Followers

Tuesday, April 02, 2013

மார்க்கத்தை சொல்லும் வழி முறை இதுதான்!



இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் சினிமா மோகத்திலும், இசையிலும், பெண்களிடம் சில்மிசம் செய்வதிலும் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனம் போன போக்கில் நடந்து கொள்கின்றனர்.இதற்கு மாற்றமாக நான் கீழே பகிரப் போகும் செய்தியையும் பார்த்து விடுவோம்.

அமெரிக்க கல்லூரிகளில் கல்வி பயிலும் சவுதி மாணவர்களில் ஒரு பிரிவினர் தங்களின் ஓய்வு நேரத்தில் நபிகள் நாயகத்தின் நற்பண்புகளை அந்நாட்டு மக்களுக்கு விளக்கும் அரிய பணியை தற்போது செய்து வருகின்றனர். 'கருணையின் தூதுவர்' என்ற தலைப்பில் ஒரு குழுவாக நபிகள் நாயகத்தின் பெருமைகளை மாற்றாருக்கு விளக்க முன் வந்துள்ளனர். முகமது நபி அவர்களின் பொன் மொழிகளை பொது மக்களுக்கு இலவசமாக வினியோகித்து தங்களின் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக கழிக்கின்றனர். நபிகள் நாயகம் எவ்வளவு சிறந்த சகிப்புத் தன்மையோடு அன்பும் பாசமும் கொண்டவராக திகழ்ந்தார் என்பதை மாற்றாரும் அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவுகிறது. இந்நிகழ்வானது அமெரிக்காவோடு நின்று விடாமல் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து என்று பரவலாக இந்த பிரசாரம் செய்யப்படுகிறது. பிரசாரத்தோடு தங்களின் அன்பை வெளிக்காட்ட அனைத்து மக்களுக்கும் இந்த மாணவர்கள் ரோஜா மலர்களை தருகின்றனர். துப்பாக்கிகளோடும், வெடிகுண்டுகளோடும் இஸ்லாமிய இளைஞர்கள் உலகம் முழுவதும் அலைகின்றனர் என்று அமெரிக்கா, இஸ்ரேல், மற்றும் நமது இந்திய ஊடகங்கள் தினமும் பொய்ப்பிரசாரம் செய்து வருவதை நாம் அறிவோம். இந்த பொய் பிரசாரத்தை முறியடிக்கும் விதமாக 'எங்கள் கைகளில் துப்பாக்கிகளோ, வெடிகுண்டுகளோ இல்லை. அன்பை ஞாபகப்படுத்தும் ரோஜா மலர்களே உள்ளது' என்று அந்த இளைஞர்கள் அவதூறு பிரசாரத்துக்கு பதில் சொல்வது போல் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

அமெரிக்க நகரங்கள் மற்றும் ஐரோப்பிய நகரங்கள் அனைத்திலும் கேளிக்கை விடுதிகளுக்கு குறைவிருக்காது என்பது நமக்கு தெரியும். அங்கெல்லாம் இவர்களின் கவனம் செல்லாமல் உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பும் இந்த இளைஞர்களை நாமும் வாழ்த்துவோம். இவர்களுக்கு துணையாக பல டாக்டர்களும், இன்ஜினீயர்களும் இந்த பிரசாரத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்வுகள் பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் மாணவர்களின் சொற்பொழிவுகளையும் புத்தகங்களையும் இன்முகத்தோடு வாங்கிச் செல்கின்றனர்.


Saudi students studying in the US on scholarship launched a campaign titled “Prophet of Mercy” in Times Square in the New York City, where the events of Sept. 11 took place. The purpose of the campaign is to define and provide knowledge about the Holy Prophet (peace be upon him).

The campaign was prepared by their collective efforts and funded by each one of them out of love for the Prophet Muhammad (Peace be upon him). Students distributed roses, each of which was attached to a Hadith of the Prophet (peace be upon him) written in English. The campaign was held in the United States, as well as in Canada, Australia, New Zealand and England. In New York, more than 1200 roses were distributed to tourists in Times Square. The students intended to express values of love and peace. More than 15 students participated in the distribution during the campaign.

