Followers

Sunday, January 13, 2013

சவுதி சூரா கவுன்சிலில் 30 பெண்கள்!

சவுதி சூரா கவுன்சிலில் 30 பெண்கள்!


(டாக்டர் ஹயாத் சிந்தி)

சவுதி அரேபிய சூரா கவுன்சிலில் 30 பெண்களை நியமித்து அவர்களையும் சட்டம் இயற்றும் இடத்துக்கு மன்னர் அப்துல்லாஹ் கொண்டு வந்துள்ளார். நம் நாட்டு பாராளுமனறத்துக்கு எந்த அளவு அதிகாரம் உள்ளதோ அதைப் போன்றதுதான் சூரா கவுன்சிலும். இங்கு இயற்றப்படும் சட்டங்கள் மன்னரின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். நம் நாட்டில் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இன்றும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த விளம்பரமும் இல்லாமல் 30 பெண்களை சூரா கவுன்சிலின் உள்ளே கொண்டு வந்து சத்தமில்லாத புரட்சியை உண்டு பண்ணியுள்ளார் மன்னர் அப்துல்லாஹ்.

நாட்டின் முன்னேற்றததில் இனி பெண்களின் பங்களிப்பும் அபரிமிதமாக இருக்கும். ஆண்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் பெண்கள் இன்று சகல துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் பெண்களின் சம்பாத்தியத்தில் கணவர்கள் வீட்டில் இருந்து சாப்பிடும் காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :-) எந்த அளவு பெண்கள் முன்னுக்கு வந்தாலும் இஸ்லாமிய சட்டங்களை மீறாத வகையில் அவர்களின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதில் சவுதி அரசு கவனமாக இருக்கிறது.

ஆண் மெம்பர்களுக்கு எந்த அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில் 20 சதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முக்கியமானவரான ஹயாத் சிந்தி ஒரு பயோ டெக்னாலஜிஸ்ட் ஆவார். 'சூரா கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முதலாவதாக என்னை தேர்ந்தெடுத்தது உண்மையிலேயே மிகுந்த மகிழ்வைத் தருகிறது. அனைவருடனும் சரிசமமாக இருந்து எங்களது பணிகளை திறம்பட நாட்டுக்காக செயலாற்றுவோம்' என்கிறார் சிந்தி.

துரையா அல் அர்ராய்த் (கவிஞர், பத்திக்கையாளர்):

'இந்த வாய்ப்பினால் நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். பெண்கள் இந்த சமூகத்தின் ஒரு அங்கம். அவர்களின் முன்னேற்றம் முழு சமூகத்தையும் முன்னேற்றுவதாக அமையும்''

சுஹைலா ஜெய்னுல்லாபுதீன் (சமூக சேவகி):

'இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்பட்டு 50 சதமான பெண்கள் சூரா கவுன்சிலில் இடம் பெற்றால் நல்லது. அந்த அளவு எண்ணிக்கையிலும் நாங்கள் இருக்கிறோம். பல திறமைமிகுந்த பெண்கள் தங்களின் உழைப்பைக் கொடுக்க தயாராகவே உள்ளனர். 20 சதவீத ஒதுக்கீடு என்பது ஆரம்பமே...இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்'

நைலா அத்தார் (தொழிலிபர், சமூக சேவகி:

பெண்கள் முனிசிபல் தேர்தலில் சிறந்த பங்காற்றியது வரவேற்கத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பெண்கள் பல திறமைமிக்க பின்னணியிலிருந்து வந்தவர்கள். எனவே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை திறம்பட செய்து முடிப்பர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பெண்மணிகளின் பட்டியல்:

