சிறந்த முன்னுதாரணமாக திகழும் ஆம்ஸ்ட்ராங் பமே!
நாகாலாந்த் - மணிப்பூர் மாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் ஆபிசர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். 100 கிலோ மீட்டர் ஹைவே பாதையை அரசு உதவியில்லாமல் தனது சொந்த முயற்சியால் முன்னெடுத்து இன்று முடிக்கும் தருவாயில் உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் பமே 2005ல் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். மலைசாதி பிரிவைச் சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சிரமத்துடனே தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பல நேரங்களில் வெறும் பிஸ்கட்டை சாப்பிட்டு தனது கல்லூரி நாளை கழித்துள்ளார் ஆம்ஸ்ட்ராங்.
கடந்த ஜுன் ஜுலை மாதங்களில் டமீங்லாங் மாவட்டத்தில் டைபாய்டு ஜுரத்தால் 500க்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். சரியான சாலை வசதியில்லாததால் எந்த மருத்துவரும் இந்த மாவட்டத்துக்கு வரவில்லை. துணை கலெக்டரான ஆம்ஸ்ட்ராங் தனது நண்பர்களின் உதவியை நாடினார். இதில் இவரது தோழி ஒருவர் உதவ முன் வந்தார். அவரின் உதவியால் பலரது உயிர் காப்பாற்றப்பட்டது. சாலை வசதியில்லாததால் எந்த அளவு மக்கள் சிரமத்தை சுமக்கின்றனர் என்பதை உணர்ந்து இதற்கு தீர்வு காண முயற்சித்தார்.
மத்திய அரசு 1982 ஆம் ஆண்டு சாலை பணிக்காக 101 கோடியை ஒதுக்கியது. பல காரணங்களால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. போன முறை இங்கு வந்த அமைச்சர் சிதம்பரம் 'ஏன் இந்த சாலை இன்னும் சரி செய்யப்படவில்லை' என்று மாநில அரசை கேட்டார். ஏதேதோ சொல்லி அரசு அன்று சமாளித்து விட்டது.
'60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரேஷன் கடைக்கு அரிசி வாங்க மலை பாதைகளில் நடந்தே செல்வோம். 25 கிலோ அரிசி மூட்டையை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்க இரண்டு மூன்று நாட்களாகும். இந்த ஒரு மூட்டை அரிசியை ஒரு மாதத்துக்கு வைத்து சரி செய்து கொள்வோம். அந்த அளவு வறுமை எங்களை வாட்டியது' என்கிறார் இவரது தம்பி. இவர் டெல்லி பல்கலைக் கழகத்தில் துணை பேராசிரியராக வேலை பார்க்கிறார்.
'நானும் எனது மனைவியும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக தந்தோம். எனது அண்ணன் ஆம்ஸட்ராங் தனது ஐந்து மாத சம்பளத்தை நன்கொடையாக தந்தார். எங்களது தாயார் எங்களின் தந்தையின் பென்சன் பணத்தில் ஒரு மாத தொகையை நன்கொடையாக தந்தார். இதை வைத்து எங்கள் குடும்பத்திலிருந்து இந்த பாதை அமைக்கும் பணியை தொடர்ந்தோம்.
இவர்களின் குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் அர்ப்பணிப்போடு இந்த பணியில் ஈடுபட்டனர். புல்டோசர் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். மண் அள்ளும் எந்திரம் இரண்டு வாங்கினர். ஆனால் வசூலான தொகை போதுமானதாக இல்லை. எனவே ஃபேஸ் புக்கில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டது. கோரிக்கையும் வைக்கப்பட்டது. மூன்றே நாளில் 1.2 லட்சம் வசூலானது. கிராம மக்களும் தங்களால் இயன்ற நன்கொடைகளை தந்துதவினர். அதோடு உடல் உழைப்பையும் இலவசமாக தர முன் வந்தனர். நன்கொடை சென்டர்கள் பெங்களூர், சென்னை, டெல்லி, புனே, கௌஹாத்தி, ஷில்லாங், கனடா, யுஎஸ, லண்டன் என்று திறக்கப்பட்டன. தொகையும் ஓரளவு சேர்ந்தது. ஆகஸ்டில் வேலை தொடங்கியது. இடையில் மழையால் சிறிது வேலை தடைபட்டது. தற்போது 70 கிலோ மீட்டர் வேலை முடிந்து விட்டது. இன்னும் பாக்கி இருப்பது 30 கிலோ மீட்டரே!
