமல் இரவோடு இரவாக தப்பி அவரின் மாமா வீட்டுக்கு சென்றதாகவும், அவரோ ஓடிவந்தால் உன்மீதுள்ள குற்றம் உறுதியாகிவிடும் திரும்பவும் சென்று உனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல் என்று திருப்பி அனுப்பியுள்ளார்.

திரும்ப வந்தவரை நீதான் பணத்தை கொண்டுபோய் யாரிடமோ கொடுத்து வந்துவிட்டாய் என்று காவல்நிலையத்தில் ஒப்படைத்து முழுப்பணத்தையும் ஒப்படைத்தால்தான் ரிலீசாகமுடியும் என்று அடைத்துவைத்துவிட்டார்களாம், இரண்டுவருடமாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதனைக் கேள்வியுற்ற கேரள அமைப்புகள் சமுதாய சேவகர் ஷிஹாப் கொட்டுக்காடு மூலமாக இந்தியத்தூதரகத்தை அனுகியுள்ளார்கள், பின்னர் இந்தியத்தூதரகம் சார்பில் தொடர்பு கொண்டு அவரின் கபீலிடம் பேசியதில் இந்த திருட்டில் எகிப்து நாட்டு நிர்வாகியும் இவரும் பங்காளிகள், அவரிடம் பாதிப்பணம் வசூலித்து அவரை அனுப்பிவிட்டேன், இவரிடமிருந்து பாதித்தொகை வந்தால் ஒழிய நான் இரக்கம் காட்டமாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாராம்.//

ஆதாரம்:

http://suvanappiriyan.blogspot.in/2012/08/blog-post.html


எனவே தமிழர்கள் அனைவரும் பணம் கொடுத்து அந்த நிரபராதியை அரபு தேச சிறையில் இருந்து மீட்கணும்னு உருக்கமாக பதிவை போட்டு இருக்கார்.

அதாவது நிரபராதி இஸ்லாமியரை அரபு தேசமே சாட்சி இல்லாமல் ஜெயிலில் போட்டு இருக்குன்னு சொல்லி இருக்கார் ஒருத்தர் முட்டாள் தனமா? நீங்க விடாதிங்க அவரை ,அப்படிலாம் அரபு தேசம் செய்யாதுன்னு செவிட்டில அடிச்சா போல சொல்லுங்க :-))

UNMAIKAL said...

அமீரக வாழ்
தமிழர் ஹுசைன் பாஷாவுக்கு 'சிறந்த இந்திய குடிமகன்' விருது


துபாய்: துபாயில் வாழும் தமிழரான ஹுசைன் பாஷா சிறந்த இந்திய குடிமகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2012ம் ஆண்டுக்கான சிறந்த இந்திய குடிமகன் விருதுக்கு அமீரகத்தில் வாழும் தமிழரான ஹுசைன் பாஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருது வரும் நவம்பர் மாதம் டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்படுகிறது.

ஹுசைன் பாஷா கடந்த 2003ம் ஆண்டு முதல் துபாயில் பணியாற்றி வருகிறார்.

வணிகம், நிர்வாக மேலாண்மை, மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் பன்னாட்டு வணிக மேலாண்மையில் எம்.பில். படிப்பையும் முடித்துள்ளார்.

மேலும், வழக்கறிஞர்களின் மன அழுத்தம் சம்பந்தமான ஆய்வுகளை முனைவர் படிப்பிற்காக மேற்கொண்டிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா பள்ளியின் கல்வி அறக்கட்டளையில் மேலாண்மை உறுப்பினராக உள்ளார்.

இந்திய மனோதத்துவ சங்கத்தில் இணை உறுப்பினராகவும் உள்ளார்.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் சமூக சேவைக்கான பிரிவின்கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படவிருக்கிறது.

அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், புஜைரா போன்ற இடங்களிலும்,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்,

குவைத்திலும்

ஆளுமைத் திறன், நேர மேலாண்மை பயிற்சி முகாம்களை நடத்தியிருக்கிறார்.

டான் டி.வி.க்காக இன்போடைம் என்ற பல்சுவை நிகழ்ச்சியை நடத்தி வந்த இவர்,

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் அவல நிலை குறித்த ஆவணப் படத்தையும் இயக்கியுள்ளார்.

இரத்த தான, மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்தல், கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற சேவைகளை திறம்பட செய்தமைக்காக

இந்த விருது வழங்கப்படுவதாக விருது வழங்கும் பி.சி. பப்லிஷிங் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/art-culture/essays/2012/uae-based-tamil-hussain-basha-gets-best-citizens-162049.html

Anonymous said...

உஸ்ஸ்.. அப்பா... முடியல.. கண்ண கட்டுதே.

இந்தியா மற்றும் உலகெங்கிலும் நடக்கற குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை தாக்குதல் எல்லாமே இந்துக்கள் செய்யறதுன்னு முடிவு பன்னுக்குங்கப்பா. உலகில் உள்ள இஸ்லாமியர்கள் எல்லாருமே ரொம்ம்ம்ப நல்லவங்க. அவங்களுக்கு வன்முறைனா என்னன்னே தெரியாது.

தீவிரதவாதி கசாப் கூட ஒரு இந்துதான். அவன போலீஸ் புடிச்சு, பொய் கேசு போட்டு பேர மாத்திட்டாங்க.

உஸ்ஸ்.. அப்பா... விட்டுடுங்க. முடியலிங்க. இந்த பதிவையும், பின்னூட்டத்தையும் படிச்சு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

UNMAIKAL said...