1. Dr. Ilham Mahjoub Ahmad Hassanain
2. Dr. Amal Salamah Sulaiman Al-Shaman
3. Dr. Thuraya Ahmad Obeid
4. Dr. Thuraya Ibrahim Hussein Al-Arrayed
5. Dr. Al-Jawharah Ibrahim Muhammad Bubshait
6. Dr. Hamdah Khalaf Muqbil Al-Enizi
7. Dr. Hanan Abdulraheem Mutlaq Al-Ahmadi
8. Dr. Hayat Sulaiman Hassan Sindi
9. Dr. Khowlah Sami Saleem Al-Krai’
10. Dr. Dalal Mukhlid Jahaz Al-Harbi
11. Dr. Zainab Muthanna Abdoh Abu Talib
12. Princess Sarah Bint Faisal Bin Abdul Aziz
13. Dr. Salwa Abdullah Fahd Al-Hazza’
14. Dr. Fatimah Muhammad Al-Qarni
15. Dr. Fadwa Salamah Owdah Abu Mraifah
16. Dr. Firdous Saud Muhammad Al-Saleh
17. Dr. Lubna Abdulrahman Al-Tayib Al-Ansari
18. Dr. Latifa Othman Ibrahim Al-Sha’lan
19. Dr. Mastourah Obeid Al-Shammari
20. Dr. Muna Abdullah Saeed Al Mushait
21. Dr. Muna Muhammad Saleh Al-Dowsari
22. Princess Moudhi Khaled Bin Abdul Aziz Al Saud
23. Dr. Moudhi Muhammad Abdulaziz Al-Deghaithir
24. Dr. Nihad Muhammad Saeed Ahmad Al-Hibshi
25. Dr. Noorah Abdulaziz Abdulrahman Al-Mubarak
26. Dr. Noorah Abdullah Ibrahim Al-Asqah
27. Dr. Noorah Abdullah Abdulrahman Al-Adwan
28. Huda Abdulrahman Saleh Al-Hilaisi
29. Dr. Haya Abdulaziz Nasser Al-Manee’
30. Dr. Wafa Mahmood Abdullah Taibah

இஸ்லாமிய அடிப்படையில் ஆட்சி அமைந்தால் பெண்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர். பெண் கல்வி மறுக்கப்படும். பெண்கள் தங்களின் முன்னேற்றத்தை இழந்து விட வேண்டியதுதான் என்ற வாதம் பலராலும் வைக்கப்படுகிறது. அந்த செய்திகள் யாவும் உண்மையில்லை என்பதை இந்த தேர்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

பெண்களின் முன்னேற்றம் என்பது இந்த வகையில் இருக்க வேண்டும். பெண்களின் வன் புணர்வுக்கு கடுமையான சட்டம். பெண்களின் கவர்ச்சி பகுதிகளை வெளியில் காட்டாமல் மறைத்துக் கொள்வது. கூடிய வரை ஆண்களும் பெண்களும் வேலை நேரங்களில் தேவையில்லாமல் சந்தித்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்வது. பெண்களின் உடற்கூறுக்கு ஏற்ப அவர்களுக்கு வேலை வழங்குவது. ஆண்களையும் பெண்களையும் அலுவலகங்களில் தனித்தனியாக ஆக்குவது. இரவு நேரங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தாமை. இது போன்ற சட்டங்களில் சவுதி அரசு மிக கண்டிப்புடன் உள்ளது. இதே போன்ற சட்ட திட்டங்களை நமது இந்தியாவிலும் அமுல் படுத்தி பாருங்கள். தானாக பெண் கொடுமை, வன் புணர்வு போன்றவை குறைய ஆரம்பிக்கும்.

தகவல் உதவி: சவுதி கெஜட்

10 comments:

Anonymous said...

சாட்சியை கொலைச் செய்த ஹிந்துத்துவா தீவிரவாதி!