According to online news portal Sabq, the campaign received a significant positive reaction from tourists and those in the region. Many tourists encouraged the students with smiles and words of gratitude for their campaign as it contributed to the promotion of peace and love among people. Many people returned to the distribution sites to inquire about the campaign and about the Prophet Muhammad (peace be upon him).

Others insisted on taking photographs and filming via their mobile phones in order to publish the pictures on networking sites and spread the idea more broadly and to define the campaign. Most of the Saudi participants in the campaign are doctors, engineers and students of higher degrees.

Monday 1 April 2013 - Arab News

இது ஒரு வகையான பிரசாரம். இதற்கு மாற்றாக நம் நாட்டிலும் இந்துத்வா வாதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். சமீபத்தில் பிரவீன் தெகாடியா உதிர்த்த அழகிய வார்த்தைகளை பார்ப்போம்.

-----------------------------------------------------

ஆமதாபாத்:குஜராத் மாநிலம் 2015ல் இந்து மாநிலமாக வி.எச்.பி., அறிவிக்க உள்ளது என அதன் சர்வதேச செயற்குழு தலைவர் பீரவீண் தொகாடியா நேற்று நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அதாவது குஜராத்தில் உள்ள 18 ஆயிரம் கிராமங்களில் விஷ்வ இந்து பரிஷத் ஆதரவாளர்கள் பெருகிவிடுவார்கள் என்பதால் 2015ல் குஜராத் மாநிலம் இந்து மாநிலமாக வி.எச்.பி. , அறிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=679924

குஜராத் மாநிலத்தை வரும் 2015 ஆம் ஆண்டு இந்து மாநிலமாக அறிவிக்கப் போவதாக தீவிரவாத இயக்கமான விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.

இந்துக்களின் முன்னேற்றம் என்ற கோஷத்துடன் விஸ்வ இந்து பரிஷத் நேற்று புதிய இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. வரும் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அமைப்பின் பொன் விழாவையொட்டி குஜராத்தில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. அவருக்கும் தொகாடியாவுக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் VHP தலைவர் பிரவீன் தொகாடியா பேசுகையில்...

இன்னும் இரண்டு ஆண்டுகளில் குஜராத்தின் 18,000 கிராமங்களிலும் விஎச்பியின் கிளைகள் துவக்கப்படும். 2015 ஆம் ஆண்டில் குஜராத்தை இந்து மாநிலமாக அறிவிப்போம். இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்துக்களின் பாதுகாப்பும், இந்துக்களின் வளர்ச்சியும் இந்துக்களின் கையில் தான் உள்ளது. அவர்கள் முழு இந்துக்களாக மாற வேண்டும், தீவிர இந்துக்களாக மாற வேண்டும். அப்போது தான் ராமர் கோவிலை நம்மால் கட்ட முடியும். இந்துக்களின் தலைவர்களை எங்களது தலைவர்களாக அங்கீகரிப்போம் என்றார்.

நரேந்திர மோடி தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, யார் வேண்டுமானாலும் பிரதமராக கனவு காணலாம் என்றார் தொகாடியா.

பாஜகவின் உயர்மட்ட நாடாளுமன்றக் குழுவில் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளாரே என்ற கேள்விக்கு, இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம். இது குறித்தெல்லாம் கருத்து சொல்ல முடியாது என்றார்.

விஎச்பியின் செயலாளர் வினாயக்ராவ் தேஷ்பாண்டே பேசுகையில்...

குஜராத்தில் நமது இயக்கத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன் 10,000 கமிட்டிகள் இருந்தன. இப்போது அது 6,000 மாக குறைந்துவிட்டது என்றார்.

இந்தக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜாக்ருதியும் கலந்து கொண்டார். இவரது மரணத்துக்கு மோடியை ஜாக்ருதி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பு தரப்பட்டுள்ளதாம். நமது பாரத தேசத்தின் வருங்காலத்தை நினைத்தால் பரிதாபப்படத்தான் வேண்டும்.

மோடி தலைமையில் ஒருகால் ராமராஜ்யம் அமைந்தால் நமது தமிழக கடைத் தெருக்களும் இவ்வாறு மாறி விடுமோ என்ற அச்சம் வருகிறது.



இறைவன்தான் காப்பாற்ற வேண்டும் எனது நாட்டை.....

