Followers

Sunday, September 30, 2012

பௌத்த விகாரைகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்!

பௌத்த விகாரைகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்!

வங்கதேசத்தில் தென் கிழக்குப் பிராந்தியத்தில் பௌத்தர்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் மீது நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறைந்தது ஆறு பௌத்த விகாரைகளுக்குத் தீவைத்துள்ளார்கள்.



கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. பெருமளவிலான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.

உள்ளூரில் பௌத்தர் ஒருவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவதூறான படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்தே அந்தக் கிராமங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.

இதேவேளை, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியாகும் விதத்தில் குறித்த படம் தனது பெயருக்கு tag செய்யப்பட்டிருந்ததை தான் அறிந்திருக்கவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபத்துக்கு உள்ளான அந்த நபர் கூறியிருக்கிறார்.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட ராமு உபாசிலா பிரதேசத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



(பங்களா தேஷின் உள்துறை அமைச்சர் முஹையுத்தீன் கான் தீக்கிரையாக்கப்பட்ட புத்த விகாரைகளை பார்வையிடுகிறார்.)


இந்த செயல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். யாரோ ஒருவன் ஃபேஸ் புக்கில் குர்ஆன் எறிப்பு சம்பந்தமாக ஒரு படத்தை வெளியிட்டால் அதை காரணமாக வைத்து புத்த விகாரகைகளை நாசப்படுத்துவதும் மக்கள் வாழும் பகுதிகளை தீக்கிரையாக்குவதும் ஒரு முஸ்லிம் செய்யும் செயல் அல்ல. இதனை உலக முஸ்லிம்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்த காட்டு மிராண்டி தனமான செயலை செய்தவர்களை கைது செய்து இழந்த சொத்துக்களை மதிப்பிட்டு நஷ்ட ஈட்டை இந்த கயவர்களிடமிருந்து வசூலித்துக் கொடுக்க வேண்டும். ஒரு முறை இது போன்று செய்தால் மறுமுறை கூட்டத்தில் வன்முறையை கையிலெடுக்கும் கும்பலுக்கு ஒரு பயம் ஏற்படும்.

பொதுவாகவே பங்காளிகள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள். இங்கு சவுதியில் இவர்களுக்குள் அடித்துக் கொள்வது சர்வ சாதாரணம். சிறிய விஷயத்துக்கெல்லாம் கை நீட்டும் குணமுடையவர்கள். இவ்வாறு சம்பந்தமில்லாமல் வன்முறையை கையிலெடுப்பவர்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவர்களிடம் இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மிக குறைவாக இருப்பதைக் காணலாம். ஒருவன் ஐந்து வேளையும் உளப்பூர்வமாக தொடர்ந்து தொழுது வருவானாகில் தனது கோபத்தை கட்டுப்படுத்தவும் தவறு செய்தவர்களை உரிய முறையில் திருத்தவும் பழகிக் கொண்டு விடுவான். தொழுகை அவனுக்கு அந்த அளவு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வழங்குவதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். பங்காளிகளில் 50 சதமான பேர் தொழுகையில் ஆர்வமில்லாதவர்களாகவே இருப்பர்.

சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான நபி அவர்களின் படத்துக்கு உலகம் பூராவும் எதிர்ப்பை முஸ்லிம்கள் காட்டினர். சில இடங்களில் வன்முறையும் வெடித்து கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன. சிலர் கொலையும் செய்யப்பட்டனர். எதிர்ப்பை காட்டுவதற்கு இது சரியான வழி அல்ல. அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோமா அதோடு பிரச்னையை முடித்து ஆக வேண்டியதை பார்க்க வேண்டும்.


முகமது நபி பிறந்து வாழ்ந்து மறைந்த சவுதி அரேபியாவில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை. கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த படத்தை சவுதியில் தடை செய்ய சொன்னார் அப்துல்லா. தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார். இதனால் அந்த படத்தைப் பற்றிய அதிக விளம்பரமும் சவுதியில் அந்நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. அத்தோடு முடிந்தது பிரச்னை. இது போன்ற நடை முறையைத்தான் இனி வருங்காலத்தில் முஸ்லிம்களும் கடை பிடிக்க வேண்டும். தற்போது முகமது நபி அவர்களின் உண்மையான வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் எகிப்து தயாரிபபாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். இது போன்ற முறைகளில் நாம் பதிலளித்து அவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும்.

நாம் நடத்திய மித மிஞ்சிய ஆர்ப்பாட்டத்தினால் அந்த படத்துக்கு மேலும் விளம்பரத்தையும், சரிந்திரிந்த ஒபாமாவின் செல்வாக்கை நிமிர்த்தியும் கொடுத்து நமது எதிரிகளுக்கு நாமே ஆதரவை வழங்கியுள்ளோம். ஒபாமா எதை நினைத்து காயை நகர்த்தினாரோ அது கச்சிதமாக நடந்தேறி வருகிறது.

இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் : 'மென்மை எதில் இருந்தாலும் அந்த காரியத்தை அந்த மென்மை அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும்'

-அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா
ஆதாரம்: முஸ்லிம் 2594


ஒரு கருத்துக்கு எதிர்ப்பு, பதிவு எழுதுதல், அழைப்புப்பணி, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை நேர்வழிப்படுத்துதல் என்று எந்த காரியத்திலும் மென்மையான முறையையே நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த நபி மொழி நமக்கு கற்றுத் தருகிறது. குறிப்பாக அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு மென்மையும் பொறுமையும் அவசியமாகும். சொல்லவரும் விஷயத்தை சற்று கடுமையாக சொன்னோம் என்றால் கேட்பவர் கூட அலட்சியம் செய்து சென்று விடுவர்.


ஐரோப்பிய கல்லூரிகளில் இளம் மாணவர்கள் இறைவனை தொழும் அழகைப் பாருங்கள். இடம் இல்லை என்றாலும் படிக்கும் டெஸ்குகளை விரிப்பாக ஆக்கி தங்களின் கடமையை நிறைவேற்றுகின்றனர். இந்த தொழுகையில் நாம் கவனமாக இருந்தால் உலகின் எந்த பிரச்னைகளையும் சுலபமாக தீர்க்கும் வழியை இறைவன் நமக்கு காட்டுவான். தொழுகையில் கவனத்தை செலுத்தி தீய செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்வோம்.







35 comments:

UNMAIKAL said...

Bangladesh rampage over Facebook burnt Koran image

Muslim protesters have attacked Buddhist villages in Bangladesh, after an image said to show a Koran was posted on social network site Facebook.

A curfew has been imposed and security forces are patrolling the streets.

The man accused of posting the image is in protective custody.

Police say he was tagged in the photo but did not post it himself.

Mohiuddin Khan Alamgir visited the scene and condemned the violence

The violence erupted on Saturday and continued into the early hours of Sunday.

Hundreds of protesters are said to have rampaged through Buddhist neighbourhoods, smashing statues, burning down monasteries and attacking houses.

The violence spread to the outskirts of the port city of Chittagong.

District Commissioner of Cox's Bazar, Jaynul Bari, told the BBC Bengali service the government was already helping the victims.

"We have distributed food rations for them. The army will supply more food," he said.

"We are giving them building materials.

The home minister has ordered that all the homes and the temples be restored to their former condition with the funds provided by the government."

The authorities have now deployed additional security to prevent further violence and a curfew has been imposed in the worst affected area of Ramu sub-district.


B.B.C.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் சுவனப்பிரியன்,
பெளத்த விகாரைகளை தாக்கியவர்கள் மீது பங்களாதேஷ் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையாக இருக்கின்ற மக்களின் மீது அதிக அக்கறை எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமையாகும். மேலும் சேதமுற்ற விகாரைகளை சீரமைத்து கொடுக்க வேண்டியதும் பங்களாதேஷ் அரசின் கடமை.

சவூதி கிரான்ட் முப்தியின் போராட்டம் தொடர்பான அறிக்கையை படித்தேன். வன்முறையற்ற போராட்டங்களை நடத்துவதை அவர் குறை சொல்லவில்லை. சவூதிகள் அந்த படத்தை எதிர்த்து போராடவில்லை என்றால் அது அவர்களின் இயலாமையை தான் காட்டுகிறது. சவுதிகளுடைய செயல்கள் எல்லாம் இஸ்லாமிய வழிமுறை என்று யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறு. மேலும் இஸ்லாத்திற்கான அத்தாரிட்டி குர்ஆன் மற்றும் குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ்கள் மட்டுமே.

suvanappiriyan said...

வலைக்கும் சலாம்! சகோ ஷேக் தாவூத்!

//சவூதி கிரான்ட் முப்தியின் போராட்டம் தொடர்பான அறிக்கையை படித்தேன். வன்முறையற்ற போராட்டங்களை நடத்துவதை அவர் குறை சொல்லவில்லை. சவூதிகள் அந்த படத்தை எதிர்த்து போராடவில்லை என்றால் அது அவர்களின் இயலாமையை தான் காட்டுகிறது. சவுதிகளுடைய செயல்கள் எல்லாம் இஸ்லாமிய வழிமுறை என்று யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறு. மேலும் இஸ்லாத்திற்கான அத்தாரிட்டி குர்ஆன் மற்றும் குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ்கள் மட்டுமே.//

இதே கருத்தைத்தான் நானும் வைக்கிறேன். நம்முடைய எதிர்ப்பு என்பது பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருக்க வேண்டும். டிஎன்டிஜே தனது எதிர்ப்பை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் செய்தது. அதன் பிறகு நடந்த போராட்டங்களில் வன்முறை நிகழ்ந்ததை பார்த்தோம். இதைத்தான் கண்டிக்கிறேன். பொராட்டம் என்ற பெயரில் மற்றவர்களின் சொத்துக்களை நாசமாக்கும் செயல் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சவுதி முஃதியும் அதைத்தான் சொல்கிறார். குர்ஆனும் அதைத்தான் சொல்கிறது.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//District Commissioner of Cox's Bazar, Jaynul Bari, told the BBC Bengali service the government was already helping the victims.