மனிதன் முயற்சித்தால் எதையும் சாதித்து காட்டுவான் என்பதற்கு ஆம்ஸ்ட்ராங் சிறந்த உதாரணமாக திகழ்கிறார். இவரைப் போன்ற ஆயிரமாயிரம் இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசை குறை சொல்வதை விட்டு விட்டு
'நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள்
கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால்
நன்மை உனக்கு'
என்று சிந்திப்போமா!
http://articles.timesofindia.indiatimes.com/2012-11-03/india/34892690_1_tamenglong-village-motorable-road
இட ஒதுக்கீடுகளினால் விளைந்த பல நன்மைகளில் இதுவும் ஒன்று. ஆதிக்க சாதிகள் மட்டுமே கோலோச்சி வந்த ஐஏஎஸ் பதவிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுத்ததால் இன்று ஒரு மாவட்டமே பயனடைந்துள்ளது. இவரைப் பார்த்து நம்மூர் சகாயத்தைப் பார்த்து அரசு அதிகாரிகள் திருந்த வேண்டும்.
---------------------------------------------------------
இதே மணிப்பூரில் சிபிஎஸ்ஸி தேர்வில் 2012 ஆம் ஆண்டில் முதலிடத்தை பிடித்த முஹம்மது இஸ்மத். தனது லட்சியம் தனது நாட்டுக்காக உழைப்பதே என்று சொன்னது நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது.
http://www.youtube.com/watch?v=DBl-QIcpPC8
13 comments:
Congrats Mr. Amstrong Bame.
சகோ அபு நிஹான்!
//Congrats Mr. Amstrong Bame. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சு.பி.சுவாமிகள்,
மக்களின் ஒன்றுப்பட்ட முயற்சிக்கு நல்ல உதாரணம், மற்றும் ஆர்ம்ஸ்ட்ராங்க் பமே யின் சேவை உள்ளம் எல்லாம் பாராட்டப்பட வேண்டியதே.
ஆனால் ஒரு சப் கலெக்டரே அரசு செய்ய வேண்டிய பணியை தொடர்ந்து முயற்சித்து அரசு நிதி பெற்று செய்யாமல் , பொது மக்களிடம் நிதி திரட்டி தான் செய்ய வேண்டுமா என கேள்விக்கேட்க தோன்றுகிறது.
இதனை அரசு பதவியில் இல்லாதவர்கள் செய்திருந்தால் மிகவும் பாராட்டலாம், ஒரு சப் கலெக்டர் அரசிடம் முறையாக எடுத்து சொல்லி செய்ய வேண்டிய பணி இது, அதில் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.
//மத்திய அரசு 1982 ஆம் ஆண்டு சாலை பணிக்காக 101 கோடியை ஒதுக்கியது. பல காரணங்களால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. போன முறை இங்கு வந்த அமைச்சர் சிதம்பரம் 'ஏன் இந்த சாலை இன்னும் சரி செய்யப்படவில்லை' என்று மாநில அரசை கேட்டார். ஏதேதோ சொல்லி அரசு அன்று சமாளித்து விட்டது.//
மேலும் 101 கோடி ஒதுக்கப்ப்பட்டு அதில் வேலையே செய்யவில்லை எனவும் தெரிகிறது, அதாவது ஊழல் நடந்து உள்ளது வேறு வழியில்லாமல் மக்களை திரட்டி செய்துள்ளார்.
இப்படியே அரசும் ,அதிகாரிகளும் மக்களிடம் பணம் திரட்டி பணி செய்தால் பின்னர் அவர்கள் எதற்கு தேவையே இல்லை, ஒரு ஊரில் மின்சாரம் இல்லையா ஊர் மக்கள் எல்லாம் பணம் திரட்டி மின் நிலையம் அமைத்துக்கொள்ள வேண்டும், மருத்துவமனை , பள்ளிக்கூடம், சாலை ,பேருந்து என எல்லாம் இப்படியே தேவைப்பட்டவர்கள் பணம் திரட்டி செய்து கொள்ள வேண்டும் என நிலை உருவானால் , அரசாங்கம், அதனை ஆள ஒரு தேர்தல் எல்லாம் தேவையா ?
இப்படி செயல்படாத அரசு நிர்வாகம் அதில் வேலை செய்ய ஊழியர்கள் என பணம் செலவு செய்யவே வேண்டாம் :-))
திரு வவ்வால்!
//இதனை அரசு பதவியில் இல்லாதவர்கள் செய்திருந்தால் மிகவும் பாராட்டலாம், ஒரு சப் கலெக்டர் அரசிடம் முறையாக எடுத்து சொல்லி செய்ய வேண்டிய பணி இது, அதில் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.//
நமது அரசின் செயல்பாடு நன்றாகவே நமக்கு தெரியும். ஆம்ஸ்ட்ராங் பலமுறை முயற்சித்தும் நிதி ஒதுக்கப்படாததாலேயே இந்த முடிவை எடுத்துள்ளார். மலைவாசிகள் நிறைந்த மாவட்டம். அங்கு வாக்காளர்களும் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. எனவே அரசு நிதி அங்கு கிடைக்கும் ஓட்டின் அளவை வைத்தே பல இடங்களில் ஒதுக்கப்படுகிறது. இது தவறான செயல்பாடு.
