Followers

Monday, November 05, 2012

துருக்கியின் அராரத் மலைக்கு சென்று வருவோமா?

துருக்கியின் அராரத் மலைக்கு சென்று வருவோமா?







"அவரது சமுதாயத்தில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் 'இவர் உங்களைப் போன்றஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப் பட்டதுமில்லை.' என்றனர்.
'இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்." என்றனர்.
23 : 24, 25 - குர்ஆன்

என் சமுதாயமே! என்னிடம் எந்த வழி கேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்' என்று அவர் கூறினார்.
7 : 61

'என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை இறைவனிடமிருந்து அறிகிறேன்.'
7 : 62

'நீங்கள் இறைவனை அஞ்சவும் உங்களுக்கு அருள் செய்யப் படவும் உங்களை எச்சரிப்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?' என்றும் கூறினார்.
7 : 63

மேற் கண்ட குர்ஆனிய வசனங்களின் மூலம் அந்த மக்கள் நோவாவை நிராகரித்தது நமக்கு விளங்குகிறது.

'நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர். அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர். உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்' என்று அவர்கள் கூறினர்.
'அல்லாஹ் நாடினால் அவன்தான் அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் அவனை வெல்ல முடியாது.' என்று அவர் கூறினார்
11 : 32,33 - குர்ஆன்.

அந்த மக்களே வரம்பு மீறி நோவாவிடம் 'இறைவனின் தண்டனையைக் கொண்டு வாரும்' என்றனர். எனவே 'இனி இந்த மக்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள்அழியும் நேரம் வந்து விட்டது என்று நோவாவிடம் கூறிய இறைவன் நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு கப்பலை தயார்படுத்த சொன்னான்.

'அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். 'நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்.' என்று அவர் கூறினார்.
11 : 38 - குர்ஆன்

'இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.' என்றும் கூறினார்.
11 : 39 - குர்ஆன்.

இறைவனின் வேதனை அந்த மக்களை சூழும் நேரமும் வந்தது.

"மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள். ஏக இறைவனை மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ் கூறினார்.
11 : 42 - குர்ஆன்

'ஒரு மலையின் மீது ஏறிக் கொள்வேன். அது என்னை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்' என்று அவன் கூறினான். 'இறைவன் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை.' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப் பட்டோரில் ஆகி விட்டான்.
11 : 43 - குர்ஆன்

ஒரு தூதரின் மகனாக இருந்தும் தன் தந்தையை இறைத் தூதர என விசுவாசம் கொள்ளாததால் நஷ்டமடைந்தோரில் ஒருவனாக ஆகி விட்டான். குடும்ப பாரம்பரியத்தால் நான் சிறந்தவன் என்று சொல்லித் திரிபவர்களுக்கு பாடமாக மேற்கண்ட இறை வசனம் அமைந்துள்ளது.

” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!’ என்று இறைவனால் கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. ‘அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமாயினர்’ எனவும் கூறப்பட்டது “.
திருக்குர்ஆன் 11:44.

” இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை “.
திருக்குர்ஆன் 26:121.

” அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம் “.
திருக்குர்ஆன் 29:15.

” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய கப்பல் ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது தன் சமுதாயத்தால் மறுக்கப் பட்டவருக்கு நூஹுக்கு உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “.
திருக்குர்ஆன் 54:13-15.









இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது. மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம்
வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருமலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளது.

1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம் தேதியன்று கிழக்குத்துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது. இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன. 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.

மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது.

http://news.nationalgeographic.com/news/2010/04/100428-noahs-ark-found-in-turkey-science-religion-culture

http://www.youtube.com/watch?v=X3t8UncLxsA&feature=related

http://www.foxnews.com/scitech/2010/04/27/noahs-ark-found-turkey-ararat/

http://www.noahsarksearch.com/The_Explorers_Of_Ararat_1973-2006_Bob_Stuplich.pdf

http://www.noahsarksearch.com/book/

--------------------------------------------------------

//இஸ்லாமிய புராண புர்ராக் (முகமது(சல்) அவர்களை சுவனம் அழைத்து சென்ற விலங்கு.// -சார்வாகன்

இப்படி ஒரு விலங்கை முகமது நபி காட்டவில்லை. சிலர் கற்பனையாக வரைந்து கொண்ட உருவமே புறாக் என்ற மனித தலையுடைய இந்த வாகனம்.

