உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?
நாம் வாழும் பூமியை சற்று ஆராயப் புகுந்தால் பல்வேறு ஆச்சரியங்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும். இந்த பேரண்டத்தில் கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோதி பிறகு ஒரு சம நிலைக்கு வந்து இன்று வரை தனது ஓட்டத்தை தொய்வின்றி செய்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் எந்த மாற்றமும் இல்லாமல் சம அளவில் சுழன்று வருகின்றன.
ஆனால் நமது பூமி மட்டும் 23.45 டிகிரி யில் சற்று சாய்வாக சுழல்வதை நாம் அறிவோம். இந்த ஒரு ஏற்பாடு மட்டும் இல்லை என்றால் நீங்களோ நானோ கணிணி முன்னால் அமர்ந்து செய்திகளை பார்த்துக் கெண்டிருக்க முடியாது. ஆம். 23.45 டிகிரி சாய்வாக சுழல்வதால்தான் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என்று மாறி மாறி வருகிறது. இந்த சாய்வில் கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் நமது கதி அதோ கதிதான். பூமியின் சாய்வான சுழற்சியினால் காற்று வீசும்போது அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு மாற்றப்படுகிறது. பூமியின் கால நிலையை சீராக வைப்பதற்கு காற்றின் பங்கும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சாய்வு இல்லை என்றால் இந்த பூமிப் பந்தானது குளிரில் உறைந்து விடும. அல்லது ஒரேயடியாக வெப்பம் தாக்கி புல் பூண்டுகள் இல்லாமல் கருகி விடும். உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக இந்த பூமிக் கோளம் மாறி விடும்.
இவ்வாறு இந்த பூமி 23.5 டிகிரி சாய்வில் சுற்றினால்தான் இங்கு மனிதர்கள் வாழ முடியும் என்று தீர்மானித்த சக்தி எது? இதற்கு முதலில் பூமியின் அடர்த்தி என்ன? சூரியனின் ஈர்ப்பு சக்தியின் அளவு என்ன? அதேபோல் புதன், சுக்கிரன், வியாழன், வெள்ளி, சனி, நிலவு போன்ற அனைத்து கோள்களின் அடர்ததி மற்றும் அவற்றின் ஈர்ப்பு தன்மை தெரிந்த ஒரு சக்தியால்தான் இத்தனை மாற்றங்களையும் நிகழ்த்த சாத்தியம் உண்டு..
//Science and technology have indeed given us much information about the physical world, provided us with abundant comforts and conveniences, increased efficiency and discovered remedies for many diseases that used to be fatal. But science does not and cannot tell us about the meaning of life and death. Science tells us "how" but it never answers the question "why"?. Can science ever tell us what is right and what is wrong? What is good and what is evil? What is beautiful and what is ugly? And to whom are we accountable for what we do? Religion does.// -மர்யம் ஜமிலா.
இந்த ஆச்சரியமான விபரங்களை எல்லாம் பல காலம் உழைத்து அறிவியல் அறிஞர்கள் உண்மைகளை கண்டு பிடித்துள்ளனர். ஆம்....இந்த கோள்களின் சஞ்சாரம் இரவு பகல் மாறி வருவது எவ்வாறு என்று அனைத்திற்கும் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் இவைகளை இவ்வாறு சுழல விட்ட சக்தி எது? இதற்கு என்ன அவசியம் வந்தது? என்பதை அறிவியலால் சொல்ல முடியாது. அதனை ஆன்மீகத்தால்தான் சொல்ல முடியும். இனி ஆன்மீகத்துக்குள் நுழைவோம்.
--------------------------------------------------------------------------
'இறைவன் உங்களை பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான். பின்னர் அதிலேயே உங்களை மீட்டுவான். அதிலிருந்தே உங்களை வெளியேற்றுவான்'
-குர்ஆன் 71:17,18
"பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்."
- குர்ஆன் 7;10
'உங்களுக்கு பூமியில் குறிப்பிட்ட காலம் வாழ்விடமும் வசதியும் உள்ளன.'
-குர்ஆன் 2:36
'அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.'
-குர்ஆன் 30:25
பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!
சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.
'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29
மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.
https://sites.google.com/site/earthrotation
http://www.itacanet.org/the-sun-as-a-source-of-energy/part-1-solar-astronomy/
http://www.pveducation.org/properties-of-sunlight/declination-angle
உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.
ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)
------------------------------------------------------
முஸ்லிம் பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கண்டன அறிக்கை.
அன்புள்ள இயக்குநர் அவர்களுக்கு,
பொருள் : செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி
தங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!