"We have distributed food rations for them. The army will supply more food," he said.

"We are giving them building materials.

The home minister has ordered that all the homes and the temples be restored to their former condition with the funds provided by the government."

The authorities have now deployed additional security to prevent further violence and a curfew has been imposed in the worst affected area of Ramu sub-district.//

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த அரசு உரிய நிவாரணம் வழங்கும் செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி!

Unknown said...

மதங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள், கலவரங்களை நாம் என்றும் ஆதரிக்க கூடாது, அப்பாவி மக்களை மூளை சலவை செய்து மத தலைவர்கள் பின்னால் நின்று கொண்டு செய்யும் இந்த காரியம் கண்டிக்கதக்கது.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

நடு நிலையாக சொல்லி இருக்கீங்க,ஆனால் இதே போல ஒரு சம்பவம் அரேபிய நாட்டிலோ,ஆப்கானிலோ நடந்தால் சப்பை கட்டு கட்டூவீங்க என்றும் தெரியும்.

பழமை வாய்ந்த பாமியான் புத்த சிலைகள் வரலாற்று சின்னங்கள் ஆனால் அதனை இடித்ததற்கு ,யாரும் வழிபடாத சிலையை இடித்தால் தவறில்லை என சொன்னதாக நினைவு.

//டிஎன்டிஜே தனது எதிர்ப்பை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் செய்தது. //

ஹி...ஹி முழுப்பூசணி-சோறு தான் நினைவுக்கு வருது :-))

அன்று தான் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சும் நடந்தது, சாலை முழுவதும் அடைக்கப்பட்டது.

ஆனால் அமைதியான எதிர்ப்பு என்று மார்க்கபந்த்துக்கள் மட்டுமே பீற்றிக்கொண்டார்கள்.

suvanappiriyan said...

வவ்வால்!

//பழமை வாய்ந்த பாமியான் புத்த சிலைகள் வரலாற்று சின்னங்கள் ஆனால் அதனை இடித்ததற்கு ,யாரும் வழிபடாத சிலையை இடித்தால் தவறில்லை என சொன்னதாக நினைவு.//

இரண்டு சம்பவங்களுக்கும் வித்தியாசம் உண்டு. பாமியான் சிலைகளை வழிபட அங்கு பவுத்தர்கள் யாரும் அந்த நேரத்தில் இல்லை. அது தேவையா இல்லiயா என்பதை அந்த அரசாங்கத்தான் தீர்மானிக்க முடியும்.

ஆனால் பங்களாதேஷில் வழிபட பவுத்தர்கள் உள்ளனர். இங்கு விகாரைகளை உடைத்து சேதப்படுத்துவது இஸ்லாத்துக்கு விரோதமான செயல். எனவே இரண்டு விதமான நிலைகளை எடுத்தது நீங்கள்தான். நானல்ல....:-)


//அன்று தான் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சும் நடந்தது, சாலை முழுவதும் அடைக்கப்பட்டது.//

டிஎன்டிஜே நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தூதரகத்தின் மீது கல் வீச்சு நடந்ததை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா. சும்மா அளந்து விடக் கூடாது.

suvanappiriyan said...

சகோ ஆயிஷா ஃபாரூக்!

//மதங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள், கலவரங்களை நாம் என்றும் ஆதரிக்க கூடாது, அப்பாவி மக்களை மூளை சலவை செய்து மத தலைவர்கள் பின்னால் நின்று கொண்டு செய்யும் இந்த காரியம் கண்டிக்கதக்கது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//டிஎன்டிஜே நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தூதரகத்தின் மீது கல் வீச்சு நடந்ததை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா. சும்மா அளந்து விடக் கூடாது.//

நீங்க ஞாயிறு அன்று ஒருப்பதிவு போட்டு சொன்னீர்களே அதை வைத்து தான் சொன்னேன், இப்போ தான் தெரியுது டி.என்.டிஜே வை மட்டும் தனியா பிரிச்சு சொல்லுறிங்கன்னு, அதற்கு முந்தைய நாள் நடத்தியது ஜவாகிருல்லா அணியா அப்போ ,ஆனால் செய்தியில் 28 முஸ்லீம் இயங்கங்கள் என போட்டு இருந்தாங்க.

ஜவாகிருல்லாவும் ,ஜெயினுல்லாபுதினும் ஒரே கூட்டா இருந்து தனியா போயிட்டாங்க, அதனால் நீங்க கல்லெறி நடந்த சம்பவம் அடுத்து எழுதும் போது ஏன் கல்லெறி நடந்தை சுட்டி ஒன்றும் சொல்லாமல் மொட்டையாக அமைதியான எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு இருந்தீர்கள்.


உங்களோட அந்தப்பதிவிலேயே பலரும் இதனைக்கேட்டார்கள்.

நிறைய பேருக்கு ஜவாகிருல்லா ,ஜெயினுல்லாபுதின் எல்லாம் தனிக்குழுன்னே தெரியாது.

நீங்க அமைதியா நடந்தது என்று சொல்லிக்கொள்ள ஒரு அணி ,அடிக்க ஒரு அணின்னு வச்சுப்பீங்க, அதை எல்லாம் விளக்கமா சொல்ல வேண்டாமா?

மேலும் ஜெயினுல்லாபுதின் அணி நடத்திய போராட்டத்தின் போதும் ,டிராபிக் ஜாம் ஆச்சு, செருப்பெல்லாம் வீசினாங்க, கொடிக்கு நெருப்பு வச்சாங்க.

இப்போ தான் பார்த்தேன் இந்திய தவ்கீத் ஜமாத் என ஒன்று வேற இருக்கு, எத்தனை குர்ப்பு ,நீங்க யாருக்கு சப்போர்ட்ட்னு தெளிவா சொல்லிடுங்க.

வன்முறை நடப்பதை சுட்டிக்காட்டாமல் நீங்க மறைத்து எழுதும் போது எல்லாவற்றையும் ஒன்றாகத்தான் மக்கள் பார்ப்பாங்க, எனவே எல்லாவற்றையும் நீங்கள் முழுசாக சொன்னால் தான் நம்பகத்தன்மை ஏற்படும்.

-----------

பாமியான் புத்த சிலை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்ற பிறகும் ,வழிப்பட ஆட்கள் இல்லை இடிக்கலாம் என சொல்லுங்கள்.

எகிப்திய பிரமிடுகளையும் தான் வழிபட ஆட்கள் இல்லை இடிக்கலாமா அப்போ?

கடந்த கால வரலாற்றினை சொல்லும் எதனையும் இடிக்க யாருக்கும் உரிமை இல்லை, எந்த மதத்தினர் செய்தாலும் தவறே.

ஆனால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள், சமயத்துக்கு ஏற்ப ஒன்றை சொல்லிக்கொள்வீர்கள்.

k.rahman said...

வரவேற்கத்தக்க பதிவு.

UNMAIKAL said...

''அப்பா அப்பா... குடிக்கிறது தப்பப்பா... நீ திருந்துவது எப்பப்பா...''

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் சென்னையில் காந்தி சிலை முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில் குடியால் கணவனை இழந்த விதவை பெண்களும், குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களும் பங்கேற்று ஒப்பாரி வைத்தனர்.

குடி குடியை கெடுக்கும் என்று பாட்டில்களில் மட்டுமே போட்டு வைத்திருக்கின்றனர்.

அந்த குடியால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்துவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

மெமோரியல் ஹால் முன்பாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை சுற்றி தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த விதவை பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

போராட்டத்துக்கு தலைமை தாங்கிய டாக்டர் ராமதாஸ், ஒவ்வொரு பெண்களையும் அழைத்து குடியால் சீரழிந்த அவர்களது துயரத்தை பொது மக்கள் அறியும்படி எடுத்து சொல்லும் படி கூறினார்.

சில விதவை பெண்கள் துக்கம் தாளாமல் விம்பி அழுதபடியே தங்கள் குடும்பம் படும் துயரங்களை எடுத்துக் கூறினார்கள்.

குடியால் தங்களின் குடும்பம் எந்த அளவிற்கு பாழானது என்று பாடல்கள் பாடி அவர்கள் ஒப்பாரி வைத்தது கேட்போரின் கண்களை குளமாக்கியது.

விதவை பெண் ஒருவர் தனது கணவரைப் பற்றியும் அவர் பாசமாக குடும்பத்தை நடத்தி வந்ததையும், குடியால் சீரழிந்து போனதையும் வேதனையுடன் சொல்லி ஒப்பாரி பாடினார்.

ஒவ்வொரு விதவை பெண்ணும் தான் அனுபவித்த வேதனைகளையும்,

கணவர் குடித்ததால் இன்று சாப்பாட்டுக்கே வழி இன்றி திண்டாடுவதையும் சொல்லி அழுதனர்.

10, 15 பெண்கள் இவ்வாறு ஒப்பாரி வைத்ததை பார்த்ததும் மற்ற விதவை பெண்களும் கண்ணீர் விட்டு கதறினர்.

இதனால் போராட்டம் நடத்த அந்த பகுதி முழுவதும் சோக மயமானது.

போராட்டத்தில் பங்கேற்ற சில குழந்தைகள், அப்பா அப்பா... குடிக்கிறது தப்பப்பா... நீ திருந்துவது எப்பப்பா..." என்று குடும்ப அவலத்தை பாடலாக பாடி கண்ணீர் வரவழைத்தனர்.