புதுடெல்லி:2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் குண்டை வைத்த டான்சிங்கை அடையாளம் கண்ட இளைஞரை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கொலைச் செய்துள்ளனர். என்.ஐ.ஏவின் காவலில் இருக்கும் டான்சிங், நேற்று முன் தினம் தன்னை அடையாளம் கண்ட இளைஞரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

இக்கொலையில் நேரடியாக தொடர்பு இல்லை. ஆனால், சதித்திட்டத்தில் பங்குண்டு என்பதை டான்சிங் ஒப்புக்கொண்டுள்ளான்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்து 2 வாரங்கள் கழித்து செப்டம்பர் 26-ஆம் தேதி மலேகானில் வீட்டின் பின் பகுதியில் இறந்து கிடந்த அஸ்ஹர் பர்வேஸ் என்ற இளைஞனின் மரணம் கொலை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. புற்றுநோய் பாதித்த 38 வயது பர்வேஸ், மனக்கவலையால் தற்கொலைச் செய்தார் என்று போலீஸ் இவ்வழக்கை மூடிவிட்டது.

இரண்டு கைகள் பிளக்கப்பட்ட நிலையிலும், இடது கணுக்காலில் ஆழமான காயம் பட்ட நிலையிலும் பர்வேஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அளவுக்கதிகமான இரத்தம் வெளியேறியதால் மரணம் சம்பவித்ததாக போஸ்ட் மார்ட்டம் அறிக்கை கூறியது. இறந்த உடலில் காயங்களும், அடி பட்டதன் அடையாளங்களும் இருந்த போதும் போலீஸ் வழக்கை அவசர அவசரமாக தற்கொலை என்று மூடிவிட்டது. புதிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க என்.ஐ.ஏ பரிசீலிக்கிறது.

2006 செப்டம்பர் எட்டாம் தேதி 31 பேர் பலியான மலேகான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அன்று,வெடிக்குண்டு பொருத்திய சைக்கிளுடன் வந்த டான்சிங்கை, சைக்கிளின் பின் சீட் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதை கண்டு ஆச்சரியமுற்ற பர்வேஸ் தடுத்து நிறுத்தி, இதனை எங்கு வாங்கினீர்கள்? இந்த சீட்டை என் மகனின் சைக்களில் இணைக்கவேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால், பதில் எதுவும் கூறாமல் டான்சிங் சென்றுவிட்டான்.

குண்டுவெடித்த பிறகு பர்வேஸ் கண்ட சைக்கிளில் பொருத்திய குண்டுதான் வெடித்தது என்ற செய்தி வெளியானது. இதனை டி.வியில் கண்ட பர்வேஸ், குண்டுவைத்த நபரை தான் அடையாளம் கண்டுகொண்டதாக மலேகானில் ஜமாஅத்தே உலமாவின் மார்க்க அறிஞர்கள் உள்ளிட்டவர்களிடம் தெரிவித்தார் என்று பர்வேஸின் சகோதரர் மஸ்ஹர் கூறுகிறார். ஆனால், பர்வேஸின் கூற்றை நம்பாததுடன், இக்காரியத்தை போலீஸில் கூறவேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Thanks to :Thoothuonline

Anonymous said...

வாஷிங்டன் : நியூயார்க்கில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி வகுப்பறையில்‌ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர் வகுப்பறையை விட்டு சென்ற சிறிது நேரத்தில் 2 மாணவர்கள் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 13 மாணவர்கள் படிக்கும் அந்த வகுப்பில் இவர் ஒருவர் மட்டுமே மாணவி. ஒரு மாணவன் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போது மற்றொரு மாணவன், மேஜை மீது ஏறி நடனம் ஆடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வகுப்பு ஆசிரியரின் கவனக்குறைவின் காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக மாணவியின் தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Dinamalar
14-01-2013

sheik said...

இ‌ந்‌தியா வ‌ம்சாவ‌ழியை சே‌ர்‌ந்த ரிசானா நபீக்குக்கு தமது நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டத‌ற்காக உலக நாடுகள் கண்டனம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ‌நில‌ை‌யி‌ல், சவூதி அரேபியா தமது ‌விள‌க்க‌த்தை அ‌‌ளி‌த்து‌ள்ளது.

குழந்தை ஒன்றை கொலை செய்தமைக்காகவே ரிசானாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக சவூதி அரேபியா அ‌‌திகார‌ப்பூ‌ர்வமாக அறிவித்துள்ளது.