09.11.2012, வெள்ளிக் கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு தங்களது ரேடியோ ஹலோ 89.5 அலைவரிசையில் ஒலிபரப்பான தலைப்புச் செய்திகளில் முஸ்லிம் பயங்கரவாதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கவேண்டும் என இராமகோபாலன் தெரிவித்தார் என ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் எந்த ஒரு மதத்திற்கும், மதத்தினருக்கும் பொதுவானது அல்ல என்று வலியுறுத்தப்பட்டதால் முஸ்லிம் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சன் டிவி போன்ற ஊடகங்களே தவிர்த்தவிட்ட சூழ்நிலையில் முஸ்லிம்களின் குணாதிசியங்களையும், பண்புகளையும் அதிகமாக புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள நாட்டில் அமர்ந்துக் கொண்டு செய்தியின் தரம் அறியாமல் வாசிப்பது தவறு என ரேடியோ ஹலோ உணரவேண்டும்.
மதக் கலவரங்களை ஏற்படுத்தி, அமைதி குலைப்பதை தனது வாழ்நாள் இலட்சியமாக கருதும் இராமகோபாலனின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் கூறிய உண்மையற்ற கூற்றை செய்தியாக வாசிப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்திருக்க வேண்டாமா?. ஒரு சில நல்ல பயனுள்ள நிகழ்ச்சிகளும், பல்வேறு மறைமுக கலாச்சார சீர்கேடுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் வழங்கும் தங்கள் ரேடியோ இதுபோன்ற நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
இந்த நாட்டினுடைய சட்டத்தின் படி இஸ்லாமிய மதத்தைப்பற்றியோ, தலைவர்களைப் பற்றியோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்ப்பது, கருத்து தெரிவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளை செய்ததற்காக பல செய்தித் தாள்களும், காட்சி ஊடகங்களும் கடந்த காலங்களில் உடனடியாக மூடப்பட்டுள்ளன என்பதை மேற்கோள் காட்டி, தங்களுடைய இன்றைய செய்தி வாசிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், இனி செய்திகளில் கவனம் செலுத்துப்படும் என்ற உறுதி மொழியையும் இந்த மின்னஞ்சல் கிடைத்த 7 வேலை நாட்களுக்குள் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக இந்த விஷயத்தை அணுகுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்பதை இதன் மூலமாக பதிவு செய்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
ஹூசைன் பாஷா
துபாய்
நாள் : 19.11.2012
துபாய் தமிழ் வானொலி நிலையத்திலிருந்து கிடைத்த பதில் :
திரு. ஹூசைன் பாஷா
துபாய்
மதிப்பிற்குரிய திரு. ஹூசைன் பாஷா அவர்களுக்கு>
செய்திகளில் கவனம் செலுத்த வேண்டி அனுப்பப்பட்ட தங்களது கடிதம் கண்டோம். தாங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியில் தவறுதலாக வார்த்தை பிரேயாகம் செய்யப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக எங்களது செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தீர்களானால் இஸ்லாமிய மதம் குறித்தோ> இஸ்லாமிய சகோதரர்கள் குறித்தோ சிறப்பான செய்திகளையே நாங்கள் அளித்து வந்திருப்பதை அறிந்திருப்பீர்கள். தவிர மதம்>மொழி> இனம் குறித்து எந்த தவறான செய்திகளும் வெளியாகி விடக்கூடாது என்பது குறித்தும் நாங்கள் தொடர்ந்து கவனமாகவே இருந்து வருகிறோம். மேலும்> எங்களது செய்திப் பிரிவின் அனைத்து ஊழியர்களுக்கும் இதுகுறித்து முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகம் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறே அன்றி> எந்தவித உள்நோக்கத்தினாலும் வாசிக்கப்பட்டதல்ல என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் . மேலும்> இதுபோன்ற தவறுகள் நேராவண்ணம் கூடுதல் கவனம் செலுத்தவும் உறுதி ஏற்கிறோம். எங்களது கவனத்துக்கு இதை உடனடியாக கொண்டு வந்தமைக்கு தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்
செய்தி ஆசிரியர்
ரேடியோ ஹலோ 89.5
நாள் : 11-11-2012
39 comments:
அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நல்ல பல விளக்கமான தகவல்கள்... நன்றி...
அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நல்ல பல விளக்கமான தகவல்கள்... நன்றி...
திரு திண்டுக்கல் தனபாலன்!
//அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நல்ல பல விளக்கமான தகவல்கள்... நன்றி... //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ நாகூர் மீரான்!