மதுக்கடைகளுக்கு பூட்டு
போராட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசும் போது,

தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் குடிக்கு தங்கள் கணவர்களை இழந்து விதவைகளாகி உள்ளனர்.

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு போடுங்கள்.

இனியும் மதுக்கடைகளை மூடாவிட்டால் டிசம்பர் 17-ந் தேதி அனைத்து மதுக்கடைகளுக்கும் பூட்டு போடுவோம் என்றார்.

THATSTAMIL

UNMAIKAL said...

PART 1. தலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான் - சின்னக்கருப்பன் . திண்ணை

ஒரு மீன்விற்பவள் நெடுநேரம் சந்தையில் மீன் விற்றுக் கொண்டிருந்தாள்.

திடாரென இருட்டி கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. அவசர அவசரமாக ஒரு கடையில் ஒதுங்கினாள்.

கடையோ பூக்கடை.

மழை விடும் மாதிரித் தெரியவில்லை. கொட்டலையும் நிறுத்தவில்லை.

மழையையே பார்த்துக்கொண்டிருந்த மீன்காரியிடம், பூக்கடைக்காரி சொன்னாள்,

'அம்மா, நீ ரொம்ப தொலைவு போகவேணும்போல. நீ இங்கேயே இரவு தூங்கி விட்டு காலையில் உன் வீட்டுக்குப் போ '.

மீன்காரிக்கும் வேறு வழியில்லாததால், அவள் அங்கேயே தூங்க ஆரம்பித்தாள்.

மீன்காரிக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள்.
காரணம் தெரிந்து விட்டது.

பூக்கடையில் இருக்கும் பூ வாடை அவளுக்கு நாற்றமாய் இருக்கிறது.

மீன்காரி எழுந்து பூக்கடைக்காரியிடம் கொஞ்சம் தண்ணீர் வாங்கி தன் மீன் கூடையில் தெளித்து அதை தலையில் கவிழ்த்துப் படுத்ததும் ஆனந்தமாய் தூக்கம்.

மீன் காரிக்கு மீன் வாடைதான் வாசம்.
அது பூக்கடைக்காரிக்கு பூ மணம் நல்ல வாசனை.

இது ரொம்ப பழைய தமிழ் நாடோடிக்கதை.

இந்த நாடோடிக்கதை சொல்லும் விஷயத்தைத்தான் இப்போது மானுடவியலில் Cultural Relativism என்று சொல்கிறார்கள்.

வேறொரு கலாச்சாரத்துக்கும் மக்களுக்கும் பிடிக்காத விஷயம் மற்றொரு கலாச்சாரத்துக்கும் மக்களுக்கும் பிடித்தவிஷயமாக இருப்பதை அங்கீகரிப்பது என்பதுதான் இந்த கலாச்சாரப்பின்னணி அமைப்பு.

நாய் மாமிசம் நாகாலாந்து மக்களிடம் முக்கியமான பெரும் விருந்துகளில் பரிமாறப்படும் உணவு.

நாய் மாமிசம் சாப்பிடுவது மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்கமுடியாத விஷயமாக இருக்கும்.

பசு மாமிசம் இந்துக்கள் (முக்கியமாக வட இந்திய இந்துக்கள்) சாப்பிடுவது பாவம் என்கிறார்கள்.

முஸ்லிம்களும், கிரிஸ்தவர்களும் பசு மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

முஸ்லீம்கள் பன்றி சாப்பிடுவதில்லை,
இந்துக்களில் பலரும், பல கிரிஸ்தவர்களும் பன்றி மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

இந்த பார்வையில் பார்த்தால், புத்தச் சிலைகளை உடைப்பது மற்றவர்கள் பார்வையில் தவறானதாகத் தெரியலாம்.

அது முஸ்லீம்களுக்கு மதக்கடைமை என்று தாலிபான் முஸ்லீம்கள் கூறுகிறார்கள்.

நாம் யார் அதைக் கேட்க ?

கலாசார வித்தியாசங்கள் என்ற பெயரில் பல நடைமுறைகள் உண்டு.

தமிழ் நாட்டிலேயே பல கிராமங்களில், முஸ்லீம்கள் பெரும்பான்மை உள்ள பகுதிகளில் பெண்கள் சினிமா பார்ப்பது தவறு என்று ஊர்க்கட்டுப்பாடு உண்டு.

பெந்தே கோஸ்தே கிறுஸ்தவ மதப்பிரிவினரில் பலர், நோயுற்ற மகனையோ, மகளையோ , தன்னையோ காப்பாற்றிக் கொள்ளக்கூட மருத்துவரிடம் செல்வது தவறு என்றும், பிரார்த்தனை மூலம் குணப் படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.
பல உயிர்கள் அதனால் பலியானதும் உண்டு.

அப்படி இறந்தவர்கள் கடவுளுக்குப் பிரியமானவர்கள் என்றும், கடவுள் அவர்களைச் சொர்க்கத்தில் சேர்ப்பார் என்றும் அவர்கள் நம்பிக்கை.

தம் நம்பிக்கைக்காக தம் உயிருக்குயிரான மக்களைப் பலிகொடுக்க அவர்களுக்கு உரிமையில்லை, என்றும், சமூக வாழ்வில் ஒவ்வோர் உயிரும் சமுகத்தின் பொறுப்பும் கூட என்ற வழக்குத் தொடர்ந்த சமூகசேவகர்களும் வெளிநாடுகளில் உண்டு.

சமீபத்தில் அமெரிக்காவில் இது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அமெரிக்காவில் பழங்குடியினர் மத்தியில் நரமாமிசம் சாப்பிடும் பழக்கமும் இருந்ததுண்டு.
கலாசார வித்தியாசம் என்று அதனையும் நியாயப் படுத்த வேண்டும்.

உலகம் முழுவதும் ஒரு விதமான நியதிகள், விதிகள் என்பதைக் கட்டாயமாய்த் திணிக்க முடியாது.

CONTINUED ….

UNMAIKAL said...

PART 2. தலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான் - சின்னக்கருப்பன் . திண்ணை

தாலிபான் ஆப்கானிய புத்தச் சிலைகளை உடைப்பதை நான் எதிர்க்கவில்லை.

தாலிபான் அந்தச் சிலைகளை வெறும் கற்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

கண்ணதாசன் பாடினார் ' தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான் '. பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது.

இன்னும் நான் பாமியான் புத்தச் சிலைகள் உலகத்தின் பாரம்பரியச் சொத்து என்று கூறுவதைக் கூட நான் ஒப்புக்கொள்ளவில்லை.

அவை ஆப்கானியச் சொத்துக்கள். அவ்வளவுதான்.


எங்கள் ஊரில் அய்யனார் சிலைகள் இருக்கின்றன.

பெரிய குதிரை சிலைக்குப் பக்கத்தில் அய்யனார் வீரமாக சிமிண்டினால் செய்யப்பட்டு நின்று கொண்டிருக்கிறார்.

அவைகள் கிராமத்துச் சொத்து.
அவைகளை உருவாக்குவதோ, உடைப்பதோ, மீண்டும் உருவாக்குவதோ, எல்லாம் எங்கள் உரிமை.

உலகச்சொத்து உரிமையாளர்கள் என்று கூறிக்கொண்டு யாரும் எங்கள் ஊரில் வந்து எங்களைத் தடுப்பதை நாங்கள் விரும்பமாட்டோம்.

தாலிபான் உடைக்கும் சிலைகள் பெரியவையாக இருக்கலாம், மிகப்பழமையானவையாக இருக்கலாம். இருந்தால் என்ன ?

எங்கள் ஊரில் இருக்கும் சிலர் கிரிஸ்தவர்களாகிவிட்டார்கள்.
அவர்கள் அய்யனாரைக் கும்பிடுகிறார்கள். அவர்களது பிள்ளைகள் கும்பிடுவதில்லை.

பின்னால் எங்கள் ஊர் கிரிஸ்தவர்களும் முஸ்லீம்களும் வாழும் ஊராகி விட்டால், அய்யனார் சிலைக்கு என்ன மதிப்பு, என்ன தேவை ?

நம்புபவர்களுக்குத் தானே தெய்வம் ?
ஆகவே தாலிபானைத் திட்டவேண்டிய அவசியம் என்ன ?

நான் அவர்களது கொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால் அவர்களது கொள்கைகளை வைத்துக்கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

அவை அவர்களது கொள்கைகள்.
அவர்களது சிலைகள்.
அவர்களது கலாச்சாரம். அவர்களது வரலாறு.

உங்களுக்கு அவர்களது கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களைப்போல ஆகாமலிருங்கள்.


முடிந்தால் உங்கள் கலாச்சாரத்தை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு உங்கள் கலாச்சாரமும், உங்கள் மொழியும்,
உங்கள் இசையும்,
உங்கள் கட்டடங்களும், உங்கள் ஓவியங்களும் பிடித்திருந்தால்
அவைகளை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அதை விட்டுவிட்டு தாலிபானை காட்டுமிராண்டிகள் என்று இந்தியப் பத்திரிக்கைகள் எழுதுவது சரியல்ல.

தாலிபானின் பார்வையில் சிலையைக் கும்பிடுபவர்கள் காட்டுமிராண்டிகள் என்பது மற்றவர்களுக்கு ஞாபகம் இருக்க வேண்டும்.

தாலிபானும் சிலைகளை உடைப்பது மதத்தின் படி புனிதக்கடமை என்றும் சொல்கிறார்கள்.

இது தவறு என்று சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது ?

மதத்தைப் பின்பற்றுவதில் பெரும்பான்மையாக - அல்ல , முஸ்லீம்கள் மட்டுமே- உள்ள நாடாகி விட்ட ஆஃப்கானிஸ்தானில் முஸ்லீம் மதச் சட்ட திட்டங்கள் படித்தானே நடக்க முடியும்.