அதே நேரம் காலத்துக்கும் அரசை குறை சொல்லிக் கொண்டிருக்காமல் தனது சொந்த முயற்சியினால் 100 கிலோ மீட்டர் சாலையை போட்டு தனி மனிதனாலும் முடியும் என்பதை காட்டியிருக்கிறார்.
//இப்படி செயல்படாத அரசு நிர்வாகம் அதில் வேலை செய்ய ஊழியர்கள் என பணம் செலவு செய்யவே வேண்டாம் :-))//
இதற்கு அரசியலில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தேர்தல் நேரங்களில் கோடிக் கணக்கில் பணம் செலவு செய்வதை முற்றாக தடை செய்ய வேண்டும். தற்போது இணையம், தொலைக் காட்சிகளின் தாக்கம் அதிகம் உள்ளது. பிரசாரத்தை இவ்விரண்டின் மூலமாகவே செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த செலவையும் அரசு தொலைக்காட்சிகளே ஏற்க வேண்டும். தோரணம், சுவற்றில் எழுதுதல், பொதுக் கூட்டம் என்று அனைத்தையும் தடை செய்தால் கட்சிகள் செலவழிக்கும் பணம் மட்டுப்படுத்தப்படும். செலவு குறைந்தால் சுருட்டுவதும் குறையும்.
எம்பி, எம்எல்ஏ வாக தேர்வானவுடன் அவர்களின் சொத்துப் பட்டியலை பகிரங்கமாக்க வேண்டும். ஐந்து வருடம் முடிந்தவுடன் அதிகமாக உள்ள சொத்துக்கள் அனைத்தையும் அரசு பறி முதல் செய்தால் அரசியல் தூய்மையடைய வாய்ப்புண்டு.
ஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்..
நைஜீரிய மாணவிகள் சாதனை!
Published: Sunday, November 11, 2012, 14:10 [IST]
சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர்.
இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான்.
அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது.
நைஜீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடு.
ஆனால் இங்கு மின்சாரம் என்பது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
பல பகுதிகள் இன்னும் மின்சாரத்தைக் காணாமலேயே இருக்கின்றன.
பலருக்கு மின்சாரத்தைப் பார்த்தே பல காலமாகி விட்டதாம்.
இந்த நிலையில்தான் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மக்கள் மனதில் பால் வார்த்துள்ளனர்.
லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் காட்சிக்கு வைத்தனர்.
சிறுநீரை முதலில் இவர்கள் நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாக பிரிக்கின்றனர்.
பின்னர் ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர்.
அது பின்னர் ஒரு கேஸ் சிலிண்டருக்குப் போகிறது.
அங்கு ஹைட்ரஜன் போராக்ஸ் திரவமாக மாறுகிறது.
பின்னர் அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது.
அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஜெனரேட்டருக்குப் போய் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறதாம்.
நைஜீரிய இளம் மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு நைஜீரியாவில் இப்போது பெரும் பேச்சாக மாறியுள்ளதாம்.
தமிழ்நாட்டில் முதலி்ல் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி நிறைய மின்சாரம் தயாரிக்கலாம்.
பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் சுவர் பக்கம் ஒதுங்குவோரிடமிருந்து லிட்டர் கணக்கில் சிறுநீரைப் பிடித்தாலே போதும் நிறைய மின்சாரத்தை அள்ளி விடலாமே...
SOURCE: http://tamil.oneindia.in/news/2012/11/11/world-6-hrs-power-one-trip-the-bathroom-164515.html
சகோ உண்மைகள்!
//பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் சுவர் பக்கம் ஒதுங்குவோரிடமிருந்து லிட்டர் கணக்கில் சிறுநீரைப் பிடித்தாலே போதும் நிறைய மின்சாரத்தை அள்ளி விடலாமே...//
ஆஹா.. இனி நம் ஊர் பஸ்ஸ்டாண்டுகளில் மூக்கை பிடித்துக் கொண்டு போக வேண்டாம். வாழ்த்துக்கள் அந்த மாணவ மாணவிகளுக்கு. :-)
டாஸ்மாக் ஏலம் விடும்போது கலெக்டருக்கும் , சப் கலெக்டருக்கும் கிடைக்கும் கிம்பளத்தில் 1000 கி.மீ ரோடு போடலாம் ...பாவம் ஆம்ஸ்ட்ராங் பமே....பிழைக்கதெரியாத மனுஷன் ..Anyway பாராட்டப்பட வேண்டிய நல்ல மனிதர் ...