//ஆம்..சகோ..நம் அடுத்தடுத்த கேள்விகள் சிந்திக்கும் உள்ளங்களுக்கு நல்ல விருந்து...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175//
7:175 وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ
7:175. (நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.
நீங்கள் குறிப்பிட்ட வசன என் தவறு திரித்தி கொள்ளவும்
சகோ முபாரக்!
//நீங்கள் குறிப்பிட்ட வசன என் தவறு திரித்தி கொள்ளவும் //
வசன எண் தவறாக வந்தது எனது கவனக் குறைவே! திருத்தி விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
சலாம் சகோ சுவனப்பிரியன்,
மாஷா அல்லாஹ் தொடர்ந்து மிகவும் ஆக்கப் பூர்வமான மற்றும் அறிவுப்பூர்வமான பதிவுகளை எங்களுக்கு அறியத்தந்து வருகின்றீர்கள்.அலலாஹ்(சுப) உங்களுக்கு மேலும் மேலும் கல்வி அறிவை மேம்படுத்த அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சலாம் சகோ சுவனப்பிரியன்,
மாஷா அல்லாஹ் தொடர்ந்து மிகவும் ஆக்கப் பூர்வமான மற்றும் அறிவுப்பூர்வமான பதிவுகளை எங்களுக்கு அறியத்தந்து வருகின்றீர்கள்.அலலாஹ்(சுப) உங்களுக்கு மேலும் மேலும் கல்வி அறிவை மேம்படுத்த அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சலாம் சகோ முஹம்மத்!
//மாஷா அல்லாஹ் தொடர்ந்து மிகவும் ஆக்கப் பூர்வமான மற்றும் அறிவுப்பூர்வமான பதிவுகளை எங்களுக்கு அறியத்தந்து வருகின்றீர்கள்.அலலாஹ்(சுப) உங்களுக்கு மேலும் மேலும் கல்வி அறிவை மேம்படுத்த அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!
வேக நரி!
இந்த செய்தியை படிக்கவும். இந்திய தாலிபான். இதற்காக முழு இந்துக்களையும் தீவிரவாதியாக நான் சொல்ல மாட்டேன்.
ஜபல்பூர்: ராமரை மோசமான கணவர் என்று கூறிய ராம் ஜெத்மலானியின் முகத்தில் காறி உமிழ்பவருக்கு ரூ. 5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியுள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்தவர் ராம் ஜெத்மலானி. பிரபல வழக்கறிஞரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ராமர் பற்றி குறிப்பிடுகையில், மீனவர்கள் சிலர் பேச்சைக் கேட்டு தன் மனைவி சீதையை தீக்குளிக்கச் சொன்ன ராமர், மிகவும் மோசமான கணவர் என்று குறிப்பிட்டிருந்தார். ராம் ஜெத்மலானியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ம.பி., மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த மகாமண்டலேஸ்வர் சுவாமி ஷ்யாம் தாஸ் மகரான் என்ற சாமியார் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராமரைப்பற்றி தவறாக கூறிய ராம் ஜெத்மலானியின் முகத்தில் காறி உமிழ்பவருக்கு ரூ. 5 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ராம் ஜெத்மலானியின் கருத்தால் வெகுண்ட தனது சீடர்கள், இது தொடர்பாக தம்மை போனில் தொடர்ந்து தொடர்பு கொண்டு, அவரை கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், இதையடுத்து இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சாமியாரின் இந்த அறிவிப்பை அடுத்து அவரது சீடர்களும் இளைஞர்களும் ராம் ஜெத்மலானி குறித்து அறியவும், அவரது வீட்டு அட்ரசை கண்டுபிடிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே, தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ள சாமியார், தனது பேச்சு மிரட்டல் விடுக்கும் தொனியில் சொல்லப்பட்டது அல்ல என்றும், வன்முறையற்ற எதிர்ப்பு செயல் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=585198-
அண்ணாச்சி 23 டிகிரி திரும்பாவிட்டால் பூமியில் உயிரினம் இருந்திருக்காதா?
23 டிகிரி திரும்பியதால் மட்டுமே உயிரினம் வந்ததா?
அந்த அரேபிய அல்லாவால் அனைத்தும் படைக்கப்பட்டது என்று சிலர் சொல்வது பொய்யா அண்ணாச்சி?
பூமியை 23 டிகிரிக்குத் திருப்பாமல் உயிரினத்தை அந்த அரேபிய அல்லாவால் படைக்க முடியவில்லையா?
அப்ப அந்த அரேபிய அல்லாவைவிட பெரியவர் ஒருவர் இருக்கவேண்டுமே?