ஆஃகான் மக்கள் பஞ்சத்தாலும் பசியாலும் , குளிரினாலும் இறந்து கொண்டிருக்கையில் இந்தச் சிலை உடைப்பு என்ன சாதித்து விடும் என்று கேட்பவர்களுக்கும்,
இந்த உடைப்பாளர்களின் மன நிலை புரிவதில்லை.


Continued ….

UNMAIKAL said...

PART 3. தலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான் - சின்னக்கருப்பன் . திண்ணை

மக்களின் துயர் போக்குவோம் என்று வாக்குறுதி அளித்தோ , அல்லது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக நாங்கள் பாடுபடப் போகிறோம் என்றோ சொல்லி வாக்குகள் வாங்கியோ இவர்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றவில்லை.

தூய்மையான இஸ்லாமிய அரசை நிர்மாணிப்போம் என்று தான் மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார்கள்.

அவர்கள் ஆதரவுடன் தான், துப்பாக்கி முனையில் எதிர்ப்பாளர்களைத் தாக்கி விட்டு அரசு செய்கிறார்கள்.

பாஜக அரசு புத்தச்சிலை உடைப்புகளை எதிர்ப்பது எனக்கு ஆச்சரியமானதல்ல.

மசூதியை உடைத்தவர்களுக்கு புத்தச்சிலை உடைப்பைப் பற்றிப் பேச அருகதை இல்லை.

ஆனால் மசூதி உடைப்புக்கும், புத்தர் சிலை உடைப்புக்கும் மிக முக்கியமான வித்தியாசம் உள்ளது.

மசூதியை உடைப்பது தங்கள் மதம் விதித்த புனிதக் கடமை என்று இந்து தீவிரவாதிகளில் ஒருவர் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை.

இந்துக்களை ஒரு ஓட்டு வங்கியாக்கும் அரசியல் உடைப்பாகத் தான் இருந்தது தவிர மதம் விதித்த உடைப்பாக இல்லை.

இருக்கவும் முடியாது.

ஏனெனில் ஆகம விதிகளின் படி,

நிலத்தகராறு இருக்கும் இடத்தில் கோவில் கட்டுவது முறையாகாது.

ஒரு சாரார் மக்கள் எதிர்க்கும் இடத்தில் கோவில் கட்டுவதும் முறையாகாது.

ஒரு வணக்க ஸ்தலம் இருந்த இடத்தில் இன்னொரு தெய்வச்சிலை வைத்துக் கோவில் கட்டுவதும் முறையாகாது.

இதை எதிர்க்கும் பல இந்து மத மடாதிபதிகள் சொல்லும் காரணம் இதுவே.

அது செளகரியமாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.

பாஜக செய்வது அரசியல்.
இந்த இந்து அரசியல், இந்துக்களுக்குத் தேவையாக இருக்கிறது.

பெருகி வரும் இஸ்லாம் சுதந்திர இந்து, இந்திய வாழ்க்கைக்கு எதிரானது என்று இவர்கள் நம்புகிறார்கள்.

தங்களது கலாச்சாரத்தைக் காப்பாற்ற இது போன்ற விஷயங்களை எதிர்க்கிறார்கள்.

ஆகவே பாஜக செய்வது இந்துமதத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இந்து மதத்தில் இருப்பது போல பம்மாத்துச் செய்கிறார்கள்.

தாலிபானோ தங்கள் மதத்துக்கு உண்மையானவர்களாக இருக்கிறார்கள்.

ஆகவே அவர்கள் அழிப்பது சரிதான்.

அது அவர்களின் மதம்.
மனித உருவத்தை வரைவதோ,
புகைப்படம் எடுப்பதோ இஸ்லாமுக்கு எதிரானது என்ற காரணத்தாலேயே பம்பாயில் அடையாள அட்டைக்காக முஸ்லீம்களை புகைப்படம் எடுக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று போராட்டம் நடந்தது ஞாபகம் இருக்கலாம்.

அது இஸ்லாமியரின் மதக்கடமையாக இருக்கையில் அதை மதிப்பது தவிர வேறென்ன செய்வது ? -
சின்னக்கருப்பன் . திண்ணை

THANKS TO:Thinnai.com


ஆப்கான் மக்கள் வறுமையில் செத்துக்கொண்டு இருக்க,

உதவிக்கு ஐநாவிடம் தாலிபான் அரசு பணம் கேட்டால்,

அது கொடுக்க மறுத்து விட்டது.

ஆனால், அதுவரை தாலிபான்கள் கண்டுகொள்ளாத பாமியான் சிலையை 'world heritage center' என்று அறிவித்து அதனை காப்பாற்றி பாதுகாக்க பல மில்லியன் டாலர் கொடுக்க முன் வந்தது.

"மனிதனுக்கு இல்லாத பணம் ஒன்றுக்கும் உதவாத கல்லுக்கா" என்று...

'குடிமகன் என்ற பெயரில் அந்த புத்தர் சிலைக்கு உரிமை கோர ஒரு ஆப்கானிய பவுத்தர் கூட இல்லாத நிலையில்'

எத்தனையோ நூற்றாண்டு பாதுகாப்பாக இருந்த பாமியான் புத்த சிலையை தாலிபான் இடிப்பதாக அப்போதுதான் அறிவித்தார்கள்..!

ஏனெனில், அப்போது(ம் இப்போதும்) ஆப்கானில் அந்த இடிப்பை எதிர்க்க ஒரு பவுத்தர் கூட இல்லை..!


.

UNMAIKAL said...

// வவ்வால் said...
சு.பி.சுவாமிகள்,

பாமியான் புத்த சிலை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்ற பிறகும் ,வழிப்பட ஆட்கள் இல்லை இடிக்கலாம் என சொல்லுங்கள்.

எகிப்திய பிரமிடுகளையும் தான் வழிபட ஆட்கள் இல்லை இடிக்கலாமா அப்போ?

கடந்த கால வரலாற்றினை சொல்லும் எதனையும் இடிக்க யாருக்கும் உரிமை இல்லை, எந்த மதத்தினர் செய்தாலும் தவறே.

ஆனால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள், சமயத்துக்கு ஏற்ப ஒன்றை சொல்லிக்கொள்வீர்கள். //


பாமியான் புத்த சிலைகள் உடைக்கப்பட்ட போது அநியாயம் அக்கிரமம் என்று கூக்குரலிடத் தெரிந்தவர்களுக்கு

அதே ஆப்கனில் அதே சமயத்தில் பச்சிளம் குழந்தைகள் பாலுக்கும் வழியின்றி தவித்ததையும் சொல்லுங்கள்.

குழந்தைகளுக்காக உலக நாடுகளில் கையேந்தி உதவி கேட்டும் (ஐ.நா உட்பட) எந்த உதவியும் செய்யாமல்,

பாமியான் சிலைகளை பராமரிக்க மட்டும் ஐ.நா நிதி அனுப்பியது குறித்தும் எழுதுங்கள்.

‘அப்படிப்பட்ட சிலைகளை உடைத்தெறிந்து விட்டு குழந்தைகளை காப்பாற்றியிருக்கலாமே..’ என்று ஈரமுள்ள பின்னூட்டங்கள் வரும்.

அடுப்பில் சமைக்க அரிசி கேட்டவர்களுக்கு – வீட்டு வாசலில் தோரணம் கட்டி தருகிறேன் என்று தானே உலகம் சொன்னது.



.

Feroz said...

//எகிப்திய பிரமிடுகளையும் தான் வழிபட ஆட்கள் இல்லை இடிக்கலாமா அப்போ?//முடியல நண்பரே, பதிவுலகில் இருக்கும் பழைய ஆட்களுக்கு தெரியும் நீங்கள் எப்போதும் அரைகுறையாய் விளங்கிதான் தர்க்கம் செய்வீங்கன்னு. இப்போ மீண்டும் நிருபிக்கீறீங்க. பிரமிட் என்பது கல்லறை. மன்னர்கள் மற்றும் ராணிகளை புதைத்த இடம். இறந்த பின்னும் மறுவாழ்வு உண்டு என்று அவர்கள் பாவித்த அணைத்து பொருட்களையும் சேர்ந்து புதைத்த இடம். பிரமிட் வழிபாட்டு தளம் அல்ல. வழிபடுவதற்கு நட்புடன்

Nasar said...

சகோ பெரோஸ் அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்....மற்றும்
வெறும் பார்வையாளனாக இருந்த என்னை பூசாரி
பதவி உயர்வு தந்து சு.பி சுவாமிக்கு, சேவகம் செய்ய 'அருள்' தந்தமைக்கு நன்றி.....
பனங்காட்டு பனை மரத்தில் நேராக தொங்கி 'அரைகுறையாக' சிந்திக்கும்
சிந்தனாவாதி வாழ்க ....வளர்க ...!!!!
இப்படிக்கு
நாசர் பூசாரி

வவ்வால் said...

பிரோசு,

உங்களுக்கு நான் சொன்னது எல்லாம் புரிந்தால் மனிதனாகிட மாட்டிங்களா :-))

சொன்ன பொருள், பாமியான் சிலைகளை வழிபட ஆட்கள் இல்லை எனவே இடித்தோம்னு சொன்னார்,

அதனை வரலாற்று சின்னமாக பார்த்து இடிக்காமல் இருக்க வேண்டியது தானே, எகிப்தின் பிரமிடுகளை வரலாற்று சின்னமாக நினைத்து தான் வைத்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வழிப்பட ஆட்கள் இல்லைனு சொல்லி இருக்கேன்,

ஒரு கொசுவுக்கு இருக்கும் அளவு கூட மூளை இல்லைனா நான் என்ன செய்ய :-))

அப்புறம் அது கல்லறை தான்னு சொல்வதால் அதுவும் வழிப்பாட்டு தளம் தான்னு நான் சொல்ல வேண்டியதாகிறது,

எகிப்திய மன்னர்கள் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவர்கள், எனவே மக்கள் எகிப்திய மன்னர்களை வாழும் போதும், இறந்த பின்னும் கடவுளுக்கு இணையாக வணங்க வேண்டும்.