-------------------------------------------------------

//குரான் [வழக்கம் போல்] இந்த விடயத்தையும் தெளிவாக சொல்லவில்லை ஆகவே அந்த இடத்தில் மட்டும் வெள்ள‌ப் பெருக்கு வந்தது எனப் பொருள் கொள்வேன் என்கிறார்.அந்த இடம் என்றால் எங்கே என்று கேட்க கூடாது!!!!!!!!!!

ஆகவே இது மோசடியா இல்லையா என்பதை உங்கள் கவனத்திற்கு விடுகிறேன்!!// -சார்வாகன்

நோவா வெள்ளப்பிரளயம் ஏற்பட்டது எந்த இடம் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார். ஜூதி மலை என்ற ஒரு க்ளூ போதுமே. நோவா வாழ்ந்த இடம் அராரத் மலை எல்லாம் ஒத்து வருவதால் அந்த இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வுகளின் முடிவில் ஆச்சரியமாக அவர்களுக்கு பெரும் கப்பலின் மரத்துண்டுகள் கிடைத்துள்ளன. அதை ஆய்வு செய்ததில் நோவாவின் காலத்திய பண்டைய மரப் படிமங்கள் என்று அறிவியல் அறிஞர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். இதற்கான காணொளிகளே நாம் மேலே பார்ப்பது. இதில் என்ன மோசடி இருக்கிறது? பில்ட் டவுன் மோசடியைப் போல யாராவது எடுத்து ஒட்ட வைத்து கொண்டால் இவர் சொல்வதில் நியாயம் உள்ளது. இதை நிரூபித்தவர்கள் அமெரிக்க ஆய்வாளர்கள் அல்லவா?

நாம் அறிவியல் ரீதியாக ஆய்வுகளின் அடிப்படையில் பரிணாமவியலின் மேல் கேள்விகளை வைக்கிறோம். அதற்கு நேரிடையாக பதில் சொல்வதை விட்டு விட்டு தற்போது நோவா கப்பலை கொண்டு வருகிறார்.அதற்கும் ஆதாரங்களை சமர்ப்பித்தாகி விட்டது. குர்ஆன் குறிப்பிட்டு இந்த இடம் என்று சொல்லா விட்டாலும் படிம சோதனைகள் மூலம் இதனை கண்டு பிடித்தது அமெரிக்க ஆராய்ச்சியாளர்களே என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

14 comments:

mohamed said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ.நிச்சயமாக சிந்திப்போருக்கு பல சான்றுகள் உள்ளது இறைவனுடைய வேதத்தில்.ஆனால் எதையுமே குறைக் கண்ணோடு மட்டுமே பார்ப்பவர்களுக்கு இறைவன் தான் நேர்வழி காட்ட வேண்டும்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ முஹம்மத்!

//மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ.நிச்சயமாக சிந்திப்போருக்கு பல சான்றுகள் உள்ளது இறைவனுடைய வேதத்தில்.ஆனால் எதையுமே குறைக் கண்ணோடு மட்டுமே பார்ப்பவர்களுக்கு இறைவன் தான் நேர்வழி காட்ட வேண்டும். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

அற்புதமான பதிவு...இத்தகைய பதிவுகள் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடாமல், இந்த பதிவுகளையெல்லாம் ஒரே இடத்தில தொகுத்து வைப்பது நல்லது என நினைக்கிறேன்.. இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நிகழ்வுகள் அல்லது இதைப்போன்றதொரு தலைப்பில் இத்தகைய பதிவுகளை தொகுத்தால் வருங்காலத்தில் பலருக்கு உபயோகமாக இருக்கும் சகோ.!