அண்ணாச்சி அந்த சூரியனை உயிரினம் வாழந்தகுந்த இடமாக மாற்ற அந்த அரேபிய அல்லாவால் முடியவில்லையா?
மற்ற கோள்களில் உயிரினம் இல்லையென்ற செய்தி அந்த அரேபிய புத்தகத்தில் இருக்கா அண்ணாச்சி?
இருப்பதாக நாளை கண்டுபிடிக்கப் பட்டால் என்ன செய்வது அண்ணாச்சி?
திரு ராவணன்!
//பூமியை 23 டிகிரிக்குத் திருப்பாமல் உயிரினத்தை அந்த அரேபிய அல்லாவால் படைக்க முடியவில்லையா?//
ஒரு அற்ப விந்து துளியிலிருந்து மனிதனை படைக்கும் இறைவனுக்கு மற்ற அனைத்தும் வெகு சுலபமே!
//மற்ற கோள்களில் உயிரினம் இல்லையென்ற செய்தி அந்த அரேபிய புத்தகத்தில் இருக்கா அண்ணாச்சி?
இருப்பதாக நாளை கண்டுபிடிக்கப் பட்டால் என்ன செய்வது அண்ணாச்சி?//
நாளை கண்டு பிடிக்க பட்டாலும் அது பூமியை ஒத்த உயிரினமாக இருக்காது என்று பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேனே!
//அப்ப அந்த அரேபிய அல்லாவைவிட பெரியவர் ஒருவர் இருக்கவேண்டுமே?//
இங்கு உயிரினம் வாழ வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே இந்த பூமியை 23.5 டிகிரி சாய்வாக்கியதே நம்மை படைத்த இறைவன்தானே!
///இங்கு உயிரினம் வாழ வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே இந்த பூமியை 23.5 டிகிரி சாய்வாக்கியதே நம்மை படைத்த இறைவன்தானே!////
நான் கேட்டது உங்களுக்குப் புரியவில்லையா அண்ணாச்சி?
பூமியை 23 டிகிரி திருப்பாமல் இங்கே உயிரினத்தை வாழவைக்க உங்கள்
அல்லாவால் முடியவில்லையா?
23 டிகிரி திரும்பினால் மட்டுமே உயிரினம் வாழும் என்ற போது உங்கள் அல்லாவிற்கு வேலை இல்லை.
சூரியனில் உயிரினத்தை உருவாக்கிக் காட்ட உங்கள் அரேபிய அல்லாவால் முடியுமா?
Vanakkam
vadivel
vedivel....
Sir....!!!!!!!!!
//சூரியனில் உயிரினத்தை உருவாக்கிக் காட்ட உங்கள் அரேபிய அல்லாவால் முடியுமா? //
சூரியனை இவ்வளவு வெப்பம் உமிழும் கோளாக படைத்த இறைவனுக்கு அவன் நினைத்தால் அங்கும் ஒரு ஜீவனை உண்டாக்க முடியும்.
//23 டிகிரி திரும்பினால் மட்டுமே உயிரினம் வாழும் என்ற போது உங்கள் அல்லாவிற்கு வேலை இல்லை.//
நான் முன்பே கூறினேன் 23.5 டிகிரி சாய்வாக்கியதே நம்மை படைத்த இறைவன்தான். பிறகு அவனால் முடியவில்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்? அல்லது அனைத்து கோள்களையும் விட இந்த பூமியை 23.5 டிகிரி சாய்வாக சுழல விட்ட சக்தி எது என்று உங்கள் முணியாண்டியிடம் கொஞ்சம் கேட்டு சொல்லலாமே!
//அரேபிய அல்லா//
அரேபியாவுக்கு மட்டும் உரித்தானவர் அல்ல. உசிலம் பட்டிக்கும், கொட்டாம் பட்டிக்கும் கூட அவர்தான் இறைவன்.
//Vanakkam
vadivel
vedivel....
Sir....!!!!!!!!! //
அடிக்கடி உங்களையே கண்ணாடியில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று எத்தனை தரம்தான் சொல்வது. :-)
Sir
eththanai vatti
kannaadi-la
parththaalum
naan
theriya maatteenkuran.....sir...
Pathilaa
oru
kuruvi
thanni
kudikkurathuthaan
theriyuthu....sir...
Oru velai
-------- vin
sathiyo.....??????