சந்தேகம் இருந்தால் எகிப்து, ரோமன், கிரீக் வரலாறு எனப்படித்து பார்க்கவும், அதில் எல்லாம் மன்னர்கள் கடவுளின் அவதாரம்,வாரிசு என்றே இருக்கும். மக்கள் வழிப்பட்டு தான் ஆக வேண்டும்.

இஸ்லாத்திலே சூபிக்கள் தர்க்கா வழிப்பாடு செய்வதில்லையா, தர்க்கா என்பது இறந்த சூபி திறவியை புதைத்த இடம் தானே.

என்னையா உங்களை போன்ற அரைவேக்காட்டுகளுக்கு ஆரம்பத்தில இருந்து பாடம் எடுக்கணுமா என்ன?

இதுல நாசர் பூஜாரி வேற, குரான கூட முழுசா படிச்சாரோ என்னமோ? எதாவது அறிவை வளர்த்துக்கிறா போல படிங்கய்யா ...சும்மா யாராவது சொன்னாங்க அதான் உண்மைன்னு நம்பிக்கிட்டு இருந்தா இப்படித்தான் உளர தோன்றும்.

suvanappiriyan said...

//உங்களுக்கு நான் சொன்னது எல்லாம் புரிந்தால் மனிதனாகிட மாட்டிங்களா :-))//

அதனால்தான் இன்று வரை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்களோ!

//ஒரு கொசுவுக்கு இருக்கும் அளவு கூட மூளை இல்லைனா நான் என்ன செய்ய :-))//

அறிவாளியாக தன்னைத்தானே நினைக்கக் கூடாது என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.

வாதங்களை வைத்தால் வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும் வவ்வால்.

முதலில் பாமியான் சிலைகளுக்கு சின்ன கருப்பன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலை சொல்லி விட்டு மற்றவர்களின் அறிவுத் திறனை சோதிக்கலாம். சரிதானே!


Unknown said...

Mr Vavvaal,

///பாமியான் புத்த சிலை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்ற பிறகும் ,வழிப்பட ஆட்கள் இல்லை இடிக்கலாம் என சொல்லுங்கள்.///

பாமியான் புத்தர் சிலையை வழிபட, அந்த மத மக்கள் இல்லை. இடிப்பதும் இடிக்காமல் இருப்பதும் அந்த நாட்டு மக்கள் முடிவெடுக்க வேண்டியது. உடைத்தவர்கள் எந்த நியாயத்தைச் சொன்னாலும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.

எங்கோ கவனிப்பாரற்றுக் கிடந்த பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டு, மீண்டும் கட்டப் படுகிறது.

பாபர் மசூதி இடிக்கப் பட்டு இரண்டு தசாப்தங்கள் ஆகிய பிற்பாடும், முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. கட்டைப் பஞ்சாயத்து நீதி கிடைத்திருக்கிறது, குரங்கும் பூனையும் அப்பம் பங்கிட்டது போல.

இலங்கையில், இந்துக் கோயில்கள் சில இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன. சில இந்துக் கோயில்கள், புத்த கோயில்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. வவ்வால் அவர்களே, எங்கேயோ இருக்கும் புத்தர் சிலைக்காக குரல் கொடுப்பதை விட்டு விட்டு, இதற்காகக் குரல் கொடுக்கலாமே! ராஜபக்சவிடம், எந்தப் பருப்பும் வேகாது என்று, சும்மா இருக்கிறீர்களா? அல்லது இந்திய நலன்கள் பாதிக்கப்படும் என்ற பயமா?

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுதலும், புத்த கோயிலைத் தாக்குவதும் சிங்களப் பயணிகளைத் தாக்குவதும்தான் உங்கள் வீரமா?

///எகிப்திய பிரமிடுகளையும் தான் வழிபட ஆட்கள் இல்லை இடிக்கலாமா அப்போ?///

தாஜ்மஹாலை இடிப்பது கூடுமா கூடாதா என்று, காரணம் வைத்திருப்பீர்கள்.

அதுபோல, எகிப்திய பிரமிட்டுக்களை இடிக்கலாமா கூடாதா என்று எகிப்தியர்களும் காரணம் வைத்திருப்பார்கள்.

முதலில், உங்கள் அடுத்த வீட்டுக்காரனின் வீட்டை இடியுங்கள். அதற்கப்புறம் பாமியன், பிரமிட்டுக்களைப்பற்றிக் கதைக்கலாம்.

///எகிப்திய மன்னர்கள் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுபவர்கள், எனவே மக்கள் எகிப்திய மன்னர்களை வாழும் போதும், இறந்த பின்னும் கடவுளுக்கு இணையாக வணங்க வேண்டும்.

சந்தேகம் இருந்தால் எகிப்து, ரோமன், கிரீக் வரலாறு எனப்படித்து பார்க்கவும், அதில் எல்லாம் மன்னர்கள் கடவுளின் அவதாரம்,வாரிசு என்றே இருக்கும். மக்கள் வழிப்பட்டு தான் ஆக வேண்டும்.///

உங்களின் தத்துவம் எல்லாம் அரைவேக்காட்டுத் தத்துவம்போல் தெரிகிறது. ஒரு சில மன்னர்களைத் தவிர, மற்றவர்கள் யாரும் தன்னைக் கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ சொல்லவில்லை.

தன்னைக் கடவுள் என்று சொன்ன ஒரு சில மன்னர்களை ஏற்றுக்கொள்ளாத மக்களை, பலாத்காரமாக ஏற்றுக்கொள்ள வைத்தனர். அது, அவர்களின் உயிரோடு இருந்த காலத்தில் நடந்தது. மக்களும் உயிருக்குப் பயந்து, ஏற்று வழிபட்டனர். அவர்களின் மரணத்தின்பின், அந்த வழிபாட்டுக் கிரியைகளும் நின்று விட்டன. அவ்வளவுதான்!

///இஸ்லாத்திலே சூபிக்கள் தர்க்கா வழிப்பாடு செய்வதில்லையா, தர்க்கா என்பது இறந்த சூபி திறவியை புதைத்த இடம் தானே.///

இஸ்லாத்தில் சூபிக்கள் என்ற பிரிவோ குழுவோ இல்லை.

தர்கா என்றால் என்ன மொழிச் சொல் என்று மாத்திரமாவது சொல்ல முடியுமா?

ஊர்சுற்றி said...

//....இலங்கையில், இந்துக் கோயில்கள் சில இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன. சில இந்துக் கோயில்கள், புத்த கோயில்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. வவ்வால் அவர்களே, எங்கேயோ இருக்கும் புத்தர் சிலைக்காக குரல் கொடுப்பதை விட்டு விட்டு, இதற்காகக் குரல் கொடுக்கலாமே!...//

ஆம் ஐயா! குரல் கொடுத்தோம...உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் பனியிலும் கடுங்குளிரிலும் போராடினோம். இறுதியில் ஐ.நாவை அசைத்தோம். மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்கள்!
சந்தோசப்பட்டோம்.
ஆனால் வாக்கெடுப்பு என வந்தபோது ஸ்ரீலங்காவில் இருக்கும் முஸ்லிம்கள் தெருவுக்கு வந்து ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு என்றார்கள். அதுமட்டுமல்ல இஸ்லாமிய நாடுகளுக்கெல்லாம் தமது முஸ்லிம் அமைச்சர்களை அனுப்பி ஆதரவு கேட்டார்கள். அது மட்டுமல்ல அரபி தெரிந்த சமயத்தலைவர்களை சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு அனுப்பி அரபு மொழியில் ஆதரவு பெற்றுக்கொடுத்தனர் முஸ்லிம்கள்.
இறுதியில் வாக்களிப்பு பட்டியலைப்பார்த்தால் ஈழமக்கள் எந்தெந்த போராட்டங்களை எல்லாம் ஆதரித்தார்களோ அவர்க்ள் எல்லாம் மஹிந்தாவுக்கு ஆதரவு வழங்கின. இந்த வரிசையில் மலேசியா, ஈரான், ஈராக், ச்வூதி அரேபியா, குவைத் ...கியூபா ..!!!!

நடந்து 6 மாதங்கள் கூட இல்லை ! ஸ்ரீலங்காவில் மசூதிகள் இடிப்பு !
ஸ்ரீலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதே என கூச்சலிட்ட முஸ்லிம்கள் மசூதி உடைப்பை கேட்க ஜெனிவாவுக்கு போகிறோம் என்கிறார்கள். 40,000 மக்கள் சில நாட்களுக்குள் கொல்லப்பட்டது உள்நாட்டு விவகாரம் என்றார்கள். ஆனால் மசூதி இடிப்பு மனித உரிமை மீறல். அதற்கு ஜெனிவா வேண்டும்!!!! நல்ல ஜோக்குத்தான்!

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//பனங்காட்டு பனை மரத்தில் நேராக தொங்கி 'அரைகுறையாக' சிந்திக்கும்
சிந்தனாவாதி வாழ்க ....வளர்க ...!!!! //

அப்போ நாசர் என்ன அவரை ,அவரே முழுமையாக சிந்திக்கும் அறிவாளி என நினைக்கிறாரா? இல்லை கண்ணியமான பேச்சு என அதனை நினைத்தால் நான் பேசுவதும் கண்னியமானதே,

எனக்கு அறிவுரை கூறும் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதையும் கவனிக்கவும்.

பாமியான் சிலை பற்றி உங்களிடம் கேட்டேன் நீங்கள் சரியான பதிலை அளிக்காத நிலையில் ,சின்ன கருப்பன் என யாருமே கேள்விக்கேட்கவில்லை, அதனை காபி &பேஸ்ட் ஆக உண்மைகள் போட்டு இருக்கிறார்.