திரு கோவி கண்ணன்!
//தலித்துகள் மதமாறலாம் என்று எழுதத் முடிகிறது, ஆனால் எந்த மதம் ? என்ற கேள்விக்கு விடை எனக்கு தெரியவில்லை. :( //
அடடா....கண்ணுக்கு முன்னால் அழகிய மார்க்கம் ஒன்று அரவணைக்க காத்திருக்க தேடி அலைவானேன்.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி....
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே....
பாப்பாந்தெரு, ஞாயிக்கர் தெரு, செக்கடித்தெரு, கொல்லன் தெரு, நாப்பாணன் தெரு இவை எல்லாம் எங்கள் கிராமத்தின் தெருக்களின் பெயர்கள். ஆனால் வசிப்பது 99 சதவீதம் இஸ்லாமியர்கள். அனைவரும் முஸ்லிம்களாக மாறி விட்டனர். எங்கள் கிராமத்தின் பழைய வீடுகள் இன்றும் மாடங்கள் வைத்து இந்து முறைப்படி கட்டப்பட்டிருக்கும். எனது உறவினர்களில் தூய வெள்ளை இந்திய கலரான மாநிறம் இரண்டும் கலந்து இருக்கும்.
தாய் வழி சொந்தங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தவர் தந்தை வழி சொந்தங்கள் அனைத்தும் மாநிறத்தவர். இன்று போய் 10000 மக்களுக்கு மேல் உள்ள கிராமத்தில் எவரிடமாவது சென்று உங்களின் பழைய சாதி என்ன என்று கேட்டுப் பாருங்கள். எவருக்குமே தெரியாது. அந்த அளவு மாற்றியுள்ளது இஸ்லாம்.
புதிதாக மாறும் தலித்துகளுக்கு ஒரு தலைமுறை சற்று சிரமமாக இருக்கும். ஒரு தலைமுறை தாண்டி விட்டால் அவர்கள் இஸ்லாமிய குழுமத்துக்குள் ஐக்கியமாகி விடுவார்கள். அதன் பிறகு 'பாய்' என்ற அடை மொழி தானாகவே சேர்ந்து விடும். இழிவாக அவர்களை அழைக்க எவருக்கும் தைரியமும் இருக்காது.பார்ப்பனியம் விதைத்த இந்த சாதியை மற்ற மேல் மட்ட சாதிகளும் நன்றாக அறுவடை செய்கின்றனர். பிரச்னை இல்லாத வன்முறை இல்லாத ஒரே வழி நீங்கள் சொல்வது போல் தலித்கள் மதம் மாறுவது ஒன்றுதான் நிரந்தர தீர்வாகும். அதைத்தான் பெரியாரும் சொல்லி விட்டு போனார்.
கசப்பாக இருந்தாலும் வேறு வழியில்லை. மருந்து கசந்தாலும் உடல் உபாதைக்கு நிவாரணியாவதில்லையா?
சலாம் சகோ.சுவனப்பிரியன்,
மிக ஸ்ட்ராங்க்கான அறிமுகம் தந்து இருக்கிறீர்கள். நன்றி சகோ.
Congrats Mr. Amstrong Bame.
You are the role model for IAS Officers.
சலாம் சகோ ஆஷிக்!
//மிக ஸ்ட்ராங்க்கான அறிமுகம் தந்து இருக்கிறீர்கள். நன்றி சகோ.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ நாஸர்!
//டாஸ்மாக் ஏலம் விடும்போது கலெக்டருக்கும் , சப் கலெக்டருக்கும் கிடைக்கும் கிம்பளத்தில் 1000 கி.மீ ரோடு போடலாம் ...பாவம் ஆம்ஸ்ட்ராங் பமே....பிழைக்கதெரியாத மனுஷன் ..Anyway பாராட்டப்பட வேண்டிய நல்ல மனிதர் //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//அடடா....கண்ணுக்கு முன்னால் அழகிய மார்க்கம் ஒன்று அரவணைக்க காத்திருக்க தேடி அலைவானேன்.
//
சுவனப்பிரியன்.
எனக்கு ஒரு டவுட். நீங்க தமிழனா இருந்தா பிராமினை திட்டுவீங்க.
இப்போ இஸ்லாமியரா இருக்கீங்க. அதனால யூதரை திட்டி வாழ வேண்டியிருக்கு.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்
Post a Comment