சு.பி.சுவாமிகள்,
வழக்கம் போல தவறான தகவல்களை அறிவியல் என்றும், அது குரானில் சொல்லப்பட்டாச்சு என்றும் சொல்லி ஒரு கதைய விட்டு இருக்கீங்க :-))
பூமி 23.5 டிகிரி சாயவில்லை என்றால் அதிக குளிரோ ,வெப்பமோ தாக்காது நேராக இருந்தால் இரவும் பகலும் சம நேரமாக சரியா தலா 12 மணி நேரம் என்று இருக்கும், இதனை equinox என்பார்கள். தற்போது சாய்வான கோணம் இருப்பதால் ஆண்டுக்கு இரு முறை மட்டும் march 20 or 21,september21-or 22 have day and night equal time of 12 hrs each என வருகிறது.
பூமியின் அச்சு எத்தனை கோணத்தில் இருந்தாலும் 24 மணி நேரத்தில் தன்னை தானே முழு சுற்று சுற்றிவிடுவதால் பூமியின் அனைத்து பகுதியியும் சூரியனின் பார்வையில் 24 மணி நேரத்தில் பட்டு விடுகிறது,அனைத்து பரப்புக்கும் ஒரே வெப்பம் கிடைக்கும்.
ஆனால் இப்போது ஏன் துருவங்களில் குளிரும் , பூமத்திய ரேகையில் வெப்பமும் இருக்கிறது என ஆய்வு செய்தால் பூமியின் அச்சு 23.5 சாய்வாக இல்லை பூமி சுழலும் தளம் 23.5 சாய்வாக இருக்கிறது என்ற உண்மை புரியும் ,அதாவது பூமி -சூரியன் இரண்டும் ஒரே நேரான கிடைமட்ட அச்சில் இல்லை என்பதே உண்மை.
சூரியனின் வெப்பம் பூமியை சுட்டு எரிக்காமல் இருக்க காரணம் , அது அமைத்துள்ள தூரம்ம் மற்றும் , பூமியை சூழ்ந்துள்ள வளி மண்டலம் மட்டுமே.
பருவங்கள் மாற காரணமும் பூமியின் கிடை மட்ட தளம் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது ஆகும்.
காற்று உருவாக காரணம் புமியின் சுழற்சி, உயர் கஆற்று,தாழ்காற்று மண்டலம் உருவாக காரணம் வளி மண்டலத்தில் உருவாகும் வெப்பசலனம், இதனால் ஓரிடத்தில் காற்று விரிவடைவது அதனால் அங்கு அழுத்தம் குறைவது, அழுத்தம் குறைவான இடத்தினை நோக்கி அழுத்தம் அதிகமான காற்று பாய்வது என எல்லாம் பூமியின் வளி மண்டல வேலை.
26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தளத்தில் உள்ள சாய்வின் ஒரு டிகிரி மாறும்,இதனை precision of celestial axis என்பார்கள். அப்படி மாறி உருவானது தான் 23.5 டிகிரி ,இன்னும் 26,000 ஆண்டுகளுக்கு பின் 24.5 டிகிரிக்கு பூமியின் சுழல் தளம் சாயலாம் எனவே பெரிய வானிலை மாற்றம் ஏற்பட்டு உலகில் பெரிய அழிவு கூட உருவாகலாம்.
அப்படி முன்னர் பூமியின் சாய்வில் உண்டான மாற்றமே பெரு வெள்ளம் உருவாக காரணம் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஒரு பதிவு எழுதி முழுமையாக்காமல் இருக்கு விரைவில் எனது திரும்பிப்பார் தொடரில் வரும்.
திரு வவ்வால்!
நான் எழுதிய பதிவின் கருததுக்கும் நீங்கள் எழுதிய பின்னூட்ட விளக்கத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது என்பதை விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன். 23.5 டிகிரி சாய்வாக இந்த பூமி பந்து இருப்பதால்தான் கால நிலைகள் மனித வாழ்வுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த அளவு மாறினால் நாம் அனைவரும் அழிந்து விட வாய்ப்புள்ளது என்பதே இந்த பதிவின் சாரம். இதிலிருந்து என்ன மாற்றத்தை உங்கள் பின்னூட்டம் சொல்கிறது?
சுபி.சுவாமிகள்,
நான் சொல்வது வேறு,
//பூமியின் அச்சு 23.5 சாய்வாக இல்லை பூமி சுழலும் தளம் 23.5 சாய்வாக இருக்கிறது என்ற உண்மை புரியும் ,அதாவது பூமி -சூரியன் இரண்டும் ஒரே நேரான கிடைமட்ட அச்சில் இல்லை என்பதே உண்மை.//
eraths orbitol plane பற்றி சொல்கிறேன்.
பூமி சூரியனுடன் ஒரே கிடை மட்ட அச்சில் இல்லை.