கா&பேஸ்ட்களுக்கு எல்லாம் பதில் அளித்துக்கொண்டிருக்க முடியாது.

சுயமாக தட்டச்சு செய்யக்கூட முடியாமல் கேள்வி கேட்டார், பதில் சொல்லுங்கள் என்றால், நானும் ஒரு பத்துப்பக்கத்திற்கு காபி&பேஸ்ட் போட்டு கேள்வி கேட்டு விடுவேன் :-))
--------------

யூசப்,

//பாமியான் புத்தர் சிலையை வழிபட, அந்த மத மக்கள் இல்லை.//

அந்த மக்கள் இல்லாமல் செய்யப்பட்டார்கள்.

---
//இதற்காகக் குரல் கொடுக்கலாமே! ராஜபக்சவிடம், எந்தப் பருப்பும் வேகாது என்று, சும்மா இருக்கிறீர்களா? அல்லது இந்திய நலன்கள் பாதிக்கப்படும் என்ற பயமா?//

ஹி...ஹி உங்க காமெடிக்கு அளவே இல்லையா, நான் பேசினால் அது இந்திய நலனைப்பாதிக்குமா :-))

மேலும் ராஜபக்சே பதிவு போடுவாராயின் நான் கண்டிப்பாக கேட்பேன் , இங்கே கேட்டால் அவருக்கு எப்படி தெரியும், தமிழ் கூட படிக்க தெரியாது.

இப்போது சு.பி.சுவாமிகளே இந்தப்பதிவு போடவில்லை என்றால் ஏன் கேட்கப்போகிறேன்?

------
//இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுதலும், புத்த கோயிலைத் தாக்குவதும் சிங்களப் பயணிகளைத் தாக்குவதும்தான் உங்கள் வீரமா?//

நல்ல கேள்வி.

லிபியாவில் அமெரிக்க தூதரை பாலியல் பலாத்காரம் செய்து கொல்வது வீரமா?

பங்க்ளாதேசில் புத்த விகாரைகளை இடிப்பது வீரமா?

சென்னையில் அமெரிக்க தூதரகத்தினை முற்றுகை இடுவதும் தாக்குவதும் வீரமா?

இதெல்லாம் கேட்காமல் ,இலங்கை அரசின் தூதரகத்தின் மீது இவ்வளவு அக்கறையாக கேட்பதில் இருந்தே சிங்கள பற்று புலப்படுகிறது :-))

-------
//ஒரு சில மன்னர்களைத் தவிர, மற்றவர்கள் யாரும் தன்னைக் கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ சொல்லவில்லை. //

உங்கள் தத்துவம் எல்லாம் கால்வேக்காட்டு தனமாக இருக்கிறது :-))

பொதுவாக இறந்தவர்கள் நினைவிடங்கலை வணங்கும் வழக்கம் பல கலாச்சார மக்களிடமும் உண்டு.

மெரினாவில் எம்ஜிஆர்,அண்ணா சமாதிக்கு போய் பாருங்கள் பலர் விழுந்து வணங்குகிறார்கள்,அவர்களை எல்லாம் கட்டாயப்படுத்தினார்கள்,மக்கள் விருப்பப்பட்டால் எதனையும்,யாரையும் வணங்க சுதந்திரம் உண்டு.

அதெல்லாம் மத அடிமையாக இருப்பவர்களுக்கு புரிவதில்லை.

----------

//இஸ்லாத்தில் சூபிக்கள் என்ற பிரிவோ குழுவோ இல்லை. //

இஸ்லாம் என்ற மதமே இல்லை.

ஏ.ஆர்.ரெஹ்மான் தன்னை சூபி வழிபாடு செய்பவர் என்று சொல்லிக்கொண்டுள்ளார், அவரை இஸ்லாமியர் என சு.பி.சுவாமிகள் பெருமையாக உதாரணம் காட்டி இருக்கிறார், எனவே சூபியிசம் இருக்கா இல்லையா என சு.பி.சுவாமிகளிடம் கேட்கவும்.

நீங்கள் சூபியிசம் இல்லை என்று சொல்லி சூபி வழிபாடு செய்பவரை தடுத்தால் ,இந்திய அரசியல் சட்டத்தின் ,அனைவருக்கும் அவர் விரும்பும் மதத்தினை பின்பற்றவும்,வழிபடவும் உரியுண்டு என்று சொல்வதை அவமதிப்பதாகும், உங்கள் மீது ஒரு சூபி வழிபாடு செய்பவர் வழக்கு கூட போடமுடியும்.

இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் சூபி வழிபாடு ,தர்க்கா வழிபாடு செய்யும் இஸ்லாமியர்கள் உள்ளார்கள். அவர்களை எல்லாம் இஸ்லாமியர்களாக எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட மட்டுமே நீங்கள் பயன்ப்படுத்திக்கொள்கிறீர்களே ஏன்?

தர்கா,தர்க்காவினு உருதுல இருக்கு உட்பொருள்னு உருது அகராதி சொல்லுது, சூபி வழி பின்ப்பற்றுவதும் நான் தான் சொல்லணுமா?

Sathish Murugan . said...
This comment has been removed by a blog administrator.
Feroz said...

நண்பர் வவ்வால் பின்னூட்டத்தை படித்து விட்டு சிரிப்பாகா இருக்கிறது. காரணம் பல ஆண்டுகளாக அரை குறையாக படித்து விட்டு பதிவு போடுவதும் தர்க்கம் செய்வதும் நண்பரின் குணம் என்பது ஓசை செல்லாவில் இருந்து என்னில் இருந்து பலருக்கும் தெரியும். இதே போல் தான் அன்னை ஆயிஷா பற்றி அரை குறையாய் பின்னூட்டம் இட்டு பின்பு விவாதித்தது ரத்தனேஷ் என்பவர் பதிவில். இடையில் கொஞ்ச காலம் காணாமல் போய் இருந்து மீண்டும் அதே தெளிவில்லாத சிந்தனையோடு மறுபடியும். நண்பரே என் ஊரில் ஒரு சொல்லாடல் உண்டு. மரம் முத்தினால் வைரம் மனிதன் முத்தினால் புத்தி. வயது கூடும் பொது புத்தியில் தெளிவும் நாணயமும் நளினமும் வேண்டும். அது இன்னும் வராததால் பேச்சில் நளினமும் இல்லை நாகரீகமும் இல்லை. பொதுவில் உரையாடும் பொது நிதானம் தேவை. அதே தோழமையுடன்

பாகிஸ்தான்காரன் said...

இஸ்லாமிய அறிஞ்ஞசர்களிடம் சில கேள்விகள்.
என்னிடம் குரான் E-Book வடிவில் எனது கணிணியில் உள்ளது.
என்னுடய கணணி அலுவலகத்தினால் எனக்கு வழங்கப்பட்டது.
இப்போது அவர்கள் எனக்கு புதுக்கணனி தரவுள்ளதால், எனது பழய கணணியினை Original Factory Settings இல் தரும்படி கேட்டுள்ளனர்.
உன்னுடய கணணியில் data இனை email மூலமாக மாத்திரமே பரிமாற்றலாம். சில பல Software களுக்காக மற்றய வழிகள் எல்லாம் தடுக்கப்பட்டுள்ளது.
எனது கேள்வி இதுதான் நான் அந்த கண்ணியில் உள்ள குரான் E-Book இனை அழிக்கலாமா? அழித்தால் யாராவது முஸ்லீம்கள் தமக்கு அரிகிலுள்ள பவுத்தர்களை , இந்துக்களை மற்றும் கிறீஸ்தவர்களை மற்றும் அவர்களின் கோவில்களுக்கு தீ வைப்பார்களா? அதிலும் முக்கியமாக தீ வைக்க முன்னர் அவர்களின் சொத்துக்களை திருடுவார்களா?
இப்படியேல்லம் செய்வார்களாகில் நான் பழய கணனியினையே தொடர்ந்து வைத்துக்கொள்வேன். என்னால் சில உயிர்கள் பறிக்கப்படுவைதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.( எக்காரணத்திற்காகவும்.)
BTW நான் வசிப்பது ரஸ்ஸியாவில் . இங்குள்ள முஸ்லீம்கள் அப்படிச்செய்யமாட்டார்கள். எனது கவையெல்லாம் , இஸ்லாமிய சட்டம் உள்ள நாடுகளை பற்றித்தான்.

குரான் எதுவும் அழிக்கப்படுவதில்லையாயின் , இதுவரைகாலமும் பயன்படுத்திய குரான்களெல்லம் எங்கே போயிருக்கும்?? எனக்கு பக்கத்து வீட்டிலுள்ள இஸ்லாமியரின் வீட்டில் 2 குரான் மட்டுமே உள்ளது. அவர் கிட்டத்தட்ட 50 வயது மதிக்கத்தக்கவர். சிறந்த மனிதாபிமானி. சிறந்த இஸ்லாமியரா என்றால் தெரியாது. ஆனால் மிக நல்ல மனிதர். பாலஸ்தீனியர். அவரிடம் இதுவரைகாலமும் பயன்படுத்திய குரான் எல்லாம் எங்கே என்று நேற்றும் இன்றும் 10 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன் ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் புன்னகைக்கிறார்? உண்மையிலேயே இஸ்லாமியகள் தங்களது பழய குரான்களை என்ன செய்கிறார்கள். ஏதாவது சமய சடங்குகளிற்கு பிறகு புதைக்கிறார்களா? விளக்கம் சொல்லவும்.