ரிசானா நபீக் பணிப்பெண்ணாக சவூதிக்கு வந்த ஒருவாரத்தில் இந்தக்கொலை இடம்பெற்றது. பா‌ஸ்போ‌ர்‌‌ட்டி‌ன்படி ரிசானா கொலையை மேற்கொண்ட போது அவருக்கு 21 வயதாகும். எனவே அவர் 17 வயதானவர் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

அத்துடன், சிறுமிகள் பணிக்கு அமர்த்தப்படுவதை சவூதி அரேபியா ஏற்றுக்கொள்வதில்லை என்று சவூதி அர‌சி‌ன் அ‌திகார‌ப்பூர்வ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அரசு, இறந்துபோன குழந்தையின் பெற்றோரை இணங்கச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அவர்கள் ரிசானாவை மன்னிக்க வாய்ப்பில்லை என்று அறிவித்து விட்டனர். இந்த நிலையில் சவூதி அரேபியா அனைத்து விதமான மனித உரிமைகளையும் மதிக்கிறது.

எனினும் தமது நாட்டின் நீதித்துறையில் எவரும் தலையிடுவதை ஏற்கமுடியாது என்று சவூதி அரசாங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1301/14/1130114021_1.htm

Unknown said...

தலைப்பிற்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களைப் பதியாதீர்கள்.

suvanappiriyan said...

சகோ அதிரை அஹமத்!

//தலைப்பிற்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களைப் பதியாதீர்கள்.//

இன்றைய ஊடகங்களைப் பற்றி நன்றாகவே உங்களுக்கு தெரியும். பல செய்திகள் மக்களை அடைவதில்லை. எனவே தான் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளையும் பின்னூட்டங்களில் அனுமதிக்கிறேன்.

suvanappiriyan said...

அவரை சந்தித்ததும் அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் ஏதும் இருக்கிறதா? என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது ஊருக்கு நான் எப்போது செல்வது? என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

சரி, எண்ணத் தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் மரண தண்டனை இப்போது விதிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப் பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.

உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப் படப் போகிறது என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

அப்போது நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா? என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.

மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதை புரிய படுத்தினேன்.

என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா? என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது. அங்குள்ள அதிகாரிகளிடம் இது பற்றி கூறி, அவருக்காக பரிந்து பேசினேன். அவர்களும் மரணித்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி முயற்சி செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப் படும். உங்களிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது? என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொட்சம் இருப்பதாகவும், அதனை சதகா செய்திடுமாரும் வேண்டிக் கொண்டார்.

அவற்றை யாருக்கு? எங்கு? எந்த வழியில் சதகா செய்வது என்று கேட்கப் பட்டபோது, இங்கேயே, எந்த வழியிலேனும் சதகா செய்திடுங்கள் என்று உறுதிப்பட கூறி அவரே அவருக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்பு சாட்டினார்.

இப்படிக்கு
A J M மக்தூம்

Lankamuslim.org

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

//சுவனப் பிரியன் சுவனம் செல்வதே நம் விருப்பம்!!//

நான் சுவனம் செல்வது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் சுவனம் புக சகோதர சகோதரிகள் இணைந்து 'எதிர்க் குரல்' என்ற பெயரில் ஒரு புத்தகம் இன்று வெளியாக்கி உள்ளனர். சென்னை புத்தக கண்காட்சியிலும் கிடைக்கும. முதன் முலாக எனது ஆக்கம் அச்சில் வருகிறது. படித்து விட்டு கருத்தை சொல்லவும்.

இவ்வளவு எதிர்ப்பு காட்டியும் இந்த முஸ்லிம்களின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லையே என்று வழக்கம் போல் ரூம் போட்டு யோசிக்க வேண்டாம். திறந்த மனத்தோடு அந்த புத்தகத்தை அணுகவும். நேர் வழி பெற பிரார்த்திக்கிறேன்.

Unknown said...

பிறப்பு இறப்பு இல்லாத பேரின்ப வாழ்வுக்கு தயாராகுங்கள் சுவனம். அத விட்டுட்டு ஏன் இப்படி சுவனத்துக்காக அலையனும்?