23.5 டிகிரி சாய்வு என்பது பூமியின் ஆர்பிட்டால் பிளேன் சூரியனின் கிடை மட்ட அச்சுடன் உருவாக்கும் வித்தியாசம் , முதலில் தமிழில் சுழல் தளம் என சொன்னது குழப்பி இருக்கும், ஆர்பிட்டால் பிளேன் என்பது வேறு, சுழற்சி அச்சு என்பது வேறு.
மேலும் அச்சு சாய்வு உண்டாகும் முன்னரும் உயிரினம் இருந்தது, எனவே சாயவில்லை என்றால் உயிரினம் தோன்றியிருக்காது என்பதும் தவறு ,26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை அச்சில் மாற்றம் உண்டாகும் போது பேரழிவு உண்டாகும்.
//மேலும் அச்சு சாய்வு உண்டாகும் முன்னரும் உயிரினம் இருந்தது, எனவே சாயவில்லை என்றால் உயிரினம் தோன்றியிருக்காது என்பதும் தவறு ,26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை அச்சில் மாற்றம் உண்டாகும் போது பேரழிவு உண்டாகும்.//
இந்த சாய்வை நிர்ணயித்து மனித குலம் எந்த பிரச்னையையும் சந்திக்காமல் வாழ வழி செய்தது யார் என்பதே எனது கேள்வி. இவ்வாறு சாய்வதற்கு இதற்கு என்ன அவசியம் வந்தது? இதற்கு அறிவியல் கூறும் காரணம் என்ன?
//இந்த பேரண்டத்தில் கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோதி பிறகு ஒரு சம நிலைக்கு வந்து இன்று வரை தனது ஓட்டத்தை தொய்வின்றி செய்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் எந்த மாற்றமும் இல்லாமல் சம அளவில் சுழன்று வருகின்றன.//
நீங்கள் குறிப்பிட்ட இந்த தகவல் அறிவியலா? அல்லது குர்ரானில் உள்ளதா?
//இவ்வாறு இந்த பூமி 23.5 டிகிரி சாய்வில் சுற்றினால்தான் இங்கு மனிதர்கள் வாழ முடியும் என்று தீர்மானித்த சக்தி எது? இதற்கு முதலில் பூமியின் அடர்த்தி என்ன? சூரியனின் ஈர்ப்பு சக்தியின் அளவு என்ன? அதேபோல் புதன், சுக்கிரன், வியாழன், வெள்ளி, சனி, நிலவு போன்ற அனைத்து கோள்களின் அடர்ததி மற்றும் அவற்றின் ஈர்ப்பு தன்மை தெரிந்த ஒரு சக்தியால்தான் இத்தனை மாற்றங்களையும் நிகழ்த்த சாத்தியம் உண்டு..//
பூமி தவிர மற்ற கோள்கள் எதற்காக/யாருக்காக படைக்கப்பட்டிருக்கின்றன? அவைகள் ஏன் வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கின்றன?
திரு விஜய்!
//நீங்கள் குறிப்பிட்ட இந்த தகவல் அறிவியலா? அல்லது குர்ரானில் உள்ளதா? //
'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா?'
-குர்ஆன் 21:30
இதைத்தான் மேலே உள்ள வாக்கியம் விபரமாக பேசுகிறது. இன்றைய அறிவியலும் இதனையே உண்மைப் படுத்துகிறது.
//பூமி தவிர மற்ற கோள்கள் எதற்காக/யாருக்காக படைக்கப்பட்டிருக்கின்றன? அவைகள் ஏன் வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கின்றன?//
எதுவும் காரணமில்லாமல் படைக்கப்படவில்லை. பூமி, சூரியன், நிலவு போன்றவற்றை சரியான தூரத்தில் நிறுத்தி வளி மண்டலத்தை சமன் செய்வதற்கு மற்ற கோள்கள் படைக்கப்பட்டிருக்லாம். இன்றும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். நட்சத்திரங்கள் வழிகளை தெரிந்து கொள்ள பயன்படுகிறது. வருங்காலத்தில் மேலும் பல உண்மைகள் தெரிய வரலாம்.
சு.பி.சுவாமிகள்,
//இந்த சாய்வை நிர்ணயித்து மனித குலம் எந்த பிரச்னையையும் சந்திக்காமல் வாழ வழி செய்தது யார் என்பதே எனது கேள்வி. //
இயற்கை என்பதே பதில்.
இப்படி சாய காரணம் பூமியின் நிறை, சூரியனின் நிறை மற்றும் இதர கோள்கள்,மற்றும் பிரபஞ்ச பொருட்கள் செலுத்தும் ஈர்ப்பு விசை ஆகும்.