அண்மையில் Innecents of Muslim என்ற படத்திற்காக 30 உயிர்கள் போனது. அதில் 4 உயிர் அமெரிக்கர்களது. அவர்கள் நால்வரும் கிறீஸ்தவர்கள். சரி. அப்படியாகில் மற்றய 26 பேரும் யார்? முஸ்லீம்கள்தானே? அவர்களின் உயிர் எதற்காக பறிக்கப்பட்டது? அல்லாவினை எவரிடமிருந்து காப்பாற்ற இவர்கள் தங்களின் உயிரை கொடுத்தார்கள்? இப்போது அவர்களின் பிள்ளைகளின் கதி, பெற்றோரின் கதி என்ன?
I just cant understand this people!!!

எனக்கு மற்றயமதங்களில் இருந்து உதாரணங்கள், அதுக்கு பதில் கொன்னால் இதுக்கு பதில் சொல்லுவேன் மற்றும் என்னிடம் கேள்விகள் கேட்பதை விடுத்து, நேரடியான விளக்கமான பதில் தேவை.

suvanappiriyan said...

சதீஷ் முருகன் . said...

வணக்கம் சூனா பானா சாமியாரே,

உங்களின் கண்டனம் நரியின் செயலுக்கு ஒப்பானது என்பதை உலகமே அறியும். தனிமனித ஒழுக்கம் பேசும் முன் நீங்கள் அதை கடை பிடித்தல் நலம்.////உங்களுக்கு நான் சொன்னது எல்லாம் புரிந்தால் மனிதனாகிட மாட்டிங்களா :-))//
அதனால்தான் இன்று வரை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்களோ!////

வவ்வால் அண்ணே, ஏற்கனவே சூனா பானா சாமியாரு இன்னும் பத்து வருசத்துல உலகமே "அவிங்க"ளாயிருவாங்கன்னு ஜோசியம் சொல்லிட்டு இருக்காரு, நீங்க வேற எப்போ பார்த்தாலும் குரான் படிச்சு அவிங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குறிங்க. அவிங்க அத ஒழுங்கா படிச்சா (படிச்சவரு மட்டும்.... ஹி ஹி ஹிஹி) நீங்க எதுக்கு அவிங்களுக்கு விளக்கனும்....

காப்பி பேஸ்டு உண்மைகள் அவர்களே, சொந்த சரக்கோட வாரும், ஒரு நாள் பொதுவான எடத்துல வச்சிகிருவோம் பஞ்சாயத்த,...

//மசூதியை உடைத்தவர்களுக்கு புத்தச்சிலை உடைப்பைப் பற்றிப் பேச அருகதை இல்லை.// ஆயிரமாயிரம் கோவில்களை இடித்த உங்கள் கும்பல்களை இன்னும் நாங்கள் இந்தியாவில் தான் வைத்திருக்கிறோம் என்பதில் எங்களின் மனிதநேயம் அமைதி காக்க சொல்லுது... எங்களின் இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற உம்மிடம் விண்ணப்பம் வைக்க நீர் விரும்புகிறீரோ?


//ஆஃகான் மக்கள் பஞ்சத்தாலும் பசியாலும் , குளிரினாலும் இறந்து கொண்டிருக்கையில் இந்தச் சிலை உடைப்பு என்ன சாதித்து விடும் என்று கேட்பவர்களுக்கும், இந்த உடைப்பாளர்களின் மன நிலை புரிவதில்லை.// கோமாளித்தனமான வாதம், பஞ்சத்துக்கு காரணமே தீவிரவியாதிகள் தானே, நீர் வேண்டுமானால் புனித போர் நடத்தும் போராளிகள் என்றே விளியும்... பஞ்சத்திலும் கூட, மக்களின் உணவை பற்றி நினைக்காது, மாற்று மத வரலாற்று சின்னங்களை உடைத்ததில் பல்லை காட்டுகிறது உங்கள் கும்பலின் அறிவாளித்தனமும், மத சகிப்புத்தன்மையும்.

//டிஎன்டிஜே நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தூதரகத்தின் மீது கல் வீச்சு நடந்ததை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா. சும்மா அளந்து விடக் கூடாது.//

சூனா பானா சாமியாரே அங்கு நீர் இருந்தீரா? ஒருத்தன் என்ன படம் எடுத்தான், அதுல வர ஒலிக்கும் வாய் அசைவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்று கூட, இன்னும் ஏன் அந்த படத்தை பார்க்காத காட்டுமிராண்டிகள் தான், அப்பாவி மக்களின் அன்றைய பிழைப்பை கெடுத்தார்கள்.

இன்னும் வெடிக்கும்(உங்களை போல குண்டு அல்ல),
சதீஷ் முருகன்

அஞ்சா சிங்கம் said...

மதத்தில் கிளையை பிடித்து தொங்கி கொண்டு அதன் மூலமே நியாயம் அநியாயத்தை அலசி கொண்டிருப்பது .
கடைந்தெடுத்த அயோக்கிய தனம் . எந்த மதவாதிக்கும் தார்மீக உரிமை கூட கிடையாது .. மற்றபடி உள்ளே மறைந்திருக்கும் நரித்தனம் தெரிகிறது ... சு.பி. சாமி உலக நடப்பை அலசும் வேலை .அல்லது கண்டிக்கும் வேலையை தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டாமே . உங்களுக்கு எது நன்றாக வருகிறதோ அதை மட்டும் செய்யவும் ..தாவா பணி நன்றாக வருகிறது என்று நினைக்கிறேன் . தொடர்ந்து அதையே செய்யவும் . உங்கள் தாவா பணி சிறக்க வாழ்த்துக்கள் .

Unknown said...

மிஸ்டர் வவ்வால்,

///அந்த மக்கள் இல்லாமல் செய்யப்பட்டார்கள்.///

அந்த மக்களே வேறு கொள்கைக்கு மாறியபோது, வழிபடக்கூடிய மக்கள் இல்லை.

உங்கள் பாஷையில் இல்லாமல் செய்யப்பட்டார்கள்?

///மேலும் ராஜபக்சே பதிவு போடுவாராயின் நான் கண்டிப்பாக கேட்பேன்///

நீங்கள் கேட்டும் பிரயோசனமில்லை. அதனால்தான், எந்தப் பருப்பும் வேகாது என்றேன். தமிழ்நாடே கொதித்து எழுந்தாலும், ஒன்றும் ஆகப் போவதில்லை.

வேண்டுமானால், கொழும்புக்குப் போய் அவருக்கு எதிராக எழுதிப் பாருங்கள்.

///இதெல்லாம் கேட்காமல் , இலங்கை அரசின் தூதரகத்தின் மீது இவ்வளவு அக்கறையாக கேட்பதில் இருந்தே சிங்கள பற்று புலப்படுகிறது :-))///

யாரோ கவனிப்பாரற்ற புத்தர் சிலையை இடித்ததற்காக தூக்கிப் பிடிக்கும் நீங்கள், சென்னையிலுள்ள புத்த கோயிலை இடிப்பதற்கு மறைமுக ஆதரவு வழங்குவதன் தேவை என்ன? அதைக் கண்டிக்கும் மனநிலையும் இல்லை. சிங்களப் பயணிகளைத் தாக்கியவர்களும் ஜாமீனில்!

இலங்கைப் பயணிகள் தாக்கப்பட்டால், இலங்கையிலுள்ள இந்தியர்களும் தாக்கப் படுவார்கள் என்று சில இலங்கை அமைச்சர்களும் கூறியதை அடுத்து, இந்திய மத்திய அரசும் கொஞ்சம் இறங்கி வந்ததைக் கவனிக்கவில்லையா?

///தர்கா,தர்க்காவினு உருதுல இருக்கு உட்பொருள்னு உருது அகராதி சொல்லுது, சூபி வழி பின்ப்பற்றுவதும் நான் தான் சொல்லணுமா?///

இது உங்களின் தப்பான சான்று.

///இஸ்லாம் என்ற மதமே இல்லை. ///

உண்மைதான்! மதங்களுக்கு அப்பாலான மார்க்கம்.

///ஏ.ஆர்.ரெஹ்மான் தன்னை சூபி வழிபாடு செய்பவர் என்று சொல்லிக்கொண்டுள்ளார், அவரை இஸ்லாமியர் என சு.பி.சுவாமிகள் பெருமையாக உதாரணம் காட்டி இருக்கிறார், எனவே சூபியிசம் இருக்கா இல்லையா என சு.பி.சுவாமிகளிடம் கேட்கவும்.///

நான் சொன்னது சூபி என்னும் பிரிவு இஸ்லாத்தில் இல்லை என்று!

நீங்கள் இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்று உதாரணம் காட்டுகிறீர்களே!

///இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் சூபி வழிபாடு ,தர்க்கா வழிபாடு செய்யும் இஸ்லாமியர்கள் உள்ளார்கள். அவர்களை எல்லாம் இஸ்லாமியர்களாக எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட மட்டுமே நீங்கள் பயன்ப்படுத்திக்கொள்கிறீர்களே ஏன்?///

இஸ்லாத்தின் கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்களிடம் இஸ்லாத்தில் இல்லாத ஒரு கொள்கை குடி கொண்டிருந்தால், அது அறியாமையின் வெளிப்பாடு.

அந்த அறியாமையை களைவது, முஸ்லிம்களின் கடமை. அவர்களை முஸ்லிம்கள் அல்ல என்று கூறுவதற்கு, எந்த முஸ்லிமுக்கும் உரிமையில்லை.

Unknown said...

மிஸ்டர் சதீஷ்,

///ஆயிரமாயிரம் கோவில்களை இடித்த உங்கள் கும்பல்களை இன்னும் நாங்கள் இந்தியாவில் தான் வைத்திருக்கிறோம் என்பதில் எங்களின் மனிதநேயம் அமைதி காக்க சொல்லுது... எங்களின் இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற உம்மிடம் விண்ணப்பம் வைக்க நீர் விரும்புகிறீரோ?///

பாகிஸ்தான், பங்காளதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் உங்கள் இனத்தை மனித நேயத்துடன் நடத்துகிறது.

