Followers

Tuesday, April 16, 2013

கடைந்த வெண்ணெய் மோர் புகா!

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா

உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;

விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;

இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே

-சிவ வாக்கியர்

நமது முன்னோர்கள் இறந்தவர்கள் உயிர் பெற்று வர முடியாது என்று மிகத் தெளிவாகவே சொல்லியிருந்தாலும் ஆன்மீகக் குருக்களை அவர்கள் இறந்த பின் சமாதியாக்கி அவர் உயிர் பெற்று வருவார். நமது தேவைகளை பூர்த்தி செய்வார் என்று பலரும் நம்பியிருக்கிறோம். இறந்தவர் மறுபடி உயிர்த்தெழுதல் என்பது யுக முடிவு நாளுக்கு பிறகுதான் என்பது இஸ்லாமிய நமபிக்கை.

இநத பூமியில் இறந்தவர் உயிர் பெற்று எழ முடியுமா?

சில வருடங்கள் முன்பு நாம் பத்திரிக்கைகளில் ஒரு செய்தியைப் படித்திருப்போம். திருச்சியைச் சேர்ந்த வாலிபர் செல்வகுமார் தற்கொலையைப் பற்றியது அந்த செய்தி. இவர் கோவையில் உள்ள தன் அண்ணன் சார்லஸ் வீட்டில் வசித்து வந்தார். வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக மின் விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இறந்து போன செல்வகுமாரின் அண்ணன் சார்லஸ் ஒரு இன்ஜினீயர். இவர் தீவிர கிறித்தவ மத நம்பிக்கையுடையவர். இந்த மதப் பற்றினாலேயே தனது வேலையை ராஜினாமாச் செய்து விட்டு 'சுகம் அளிக்கும் அற்புதக் கூட்டம்' என்ற பெயரில் பிரார்த்தனைக் கூட்டங்களை ஆங்காங்கு நடத்தி வந்தார். மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் பாஸ்டர் பட்டம் பெற்றவர்.

இறந்து போன தனது தம்பியை அடக்கம் செய்யாமல் தனது வீட்டிலேயே ஒரு ரூமில் வைத்து 'தம்பியை உயிர்ப்பிக்க'ப் போவதாக கூறி ஜெபம் பண்ண ஆரம்பித்துள்ளார். அவரது மனைவியையும் அவரது நான்கு குழந்தைகளையும் தனது தம்பிக்காக ஜெபம் பண்ண வைத்துள்ளார். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. இரண்டு மாதங்கள் இதே போன்று இவரது குடும்பத்தினர் ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர். பிணம் அழுகி துர்நாற்றம் வீசியும் ஜெபத்தை விட வில்லை.

முடிவில் உயிர்த்தெழுந்தது என்னவோ காவல்துறைதான். தற்கொலை செய்து கொண்ட விபரத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் இருந்தது. இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வைத்துக் கொண்டது. சுகாதாரக் கேட்டை விளைவித்தது - ஆகிய பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

ஏசுநாதர் இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார்: குருடனை பார்வையடைச் செய்திருக்கிறார்: குஷ்டரோகியைக் குணமாக்கியிருக்கிறார்: இதெல்லாம் நடந்தது உண்மை. ஏசுநாதருக்கு இந்த ஆற்றல் வந்தது கர்த்தரிடமிருந்து. எனவே அவரால் அற்புதங்கள் செய்ய முடிந்தது.

இதைப் பார்த்து சார்லஸ் தானும் தன் தம்பியை உயிர்ப்பிக்கப் போகிறேன் என்று கிளம்பியதால்தான் இவ்வளவு பிரச்னையும். இதே போன்ற பல கூட்டங்கள் பல இடங்களிலும் நடப்பதைப் பார்க்கிறோம். மனிதன் என்றுமே இறை சக்தியை அந்த இறைவனின் அனுமதி இல்லாமல் அடைய முடியாது என்பதை படித்தவர்களும் மறந்து விடுவதுதான் விந்தை.

'மேரியின் மகன் ஏசுவே! நான் உம் மீதும் உம் தாயார் மீதும் அருளிய என் அருட்கொடையை நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்தததையும் இன்னும் நான் உனக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் நினைத்துப் பாரும். இன்னும் நீர் களிமண்ணால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தை போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும் இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும் நினைத்துப் பாரும். இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து வெளிப்படுத்தியதையும் நினைத்துப் பாரும்.'

-குர்ஆன் -5:110

இதே போன்ற கூத்துக்கள் இஸ்லாத்திலும் அவ்வப்போது நடப்பதுண்டு. மறைவான விஷயம் எனக்கும் தெரியும் என்று புருடா விட்டு கடைசியில் மாட்டிக் கொண்ட மௌலானாக்கள் பலர் உண்டு. இந்து மத சாமியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது பலரும் அறிந்த கதை.

ம்ம்... வீட்டுக்கு வீடு வாசப்படி.

12 comments:

mohamed said...

Assalaamu Alikkum Warahamathullah

பதிவு அருமை சகோ.மெத்த படித்தவர்களும் இது போன்ற விசயங்களில் கோட்டை விட்டு விடுகின்றனர்.

Unknown said...

அற்புதங்கள் நிகழ்த்துபவர் அகந்தை அற்றவராக இருக்க வேண்டும். என்ன பண்ணி தொலையுறது. நாட்டுல எல்லோருமே நித்தியானந்தாவாக இருக்காங்க

Unknown said...