சுழலும் பொருள்கள் எல்லாமே ஒரு அலைவுறும் , மேலும் சூரியனும் ,பூமியும் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன அதே சமயம் விலக்குகின்றன , இடைப்பட்ட ஒரு தொலைவில் இரன்டும் சம நிலை ஆகி பூமி நிற்கிறது. அதுவே பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தொலைவு.
எனவே பல்வேறு விசைகள் சுழலும் பொருளின் மீது பாய்வதும், பூமி ஆரம்பத்தில் சுற்று வட்டப்பாதையில் நிலை நின்ற போது ரேண்டமாக ஒரு ஆர்பிட்டால் பிளேனில் நிற்க ஆரம்பித்தது. அதில் இருந்து சாய்வு துவங்கியது.
ஒரு பொருள் வெடித்து சிதறினால் எல்லாம் ஒரே அச்சில் செல்லாது அல்லவா அதே தான் பூமிக்கும்.
என்னது எல்லாம் கண்டுப்பிடிச்சு சொன்ன ஆரம்ப பாடம் சோலார் சிஸ்டம், பிரபஞ்சம் என மீண்டும் ஆரம்பிக்கணும் போல இருக்கே :-))
எனவே இயற்கையாக நடப்பதை எல்லாம் குரானில் சொன்னபடி நடக்கிறது என ஏற்றி கதை விடுவதை நிறுத்தவும்.
----------
குரானில் கூட பூமியை விரித்து என்று எழுதி இருக்கு என சொன்னவர்,
//இந்த பேரண்டத்தில் கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோதி பிறகு ஒரு சம நிலைக்கு வந்து இன்று வரை தனது ஓட்டத்தை தொய்வின்றி செய்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் எந்த மாற்றமும் இல்லாமல் சம அளவில் சுழன்று வருகின்றன.//
இப்படி சொல்வதும் குரானுக்கு முரண் அல்லவா :-))
இதையே விஜய் என்பவரும் கேட்டுள்ளார் பாருங்கள்.
தேவைப்பட்டால் பாயை விரிப்பீர்கள், இல்லையானால் அறிவியல் சொல்லியபடி என பூமி உருவானதற்கு மாற்றி மாற்றி காரணம் சொல்லாமல் ஒரே நிலையில் நின்று கதை சொல்லவும் :-))
//எதுவும் காரணமில்லாமல் படைக்கப்படவில்லை.//
எல்லாத்தையும் துல்லியமாக படைத்த கடவுள் மனிதனின் அறிவையும் நல்ல விதமாக மட்டும் செயல்படும்படி படைத்திருக்கலாம்.
//எனவே இயற்கையாக நடப்பதை எல்லாம் குரானில் சொன்னபடி நடக்கிறது என ஏற்றி கதை விடுவதை நிறுத்தவும்.//
ஹா...ஹா...எல்லாமே இயற்கையாக நடந்து விட்டதாமா! அனைத்து கோள்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஈர்ப்பு சக்தியினை பகிர்ந்து கொண்டதோ!அதன் அடர்த்திகளையும் பகிர்ந்து கொண்டதோ! ஒன்றோடொன்று மோதாமல் இன்று வரை சுற்றி வருவதற்கு அதற்கு பாதை அமைத்துக் கொடுத்தது யார்? அதுவும் தங்களுக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வந்ததோ? இத்தனை கோள்களிலும் பூமி மட்டும் ஒரு முடிவுக்கு வந்து நான் மட்டும் 23.5 டிகிரி சாய்வாக அமர்ந்து கொள்கிறேன் என்று சூரியனிடம் அனுமதி கேட்டுக் கொண்டதோ? என்னமோ நீங்களும் நிறைய கதையடிக்கிறீங்க. சொல்லுங்க கேட்டுக்குவம்.
//இப்படி சொல்வதும் குரானுக்கு முரண் அல்லவா :-))
இதையே விஜய் என்பவரும் கேட்டுள்ளார் பாருங்கள்.//
அவர் கேள்விக்கான விடையைத்தான் குர்ஆன் வசனத்தின் மூலம் பதிலளித்து தந்திருக்கிறேனே! பார்க்கவில்லையா?