நன்றியுடன்
நாகூர் மீரான்

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//அற்புதமான பதிவு...இத்தகைய பதிவுகள் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடாமல், இந்த பதிவுகளையெல்லாம் ஒரே இடத்தில தொகுத்து வைப்பது நல்லது என நினைக்கிறேன்.. இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நிகழ்வுகள் அல்லது இதைப்போன்றதொரு தலைப்பில் இத்தகைய பதிவுகளை தொகுத்தால் வருங்காலத்தில் பலருக்கு உபயோகமாக இருக்கும் சகோ.!//

இதனை புத்தகங்களாக ஒவ்வொரு தலைப்பாக வெளியிடும் எண்ணமும் உள்ளது. வசதி வாய்ப்புகள் வரும் போது கைகூடும் இன்ஷா அல்லாஹ்.

suvanappiriyan said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)

சிங்கப்பூர் அரசின் உயரிய விருதான
கலை மற்றும் இலக்கியத்திற்குரிய
கலாச்சாரப் பதக்கம் சகோதரர் ஜே.எம்.சாலி அவர்களுக்கு
அளிக்கப்பட்டமை இவ்வளவு காலம்
சிங்கை மண்ணில் அவர் ஆற்றி வந்துள்ள
அரும் பணிகளிக்கான மிகச் சிறந்ததோர்
அங்கீகாரமாகும்.

அவர் பெற்றுள்ள இந்த விருது அவனிவாழ்
அனைத்துத் தமிழர்களுக்கும்
குறிப்பாகத் தமிழ்கூறு முஸ்லிம்களுக்கும்
வழங்கப் பெற்றுள்ள விருதாகவே கருதிப்
பெருமிதமும் பேருவகையும்
அடைகிறோம்.
வல்ல இறையவனுக்கு
நன்றி கூறியவர்களாகத்
சகோதரரைப் பாராட்டி வாழ்த்துகிறோம்.

நீண்ட ஆயுளும் நிறைந்த சுகமும்
தழைத்த வளமும் கிளைத்த ஈருலகப் புகழும்
தங்கள் பணிகளில் மென்மேலும்
அளப்பரிய சாதனைகளும் பெற்றுத்
திகழ இருகரமேந்தித்
துஆ செய்கிறோம்.
வாழ்க.... வளர்க...
நன்றி,
வஸ்ஸலாம்
அன்பு,
சேமுமு
(பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி)
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.
பொதுச் செயலாளர்,
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்.
ஆசிரியர், “இனிய திசைகள்” மாத இதழ்.

Unknown said...

இதைஎல்லாம் இன்னுமா நம்புறீங்க. சுவனம் என்ன கொடுமை இது?

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

குரானுக்கு முன்னரே யூதர்களின் தோராவிலும் ,பின்னர் பைபிள்லிஉம் சொன்னதை மறந்துவீட்டீர்களே :-))

இதனை கண்டுப்பிடித்ததாக சொல்வது கிருத்துவ மத நிறுவனம், அதனை உலக அளவில் யாரும் ஏற்கவில்லை.

நீங்கள் கிருத்துவ நம்பிக்கையை உண்மை என பரப்பி ஆனந்தம் அடைவதை பார்த்தால் ,பரலோகத்தில் இருக்கும் பரம பிதா ,தேவகுமரன் அருள் கிடைத்து விட்டதா தெரிகிறது

பிதா,சுதன்,பரிசுத்த ஆவியின் பெயரால் சு.பி.சுவாமிகள் ,ஆமேன் சொல்வாராக!

ஸ்தோத்திரம் ஆண்டவரே :-))

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//குரானுக்கு முன்னரே யூதர்களின் தோராவிலும் ,பின்னர் பைபிள்லிஉம் சொன்னதை மறந்துவீட்டீர்களே :-))//

தோராவிலும் பைபிளிலும் இதே வரலாறு வந்துள்ளதை மறுக்கவில்லையே! பைபிளில் உலகம் முழுவதும் இந்த பிரளயம் வந்ததாக உள்ளது. குர்ஆனில் உலகம் முழுவதும் என்ற வார்த்தை பிரயோகப்படுத்தப் படவிலலை. ஏசு, மோசே எல்லாம் யார்? முகமது நபிக்கு முன்னால் வந்த இறைத் தூதர்கள் தானே? அதிலும் இந்த செய்தி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

மலைக்கு மேல் இவ்வளவு பெரிய மரத்துண்டுகள் எவ்வாறு வந்தது என்று கேள்வி வருகிறதல்லவா?