சுவனம் உங்க இமெயில் ஐடி என்ன? சாட்டிங்கு வரீங்களா/

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//பதிவு அருமை சகோ.மெத்த படித்தவர்களும் இது போன்ற விசயங்களில் கோட்டை விட்டு விடுகின்றனர். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//அற்புதங்கள் நிகழ்த்துபவர் அகந்தை அற்றவராக இருக்க வேண்டும்.//

மனிதர்களில் எவருமே அற்புதங்கள் செய்ய முடியாது. எல்லாம் டுபாக்கூர். இறைத் தூதர்கள் மட்டுமே இறைவனின் அனுமதியோடு சில அற்புதங்களை செய்ய முடியும். நம் காலத்தில் கண்டிப்பாக மனிதர்களால் அற்புதங்களை நிகழ்த்தவே முடியாது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும்.

Unknown said...

//மனிதர்களில் எவருமே அற்புதங்கள் செய்ய முடியாது//

சித்திகள் பெற்று மக்களை ஏமாத்துறாங்களே? அது உண்மையா?

suvanappiriyan said...

//சுவனம் உங்க இமெயில் ஐடி என்ன? சாட்டிங்கு வரீங்களா/ //

அலுவலக வேலைகள் தடைபடும். எனவே நான் அதிகமாக சாட்டிங்கில் வருவதில்லை. வேலை முடிந்த நேரம் இது போன்று பதிவுகளில் கவனம் செலுத்துகிறேன். கருத்துக்களை பதிவுகளின் மூலமாகவே பகிர்ந்து கொள்ளலாமே.....

//சித்திகள் பெற்று மக்களை ஏமாத்துறாங்களே? அது உண்மையா?//

உயிருடன் உள்ளவரோ இறந்தவரோ சித்தியடைந்து இறைவனை நெருங்கி விட்டார் என்பதெல்லாம் சுத்த கப்ஸா. நல்லவர் யார் என்பதை அந்த இறைவனே அறிவான்.

suvanappiriyan said...

Don’t be shy if you don’t understand something from the Qur’an. Sometimes Umar (ra) would not understand a verse of the Qur’an. Even he said to the Companions, “What does this verse mean?” This is Umar, none of us were like Umar. Even those of us who speak Arabic, our Arabic is not even like one drop of the Arabic of Umar!

So don’t feel distanced. Those of you who are born of Arab families and the only thing you speak is `amiyya (vernacular Arabic), don’t allow yourself to feel down about this. The Arabic language hasn’t been spoken correctly for more than a thousand years.

Don’t allow these complexes to weaken your ability to relate to the Qur’an. It’s very important that you feel empowered when it comes to the Qur’an. The Qur’an gives you that boost!

:- Imam Suhaib Webb

Unknown said...

/உயிருடன் உள்ளவரோ இறந்தவரோ சித்தியடைந்து இறைவனை நெருங்கி விட்டார் என்பதெல்லாம் சுத்த கப்ஸா. நல்லவர் யார் என்பதை அந்த இறைவனே அறிவான்.//

நான் கேட்டது அட்டமா சித்திகள் அடைந்து அதன் மூலம் மேஜிக் செய்து மக்களை ஏமாற்றுபவர்களை கேட்டேன். இறை நிலை அடைந்தவர்களைப்பற்றி அல்ல

suvanappiriyan said...

செய்தி: கோதாவரி பேசினில் உற்பத்தி இழப்பிருந்தாலும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் லிமிடெட் மார்ச் 31ல் முடிந்த நிதியாண்டில் 20,040 கோடி ரூபாயை நிகர இலாபமாக ஈட்டியிருக்கிறது. இது சென்ற ஆண்டை விட9.2% அதிகமாகும்.

நீதி: மின்வெட்டு, மூலப்பொருள் விலையேற்றம், விலைவாசி உயர்வு, சூதாட்டச் சந்தை முதலியவற்றால் சிறு தொழில் முனைவோரெல்லாம் சிங்கி அடிக்கையில் அம்பானி மட்டும் அள்ளுவதன் மர்மம் என்ன?

-vinavu :-(

ஆனந்த் சாகர் said...

///மனிதர்களில் எவருமே அற்புதங்கள் செய்ய முடியாது. எல்லாம் டுபாக்கூர். இறைத் தூதர்கள் மட்டுமே இறைவனின் அனுமதியோடு சில அற்புதங்களை செய்ய முடியும். நம் காலத்தில் கண்டிப்பாக மனிதர்களால் அற்புதங்களை நிகழ்த்தவே முடியாது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும்.//

இறைதூதர்கள் என்பவர்களும் பொய்யர்களே(உங்கள் மொழியில் சொல்வதென்றால், டுபாக்கூர்கள). இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். அதுவும் முஹம்மத் டுபாக்கூர்களுக்கெல்லாம் தலையாய டுபாக்கூர்.

Dr.Anburaj said...

ஸ்ரீராமகிருஷ்ணர் உபதேசசம்
அதிசயங்கள் நடப்பதாக யாராவது கூறினால் உடனே மகனே அவ்விடத்தை விட்டு அகன்று விடு. அதிசய்ஙகள் மதத்தைப் பாழ்படுத்துகின்றன.