//எல்லாத்தையும் துல்லியமாக படைத்த கடவுள் மனிதனின் அறிவையும் நல்ல விதமாக மட்டும் செயல்படும்படி படைத்திருக்கலாம்.//
எல்லோருக்கும் சிறந்த அறிவை கொடுத்தால் பள்ளிகளில் பரீட்சைகளுக்கு அவசியமே இல்லாமல் போய் விடும். யார் சிறந்தவன் என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாது. இயல்பாகவே மனிதனுக்கு எந்த பொருளும் கஷ்டப்பட்டாலே கிடைக்கும் என்ற ரீதியில் இறைவனால் படைக்கப்பட்டுள்ளோம். அப்படி ஒரு வாழ்வு இருந்தால் தான் நமது வாழ்வும் சுகிக்கும். இல்லை என்றால் மரக் கட்டைப் போல் தான் நாமும் இருப்போம். இன்பம் துன்பம், அழுகை, சிரிப்பு, கோபம் என்று எல்லாம் கலந்து வருவதாலேயே நம்மால் இத்தனை ஆண்டுகளை கடக்க முடிகிறது.
அடுத்து நம்மை படைத்த இறைவனிடம 'என்னை ஏன் இப்படி படைக்கவில்லை?' என்று கேள்வி கேட்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை. அதன் சூட்சுமத்தை அவனே அறிவான்.
//இயல்பாகவே மனிதனுக்கு எந்த பொருளும் கஷ்டப்பட்டாலே கிடைக்கும் என்ற ரீதியில் இறைவனால் படைக்கப்பட்டுள்ளோம்.//
அப்படி என்றால் இந்த உலகில் நடக்கும் அனைத்து நல்லது கெட்டது அனைத்தும் கடவுளின் விருப்பப்படியே நடக்கிறது. சரியா?
//அப்படி என்றால் இந்த உலகில் நடக்கும் அனைத்து நல்லது கெட்டது அனைத்தும் கடவுளின் விருப்பப்படியே நடக்கிறது. சரியா? //
நீங்கள் கேட்பது விதி சம்பந்தமான கேள்வி! இதை விளங்கும் அளவுக்கு எனக்கோ உங்களுக்கோ அறிவு கொடுக்கப்படவில்லை. இந்த கேள்வி ஒன்றுக்கு மட்டும் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வருவோம். விதியை வைத்து சர்ச்சை செய்யாதீர்கள் என்று முகமது நபியும் தடை செய்துள்ளார்.
நடந்த வரை எனது விதி என்ன என்பது எனக்கு தெரியும். நாளை நடக்கும் எனது விதியை என்னால் அறிய முடியாது. இதனால் மனித குலத்துக்கு நன்மையும் உண்டு. ஆறு மாதத்துக்கு பிறகு நான் இறந்து விடுவேன் என்று எனது விதி என்று வைத்து கொள்வோம். அந்த ஆறு மாதமும் என்னால் நிம்மதியாக வாழ்வை கழிக்க முடியுமா?
//நீங்கள் கேட்பது விதி சம்பந்தமான கேள்வி!//
நான் கேட்டது விதி சம்பந்தமான கேள்வி என்றால்.......
//எல்லோருக்கும் சிறந்த அறிவை கொடுத்தால் பள்ளிகளில் பரீட்சைகளுக்கு அவசியமே இல்லாமல் போய் விடும். இயல்பாகவே மனிதனுக்கு எந்த பொருளும் கஷ்டப்பட்டாலே கிடைக்கும் என்ற ரீதியில் இறைவனால் படைக்கப்பட்டுள்ளோம்.//
இதெல்லாம் என்ன விதிகளோ?
@ subi
poyaaaaaa....ingggggg ........
;vekkappadukiren.....
Ungalukkaagaaaaaaaa......!!!!!!!!
நாய் நக்ஸ்! (என்ன அழகான பெயர் எண்ணத்தைப் போலவே!)
//poyaaaaaa....ingggggg ........
;vekkappadukiren.....
Ungalukkaagaaaaaaaa......!!!!!!!!//
வெட்கம் ஓவராகி விட்டால் முக்காட்டை வாங்கி முகத்தை மூடிக் கொள்ளவும். :-)
//இதெல்லாம் என்ன விதிகளோ?//
எப்படி மனிதனை படைத்தாலும் அதிலும் ஏதாவது ஒரு கேள்வி தொக்கி நிற்கும். எனவே நான் முன்பு சொன்னது போல் நம்மை படைத்த இறைவனை நோக்கி நாம் கேள்வி எழுப்ப முடியாது. அதற்கு நமக்கு தகுதியும் இல்லை.
///அரேபியாவுக்கு மட்டும் உரித்தானவர் அல்ல. உசிலம் பட்டிக்கும், கொட்டாம் பட்டிக்கும் கூட அவர்தான் இறைவன். ///
அப்ப நம்ம முனியாண்டிசாமி யாரு?
தெய்வத்திற்கெல்லம் தெய்வமான முனியாண்டிசாமி நம்மிடம் இருக்கும் போது இறக்குமதியான சாதாரண இறைவன் தேவையா?
Post a Comment