6 comments:

Unknown said...

//
"மார்க்கத்தை சொல்லும் வழி முறை இதுதான்!"//

முஸ்லீம் நாடுகளில் இந்துக்களை அடக்கி ஒழிப்பது பற்றி எழுதினா நடுநிலமை ஆயிடாதா?

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ். அந்த மாணவர்களின் எண்ணங்கள் ஈடேற இறைவன் துணை புரிவானாக...

Anonymous said...

பல ஆண்டுகளாக பகை நாடாக இருக்கும் பாகிஸ்தான், தெரியாமல் வழிதவறி வந்த 7 வயது சிறுமியை மீட்டு, இந்தியாவிடம் ஒப்படைத்த நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. மகள் பத்திரமாக திரும்பியதை அடுத்து சிறுமியின் தந்தை பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி சென்ற 7 வயது இந்திய சிறுமியை, பத்திரமாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், கொடிக்கூட்டத்தில் இந்திய எல்லைப்படையினரிடம் ஒப்படைத்தனர்

ராஜஸ்தான் மாநிலம் பிக்கானர் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதி உள்ளது. அங்கு இந்திய எல்லையோரமாக விவசாயி ஒருவருக்கு சொந்தமான வயல் உள்ளது.

கடந்த 29ம் தேதி அந்த விவசாயி தனது 7 வயது மகள் பூஜாவை அழைத்துக்கொண்டு வயலுக்கு வந்தார். வயல் வேலைகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது, விளையாடிக்கொண்டிருந்த பூஜா, எல்லையோரமாக உள்ள வேலிக்குள் நுழைந்து பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டதை விவசாயி கவனிக்கவில்லை.

வேலை முடிந்து மகளை தேடியுள்ளார் தந்தை. வயல் முழுவதும் தேடிப்பார்த்தும் பூஜா கிடைக்கவில்லை. வேலியோரம் சென்று பார்த்த அவர், பூஜாவின் காலடித்தடம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதை உறுதிப்படுத்திக்கொண்டு, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் இச்சம்பவம் குறித்து முறையிட்டு, தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, இந்திய எல்லைப்படை ரேஞ்சர்கள், பாகிஸ்தான் எல்லைப்படை ரேஞ்சர்களுக்கு இத்தகவலை தெரிவித்து கொடி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். நேற்று நடைபெற்ற கொடி கூட்டத்தில், இந்திய எல்லைப்படையினரிடம் பூஜா ஒப்படைக்கப்பட்டாள்.

அவளை பெற்றுக்கொண்ட தந்தை மகிழ்ச்சியால் ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சி, அனைவரின் மனங்களையும் நெகிழச் செய்தது.

http://www.thedipaar.com/new/news/news.php?id=59406#.UVuLzKvkNhU.blogger

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//முஸ்லீம் நாடுகளில் இந்துக்களை அடக்கி ஒழிப்பது பற்றி எழுதினா நடுநிலமை ஆயிடாதா?//

சவுதி போன்ற நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே வேலை செய்கிறோம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்துக்கள் வேலைக்கு வருகின்றனர். சவுதியில் குடும்பத்தோடு சந்தோஷமாக கடந்த 20 வருடங்களாக இருந்து வரும் பல நண்பர்களை எனக்கு தெரியும். எனவே இந்துக்களை அடக்கி ஒடுக்குகிறார்கள் என்பதெல்லாம் கற்பனை பேச்சுக்களே!

ஆனால் இஸ்லாம் மார்க்கத்துக்கு விரோதமாக முஸ்லிமே செயல்பட்டாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//மாஷா அல்லாஹ். அந்த மாணவர்களின் எண்ணங்கள் ஈடேற இறைவன் துணை புரிவானாக...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

//மோடி தலைமையில் ஒருகால் ராமராஜ்யம் அமைந்தால் நமது தமிழக கடைத் தெருக்களும் இவ்வாறு மாறி விடுமோ என்ற அச்சம் வருகிறது.//
போட்டோ சூப்பரோ சூப்பர்.
வண்டி ஓட்ட தெரிஞ்ச சாமிக்கு குண்டிய மறைக்க தெரியல, இதுல வேற துண்டு மேல,
ஷாஜஹான்