//அதனை உலக அளவில் யாரும் ஏற்கவில்லை.//

பரிணாமவியலையும்தான் யாரும் ஏற்கவில்லை. :-))

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//இதைஎல்லாம் இன்னுமா நம்புறீங்க. சுவனம் என்ன கொடுமை இது?//

இங்கு வைத்தவை எல்லாம் புவியியல் வல்லுனர்களின் ஆய்வுகளை சம்பந்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. குர்ஆன் இறை வேதம் என்று நம்புபவர்கள் இந்த வரலாற்று ஆதாரத்தையும் கண்டிப்பாக நம்புவார்கள். மற்றவர்களைப் பற்றி கவலை யில்லை.

RAM said...

@ திரு.சுவனப்பிரியன்.

//16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன. 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.

மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது.//

திருக்குர் ஆன் விடை கூருகிறது, ஆனால் சரியான விடையா?

உங்களுக்கு ஒரு சம கால உதாரணத்தைக் கூறுகிறேன். தற்போதையா உஸ்பெஸ்கிஸ்தான்-தென் கஸகஸ்தான் இடையே ஏரல் கடல் என்ற மிகப்பெரிய ஏரி ஒன்று வற்றிப்போய் அதன் உள்ளே மூழ்கிய கப்பல்கள் வெளியே தெரிகின்றன.

ஒரு காலத்தில் இமய மலையும் கூட தண்ணீருக்குள் மூழ்கியே இருந்தது, அதன் உயரம் 29000 அடி, உங்கள் நொவா மலையை விட 13000 அடி அதிகம்.
எனவே நீங்கள் கூரும் மலையும் கடலின் அடியில் இருந்திருக்க வாய்ப்புக்கள் மிக அதிகம்.
இன்னொரு சந்தேகம், இந்த சிறிய கப்பலில் எப்படி இன்று வரை உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் இரண்டிரண்டு எடுத்துக்கொண்டு வர முடியும்.(ஏறத்தாழ 7000+ உயிரின வகைகள் - under estimated ).
ஒருவேளை பாதி கொண்டு வந்திருந்து மீதி பாதி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்குமோ!!!

suvanappiriyan said...

திரு ராம்!

//ஒரு காலத்தில் இமய மலையும் கூட தண்ணீருக்குள் மூழ்கியே இருந்தது, அதன் உயரம் 29000 அடி, உங்கள் நொவா மலையை விட 13000 அடி அதிகம்.
எனவே நீங்கள் கூரும் மலையும் கடலின் அடியில் இருந்திருக்க வாய்ப்புக்கள் மிக அதிகம்.//

அந்த இடங்கள் அனைத்தும் சம காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

//இன்னொரு சந்தேகம், இந்த சிறிய கப்பலில் எப்படி இன்று வரை உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் இரண்டிரண்டு எடுத்துக்கொண்டு வர முடியும்.(ஏறத்தாழ 7000+ உயிரின வகைகள் - under estimated ).
ஒருவேளை பாதி கொண்டு வந்திருந்து மீதி பாதி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்குமோ!!!//

இந்த பிரளயமானது உலகம் முழுவதும் வரவில்லை. முன்பு இறைத் தூதர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட் சமூகத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக குர்ஆன் கூறுகிறது. இப்போ தமிழ் நாட்டுக்கு அது போன்று ஒரு பிரளயம் வருவதாக இருந்தால் நாம் எந்த உயிரினங்களை எடுப்போம்? ஆடு, மாடு, கோழி, என்று நம்மை சுற்றி நமக்கு உபயோகப்பட்டுக் கொண்டிருக்கும் விலங்குகளைத்தான் நாம் ஏற்றிக் கொள்வோம். சிறிய வெள்ளம் வந்தாலும் இது போன்ற விலங்குகளைத்தான் நாம் அப்புறப்படுத்துகிறோம்.

அதுபோல் நோவா காலத்தில் அவர்களுக்கு எந்த உயிரினம் பயன் பாட்டில் இருந்ததோ அதில் ஒவ்வொரு ஜோடிகளையும் ஏற்றிக் கொண்டதாகத்தான் நாம் விளங்க முடியும்.