முதல்ல முக்காடு போடுறத நிறுத்துங்க

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//* சிங்கையில் தகுதி உள்ளவர்களுக்கு குடி உரிமையும்,//

இந்தியனாக பிறந்தேன். இந்தியனாக வாழ்கிறேன். இந்திய முஸ்லிமாகவே மரிப்பேன். வேறு நாட்டு குடியுரிமை கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்.

// தாள் உள்ளவர்களுக்கு ரம்சான் மாதமாக இருந்தாலும் "குடி"யுரிமையும் கிடைக்கும். உங்களுக்கு இதில் ஏதேனும் ஏதேனும் கிடைக்கிறதா ?//

அது தான் குடியும் விபசாரமும் தெருவெங்கும் பெருக்கெடுத்து ஓடுகிறதாமே! நமக்கு வேண்டாம்பா...

*// இங்கு வெறும் குற்ற முகாந்திரம் என்ற பெயரில் விசாரணை இன்றி அப்பாவிகளை சிறையில் அடைப்பது கிடையாது, நாங்களும் சவுதி சிறையில் சாரி சாரி சிங்கை சிறையில் வாடும் அப்பாவி இளைஞனைக் காப்பாற்றுங்கள் என்று பதிவு எழுதும் துரதிஷ்ட வாய்ப்பை வழங்கியதில்லை.//

அந்த பெண்ணுக்காக மன்னரே குறிப்பிட்ட குடும்பத்தை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டும் அவர்கள் தலை சாய்க்கவில்லை. அரசனின் பேச்சுக்கும் அவர்கள் தலை சாய்க்கவில்லை. அதற்காக ஆட்டோ அனுப்பி அந்த குடும்பத்தை தொலைத்து விடுங்கள் என்று ஆள்வோரும் நினைக்கவில்லை. இதற்கு பெயர்தான் சட்டம்.

//* கூலி வேலைக்கு வந்து விபத்தில் இறந்தால் உரிய இழப்பீட்டை உடனே கொடுத்துவிடுவார்கள், அது வெறும் முதலாளி - தொழிலாளி பிரச்சனை என்று பிழைக்க வந்தவனை ஆதரவற்றப் பிணம் ஆக்கி அனுப்புவதில்லை//

இங்கும் உரிய இழப்பீடு கிடைக்கிறது. எனது தமிழக நண்பன் கார் ஆக்சிடெண்டில் இறந்து விட்டான். அவனுக்கு உரிய இழப்பீடும் கிடைத்தது. இந்த வருடம் வரை அவனது குடும்பத்துக்கு அவனது ஓனர் வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை அனுப்பி வருகிறார். தனது சுய விருப்பத்தின் பேரில் எல்லா இடத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர்.

//* பணிப்பெண் வேலைக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கிடையாது, தெரிந்தால் பொண்டாட்டியே வெட்டிவிட்டுவிடுவாள்//

நம் இந்திய நாட்டில் பெண்கள் இரவில் வெளியில் நடமாடவே முடியவில்லை. தினம் ஒரு கற்பழிப்பு செய்தி. ஆசிட் வீச்சு. அதற்காக நமது நாட்டை காட்டு மிராண்டிகள நாடு என்று அறிவித்து விடுவோமா?

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//பிறப்பு இறப்பு இல்லாத பேரின்ப வாழ்வுக்கு தயாராகுங்கள் சுவனம். அத விட்டுட்டு ஏன் இப்படி சுவனத்துக்காக அலையனும்?//

அதற்காகத்தானே இவ்வளவு சிரமமும்.

//முதல்ல முக்காடு போடுறத நிறுத்துங்க//

நம் இந்திய நாட்டில் பெண்கள் இரவில் வெளியில் நடமாடவே முடியவில்லை. தினம் ஒரு கற்பழிப்பு செய்தி. ஆசிட் வீச்சு.

முக்காடு நீக்கியதன் பலன் இது.