விசா விதிமீறல்:
குவைத்தில் 1,500 இந்தியர்கள் கைது- 650 பேரை தொடர்பு கொண்ட இந்திய தூதரகம்


குவைத்: விசா காலம் முடிந்தும் குவைத்தில் தங்கியிருந்த 1,500 முதல் 2,000 இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

கடந்த புதன்கிழமை குவைத் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் விசா காலம் முடிந்தும் அந்நாட்டில் தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,136 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் 1,500 முதல் 2,000 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.

அதிலும் பெரும்பாலானோர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

கைதானவர்களில் இதுவரை 100 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில் கைதான இந்தியர்களில் 650 பேரை குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேற்று தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் தலையிடுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை இந்த விவகாரத்தில் தலையிட்டு கைதானவர்களுக்கு உரிய சட்ட உதவிகளைச் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.

பழக்கமில்லாத நாடு, நடைமுறைகளில் வேலை பார்க்கும் அவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

அதனால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கைதான ராஜஸ்தானியர்களில் பெரும்பாலானோர் பன்ஸ்வாரா, உதய்பூர், துங்கர்பூர் மற்றும் மார்வாரைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குவைத் உள்துறை அமைச்சகத்தை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் நேற்று தொடர்பு கொண்டது.

இந்த வழக்கை குவைத்தில் உள்ள ராஜஸ்தான் சங்கமும் கவனித்து வருகிறது.

http://tamil.oneindia.in/news/2012/09/24/world-1-500-indians-detained-kuwait-visa-violation-case-161987.html

இராஜகிரியார் said...

நடு நிலை வாதிகளே...

வவ்வால்said...

//ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் தான் சாட்சி , சட்டம் எல்லாம் மதிக்கப்படவில்லை, இஸ்லாமிய தேசங்களில் சாட்சி இல்லைனா ஜெயிலில் போட மாட்டாங்கன்னு சொல்றிங்க சரியா?

இதையும் கொஞ்சம் பாருங்க எவனோ முட்டாப்பய இப்படி தமிழரை அரபு தேசத்தில சித்ரவதை செய்றாங்க ஜெயிலில் போட்டு இருக்காங்கன்னுனு பதிவு போட்டு இருக்கான் :-))//

சகோ ராஜ நடராஜன் Said...

//இந்திய அரசு இயந்திரத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.ஆனால் ஒவ்வொரு முறையும் பிடிபடும் குற்றவாளி இஸ்லாமியராக இருப்பதேன்? வேணுமென்றே கேஸ் புடிக்கனும்ன்னு புடிச்சுடறாஙகளா?//

சுவனப் பிரியன்said...

//கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் எத்தனை பேரின் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்ற புள்ளி விபரத்தை தர இயலுமா? கோவை குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றுதான் முஸ்லிம்கள் நேரிடையாக சம்பந்தப்பட்து. மற்ற அனைத்துமே சந்தேகத்தின் பேரில் கேஸ் பைல் செய்யப்பட்டவை! 15 வருடம் குற்றவாளியாக கருதப்பட்டு பிறகு நீ நிரபராதி என்று வெளியாக்குவது எந்த வகை நியாயம்? இழந்து போன அவனது வாழ்வை திருப்பி கொடுப்பது யார்? தவறுதலாக எங்கோ ஒன்றிரண்டு நடந்தால் அது இயற்கையாக நடந்து விட்டது எனலாம்//

இந்த மூன்றையும் தொடர்பு படுத்தி படித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு...

பாகிஸ்தான்காரன் said...

//ஞானி பதிலளிப்பார் என்று நினைக்கிறீர்களா? அவர் பதிலளிக்க மாட்டார்.//
பதிலலித்துட்டா போல் நீங்க ஏற்றுக்கொள்ளவா போறீங்க??. உங்களது முதல் பதிவிலிருந்து இதுவரைக்கும் நீங்கள் பதிலலிக்காமலிருக்கும் கேள்விகளுக்கு போய பதிலலிச்சிட்டுவாங்க. ஏன் அது மட்டும், மேலே வவ்வால் சொல்லியிருப்பதுக்காவது பதிலலியுங்க பார்க்கலாம்.

மன்னிக்கவேண்டும் சுவனம் ஜயா.
பன்னிரண்டு மணி நேரம் உழைத்தால்தான் எனக்கு நாளைக்கு சாப்பாடு.
உங்களைப்போல மதம் பரப்புவதற்காக எனக்கு யாரும் சம்பளம் தருவதில்லை.
உங்களுக்கே தெரியும் நீங்கள் எப்படி எப்படியேல்லாம் மற்றயவர்களை குற்றம் சாட்டுகிறீர்கள் என்று. உங்களுடன் விவாதிப்பது கூட வேலையத்த வேலை என என் நண்பர் சொன்னார். ஆகவே சலாம் பாய். இனி இந்த பக்கம் வரேலை.
வாழ்க வளமுடன்.

பாகிஸ்தான்காரன் said...

உண்மையிலேயே நீங்கள் மதம் பரப்புவது, இஸ்லாத்தை அனைவரும் தழுவ வைப்பதுதான் உங்களது முக்கிய இலக்காகில் இது சரியான முறையால்ல. நீங்கள் முஸ்லீம்களுக்கும் மற்றய மத்தினருக்குமிடையே வெறுப்பினைத்தான் உருவாக்கிகொண்டிருக்கிறீர்கள்.