மேலும் துருக்கி பக்கத்தில் ஒரு கூட்டம் தவறிழைத்தால் அதற்காக இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மக்களையும் இறைவன் அழித்தான் என்பது ஏற்புடைய செயல் அல்லவே!

RAM said...

திரு. சுவனப்பிரியன்,...

//மேலும் துருக்கி பக்கத்தில் ஒரு கூட்டம் தவறிழைத்தால் அதற்காக இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மக்களையும் இறைவன் அழித்தான் என்பது ஏற்புடைய செயல் அல்லவே!//

நல்ல பதில்,

அப்படியானால் உங்கள் கடவுளுக்கு துருக்கி, அதை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தவறு செய்தால் மட்டும் தண்டிக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருந்ததா? அல்லது,
அவர் உலகம் முழுவதும் தவறு செய்பவர்களை விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை மட்டும் திருத்தி நல்வழிப்படுத்துவாரா? ஏன் இந்த ஓரவஞ்சனை உங்கள் கடவுளுக்கு?


//இந்த பிரளயமானது உலகம் முழுவதும் வரவில்லை. முன்பு இறைத் தூதர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட் சமூகத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக குர்ஆன் கூறுகிறது. //

இறை தூதர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஒருவேளை, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் , இந்து,கிருத்துவம்,பவுத்தம் முதலிய மதங்கள் நங்கு வளர்ச்சி அடைந்ததாலா?

I think he had also tried to establish his own territory in earth and he might have thought that middle east would be a better place to start with!!!

suvanappiriyan said...

//அப்படியானால் உங்கள் கடவுளுக்கு துருக்கி, அதை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தவறு செய்தால் மட்டும் தண்டிக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருந்ததா? அல்லது,
அவர் உலகம் முழுவதும் தவறு செய்பவர்களை விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை மட்டும் திருத்தி நல்வழிப்படுத்துவாரா? ஏன் இந்த ஓரவஞ்சனை உங்கள் கடவுளுக்கு?//

எங்கெல்லாம் மனிதர்கள் அதிகம் தவறிழைக்கிறார்களோ அங்கெல்லாம் தனது தூதர்களை வழி காட்டிகளாக இறைவன் அனுப்புகிறான். மனிதர்கள் தவறிழைப்பதை அது இறைவனின் ஓரவஞ்சனை என்று எப்படி சொல்ல முடியும்?

//இறை தூதர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஒருவேளை, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் , இந்து,கிருத்துவம்,பவுத்தம் முதலிய மதங்கள் நங்கு வளர்ச்சி அடைந்ததாலா?//

நான முன்பே கூறியுள்ளேன்: மத்திய கிழக்குக்கு மட்டும் தூதர்கள் வரவில்லை. நம் நாடு முதற்கொண்டு உலகமனைத்திற்கும் இறைவன் தூதர்களை அனுப்பியுள்ளான். அவர்களில் கடைசியாக வந்தவர்தான் முகமது நபி. இவர் உலக மக்கள் அனைவருக்குமாக அனுப்பப் பட்டவர்.

suvanappiriyan said...

Naser said.....

@ சார்வாகன் & இக்பால் செல்வன் ...
தங்கள் வாதப்படியே பெருவெள்ளம் பொய் என்றே வைத்துக்கொள்வோம் உலகத்தில் உள்ள மலைகளில் கடல் சிப்பிகளும் இன்ன பிற கடல் சார்ந்த ஐட்டங்கள் கிடைக்கின்றனவே எப்படி ஐயா அவைகள் அங்கே வந்தது ??
இதுவும் ஒருவகையான "பில்டவுன் " செட்டப்பு என்று சொல்வீர்களா ..!!!
கார்பன் டேடிங் , ஸ்கானிங் இல்லையென்றால் நீங்கள் சொல்வதையெல்லாம் உண்மையென்றே [பில்டவுன் மண்டையோடு கோல்மால் ] நம்பியிருப்போம் ...நல்லவேளை தப்பித்தோம் ......
கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கவும்

Why are fossilized clam shells found on Mt. Everest?
11 feet wide fossilized oyster shells can be found on top the mountains in Peru.

Tons of fossilized clam shells are found in mountains world wide.

Why?
http://answers.yahoo.com/question/index?qid=20081215214021AAZlD77