ஆனால், உங்கள் மனித நேயமோ மிகவும் புல்லரிக்கிறது.

ஏன், ஆயிரமாயிரம் கோவில்கள்? ஒழுங்கான கணக்கு வேண்டாமா?

Unknown said...

மிஸ்டர் வவ்வால்,

///மெரினாவில் எம்ஜிஆர்,அண்ணா சமாதிக்கு போய் பாருங்கள் பலர் விழுந்து வணங்குகிறார்கள்,அவர்களை எல்லாம் கட்டாயப்படுத்தினார்கள்,மக்கள் விருப்பப்பட்டால் எதனையும்,யாரையும் வணங்க சுதந்திரம் உண்டு.
அதெல்லாம் மத அடிமையாக இருப்பவர்களுக்கு புரிவதில்லை.///


எகிப்தின் பிரமிட்டில் இருந்து, மெரீனா கடற்கரைக்கு வந்துவிட்டீர்களா?

சினிமாக் கழிசடைகளில் இருந்து, தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் காலில் விழும் கலாசாரத்தைக் கொண்டவர்கள், மெரீனா கடற்கரையில் இறந்து போன சினிமாக் கூத்தாடியின் சிலையை வணங்குவது பிரமாதம் இல்லை.

உங்களைப் போன்ற மத அடிமைகளுக்கு இதுவெல்லாம் எங்கு புரியப்போகுது!

Unknown said...

Mr Satheesh,

///பஞ்சத்துக்கு காரணமே தீவிரவியாதிகள் தானே, நீர் வேண்டுமானால் புனித போர் நடத்தும் போராளிகள் என்றே விளியும்... பஞ்சத்திலும் கூட, மக்களின் உணவை பற்றி நினைக்காது, மாற்று மத வரலாற்று சின்னங்களை உடைத்ததில் பல்லை காட்டுகிறது உங்கள் கும்பலின் அறிவாளித்தனமும், மத சகிப்புத்தன்மையும்.///


நீங்கள் சொல்வது சரி! தீவிர வியாதிகளும் பஞ்சத்திற்கு ஒரு காரணம்தான்!

மக்களின் பசி, பட்டினியைக் கவனித்திருந்தால், அந்த சிலை உடைப்பும் தவிர்க்கப் பட்டிருக்கும்.

இந்தியாவிற்கும் சிலைதான் Focus. அங்குள்ள, மக்களின் பசியைப்பற்றி அல்ல.

தனது நாட்டு மக்களின் பாபர் பள்ளிவாசலை இடிப்பை தவிர்க்க வக்கில்லை இந்தியாவிற்கு, பாமியான் சிலை இடிப்பதைத் தடுக்க குரல் கொடுத்தது.

Sathish Murugan . said...

திரு யூசப் இஸ்மத்,

//மக்களின் பசி, பட்டினியைக் கவனித்திருந்தால், அந்த சிலை உடைப்பும் தவிர்க்கப் பட்டிருக்கும்.// யாரு கவனிக்கணும், போதைப்பொருளை விவசாயம் செய்து பணம் ஈட்டி அதை தீவிரவாதத்திற்கு பயன்படுத்திய தலிபான்கள் கவனிக்கணுமா? இல்லை மதத்தவர்கள் கவனிக்கணுமா? கவனிக்க போனவர்களை உங்கள் ஆட்கள் "கவனித்த" கதை மிக நீண்டது. கோணல் வாதம் உங்களுடையது, பசி பட்டினிக்கும், வரலாற்றுச் சின்னத்துக்கும் என்ன ஒற்றுமை?

//இந்தியாவிற்கும் சிலைதான் Focus. அங்குள்ள, மக்களின் பசியைப்பற்றி அல்ல.
தனது நாட்டு மக்களின் பாபர் பள்ளிவாசலை இடிப்பை தவிர்க்க வக்கில்லை இந்தியாவிற்கு, பாமியான் சிலை இடிப்பதைத் தடுக்க குரல் கொடுத்தது.//
இந்தியா பாவம், இஸ்லாமிய கொள்ளையர்களிடம் இருந்து தன் கோவில்களையே பாதுகாக்க இயலாத இந்தியா எப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதை தடுக்கும்?
//தனது நாட்டு மக்களின் பாபர் பள்ளிவாசலை// ஹி ஹி ஹி... எனக்கு தெரிந்து எந்த இந்தியனும்(இந்திய மண்ணில் பிறந்தவனும்) கட்டியதாக நினைவில் இல்லை.

Nizam said...

எனுங்கா வாவ்வாலு நீங்கள் கிருஸ்தவர் இருக்கிறா வீட்டை விலைக்கு வாங்ககினால் அந்த வீட்டில் இருக்கிறா சாமி அறையில் மாதா சிலை எடுத்துவிட்டு உங்கள் பிள்ளையார் சிலையையோ அல்லது டார்வின் சிலையையோ வைத்து வழிபடுவீர்களா? அல்லது எடுக்கம்மால் வழிபடுவீர்களா?

//கடந்த கால வரலாற்றினை சொல்லும் எதனையும் இடிக்க யாருக்கும் உரிமை இல்லை, எந்த மதத்தினர் செய்தாலும் தவறே.//

இந்த கொள்கை பாபர் மசூதிக்கு பொறுந்துமா?

வவ்வால் said...

சதீஷ்,

//வவ்வால் அண்ணே, ஏற்கனவே சூனா பானா சாமியாரு இன்னும் பத்து வருசத்துல உலகமே "அவிங்க"ளாயிருவாங்கன்னு ஜோசியம் சொல்லிட்டு இருக்காரு, நீங்க வேற எப்போ பார்த்தாலும் குரான் படிச்சு அவிங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குறிங்க. அவிங்க அத ஒழுங்கா படிச்சா (படிச்சவரு மட்டும்.... ஹி ஹி ஹிஹி) நீங்க எதுக்கு அவிங்களுக்கு விளக்கனும்..//

என்ன இருந்தாலும் நம்ம மக்களய்யா ,வீணாப்போறாங்களேன்னு ஒரு அக்கறையில சொல்லுறது தான்.

---------

யூசப் அய்யா,

மதம் மாறனும் இல்லை மரணம் என்றால் இல்லாமல் செய்யப்பட்டதாக தானே சொல்லணும்.

// சென்னையிலுள்ள புத்த கோயிலை இடிப்பதற்கு மறைமுக ஆதரவு வழங்குவதன் தேவை என்ன? //

யாரும் ஆதரவு வழங்கவில்லை, உமக்கு தமிழ் புரியாது என்றால் ,அதற்கு நான் என்ன செய்வது?

மதங்களுக்கு அப்பால் மார்க்கமா அது என்ன மார்க்கம்?

பாஸ்போர்ட் அப்ளிகேஷன் ,கல்லூரி அப்ளிகேஷனில் மதம்,ரிலிஜன் என்று கேட்கும் போது என்ன நிரப்புகிறீர்கள்?

//நான் சொன்னது சூபி என்னும் பிரிவு இஸ்லாத்தில் இல்லை என்று!

நீங்கள் இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்று உதாரணம் காட்டுகிறீர்களே!//

அப்போ இஸ்லாமியர்கள் வேறு ,இஸ்லாம் வேறா?


நீங்க நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பரம ரசிகரோ இருக்கு,ஆனால் இல்லை, இப்போ இருக்கா ,ஆனால் இல்லை... ஹி..ஹி .:-))

//மெரீனா கடற்கரையில் இறந்து போன சினிமாக் கூத்தாடியின் சிலையை வணங்குவது பிரமாதம் இல்லை. //

அப்படி மெரினாவில் விழுந்து வணங்குவதால் நாட்டில் கலவரம் வரவில்லை, யார் வாழ்வும் பாதிக்கப்படவில்லை.

யாருக்கும் தீங்கு தராமல் ஒரு மனிதன் அவர் விருப்பப்படி வணங்குவது தனி மனித சுதந்திரம் ,அதெல்லாம் மதபோதை கொண்டோருக்கு விளங்காது.
---------
யாரு மத அடிமை?

ஒரு மத அடிமை ,மதமே இல்லை என்பவரைப்பார்த்து சொல்லுறாரே :-))

நீங்க ஜோக்கு சொன்னாலும் சிரிக்கிறாப்போல சொல்ல மாட்டேன்கிறிங்க, நான் உங்க கிட்டே இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்... அடுத்த முறை சிரிப்பு வருவது போல சோக்கு சொல்லவும்.

Nizam said...

வவ்வால் said...

//மெரினாவில் எம்ஜிஆர்,அண்ணா சமாதிக்கு போய் பாருங்கள் பலர் விழுந்து வணங்குகிறார்கள்,அவர்களை எல்லாம் கட்டாயப்படுத்தினார்கள்,மக்கள் விருப்பப்பட்டால் எதனையும்,யாரையும் வணங்க சுதந்திரம் உண்டு.//

ஐய்ய் நல்ல ஐடியாவ இருக்கே இப்படியே ஜெயலலிதவிக்கும் கருணநிதிக்கும் வைகோ விஜயகாந்து ராமதாஸ் எல்லோருக்கும் மெரின பீச்சில் சமாதி கட்டினால் எம்ஜிஆர்,அண்ணாவுக்கு கும்பிடற வார கூட்டம் இவங்களை கொஞ்சம் கும்பிடும், அப்புறமென்ன எல்லோரும் கடலுக்குல் குடியேறிறா வேண்டியாது தான் சீக்கிராம வவ்வாழு தமிழ்நாட்டு முதலைமைச்சார் ஆகோனும் இப்படி எல்லாம் நடக்கும் வாய்ப்பு இருக்கு