Followers

Friday, August 16, 2013

கஃபா துப்புறவு தொழிலாளர்களுடன் நோன்பு திறந்த இமாம் சுதைஸ்!






தனது குடும்பம் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக கடல் கடந்து மத்தியகிழக்கின் பாலைவனங்களில் அலையும் ஒட்டடகங்களை போல தாங்கள் பார்க்கும் தொழில் உள்ள சிரமங்களையும் பிரச்சனைகளையும் மனதில் அலையவிட்டபடி கஸ்டப்படும் இலட்சக்கணக்கான ஆசிய முஸ்லிம் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

மக்காவின் கஃபாவில் சுத்திகரிப்பாளர்களாக பல்லாயிரம் பேர் வேலை செய்கின்றனர். சவுதி அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கப்படும் ஸ்தலம் அது. எந்த குறையும் நிகழாமல் எல்லாவற்றையும் வழமை போல வைத்திருக்க விரும்பும் அதன் நிர்வாகம் மிகவும் கண்டிப்பானது.

ரமழான் மாதத்தில் களைப்பிற்கு மத்தியில் தங்கள் நோன்பை முடித்தது கொள்ளும் மஹ்ரிப்புடைய நோன்பு திறக்கும் நேரத்திற்கு சற்று முன் அசுவாசமாக உட்காந்திருந்த ஆசிய தேச முஸ்லிம் ஊழியர்களிற்கு அன்றைய தினம் ஒரு இன்பபேரதிர்ச்சி காத்திருந்தது. கடந்த மாதம் 27ம் திகதி நடந்த சம்பவம் இது.

கஃபாவின் பிரதம பேஷ் இமாம் மட்டுமல்லாது மக்காவின் பிரபல வர்த்தகருமான Shaykh Abdurrahman As Sudais அவர்கள் இந்த ஊழியர்கள் அமர்ந்திருந்த இடம் வந்தார்கள். படாரென நிலத்தில் உட்கார்ந்து விட்டார்கள். நோன்பை இனிடன அந்த ஊழியர்களோடு திறந்து மகிழ்ந்தார்கள். நிர்வாக ஊழியர்களை பார்த்து இந்த தொழிலாளர்கள் மேல் கருணை காட்டும் படி வேண்டினார்கள்.

இறுதியாக அவர் தன் காரில் ஏறிச்செல்லும் முன் சொன்ன வார்த்தைகள் இவை. “இங்கே வேலை செயகிறார்களே இவர்களது வேலை போல் உன்னதமான மகத்தான வேலை உலகத்தில் வேறெங்கும் இல்லை. இவர்கள் இறைவனின் இல்லத்தின் ஊழியர்கள். இவர்களுக்கு ஊழியம் செய்வதற்கு நாம் பழகி கொள்ள வேண்டும் எனவும் கூறிச் சென்றுள்ளார்.

உலகின் புகழ்பெற்ற இமாம் சுதைஷ். இவரது குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை. அந்த மனிதனின் உள்ளத்தின் வாயிலின் திறக்கப்பட்ட ஒரு கதவின் ஒலியில் வரைந்த வரிகளே இவை. ...

நன்றி: கைபர் தளம்

உழைக்கும் மக்களை கோவிலுக்குள்ளேயே நமது நாட்டில் அனுமதிப்பதில்லை. ஆனால் இங்கோ துப்புறவு தொழிலாளர்களோடு கஃபாவின் இமாம்(தலைவர்), மிகப் பெரும் செல்வந்தர் சுதைஸ் அவர்கள் சமமாக தரையில் அமர்ந்து அந்த நண்பர்களோடு அன்பாக பேசி விட்டு நோன்பு திறந்தும் சென்றது நம் நாட்டு வர்ணாசிரம வெறி பிடித்தவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அரபுகளிடம் பல குறைகள் இருந்தாலும் தீண்டாமை என்பதை அறவே ஒதுக்கியுள்ள இந்த பண்பை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.



2 comments:

Anonymous said...

சிறுநீர் ஒரு அடையாளம்.....

நாம் உண்ணும் உணவு வகைகளை முக்கியமான இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆதாவது சாப்பிட்டவுடன் தண்ணீர்த் தாகத்தை அதிகமாகத் தூண்டுபவை முதல் வகை!

சாப்பிட்டபின்னால் தண்ணீர் தாகத்தைத் தூண்டாதவை இரண்டாவது வகை.

முதல் வகை உடல்நலத்துக்கு அதிக முரணானவை .

இரண்டாம் வகை உடல் நலனுக்கு இணக்கமானவை!

காரணம் முதல்வகையைச் செரிப்பத்தற்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படுகிறது.

இரண்டாவதற்கு செரிமானம் கடினமாக இல்லாததால் தண்ணீரும் அதிகம் தேவைப்படுவதில்லை!

இங்கு பிரச்சினை என்னவென்றால் முதல்வகை உணவு உண்பவர்களும் இரண்டாம் வகை உணவு உண்பவர்களும் இரவில் ஒரே அளவு தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தாலும் முதல் வகையினருக்கு குறைந்த சிறுநீர் வெளியேற்றமும் இரண்டாம் வகையினருக்கு அதிகச் சிறுநீர் வெளியேற்றமும் இருக்கும்.

இந்தப் பாதிப்புக்குக் காரணம் முதல்வகை உணவில் எதிர்மறையான உணவை உண்பதே ஆகும்.

அதனால் சிறுநீர் குறைந்த அளவு வெளியேறும்.

ஆனால் நமது மனதுக்குச் சிறுநீர் கழித்த முழுமையான திருப்தி ஏற்படாது!...

இதுவே தொடர்ந்தால் அது தொடர்பான நோய்களுக்கும் அது காரணமாக அமையும்!

அதனால் தாகத்தை அதிகம் தூண்டாத இரண்டாம் வகை உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதே உன்னதமான உடல்நலம் பேணும் வழியாகும்.

சமைத்தும் வறுத்தும் எண்ணையில் பொரித்தும் நெருப்பில் சுட்டும் உண்ணும் உணவுகள் அனைத்தும் முதல் வகை!

சமைக்காத காய், கனி , கிழங்கு, சாறு, தானியம், கொட்டை வகைகளே இரண்டாம் வகை உணவுகள் ஆகும்.

அவை இயற்கையாக உருவாகி, இயற்கையாக உண்ணப்படுபவை!

இயற்கை உணவே நோய்தீர்க்கும் மருந்து!

http://www.drumsoftruth.com/2013/08/65.html

Anonymous said...

ஆமதாபாத்:இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான , ஐ.பி.எஸ்.அதிகாரி பி.பி.பாண்டேவை அம்மாநில அரசு திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் இந்த வழக்கில் 4 மாதங்களுக்கு‌ மேலாக த‌லைமைறவாக இருந்து பின்னர் கடந்த 13-ம் தேதி விசாரணை கோர்ட்டில் சரணடைந்தார்.சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது குஜராத் மாநில ஏ.டி.ஜி.பி.யாக உள்ளார். இந்நிலையில் பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிறையில் 48 மணி நேரத்திற்கும் மேலாக இருந்ததால் அவரை குஜராத் அரசு தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட் )செய்து உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில உள்துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.